Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவறவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ : தமிழருவி மணியன்

Featured Replies

கொலைக்கு கொலைதான் தீர்வா? நீங்கள் சொன்ன அனைத்தும் நமக்கும தெரிந்தவைதான்! ஆனால் அதற்கு முன் கொஞ்சம் போய் மைக்கலை சுட்டது தெரியுயேம? பிறகு சுந்தரத்தை சுட்டது யார்? அதனை தொடரந்து மற்ற இயக்கங்களும் அந்த வழியை பின் பற்றினார்கள்.

மாற்று இயக்கங்கள் தாக்கின நீங்கள் தாக்கினீர்கள்! ஆனால் சும்மா இருந்த போராளிகளை போட்டது ஏன்?

புதியதோர் உலகம் கோவிந்தன், நோபேட் புளட்டின் உட்கொலைகளை எதிர்த்து வெளியேறியவர்கள் அந்த இயக்கத்தின் எச்ச சொச்ச உறுப்பினர்கள் கொலை.

புலிகள் மீது எந்த வலிந்த தாக்குதலும் செய்யாத என்.எல்.எப்.ரி இயக்கம் அதன் தலைமையும் போராளிகளும்.

புலிகள் மீது எந்த வலிந்த தாக்குதலும் செய்யாத ஈபீ.ஆர்எல்எப் போராளிகள் இந்திய இராணுவத்திற்கு முன்.

பல்கலைக்கழக விரிவுரையாளர் ராஜினி திரணகம (இவர் சீலனுக்கு மருத்துவம் செய்தவர்).

நீலன் திருச்செல்வம் (இலங்கை வரலாற்றில் மிகவும் தாமான ஒரு தீர்வு திட்டதை தயாரித்து சிங்கள ஆட்சியாளர்களை இணைய வைத்தது இவர் குற்றம்).

புலிகளிடம் சரணடைந்த ஈபிஆர்எல்எப் போராளிகள் - கந்தன் கருணை படுகொலை! (இதுவும் இந்திய இராணுவ காலத்திற்கு முன்)

அது சரி ! இவ்வளவு கதைக்கிறியள் கடைசியில் என்ன நடந்தது? அல்பிரட் துரையப்பாவை துரோகி என்று சுட்டீர்கள் இன்று துரையப்பா அரங்கு யாழில் தொடரந்தும் மின்னுகிறது! ஆனால் போரளிகளின் ஞாபகார்த்த சின்னங்கள் எதுவுமே இன்று அங்கு இல்லை! இது ஏன்?

விடுதலையை வாங்கி மக்களுக்கு வாங்கி தர தேவையில்லை மாறாக மக்களை விடுதலைப் போராட்டத்திற்கு உள்வாங்க சரியான அரசியல் செய்திருக்க வேண்டும்! அதை செய்யாதது முதல் தவறு! அடுத்தது இரத்தம் படிந்த கைகளுடன் அடுத்தடுத்து செய்த கொலைகள்! இவை விடுதலையை பெற்று தாராது, விடுதலையை பெறவும் விடாது!

செய்ய முனைந்த பல இயக்கங்களை கூண்டோடு அழித்து விட்டு மற்றவர்களை குறை சொல்வதை முதலில் நிறுத்துங்கள். உங்களைப் பற்றிய ஒரு சுத்தமான சுய விமர்சனத்தை செய்யுங்கள்.

நான் மேல சொன்ன கொலைகள் ஒரு துளி மட்டுமே!

தம்பி பொண்டு நோட் நோட் செவிண் போராட்டம் புடலங்காய் இவற்றில் அக்கறையில்லை என்றால் எதுக்குக் கருத்தெழுதுகிறீர் தூரத்த்கில் இருந்து வேடிக்கை பார்க்கவேண்டியதுதானே. மாற்றியக்கமும் மயிரும் இவர்கள் தம்மை களத்தில் இருந்து கலைத்து விட்டார்கள் என இறுதிவரை துரோகத்தை மாத்திரமே ஆயுதமாகக் கையிலெடுத்து காட்டிக்கொடுப்புகளில் ஈடுபட்டு இப்போதும் யார் முதலில் சிங்களவன் காலை நன்றாக நக்குவது எனப் போட்டிபோட்டு தமிழின அழிப்பினில் முன்ணணியில் நிற்கிறார்கள். அவர்களுக்குப் போய் வக்காளத்துவாங்கிக்கொண்டு இங்க கனபேர் வந்திட்டினம். இப்பொ புலி அழிந்துபோய்விட்டது களம் காலியாக இருக்கு போங்கோவன், போய் போராட்டத்தைத் தொடங்குங்கோவன் அரசியல் செய்யுங்கோவன் எதுக்கு மைச் செலவும் பேபர்ச் செலவும் இல்லாமல் இணையங்களில் எழுதி தமிழர் உரிமைகளைத் திரும்பிப்பெற நினைக்கிறியள். இனிமேல் உங்களிக்கு அங்கு ஆபத்தில்லை போங்கோவன். இங்க கருத்தெழுதுபவர்கள் ஒன்றை மட்டும் விளங்கி கொள்ளவும் தற்போது போராட்ட களம் காலியாகக் கிடக்குது நீங்கள் நினைக்கும் போராட்ட வடிவத்தினை புலத்தினில் போய் முயற்சி செய்யுங்கோ.உங்களது போராட்ட முயற்சியினை புறந்தள்ளிய பிரபாகரன் இப்போது இவ்வுலகில் இல்லை பயப்பிடாமல் போங்கோ போய் ஒரு முடிவு காணுங்கோ.

