Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணிமேகலை

Featured Replies

  • தொடங்கியவர்

வஞ்சி மாநகர் புகுந்த காதை.

வஞ்சி மாநகரை அடைந்த மணிமேகலை ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட கண்ணகி சிலையுடன் கோவலன் சிலையையும் வணங்கி ஏன் தாயே நீ தந்தை இறந்ததும் உன் வாழ்வை முடித்துக் கொள்ளாமல் அறக்கற்புடன் திகழாமல் இதுபோன்ற ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ணி மறக்கற்பை மேற்கொள்ளக் காரணம் என்ன? என்று கேட்டாள். இவ்வாறு மணிமேகலை கூறக்கேட்டதும் கற்புக கடவுளான கண்ணகி தோன்றி அக்கதையை கூறினாள்.புத்தசமயத்தை மேற்கொண்டு அதன் வழி ஒழுகிடுவதில் தான் பிறப்பை ஒழிக்க முடியும் என்றெல்லம் கூறிச் சென்றாள்.

  • Replies 99
  • Views 18k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சமயக் காணக்கர் தம் திறம் கோட்ட காதை.

வஞ்சி மாநகரில் சென்றடைந்த மணிமேகலை ஆண் வேடம் தரித்து சமயவாதிகள் பலருடைய கொள்கைகளை அறிய விரும்பினாள். அவ்வாறே அவள் சைவவாதி , பிரம்மவாதி , வைணவவாது, வேதவாதியின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டாள்.

  • தொடங்கியவர்

கச்சிமா நகரம் புக்க காதை

கச்சிமாநகரத்திலே மணிமேகலை பலவிதமன தண்ணீர் பாய்ந்து நிரப்பும் அகழியை கண்டு பெரிதும் வியப்புற்றாள்.மணிமேகலை புத்தர் பள்ளியை அடைந்த போது தம் பாட்டனாரான மாசாத்துவானைக் கண்டாள். அவரை வணங்கி அவர் நலம் பற்றிக் கேட்டாள்.காஞ்சி நகரம் பசியால் வாடுவதை தன் பேத்தியிடம் மாசாத்துவான் தெரிவித்தார். அவனும் தன் பாட்டனாரை வணங்கி வான் வழியே காஞ்சிக்கு பறந்தாள். அங்குள்ள மக்களின் துயர் போக்கினாள். அறவணசிகள் மாதவி சுதமதி அவ்ர்கள் இருப்பிடம் தேடி வந்தார்கள். இவர்களை கண்ட மணிமேகலை பெரு மகிழ்வடைந்து அவர்களாஇ வரவேற்று அறவணடிகளுக்கி உரிய ஆசனம் கொடித்து மரியாதை செய்தாள். அறுசுவை உணவளித்து போற்றினாள்.

  • தொடங்கியவர்

தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை

அறவணடிகள் பூம்புகாரை கடல் கொண்டது பற்றிக் கூறினார். இந்திர விழா நடைபெறாத காரணத்தை கூறி அதனால்தான் கடல் கொண்டது என்றார் அறவணடிகள். பூம்புகார் கடலில் மூழ்கியது மட்டுமன்றி காகந்தி நகரமும் மூழ்கிய விபரத்தையும் அடிகள் கூறினார். எனவே தான் தாம் மாதவியௌயும் சுதமதியையும் அழைத்து வந்து விட்டதாக கூறினார். மணிமேகலை அடிகளிடம் தான் மன அமைதி இன்றி தவித்து கொண்டிருப்பதாக கூறினாள். அவரே தனக்கு அமைதியை தர வேண்டும் எனக் கூறினாள். அவர் மணிமேகலையிடம் காண்டல் கருதல் இரண்டு தத்துவ நூல்களை கற்கச் சொன்னாரவ்ரும் சி உண்மைகளை விளக்கி உரைத்து மணிமேகலைக்கு அமைதியை தந்தார்.

  • தொடங்கியவர்

பவத் திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை.

