Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மற்றவர்களை மகிழ்விப்பது சம்மந்தமான உங்கள் எண்ணங்கள், சிந்தனைகள்.

Featured Replies

வணக்கம்,

மற்றவர்களை மகிழ்விப்பது சம்மந்தமான உங்கள் எண்ணங்கள், சிந்தனைகளைக் கொஞ்சம் சொல்லுங்கோ.

பலருக்கு அல்லது சிலருக்கு மகிழ்ச்சி என்பது மற்றவர்களை மகிழ்விக்கும்போது அதிக அளவில் கிடைக்கலாம்.

மற்றவர்கள் சுயநலம் மிக்கவர்களாக இருந்தாலும்.. அது தெரிந்து இருந்தும் நீங்கள் மற்றவர்களை மகிழ்விப்பதில் உங்களை அறியாமல்கூட ஈடுபடலாம். ஏன் என்றால் உங்களுக்கு உங்களை அறியாமலே மற்றவர்களை மகிழ்விப்பதில் பிடிப்பு ஏற்பட்டு இருக்கலாம்.

வாழ்வில் சில எல்லைகளை தொட்டவர்களுக்கு.. அல்லது மரணத்தின் எல்லைவரை சென்று வந்தவர்களுக்கு ஏனையவர்களைவிட மற்றவர்களை மகிழ்விப்பதில் அதிக ஆர்வம் இருக்கலாம். அப்படியான அனுபவங்கள் இருந்தால் கொஞ்சம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நீங்கள் மற்றவர்களை மகிழ்விப்பதை சிலர் உங்கள் ஓர் பலவீனமாக எடுத்து அதன்மூலம் தங்கள் தேவைகளை நிறைவேற்ற உங்களை சாணக்கியமான முறையில் நன்கு பயனபடுத்தி உங்கள்மூலம் பயனும் பெற்று இருக்கலாம். பெற்றுக்கொண்டு இருக்கலாம். இது உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். தெரிந்துகொண்டே தொடர்ந்தும் அவர்களை மகிழ்விப்பதில் நீங்கள் ஈடுபடலாம்.

மற்றவர்களை மகிழ்விப்பதில் உங்களுக்கு ஆத்மதிருப்தி கிடைத்து இருக்கலாம். சிலவேளைகளில் அவர்களிடமிருந்து நீங்கள் எதையாவது எதிர்பார்த்து இருந்தால் உங்களுக்கு அது கிடைக்காதபோது ஏமாற்றம் கிடைத்து இருக்கலாம். இதன்பிறகு மற்றவர்களை மகிழ்விப்பதில் நீங்கள் ஆர்வம் காட்டுவதை குறைத்து இருக்கலாம்.

கடந்த சில காலமாக மற்றவர்களை மகிழ்விப்பது சம்மந்தமாக பல விடயங்களை சித்தித்து இருந்தேன். இது விடயமாக உங்கள் அனுபவங்களையும், எண்ணங்களையும் அறிந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை மகிழ்விப்பது சம்மந்தமான உங்கள் எண்ணங்கள், சிந்தனைகள்.

சான்ஸே இல்லை.

மற்றவர்கள் என்னை மகிழ்விக்க வேண்டும் அதையே விரும்புறேன்

  • தொடங்கியவர்

சும்மா பகிடிக்கு சொல்லுறீங்களோ இல்லாட்டிக்கு உண்மையாய் சொல்லுறீங்களோ கறுப்பி அக்கா? அப்படி நினைத்தாலும்.. உங்களை மகிழ்விக்க என்று நினைத்து நீங்கள் செய்கின்ற காரியங்கள் மற்றவர்களையும் மகிழ்விக்ககூடும். உங்களையும் மகிழ்விக்கும் அதே சமயம் மற்றவர்களையும் மகிழ்விக்கும் என்றால் அப்படியான காரியங்களை நீங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யலாம் தானே? அதற்கு சந்தர்ப்பம் இருக்கிறதுதானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரை மகிழ்விக்கவேண்டும் மாப்பு என்னமாதிரி அந்தமாதிரியோ இந்தமாதிரியோ நேக்கு மன்டையில ஏறுறது கொஞ்சம் மந்தம் மாப்பு

Edited by சேகுவாரா

  • தொடங்கியவர்

ஓ நீங்கள் மற்றைய மகிழ்விப்பு பற்றி நினைச்சு மண்டையை குடையுறீங்களோ? :( ஐயோ அதை சொல்ல இல்லையுங்கோ.

மற்றவர்களை மகிழ்விப்பதற்கு ஒரு ஐடியாதான் என்வசமுள்ளது. மற்றவர்களை விட நாம் பரதேசி போலவும் ஒன்றும் தெரியாத முட்டாள் போலவும் இருந்தாலே போதும்.