நீங்கள் போராடும் சக்திகள் அனைத்தையும் அழித்து ஒளித்து விட்டு இப்போய் போராடு என்றால் மயிரை வைத்தே போராடிறது! எல்லாம் அவர் பாப்பார் எண்டு சொல்லி எலலாரையும் கலைச்சுப் போட்டு அவர் முள்ளிவாய்காலிலை மல்லாந்து போனார்! 35வருசம் சனம் பட்டது போதாது இனியும் பட அந்த சனம் தயார் இல்லை!

  • Replies 127
  • Views 9.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொலைக்கு கொலைதான் தீர்வா

இல்லை

இன்னுமென்று உள்ளது

காலில் விழுந்து நக்கிப்பிழைப்பது...

அவரவர் தனக்கு ஏலுமான வழிகளை தெரிவு செய்யவேண்டியதுதான்...............

பிரபாகரனுக்கு முதலாவது வழிதான் சரி என்று பட்டது

எனக்கும்தான்

இப்போ

புலி அழிந்துபோய்விட்டது களம் காலியாக இருக்கு போங்கோவன் போய் போராட்டத்தைத் தொடங்குங்கோவன் அரசியல் செய்யுங்கோவன் எதுக்கு மைச் செலவும் பேபர்ச் செலவும் இல்லாமல் இணையங்களில் எழுதி தமிழர் உரிமைகளைத் திரும்பிப்பெற நினைக்கிறியள். இனிமேல் உங்களிக்கு அங்கு ஆபத்தில்லை போங்கோவன். இங்க கருத்தெழுதுபவர்கள் ஒன்றை மட்டும் விளங்கி கொள்ளவும் தற்போது போராட்ட களம் காலியாகக் கிடக்குது நீங்கள் நினைக்கும் போராட்ட வடிவத்தினை புலத்தினில் போய் முயற்சி செய்யுங்கோ.உங்களது போராட்ட முயற்சியினை புறந்தள்ளிய பிரபாகரன் இப்போது இவ்வுலகில் இல்லை பயப்பிடாமல் போங்கோ போய் ஒரு முடிவு காணுங்கோ.

திருப்பி திருப்பி எத்தனை தரம் சொன்னாலும் நீங்கள் அசைகிற மாதிரி தெரியல.

முடியாது உங்களால்

ஒத்துக்கொண்டு

கைகோப்போம் வாருங்கள்

முதலில் யாழ் களத்தில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாற்று இயக்கத்தை ஏன் அழிச்சனீங்கள் என்று பொன்ட்007 என்டது கேட்டிருக்கு.ஒரே இயக்கத்துக்குள்ளேயே கருத்து வேறுபாடான

வடமராச்சி,கல்வியங்காடு வேறுபாடுகளைக்கூட வன்முறைமூலமே தீர்த்து புகழ் பெற்ற சிறீசபாரத்தினத்தை அதே முறையில்தான்

விடுதலைப்புலிகளும் கையாண்டார்கள்.

யாழ் பெரியாஸ்பத்திரியில் கதைக்க கூப்பிட்டு தாஸையும் தோழர்களையும் சுட்டுக் கொன்று ருசிகண்ட சிறீரெலோ கட்டப்பராய்முகாமுக்கு

லிங்கத்தை கதைக்க கூப்பிட்டு சுட்டபோது அதை எப்பிடி கையாள்வது.அடித்தால் திருப்பி மோசமாக அடிப்போம் என்று தெளிவான ஒரு

செய்தியாகவே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.அந்த நடவடிக்கையின்போது செய்யப்பட்ட சில கடும்செயல்களை கேட்டும் பார்த்தும்

அறிந்தும் இருந்தபடியால்தான் மற்ற இயக்கங்களின் மீதான நடவடிக்கையின்போது ஒலிபரப்பியில் அறிவிப்புக் கொடுத்தவுடனும்

சொன்னவுடனும் பலர் ஓடி ஐரோப்பாவுக்கு வந்ததும் பாரதமாதாவிடமே மீண்டும் ஓடியதும் நடந்தது.

அப்போது செய்தது எதையும் தவறென்று நாம் மனதளவில்தன்னும் நினைக்க கூடிய விதத்தில் அப்போது அங்கு எல்லா சமூகவிரோத

செயல்களிலும் ஈடுபட்டு இங்கு ஓடிவந்திருக்கும் பலரின் சொல்லும் செயலும் இல்லை.

இன்னுமொரு முறை அத்தகைய நிலை ஏற்பட்டால் அப்போது செய்ததையே அல்லது அதை விட மோசமாக செய்யவே விரும்புவேன்.

எர்னஸ்டி சே குவேரா என்ற புரட்சியாளனின் வரலாற்றை பார்த்தால் தெரியும் அவர் புரட்சிக்கு எதிரானவர்களுடன் எத்தகைய

நடவடிக்கைகளை கைக்கொண்டார் என்றும் அதுபற்றி பிடல் காஸ்ரோவுடன் நீண்ட விவாதங்களை நடாத்தினார் என்றும்..

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது செய்தது எதையும் தவறென்று நாம் மனதளவில்தன்னும் நினைக்க கூடிய விதத்தில் அப்போது அங்கு எல்லா சமூகவிரோத

செயல்களிலும் ஈடுபட்டு இங்கு ஓடிவந்திருக்கும் பலரின் சொல்லும் செயலும் இல்லை.

இன்னுமொரு முறை அத்தகைய நிலை ஏற்பட்டால் அப்போது செய்ததையே அல்லது அதை விட மோசமாக செய்யவே விரும்புவேன்.