எல்லா வழிகளிலும் பூரணத்துவம் பெற்ற மணிமேகலை புத்த தர்மத்தை பெரிதும் போற்றி ஒழுகினாள். அவள் உள்ளம் எல்லாம் புத்தபெருமானின் கருத்துக்கள் நிறைந்திருந்தது. அறவணடிகள் மணிமேகலையின் கூரிய அறிவையும் புத்தர் கொள்கையில் அவள் கொண்ட பற்றையும் பெரிதும் பாராட்டி பேசினார். பவத்திறம் அறுக - அதாவது பிறவி வகைகள் ஒழிய வேண்டும் என்ற எண்ணமுடன் மணிமேகலை தவம் செய்தாள். இனி இது போன்று பலப்பல பிறவிகள் எடுக்கும் நிலையே வேண்டாம் என்பது மணிமேகலையின் கருத்து.

இதையே புத்தரின் கருத்தும் வலியுறுத்துவதால் மணிமேகலை " மறு பிறவியே வேண்டாம்" என்று தவம் இருக்க தொடங்கினாள். மணிமேகலையின் கருத்துப்படி இன்னொரு பிறவி தேவை இல்லை என்பது தான் அறவணடிகளின் கருத்துமாகும்.இன்னொரு பிறவி எடுத்து அதிலும் பாவச் செயல்கள் செது , அந்தப் பாவச் செயல்கள் மேலும் நீண்டு கொண்டே போகக் கூடாது என்பதுதான் நல்லோர்களின் - தெளிந்த அறிஞர்களின் கருத்தாகும். மணிமேகலையும் இதைத்தான் வலியுறுத்துகிறாள்.

மணிமேகலை புகழ் வெல்க!!!!!!

நிறைவு பெறுகிறது. -/-

இரசிகை ஏதாவது ஆராச்சிக்காக படித்தீர்களா?? உங்கள் மூலம் மணிமேகலை எனும் காப்பியம் யாழ்க் களத்தில் வருவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

  • தொடங்கியவர்

வணக்கம் வம்பு சா வசம்பு அண்ணா

நான் ஒரு ஆராச்சிக்காவும் படிக்கவில்லை இலங்கயில் இருக்கும் போது தமிழில் படித்தது. அப்புறம் இப்ப லீவில் நீக்கும் போது எனது பொழுதுபோக்கு நாவல்கள் வாசிப்பது சோ நான் வாசிச்சதை சுருக்கமாக சொன்னேன் அவ்வளவு தான். எனக்கு ரொம்ப சந்தோசம் என்னால் நீங்கள் எல்லோரும் வாசிக்க முடிந்தையிட்டு. யான் பெற்ற இன்பம் பெறக இவ்வையகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் ரசிகை.. உங்களது சேவைக்கு நன்றிகள். இன்னும் இறுதிப்பாகங்கள் சில வாசிக்க வேண்டி உள்ளது. வாசித்து பயன் பெறுகிறேன்.

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் ரசிகை.. உங்களது சேவைக்கு நன்றிகள். இன்னும் இறுதிப்பாகங்கள் சில வாசிக்க வேண்டி உள்ளது. வாசித்து பயன் பெறுகிறேன்.

நல்லது உங்கள் சந்தோசமே எனது சந்தோசம் நண்பனே :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது உங்கள் சந்தோசமே எனது சந்தோசம் நண்பனே :)

தற்சமயம் கைவசம் கொஞ்சம் பிரச்சினைகளும் உள்ளன..

  • தொடங்கியவர்

தற்சமயம் கைவசம் கொஞ்சம் பிரச்சினைகளும் உள்ளன..

என்ன பிரச்சினைகள் சொல்லுங்கள் முடிந்தால் உதவுகிறேன் :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பிரச்சினைகள் சொல்லுங்கள் முடிந்தால் உதவுகிறேன் :roll:

:) உங்கள் பிரச்சினைகள் எனது பிரச்சினைகள் என்று சொல்லுவீர்கள் என்பதற்காக சொன்னேன். இருப்பினும் நன்றிகள் :lol::lol:

இலங்கையில் இருக்கும் போது இப்படியான புத்தகங்கள் சில நானும் படித்து இருக்கிறேன். உங்களிடம் இருக்கும் மணிமேகலை.. சுருக்கமான புத்தகமா.. அல்லது விரிவாக.. அனைத்து பகுதிகளும்.. உள்ள புத்தகமா??

