Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாமல் பேச வைப்பார் பிரபாகரன்

Featured Replies

இந்தக்கட்டுரை எங்கோ தொடங்கி எங்கோ ஓடுவதைபோன்றில்லை இது வரலாற்றைக்காட்டுகிறது.

விடுதலைப்பாடதையில் உதவாததுகளை ஒதுக்கியது தவறாகது.

அன்று புலிகள் இவர்களைத்தடைசெய்தபோது இவர்கள் ஒன்ரும்

சாத்வீகம் செய்யவில்லை அன்றே எதிர்த்து சண்டையிட்டார்கள்.

எது தவறென்று இன்று கூறும் இவர்கள் அன்று அதையே செய்தார்கள்.

அதுமாத்திரமில்லை இன்று நடப்பது ஒரு இன அழிப்பு அதுக்கு

துணைபோகிறவர்களை வேறென்ன சொல்வது.

இவர்கள் எம்மினத்துக்கு தேவை இல்லை. புறுக்கிகள் எங்கென்றாலும் நக்கி வாழட்டும்.

உங்களுக்கு வேலை மினக்கெட்டு இதைச் சொல்ல வேண்டிய அவசியம் புலிகளுக்கு இல்லை.ஆனால், இப்போது நீங்கள் போடும் ஊடக ஊதல்கள் உங்கள் சுயரூபங்களை நீங்கள் காட்டிய காலப் பகுதிகளை அறியாத இளைஞர்களைக் குழப்பும். அதனால் தான் ஒரு சாதாரண பிரஜையாக உங்களால் மக்களுக்கு நடத்தப் பட்ட கொடுமைகளில் சின்னஞ்சிறு பகுதியை மட்டும் எடுத்துச் சொன்னேன்.

இதோ எங்கள் மாபெரும் தலைவன் இறந்தான் என்று கேலிச் சித்திரம் வரைகிறீர்கள். துள்ளிக் குதிக்கிறீர்கள்.களத்தில் சாதனைகள் புரிந்து தனி அரசையே நிறுவிக் காட்டியவன், தன் மக்களுக்கு உங்கள் எஜமானர்களால் வன்னியில் நடத்தப் பட்ட கொடுமைகளைப் பார்த்து மனமுடைந்து போய்விட்டான். தன் வீரர்களின் துப்பாக்கிகள் இனிமேலும் சத்தம் எழுப்ப மாட்டாது என்று கூறி விட்டான்.

அர்ப்பணிப்பும் வீரமும் நிறைந்து களமாடி சாதனை படைத்தவர்கள் ஆட்கடத்தலும் கப்பம் கோருதலும் வேறு சுகங்களும் என்று வாழ்ந்த உங்களைப் பார்த்துக் கேட்கிறார்கள்.தமிழர்களுக்கா போராடத் தயாரான எல்லா அமைப்புகளுடனும் சேர்ந்து அரசியல் ரீதியான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று. முடியுமா உங்களால்? என்ன செய்யப் போகிறீர்கள்?

ஒரு காலத்தில் சிங்கள இராணுவத்துக்கு காட்டிக் கொடுத்தே நன்றாக வாழ்ந்த உங்களையும் தூக்கி எறிந்துவிட்டு கருணாவை மட்டும் தலையில் வைத்துக் கொண்டாடுகிறது சிங்கள அரசு. இனிமேலாவது குரல் கொடுப்பீர்களா?

இதோ வன்னியில் இருந்து வந்து முகாம்களில் கிடக்கிறோம், வதை முகாம்களில் வதை படுகிறோம், கிளிநொச்சியில் வீடுகளுக்குள் உணவு உடை இரண்டுமே இன்றிக் கட்டிப் போடப் பட்டிருக்கிறோம், பொலனறுவையில் எங்கள் உடல் உறுப்புக்களை எடுப்பதற்காகக் கொல்லப் படுகிறோம். நீங்கள் முதன் முதலில் ஆயுதம் எடுத்ததன் நோக்கத்தில் சிறிதை என்றாலும் நிறைவேற்ற எமக்காகக் குரல் கொடுப்பீர்களா? எங்களை முகாம்களை விட்டு எங்கள் வீடுகளில் குடியேற அனுமதிக்குமாறு குரல் கொடுப்பீர்களா?குறைந்த பட்சம் புலிகளால் எங்களுக்கு கிடைக்கப் போகும் சிறு உரிமைகளை உங்கள் கூற்றுப்படி புலிகள் அழிந்துவிட்ட காரணத்தால் புலிகளின் எதிரிகள் எல்லோருமாகவாவது ஒற்றுமையாக நின்று பெற்றுத் தருவீர்களா? முடியுமா உங்களால்?