  • தொடங்கியவர்

மற்றவர்களை மகிழ்விப்பது எண்டு சொன்ன உடன எல்லாருக்கும் பகிடியாய் இருக்கிது போல. என்னவோ..

stipi.. நீங்கள் பகிடிக்கு அப்படி எழுதி இருக்கிறீங்களோ தெரியாது. ஆனால்.. அது அர்த்தம் பொதிந்த ஏன் யதார்த்தமான என்றுகூட சொல்லலாம் ஓர் வரி..

மற்றவர்களை மகிழ்விப்பதற்கு ஒரு ஐடியாதான் என்வசமுள்ளது. மற்றவர்களை விட நாம் பரதேசி போலவும் ஒன்றும் தெரியாத முட்டாள் போலவும் இருந்தாலே போதும்.

இது கொஞ்சம் சிந்திக்கவேண்டிய கருத்துத்தான்.

<<<<<<<<<<<<<வாழ்வில் சில எல்லைகளை தொட்டவர்களுக்கு.. அல்லது மரணத்தின் எல்லைவரை சென்று வந்தவர்களுக்கு ஏனையவர்களைவிட மற்றவர்களை மகிழ்விப்பதில் அதிக ஆர்வம் இருக்கலாம். அப்படியான அனுபவங்கள் இருந்தால் கொஞ்சம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நீங்கள் மற்றவர்களை மகிழ்விப்பதை சிலர் உங்கள் ஓர் பலவீனமாக எடுத்து அதன்மூலம் தங்கள் தேவைகளை நிறைவேற்ற உங்களை சாணக்கியமான முறையில் நன்கு பயனபடுத்தி உங்கள்மூலம் பயனும் பெற்று இருக்கலாம். பெற்றுக்கொண்டு இருக்கலாம். இது உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். தெரிந்துகொண்டே தொடர்ந்தும் அவர்களை மகிழ்விப்பதில் நீங்கள் ஈடுபடலாம்.

மற்றவர்களை மகிழ்விப்பதில் உங்களுக்கு ஆத்மதிருப்தி கிடைத்து இருக்கலாம். சிலவேளைகளில் அவர்களிடமிருந்து நீங்கள் எதையாவது எதிர்பார்த்து இருந்தால் உங்களுக்கு அது கிடைக்காதபோது ஏமாற்றம் கிடைத்து இருக்கலாம். இதன்பிறகு மற்றவர்களை மகிழ்விப்பதில் நீங்கள் ஆர்வம் காட்டுவதை குறைத்து இருக்கலாம்.>>>>>>>>>>>>>>

================================================================================

===================================

மிகவும் அர்த்தமுள்ளதும் என்னையும் சிந்திக்க வைக்கும் விடயம்.. பல உதராணங்களை சொல்லாலம்.

1) முக்கியமாக எனது ஒன்றுவிட்ட தங்கைகள் தம்பிகளுக்கு மாச்சான்மார்கள் மாச்சாள்மார்கள் (அவர்கள் இலங்கையில் இருக்கும்போது) நான் எவற்றை எல்லாம் அனுபவிக்கமால் ஒரு காலத்தில் ஏங்கிக் கொண்டிருந்தேனோ அவற்றையெல்லாம் அவர்களுக்கு கிடைக்கும்படி செய்திருக்கேன். அப்போது நான் அவற்றை அனுபவிக்கும் திருப்தி எனக்கு கிடைக்கும்.. அதனால் நிறைய பணக்கஸ்டங்களை சந்தித்து இருக்கேன். கிராடிட் கார்ட் கூட பயன்படுத்தி பல தடவை அவர்களின் பிறந்த நாளுக்கு அல்லது விரும்பிய உடைகள் வேண்ட பணம் அனுப்பி இருக்கேன்... இப்போ அவர்களும் வெளிநாடு வந்துவிட்டார்கள். ஆனால் இப்போது எனக்கு ஒரு கஸ்டம் என்றால் அவர்களிடம் இருந்து எனக்கு உதவி கிடைக்கும் என்பது கேள்விக்குறியே!

இன்னும் இருக்கு மற்றவர்கள் எழுதியவுடன் தொடர்ந்து எழுதுகின்றேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.......மரணத்தின் எல்லைவரை சென்று வந்தவர்களுக்கு ஏனையவர்களைவிட மற்றவர்களை மகிழ்விப்பதில் அதிக ஆர்வம் இருக்கலாம். ......

.......கடந்த சில காலமாக மற்றவர்களை மகிழ்விப்பது சம்மந்தமாக பல விடயங்களை சித்தித்து இருந்தேன்.

:lol:

செத்து பிழைச்சா வந்து இருக்கிறீர்? :lol:

சாதரணமாய் மனிதன் நல்ல மனதோடேயே படைக்க படுகிறான்.... பெரும்பாலும் பெற்றோர் அவனை வளர்ப்பதும் நல்லவனாகவே... நல்ல மனிதன் தனக்கு முன்பாக மற்றவரின் சந்தோசத்தை தான் முன்வைப்பான் - எப்போது வரை?

- அவ்வாறு செய்வதால் தன் கையை தானே சுடும்வரை!