  • தொடங்கியவர்

இலங்கையில் இருக்கும் போது இப்படியான புத்தகங்கள் சில நானும் படித்து இருக்கிறேன். உங்களிடம் இருக்கும் மணிமேகலை.. சுருக்கமான புத்தகமா.. அல்லது விரிவாக.. அனைத்து பகுதிகளும்.. உள்ள புத்தகமா??

நான் தற்போது வாசித்த புத்தகம் பாடலுடன் விளக்கம் உள்ள புத்தகம் வாசிகசாலையில் பெற்றேன். சுருக்கமும் இல்லை . விரிவும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தற்போது வாசித்த புத்தகம் பாடலுடன் விளக்கம் உள்ள புத்தகம் வாசிகசாலையில் பெற்றேன். சுருக்கமும் இல்லை . விரிவும் இல்லை.

நன்றிகள் உங்கள் தகவலுக்கு.... தமிழ் பக்கத்தில் தேவை இல்லாத அலட்டலைகுறைப்பது நன்று. விடைபெறுகிறேன்... மேலும் உங்களது ஆக்கத்தை தாருங்கள்.

பழைய கதைகள் படிக்க எனக்கு நல்ல விருப்பம். ஆனால் இங்கு அவற்றை படிக்க வாய்ப்புகள் குறைவு. அந்த நிலையில் கதையை தட்டச்சு செய்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

சலிக்காமல் கதையை தொடர்ந்து தாருங்கள். மீண்டும் நன்றி ரசிகை.

  • தொடங்கியவர்

பழைய கதைகள் படிக்க எனக்கு நல்ல விருப்பம். ஆனால் இங்கு அவற்றை படிக்க வாய்ப்புகள் குறைவு. அந்த நிலையில் கதையை தட்டச்சு செய்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

சலிக்காமல் கதையை தொடர்ந்து தாருங்கள். மீண்டும் நன்றி ரசிகை.

நல்லது மதன் மணிமேகலை கதை முடிந்துவிட்டது. நேரம் கிடைத்தால் வேறு கதை தருகிறேன்.

  • தொடங்கியவர்

எதை விட்டுவிட வேண்டுமோ, எதற்காக அவஸ்தைப் பட வேண்டுமோ, அதிலேயே மனத்தைச் செலுத்துகின்றவர் கரண சுகத்தைத் தேடுகின்றவர் ஆவர். தன் சொந்த நலனை விட்டுவிட்டு பிறர் நலனைக் கண்டு பொறாமை படுகின்றவர் ஆவர்.

பிரியமுள்ளவரிடம் நெருக்கம் கூடாது. அதே போன்று விருப்பமில்லாதவரிடமும் நெருக்கம் கூடாது. பிரியமுள்ளவரைக் காண்பதும், பிரியமில்லாதவரைக் காண்பதும் வேதனை தருவதாகும்.

ஆகவே எதன் மீதும் அன்பு செலுத்த வேண்டாம்; ஏனெனில் பிரியமுள்ளவர்களிடமிருந்து பிரிவது வேதனை தரும். பிரியமில்லாதவரிடம் அன்பில்லை, அதனால் வேதனைதான் மிஞ்சும்.

அளவிட முடியாத அன்பிலிருந்துதான் வேதனை பிறக்கிறது. அங்கிருந்துதான் பயமும் பிறக்கிறது. பந்தத்திலிருந்து விடுபட்டவனுக்கு வேதனை இல்லை. பயமும் இல்லை.

பிரியத்திலிருந்து பிறப்பதுதான் வேதனை; அன்பிலிருந்து பிறப்பதுதான் பயம்; இதிலிருந்து விடுபட்டவனுக்கு வேதனையும் பயமும் கிடையாது.