எர்னஸ்டி சே குவேரா என்ற புரட்சியாளனின் வரலாற்றை பார்த்தால் தெரியும் அவர் புரட்சிக்கு எதிரானவர்களுடன் எத்தகைய

நடவடிக்கைகளை கைக்கொண்டார் என்றும் அதுபற்றி பிடல் காஸ்ரோவுடன் நீண்ட விவாதங்களை நடாத்தினார்

நடந்தவை அனைத்துமே

நல்லதை நோக்கியே செய்யப்பட்டன

அதனாலேயே நாம் அவர்களை ஆதரித்தோம்

அவர் இல்லையென்றால்

இன்றைய நிலை

30 வருடங்களுக்கு முன்பே வந்திருக்கும்

இன்று 12 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வெளியிலிருக்கின்றோம்

இதை எதிர்த்து போராட...

எனவே இதுதான் எமது வலு.

பாவிப்போமா? ஒன்றாய் நின்று....

  • தொடங்கியவர்

.... பஸ்தியான்பிள்ளை கொலைக்கு பின் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் புலிகள் "துரோகிகளுக்கு எச்சரிக்கை" என்று தான் அச்சடித்து வெளியிட்டார்கள். அதன் பின் 83/84களில் வெளிவந்த விடுதலைப்புலிகள்/களத்தில் பத்திரிகைகள் கூட "துரோகிகள் அழிப்பு", "துரோகி .." மிக தெளிவாகவும், விருப்பத்துக்கு ஏற்பவும் "துரோகி" வசனங்கள் பாவிக்கப்பட்டிருந்தன. .... அல்பிரட் துரையப்பா தொடங்கி பாணு வரை தொடர்ந்தது.

"ஒட்டுக்குழு" எனும் வார்த்தை தராகி சிவராமினாலேயே முதலில் பாவிக்கப்பட்டது.

... "தமிழனின் சாபம், தமிழனுக்கு எதிராக தமிழனே ஆயுதத்தை தூக்கியது" ......

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கி பாணு வரை தொடர்ந்தது.

புரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

யக்கங்களுக்குள் மோதல் என்பது தமிழகத்திலேயே நடந்துள்ளது..! அது எல்லா விடுதலைப் போராட்டங்களிலயும் நடக்கக் கூடியதுதான். ஆனால் புலிகளை ரோட்டிலேயே நடமாட விடாமல் பெரிய அளவில் வடபகுதியில் ஆக்கிரமிப்பு வேலையை ஆரம்பித்தது மாற்று இயக்கம் என்பது உமக்கும் தெரியும்; எனக்கும் தெரியும். முறுகலை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றவர்கள் அவர்களே.. அதற்குரிய பலனை அனுபவித்தார்கள். அதன்பிறகு மோதலில் ஈடுபடாத சில இயக்கங்களும் கூட செயல்பாட்டை நிறுத்தும்படி புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டன..! சும்மா இருந்துகொண்டு மனித வளத்தையும் பொருள்வளத்தையும் சுரண்டுவதை நிறுத்துவதற்காகவே..!

ஈரோஸ் கூடத்தான் நிறுத்தப்பட்டது..! அதுக்காக பாலகுமார் அண்ணை சிங்களவனின் காலை நக்கிப் பிழைக்க ஓடினாரா? அவருக்கு தனது குறிக்கோளில் தெளிவிருந்தது..! புலிகளுடன் இணைந்து செயல்ப்பட்டார். இவையளும் சேர்ந்திருக்க வேண்டியதுதானே..? ஆனால் அந்த மிருகங்களுக்கு அறிவில்லை..! தாம் துப்பாக்கி தூக்கியதே எதற்கென்று தெரியாத அனிமல்சுக்கு போராட்டம் ஒரு கேடா?

கொலைக்கு கொலைதான் தீர்வா?

ஆகா.. என்ன ஒரு அருமையான கேள்வி... இதே கேள்வியை ராஜீவ் காந்தி அன்ட் கோவிடம் கேட்க வக்கிருக்கா? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோஸ் கூடத்தான் நிறுத்தப்பட்டது..! அதுக்காக பாலகுமார் அண்ணை சிங்களவனின் காலை நக்கிப் பிழைக்க ஓடினாரா? அவருக்கு தனது குறிக்கோளில் தெளிவிருந்தது..! புலிகளுடன் இணைந்து செயல்ப்பட்டார். இவையளும் சேர்ந்திருக்க வேண்டியதுதானே

அதுதான் உண்மை

ஏன் பல மாற்று இயக்கஉறுப்பினர்கள்

தமது தலைமையை விட்டு

புலிகளுடன் தாமாகவே வந்து இயங்கி வந்தனர்

காலில் வீழுந்து நக்கியது யார் என்பதை வரலாறு சொல்லும்!

கொலைக்கு கொலை தீர்வு அல்ல!

இன்றைய துரோகி துரையப்பா இன்றும் யாழ் நகரின் கதா நாயகன்! இது தான் யதார்த்தம். இன்று அடக்கப்படும் மக்ளிற்காக யாரும் போராட தேவையில்லை! அவர்கள் போரா புறப்படுகையில் கை கொடுக்க நாம் என்றும் தயார். ஆனால் அவர்களிடம் வலிந்து ஒரு போராட்டத்தை திணிக்க முடியதாது!

போராட்டம் ஆரம்பிக்க முன் இன்றைய தேவை ஒரு சுத்தமான சுயவிமர்சனம்! இது இல்லையெனில் நீங்கள் என்ன புடுங்கினாலும் அழிவு முள்ளிவாய்க்கால் போல் தான்!

