Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய சதியில் கொல்லப்பட்ட அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் அவர்களின் 20 ம் ஆண்டு நினைவு.

Featured Replies

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அமர்தலிங்கத்தின் 20ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிப்பு:

1989 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அப்பாப்பிள்ளை அமர்தலிங்கத்தின் 20ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று எளிமையான முறையில் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. நூற்றுக்கும் குறைவான அவரது கட்சி ஆதரவாளர்கள் இந்த நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் அலுவலகச் செயலாளர் சங்கையா தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. 1989 ஆண்டு இலங்கையில் இந்திய ராணுவம் நிலை கொண்டிருந்த வேளையில் கொழும்பில் வைத்து அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது நினைவு தினத்தை கடந்த சில வருடங்களாக அமைதியான முறையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளர்கள் அனுஸ்டித்து வருவதன் ஒரு கட்டமாகவே இம்முறை 20வது வருட நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளன.

மூலம் - GTN

[ மாத்தையா Raw கூட்டு சதியால் கொல்லப்படார்... புலிகளின் மீதான அவப்பெயருக்காகவும் புலிகளின் அரசியல், புலநாய்வு பிரிவை கைகளில் வைத்து இருந்த தண்டிக்க பட்ட முன்னாள் துரோகி ஒருவரான மாத்தையாவின் வளிகாட்டுதலில் புலிகள் மீதான அவப்பெயர் கொடுக்க RAWவினால் திட்ட மிடப்பட்டது, இதன் விசாரணைகளின் முடிவில் இதில் சம்பந்த பட்டவர்களில் சாவடைந்து இருந்த போது அவர்கள் மாவீரர் பட்டியலில் இருந்து புலிகளால் நீக்கப்பட்டனர்.. ]

Edited by தயா

  • Replies 64
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ மாத்தையா Raw கூட்டு சதியால் கொல்லப்படார்... புலிகளின் மீதான அவப்பெயருக்காகவும் புலிகளின் அரசியல், புலநாய்வு பிரிவை கைகளில் வைத்து இருந்த தண்டிக்க பட்ட முன்னாள் துரோகி ஒருவரான மாத்தையாவின் வளிகாட்டுதலில் புலிகள் மீதான அவப்பெயர் கொடுக்க RAWவினால் திட்ட மிடப்பட்டது, இதன் விசாரணைகளின் முடிவில் இதில் சம்பந்த பட்டவர்களில் சாவடைந்து இருந்த போது அவர்கள் மாவீரர் பட்டியலில் இருந்து புலிகளால் நீக்கப்பட்டனர்.. ]

இதை ஏன் மக்களுக்கு புலிகளால் சொல்ல முடியாமல் போனது ??? இது மட்டும் இல்லாமல்.. ராஜீவின் மரணம் இன்னும் அவிழ்க்கப்படாமல் இருந்ததும் எம்மீதான கொலைவெறி தாக்குதலுக்கான இன்னொரு முக்கிய காரணமாக இருக்குமோ ??

  • கருத்துக்கள உறவுகள்

எவர் எதைச் செய்திருந்தாலும்.. அமிர்தலிங்கத்துக்கு யாழ் குடா மக்கள் அஞ்சலி செய்வது என்பது அவர்கள் தமக்குத் தாமே குழிபறிப்பது போன்றது..!

அமிர்தலிங்கம்.. இந்தியப் படைகள் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று கொண்டிருக்க.. ரப்பர் செல் அடித்தபடி இந்திய படைகள் மக்களுக்கு எந்த துன்புறுத்தலும் இன்றி புலி அழிப்பைச் செய்து கொண்டிருப்பதாக சென்னையில் இருந்து கொண்டு அறிக்கை விட்டவர்.

அமிர்தலிங்கத்தின் அரசியல் எமக்குத் தேவையில்லை. ஏனெனில் எமது மக்களின் துயரை வைத்து அரசியல் செய்தவர் அமிர்தலிங்கம்..! :lol:

Edited by nedukkalapoovan

01 அமிர்தலிங்கத்தின் சாதனைகள் யாழ் குடாநாட்டில் சாதியத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டம் கூர்மையடைந்திருந்த காலகட்டத்தில் அதை அவரகால சட்டத்தை பயன்படுத்தி அதாவது ஒடுக்கப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்குமாறு சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கு விண்ணப்பித்தது.சங்கானையை சங்காயாக மாற்றப்போகிறார்கள் என்று பாரளுமன்றித்தில் இந்தப் போராட்டத்தை கொச்சைப் படுத்திப் பேசியது.

02 ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாக கிடைத்த லிபியத் தொடர்பை தேசியத் தலைவருக்கு கிடைக்க விடாமல் தனது மகனது இயக்கத்துக்கு கிடைக்கும்படி செய்து அதை வீணடித்தது

03.பலஸ்தீனத்தின் பிஎப்எல்பி இயக்கத்தினருடன் கிடைத்த தொடர்பையும் தேசியத்தலைவரை அன் எடிக்கேட்டற் மான் என்று சொல்லி விடுதலைப்புலிகளுக்கு கிடைக் விடாமல் தடுத்தது.

