Jump to content

திசைமாறிய காதல்


Recommended Posts

பதியப்பட்டது

திசைமாறிய காதல்

அவளுக்கும் அவனுக்கும் இடையில் மீண்டும் ஒரு சந்திப்பு நிகழும் என்று

அவன் எதிர்பார்க்கவில்லைத்தான்.. அதுவும் இப்படி ஒரு கோலத்தில் ....

பல காரணங்கள் சொல்லி என்னை தூக்கி எறிந்து விட்டு போனாலும் அவள்

எண்ணியபடி எங்கோ வசதியாகத்தான் வாழ்ந்து கொண்டிருப்பாள் என்றுதான்

அவன் எண்ணியிருந்தான் .அனால் இன்று .....

ஒட்டிய உடலும் காய்ந்த முகமும் ஆளுக்கு படிந்த ஒரு பழைய புடைவையும்

ஒழுங்காக வாரப்படாத தலையும் திலகமில்லா நெற்றியும் .......

அவளை அடையாளம் காண்பதே குமாருக்கு கடினமானதாக இருந்தது .

மஞ்சள் நிறமும் குழிவிழும் அழகிய கன்னமும் நீண்ட விழிகளும் நேர்த்தியான

உடையும் அளவான ஒப்பனையும் ஒருங்கே இணைய ஒரு தேவதைபோல்

துள்ளித்திரிந்த கௌரியா இது ...

காலம் ஒருவரது கோலத்தைகூட இப்படி மாற்றிவிடுமா .... திகைப்பாக

இருந்தது குமாருக்கு .

குமாரும் கௌரியும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதை விட அருகருகே

வீட்டையும் உடையவர்கள் .சிறு வயதில் இருந்தே ஒரே பள்ளியில்

பயின்றவர்கள்.

நினைவு தெரிந்த நாள்முதல் கௌரியுடன்தான் அவனது அதிக பொழுதுகள்

கழிந்திருக்கின்றன . சின்ன வயதில் தொடங்கிய நட்பு என்பதால் யாரும்

இவர்களை சந்தேகிக்கவில்லை . இவர்கள் நட்பிற்கு தடை போடவும் இல்லை .

இதனால் பள்ளிக்காலத்தில் தொடங்கிய நட்பு பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்தது.

நல்ல நண்பர்களாகவே பட்டப் படிப்பை முடித்து வெளியேறினர் . கௌரியின்

மனதில் என்ன இருக்கிறது என்பதை அறியாமலே குமார் அவள் மீது காதல்

கொண்டான் . அவளும் தன்னை ஏற்றுக்கொள்வாள் என்று நம்பினான் .

நமது நாட்டை பொறுத்தவரை படிப்பதை விட வேலை ஒன்றை தேடுவதே மிகவும்

கடினமான செயல் . அனால் இவர்களின் நல்ல நேரம் வேலையில்லா

பட்டதாரி என்ற பட்டம் வாங்கும் முன்னரே இருவருக்கும் அதே ஊரிலேயே ஆசிரிய நியமனமும் கிடைத்து விட்டது.

எனியும் தாமதிப்பது நல்லதல்ல .தனது காதலை கௌரியிடம் சொல்லிவிட

வேண்டும் . இதைக்கேட்டால் கௌரி சந்தோசத்தில் குதிப்பாள்

என்று எண்ணிக்கொண்டே கௌரியை தேடிச்சென்றான் குமார் .

அன்று வெள்ளிக்கிழமை . எப்படியும் கௌரி கோயிலுக்கு வருவாள் என்பது

அவனுக்கு தெரியும் . அவன் நினைத்தது போலவே கௌரி கோயிலில் தான்

நின்றாள். அவள் பிரார்த்தனை முடியும்வரை காத்திருந்தான் குமார் .

குமாரை கண்ட கௌரி " என்ன குமார் அதிசயமாய் கோயில் பக்கம்

வந்திருக்கிறியள் .எனி சூரியன் மேற்கிலதான் உதிக்கும் போல இருக்கு "

என்று கேட்டாள். அவளின் கேள்வி நியாயமானதுதான் .அவன்தான் எப்பவும்

கோயில் பக்கம் போவதில்லையே .

"இல்லை கௌரி உன்னைத்தான் பார்க்க வந்தனான் "

" என்னையா " ஆர்வமாக கேட்டாள் கௌரி .

" ஓம் கௌரி உன்னுடன் கொஞ்சம் தனிய கதைக்க வேணும் "

"அதுக்கென்ன இப்ப நாங்கள் இருவரும் தனியத்தான இஞ்ச நிக்கிறம் .எதுவெண்டாலும் சொல்லுங்கோ " என்றாள்.

