Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் தேவானந்தாவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவார்?

Featured Replies

சிறிலங்கா அரச படைகளுடன் சேர்ந்து செயற்பட்டுவரும் இராணுவத் துணைப் படையான ஈ.பி.டி.பி. அமைப்பின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ளலாம் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்துக்கு மேலாகச் சென்று அரசியல் தீர்வு ஒன்றை அரசு முன்வைக்குமாக இருந்தால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பு உரிமையைப் பெற்றுக்கொள்வதாற்கு தான் தயாராக இருப்பதாக இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கின்றார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பு உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தன்னை ஏற்கனவே அழைத்திருந்ததாகவும், தெரிவித்திருக்கும் டக்ளஸ் தேவானந்தா, அரசியல் தீர்வு விடயத்தில் அரசின் செயற்பாட்டையே தான் எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மற்றொரு இராணுவத் துணைப் படையின் தலைவரான அமைச்சர் வி.முரளிதரன் தனது அமைப்பைக் கலைத்துவிட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொண்டமை தெரிந்ததே. சுதந்திரக் கட்சியில் அவர் இணைந்துகொண்ட பின்னரும் அவரது துணைப்படை செயற்பட்டுவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பமட்டும் என்னவாம் !

அப்போது அத்தியின் கொள்கை என்று கூறியது ..... "மத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி நடத்துபவர்" ........

தற்போது சிலைட்டாக சேஞ் பண்ணியிருக்கிறாராம், அத்தி ...... "தன்னையும் காத்து, மக்களுடன் இருப்பவர்" ........ உதுதானாம் தற்போதைய கொள்(ளை)கை!!!!

....... இவ்வளவு காலமும் புலி எதிர்ப்பு பாசாங்கில் அரசியல் ஓட்டியது! ..... இப்போது மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் ..... ??????? ...........

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளஸ் என்றவர் யார்.. அவர் எப்பதான் சிங்களக் கட்சிகளோடு இணைந்து பணிபுரியல்ல. அவர் பிரேமதாச காலத்தில் இருந்து சிங்கள அமைச்சரவையில் இருக்கிறார். இதற்குப் பிறகும் டக்கிளஸ்.. டக்கிளஸ் என்று தமிழ் தேசியம் பேசியவர்களும் தமிழ் தேசியம் என்று உச்சரித்த இணையத்தளங்களும் பத்திரிகைகளும் அவன் பின்னால் ஏதோ தமிழீழத்துக்கான ஒளி ஒளிந்திருப்பது போல படம் காட்டுறதுதான் ஏன் என்று புரியவில்லை.

அவனே மானிப்பாயில்.. கோவில் கொள்ளையடித்த ஒரு ரவுடி. கோணிப்பையில் சொந்த மக்களை வெட்டி வீசிய கொலைகாரன்.. எங்கள் போராளிகளின் சாவுக்குக் காரணமான தறுதலை.. உதவாக்கரை.. இவனை எல்லாம் தமிழ் மக்களுக்கு தலைவன் ஆக்கலாம் என்றா நினைக்கிறார்கள்.. புலம்பெயர்ந்த.. தமிழ் தேசிய விற்பன்னர்கள்...???!

இவனை முரளிதரனை சிங்களம் நல்லாப் பாவிச்சாங்க. அவங்களும் நல்லாப் பிழைச்சிட்டாங்கள். எங்கையோ கிடந்தவனுக்கு லண்டனில கோடிக்கணக்கில முதலீடு செய்ய எங்கிருந்து வந்தது பணம்..??! அவன் சித்தப்பன் வீட்டுச் சொத்தா.. பெரியப்பன் வீட்டுச் சொந்தா. காட்டிக்கொடுத்து பிழைச்ச நாய்களுக்கு.. ஆராய்த்தி எடுக்கும்.. தமிழ் தேசியத்தை வாந்தி எடுத்தவையைத் தான் இப்ப சந்தேகிக்க வேண்டி இருக்குது..! :D