நான் இந்த போராட்டத்தை 1980இலிந்து பார்க்கிறோன். ஆரம்பத்தில் பார்வையாளனாக இருந்து பின் பங்காளியாக மாறி பின் விமர்சகனாக மாறினேன். நான் இதை இங்கு கூற விரும்பவில்லை ஆனால் கூற வேண்டிய கட்டாயத்தில் கூறுகிறேன்.

1987 இயக்கத்தை விட்டு வெளியேறி யாழ் நகரில் என் நண்பர்;கள் இருவரை சந்தித்த போது மீண்டும் என்னை இணையும் படி கோரினார்கள். நான் கூறியது இதுதான். நமது போராட்ட தலைமை நம்மை அழிவுப்பாதைக்கு தான் இட்டுச் செல்கிறது. தயவு செய்து போக்கை மாற்றுங்கள் இல்லை நமது போராட்டமே அழிந்து விடும் என்று எச்சரித்தேன்! கதைத்து சில வாரங்களுக்குள் என்னுடன் ரீயூசன் வகுப்பில் ஒன்றாக படித்த ஒரு நண்பன் உண்ணாது தியாகியானான். மற்றவனோ மாற்று இயக்கத்தால் கொல்லப்பட்டான். 2002இல் மீண்டும் தாயகம் சென்ற போது எனது விமர்சனங்களை வைத்த போது நாம் செய்தது தவறுதான் என்று அவர்களே ஒத்துக்கொண்டார்கள். ஆனால் இன்று பலர் கொலைக்கு கொலை தான் பதில் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

நமது போராட்ட வடிவத்தை தக்க நேரத்தில் மாற்ற தவறிய தலைமையை நான் என்றும் எப்போதும் விமர்சித்தவன். விமர்சிப்பேன். என் முகத்தில் துரொகி என்று துப்பினாலும் பாவாயில்லை காரணம் நானும் இந்த போராட்டத்தில் இரத்தம் சிந்தியவன்! எனக்கும் அந்த உரிமை இருக்கிறது! அதை பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30 வருட காலப் போராட்டத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களுடன் இயங்கிய ஒரு இயக்கத்தில் ஆயுதங்களைக் கையாாளும் நபர்கள் மத்தியில் எந்த ஒரு தவறும் நிகழாது என்று கருதுவது சுத்த அபத்தமானது. சாதாரண குடும்ப வாழ்க்கை வாழும் எங்கள் வாழ்க்கையைத் திரும்ப அசைபோட்டாலே எத்தனை தவறுகள் செய்திருக்கிறோம் என்பது தெளிவாகும்.

அந்த வகையில் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் தவறுகள் நடந்திருக்கின்றன. ஆனால் அந்தத் தவறுகளை அரசாங்கத்தின் காலை நக்கித் தம் பிழைப்பை நடத்துபவர்கள் கூவித்திரிவது வேடிக்கையானது.

அதற்காக தவறுகளே நிகழவில்லை என்று விவாதிப்பதும் முறையல்ல. குறிப்பாக ரெலோ இயக்க அழிப்பு இங்கு சிலரால் நியாயப்படுத்தப்பட்டது. ரெலோஇயக்கத்தில் சிலர் தவறிழைததது உண்மை. அவர்க்ள தண்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்காக ஒட்டு மொத்த இயக்கத்தையும் கொன் றுகுவித்ததை நியாயப்படுத்த முடியாது.

அதே ரெலோ இயக்கத்திலிருந்து சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், போன்றோர் அன்று கண்ணில் படாமல் இருந்ததால் தமிழர்களுக்காக இன்றும் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் இந்த அதிஸ்டம் கிடைக்காமல் அன்று கொல்லப்பட்ட உண்மையான தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள் பலர் இருந்திருப்பார்கள். :wub:

:wub:.......... :lol:........... :lol:

நெல்லையன், பஸ்தியாம்பிள்ளையின் அழிப்பின் பின்னர் வெளியிடப்பட்டது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு கடிதம் மட்டுமே.

அதில் துரோகிகளுக்கு எச்சரிக்கை என்று எந்த ஒரு வசனம்கூட இல்லை.ஒருவேளை அந்த ஆங்கிலகடிதத்தை பார்த்துவிட்டு

நெல்லையன் இனி 'துரோகிகள் எச்சரிக்கையாக' இருக்கவேணும் என்று நினைத்திருக்கலாம்.வீரகேசரி பேப்பருக்கு அனுப்பப்பட்ட

அந்த கடிதத்தில் அதற்கு முந்தைய பத்து அழிப்புகளுக்கு உரிமை கோரப்பட்டு மட்டுமே இருந்தது.

மேலும் சித்திரா அச்சகத்துள் சுந்தரத்தை அழித்த பின்னர் இப்போதைய நாடுகடந்த தமிழீழ அரசின் பிரச்சாரப்பீரங்கி சேரன் அப்போது

'துரோகத்தின் பரிசு' என்று ஒரு துண்டுப்பிரசுரம் விட்டார்.அதன்பின்னரே விடுதலைப்புலிகளும் 'துரோகத்துக்கு பரிசு' என்று துண்டுப்பிரசுரம்

கொடுத்தனர்.

துரையப்பா கொல்லப்பட்டு இப்போதும் கதாநாயகனாக நிற்கிறார். சரிதான். அதுக்கென்ன இப்ப??

அதைவிட்டு துரோகிகளாக வாழ்ந்து துரோகிகளாகவே கொல்லப்பட்ட உங்க தலைவர்மார் சிறீயர்,நாபா,உமா,டம்மிங் கந்தசாமி,மாணிக்கதாசன் போன்றதுகளை கதாநாயனாக்க நீங்கள் முயலலாம்.

பாண்ட்007 1987ல் இயக்கத்ததை விட்டு வெளியேறினார் என்றால் ரெலோ சண்டைக்கு என்ன செய்தார்??