04. 1972 ம் ஆண்டு சிறீலங்கா குடியரசாக மாறிய போது தந்தை செல்வா அந்த குடியரசை புறக்கணித்து தமிழர்களை ஆளுமை செய்யும் இறைமையை சிறீலங்கா இழந்துவிட்டதென்று பகிரங்கமாக பிரகடனப்படுத்தி பாராளுமன்ற புறக்கணிப்பையும் தொடர்ச்சியான சட்டமறுப்பு போராட்டத்தையும் நடத்தலாம் என்று தீர்மானித்த போது அதை எதிர்த்து நின்று அவரது தீர்மானத்தை மாற்றியது

05. 1983 கடைசியில் இந்திய மத்திய அரசு அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களுக்கும் ஆயுதப் பயிற்சி வழங்கியபோது விடுதலைப் புலிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்குவது தமிழ்நாட்டில் பிரிவினை கோரிக்கைணை வளாக்கும் என்று ரோவுக்கும் போட்டுக் கொடுத்தது.அத்துடன் இயக்கங்களுக்குள் போட்டியை உருவாக்கிவிட்டால் தான் அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கலாம் என்று இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கியது.

இப்படி இன்னும் எழுதிக் கொண்டு போகலாம்

அன்று அந்த செயலைச் செய்த போராளிகள் இன்றும் மாவீரர்களாகத்தான் கொண்டாடப்படுகின்றார்கள். தவறான செய்திகளை பரப்பாதீர்கள். எனது மைத்துனனனும் அவர்களில் ஒருவன்

இப்படியே அடுக்கி கொண்டு போகும் போது கொஞ்சம் ஆதாரங்களையும், பத்திரிகை குறிப்புகளையும் முன் வைத்தால், என் போன்ற போராட்டத்தின் ஆரம்பகால விடயங்களை சரியாக / நேர்மையான ஊடகங்கள் மூலம் அறிந்திராத பலருக்கு பேருதவியாக இருக்கும்

அன்று அந்த செயலைச் செய்த போராளிகள் இன்றும் மாவீரர்களாகத்தான் கொண்டாடப்படுகின்றார்கள்.

உண்மை ...

இந்திய சதியில் கொல்லப்பட்ட அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் அவர்களின் 20 ம் ஆண்டு நினைவு.

:D:D:lol::rolleyes::lol::lol::unsure::D:o:)

அமிர்தலிங்கம், யோகேஸ்வரின் படுகொலைகளானது இந்திய உளவுத்துறையினரின் உத்தரவுக்கு அமைய நடைபெற்றது என்பது உண்மையே!! ஆனால் இக்கொலையில் இந்தியாவின் பங்கு விசாரணை நடத்தப்படவுமில்லை, உரிய நேரத்தில் விடுதலைப் புலிகளினால் வெளியிடப்படவுமில்லை!!

அமிர்தலிங்கம் கொல்லப்பட்டு ... இந்திய இராணுவமும் வெளியேறி .... மாத்தையா பல காலம் உபதலைவர் பதவியையும் வகித்தார் .... மாத்தையா தலைமையிலான குழு கைது செய்யப்படும் வரை எந்த ஒரு விசாரணையும் அமிர்தலிங்கம் கொலை தொடர்பாக நடைபெறவில்லை!!! நடைபெறவில்லை!! ....

இக்கொலையை விசு தலைமையிலான குழு செய்தது!! விசுவிற்கு மாத்தையா உத்தரவு இட்ட போது, விசு தயங்கினாராம், அப்போது, மாத்தையாவினால் கடுமையான தொனியில் உத்தரவிடப்பட்ட போதுதான் விசு சென்றாராம்!!! விசு குழுவினர், இதை தலைமையின் உத்தரவு என்றுதான் நினைத்தனராம்!! மற்றும் தாமும் தப்ப முடியாது என்பதை அவர்கள் உணராமல் இல்லையாம்!!!!

தயவு செய்து எடுத்த எடுப்பில் எல்லோரையும் துரோகிகள் ஆக்காதீர்கள்!!! விசு போன்றோர் எப்படியான வாழ்வு வாழ்ந்திருக்க முடியுமென அவரை தெரிந்தவர்களுக்கு/அறிந்தவர்களுக்கு புரியும்!! ஆனால் எல்லாவற்றையும் துறந்து ...... இறுதியில் துரோகி பட்டம்!!!

இந்த திரியின் கீழ் அவர்களுக்கு முதன்முதலில் அந்த பட்டத்தை வழங்கியவர் நீங்களே...... பிறேகேன் ;;;ம்....ம் ஆ என்று இழுக்கின்றீர்கள்? எல்லாம் திட்மிட்டுதானே நடக்குது

  • கருத்துக்கள உறவுகள்

அமிர் அவர்கள் பற்றி நிறைய எழதவேண்டும்

எழுத விரும்புகின்றேன்

ஆனால் நேரமில்லை

பார்க்கலாம்

  • தொடங்கியவர்

எவர் எதைச் செய்திருந்தாலும்.. அமிர்தலிங்கத்துக்கு யாழ் குடா மக்கள் அஞ்சலி செய்வது என்பது அவர்கள் தமக்குத் தாமே குழிபறிப்பது போன்றது..!