- தனது வாழ்கையில் திருப்புமுனைகள் வரும் போது தான் தனித்து விட படுவதாக உணரும் வரை!

- மரணத்தை ஒற்ற பாரிய நிகழ்வுகளின் போது நல்லவனாய் இருந்தவன் ஜோசிக்க கூடியது - இவ்வளவு காலம் மற்றவர்களின் சந்தோசதிட்காக எமது சந்தோசத்தை இரண்டாம் இடத்தில் வைத்தோம்... இப்படியே இருந்து செத்து விட கூடாது, நாமும் நம்மை, நமது சந்தோசத்தை முதலில் வைத்து வாழ வேண்டும் கொஞ்ச நாள் என்றாலும் என்று.

அதை மதித்து நல்லவனாய் இருந்தவனை மற்றவர்கள் சந்தோஷ படுத்த வேண்டும்.

எனெவே கடைசியில்... கறுப்பியின் கருத்து தான் மிகச்சரி!!!! :lol::lol:

சான்ஸே இல்லை.

மற்றவர்கள் என்னை மகிழ்விக்க வேண்டும் அதையே விரும்புறேன்

:(:lol: தீர்க்கதரிசனம் கறுப்ஸ்!!!

  • தொடங்கியவர்

ரமா, உங்களுக்கு வந்ததுபோன்ற அனுபவம் எனக்கும் கிடைத்து இருக்கின்றது. சிலவேளைகளில் நான் யோசிப்பது உண்டு.. ஏன் இவர்களில் சிலர் என்பற்றி ஓர் அக்கறைகூட காட்டுகின்றார்கள் இல்லையே என்று.. எனினும்.. அவர்கள் சூழ்நிலைகளில் என்னை வைத்துப்பார்க்கும்போது அவர்களை அதற்குப்பிறகு கோபிக்கமுடியாது போய்விடும்.

மற்றவர்களை மகிழ்விக்கும்போது எங்களுக்கு ஏதாவது பிரதிபலன் கிடைக்கின்றதோ இல்லையோ.... அவர்கள் மகிழும்போது எங்களுக்குள் வரக்கூடிய சந்தோசம் தனித்துவமானது. ஆத்ம திருப்தியைக் கொடுக்கக்கூடியது.

எனது அக்கா எனக்கு அடிக்கடி சொல்லுவா... தெருவில் போகும்போது அங்கு தெரிகின்ற வாடிப்போன முகங்களை ஒருக்கால் நிமிர்ந்துபார். எத்தனை ஜீவன்கள் ஓர் புன்னகைக்காக.. ஓர் அன்புக்காக ஏங்கிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று. வாடிய முகங்களுடன் அக்கறையாக சிரித்துக்கதைக்கும்போது அவர்களிற்கு கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி... தங்கள் பிரச்சனைகளை யாராவது கேட்கமாட்டார்களா தங்கள்பற்றி யாராவது அக்கறையுடன் விசாரிக்கமாட்டார்களா என்று நினைத்து ஏக்கத்துடன் இருந்தவர்கள் நாம் அவர்களுடன் பரிவுடன் கதைக்கும்போது அவர்களிற்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சி.. இது ஆத்மதிருப்தியை தரக்கூடியது இப்படி அக்கா சொல்லுவா.

மேலும், எங்கள் அம்மா, அப்பாவைக்கூட எடுத்துக்கொண்டால்... எங்களுக்காக அவர்கள் சுழன்று அடித்து உழைத்து இருக்கின்றார்கள். எங்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக எத்தனையோ தியாகங்களை அவர்கள் செய்து இருக்கின்றார்கள், செய்துகொண்டு இருக்கின்றார்கள். ஆனால்.. பெரும்பாலும் நாங்கள் அவற்றின் பெறுமதியை அறிந்து இருப்பது இல்லை. ஏதோ அவர்கள் எங்களைப் பெற்றுப்போட்டார்கள். அவர்கள் எங்கள் பெற்றோர். எனவே எங்களை மகிழ்விப்பது அவர்கள் கடமை என்றுகூட நாங்கள் நினைக்கலாம்.

பெற்றோர் - பிள்ளை என்று பார்க்கும்போது உறவுநிலைகளைப் பொறுத்து இந்த மகிழ்ச்சிப்படுத்தல் வேறுபாடுகளை கொண்டு இருக்கலாம்.

இளையபிள்ளை நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதாய் இல்லை. மற்றவர்களுக்கு என்னமாதிரியோ தெரியாது. ஆனால் எனக்கு அது பொருந்தாது. நான் தனிய மற்றவர்களை கழற்றிவிட்டு சந்தோசமாக இருக்க வாய்ப்புக்கள் கிடைத்தாலும்... மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்காதவரை நான் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது என்று நினைக்கும்வரை எனது சந்தோசத்தை மட்டும் நான் பார்க்கமுடியாது. ஆகக்குறைந்தது நான் மகிழ்ச்சியாக இருப்பதற்காவது மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்தவேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது.

