Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலையான தமிழர் எண்ணிக்கையை மறைக்கவில்லை-மூன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொலையான தமிழர் எண்ணிக்கையை மறைக்கவில்லை-மூன்

செவ்வாய்க்கிழமை, ஜூன் 2, 2009, 12:31 [iST]

ஐ.நா: இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை ஐ.நா. மூடி மறைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அதன் பொதுச் செயலாளர் பான் கி மூன் மறுத்துள்ளார்.

பான் கி மூனும் அவரது செயலாளரான விஜய் நம்பியாரும் இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு பலியான ஆயிரக்கணக்கான தமிழர்களின் சாவை மூடி மறைத்ததாக பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

கடைசி கட்டப் போரில் புலிகளைக் கொல்கிறோம் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதில் சிறார்கள், பெண்கள், முதியோர் என யாருமே தப்பவில்லை.

இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்தியா, ஐநா போன்றவையும் இலங்கைக்கு ஆதரவாக அமைதி காத்ததால் ராணுவம் கண்மூடித்தனமாக தமிழர்களைக் கொன்று குவிந்தது. 20,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் வரை கொல்லப்பட்டுவிட்டனர்.

இந்தத் தகவலை பிரிட்டனின் டைம்ஸ், பிரான்ஸ் லா மொன்டே ஆகிய பத்திரிக்கைகள் படங்களோடு வெளியிட்டன. ஆனால், பான் கி மூனோ இந்த சாவுகளை மூடி மறைக்க முயன்றார். இதற்கு இலங்கையோடு ஒட்டி உறவாடும் விஜய் நம்பியார் போன்றவர்களும் உதவினர்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பான் கி மூன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஐநா பொதுச் சபையில் பேசிய அவர், நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். நாங்கள் சாவு எண்ணிக்கையை திட்டமிட்டு குறைத்து மதிப்பிடவில்லை. அங்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியாது. ஆனால், மிக அதிகமான இறப்புகள் நடந்துள்ளது உண்மை. அதை ஏற்கத்தக்கத்தல்ல என்றார்.

ஆனால், இதுவரை இந்தக் கொலைகள் குறித்து விசாரணைக்கு பான் கி மூன் உத்தரவிடவில்லை என்பதும், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இது குறித்து சர்வதேச விசாரணை நடத்தும் திட்டத்தை இந்தியா, சீனாவின் ஆதரவோடு இலங்கை முறியடித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஏப்ரலில் கடைசியில் ஆரம்பித்து போர் முடியும் வரை தினந்தோறும் குறைந்தபட்சம் 1,000 தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்ததாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக இது குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. பார்வையாளர் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட ஆயுதங்கள்...

மேலும் இலங்கையில் நடந்த இறுதி கட்ட போர் குறித்து 'அமெரிக்கா' என்ற பத்திரிகை தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிலரிடம் பேட்டி கண்டு வெளியிட்டுள்ள செய்தியில்,

வன்னி பகுதியில் இறுதிக்கட்ட போரின் போது கடைசி சில நாட்களில் மட்டும் 25,000 முதல் 30,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியே இவர்களை கொன்றுள்ளனர். கொத்துக் குண்டு, ரசாயண குண்டு ஆகியவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டன.

தற்போது மோதல் நடந்த இடம் சுடுகாடாகவே காட்சியளிக்கிறது. அங்கு எல்லா கட்டிடங்களும் அழிக்கப்பட்டு விட்டன என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் கோரிக்கை விடுத்துள்ளது.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

கொலையான தமிழர் எண்ணிக்கையை மறைக்கவில்லை-மூன்

ஐ.நா: இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை ஐ.நா. மூடி மறைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அதன் பொதுச் செயலாளர் பான் கி மூன் மறுத்துள்ளார்.

பான் கி மூனும் அவரது செயலாளரான விஜய் நம்பியாரும் இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு பலியான ஆயிரக்கணக்கான தமிழர்களின் சாவை மூடி மறைத்ததாக பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

அதே நேரத்தில் உலகிற்கு உண்மையையும் சொல்லத் தவறிய துரோகக் கும்பலின் தலைவனும் நீயே.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த மக்களின் வன்னி மக்களின் வாழ்வை பாதுகாக்குமாறு நடாத்தப்பட்ட போராட்டங்கள், ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் எல்லாவற்றையும் புறக்கணித்து பல ஆயிரம் அப்பாவிகளின் கொலைக்கு காரணமானவர் பான்கி மூன்.அத்தோடு பல முறை வன்னியில் சென்று நிலைமையை அவதானிக்கும் படி கேட்டும் எல்லாம் முடிந்த பின் அரசுடன் கூடி குலாவி விட்டு இறந்த மக்களின் எண்ணிக்கையும் குறைத்தவர் எப்படி ஐ.நாவின் பதவிக்கு லாயக்கானவர்?