அமிர்தலிங்கம்.. இந்தியப் படைகள் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று கொண்டிருக்க.. ரப்பர் செல் அடித்தபடி இந்திய படைகள் மக்களுக்கு எந்த துன்புறுத்தலும் இன்றி புலி அழிப்பைச் செய்து கொண்டிருப்பதாக சென்னையில் இருந்து கொண்டு அறிக்கை விட்டவர்.

அமிர்தலிங்கத்தின் அரசியல் எமக்குத் தேவையில்லை. ஏனெனில் எமது மக்களின் துயரை வைத்து அரசியல் செய்தவர் அமிர்தலிங்கம்..! :lol:

புலிகள் கருத்து முரண்பாடு உள்ளவர்கள் யாரையும் கொலை செய்யவில்லை... மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வண்ணம் நடந்து கொண்டவர்களை களை எடுக்க தயக்கியதும் இல்லை...

அமிர்தலிங்கம் போல இன்னும் பலர் பேச்சு அரசியலோடு நிண்று விட்டதால் பலர் தமிழர் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கிறார்கள்... எல்லாரும் எதிர் அரசியல் நடத்தியவர்களாக மட்டுமே பார்க்க படுகிறார்கள்... படுகொலை செய்தவர்களாக அல்ல... இந்த விடயங்களில் புலிகள் நல்ல புரிதலை கொண்டவர்கள்..

  • தொடங்கியவர்

தயவு செய்து எடுத்த எடுப்பில் எல்லோரையும் துரோகிகள் ஆக்காதீர்கள்!!! விசு போன்றோர் எப்படியான வாழ்வு வாழ்ந்திருக்க முடியுமென அவரை தெரிந்தவர்களுக்கு/அறிந்தவர்களுக்கு புரியும்!! ஆனால் எல்லாவற்றையும் துறந்து ...... இறுதியில் துரோகி பட்டம்!!!

அதிகமாக பொய் சொல்லாதீர்கள்...

மாத்தையாவுடன் பாதுகாப்புக்கு நிண்ற கேடி புலிகளின் உறுப்பினர்களின் முன்னால் தாங்கள் செய்தவற்றை விளக்கமாக சொல்கிறார்... அப்போது அவர் சொன்னது... நானும் விசுவுமாக சேர்ந்து EPRLF இனர் தயாரித்த வகை கைக்குண்டால் கிட்டு அண்ணா மீது யாழ்ப்பாணம் 2ம் குறுக்கு தெருவில் வைத்து குண்டை வீசினோம் எண்று...

இதை வட்டுக்கோட்டையில் ஒரு முகாமில் வைத்து , கேடி , சுசிலன்( பூநகரியில் இருந்து டாங்கி எடுத்து ஓட்டி வந்தவர்) , கிருபன் ( இராஜீவ் வழக்கு குற்றவாளியாக இருந்து தப்பிவந்தவர்) மூவரும் சொன்ன வாக்கு மூலம் ...

Edited by தயா

  • தொடங்கியவர்

அன்று அந்த செயலைச் செய்த போராளிகள் இன்றும் மாவீரர்களாகத்தான் கொண்டாடப்படுகின்றார்கள். தவறான செய்திகளை பரப்பாதீர்கள். எனது மைத்துனனனும் அவர்களில் ஒருவன்

1989 ம் ஆண்டு காலப்பகுதியின் ஆடி மாத மாவீரர் பட்டியலை 1994 க்கு பின்னர் பார்த்து இருக்கிறீர்களா...?? பாருங்கள்... அந்த சம்பவம் குறிக்கப்பட்டு முன்னர் சுவர் ஒட்டிகள் எல்லாம் ஒட்டப்பட்டன... அந்த மூவரில் 2 வரின் பெயர் நீக்கப்பட்டு இருக்கும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமாக பொய் சொல்லாதீர்கள்...

மாத்தையாவுடன் பாதுகாப்புக்கு நிண்ற கேடி புலிகளின் உறுப்பினர்களின் முன்னால் தாங்கள் செய்தவற்றை விளக்கமாக சொல்கிறார்... அப்போது அவர் சொன்னது... நானும் விசுவுமாக சேர்ந்து EPRLF இனர் தயாரித்த வகை கைக்குண்டால் கிட்டு அண்ணா மீது யாழ்ப்பாணம் 2ம் குறுக்கு தெருவில் வைத்து குண்டை வீசினோம் எண்று...

இதை வட்டுக்கோட்டையில் ஒரு முகாமில் வைத்து , கேடி , சுசிலன்( பூநகரியில் இருந்து டாங்கி எடுத்து ஓட்டி வந்தவர்) , கிருபன் ( இராஜீவ் வழக்கு குற்றவாளியாக இருந்து தப்பிவந்தவர்) மூவரும் சொன்ன வாக்கு மூலம் ...

இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை..... பயிற்சி முடித்து நாடு திரும்பியவுடனேயே கேடி அவர்கள் வன்னிக்கே போகிறார்.... பின்பு கோட்டை முற்றுகைக்குள்ளான போதே கேடி அவர்கள் முதல் முதலாக யாழ் (1990) வந்ததாக சொல்கிறார்கள். இது இப்படி இருக்க அவர் கிட்டு அவர்களுக்கு குண்டெறிந்தது என்பது நம்பும்படியாக இல்லை. ஆனால் றோவினால் வளைக்கபட்டு சில துரோகிகள் போராளிகள் போல் இருந்தார்கள் என்பது யாபரும் அறிந்ததே. கிட்டு அவர்களும் குட்டிசிறீயும் உள் துரோகத்தால் கொல்லபட்டார்கள் என்பதே உண்மை. விசு அவர்கள் புலானாய்வு துறையின் முக்கிய நபராக இருந்ததால் எல்லா இடமும் திரிந்தார் என்பது உண்மைதான். ஆனால் அவர் மாத்தையாவை விடவும் பொட்டம்மானுடன்தான் நெருங்கி இருந்தார் என்றும் சொல்கின்றார்கள். எது எப்படியோ விசு ஒரு அருமையான போராளி என்பது எனது தனிபட்ட கருத்து. உள்வீட்டு விவகாரங்களை நாம் அறிய சந்தர்ப்பங்கள் இல்லைதானே....

வன்னியில் இருந்து யாழ்ப்பாணம் கன தூரமோ அண்ணை... எத்தினை நாள் அண்ணை பயணம் போகவேணும்...??

இந்தியாவிலை பயிற்ச்சி எடுத்த காலங்கள் 1986 லை முடிஞ்சு போச்சுது... அதிலை இருந்து நாலு வருசமாய் ஒருத்தர் யாழ்ப்பாண பக்கமே வன்னியிலை இருந்து வந்து இருக்க முடியாது எண்டு எப்பிடிதான் சொல்லுறீயளோ...??? ( உந்த நாலு வருசத்துக்கை இந்தியன் ஆமி வேற வந்து போட்டான்)

நான் ஒருவேளை இந்தியாவிலை இருந்த ஆளாக இருந்து இருந்தால் வன்னி கொழும்புக்கு கிட்ட இருக்கும் ஒரு ஊர் எண்டு நீங்கள் சொல்லுறதை கட்டாயம் நம்பி இருப்பன்...

Edited by தயா

விசு (ராம்) என்றழைக்கப்படும் போராளிகளால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் பல உள்ளங்களிற்கு வெளிச்சத்ததை தந்தன. வடமராட்சி மண்ணில் ஒடீ விளையாடி பத்திரிகை விற்று விடுதலையை வளர்த்தெடுத்தவர்கள் விசு போன்றவர்கள். அந்த மண்ணில் உள்ள அனைவராலும் விரும்ப்ப்பட்ட போராளிகள். 87 தாக்குதலின்போது சிறீலங்கா இராணுவத்தின் மீதான் கரும்புலித்தாக்குதலை அடுத்து நடாத்தப்பட்ட சமரில் முன்னின்று உழைத்தவர்கள். மாபெரும் போராளிகள். கட்டளை இடுபவர் தமது பொறுப்பாளர் என்றுதான் பார்த்தார்களே தவிர அவரை எதிர்த்து யாரும கதைக்கவுமில்லை கதைப்பதுமில்லை. இட்ட கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றுபவர்கள் அவர்கள்தான் போராளிகள்

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இருந்து யாழ்ப்பாணம் கன தூரமோ அண்ணை... எத்தினை நாள் அண்ணை பயணம் போகவேணும்...??

இந்தியாவிலை பயிற்ச்சி எடுத்த காலங்கள் 1986 லை முடிஞ்சு போச்சுது... அதிலை இருந்து நாலு வருசமாய் ஒருத்தர் யாழ்ப்பாண பக்கமே வன்னியிலை இருந்து வந்து இருக்க முடியாது எண்டு எப்பிடிதான் சொல்லுறீயளோ...??? ( உந்த நாலு வருசத்துக்கை இந்தியன் ஆமி வேற வந்து போட்டான்)

நான் ஒருவேளை இந்தியாவிலை இருந்த ஆளாக இருந்து இருந்தால் வன்னி கொழும்புக்கு கிட்ட இருக்கும் ஒரு ஊர் எண்டு நீங்கள் சொல்லுறதை கட்டாயம் நம்பி இருப்பன்...