என்றும் இல்லாதபடி இன்று முதன்முதலாக அவளோடு பேசும்போது வார்த்தைகள்

தடுமாறின .இத்தனை நாள் பழகி இருந்தும் காதல் என்று வந்ததும் ஏன் மனம்

இப்படி குழந்தையாகிபோகிறது என்று அவனுக்கு புரியவில்லை .

''அது வந்து வந்து கௌரி .....நான் உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் .

உனக்கு சம்மதமா ? அவசரமில்லை நீ பதிலை யோசித்து ஆறுதலாய் சொல்லு .'

என்று பெரும் பிரயத்தனத்திற்கு பின் ஒருவாறு கூறி முடித்தான்.

அவள் கல கல என சிரித்தாள் .இப்படி ஒரு பிரதிபலிப்பை அவன் அவளிடமிருந்து

எதிர்பார்க்கவில்லை .இதுவரை அவளின் சிரிபுக்கெல்லாம் அர்த்தம் கண்ட அவனால்

இன்று அவளின் சிரிப்புக்கான அர்த்தத்தை கண்டுபிடிக்க முடியவில்லை .

''என்ன கௌரி ஏன் இப்படி சிரிக்கிறாய் '' குழப்பத்துடன் கேட்டான் குமார் .

''குமார் வாழ்க்கையில் எதிர்பார்ப்பு இருக்கலாம் ஆசை இருக்கலாம் ஆனால்

பேராசை மட்டும் இருக்க கூடாது. உங்கட குடும்பம் ஒரு நாள் சாப்பாட்டுக்கே

முட்டி மோதிக்கொண்டு இருக்கேக்க என்னை போல ஒரு அழகான வசதியான

பெண்ணை வாழ்க்கை துணையா அடைய வேண்டும் என ஆசைப்படுவது

தப்பா தெரியலையா ?ஏதோ கூடப்படிக்கிறவன் என்று சகஜமாய் பழகினா உடன காதல் என்று முடிவு செய்து விடுவீர்களா ''

''கௌரி நீ சொல்வது சரிதான் நாங்கள் கஸ்டப்பட்டவர்கள் தான் .அனால் இப்பத்தான்

எனக்கு வேலை கிடைத்து விட்டதே .உன்னை வைத்து காப்பாற்ற

என்னால் முடியும் .'' என்றான் குமார் .

''எப்படி வைத்து காப்பாற்றுவாய் உன்ர சம்பளம் எனக்கு ஒரு பவுண் நகை வங்க

கூட காணாது .மதக் கடைசியில காசுக்கு எத்தின பேரிட்ட போய் நிக்க வேண்டி வருமோ ..

இப்படி காலம் முழுக்க வாழ்க்கையில போராட என்னால முடியாது .என்னைப் பொறுத்தவரை பெரிய வீடு வெளியில் போய் வர கார்

கைநிறைய பணம் எடுபிடிக்கு ஒரு வேலையாள் இப்படி எல்லாம் உள்ள

ஒருவன்தான் எனக்கு வாழ்க்கை துணையா வரவேணும் அதுக்காகத்தான்

நான் காத்திருக்கிறேன் .எனியும் காதல் மொழி பேசிக்கொண்டு என்னை தேடி

வராதே ''

என்று கூறிவிட்டு போய்விட்டாள் கௌரி .

அந்த சம்பவத்திற்கு பிறகு அவன் கௌரியை பார்க்க போகவில்லை .

சில மாதங்களில் கௌரி திருமணம் நிச்சயமாகி வெளிநாடு சென்று விட்டாள்.

கௌரியின் கணவன் வெளிநாட்டில் சொந்தமாக ஒரு தொழில்நிறுவனம்

வைத்திருக்கிறாராம் .மிகவும் வசதியான இடமாம் என்று ஊரில் உள்ளவர்கள்

பேசிக்கொண்டனர் .

கௌரிக்கு நினைத்தது போலவே வாழ்க்கை அமைந்து விட்டதை எண்ணி குமார்

சந்தோசப்பட்டான் .

கால ஓட்டத்தில் குமாரும் ஒரு பெண்ணை திருமணம் செய்து சந்தோசமாக

வாழத்தொடங்கினான். வருடங்களும் நான்கை கடந்து விட்டிருந்தத்து .

இன்று வேலை முடிந்து வரும் போதுதான் கௌரியை வழியில் சந்தித்தான் .

தன் பழைய தோழி என்ற முறையில் அவளை அப்படியே கடந்து போக அவன்

மனம் விரும்பவில்லை .அவளது தோற்றம் வசதியான வாழ்க்கையை வெளிப்படுத்தியிருந்தால்

அவன் தன்பாட்டில் கடந்து போயிருப்பான் .ஆனால்

அவளது கோலம் அவனை அப்படியே அங்கே நிற்க வைத்து விட்டது .