Edited by மாப்பிள்ளை

நீங்கள் குறிப்பிடுவது/சிந்திப்பது ஒரு வட்டத்தின் சிறு வளைவை..நான் பார்ப்பது முழு வட்டத்தை... நீங்கள் சிந்திப்பது மனிதநேயம் என்னும் ஒரு கருத்தை..நான் பார்ப்பது யதார்த்தத்தை... யதார்த்தத்தில் கொஞ்சம் மனிதநேயம் இருக்கு.... வெறும் மனிதநேயமே யதார்த்தம் ஆகாது!

தான் மற்றவரை மகிழ்விப்பதை - அவர்களின் சந்தோசதிட்காக செய்வது தான் பிறநலம்... நான் குறிபிட்ட "நல்ல மனிதன்" வாழ்கையின் பாடங்களை புரியும் வரை இதை தான் செய்து கொண்டு இருக்கிறான்.. அது பாராட்டப்பட வேண்டியதே... ஆனால் உலகம் நல்லவனை நல்லவனாக எபொழுதும் இருக்க விடுவது இல்லை.

பட்டும் பட்டும் தெளியாதவன் - முட்டாளாக இருக்க கூடும் இல்லையேல் பிற நலத்தை சுயநலமாய் கொண்டவனாய் இருக்க வேணும்.... அதுவும் ஒரு வகை சுயநலம் தான்! :(

நீங்களே கடைசியில் குறிப்பிட்டு இருகிறீர்கள் - பிறரை மகிழ்ச்சி படுத்துவதும் உங்கள் சந்தோசதிட்காக என்று - அந்த செயற்பாடு நல்லதாய் இருந்தாலும் - கருத்து சுயநலம் ஆனதாய் தான் இருக்கிறது. மற்றவர் சந்தோசத்தில் தான் சந்தோசப்படுவது நல்ல விடயம் தான், தவறு என்று சொல்லவில்லை. ஆனால் உங்கள் கருத்தின் அடிப்படை குறிக்கோள் என்று எனக்கு புலப்படுவது என்னவெனில்:

"நான் சந்தோசமாய் இருக்கவேணும்......" என்பது தான்!

எனெவே திரும்பவும் சொல்கிறேன் - கறுப்பி சொன்னது தீர்கதரிசனம்!!!! :lol::lol:

மற்றவர்களை மகிழ்விப்பது எண்டு சொன்ன உடன எல்லாருக்கும் பகிடியாய் இருக்கிது போல. என்னவோ..

stipi.. நீங்கள் பகிடிக்கு அப்படி எழுதி இருக்கிறீங்களோ தெரியாது. ஆனால்.. அது அர்த்தம் பொதிந்த ஏன் யதார்த்தமான என்றுகூட சொல்லலாம் ஓர் வரி..

இது கொஞ்சம் சிந்திக்கவேண்டிய கருத்துத்தான்.

இது பகிடியல்ல வாழ்க்கை கற்பித்து தந்த பாடம் .அல்லது அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா அருமையான தலைப்பு.இந்த விசயத்தில எனக்கு குறிப்பிடத்தக்களவு அனுபவம் இருக்குது என்று நினைக்கிறேன்.எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் நான் கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் பேசும் பழக்கம் உள்ளவன்.இது சொற்ப நேரமாவது என்னுடன் இருப்பவர்களை மகிழ்விக்கலாம்.இதுக்கு அநேகமாக மறுபக்கம் என்று ஒன்று இருக்காது என்று நினைக்கிறேன். மற்றும் எனக்கு தெரிந்த என்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்வேன்.ஆனல் இது அப்படி இல்லை என்று நினைக்கிறேன்.காரணம்,என்னதான் வெளிப்டையாக பெயர்,புகழ்,பணம் இவற்றுக்காக இப்படி உதவி செய்வதில்லை என்று சொன்னாலும் இவைகளுக்கு அப்பால் ஏதோ ஒரு இனம்புரியாத எதிர் பார்ப்பு இருக்கதான் செய்கிறது.அதாவது சுயநலம்.அந்தஎதிர்பார்ப்பு உண்மையில் நிறைவேறும் போது இரு தரப்பும் மகிழ்வடைகிறோம்.அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது போல் நடித்து தங்கள் காரியங்களை சாதிக்கும் போதும் இருதரப்பும் மகிழ்வடைகின்றனர்.ஆனால் இங்கு உதவி செய்பவர் கேணையன் ஆக்கப்படுகிறார்.என்னைப்பொற

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம சிறிது பணம் இருந்தால் ஒரு கைவிடபட்டோர் நலம் காக்கும் இலலம் (அனாதை இல்லம்) சென்று அவர்களுக்கு தேவையான சிறு பொருட்களை கொடுத்து ....அவர்களுடன் ஒரு நேரம் செலவிட்டு பாருங்கள் . ஒரு பேரானந்தம் மனதில் இருக்கும். ஒரு சிறு கதை .