கேணல் கிட்டிவிற்கு குண்டு எறிபட்டது என்பது 1986ம் ஆண்டு நடந்தது. அப்போது கிளிநொச்சி ஆனையிறவு சோதனை சாவடிகள் தாண்டி போராளிகள் முக்கிய அலுவல்கள் இன்றி பயணிப்தில்லை. அப்படி பயணிப்பதென்றால்.... கடல் பயணம்தான் அதை அந்த காலத்தில் வல்வெட்டிதுறை வெற்றிலைகேணி ஆகிய இடங்களிலேயே முக்கிய முகாம்களாக வைத்த பாவித்தார்கள் அப்போது அது இரண்டுமே யாழ்மாவட்ட பொறுப்பாளரின் கட்டுபாட்டிலேயே இருந்தன. அப்படியிருக்க சொந்த வேலையா வன்னிமாவட்ட போராளிகள் யாழ் வருவதென்பது கேள்வி குறியானது என்பதைதான் நான் சொன்னனே தவிர உங்களுடைய கருத்தை நான் பொய்யென்று சொல்லவில்லை. அதுதான் உள்வீட்டு விவகாரங்களை நாம் அறிய முடியாதுதானே என்றும் சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் பு... ஆராட்சிகள் தேவையா இப்போ??

கிட்டு அண்ணா மீது யாழ்ப்பாணம் 2ம் குறுக்கு தெருவில் வைத்து குண்டை

வேண்டாம்!!!!!! ... உண்மைகள் ரணங்கள் ....... ததேயின் பெயரால் புதைத்து விடுவோம்!!!!!

Edited by Nellaiyan

...

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

அதுவல்ல நெல்லையன் முக்கியம். எனக்கு அது தெரியும், இது தெரியும் என்று காட்டுவதற்காகத் தான் இந்தப் படம் காட்டுகின்ற கருத்துக்கள் எழுதப்படுகின்றது.

அமிர்தலிங்கமாகட்டும், யாராகட்டும் யாரால் கொல்லப்பட்டிருந்தாலும், தமிழர்களின் விடுதலை இயக்கத்தினால் நினைவுகூரவோ, மதிக்கப்படவுமில்லை.

அப்படியிருக்கின்றபோது, எதற்காக இப்போது தூக்கிப் பிடிக்கணும்.

எங்கள் தலைவரால் மதிப்பளிக்கப்படாத எவனையும் தலையில் வைத்துக் கொண்டாட வேண்டிய தேவையில்லை. அமிர்தலிங்கம் என்ற தனிமனித இழப்பு என்பது தனிப்பட்டரீதியில் வருத்தம் தரலாம். ஆனால் தமிழ்மக்களின் வாழ்வில் அவர் செய்த எந்தச் செயலும் கௌரவமான நிலையில் இல்லை.

இதன் மூலம் இந்தியாவின் சதியை வெளிப்படுத்தலாம் என யாரும் நினைக்கலாம். ஆனால் அதற்காக 34 வருடங்களாக எம் விடுதலைப் போராட்டத்தில் மதிக்கப்படாத நபரை எச் சந்தர்ப்பதிலும் நினைவு கூறப்படலாக...

  • தொடங்கியவர்

அதுவல்ல நெல்லையன் முக்கியம். எனக்கு அது தெரியும், இது தெரியும் என்று காட்டுவதற்காகத் தான் இந்தப் படம் காட்டுகின்ற கருத்துக்கள் எழுதப்படுகின்றது.

அது எப்படி ஏதாவது உதாரணம் தரமுடியுமா..???

நீங்கள் இந்து சமயத்தை வாழ வைக்கை பிறந்தவர் போல பாடு பட்டபோதும், VHP யை புகழ்ந்த போது எல்லாம் நீங்கள் இந்து சமயம் பற்றி மெத்த படித்தவர் போலவோ, அனைத்தும் அறிந்தவர் போல காட்டுகிறீர்கள் எண்றா இங்கு கருத்து வைத்து இருந்தார்கள்...???

முதலில் நோக்கம் என்ன என்பதை விளங்கி கொள்ள முயலுங்கள்... ( இவைகளில் உண்மை தன்மை இல்லையா என்பதை சொல்லும் உரிமையும் உங்களுக்கு உண்டு)

புலிகளால் செய்யப்படாதவைகளுக்கு புலிகள் மீது பழியை போட்டு கொள்வதை நீங்கள் எப்படி அனுமதிக்கிறீர்கள் எனும் கேள்வியை நான் உங்களை நோக்கி கேட்க்க விரும்புகிறேன்...

நீங்கள் இந்து சமயத்தை யாராவது விமர்சித்தால் மட்டும் தான் கிளர்ந்து எழுவீர்களோ....??? அப்படி உங்களுக்கு பிடித்த விடயம் பற்றி மட்டும் எங்களால் மற்றவர்களுக்கு தெளிவு படுத்த முடியாது...

அமிர்தலிங்கமாகட்டும், யாராகட்டும் யாரால் கொல்லப்பட்டிருந்தாலும், தமிழர்களின் விடுதலை இயக்கத்தினால் நினைவுகூரவோ, மதிக்கப்படவுமில்லை.

அப்படியிருக்கின்றபோது, எதற்காக இப்போது தூக்கிப் பிடிக்கணும்.