Edited by nedukkalapoovan

இதில இருந்து என்ன விளங்குது?புலிகள் இருந்தால் தான் மாற்றுகருத்து மாணிக்கங்களுக்கு மவுசு இருக்கும் என்று,

ஜயோ புலி பிடிக்கப்போகுது பாதுகாப்பு தாங்கோ என்று முந்தி அரசை வெருட்டலாம் ஆனால் இப்ப புலி இல்லாத படியால் பாதுகாப்பு குறைக்க அரசு முயற்சி செய்து இருக்கும் ;;;;உடனே மத்தியும் வேண்டாம் ,மாநிலமு ம் வேண்டாம் ;ஆளை விட்டால் போதுமென்ற நிலை

Edited by Jil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் காவல் தெய்வமே மிக நல்ல முடிவு,அந்த கட்சியில இருந்தால் தான் எங்கட மக்களுக்கு உதவலாம்,எம் மக்களுக்காக உங்கள் வாழ்க்கைய அர்ப்பணித்திருக்கும் நீங்கள் அதை பயனுள்ளதாக்க அரிய சந்தர்ப்பம்.பல்லாண்டு காலம் நோய்நொடியில்லாமல் வாழ்ந்து எம் மக்களுக்கு சேவையாற்ற எல்லாம் வல்ல நல்லூர் முருகனை வேண்டுகிறேன் :D

சுப்பண்ண.. நீங்கள் சொல்லுறது.. பகிடி போல இருந்தாலும்.. சில பல பேருக்கு அவர் காவல் தெய்வந்தான்.

அவர் சிங்கள.. இந்திய.. அமெரிக்க எஜமானர்களை வாலை ஆட்டி சுற்றி வந்து பிழைக்கிறார் என்றால்.. அவர் தின்றுவிட்டு வீசும் மிச்சங்களை தின்ன அவரைச் சுற்றியும் ஒரு கூட்டம் இருக்கிறது. அவரின் சிபார்சுக் கடிதத்தோடு வேலை பெற்றோரும் உண்டு. ஏன் அவரிடம் கடிதம் பெற்று நான் ஈபிடிபியில் இருந்து புலிகளால் தேடப்படுபவன் என்று சொல்லி அகதி அந்தஸ்துப் பெற்றோரும் உண்டு...! ஏன் மறியலில் இருந்து வந்தோரும் உண்டு. அவரே மறியலுக்கும் அனுப்பி அவரே எடுத்தும் விடுவார். அப்படியான அவர் அந்த மாதிரி ஒரு நல்ல வில்லன்..! படத்தில் அல்ல நிஜத்தில்...! :lol:

Edited by nedukkalapoovan

சாவுக்குக் காரணமான தறுதலை.. உதவாக்கரை.. இவனை எல்லாம் தமிழ் மக்களுக்கு தலைவன் ஆக்கலாம் என்றா நினைக்கிறார்கள்.. புலம்பெயர்ந்த.. தமிழ் தேசிய விற்பன்னர்கள்...???!

முகாமில் இருக்கும் மக்களை இன்னும் ஒரு மாததிற்க்குள் மீள் குடியமர்த்தி அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தால் அவனை தமிழர் தலைவனாக ஏற்க முடியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

முகாமில் இருக்கும் மக்களை இன்னும் ஒரு மாததிற்க்குள் மீள் குடியமர்த்தி அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தால் அவனை தமிழர் தலைவனாக ஏற்க முடியுமோ?

இவர்கள் சொல்லித்தான் முகாமில் இருக்கும் மக்களை மீளக் குடியமர்ந்தப் போவதில்லை. அவர்களை அடைத்து வைத்திருப்பதே அரசியல் செய்யத்தான். இனப்படுகொலை ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அந்த மக்கள் நல்ல அரசியல் துரும்புச் சீட்டாக மாற்றப்பட்டுள்ளனர்.

இப்போ.. த.தே.கூ வில் இருந்து முரளிதரன் வரை.. அரசியல் செய்வது.. முகாமில் அடைத்து வைத்துள்ள மக்களை வைத்தே. சு.க வில் இருந்து.. ஐ.தே.க வரை அரசியல் செய்வதும்.. அவர்களை வைத்தே.

