Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு பிடித்த பாடல்கள்: நிழலி

Featured Replies

இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனசு அப்படியே லயித்து உள்ளே சென்று உள்மன வீதி எங்கும் பயணிக்கும்.

பாடல்: ஒரு நாளில் வாழ்க்கை என்ற..

படம்:- புதுப்பேட்டை

பாடல்:- நா. முத்துக்குமார்

இசை;- யுவன் ஷங்கர் ராஜா

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது

மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது

எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்

அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்

ஹோஹோஹோ....ஓ....

கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு

ஒரு வாசல் தேடியே விளையாடு ஹோஹோஹோ....ஓ....

கண் திறந்து பார்த்தால் பல கூத்து

கண் மூடி கொண்டால்?

போர்களத்தில் பிறந்து விட்டோம்

வந்தவை போனவை வருத்தம் இல்லை

காட்டினிலே வாழ்கின்றோம்

முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை

இருட்டுனிலே நீ நடகயிலே

உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்

நீ மட்டும் தான் இந்த உலகத்திலே

உனக்கு துணை என்று விளங்கிவிடும்

தீயோடு போகும் வரையில்

தீராது இந்த தனிமை....

கரை வரும் நேரம் பார்த்து

கப்பலில் காத்திருப்போம்

எரிமலை வந்தால் கூட

ஏறி நின்று போர் தொடுப்போம்...ஓஹோஹோ....

அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே

இங்கும் எதுவும் நிலை இல்லை கரைகிரதே

மனம் வெட்ட வெளியிலே அலைகிரதே

அந்த கடவுளை கண்டால்?...ஒஹோஹோ....

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது

மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது

எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்

அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்

அது எனக்கு இது உனக்கு

இதயங்கள் போடும் தனி கணக்கு

அவள் எனக்கு இவள் உனக்கு

உடல்களும் போடும் புதிர் கணக்கு

உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை

படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்

நல்லவன் யார் அட கெட்டவன் யார்

கடைசியிலே அவன் முடிவு செய்வான்

பழி போடு உலகம் இங்கே...

பலி ஆன உயிர்கள் எங்கே..

உலகத்தின் ஓரம் நின்று

அத்தனையும் பார்த்திருப்போம்

நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்

பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம்

பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம்

கதை முடியும் போக்கில் அதை முடித்துகொள்வோம்

மறு பிறவி வேண்டுமா?

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது

மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது

எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்

அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்

கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு

ஒரு வாசல் தேடியே விளையாடு

கண் திறந்து பார்த்தால் பல கூத்து

கண் மூடி கொண்டால்?

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

உங்கள் யாருக்காவது பிடித்துள்ளதா?

Edited by நிழலி

பாடல் நல்லாய் இருக்கிது. country musicஇண்ட சாயல் தெரியுது.

கிட்டத்தட்ட ஈழத்தமிழருக்கு எண்டு மனதுக்க வச்சு எழுதப்பட்ட பாடல்போல இருக்கிதே..?

தொடர்ந்து நீங்கள் கேட்டு மகிந்த பாடலை பகிர்ந்துகொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்களத்தில் பிறந்து விட்டோம்

வந்தவை போனவை வருத்தம் இல்லை

காட்டினிலே வாழ்கின்றோம்

முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை

இருட்டுனிலே நீ நடகயிலே

உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்

நீ மட்டும் தான் இந்த உலகத்திலே

உனக்கு துணை என்று விளங்கிவிடும்

எனக்கும் பிடித்த பாடல் நிழலி. யுவன் தான் இப்பாடலை பாடியும் இருக்கிறார் என நினைக்கிறேன். கருத்தாளம் மிக்க வரிகள். பாடலின் இடையில் வரும் வயலின் இசை பாடலை இன்னும் மெருகூட்டுகிறது. நன்றி இணைப்புக்கு. பாடல் வரிகளை இணைத்தமைக்கும் நன்றி.

  • தொடங்கியவர்

பாடல் நல்லாய் இருக்கிது. country musicஇண்ட சாயல் தெரியுது.

கிட்டத்தட்ட ஈழத்தமிழருக்கு எண்டு மனதுக்க வச்சு எழுதப்பட்ட பாடல்போல இருக்கிதே..?

