Jump to content

உன் கல்லூரி நண்பி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உன் கல்லூரி நண்பி

மனிதக் கூடுகளைச் சுமந்தலையும்

உயிர்களுக்கு மத்தியில்

‘மனிதம்’ காட்டி என்னை

மயங்க வைத்த தோழனே !

உன்னைப் பிரிவதற்கு

என் மனம் ஒப்பவில்லை நண்பா.

வார்த்தையில் வர்ணஜாலங்களை

வாரி இறைத்த என்

கல்லூரிக் கலைஞனே

என் உயிரை அழுத்திப்

பெருவலியெடுக்க,

உன்னைப் பிரிவதை எண்ணி நான்

துடித்துப் போகிறேன்.

காயமற்ற இடங்களில் கூட

உன் பிரிவு வலியைத் தருகிறது தோழா !

உடைந்த சிலம்பின் கதறலாய்

தனித்து விடப்பட்ட

சிறு தீவின் குமுறலாய்

துயரெடுத்துப் புலம்புகிறது

என் இதயம்.

என் உயிர் நண்பனே !

உன் கைப்பேசியில்

என் எண்ணை அழுத்தி அடிக்கொரு ஒரு

‘குறுஞ் செய்தி’ அனுப்புவாய்.

இல்லையேல்

நாளொரு பொழுது

‘எப்படிச் சுகம்? ’ என்ற

ஓற்றை வரியிலாவது

நலம் விசாரிப்பாய் என்ற நம்பிக்கையுடன்

பிரிந்து செல்லும் கல்லூரி நண்பி.

தியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழமான நட்பு பிரிவது வேதனை தான்,பிரிவின் வலியில் ஏக்கம் தெரிகிறது,வாழ்த்துக்கள் தியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீயா

நட்புக்காய் நீங்கள் எழுதி வரிகள்மிக மிக நன்று....

Link to comment
Share on other sites

ஒரு நல்ல நட்பை பிரியும் போது அதன் வலிகளும் துயரமும் அதிகம்... நல்ல கவிதை வரிகள் உங்கள் ஆக்கங்கள் தொடர என் வாழ்த்துக்கள் தியா அண்ணா :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழமான நட்பு பிரிவது வேதனை தான்,பிரிவின் வலியில் ஏக்கம் தெரிகிறது,வாழ்த்துக்கள் தியா

நன்றி சுப்பண்ணா

ஆழமான நட்பு பிரியும் போது வலியைத் தரும்

ஆனால்

நல்ல உண்மையான நட்புக்கு என்றும் பிரிவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீயா

நட்புக்காய் நீங்கள் எழுதி வரிகள்மிக மிக நன்று....

நன்றி

இளங்கவி உங்கள் பதிலுக்கு நன்றி

சுஜி Posted Yesterday, 07:16 PM

ஒரு நல்ல நட்பை பிரியும் போது அதன் வலிகளும் துயரமும் அதிகம்... நல்ல கவிதை வரிகள் உங்கள் ஆக்கங்கள் தொடர என் வாழ்த்துக்கள் தியா அண்ணா

நன்றி சுஜி

உண்மைதான் நல்ல நட்பு பிரியும் போது வலிதான்

ஆனால் நட்புக்கு ஏது பிரிவு?

சுஜி தொடர்ந்து கருத்துரைத்து வருகிறீர்கள்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தியா நல்ல கவி வரிகள்.மனதில் உள்ளதை கவிதையாய் வடித்தமைக்கு.

பிரிவுகள் எமக்கு புதியவை அல்ல....மீண்டும் புதிய அத்தியாயங்களை பகிர்ந்து கொள்வதற்காய் மனித வாழ்க்கையில் நடைபெறும் சில தவிர்க்கமுடியாத மாற்றங்களோடு விட்டுபோன நட்பு மீண்டும் வரும். <_<

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

பிரியமுடன்:யாயினி கனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தியா நல்ல கவி வரிகள்.மனதில் உள்ளதை கவிதையாய் வடித்தமைக்கு.

பிரிவுகள் எமக்கு புதியவை அல்ல....மீண்டும் புதிய அத்தியாயங்களை பகிர்ந்து கொள்வதற்காய் மனித வாழ்க்கையில் நடைபெறும் சில தவிர்க்கமுடியாத மாற்றங்களோடு விட்டுபோன நட்பு மீண்டும் வரும். :lol:

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

பிரியமுடன்:யாயினி கனா.

நன்றி யாயினி

நல்ல நட்புக்கு பிரிவில்லை என்பதை மிகவும் அiகாக திருக்குறள் மூலம் விளக்கியதற்கு நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.