பந்தப் பிடிப்பிலிருந்து வேதனை பிறக்கிறது. அதிலிருந்து பயமும் பிறக்கிறது. பந்தப் பிடிப்பிலிருந்து விடுபட்டவனுக்கு வேதனையும் பயமும் இல்லை.

பேராசையிலிருந்து வேதனை பிறக்கிறது. பேராசையிலிருந்து பயம் பிறக்கிறது. பேராசையிலிருந்து முற்றிலும் விடுபட்டவனுக்கு வேதனை இல்லை, பயமும் இல்லை.

எதையும் துல்லியமாகப் பார்க்கவும், நற்குணங்களுடன் நல் வாழ்க்கையையும், சத்தியத்தையும் உணர்ந்தவர்தான், எதை நிறைவேற்ற வேண்டுமோ, அதை நிறைவேற்றும் ஆற்றல் மிக்கவர். அவரை மக்கள் அன்புடன் ஏற்றுக் கொள்வார்கள்.

சிற்றின்பத்தில் சிக்கிக் கொள்ளாதவரும் தியானத்தின் பலனை அறிந்து அதிலே நிலைத்திருப்பவரும், விவரிக்க முடியாத "நிர்வாணத்தை" சதா எண்ணிக் கொண்டிருப்பவரும் யாரோ, அவரே சன்யாசியின் மூன்றாவது கட்டத்தை அடைந்தவராவார்.

நல்ல காரியங்களைச் செய்து இப்பிறவியை விட்டு அடுத்த பிறவிக்குச் செல்பவரை, அவர் முற்பிறவியில் செய்த நல்ல காரியங்களே அவரது சுற்றத்தாரைப் போல் வரவேற்கும்.

  • தொடங்கியவர்

ஒருவர் கோபத்தை கைவிட வேண்டும். தற்பெருமையை விட்டு விடவேண்டும். தற்புகழ்ச்சியை விட்டு விடவேண்டும். அப்படிப்பட்ட ஆசையற்றவனின உடலையும் மனத்தையும் துன்பம் பீடிக்காது.

சாரதியானவன் தான் ஓட்டும் இரதத்தை எப்படிக் கடடுப்படுத்துகிறானோ அப்படித்தான் வெகுண்டெழும் கோபத்தை அடக்க வேண்டும். அப்படிப்பட்டவரே திறமையான சாரதி. மற்றவர் பெயரளவில்தான் சாரதி.

கோபத்தை அன்பினாலும், தீயதை நன்மையாலும் வெற்றி காணமுடியும்; அதேபோல் கருமியை ஈகையாலும், பொய்யரை மெய்யினாலும் வெற்றி கொள்ள முடியாது.

சத்தியத்தைப் பேசு; கோபத்திற்கு அடிமை ஆகாதே; கேட்டால் உன் பொருளில் சிறிது கூட கொடுக்கலாம்; இம்மூன்று தன்மையாலும் ஒருவர் தெய்வம் இருக்கும் இடத்தை அடைய முடியும்.

துறவிகள் மற்றவர்களுக்குத் தீமை செய்யார். பிற உடலைத் துன்புறுத்த மாட்டார். இறவாத நிலைக்குச் செல்வார். அவர் என்றும் வேதனை கொள்ள மாட்டார்.

இரவு பகலாக யாரொருவர் விழிப்புடன், ஒழுங்குடன் இருக்கிறாரோ, அவர் "நிர்வாணத்திற்கு" உரியவர். அவர்களிடமுள்ள அழுக்குகளும், குறைபாடுகளும் மறைந்து போய்விடும்.

இது நேற்று இன்று அல்ல, தொன்றுதொட்டே உள்ளது. சும்மா இருப்பவர்களை அவர்கள் குறை கூறுவார்கள். அதிகம் பேசுபவர்களை குறை கூறுவார்கள். மிதமாக பேசுபவர்களையும் குறை கூறுவார்கள். அவர்கள் குறை கூறாதவர்கள் யாருமில்லை.