ஒரு வயதானவர் . பிள்ளைகள் இல்லய் கணவனும் இறந்துவிடார்.ஓய்வூதியத்தில் வாழ்பவர். யாழ் குடாநாடில் உள்ள ஒரு ...அருள் அகம்....எனும் நிலையத்தில் ஒரு விடுமுறை மதியம் வருவார் அங்கு நிர்வாகிகள் உணவு சமைத்து பரிமாறுவார்கள். குழந்தைகள் பாட்டு நடனம் ..நாடகம் என்று சில விளையாடுகளை செய்து காடுவார்கள். அதற்கான செலவை ..விடசற்று அதிகமாக கொடுப்பார். வாழ்வின் மிகவும் மகிழ்வான நாள் அன்று தான் என்று வாழ்த்தி விட்டு செல்வார். இது உண்மையாக நடந்த சம்பவம் நான் தாயகத்தில் இருந்த போது ...இப்படியும் ஒரு சிலர் இருக்கிறார்கள். பிறரை மகிழ்விப்பதே பேரின்பம்.

  • தொடங்கியவர்

இளையபிள்ளை... நீங்கள் சொன்னபடி மனிதநேயத்துக்காக மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துபவர்கள் இருக்கின்றார்கள். தமது ஆத்மதிருப்திக்காக மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துபவர்கள் இருக்கின்றார்கள். ஆத்மதிருப்தியை சுயநலம் என்று சொல்லலாமோ? மேலும்... சுயநலம் என்பது கூடாத ஓர் விசயம் என்று இல்லைத்தானே? சுயநலத்துடன் மட்டும் இருப்பது கூடாது என்று சொல்லலாம். ஆனால்.. தனது சுயநலத்தில் மற்றவர்களின் நலன்களும் அடங்கி இருந்தால் அதை அப்படி குறுகிய வட்டத்தினுள் போட்டு பார்க்கமுடியுமா?

"நான் சந்தோசமாக" இருப்பதிலும்.. "நான் மட்டும்" சந்தோசமாக இருப்பதிலும்.. இந்த இரண்டு பிரிவுகளிலும் வித்தியாசம் இருக்கிறதுதானே?

நான் இப்படி கேட்டபோது...

"மற்றவர்களை மகிழ்விப்பது சம்மந்தமான உங்கள் எண்ணங்கள், சிந்தனைகள்."

கறுப்பி அக்கா இப்படி சொல்லி இருக்கிறா:

"சான்ஸே இல்லை. மற்றவர்கள் என்னை மகிழ்விக்க வேண்டும் அதையே விரும்புறேன்"

மேலே கறுப்பி அக்கா சொன்னது யதார்த்தமாக இருக்கலாம். ஆனால்.. இதுமட்டுமே யதார்த்தம் என்று நீங்கள் கூறுவது எனக்கு விளங்கவில்லை.

சஜீவன் நீங்கள் சொன்ன மகிழ்ச்சிக்கான காரணிகளும் முக்கியமானது. சில சமயங்களில் நாங்கள் மற்றவர்களை மகிழ்விப்பதாக நினைத்து செய்யும் காரியங்கள் மற்றவர்களை மகிழ்விக்காமல்கூட இருக்கலாம். ஆனாலும்... நாங்கள் அந்த காரியத்தை செய்யும்போது எங்களுக்கு ஓர் ஆத்மதிருப்தி வரக்கூடும்தானே? இது தவறானதா?

உதாரணமாக, நாங்கள் ஒருவரது பிறந்தநாளுக்கு அவரை மகிழ்விக்க ஓர் பரிசுப்பொருளை காசு செலவளித்து, நேரம் செலவளித்து வாங்கிக்கொண்டுபோய் கொடுக்கும்போது அந்தப்பரிசுப்பொருள் அவருக்கு பிடிக்காமல் போகலாம். சிலவேளைகளில் ஏன் இவன் இதை வாங்கினான் என்று எங்களில் கோபம்கூட வரலாம். இது கொஞ்சம் சிக்கலான நிலைமைதான்.

மகிழ்ச்சிப்படுத்துவதை கொள்கையாக எடுத்து வாழமுடியாதுதான். அது சாத்தியமும் இல்லை. நேரம், காலம், சூழ்நிலைகள், காரணிகள் இதை நிச்சயம் பாதிக்கும். ஆனால்.. அடிப்படையில் கொள்கையளவில் அப்படி இருப்பது தவறு இல்லைத்தானே?

Edited by மாப்பிள்ளை

வணக்கம்,

மற்றவர்களை மகிழ்விப்பது சம்மந்தமான உங்கள் எண்ணங்கள், சிந்தனைகளைக் கொஞ்சம் சொல்லுங்கோ...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

தாம் சந்தோஷமாக இருப்பதற்கு மற்றவர்களைப் பாவித்து சந்தோஷப் படுகிறவர்கள் ஒரு பகுதியினர்... (மிருக இயல்பு)

தங்களோடு சந்தோஷமாக இருப்பவர்களை தாமும் சந்தோஷப் படுத்துவது இன்னொரு பகுதியினர்... (மனுஷ இயல்பு) நானும் ஒரு மனுஷ பிறவிதானே...