  • கருத்துக்கள உறவுகள்

காலில் வீழுந்து நக்கியது யார் என்பதை வரலாறு சொல்லும்!

கொலைக்கு கொலை தீர்வு அல்ல!

இன்றைய துரோகி துரையப்பா இன்றும் யாழ் நகரின் கதா நாயகன்! இது தான் யதார்த்தம். இன்று அடக்கப்படும் மக்ளிற்காக யாரும் போராட தேவையில்லை! அவர்கள் போரா புறப்படுகையில் கை கொடுக்க நாம் என்றும் தயார். ஆனால் அவர்களிடம் வலிந்து ஒரு போராட்டத்தை திணிக்க முடியதாது!

போராட்டம் ஆரம்பிக்க முன் இன்றைய தேவை ஒரு சுத்தமான சுயவிமர்சனம்! இது இல்லையெனில் நீங்கள் என்ன புடுங்கினாலும் அழிவு முள்ளிவாய்க்கால் போல் தான்!

நான் இந்த போராட்டத்தை 1980இலிந்து பார்க்கிறோன். ஆரம்பத்தில் பார்வையாளனாக இருந்து பின் பங்காளியாக மாறி பின் விமர்சகனாக மாறினேன். நான் இதை இங்கு கூற விரும்பவில்லை ஆனால் கூற வேண்டிய கட்டாயத்தில் கூறுகிறேன்.

1987 இயக்கத்தை விட்டு வெளியேறி யாழ் நகரில் என் நண்பர்;கள் இருவரை சந்தித்த போது மீண்டும் என்னை இணையும் படி கோரினார்கள். நான் கூறியது இதுதான். நமது போராட்ட தலைமை நம்மை அழிவுப்பாதைக்கு தான் இட்டுச் செல்கிறது. தயவு செய்து போக்கை மாற்றுங்கள் இல்லை நமது போராட்டமே அழிந்து விடும் என்று எச்சரித்தேன்! கதைத்து சில வாரங்களுக்குள் என்னுடன் ரீயூசன் வகுப்பில் ஒன்றாக படித்த ஒரு நண்பன் உண்ணாது தியாகியானான். மற்றவனோ மாற்று இயக்கத்தால் கொல்லப்பட்டான். 2002இல் மீண்டும் தாயகம் சென்ற போது எனது விமர்சனங்களை வைத்த போது நாம் செய்தது தவறுதான் என்று அவர்களே ஒத்துக்கொண்டார்கள். ஆனால் இன்று பலர் கொலைக்கு கொலை தான் பதில் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

நமது போராட்ட வடிவத்தை தக்க நேரத்தில் மாற்ற தவறிய தலைமையை நான் என்றும் எப்போதும் விமர்சித்தவன். விமர்சிப்பேன். என் முகத்தில் துரொகி என்று துப்பினாலும் பாவாயில்லை காரணம் நானும் இந்த போராட்டத்தில் இரத்தம் சிந்தியவன்! எனக்கும் அந்த உரிமை இருக்கிறது! அதை பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது!

ம்மைத் துரோகி என்று நாம் சொல்லவில்லை..! குறைந்தபட்சம் நான் சொல்லவில்லை..! நீர் அழிந்து முடிந்துவிட்ட போராளிகளுக்கு சேறு பூசும் வேலையைத்தான் எதிர்க்கிறேன்..!

தற்போது நடந்து கொண்டிருப்பது என்ன? புலிகளால் மாற்று இயக்கங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனவா அல்லது சிங்களவனால் மக்கள் அழிந்து கொண்டுள்ளனரா? எதை நோக்கி உமது பலம் இப்போது பிரயோகிக்கப்பட வேண்டும்? பழைய பஞ்சாங்கத்தை நீர் கிளறுவதால் அழிந்த மாற்றுக்கருத்தாளர்கள் மீண்டும் அவதரிப்பார்களா? தியாகி துரையப்பா மீண்டும் உயிர்த்தெழுவாரா? அல்லது தமிழீழம்தான் கிடைத்துவிடுமா?

உம்முடைய மேற்குறிப்பிட்ட கருத்தில் தெரிவதெல்லாம், நான் அப்போதே சொன்னேன் அவர்கள் கேட்கவில்லை; பிறகும் சொன்னேன் கேட்கவில்லை என்கிற பிதற்றல்கள்தானே ஒழிய இனிமேல் நாம் செய்யப்போவது என்ன என்பது குறித்து உமக்கு ஒரு அக்கறையும் கிடையாது.

கேட்டால் பழைய தவறுகளிலிருந்து பாடம் படிக்க வேண்டும் என்பீர். அதைச் சொல்லப்போகும் நீரேதான் ஆயுதப் போராட்டம் இனி இல்லை என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறீர். பிறகெதுக்கு சேறுபூசி பாடம் படிப்பான்?

புலிகள் காட்டு மிருகங்கள் அல்லர்; அவர்களும் மனிதர்கள்தான். மனிதர்கள் என்றாலே தவறு செய்வார்கள் என்பது வெளிப்படை. அதை வைத்துக்கொண்டு அவர்களுக்கு சேறுபூசும் வேலையை நிறுத்திவிட்டு மக்களுக்காக மரணித்தவர்களுக்குரிய குறைந்தபட்ச மரியாதையையாவது கொடும்..!

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக தவறுகளே நிகழவில்லை என்று விவாதிப்பதும் முறையல்ல. குறிப்பாக ரெலோ இயக்க அழிப்பு இங்கு சிலரால் நியாயப்படுத்தப்பட்டது. ரெலோஇயக்கத்தில் சிலர் தவறிழைததது உண்மை. அவர்க்ள தண்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்காக ஒட்டு மொத்த இயக்கத்தையும் கொன் றுகுவித்ததை நியாயப்படுத்த முடியாது.