முற்றிலுமாகப் போற்றப்படுபவரும், முற்றிலுமாகத் தூற்றப்படுபவர்களும், எப்போதும் இருந்ததுமில்லை இனி இருக்கப் போவதுமில்லை.

இரவு பகலாய் நெறி தவறாத அறிவாளிகள், அனைத்தையும் அறிந்த குணவானை, அறிஞர்கள் போற்றும்போது, யார்தான் அந்தப் புடம் போட்ட பொற்காசை குறை கூற முடியும்? ஆண்டவரே அவரைப் போற்றுவார். அவரைப் பிரம்மனும் போற்றுவாரே!

அருவருக்கத்தக்க வார்த்தைகளைச் சொல்லாது ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். தவறான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்துவதைக் களைய வேண்டும். அத்துடன் தூய்மை மிகுந்த வார்த்தைகளைப் பேசப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அறிஞர்கள் உடலைக் கட்டுப்படுத்துவர். வார்த்தைகளைக் கட்டுப்படுத்துவர். மனத்தைக் கட்டுப்படுத்துவர். அவர்கள் உண்மையாகவே கட்டுப்படுத்திக் கொண்டவர்கள் ஆவார்கள்.

புத்தர்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் சிங்களவர் கும்பிடுற புத்தரும் உந்த வசனங்களை சொன்ன புத்தரும் வேறைவேறை ஆக்கள் எண்டு பிள்ளை ரசிகா நீர் என்ன நினைக்கிறீர்

நான் நினைக்கிறன் சிங்களவர் கும்பிடுற புத்தரும் உந்த வசனங்களை சொன்ன புத்தரும் வேறைவேறை ஆக்கள் எண்டு பிள்ளை ரசிகா நீர் என்ன நினைக்கிறீர்

சாத்திரி !....

நான் நினைக்கிறன். (மகததில் இருந்து,) இப்ப ஒரிசா, அருணாசல் பிரதேசத்தில புத்தர் பாளி மொழீல சொன்னது உவைக்கு சிங்களத்தில விளங்கேல்லை... எதோ விளங்கின மட்டும் குப்பை கொட்டீனம்....

நன்றி ரசிகை. முன்பு படித்த ஞாபகம். ஆனால் ஒரே நேரத்தில் அலுப்புத் தட்டமால் வாசிக்க மிக மிக சுருக்கமாக தந்துள்ளீர்கள்.

  • தொடங்கியவர்

சாத்திரி !....

நான் நினைக்கிறன். (மகததில் இருந்து,) இப்ப ஒரிசா, அருணாசல் பிரதேசத்தில புத்தர் பாளி மொழீல சொன்னது உவைக்கு சிங்களத்தில விளங்கேல்லை... எதோ விளங்கின மட்டும் குப்பை கொட்டீனம்....

எனக்கும் அந்த சந்தேகம் தான் சாத்திரி!!!

சிலவேளைகளில் தல சொன்னமாரி பாளி மொழியில இருக்கிறதை சிங்கள மொழிக்கு மாத்தும் போது பிழையா விளங்கிட்டினமோ யாரு கண்டா? :? :P

  • தொடங்கியவர்
நன்றி ரசிகை. முன்பு படித்த ஞாபகம். ஆனால் ஒரே நேரத்தில் அலுப்புத் தட்டமால் வாசிக்க மிக மிக சுருக்கமாக தந்துள்ளீர்கள்.
:)

நன்றி, ரசிகை.

உங்கள் பணி தொடரட்டும்.

ம் புத்தரின் போதனைகள் நன்றாக இருக்கின்றதும், ஆனா அதை யாரும் கடைபிடிப்பது சாத்தியமா என்று தான் தெரியலை. அனைவரும் நிச்சயம் இதில் ஏதாவது ஒன்றையாவது கடைபிடிக்காமல் இருப்போம்,

தகவலுக்கு நன்றி ரசிகை,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.