அதுமட்டுமல்ல.. இந்தியா.. மற்றும் மேற்குலக நாடுகளுக்கு சிறீலங்காவில் செல்வாக்குச் செலுத்த இருக்கும் ஒரே ஒரு விடயமும்.. அந்த மக்களே. அவர்களே இன்றைய நாயகர்கள். ஆனால் என்ன அவர்களின் வாழ்க்கைதான் நாயிலும் கேடான நிலையில் இருக்கிறது..!

எல்லோரும் அந்த மக்களை மீட்கிறம் போக்கிறம் என்றுவினம். ஆனால் நேற்று அந்த மக்களை விரட்டி அடித்து குண்டு வீசி.. ஓட வைத்து.. அடைத்ததும் இவர்களே என்பதை நாங்களும் மறந்திட்டம் பாருங்கோ. எவ்வளவு குறுகிய ஞாபக சக்தி எங்களுக்கு.

1. நேற்றுத்தான் இந்த மக்கள் கிளிநொச்சியில் வைத்து ஐநாவை வழிமறித்தார்கள். போகாதீர்கள் எங்களை விட்டு என்று.

2. நேற்றுத்தான் இந்த மக்கள் போர் நிறுத்ததை வலியுறுத்தி அறிவிப்புக்களை செய்தனர். ஆனால் போரை திணித்த அடித்துக்கலைத்து ஓட வைத்தனர்.

3. நேற்றுத்தான் இந்த மக்கள் சுதந்திரமாக சொந்த இடங்களில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அதைத்தவிர அவர்கள் என்ன குற்றம் செய்தனர். கிளிநொச்சியில் கூட்டம் போட்டு நின்ற சர்வதேச செய்தி அமைப்புக்களுக்கு இது தெரியாதா..??! இன்று அவர்களை அடைத்து வைத்திருப்பதை ஏன் வெளியில் காட்டத் தயங்குகின்றனர்.

எல்லாரும் அரசியல் செய்யுறாங்க.. மக்களோ அரிசிக்கு வழியின்றி.. அழுந்தி இறக்கிறார்கள். இதுதான் இன்றைய மனித நாகரிகம்...! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கால்போவோனினது கருத்துகளுடன் நான் முழுவதுமாக உடன்படுகிறேன்.

"முகாமில் இருக்கும் மக்களை இன்னும் ஒரு மாததிற்க்குள் மீள் குடியமர்த்தி அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தால் அவனை தமிழர் தலைவனாக ஏற்க முடியுமோ?"

ஈழத்தமிழ் மக்கள் தங்களுடைய தலைவராக யார் யாரை ஏற்றுக் கொண்டார்கள் என்ற வரலாற்றைப்பார்த்தால் அவர்கள் எந்தவொரு சலுகைக்காகவும் யாரையும் தலைவராக ஏற்றுக் கொண்டதில்லை என்பது தெரியவரும். அப்படி சலுகைகளுக்காக தலைவர்களாக எவரையாவது ஏற்றுக் கொண்டிருந்தால்,

செல்லையா குமாரசூரியர், அல்பிரட் துரையப்பா, கே.டப்பிள்யூ. தேவநாயகம், இராசமனோகரி புலேந்திரேன், மண்ணெண்ணை மகேஸ்வரன், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை அவர்கள் தலைவர்களாக ஏற்றிருப்பார்கள்.

வாரிசுகளைக்கூட அவர்கள் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது சந்திரகாசன், குமார் பொன்னம்பலம், நீலன் திருச்செல்வம், லக்சுமி நாகநாதன், மங்கயர்க்கரசி, காண்டிபன், பகிரதன், போன்றவர்களிலிருந்து தெரியும்.

தமது உரிமைகளுக்காக உழைப்பவர்களையே அவர்கள் தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவ்விதம் செயற்படுவதிலிருந்து தவறியவர்ளை தூக்கியெறிந்துள்ளார்கள் என்பதனை ஜீஜீ பொன்னம்பலம், அமிர்தலிங்கம் போன்றோரிலிருந்து அறியலாம்.