'' என்ன கௌரி இது.. நீ எப்படி இங்கே ...''

அன்று பட பட என பேசிய கௌரியால்

இன்று அவனது முகத்தை பார்த்து பேச முடியவில்லை .இப்போது மௌனம்

மட்டுமே பேசியது .கண்ணீர் அவளையும் மீறி தெறித்து பாய்ந்து கொண்டிருந்தது .

''என்ன கௌரி என்ன நடந்தது .நீ நல்ல இடத்தில்தானே வாழ்க்கைப்பட்டாய்

பிறகு ஏன் இப்படி ஒரு கோலம் ''

குழப்பமாய் கேட்டான் குமார் .

''குமார் என்னை மன்னிச்சிடுங்க உங்களிற்கு முன்னால் நின்று பேசிற தகுதி கூட எனக்கு இல்லை வாழ்க்கையில் பணம்தான் முக்கியம் என்று நினைத்து ஓடினன்.

பணம் நிறைய இருந்தது ஆனால் அங்கு சந்தோசம் இருக்கவில்லை .என் கணவர் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளிற்கு சொந்தமானவர் .அவரோடு

என்னால் தொடர்ந்து வாழ முடியவில்லை எங்களிற்கு விவாகரத்தும் ஆகி விட்டது .அங்கு இருக்க பிடிக்கவில்லை .அதுதான் திரும்பவும் ஊருக்கே

வந்து விட்டேன் ''

"என்ன கௌரி இது விசாரித்துப் பார்க்காமலா திருமணத்துக்குச் சம்மதித்தீர்கள்"

"தரகர்தான் இந்த வரணைக் கொண்டு வந்தார் நல்ல இடம் என்றார். நானும் வெளிநாட்டு மோகத்தில் உடனேயே சம்மதம் சொல்லி விட்டேன். அவசரத்தில் எடுத்த முடிவு என் வாழ்க்கையைச் சீரழித்து விட்டது. விடுங்கோ குமார் பணத்துக்காக அலையும் என்போன்ற பெண்களுக்கு இதுதான் சரியான பாடம்..."

குமாருக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவளே தொடர்ந்தாள்.

"குமார் முடிந்தால் எனக்கு எங்கேயாவது ஒரு வேலை எடுத்துத் தாங்கோ. காலம் முழுக்க உங்களுக்கு நன்றியுள்ளவளாக இருப்பேன்."

"சரி கௌரி நான் வேலைக்கு முயற்சி செய்கிறேன். நேரமாகுது பாவம் மனைவி சாப்பிடாமல் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பா நான் போய்ட்டு வாறன். ஏதாவது வேலை இருந்தால் நான் உங்களை வீட்டில் வந்து பார்க்கிறேன்."

என்று கூறிவிட்டு நகர்ந்தான் குமார்.

"மனைவி மீது இப்படிப் பாசமழை பொழியும் ஒரு நல்லவரை தூக்கி எறிந்து விட்டேனே பணத்தையும் அந்தஸ்தையும் கணக்குப் போட்டுப் பார்க்கஇ வாழ்க்கையை வாழத்தெரியாத எனக்கு இதுதான் சரியான பாடம்"

என்று எண்ணியபடி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள் கௌரி.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல படிப்பினையான கதை .........சில பெண்களின் தற்பெருமை .....

அளவுக்கு மீறிய ஆசை .......வாழ்வை திசை மாற்றி விடுகிறது .........பதிவுக்கு நன்றி நிகே .

Posted

நல்ல கதை நிகே... உண்மையா இப்ப நடக்குறதுதான் இப்படி அதை அப்படியே கதையா குடுத்து இருக்கிறியள்...வாழ்க்கைக்கு பணம் முக்கியம்தான் ஆனால் தேவைக்கு ஏற்றது போல இருந்தாலே காணும்... இப்படி போய் சில பெண்கள் தப்பான முடிவு எடுக்கிறார்கள்...எல்லாம் முடிந்த பிறகு கவலை பட்டு பிரோஜசனம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குமாருக்கு வாழ்த்துக்கள் பரதேசியாக அலைந்து கொண்டு இருக்கவேண்டியவன் அந்த பொம்பளையால் அவன் நல்ல காலம் தப்பிவிட்டான் வாழ்த்துகள்ரா குமார் :):D

உங்க கதையும் சோக கதைதான் போல கிடக்கு நிகே தொடரட்டும் :icon_idea:

Posted

நன்றி சுஜி. நன்றி நிலாமதி அக்கா தங்கள் கருத்துப் பகிர்விற்கு

இந்த கதை கற்பனையாக இருந்தாலும் பலரது வாழ்க்கையின் உண்மை நிலை இதுதான் ..........