தமக்கு எவ்வளவு கவலைகள் இருந்தாலும், அவகளை மறைத்து ஒரு பக்கம் வைத்துவிட்டு, தன்னோடு சுற்றி இருப்பவர்களை பகிடியாகக் கதைப்பதிலும், சந்தோஷப் படுத்துவதில் அவர்களுக்கு நிகர் அவர்களாகவே இருப்பவர்கள் சிலரே... இவர்கள் மனுஷ இயல்புகளையும் தாண்டி ஒருபடி மேலே நிற்கிறார்கள் என்பது அவர்களுக்கே புரிவதில்லை... இப்படியான குணம் உள்ளவர்கள் உங்கள் குடும்பத்தில் அல்லது சமூகத்தில் இருப்பார்களானால் அது ஒரு வரப்பிரசாதம்! இது எனது தந்தையின் வாழ்கை நடைமுறையால் நான் அறிந்தது கொண்டது...

இந்த மூன்றில் நீங்கள் எதில் அடங்குகிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை... நீங்கள் சொன்னபடி மனிதநேயத்துக்காக மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துபவர்கள் இருக்கின்றார்கள். தமது ஆத்மதிருப்திக்காக மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துபவர்கள் இருக்கின்றார்கள். ஆத்மதிருப்தியை சுயநலம் என்று சொல்லலாமோ?

-ஓம். தனது ஆத்மதிருப்ப்திகாக என்றால் சுயநலம் என்று சொல்லலாம்.

மேலும்... சுயநலம் என்பது கூடாத ஓர் விசயம் என்று இல்லைத்தானே?

-அதால் அடுத்தவன் பாதிக்கப்பட்டு இருந்தால், அது தான் பிழை.

ஒருவனின் சுயநலத்தால் இன்னொருவன் சந்தோசபட்டால் அது பிழையானது இல்லை.

சுயநலத்துடன் மட்டும் இருப்பது கூடாது என்று சொல்லலாம். ஆனால்.. தனது சுயநலத்தில் மற்றவர்களின் நலன்களும் அடங்கி இருந்தால் அதை அப்படி குறுகிய வட்டத்தினுள் போட்டு பார்க்கமுடியுமா?

- சுயநலம் கூடாது என்று நான் சொல்லவே இல்லையே....தன்னை திருப்தி படுத்தி கொள்ள அடுத்தவனின் சந்தோசம் பிரயோசனப்பட்டால் அதுவும் சுய நலம் என்பதை தான் சுட்டி காட்டினேன். பிற நலம் நல்லது என்று சொல்லியுள்ளேன். அது என்றும் நிலைத்து நிக்கவிடாது இருப்பது உலக யதார்த்தம் என்றும் சொல்லியுள்ளேன்.

"நான் சந்தோசமாக" இருப்பதிலும்.. "நான் மட்டும்" சந்தோசமாக இருப்பதிலும்.. இந்த இரண்டு பிரிவுகளிலும் வித்தியாசம் இருக்கிறதுதானே?

- மற்றவர்கள் கஷ்டபட்டாலும் நான் சந்தோசமாய் இருக்கிறேன் என்பதும் - மற்றவர்கள் சந்தோசபட்டதால் நான் சந்தோசமாய் இருக்கிறேன் என்பதிலும் "தனது சந்தோசம்" என்பது தான் தலை தூக்கி நிக்கிறது. இரண்டாவது கூற்று பலருக்கு பிரயோசனமாய் இருப்பதால் - அதை மனிதம், சமூகம் வரவேற்றுகொள்ளும். நான் இப்படி கேட்டபோது...

"மற்றவர்களை மகிழ்விப்பது சம்மந்தமான உங்கள் எண்ணங்கள், சிந்தனைகள்."

கறுப்பி அக்கா இப்படி சொல்லி இருக்கிறா:

"சான்ஸே இல்லை. மற்றவர்கள் என்னை மகிழ்விக்க வேண்டும் அதையே விரும்புறேன்"

மேலே கறுப்பி அக்கா சொன்னது யதார்த்தமாக இருக்கலாம். ஆனால்.. இதுமட்டுமே யதார்த்தம் என்று நீங்கள் கூறுவது எனக்கு விளங்கவில்லை.

-கறுப்பி சொன்னது நக்கலாக தான் இருக்கும் என்பது எனது விளக்கம். இருபினும் அதில் உள்ள உண்மை தான் மனிதனை சூழ்ந்து உள்ளது. அதை தான் யதார்த்தம் என்றேன்.