சுதந்திரமாக தங்கள் வாழ்விடங்களிலிருந்து இருந்தவர்களை குண்டு போட்டு துரத்தி, கொன்று, காயப்படுத்தி, அராஜகம் புரியவும் துணை நின்று விட்டு, அவர்களை வெளியே விடுவித்தால், அவர்களுக்கு தலைமைப்பதவியா தேவைப்படுகிறது?

ஐனநாயகத்துக்காக உயிரைத் துறப்பதற்கும் தயாராக இருக்கிற டக்கிளசை நோக்கி சில கேள்விகள்.

உங்களது கட்சியில் தலைமைப்பதவிக்கான தெரி்வு எத்தனை வருடத்திற்கு ஒரு முறை நடைபெறுகிறது?

கடைசியாக எப்போது நடைபெற்றது?

உங்களுக்கு போட்டியாக யாராவது நின்றார்களா?

ஆம் எனில், எத்தனை வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வென்றீர்கள்?

அப்'படி யாரும் நிற்கவில்லை என்றால், மற்றயவர்களையும் தலைப்பதவிக்கு தயார்படுத்தும் செயற்பாடு ஏதாவது உங்களிடம் உண்டா?

நீங்கள்தான் ஆயுட்காலத் தலைவர் என்றால். கட்சியில் ஏதாவது பதவியிலிருப்பவர் ஜளநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டவரா?

இவர்கள் சொல்லித்தான் முகாமில் இருக்கும் மக்களை மீளக் குடியமர்ந்தப் போவதில்லை. அவர்களை அடைத்து வைத்திருப்பதே அரசியல் செய்யத்தான். இனப்படுகொலை ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அந்த மக்கள் நல்ல அரசியல் திரும்புச் சீட்டாக மாற்றப்பட்டுள்ளனர்.

இப்போ.. த.தே.கூ வில் இருந்து முரளிதரன் வரை.. அரசியல் செய்வது.. முகாமில் அடைத்து வைத்துள்ள மக்களை வைத்தே. சு.க வில் இருந்து.. ஐ.தே.க வரை அரசியல் செய்வதும்.. அவர்களை வைத்தே.

அதுமட்டுமல்ல.. இந்தியா.. மற்றும் மேற்குலக நாடுகளுக்கு சிறீலங்காவில் செல்வாக்குச் செலுத்த இருக்கும் ஒரே ஒரு விடயமும்.. அந்த மக்களே. அவர்களே இன்றைய நாயகர்கள். ஆனால் என்ன அவர்களின் வாழ்க்கைதான் நாயிலும் கேடான நிலையில் இருக்கிறது..!

எல்லோரும் அந்த மக்களை மீட்கிறம் போக்கிறம் என்றுவினம். ஆனால் நேற்று அந்த மக்களை விரட்டி அடித்து குண்டு வீசி.. ஓட வைத்து.. அடைத்ததும் இவர்களே என்பதை நாங்களும் மறந்திட்டம் பாருங்கோ. எவ்வளவு குறுகிய ஞாபக சக்தி எங்களுக்கு.

1. நேற்றுத்தான் இந்த மக்கள் கிளிநொச்சியில் வைத்து ஐநாவை வழிமறித்தார்கள். போகாதீர்கள் எங்களை விட்டு என்று.

2. நேற்றுத்தான் இந்த மக்கள் போர் நிறுத்ததை வலியுறுத்தி அறிவிப்புக்களை செய்தனர். ஆனால் போரை திணித்த அடித்துக்கலைத்து ஓட வைத்தனர்.

3. நேற்றுத்தான் இந்த மக்கள் சுதந்திரமாக சொந்த இடங்களில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அதைத்தவிர அவர்கள் என்ன குற்றம் செய்தனர். கிளிநொச்சியில் கூட்டம் போட்டு நின்ற சர்வதேச செய்தி அமைப்புக்களுக்கு இது தெரியாதா..??! இன்று அவர்களை அடைத்து வைத்திருப்பதை ஏன் வெளியில் காட்டத் தயங்குகின்றனர்.