Posted

கௌரிக்கு நல்ல படிப்பினை. தவறுகளை அவர் உணர்ந்தாலே மனிதன் ஆகி விடுவார். குமாரை அவர் அடைய முடியாதது அவரின் துரதிஸ்டம் தான். நன்றி கதைக்கு நிகே.

Posted

நன்றி முனிவர் ஜீ தங்கள் கருத்து பகிர்விற்கு

முனிவர் ஜீ Posted Jun 3 2009, 07:06 PM

குமாருக்கு வாழ்த்துக்கள் பரதேசியாக அலைந்து கொண்டு இருக்கவேண்டியவன் அந்த பொம்பளையால் அவன் நல்ல காலம் தப்பிவிட்டான் வாழ்த்துகள்ரா குமார்

உங்க கதையும் சோக கதைதான் போல கிடக்கு

நிகே தொடரட்டும்

எனது கதைகள் சோகக் கதைகள் அல்ல . ஆனால் காதலுக்காக உயிரை அழித்துக் கொள்ளும் பைத்தியக்காரத்தனத்தை எனது கதைகள் வெளிப்படுத்துவதில்லை .

காரணம் அந்த விடயத்தில் எனக்கு உடன்பாடில்லை .வாழ்க்கைகாகத்தான் காதலே

தவிர காதல் மட்டும் தான் வாழ்க்கையில்லை . நன்றி தங்கள் கருத்துக்கு

Posted

பேராசை கொண்ட பெண்களுக்கு நல்லதொரு படிப்பிணையான கதை. நன்றி உங்கள் படைப்பிற்கு நிகே.

Posted

அருமையான கதை நிகே!!!!!!

வாழ்த்துக்கள் ......!!!!!! பாராட்டுக்கள்........!!!!!!

மனித வாழ்வில் பணம் படுத்தும் பாடு சொல்லி மாளாது............

அன்புடன்

தமிழ்மாறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மஹிந்த மாமாவட்டை(மஹிந்த மாதிரி) :D சொல்லி முதல்ல இப்படி காதலிக்கிறவங்களை சுடச்சொல்லணும்.

அனுபவிக்க தெரியாதவர்கள்(வாழ்க்கையை) தான் காதல்,கத்தரிக்காய் என்று சாகிறாங்க :lol:

Posted

நன்றி nunavilan தங்கள் கருத்துப் பகிர்விற்கு

வாழ்க்கைக்கு தேவை பணம் என்ற நிலை மாறி இன்று பணம் தான் வாழ்க்கை

என்றாகிவிட்டது .இதனால்தான் பலரின் வாழ்க்கையும் சீரழிந்து கொண்டிருக்கிறது .

nunavilan Posted Jun 4 2009, 09:41 AM

கௌரிக்கு நல்ல படிப்பினை. தவறுகளை அவர் உணர்ந்தாலே மனிதன் ஆகி விடுவார். குமாரை அவர் அடைய முடியாதது அவரின் துரதிஸ்டம் தான். நன்றி கதைக்கு நிகே.

Posted

நன்றி Eelamagal, thamilmaran , ஜீவா

பலர் வாழ்க்கையை தமக்காக வாழாமல் பிறருக்காக வாழ்கிறார்கள் .இதனால்தான்

இன்று அன்பு வற்றி அநியாயம் ஊற்ரெடுக்கிறது.

thamilmaran Posted Yesterday, 04:39 PM

அருமையான கதை நிகே!!!!!!

வாழ்த்துக்கள் ......!!!!!! பாராட்டுக்கள்........!!!!!!

மனித வாழ்வில் பணம் படுத்தும் பாடு சொல்லி மாளாது............

அன்புடன்

தமிழ்மாறன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லகதை நன்றி நிகே.இது மாதிரி நிறையவே நடக்கிறது.

பெண்ணே நீ பேராசை பிடித்து அலையாதே.அன்போடு கட்டினால் ஒருமுளம் மஞ்சள் கயிறு போதும் நமக்கு. :rolleyes:

பிரியமுடன்:யாயினி கனா.

Posted

பெண்ணே நீ பேராசை பிடித்து அலையாதே.அன்போடு கட்டினால் ஒருமுளம் மஞ்சள் கயிறு போதும் நமக்கு. :rolleyes:

நல்லாதான் சொன்னிர்கள் யாயினி...உண்மைதான்

Posted

நன்றி யாயினி

தங்கள் கருத்து பகிர்விற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.