அதே ரெலோ இயக்கத்திலிருந்து சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், போன்றோர் அன்று கண்ணில் படாமல் இருந்ததால் தமிழர்களுக்காக இன்றும் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் இந்த அதிஸ்டம் கிடைக்காமல் அன்று கொல்லப்பட்ட உண்மையான தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள் பலர் இருந்திருப்பார்கள். :wub:

சதிராடி,

தவறு நடக்கவில்லை என்று நான் விவாதிக்கவில்லை.. மாறாக ஏதோ சும்மா இருந்த மாற்று இயக்கங்களை புலிகள் வீணாக அழித்துவிட்டனர் என்பது போல எழுதப்பட்டவைக்கு எதிராகத்தான் சுட்டிக்காட்டினேன்..! எங்கள் ஊரில் ஒரு சுடுகாட்டில் 23 ரெலோ பெடியன்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது ஏற்பட்ட மனவருத்தம் அளவிடமுடியாதது. அதே சமயம், சும்மா இருந்த ரெலோவை அழித்தார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள முடியாது.

சிவாஜிலிங்கம், அடைக்கலநாதன் போன்றவர்கள் இன்று தமிழ்தேசியக் கூட்டமைப்பில் இருக்கிறார்கள் என்றால், புலிகளின் அணுகுமுறையில் நேர்ந்த மாற்றத்தையும், இவ்விருவரின் புரிதல் போக்கின் சிறப்பையும் காட்டி நிற்கிறதே தவிர, இங்கே சிலர் சொல்ல விழைவதுபோல் புலிகளின் சர்வாதிகாரப் போக்கை அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30 வருட காலப் போராட்டத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களுடன் இயங்கிய ஒரு இயக்கத்தில் ஆயுதங்களைக் கையாாளும் நபர்கள் மத்தியில் எந்த ஒரு தவறும் நிகழாது என்று கருதுவது சுத்த அபத்தமானது. சாதாரண குடும்ப வாழ்க்கை வாழும் எங்கள் வாழ்க்கையைத் திரும்ப அசைபோட்டாலே எத்தனை தவறுகள் செய்திருக்கிறோம் என்பது தெளிவாகும்.

அந்த வகையில் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் தவறுகள் நடந்திருக்கின்றன. ஆனால் அந்தத் தவறுகளை அரசாங்கத்தின் காலை நக்கித் தம் பிழைப்பை நடத்துபவர்கள் கூவித்திரிவது வேடிக்கையானது.

அதற்காக தவறுகளே நிகழவில்லை என்று விவாதிப்பதும் முறையல்ல. குறிப்பாக ரெலோ இயக்க அழிப்பு இங்கு சிலரால் நியாயப்படுத்தப்பட்டது. ரெலோஇயக்கத்தில் சிலர் தவறிழைததது உண்மை. அவர்க்ள தண்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்காக ஒட்டு மொத்த இயக்கத்தையும் கொன் றுகுவித்ததை நியாயப்படுத்த முடியாது.

அதே ரெலோ இயக்கத்திலிருந்து சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், போன்றோர் அன்று கண்ணில் படாமல் இருந்ததால் தமிழர்களுக்காக இன்றும் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் இந்த அதிஸ்டம் கிடைக்காமல் அன்று கொல்லப்பட்ட உண்மையான தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள் பலர் இருந்திருப்பார்கள்.

தேவையான இடங்களை வேறுபடித்த தெரியாததால் முழுவதையும் பிரதிபண்ணியுள்ளேன்..

நான் நினைக்கிறேன்..இது ஒரு நல்ல கருத்தென.. போதும் போதும்...

எல்லோருடைய கைகளிலும் கறையுள்ளது..மற்றவருக்காவில்ல

ாவிடினும்..உங்களுக்காக,எங்களு

க்கா ஏற்றுக்கொள்ளுவோம்...

போதும் போதும்..யாரும் யாரையும் வசவுபாடாதீர்கள்..இது எங்கள் பிளவுகளை அதிகரிக்குமே தவிர குறைக்காது..

  • கருத்துக்கள உறவுகள்

போதும் போதும்..யாரும் யாரையும் வசவுபாடாதீர்கள்..இது எங்கள் பிளவுகளை அதிகரிக்குமே தவிர குறைக்காது.. இதுதான் இன்று வேண்டும்

இல்லையெனில்

எதிரி செய்ய நினைப்பதை

நம்மை அறியாமல் நாமே செய்தவராவோம்

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் கேட்கின்றேன்

இங்கு கருத்து எழதுபவர்கள் ஒரு நிலையெடுப்போம்

தயவுசெய்து

என்ன செய்யலாம்

எப்படி மீழலாம்

எந்தவழிகளில் எமது மக்களுக்கு உதவி செய்யலாம்

....

...... எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் கேட்கின்றேன்

இங்கு கருத்து எழதுபவர்கள் ஒரு நிலையெடுப்போம்

தயவுசெய்து

என்ன செய்யலாம்

எப்படி மீழலாம்

எந்தவழிகளில் எமது மக்களுக்கு உதவி செய்யலாம்

....