தொடர்ந்து நீங்கள் கேட்டு மகிந்த பாடலை பகிர்ந்துகொள்ளுங்கள்.

என்னை கொஞ்சம் அரைப் பைத்தியம் என்று பாடல் விடயங்களில் பலர் சொல்வதுண்டு.... இன்னுமொரு பாடல்...அநேகமாக கேட்டிருக்க மாட்டியள் என நினைக்கின்றேன்

இந்தப் பாடலை கேட்டவர் அறிந்தவர் மிகச் சிலர் என்று நினைக்கின்றேன்...ஒரு விபத்தாக இது என்னை அடைந்தது,..காலைப் பனி எனும் படத்தில் இடம்பெற்ற பாடல் இது...பாடலை youtube இல் கேட்கவும்...இதன் MP3 இனை google பண்ணினால் கிடைக்கும்

(அல்லது என்னை தொடர்பு கொள்ளவும்) . சுலாபா எனும் சாத்திர சங்கீத பாடகியால் பாடப்பட்ட உன்னத பாடல். என்னை ஒரு Nostalgia moodஇற்கு கொண்டு செல்லும் பாடல்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

கண்களை மூடி கேளுங்கள்...ஈற்றில் என்ன மனநிலையை அடைந்தீர்கள்?

தரவிறக்கம் செய்ய

Edited by நிழலி

பைத்தியம் கேட்கிற பாட்டு மாதிரி தெரிய இல்லை. பாடல் நல்லாய் இருக்கிது. எனக்கும் பிடிச்சு இருக்கிது. நீங்கள் சொன்ன அந்த மனவியாதி மனநிலை - ஓர் மெல்லிய மயக்கம் ஏற்படுகிது எண்டுறது உண்மைதான். நான் நினைக்கிறன்.. அந்தக் காணொளி அப்பிடி இருக்கிறதால இப்பிடி வருகிதுபோல. பாடலை வெறும் ஒலியில கேட்கும்போது அப்பிடி உங்களுக்கு வருமோ மனநிலை..?

நான் பாடல்களை எழுந்தமானமாகத்தான் கேட்கிறது. இதனால பெரும்பாலும் அனேகமாக எல்லாம் எனக்கு புதிய பாடல்களாகவே இருக்கும். ஒரு முறை கேட்கேக்க திடீரெண்டு பிடிச்சுப்போட்டுது எண்டால் பிறகு அண்டைக்கு முழுதும் அதேபாடலை பலதடவைகள் திருப்பித் திருப்பி கேட்டுக்கொண்டு இருப்பன். நானும் ஒரு வித்தியாசமான பாடல் பைத்தியம்தான். உதாரணமாக கடந்த இரண்டு நாட்களில் இந்தப்பாடலை இதுவரை சுமார் முப்பது தடவைகள் கேட்டு இருப்பன்: http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=536483

தொடர்ந்து உங்கள் இசைத்தெரிவுகளை பகிர்ந்துகொள்ளுங்கோ. உங்கட ருசி எனக்கும் பிடிச்சு இருக்கிது. எண்ட ருசி உங்களுக்கு பிடிக்குமா எண்டு தெரிய இல்லை நிழலி.

Edited by மாப்பிள்ளை

  • தொடங்கியவர்

எனக்கும் பிடித்த பாடல் நிழலி. யுவன் தான் இப்பாடலை பாடியும் இருக்கிறார் என நினைக்கிறேன். கருத்தாளம் மிக்க வரிகள். பாடலின் இடையில் வரும் வயலின் இசை பாடலை இன்னும் மெருகூட்டுகிறது. நன்றி இணைப்புக்கு. பாடல் வரிகளை இணைத்தமைக்கும் நன்றி.

ஆம் நுணா....அந்த வயலின் இசைதான் இந்தப் பாடலின் ஆழத்தினை நெஞ்சுக்குள் விதைத்து செல்கின்றது. மிக நுட்பமான இசைக் கோர்வை. யுவனால் இசையமைத்து பாடப்பட்ட பாடல்.