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த மக்களின் வன்னி மக்களின் வாழ்வை பாதுகாக்குமாறு நடாத்தப்பட்ட போராட்டங்கள், ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் எல்லாவற்றையும் புறக்கணித்து பல ஆயிரம் அப்பாவிகளின் கொலைக்கு காரணமானவர் பான்கி மூன்.அத்தோடு பல முறை வன்னியில் சென்று நிலைமையை அவதானிக்கும் படி கேட்டும் எல்லாம் முடிந்த பின் அரசுடன் கூடி குலாவி விட்டு இறந்த மக்களின் எண்ணிக்கையும் குறைத்தவர் எப்படி ஐ.நாவின் பதவிக்கு லாயக்கானவர்?

ஆமாம்

இதைத்தான் சொல்வது

சிங்கம் ஆட்டுக்குட்டியை சாப்பிடுவது இயற்கை என்று............

ஆனால் நாம் ஆட்டுக்குட்டியா???

அல்லது...........???

எத்தினை தொலைபேசியழைப்புகள்

எத்தனை கதறர்கள்.... எனக்குத்தெரிந்த வரை எத்தனையோ அழைப்புக்கள்

அத்தனைக்கும் மவுனமான தொலைபேசிகள்.

இதுக்கு மேல் எங்களுக்கு ஜ்.நா ஒரு உறவா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப் படுகொலையில் ஒரு இந்திய அதிகாரியான விஜய் நம்பியார்,ஐநாவின் ஊதியத்தோடு தமிழினக் கொலைக்கு ஒத்துழைப்புக் கொடுத்ததோடு, பான் கீ மூனும் இணைந்து தமிழினப் படுகொலையை தடுக்கத் தவறியதூடாகச் சிங்கள அரசபயங்கரவாதத்திற்க்குச் நேரத்தையும் சந்தர்ப்பத்தையும் வழங்கியதூடாகத் தமிழின அழிப்பை அனுமதித்ததோடு, தமிழினம் அழிக்கபட்டபின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்விலே மறைமுகமாகக் கலந்து கொண்டது போன்ற ஐநாவினது செயலரான பான் கீ மூனது செயற்பாடுகளால்,உலகப் பொதுமன்றமான ஐநாவினது நோக்கங்கள் மலினப்படுத்தப்பட்டதோடு, அனைத்துலக அமைதிப் பணிக்கான தார்மீகத் தன்மையை இழந்துவிட்டதையே காட்டுகின்றது. தமிழின அழிப்பின் பங்காளியாக்கிய பெருமையையும் பான் கீ மூன் தனதாக்கிக் கொண்டுள்ளாரென்பதே உண்மையாகும்.

இனிமேலாவது இருக்கின்ற தமிழினத்தை, அதாவது வதைமுகாம்களில்(ஐநாச் செயலருக்கு நிவாரண முகாம்)வதைக்கப்பட்டுக் கொல்லப்படுவதையும் காணாமற் போகச் செய்வதையுமாவது ஐநா தடுக்க முனையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்த்துத் தவிப்பதுதான் எமது தலைவிதியா என எண்ணத் தோன்றுகிறது.

எனவே தமிழினமானது தன்னை நம்புவதே இன்றைய தேவையாக உள்ளது. வெறுமனே எந்தவிதத்திலும் எமது மக்களின் அழிவைத் தடுக்க முன்வராத அமைப்புக்களை நீதி கேட்டுப் போராடுவதூடாக இவர்களது பாரபட்ச அணுகுமுறையை மக்களிடம் கொண்டு செல்லும் வரலாற்றுப் பணியைச் செய்வதூடாக உலக அரங்கிலே எம்மை நிலைநிறுத்த முயல்வோமாயின், தமிழர் என்பதற்காக அழிக்கப்பட்ட எம்தமிழ் உறவுகளுக்கு நாம் செய்யும் கௌரவமாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரது செய்லால் ஜ.நா.வின் நம்பகத்தன்மை அற்று விட்டது, ஜநா இனி அரசியல் மண்றமாகவே இயங்கும் , அரசியல் மையம் இனி எதற்க்கு கலைத்து விடுவது உசிதம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.