...... எழுதுங்கள்

இது கேள்வி..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளே,தமிழீழ விடுதலைக்கான எந்த அமைப்பில் நீங்கள் சேர்ந்திருந்தாலும் உங்களின் ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்புணர்வுக்கு

நான் தலைவணங்குவேன்.ஆனால் விடுதலையையும் அதற்கான போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் எதிரிக்கு

மகிழ்ச்சி கொடுக்க கூடிய விதத்திலும் உங்கள் கருத்துக்கள் அமையும் விதத்தில் உங்களுடன் மூர்க்கமாகவும் எல்லாவழிகளிலும்

பதில் தரவுமே நான் விரும்புகிறேன்.நாங்கள் அப்படி எழுதுவது சிலருக்கு போராட்டத்தில் விரக்தியை தோற்றுவிக்கும் அபாயம்

இருப்பதால் இது சம்பந்தமான எந்த விதமான ஆதாரபூர்வமான கருத்து ரீதியான சொல்லாடலுக்கும்

அல்லது தூசணை கலந்த சொல்லாடல்தான் உங்களுக்கு விருப்பம் என்றால் அதற்கும் அதற்கு மேலாகவும்,

எந்த விதமான விடயத்துக்கும் கீழே உள்ள என்னுடைய மின் அஞ்சலுக்கு எழுதினால் உங்களுடன் நேரிலோ அல்லது நீங்கள்

விரும்பும்வரைக்கும் எழுத்திலும் விவாதிப்போம்.

இல்லை இதிலைதான் எழுதப்போறன் என்று நீங்கள் தலைகீழாக நின்றால்.....என்ன செய்வது இதிலைதான் எழுதவேணும்!!

Edited by four four bravo

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லாம் லண்டனுக்கு வந்து தொலைக்காட்சிகளிலும்.. கூட்டங்களிலும் கலந்து கொள்ளக் காரணமே பிரபாகரன் தான் என்பதை மறந்துவிட்டார்கள்..!

பிரபாகரன் ஆயுதங்களை மட்டும் நம்பி இருந்தால்.. திம்புவுக்குப் போயிருக்கமாட்டார்.. ராஜீவ் காந்தியோடு இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்று பேசி இருக்கமாட்டார்.. ஆயுத ஒப்படைப்புக்கு சம்மதித்திருக்கமாட்டார்.. பிரேமதாசவோடு பேசப் போயிருக்கமாட்டார்.. சந்திரிக்காவோடு பேசி இருக்கமாட்டார்.. ரணிலோடு ஒப்பந்தம் போட்டிருக்கமாட்டார்..!

இன்றும் ஒரு சிறந்த கரந்தடிப் படையை வைத்துக் கொண்டு அவரால் போராடிக் கொண்டிருந்திருக்க முடியும்..! வரலாறை இவ்வாறான மேதாவித்தனமான கருத்துக்களை விதைக்க முதல் இவர்கள் கற்க வேண்டும்.

பிரபாகரனிற்கும்.. போராளிகளிற்கும் ஆயுதப் பயிற்சி அளித்து ஆயுதப் போராட்டத்தை தூண்டி விட்டதே இந்தியா தான். அதை இந்த அருவிகள் உருவி எறிந்துவிட்டு இப்போ லண்டனில் மேடை போட்டு மறை முகமாகவும் நேரடியாகவும் பிரபாகரனை குற்றம்சாட்டி தங்கள் இயலாமைகளை அடிமைத்தனத்தை மறைக்க முயல்கின்றனர்..!

இதுதான் தமிழனின் சாபக்கேடு. பிரபாகரனின் தோல்வி கூட இந்தச் சாபக்கேட்டின் விளைவே அன்றி.. பிரபாகரன் தூக்கிய ஆயுதத்தால் அல்ல.

பிரபாகரன் போராடியது.. தமிழர்களின் விடிவுக்காக. இந்திய அமெரிக்க உலக வல்லாதிக்கங்களை முறியடிக்க அல்ல. ஆனால் பிரபாகரனை இவர்கள் எதிரியாக பயங்கரவாதியாகக் காட்ட தமிழர்கள் மறுகோடியில்.. எதுவும் தெரியாத மாதிரி வாழ்ந்தார்களே அதன் விளைவுதான் வன்னிப் பேரவலம்..! வாகரைப் பேரவலம்..!

தங்கள் தங்கள் தவறுகளை செய்யத்தவறியதுகளை ஆராயமாட்டார்கள்.. பிரபாகரனில் பிழை பிடிக்கிறதையே செய்து கொண்டிருக்கிறது ஒரு தமிழ் கூட்டம். இவர்கள் முன் நாங்கள் வைக்கும் சவால்.. முடிந்தால் நீங்கள் உண்ணாவிரதம் இருந்து.. தூய அகிம்சை வழியில் அரசியல் செய்து தமிழீழத்தைப் பெற்றுக் கொண்டுங்கள். அதற்கான பொன்னான வாய்ப்பை பிரபாகரன் உங்களுக்கு தந்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார். முடிந்தால் செய்யுங்கள்.

பிரபாகரனை வைத்து அரசியல் செய்தது போதும்..! அவர் தான் போய்விட்டாரே.. சாகடித்து விட்டீர்களே...! விடுங்கள் ஐயா அவரை.. நிம்மதியாக சாவில் என்றாலும் உறங்கட்டும்..! :D

இவ்வாறானவர்களை அழைப்பித்து.. கதை கேட்கிறவர்கள்.. கொஞ்சம் வரலாறுகளையும் எடுத்துச் சொன்னால் நல்லா இருக்கும்..! :wub::D

வன்னி மக்களுக்காக போராடிய போது புலம்பெயர் தமிழர்களோடு தோள் நின்று உழைக்க முன்வராதவர்கள்.. அல்லது போராட்டத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்த முனைந்தோரை எல்லாம் இப்போ இந்திய வல்லாதிக்கம் புலம்பெயர் தேசங்களை நோக்கி அதுவும் வெளிநாடுகளில் விடுதலைப்புலிகள் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு அறிக்கையை இந்திய மத்திய ஆளும் வர்க்கம் எடுத்துவிட்ட பின் அனுப்பி வைப்பதை இட்டு தமிழ் மக்கள் அவதானமாக இருப்பதுடன் இவர்களின் கருத்துக்களை தீவிர ஆலோசனைகள் ஆராய்தலின் பின் செய்தி ஊடகங்களில் பிரசுரிக்க முயல முன்வர வேண்டும்..!