எங்கள் தலைவரால் மதிப்பளிக்கப்படாத எவனையும் தலையில் வைத்துக் கொண்டாட வேண்டிய தேவையில்லை. அமிர்தலிங்கம் என்ற தனிமனித இழப்பு என்பது தனிப்பட்டரீதியில் வருத்தம் தரலாம். ஆனால் தமிழ்மக்களின் வாழ்வில் அவர் செய்த எந்தச் செயலும் கௌரவமான நிலையில் இல்லை.

இதன் மூலம் இந்தியாவின் சதியை வெளிப்படுத்தலாம் என யாரும் நினைக்கலாம். ஆனால் அதற்காக 34 வருடங்களாக எம் விடுதலைப் போராட்டத்தில் மதிக்கப்படாத நபரை எச் சந்தர்ப்பதிலும் நினைவு கூறப்படலாக...

மக்களின் செயற்பாடுகள் எவற்றுக்கும் புலிகள் அமைப்பில் இருந்து தடைகளும் வந்தது இல்லை... மக்களாக விரும்பி அமிர்தலிங்கத்துக்கு மதிப்பளிப்பார்களாக இருந்தால் அவர்களின் கருத்தை புலிகள் போல மதிக்க தெரிந்து கொள்ளுங்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் செயற்பாடுகள் எவற்றுக்கும் புலிகள் அமைப்பில் இருந்து தடைகளும் வந்தது இல்லை... மக்களாக விரும்பி அமிர்தலிங்கத்துக்கு மதிப்பளிப்பார்களாக இருந்தால் அவர்களின் கருத்தை புலிகள் போல மதிக்க தெரிந்து கொள்ளுங்கள்...

தயாண்ணா.. நீங்கள் அமிர்தலிங்கத்தை தமிழர்களின் அரசியல் வாரிசுகளான இனங்காட்டுவரை ஏற்றுக் கொள்கிறீர்கள் போல் தெரிகிறது. ஆனந்த சங்கரியைக் கூட தேசிய தலைவர் சந்திப்பு ஒன்றிற்கு அழைத்திருந்தார். கடந்த சமாதான காலத்தில் அது நிகழ்ந்திருந்தது. தேசிய தலைவர் எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியையும் புறக்கணிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தவரல்ல.

தமிழீழ விடுதலைப்புலிகளாகட்டும் மக்களாகட்டும் அமிர்தலிங்கம் இறந்த போதும்.. பின்னும் வருந்தத்ததக்க நிலையில் இருக்கவில்லை. ஏனெனில் அமிர்தலிங்கம் என்ன செய்தார் என்பதை மக்களும் புலிகளும் நன்கு அறிவார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் சிவசிதம்பரம் ஐயா கொழும்பில் காலமான போது வன்னிக்கு கொண்டு வந்து தமிழீழ தேசியக் கொடி போர்த்தி கெளரவம் அளித்தனர். சிதம்பரம் ஐயா அமிர்தலிங்கம் கொல்லப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thamilchelvan, Tigers pay homage to 'Siva'

The body of Mr. Murugesu Sivasithambaram, the leader of the Tamil United Liberation Front, was taken to Kilinochchi Friday afternoon. The head of the LTTE's political division Mr.S.P.Thamilchelvan and other members of the organisation paid their last respects to 'Siva' at the Thooyavan College for Political Studies where the cortege lay this afternoon for homage by the public.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=7038

யோகேஸ்வரனின் மனைவி சரோஜினி சூரியக் கதிர் நடவடிக்கையின் பின்னர் யாழ்ப்பாண மாநகர மேஜர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு பின் சுட்டுக்கொல்லப்பட்டார். சரோஜினியின் இந்த நடவடிக்கை ஆனந்த சங்கரியால் மேற்கொள்ளப்பட்ட ஒரு அனாவசியமான நகர்வாகவே பார்க்கப்பட்டது.

அதன் பின்னர் சங்கரியின் நிலைப்பாடு இப்படியாக இருந்தது..

Talk only to LTTE -Anandasangaree tells Sri Lanka President

Mr. V. Anandasangaree, the President of the Tamil United Liberation Front met President Chandrika Kumaratunga Friday evening and impressed upon her that the Sri Lankan government should talk only to the Liberation Tigers and not simultaneously with any other Tamil group, according to a press note issued by the controversial Jaffna MP Saturday. “My view that ‘what is acceptable to the LTTE will be acceptable to the Tamils also’ seems to have impressed the President who had seen the reasonableness in my suggestions”, Mr. Anandasangaree said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11102

இதே ஆனந்த சங்கரியின் நிலைப்பாடு பின்னர் எவ்வாறு மாறியது. இதே போன்றுதான் அமிர்தலிங்கமும்.. 1977 வட்டுக்கோட்டைப் பிரகடனத்தில் முழங்கி.. திம்புப் பேச்சில் தம்பிமாரோடு முரண்பட்டு.. இந்திய - இலங்கை ஒப்பந்ததை.. தனக்கு தனக்கு என்று ஏற்றுக் கொள்ளப் போய்.. இன்று.. அந்த ஒப்பந்தம் போலியாக இணைத்த வடக்குக் கிழக்கு துண்டுதுண்டாகிக் கிடக்கிறது.