நூற்றுக்கு ஒருவன் தனது விருப்பு வெறுப்பை துறந்து மற்றவருக்கு சந்தோசமாய் இருப்பதை கருத்திற் கொண்டு உள்ளானா? இல்லை அதை விட குறைவு. என்னை பொறுத்த வரை 1% இற்கு கூட அப்படியான மன நிலை மனிதனில் இல்லையெனில் மிகுதியாக உள்ள சுய நலம் தான் யதார்த்தம் என்பேன் - அந்த சுயநலத்தில் பிறரை சந்தோஷ படுத்துவதும் முன்கூறியது போல அடங்கலாம், அடங்காமற் போகலாம்.

.......................

மகிழ்ச்சிப்படுத்துவதை கொள்கையாக எடுத்து வாழமு

மகிழ்ச்சிப்படுத்துவதை கொள்கையாக எடுத்து வாழமுடியாதுதான்.

- இதற்காக தான் கறுப்பியின் கூற்றை நானும் பாதி நக்கலாக மீதி உண்மையாக பாராட்டினேன்! மனோதத்துவ ரீதியான அலட்டலில் சரி பிழை என்று தீர்மானிக்க முடியாது.... தீர்மானித்தால் அது விஞ்ஜானம் ஆகி விடும்!! அல்லாவிற்கு பகிடியும் விளங்காது, வெற்றியும் விளங்காது..!!! :huh:

அது சாத்தியமும் இல்லை. நேரம், காலம், சூழ்நிலைகள், காரணிகள் இதை நிச்சயம் பாதிக்கும். ஆனால்.. அடிப்படையில் கொள்கையளவில் அப்படி இருப்பது தவறு இல்லைத்தானே?

-தவறே இல்லை மாப்ஸ், உங்கள் சேவைகளை தொடருங்கள்.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தங்களோடு சந்தோஷமாக இருப்பவர்களை தாமும் சந்தோஷப் படுத்துவது இன்னொரு பகுதியினர்... (மனுஷ இயல்பு) நானும் ஒரு மனுஷ பிறவிதானே...

தமக்கு எவ்வளவு கவலைகள் இருந்தாலும், அவகளை மறைத்து ஒரு பக்கம் வைத்துவிட்டு, தன்னோடு சுற்றி இருப்பவர்களை பகிடியாகக் கதைப்பதிலும், சந்தோஷப் படுத்துவதில் அவர்களுக்கு நிகர் அவர்களாகவே இருப்பவர்கள் சிலரே... இவர்கள் மனுஷ இயல்புகளையும் தாண்டி ஒருபடி மேலே நிற்கிறார்கள் என்பது அவர்களுக்கே புரிவதில்லை... இப்படியான குணம் உள்ளவர்கள் உங்கள் குடும்பத்தில் அல்லது சமூகத்தில் இருப்பார்களானால் அது ஒரு வரப்பிரசாதம்! இது எனது தந்தையின் வாழ்கை நடைமுறையால் நான் அறிந்தது கொண்டது...

இந்த மூன்றில் நீங்கள் எதில் அடங்குகிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது சமுகத்தில் எது குறைகின்றதோ அதனைப்பற்றி எழுதியுள்ளீர்கள்.

மனதிற்கு அமைதியை ஏற்படுத்தமுயற்சி செய்யுங்கள்.

நிரந்தர சந்தோசத்திற்கு பிறப்பின் உண்மையை அறிதல் -எது நிலையானது எது நிலையற்றது.

முதலில் தான் தான் மனிதப் பண்புடன் வாழ்ந்தாலே அதனை பார்த்து மற்றவனும் வாழ முயற்சிக்கலாம்.

இதனால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை மகிழ்விப்பது சம்மந்தமான உங்கள் எண்ணங்கள், சிந்தனைகள்.

இதுபற்றி நெடுக்கு என்ன சொல்வார் என்ற ஆவல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது சமுகத்தில் எது குறைகின்றதோ அதனைப்பற்றி எழுதியுள்ளீர்கள்.

மனதிற்கு அமைதியை ஏற்படுத்தமுயற்சி செய்யுங்கள்.

நிரந்தர சந்தோசத்திற்கு பிறப்பின் உண்மையை அறிதல் -எது நிலையானது எது நிலையற்றது.

முதலில் தான் தான் மனிதப் பண்புடன் வாழ்ந்தாலே அதனை பார்த்து மற்றவனும் வாழ முயற்சிக்கலாம்.

இதனால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

சரி, நீங்களே சொல்லுங்கள் - எதை நிலையானது / எதை நிலையற்றது என்று குறிபிடுகிறீர்கள் என்று?? :huh:

என்னை பொறுத்த வரை எதுவுமே "நிலையானது" இல்லை! சிலது கொஞ்ச காலத்திற்கு நிலைக்கும் - சிலது அதை விட இன்னும் குறைவான காலத்திற்கு நிலைக்கும்.....!

  • கருத்துக்கள உறவுகள்

சான்ஸே இல்லை.