முடிந்தால் நன்றி. முடியாவிட்டால் விட்டுவிடுங்கள். ஏனெனில் நாங்கள் போரின் வலியையும் ரணங்களையும் சுமந்த உடலையும் மனதையும் மட்டுமல்ல, அந்த மனதுக்குள் விஸ்வரூபமெடுத்து நிற்கும் எங்கள் தலைவனையும் சுமந்து நிற்கிறோம். எங்கள் மனங்களுக்குள் மட்டுமல்ல, சற்று உண்மையுடன் உற்றுப் பாருங்கள். உளவுறுதியுடன் சாதித்துக்காட்டிய எங்கள் பெருந்தலைவனின் சிரித்தமுகம் உங்கள் மனங்களுக்குள்ளும் இருக்கும். பிரபாகரன் என்பது வெறும் ரத்தமும் சதையும் கொண்டு உயிர் சுமந்து வாழும் ஒரு உடம்பல்ல, ஒரு துப்பாக்கிக் குண்டில் அழிந்து போவதற்கு. அது எங்களின் மந்திரச்சொல். அவர் மரணமில்லாப் பெருந்தலைவர்.உங்கள் அத்தனை துரோகங்களையும் எரித்துச் சாம்பராக்கிவிடும் பெரு நெருப்பு. மீண்டும் எங்களை எழுந்து நிற்க வைக்கும் உத்வேகம். நீங்கள் கூறுவது போல அவர் இல்லையென்றாலும் கூட எங்களுக்குள்ளே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் எங்கள் தலைவன் எங்களை வழி நடத்துவான். அவருக்கு வந்துள்ளது அஞ்ஞாதவாசமோ அஸ்தமனமோ எதுவானாலும் அவர் பேசாமல் இருந்தே எங்களை வழிநடத்துவார்.எங்கள் உரிமைகளை நிச்சயம் நாங்கள் வென்றெடுப்போம்..

மதியழகி

மதியழகி நீங்கள் எழுதியது எல்லாமே உண்மைதான். அப்போது நடந்த பல அவலங்களையும் நானும் பார்த்திருக்கிறேன்.

நல்லா உறைக்கிற மாதிரி சொன்னீங்கள் . ஆனால் இதுகள் திருந்தாதுகள். பதவி பணம் சுகங்களுக்கு அடிமைப்பட்டவர்கள் சேர்ந்து தமிழனுக்கு நீதி வாங்கி குடுப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அதைப்போல முட்டாள்தனம் எதுவம் இல்லை.

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தாக்குதல்

ஆனால்

எதற்கோ என்று எங்கோ இறைக்கப்பட்டநீர்.....?

[b]நித்திரை கொள்பவன்கூட எழுந்து பதில்தருவான்

ஆனால் நடிப்பவன்.....???

எமது நேரத்தை பிரயோசனமான வழிகளுக்கு பயன்படுத்தலாமே........

  • கருத்துக்கள உறவுகள்

என் தலைவன் பற்றி எழுத கதைக்க....

இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது

ஒவ்வொரு அடி என் தலைவன் ஏற

10 அடி சறுக்கச்செய்ய முயற்சித்து

ஒவ்வொரு அங்குலமாக குழிபறித்தவர்கள் இவர்கள்தான்

[b]என் தலைவன் இருந்தாலும் ஆயிரம் பொன்

அதாவது ஆயிரம் அர்த்தங்கள்

இறந்தாலும்ஆயிரம் பொன்

அதாவது ஆயிரம் அர்த்தங்கள்[/b

]ஆனால் இவர்கள் இருந்தும் பிரயோசனமில்லை

செத்தும் பிரயோசனமில்லை

அப்படி பிரயோசனமானவர்கள் என்றால்

இன்று என் தலைவன் வழிவிட்டுள்ளான்

எங்கே தமிழர்களுக்காக ஏதாவது பேசுங்கள் பார்க்கலாம்................???????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தாயே!

தெரியாத பல விடயங்களை புரிந்து கொண்டேன்.

ஈழ விடயங்களில் ஆர்வம் காட்டுபவர் நூறில் ஒருவர் என்றால், இணையம் மூலமாக இது போன்ற விடயங்களை அறிபவர் அதிலும் மிக சொற்பமே. தினத்தந்தி,தினமணி போன்றவற்றில் வெளிவந்தால் நிச்சயம் பல்லாயிரம் மக்களின் மனதிலும் இந்த விடயங்கள் தைக்கும்.

அன்புடன்,

சென்னப்பன் சீனிவாசன்.

இன்னமொன்றைச் சொல்லவேண்டும்

துரோகிளிடம் இருந்தும் ஒருவர் (அற்புதன்) பழய பல விசயங்களை எழுதினார்.

அவருக்குப்பின் எங்களின் விடுதலையின் குறும் வரலாறு பத்திரிகைகளில்

வருவது குறைந்து விட்டது.

நான் யாரையும் யாருடனும் ஒப்பீடு செய்யவில்லை ஆனால் எங்கள் போராட்டத்தின் வரலாறு

எங்கள் இளைய சமுதாயத்துக்கும் தமிழக உறவுகளுக்கும் தெரியவேண்டும்.