எல்லாரும் அரசியல் செய்யுறாங்க.. மக்களோ அரிசிக்கு வழியின்றி.. அழுந்தி இறக்கிறார்கள். இதுதான் இன்றைய மனித நாகரிகம்...! :D

அப்படி சலுகைகளுக்காக தலைவர்களாக எவரையாவது ஏற்றுக் கொண்டிருந்தால்,

செல்லையா குமாரசூரியர், அல்பிரட் துரையப்பா, கே.டப்பிள்யூ. தேவநாயகம், இராசமனோகரி புலேந்திரேன், மண்ணெண்ணை மகேஸ்வரன்

அன்று இருந்த சூழலும் இன்று உள்ள சுழலும் வித்தியாசமானவை.அன்று எம்மால் தலைவரை தெரிவு செய்யக்கூடிய நிலமையில் இருந்தோம் இன்று கைவிலங்கு இட்டநிலையில் உள்ளோம்

நான் உங்கள் தலைவன் என்று எதிரியுடன் நின்று தைரியமாக சொலுகிறான் ஜனநாயக்த்தை குழிதோன்டி புதைத்த புண்ணியவான்,இந்தநிலையில் எம்மவர்களின் விடிவு மீண்டும் இவர்கள் கையில்தானெ?என்று எண்ண தோண்றுகிறது

அண்ணோய் நெடுக்ஸ்........

யார் டக்லஸை தலைவராக்குகிறது???????? நம்ம புலம் பெயர் த்தே பூசாரிகளும், ததே ஊடகங்களும்!!!!!!!! ..... தலை முதல் அடி வரை அழிந்ததன் பின் இருக்கும் ஓரிருவரையும் போட்டி போட்டு "றோவின் கைக்கூலி". "துரோகி", ......... என்னெல்லாம் பரப்ப முடியுமோ, அவைகளையெல்லாம் போட்டி போட்டுச் சொன்னாச்சு!!! ... சனத்துக்கு துரோகம் செய்கிறது யார்?????? செய்யாதது யார்?????? எல்லாவற்றையும் குழப்பியாச்சு!!!! ... சனம் என்ன செய்கிறது!!!!????? .......

நாங்கள் புலத்தில் கஸ்டப்பட்டுக் கொடுத்ததுகளை புலத்துப் பூசாரிகள் சுருட்டுவதற்கு ...... டக்லஸும், கருணாவும் தமிழர்களின் தலைவராகத்தான் வேண்டும்!!!!!!!

அவர் சிங்கள.. இந்திய.. அமெரிக்க எஜமானர்களை வாலை ஆட்டி சுற்றி வந்து பிழைக்கிறார் என்றால்.. அவர் தின்றுவிட்டு வீசும் மிச்சங்களை தின்ன அவரைச் சுற்றியும் ஒரு கூட்டம் இருக்கிறது. அவரின் சிபார்சுக் கடிதத்தோடு வேலை பெற்றோரும் உண்டு. ஏன் அவரிடம் கடிதம் பெற்று நான் ஈபிடிபியில் இருந்து புலிகளால் தேடப்படுபவன் என்று சொல்லி அகதி அந்தஸ்துப் பெற்றோரும் உண்டு...! ஏன் மறியலில் இருந்து வந்தோரும் உண்டு. அவரே மறியலுக்கும் அனுப்பி அவரே எடுத்தும் விடுவார். அப்படியான அவர் அந்த மாதிரி ஒரு நல்ல வில்லன்..! படத்தில் அல்ல நிஜத்தில்...! :D

அண்ணை நீங்கள் சொல்லுறது அனேகத்தை ஏற்று கொள்ளலாம்... ஆனால் புலிகளாலை அங்கை பிரச்சினை எண்டு இலங்கை அமைச்சர் ஒருத்தர் கொடுத்த கடித்தத்தை பார்த்து இங்கை அரசியல் தஞ்சம் குடுக்கினம் எண்டது கொஞ்சம் அதிகம்...