  • தொடங்கியவர்

பைத்தியம் கேட்கிற பாட்டு மாதிரி தெரிய இல்லை. பாடல் நல்லாய் இருக்கிது. எனக்கும் பிடிச்சு இருக்கிது. நீங்கள் சொன்ன அந்த மனவியாதி மனநிலை - ஓர் மெல்லிய மயக்கம் ஏற்படுகிது எண்டுறது உண்மைதான். நான் நினைக்கிறன்.. அந்தக் காணொளி அப்பிடி இருக்கிறதால இப்பிடி வருகிதுபோல. பாடலை வெறும் ஒலியில கேட்கும்போது அப்பிடி உங்களுக்கு வருமோ மனநிலை..?

இந்தப் பாடலின் வீடியோவில் கேட்பதை விட வெறும் ஒலிப்பதிவை மட்டும் கேட்கையின் இன்னும் ஆழமாக இருக்கும்.கீழே உள்ள இணைப்பை அழுத்து தரவிறக்கம் செய்யுங்கள்

தரவிறக்கம் செய்ய

  • தொடங்கியவர்

எனக்கு பிடித்த இன்னொரு பாடல். தமிழ் சினிமா பாடல்களில் காதலையும் தாயன்பையும் சொல்லாத பாடல்கள் வரிசையில் இதுவும் ஒன்று. மிக ஆழமாக மனசுக்குள் இறங்கிச் செல்லும்.

இதன் ஒளிப்படத்தில் பார்ப்பதையும் விட ஒலிவடிவில் கேட்பதுதான் நல்லம். ஓளிப்படத்தில் உரையாடலும் இடம்பெற்று பாடலை மாற்றுகின்றது

பாடல்: பிறையே பிறையே

படம்: பிதாமகன்

பாடியது: மது பாலகிருஷ்ணன்

இசை: இளையராஜா

பிறையே பிறையே வளரும் பிறையே

இது நல் வரவே

மலரே மலரே மலர்ந்தாய் மலரே

உனக்கேன் தளர்வே

பயணம் எவர்க்கும் இங்கு முடியும்

இங்கு பிறந்தாயோ

உதயம் உனக்கு இங்கு தொடக்கம்

விழிகள் திறந்தாயோ

(பிறையே பிறையே ...)

தன்னந் தனியனாக மண்ணில் வர ஏங்கினாயோ

என்ன துணிச்சலோடு இந்த வாரம் வாங்கினாயோ

சோலையில் நின்ற போதிலும் மாலையே என்ற போதிலும்

பூவெல்லாம் என்றும் பூக்களே

இங்கு மாறுமா அதன் பெயர்களே

குடிசை என்ன செய்யும் , கோட்டை என்ன செய்யும்

உன்னை மாற்றுமா ..........

(பிறையே பிறையே ...)

ஊர்வலங்கள் எல்லாம் வரும் உன்னை நோக்கி தானே

ஊரும் உறவும் ஏது எல்லாம் உனக்கு ஒன்று தானே

பணத்திலே தினம் புரண்டவர்

பதவியில் தலை கணத்தவர்

புகழிலே எல்லை போனவர்

நிலை உயர்ந்தவர் அதில் தாழ்ந்தவர்

இந்த பேதம் எல்லாம் வெந்து போக கண்டு

தெளிந்த மனிதன் நீ ........

(பிறையே பிறையே ...)

தரவிறக்கம் செய்ய

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

">

  • தொடங்கியவர்

நான் இந்த கொம்பியூட்டரோடை அடிக்கடி மினைக்கிடுறதாலை இவள் பாவிக்கு ஒரு சின்னகரவுப்புத்தி முளைச்சிட்டுது???????

ஐசே,கலோ போடாக்குறயாய் என்னைப்பாத்து "இன்ரநெற் வழிய ஆரோடையும் கள்ளத்தொடர்பு இருக்கோ" எண்டு ஒரு புடுங்குப்பாடு வேறை!

இந்த சிறப்பிலை நானும் நீங்கள் சொன்ன மாதிரி கண்ணை மூடிக்கொண்டு பாட்டு கேக்க ....

