Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைத்திய ஆலோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரதியக்கோய்,

உங்களுக்கு புரதச்செமிபாடு குறைவாய் இருக்கும் என நினைக்கிறேன்.

முன்பு இப்படி இல்லை, ஒரு 35 தாண்டிய பிந்தான் இப்படி ஆகிறதா?

இரவில் ரெட்மீட் சாப்பிட்ட பின்னும் இதே பிரச்சினை இருக்கிறதா?

பின்வரும் கைவைத்திய முறைகளை டிரை பண்ணவும்.

1) டீ கோப்பி பருகும் போது பாலை இங்லீஸ் ஸ்டைலில் அப்படியே கலப்பீர்களா? அல்லது கொதிக்க வைத்தா? ஒரு 4 கிழமைக்கு பச்சைப் பாலை தவிர்த்து, கொதிக்க வைத்துக் குடித்துப் பாருங்கள். பாலை அறவே ஒதுக்கினால் (4 கிழமைக்கு) நல்லம்.

2) இரவு உணவின் பின் கிறீன் டி ஒரு கப் பருகவும். உண்டு 1 மணிக்குள் படுக்கைக்கு போகவேண்டாம். முடிந்தால்  கொஞ்சம் நடைப்பயிற்சி.

ஜஸ்டீன் ஆவது வெட்னரி, நான் நாகநாதனின் சூலோஜியோட சரி. பார்த்து சூதானமாய் நடக்கவும்.

  • Replies 56
  • Views 26.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரதி said:

நன்றி ஜஸ்டின்...எனக்கு பருப்பு,பயறு,பயத்தங்காய்,கடலை,கச்சான் போன்ற சாப்பாடுகள் அலர்ஜி என்று நினைக்கிறேன்.அதை சாப்பிட்டதும் தான் இப்படி நடக்கின்றது.தவிர நெஞ்செரித்தலை கவனியாது விட்டால் அல்சர்,கான்சர் வரும் என சொல்கிறார்களே உண்மையா ஜஸ்டின்?

ரதி, வயிறு ஊதலைப் பற்றிக் கதைக்க்கிறீர்கள் எனில்: ஆம் பயத்தங்காய், பயறு என்பவை அதிக புரதம் கொண்ட காய்கறிகள். கச்சான், பருப்பு எனக்குத் தெரியவில்லை. எனவே, நீங்கள் இந்த உணவுகளை இரவில் தவிர்த்தல் உதவக் கூடும்.

அல்சர் என்கிற வயிற்றுப் புண் அதிக அமில சுரப்பால் வருவது. எனவே, நெஞ்செரிவு இருப்போருக்கு அல்சரும் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆனால், நெஞ்செரிவின் விளைவு அல்சர் அல்ல!

புற்று நோய்: அடிக்கடி அமிலம் உணவுக்குழாயினுள் (esophagus) லீக் ஆகித் தான் நெஞ்செரிவு வருகிறது. இதனால், உணவுகுழாயின் உள்படையில் உள்ள கலங்கள் புற்று நோய்க் கலங்களாக மாற வாய்ப்பு உண்டு என்று கண்டறியப் பட்டுள்ளது (esophageal adenocarcinoma). எனவே, நெஞ்செரிவுக்கான காரணத்தைக் கண்டு பிடித்து சிகிச்சை பெறுவது அவசியம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் டிரைய் பண்ணிறீங்கள் கோசான்;

எனக்கு இந்த நெஞ்செரிவு வருத்தம் கணகாலமாய் இருக்குது.
நான் பால் குடிப்பதில்லை. காலையில் மட்டும் மாவைப் போட்டு ஒரு கோப்பி
பிளேன்ரீயூம்,2,3 கீரீன் ரீ குடிப்பன்.
இரவு ரெட்மீட் ஒன்றும் சாப்பிடுவதில்லை

நன்றி ஜஸ்டின் நேரத்திற்கு[என்னைத் திட்டி,திட்டி கருத்து எழுதின மாதிரி இருக்குது.]...டொக்டரிடம் போய் செக் பண்ணத் தான் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் சாப்பிடுதல்

அவசரமாக சாப்பிடுதல்

சாப்பிட்டவுடன் நித்திரைக்குப்போதல்....

இவற்றையும் கவனியுங்கள் சகோதரி.

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்,அண்மையில் தான் ஓர்காணிக் வாழைப்பழம் வாங்கி சாப்பிட்டுப் பார்த்தேன்.இங்கே இருக்கும் மற்ற வாழைப்பழங்களை விட மிகுந்த சுவையாக இருந்தது.உண்மையிலேயே ஓர்காணிக் சாப்பாடுகள் உடம்புக்கு நல்லதா?/கெட்டதா?...அதே நேரத்தில் ஓர்காணிக் கோழி,முட்டை போன்ற சாதரண இங்கிருக்கும் கோழி,முட்டை என்பவற்றை விட கொழுப்புக் கூடியதா? ...யாராவது ஓர்காணிக் சாப்பாடு சாப்பிடுபவர்கள் இருந்தால் உங்கள் கருத்தை சொல்லுங்கள். இது பற்றி அறிவுடையவர்களது கருத்து வரவேற்கப்படுகிறது.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

egginfo.jpg

Pastured Eggs - கடும் நிற முட்டை. Conventional Eggs - வெளிர் நிற முட்டை. 

Pastured Eggs  - முட்டையில் கொலஸ்ரோல் மற்றும் நிரம்பிய கொழுப்புக் குறைவு என்கிறது இந்தத் தரவு. 

 

  • Conventional Eggs – These are your standard supermarket eggs. The chickens are usually raised in an overfilled hen house or a cage and never see the light of day.
     
    They are usually fed grain-based crap, supplemented with vitamins and minerals. May also be treated with antibiotics and hormones.
  • Organic Eggs – Were not treated with antibiotics or hormones and received organic feed. May have had limited access to the outdoors.
  • Pastured Eggs – Chickens are allowed to roam free, eating plants and insects (their natural food) along with some commercial feed.
  • Omega-3 Enriched Eggs – Basically, they’re like conventional chickens except that their feed is supplemented with an Omega-3 source like flax seeds. May have had some access to the outside.
  • https://authoritynutrition.com/pastured-vs-omega-3-vs-conventional-eggs/

FAO-Infographic-egg-facts-en.jpg

 

=========================================

இதன் பிரகாரம்.. கூடிய அளவு இயற்கை வளர்ப்புக் கோழி இடும் முட்டை நல்லது. ஓர்கானிக் கோழிகள் ஓரளவு இயற்கை வளர்ப்புக்கு உட்பட்டவை. ஆனால்... பாஸ்ரேட் வகை கூடிய இயற்கை வளர்ப்புக்கு உட்பட்டவை. இந்த முட்டைகள்.. சாதாரண பார்ம் முட்டைகளை விட நல்லம். tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்கள் எல்லோரும் இந்த திரியை பார்த்து விட்டு,பார்க்காமல் போகும் போது மினக்கெட்டு பதில் எழுதினதிற்கு நன்றி நெடுக்ஸ்...நான் இன்டைக்கு ஓர்காணிக் முட்டை வேண்டி சாப்பிட்டுப் பார்த்தேன்.கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.