இலங்கை அமைச்சர் யாருக்கும் சிபார்ச்சு செய்ய முடியாது உங்கை இவரை வைச்சு கொள்ளுங்கோ உவரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எண்டு... அப்படி எண்டால் உவரின் மட்டும் தான் உயிர் மற்றைவையின் என்ன .... .. இது வோ...??

கொழும்பில் லச்சக்கணக்கானவை புலிகளிட்ட இருந்து தப்பி வந்து நலமாக வாழுகிறார்கள் நீங்களும் அங்கை நலமாக வாழலாம் எண்று எனக்கு தெரிந்த ஒரு மாட்டு குழு மாணிக்கம் ஒண்றுக்கு பரித்தானியாவிலை பதில் கொடுத்து இப்ப கொழும்பிலை வாழ வைத்து இருக்கிறார்கள்..

இலங்கையிலை இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அந்த நாட்டு அரசின் கடமை... உங்களுக்கு இலங்கை அரசினால் பாதுகாப்பு இல்லை எண்றால் நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்க முடியும்.. இதுதான் உண்மை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நீங்கள் சொல்லுறது அனேகத்தை ஏற்று கொள்ளலாம்... ஆனால் புலிகளாலை அங்கை பிரச்சினை எண்டு இலங்கை அமைச்சர் ஒருத்தர் கொடுத்த கடித்தத்தை பார்த்து இங்கை அரசியல் தஞ்சம் குடுக்கினம் எண்டது கொஞ்சம் அதிகம்...

இலங்கை அமைச்சர் யாருக்கும் சிபார்ச்சு செய்ய முடியாது உங்கை இவரை வைச்சு கொள்ளுங்கோ உவரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எண்டு... அப்படி எண்டால் உவரின் மட்டும் தான் உயிர் மற்றைவையின் என்ன .... .. இது வோ...??

கொழும்பில் லச்சக்கணக்கானவை புலிகளிட்ட இருந்து தப்பி வந்து நலமாக வாழுகிறார்கள் நீங்களும் அங்கை நலமாக வாழலாம் எண்று எனக்கு தெரிந்த ஒரு மாட்டு குழு மாணிக்கம் ஒண்றுக்கு பதில் கொடுத்து இப்ப கொழும்பிலை வாழ வைத்து இருக்கிறார்கள்..

இலங்கையிலை இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அந்த நாட்டு அரசின் கடமை... உங்களுக்கு இலங்கை அரசினால் பாதுகாப்பு இல்லை எண்றால் நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்க முடியும்.. இதுதான் உண்மை...

சில வருடங்களுக்கு முன்னர் ஒருவர் வந்தார். அவரிடம் ஈபிடிபி அடையாள அட்டையும் அவர் ஈபிடிபி உறுப்பினர் என்று டக்கிள்ஸ் தேவானந்தா உறுதிப்படுத்திய கடிதமும் வைத்திருந்தார். தான் ஈபிடிபியை விட்டு ஓடிவந்துவிட்டதால் மீண்டும் அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள் போக முடியாது என்றும் புலிகளுக்கு எதிராக செயற்பட்டதால் புலிகள் தன்னைக் கொல்ல சந்தர்ப்பம் பார்த்து திரிவதாகவும் சொல்லி அசைலம் அடிக்க வந்திருந்தார். கிடைத்ததோ இல்லையோ தெரியாது. இப்படி சட்டத்தரணிக்கு சொல்லிக் கொண்டிருந்தார்..! :D

அதாவது EPDP யில் இருந்து தப்பி வந்ததால் அவரை அரசும் EPDP யும் தேடுகிறார்கள் (புலி ஆதரவளர் எனும் சந்தேகத்தில்) பிடி பட்டால் என்னை கொலை செய்து விடுவார்கள் எண்றும்.. நான் EPDP யில் இருந்ததால் புலிகளும் என்னை தேடுகிறார்கள் எண்றும் சொல்லி இருப்பார்....

அவர் புலிகள் பற்றி சொன்னது தேவை அற்ற மேலதிக இணைப்பு....

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.