பாட்டு முடியக்கிடையிலை அம்புலன்ஸ் வந்து வீட்டு வாசல்லை நிக்கும் :icon_mrgreen:

உன்கள் வீட்டிலும் அதே கதைதானா...நான் நினைச்சன் எனக்கு மட்டும்தானென்று :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிறப்பிலை நானும் நீங்கள் சொன்ன மாதிரி கண்ணை மூடிக்கொண்டு பாட்டு கேக்க ....

பாட்டு முடியக்கிடையிலை அம்புலன்ஸ் வந்து வீட்டு வாசல்லை நிக்கும் :(

:(

உன்கள் வீட்டிலும் அதே கதைதானா...நான் நினைச்சன் எனக்கு மட்டும்தானென்று :D

நெஞ்சில பால்வாத்தமாதிரியிருக்குமே இப்ப :lol:

  • தொடங்கியவர்

படம்: கண்ணுக்குள் நிலவு

பாட்டு: இரவு பகலைத் தேடும்

எனக்கு மிக விருப்பமான பாடல் ஒன்று இது

வித்தியாசமான விருப்பத் தெரிவாய் இருக்கிது நிழலி. உதில உவர் விசய் லைசன்ஸ் எடுக்கிறதுக்கு road testக்கு ஓடிக்காட்டிறமாதிரி மோட்டர் சைக்கள் ஓட்டிக்காட்டிறதுதான் எங்கண்டை பொறுமையை சோதிக்கிறதோட மட்டும் இல்லாமல் கடுப்பையும் ஏற்படுத்துது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தியாசமான விருப்பத் தெரிவாய் இருக்கிது நிழலி. உதில உவர் விசய் லைசன்ஸ் எடுக்கிறதுக்கு road testக்கு ஓடிக்காட்டிறமாதிரி மோட்டர் சைக்கள் ஓட்டிக்காட்டிறதுதான் எங்கண்டை பொறுமையை சோதிக்கிறதோட மட்டும் இல்லாமல் கடுப்பையும் ஏற்படுத்துது.

:icon_mrgreen:

  • தொடங்கியவர்

உயிரை ஊடுருவும் இன்னொரு பாடல்...பழையது ஆனால் என்றும் மனசை பிழிவது

வரிகள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள் (2)

துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்

...............கனவு காணும் ......................

பிறக்கின்ற போதே...

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி

இருகின்றதென்பது மெய் தானே

ஆசைகள் என்ன.....

ஆசைகள் என்ன ஆணவம் என்ன

உறவுகள் என்பதும் பொய் தானே

உடம்பு என்பது...

உடம்பு என்பது உண்மையில் என்ன

கனவுகள் வாங்கும் பை தானே

...............கனவு காணும் ......................

காலங்கள் மாறும்....

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்

வாலிபம் என்பது பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி...

தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி

போனது போக எது மீதம்

பேதை மனிதனே...

பேதை மனிதனே கடமை இன்றே

செய்வதில் தானே ஆனந்தம்..

Edited by நிழலி

  • தொடங்கியவர்

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?

நான் கேட்டு தாய்தந்தை படைதானா

இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி

கொன்றால் பாவம் தின்ரால் போச்சு இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு

இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்

உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்

கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி

காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி

கொண்டதென்ன கொடுப்பதென்ன

இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்

அது தெரியாமல் போனாலே வேதாந்தம்

மன்னைத் தோண்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி

என்னை தோண்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி

உன்மை என்ன பொய்மை என்ன

இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி உங்கள் தெரிவு பாடல்கள் அழகு.

தெரிவு செய்யும் பாடல்கள் ஆரவாரம் இல்லாத அமைதிப் பாடல் சோகம் தொணித்து ஒலிக்கிறது.

உயிரை ஊடுருவும் இன்னொரு பாடல்...பழையது ஆனால் என்றும் மனசை பிழிவது

வரிகள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள் (2)

துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்

...............கனவு காணும் ......................

பிறக்கின்ற போதே...

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி

இருகின்றதென்பது மெய் தானே

ஆசைகள் என்ன.....

ஆசைகள் என்ன ஆணவம் என்ன

உறவுகள் என்பதும் பொய் தானே

உடம்பு என்பது...

உடம்பு என்பது உண்மையில் என்ன

கனவுகள் வாங்கும் பை தானே

...............கனவு காணும் ......................

காலங்கள் மாறும்....