மற்றவர்கள் என்னை மகிழ்விக்க வேண்டும் அதையே விரும்புறேன்

தலைப்பை பார்த்தவுடன் மனதில் பட்டது. அவ்வளவேதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுபற்றி நெடுக்கு என்ன சொல்வார் என்ற ஆவல்

நீர் அதில் ஆர்வமாய் இரும்....நீர் நித்திரை தூக்கத்தில ஒரு வசனம் சொல்லிட்டு போக - அதை விக்க நான் படுற பாடு!!! :huh:

பரவாயில்லை - வாசிபவர்களில் உள்ள சுயநலவாதிகளை மகிழ்ச்சி படுத்வதற்காக என்று எண்ணி செய்கிறேன்!! :lol::lol:

தலைப்பை பார்த்தவுடன் மனதில் பட்டது. அவ்வளவேதான்.

அப்படி தான் நானும் நினைத்தேன்....

இருந்தாலும் அராத்துவதற்கு நேரம் இருப்பின், காரணம் தேவை இல்லை!!!

:icon_idea:

நாங்கள் முதலில் மனித பண்புடன் மற்ரவர்களை நேசித்து வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.

எனக்கு ஆயிரம் துன்பம் இருந்தாலும் மற்ரவாகளிடம் அதை காண்பிக்கர்து அவர்களின்

துன்பத்தில் பங்கு கொண்டு அவர்களை மனம் மகிழ வைக்க வேணும்........

நாங்கள் நல்லவற்ரையே எப்போதும் நினைக்க வேணும் செய்ய வேணும்.............

எனக்கு ஒருவர் துன்பம் செய்யும் போது என் மனம் படும் துன்பம் போல் தான் நான்

மற்ரவருக்கு துன்பம் செய்யும் போது அவர்கள் மனமும் துன்பப்படும் என்தை மனதில்

கொண்டு வாழ வேண்டும்............

மற்ரவரை மகிழ்விப்பது என்பது விலை உயர்ந்த பொருள்கள் வாங்கி கொடுப்பதோ

அல்லது கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பதோ பணத்தை அள்ளி கொடுப்பதோ

இல்லை.............அவர்களுடன் அன்பாக உரையாடி அவர்களுக்கு தெரியாததை

சொல்லிக் கொடுத்து வாழ்க்கையில் நல்ல முறையில் முன்னேறி இறுதிக் காலம் வரை

அவர்கள் சந்தோசமாக வாழ பாதை அமைத்துக் கொடுப்பதே நன்று.....

இதனால் அவர்களும் சந்தோசமடைகிறார்கள் நாங்களும் சந்தோசம் அடைகிறோம்

மற்ரவர்களை சந்தோசப் படுத்தும் போதோ அல்லது உதவி செய்யும் போதோ

எதையும் எதிர் பார்க்காமல் செய்ய வேண்டும்.....................

சில பெற்றோர்களை எடுத்துக் கொண்டால் விலையே இல்லாத சிறு முத்தம் ஒன்றை

தன் முழந்தைக்கு கொடுக்க மாட்டார்கள் அவர்களோடு மனம் விட்டு கதைக்க மாட்டார்கள்

அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டார்கள்.............ஆனால் விலை உயர்ந்த எல்லாம்

வாங்கி கொடுப்பார்கள்..............

பின் அவர்கள் வளரும் போது கருத்து வேறுபாடுகள் வரும்; போது உனக்கு அது வாங்கி தந்தோம்

இது வாங்கி தந்தோம் எண்டு பட்டியல் எடுத்து விடுவார்கள்..............

அப்போது பிள்ளைகள் சொல்லுவார்கள் நாங்கள் ஏங்கி தவித்த அன்பை தர முடியவில்லை

உங்களிட்ட அது இது கேட்டனாங்களோ நீங்கள் தான் வாங்கி தந்து எங்கட வாழ்க்கையையும்

பாழாக்கி வைச்சிருக்கிறியள் என்பார்கள்...............எனவே மற்ரவனை சந்தோசப் படுத்தல் என்பதில் நிறைய இருக்கு

அதனால் சரியான வழியில் சந்தோசப்படுத்தல் வேண்டும் அதே வேளை தகுந்த விளக்கங்களையும் கொடுக்க வேணும்........

அப்பா ஒருவர் தன் பிள்ளை சந்தோசப் பட வேணும் எண்டு ஒவ்வொரு நாளும் வேலையால வரேக்கை

நிறைய சொக்லேட் வாங்கி வந்து கொடுத்து அதை சாப்பிட விட்டு ரசிப்பாராம்.......

இப்ப பிள்ளைக்கு பல்லும் போய் சக்கரை வியாதியும் வந்து விட்டதாம்............

அதனால் முடிவாக சொல்லுகிறேன்................

எற்ரவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தினம் தினம் அவர்களை நாங்கள் மகிழ்விப்பதில்

கவனம் செலுத்த வேணும் மற்ரயது பிரதி பலனை எதிர் பார்க்க கூடாது...............

மகிழ்ச்சியுடன்

மாறன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.