உங்களின் முயற்சி முன்னேறவேண்டும்.

நல்ல ஆக்கம். தொடறட்டும்.

Note:

முதல் முதல் சகோதரபடுகொலையை அறிமுகப்படுத்தியது டெலோ தான். 85 வருடம் என்று நினைக்கிறேன் டெலோ வை சேர்ந்த தாஸ், காளி, பிட்டார் உட்பட 12 தளபதிகள் போராளிகளை அதே அமைப்பை சேர்ந்த்த பொபி தலைமைலான வர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைத்து சுட்டு கொன்றார்கள். தாஸ் ஒரு நல்ல போராளி அவரும் எமது தேசிய தலைவர் உதித்த அதேமண்ணில் உதித்த போராளிதான்.

அதே போல்தான் சுழிபுரத்தில் உள்ள plot இன் camp இல் வைத்து அதே அமைப்பை சேர்ந்த்த 6 போராளிகள் சித்தேரவதை செய்யப்பட்டு கொலைசெயப்பட்டர்கள் . இப்படியாக ஈழ விடுதலைக்காக புறப்பட்டு பின்னர் பாதைமரிய அமைப்புக்களா ஒன்றுபட்டு எமக்கு ஈழத்தை பெற்றுதர போக்கிரர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தினத்தந்தி,தினமணி போன்றவற்றில் வெளிவந்தால் நிச்சயம் பல்லாயிரம் மக்களின் மனதிலும் இந்த விடயங்கள் தைக்கும்.

ஈழ வரலாற்றை, கன்னித்தீவு 'சிந்துபாத்-லைலா' நடையில் போட்டால்தான் தமிழக மாக்களின் மரமண்டைகளில் உறைக்கும்...அப்படியும் உறைத்து அவர்கள் விறைத்து எழுமுன் ஈழத்தின் சொச்சமுள்ள தமிழினமும் காற்றில் கரைந்திருக்கும். அட போப்பா, இவன்களுக்கு மானாட மயிலாட பார்க்கவே நேரம் போதவில்லை(சமீபத்திய போட்டிகள் நடந்த அரங்கத்திற்குச் செல்ல ஏகப்பட்ட சன நெரிசலாம்), இதில் சகதமிழனின் உயிர் ஊசலாட்டத்தைப் பார்க்க நேரமேது?

Edited by ராஜவன்னியன்

எச்சில் எலும்புத்துண்டு பொறுக்கும் Alternative மாதிரியான ஒட்டுண்ணிகளை இனம் காட்ட உதவிய மதியழகி உங்கள் பணி மென்மேலும் தொடர தமிழ்நிலாவின் வாழ்த்துக்கள்.

:(

Edited by Panangkai

கட்டுரையை ஆறறிவுள்ள மனிதனாக வாசித்தால் உங்களுக்கு எந்தக்காலத்தை மையப்படுத்தி மதியழகி எழுதியுள்ளார் என்பது விளங்கும்.

உங்கடை அறிவு தங்களின் எழுத்திலேயே தெரிகிறது. ஏதோ உளறிக் கொட்டுங்கோ

Note:

முதல் முதல் சகோதரபடுகொலையை அறிமுகப்படுத்தியது டெலோ தான். 85 வருடம் என்று நினைக்கிறேன் டெலோ வை சேர்ந்த தாஸ், காளி, பிட்டார் உட்பட 12 தளபதிகள் போராளிகளை அதே அமைப்பை சேர்ந்த்த பொபி தலைமைலான வர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைத்து சுட்டு கொன்றார்கள். தாஸ் ஒரு நல்ல போராளி அவரும் எமது தேசிய தலைவர் உதித்த அதேமண்ணில் உதித்த போராளிதான்.

அதே போல்தான் சுழிபுரத்தில் உள்ள plot இன் camp இல் வைத்து அதே அமைப்பை சேர்ந்த்த 6 போராளிகள் சித்தேரவதை செய்யப்பட்டு கொலைசெயப்பட்டர்கள் . இப்படியாக ஈழ விடுதலைக்காக புறப்பட்டு பின்னர் பாதைமரிய அமைப்புக்களா ஒன்றுபட்டு எமக்கு ஈழத்தை பெற்றுதர போக்கிரர்கள்

உண்மையில் அதுவல்ல தொடக்கம். அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே சுந்தரம், இறைகுமாரன், உமைகுமாரன் என்று ஆரம்பிக்கப் பட்டு விட்டது. சுழிபுரத்தில் புளொட்டால் படுகொலை செய்யப் பட்டவர்கள் 6 பேரும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள். இவர்களுடைய உடல்கள் பின்னர் தோண்டி எடுக்கப் பட்டு 'பிணந் தின்னிகளே பதில் சொல்லுங்கள்' எனும் வாசகத்துடன் போஸ்டராக எல்லா தெருக்களிலும் புலிகளால் ஒட்டப் பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.