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்

வாலிபம் என்பது பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி...

தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி

போனது போக எது மீதம்

பேதை மனிதனே...

பேதை மனிதனே கடமை இன்றே

செய்வதில் தானே ஆனந்தம்..

இந்த பாடல் எனக்கும் பிடித்த பாடல் நன்றி நிழலி அண்ணா உங்கள் இணைப்பிர்க்கு

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

எப்பவும் தமிழ் சினிமா பாடல்களில், இசைக்கும் பாட்டு காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இசை அற்புதமாக இருக்கும் ஆனால் பாட்டு எடுக்கப்பட்ட விதம் மோசமாக இருக்கும். அந்த வரிசையில் இந்தப் பாடலும். இதன் MP3 வடிவம் வேண்டுமெனில் தெரிவிக்கவும்

பாடல்: தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்

படம்: உல்லாச பறவைகள்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

பாடல் வரிகள்...

ம்ம்ம்... ஆஆஆ....

ம்ம்ம்..... ஆஆஆ....

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்

கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்

ம்ம்ம்..... ஆஆஆ....

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்

செந்தாழம் பூவைக்கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு

செந்தூரப் பொட்டும் வைத்து தேனாடும் கரையில் நின்றேன்

பாரட்ட வா.... சீராட்ட வா...

நீ நீந்த வா... என்னோடு...

மோகம் தீருமே....

ம்ம்ம்... ஆஆஆ....

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்

கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்

தந்தனன தந்தனன தந்தனன தந்தனன ன.. தந்த ன.. தந்த ன.. தந்தனன தந்தனன தந்தனன ன..

தந்தனன தந்தனன தந்தனன தந்தனன ன..

தழுவாத தேகம் ஒன்று

தணியாத மோகம் கொண்டு

தாலாட்ட தென்றல் உண்டு

தாலாத ஆசை உண்டு

பூமஞ்சமும் தேண் கிண்ணமும்

நீ தேடி வா... ஒரே ராகம்...

பாடி ஆடுவோம் வா

ம்ம்ம்... ஆஆஆ....

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்

கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்

ம்ம்ம்... ஆஆஆ.... ம்ம்ம்..... ஆஆஆ....

Edited by நிழலி

  • தொடங்கியவர்

படம்: சிறை

பாடல்: நான் பாடிக்கொண்டிருப்பேன்

நிலா வீசும் நேரம் உண்டு

அமாவாசை நாளும் உண்டு

ஒரே வானில் இரண்டும் என்றே

பார்க்கவில்லையா.........

யார் நெஞ்சில் காமம் இல்லை

யார் நெஞ்சில் கோபம் இல்லை

மகாத்மாக்கள் என்றே

இன்று யாரும் இல்லையே

ஒரே நெஞ்சம் பாவம் செய்யும்

அதே நெஞ்சம் தர்மம் செய்யும்

எதை எந்த நேரம் செய்யும்

என்பதில்லையே

சிறு வயதிலேயே அதிர வைத்த சினிமா என்றால் அது சிறைதான்....அதுவும் இந்தப் பாடல்..பல கதவுகளை திறந்து வைத்த பாடல் இது¸...

  • தொடங்கியவர்

பாடல்: பூவே செம்பூவே

படம்: சொல்லத் துடிக்குது மனசு

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

வாசல் என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

நிழல் போல நானும்

நடை போட நீயும்

தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்

கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்

மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது

நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே

நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே

என்னாளும் சங்கீதம் சந்தோஷமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே )

உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே

பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே

உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை

விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை

நான் செய்த பாவம் என்னோடு போகும்

நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்

இந்நாளும் எந்நாளும் உல்லாசமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

  • 2 weeks later...

எனக்கு பிடித்த ஒரு அருமையான பாடழல தந்த நிழலிக்கு நன்றிகள்!!!!

அடிக்கடி நான் முணுமுணுக்கும் பாடல்................

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்.............

இந்தப்பாட்டின் அத்தனை வரிகளும் உண்மையின் வடிவங்களே!!!!!!

பாடல் வரிகளோடு இருந்ததால் சேர்ந்து பாடியதிலும் அடிக்கடி அதை போட்டு கேட்டதிலும்

உண்டான ஆனந்தம் இருக்கே அது சொல்லில் வடிக்க முடியவில்லை...............