இதற்கு விடுதலைப்புலிகள் அல்ல காரணம். இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஒரு ஏமாற்று வேலை என்று அன்று தேசிய தலைவர் சொன்ன போது எல்லோரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு இந்தியாவை நிர்ப்பந்தித்திருந்தால்.. இன்று ஒரு சுயாட்சி அலகாவது கிடைத்திருக்கும். அப்படி இருந்தும் தேசிய தலைவர் விட்டுக்கொடுப்புகளோடு இந்திய - இலங்கை ஒப்பந்த அடிப்படைகளை ஒரு நல்ல தீர்வுக்கான அடிப்படைகளாக மட்டும் ஏற்றுக் கொள்ள முன்வந்தார். ஆனால் இறுதியில் இந்த குள்ளநரிகளின் சுயநலத்தால் புலிகளை அழிக்கும் யுத்தத்தை இந்தியா திணித்தது. அதை ஏன் இவர்கள் எதிர்க்க மறுத்தார்கள். அந்த யுத்தம் மக்களுக்கு எதிரானது என்பதை ஏன் இவர்கள் சிந்திக்க மறுத்தார்கள்.

தேசிய தலைவர் டக்கிளஸ்.. சித்தார்த்தன் போன்றோருக்கும் பல தடவைகள் பொதுமன்னிப்பு அளித்து தமிழ் தேசியத்தின் பெயரால் ஒற்றுமையோடு ஒருங்கிணைத்து செயற்பட அழைத்தார். அதை அவர்கள் நிராகரித்தார்கள். அதன் பயன் தமிழ் மக்கள் சந்தித்த பேரழிவுகளே.

ஆனால் இறுதியில் எல்லாம் பிரபாகரனால் தான். அவரின் விடாப்பிடியால் தான் என்று அவர் மீது குற்றத்தை சுமத்திவிட்டு அவரவர் தாம் செய்த தவறுகள் எல்லாவற்றிற்கும் புலிகளே காரணம் என்று கூற நீங்களும் அதற்கு ஆமாப்போடும் நிலையை அடைந்திருப்பது கண்டு வேதனைப்படுகிறேன்.

யாரை மன்னித்தாலும்.. அமிர்தலிங்கம்.. சங்கரி.. டக்கிளஸ்.. சித்தார்த்தன்.. கருணா போன்ற சந்தர்ப்பவாத இன அக்கறையற்ற நாசகாரிகளை மன்னிக்க.. அரசியல் வாரிசுகளாக்கிக் கொள்ள எத்தனை தமிழர்கள் தயார்..! நிச்சயமாக மனச்சாட்சியுள்ள ஒரு மனிதன் இவர்களை மன்னிக்கவும் அரசியல்வாரிசுகளாக்கவும் துணியமாட்டான்..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

தயாண்ணா.. நீங்கள் அமிர்தலிங்கத்தை தமிழர்களின் அரசியல் வாரிசுகளான இனங்காட்டுவரை ஏற்றுக் கொள்கிறீர்கள் போல் தெரிகிறது. ஆனந்த சங்கரியைக் கூட தேசிய தலைவர் சந்திப்பு ஒன்றிற்கு அழைத்திருந்தார். கடந்த சமாதான காலத்தில் அது நிகழ்ந்திருந்தது. தேசிய தலைவர் எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியையும் புறக்கணிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தவரல்ல.

சிங்கள அரச ஆதரவு ஆயுத குழுக்களை விடவும் தமிழர் விடுதலை கூட்டணியினர் மற்றும் ஆயுதம் தரித்து பின்னர் அரசியல் கட்ச்சிகளாக இருக்கும் பலரை புலிகள் அங்கீகரித்ததின் விளைவாக மக்கள் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கி இருக்கிறார்கள்...

இந்த அமிர்தலிங்கத்தை விட மிகவும் அதிகமாக புலிகளை எதிர்த்தவர்கள் செயற்பட்டவர்கள், ஆயுதம் கொண்டு இந்திய இராணுவத்தோடு வலம் வந்தவர்கள் எல்லாம் தமிழர் தேசிய கூட்டமைப்பில் இருக்கிறார்கள்...

இந்த வகையில் அமிர்தலிங்கம் சுயநலவாதியாக இருந்தாலும் அவருடன் இறந்து போன யோகேஸ்வரன் அவர்கள் எந்த வகையில் துரோகியாக பார்க்கபட்டார்...??

இதே ஆனந்த சங்கரியின் நிலைப்பாடு பின்னர் எவ்வாறு மாறியது. இதே போன்றுதான் அமிர்தலிங்கமும்.. 1977 வட்டுக்கோட்டைப் பிரகடனத்தில் முழங்கி.. திம்புப் பேச்சில் தம்பிமாரோடு முரண்பட்டு.. இந்திய - இலங்கை ஒப்பந்ததை.. தனக்கு தனக்கு என்று ஏற்றுக் கொள்ளப் போய்.. இன்று.. அந்த ஒப்பந்தம் போலியாக இணைத்த வடக்குக் கிழக்கு துண்டுதுண்டாகிக் கிடக்கிறது.