மீண்டும் நன்றிகள்

  • 1 month later...
  • தொடங்கியவர்

என்றும் என் கண்ணீரை வரவழைக்கும் உணர்வு பூர்வமான பாடல்

பாடல்: எங்கே எந்தன் வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

காதல் வந்த நாளிலே வானில் வந்து பார்த்ததே

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்

உன்னால் தானய்யா.. உன்னால் தானைய்யா

இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்

உன்னால் தானைய்யா.. உன்னால் தானைய்யா

எனக்கென இருந்தது ஒரு மனசு

அதை உனக்கென கொடுத்தது சுகம் எனக்கு

எனக்கென இருப்பது ஒரு உசுரு

அது உனக்கென தருவது வரம் எனக்கு

நீ மறந்தால் என்ன மறுத்தான் என்ன

நீதான் எந்தன் ஒளிவிளக்கு

என்றும் நீதான் எந்தன் ஒளிவிளக்கு

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்

வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்

தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்

சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்

உருவத்தை காட்டிடும் கண்ணாடி

என் உள்ளத்தை காட்டிட கூடாதா?

பூவிடம் கதை சொல்லும் பூங்காற்று

என் காதலை உன்னிடம் சொல்லாதோ

உன்னை சேறும் அந்த திருநாள்

வெகு விரைவில் வந்து சேராதா?

என் காதல் கரை ஏறாதா?

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

காதல் வந்த நாளிலே வானில் வந்து பார்த்ததே

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா...

படம்: வருஷமெல்லாம் வசந்தம்

இசை: சிற்பி

பாடியவர்: சுஜாதா / உன்னிமேனன்

Edited by நிழலி

  • தொடங்கியவர்

மிக மிக பிடித்த ரஹுமான் பாடல்

http://www.youtube.com/watch?v=DTZjz4b3Fjc

இந்தப் பாடல் அநேகமாக எல்லா பெண்களுக்கும் (தமிழ் தெரிந்த) பிடிக்கும்.................

"அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகும் முன்னமே அன்பே அழைத்தேன்...." ஒரு பெண்ணின் காமம் பற்றிச் சொல்லும் தமிழ் பாடல்கள் மிகக் குறைவு....இதில் சொல்லியுள்ளார்கள்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

என்னை கொஞ்சம் அரைப் பைத்தியம் என்று பாடல் விடயங்களில் பலர் சொல்வதுண்டு.... இன்னுமொரு பாடல்...அநேகமாக கேட்டிருக்க மாட்டியள் என நினைக்கின்றேன்

இந்தப் பாடலை கேட்டவர் அறிந்தவர் மிகச் சிலர் என்று நினைக்கின்றேன்...ஒரு விபத்தாக இது என்னை அடைந்தது,..காலைப் பனி எனும் படத்தில் இடம்பெற்ற பாடல் இது...பாடலை youtube இல் கேட்கவும்...இதன் MP3 இனை google பண்ணினால் கிடைக்கும்

(அல்லது என்னை தொடர்பு கொள்ளவும்) . சுலாபா எனும் சாத்திர சங்கீத பாடகியால் பாடப்பட்ட உன்னத பாடல். என்னை ஒரு Nostalgia moodஇற்கு கொண்டு செல்லும் பாடல்

<object width="480" height="295"><param name="movie" value="

name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="
type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"></embed></object>

கண்களை மூடி கேளுங்கள்...ஈற்றில் என்ன மனநிலையை அடைந்தீர்கள்?

தரவிறக்கம் செய்ய

நிழலி, இந்தப் பாடலை கேட்கும் போது .....,

மனது எங்கோ ...... போகின்றது.

இதை ஒப்பிட்ட பாடல் ஒன்றும் எனது மனதை பாதித்தது.

அதன் ஆரம்பம் "ஆடு மேயுதே..... ஆடு மேயுதே ....." என்னும் பாடல்.

இயக்குனர் பாரதிராஜாவின் படத்தில் வரும் பாடல் என நினைக்கின்றேன்.

உங்களிடம் இருந்தால் இணைத்து விடுவீர்களா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.