இதற்கு விடுதலைப்புலிகள் அல்ல காரணம். இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஒரு ஏமாற்று வேலை என்று அன்று தேசிய தலைவர் சொன்ன போது எல்லோரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு இந்தியாவை நிர்ப்பந்தித்திருந்தால்.. இன்று ஒரு சுயாட்சி அலகாவது கிடைத்திருக்கும். அப்படி இருந்தும் தேசிய தலைவர் விட்டுக்கொடுப்புகளோடு இந்திய - இலங்கை ஒப்பந்த அடிப்படைகளை ஒரு நல்ல தீர்வுக்கான அடிப்படைகளாக மட்டும் ஏற்றுக் கொள்ள முன்வந்தார். ஆனால் இறுதியில் இந்த குள்ளநரிகளின் சுயநலத்தால் புலிகளை அழிக்கும் யுத்தத்தை இந்தியா திணித்தது. அதை ஏன் இவர்கள் எதிர்க்க மறுத்தார்கள். அந்த யுத்தம் மக்களுக்கு எதிரானது என்பதை ஏன் இவர்கள் சிந்திக்க மறுத்தார்கள்.

எல்லாரும் புலிகளையும் தேசிய தலைவரையும் சிறு பிள்ளையாக பார்த்தார்களே அண்றி ஒரு தலைவராக, வளி காட்டியாக பார்க்க பின் நிண்றார்கள்..

இதில் காலம் பலரை மாற்றியது என்பதுதான் உண்மை...

உண்மை விளங்கி கொண்ட பலரும் சலுகைகளுக்காக தொடர்ந்தும் துரோகங்களே செய்தனர்... அவர்களை மாற்றும் வண்ணம் தமிழ் மக்களிடம் அரசியல் பலமோ ஒற்றுமையோ இருக்க இல்லை...

இவ்வளவுக்கும் ஏன்... அந்த தேர்தல் ஒண்றில் போட்டி இட புலிகளின் அனுமதியும் சமாதான காலமும் தோண்றி இருக்காவிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோண்றி இருக்க காரணமே இல்லாது போய் இருக்கும்...

தமிழ் தேசிய கூட்டமைப்பில் பலரும் துரோகம் செய்தவர்களாகவே அடையாளப் படுத்த பட்டு கொண்டு இருப்பர்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வகையில் அமிர்தலிங்கம் சுயநலவாதியாக இருந்தாலும் அவருடன் இறந்து போன யோகேஸ்வரன் அவர்கள் எந்த வகையில் துரோகியாக பார்க்கபட்டார்...??

யோகேஸ்வரனின் 1981 நிலைப்பாடு...

Within the Tamil front, Mr.Yogeswaran is a hard-liner who accepts the inevitability of violence. ‘Eelam cannot be won by other than violent means, the majority will never simply accommodate us’, he said. When asked whether fighting a vastly larger group was not equally hopeless, the lawyer responded with anger. ‘The Sri Lanka army is just rabble’, he said. ‘They are a drunken, indisciplined force. Just 5,000 young Tamils if they had arms could beat them easily’.

Yogeswaran’s interview to Michael Kaufman of ‘New York Times’ in Sept.1981.

[source: ‘Harassed Sri Lanka Minority Hears Call to Arms’, by Michael T.Kaufman, New York Times, Sept.11, 1981.] (tamilnation.org)

1989 இல் அவரின் நிலைப்பாடு.. அமிர்தலிங்கத்தின் பாதை..

2001 இல் இவரின் மனைவியின் பாதை.. ஆனந்த சங்கரியின் பாதை..

5000 தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தச் சொல்லிவிட்டு.. அவர்கள் தங்கள் குடும்பம் குட்டிகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததும்.. சிங்கள இராணுவத்தின் பாதுகாப்புடன் அரசியல் செய்து கொண்டதும் தான்.. தமிழீழம் பெறுவதற்கான முயற்சியா..???!

தயா அண்ணா நீங்கள் ரெம்பவே குழம்பிப் போய் இருக்கிறீர்கள். வரலாறு எழுதப்பட்டு விட்டதண்ணா. மாற்ற முடியாது. துரோகிகளும்.. துரோகத்துக்கு துணை போனவர்களும்.. வரலாற்றில் மன்னிக்கப்பட்டதாக இல்லை. இருந்தாலும் தேசிய தலைவர் மன்னித்தார்.. தமிழ் தேசியத்தை வளப்படுத்தினார். ஆனால் இறுதில் அவருக்கு நீங்கள் எல்லோரும் அளிக்கும் பரிசு... அமிர்தலிங்கத்தை அரசியல் வாரிசாக்குவது.. அப்படியா..??! :rolleyes::D :D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.