எவ்வளவு நம்பிக்கைக்குரியவாராக இருப்பினும்.. இதனை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். சிங்கள எதிரியை விட இந்திய வல்லாதிக்கமே எமது போராட்டத்தின் அடி நாதத்தை அழிக்க 1987 இலும் சரி இன்றும் சரி தமிழ் மக்களிடையே பேரவலத்தை தந்து முயன்று கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

1987ல் இந்தியப்படை தாக்கிய போதும் இப்போ ராஜபக்ச படையோடு சேர்ந்து இந்தியப்படைகள் எம்மைத் தாக்கிய போதும்.. தமிழகம் உணர்வு பூர்வத்தை தாண்டி செயலில் எதனையும் செய்ய முன்வரவில்லை.. அல்லது செயற்பட அனுமதிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்வது நன்றி.

தமிழ் மக்களுக்கு இந்தியாவை நண்பனாக அறிவித்த பிரபாகரனையே இந்தியா கொன்றது என்பதையும் மறக்கக் கூடாது..! :(:lol:

தேசிய தலைவர் சொன்னது: நாம் ஆயுதத்தின் மீது காதல் கொண்டவர்களோ கொலைவெறியர்களோ அல்ல. எமது மக்களின் நியாயபூர்வமான அரசியல் உரிமைக்காகவே போராடுகின்றோம். அதை முறியடிக்க படை கொண்டு எமது மக்களை தாக்க வரும் எதிரிகளிடமிருந்து மக்களை பாதுகாக்கவே நாம் ஆயுதங்களை தாங்கி இருக்கிறோம். எமது மக்களின் உரிமைகள் வெல்லப்படும் போது அல்லது வழங்கப்படும் போது அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் போது எமக்கு ஆயுதங்கள் தேவையில்லை.

தேசிய தலைவர் என்றும் எப்போதும் தெளிவோடுதான் இருந்திருக்கிறார். அருவிகள்.. உருவிகள்.. மீசைக்காரர்கள்.. மஞ்சள் துண்டுகள்.. தாடிக்காரர்கள்.. சில பொம்பிளைப் பி ஏ பொறுக்கிகள் போல.. இந்ததில்லை..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1987 இந்திய இராணுவம் வந்த போது அதை நாம் சரி வர நமது அரசியல் நலனுக்கு ஏற்ப பாவித்திருந்தால் இன்று நமக்கென ஒரு தேசம் சிலவேளை உருவாகியிருக்கும்?

இந்தியா.. உங்களுக்கு தனிநாடு தந்து... ஹையோ ஹையோ... காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலியே! :wub:

இவ்வளவு வாய்க்கு வக்கியனாயகப் பேசும் நீ ஏன் 2006 இல் புலிகளை ஆதரித்தும் துரோகிகளை எதிர்த்தும் கருத்தெழுதினாய்?

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry217130

http://www.yarl.com/forum3/index.php?showtopic=9966&hl

உன்னிடம் நேர்மையிருந்தால் இதற்கான பதிலை வை! இல்லையேல் பொத்திக்கொண்டு போ!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா.. உங்களுக்கு தனிநாடு தந்து... ஹையோ ஹையோ... காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலியே! :lol:

இவ்வளவு வாய்க்கு வக்கியனாயகப் பேசும் நீ ஏன் 2006 இல் புலிகளை ஆதரித்தும் துரோகிகளை எதிர்த்தும் கருத்தெழுதினாய்?

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry217130

http://www.yarl.com/forum3/index.php?showtopic=9966&hl

உன்னிடம் நேர்மையிருந்தால் இதற்கான பதிலை வை! இல்லையேல் பொத்திக்கொண்டு போ!

அந்தாள் புத்தி பேதலிச்சு எழுதித் திரியுது. அந்தாளை நீங்கள் ஒருமையில் திட்டப் போய் ஏன் உங்களின் கருத்தியல் நாகரிகத்தை தாரை வார்க்கிறீர்கள். விடுங்கள்.. ஐயா.. காகம் திட்டி மாடு சாகப் போவதில்லை. திட்டுபவர்கள்.. திட்டட்டும். ஊரான் போராடி.. பிள்ளை இழந்து.. சொத்தழிஞ்சு.. சொந்த பந்தம் இழந்து.. சொந்த நிலமிழந்து நிற்கிறான்.. இவர்கள்.. வெளிநாட்டில் குந்தி இருந்து கொண்டு குதர்கம் பேசிக் கொண்டு திரிகிறார்கள். அவர்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தக் கூடியவர்கள் அல்ல..! அவர்களுக்கு புத்திமதி சொல்லப் போய் நாம் தாம் எம்மை நோகடித்துக் கொள்ள வேண்டும்..! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவர் என்றும் எப்போதும் தெளிவோடுதான் இருந்திருக்கிறார். அருவிகள்.. உருவிகள்.. மீசைக்காரர்கள்.. மஞ்சள் துண்டுகள்.. தாடிக்காரர்கள்.. சில பொம்பிளைப் பி ஏ பொறுக்கிகள் போல.. இந்ததில்லை..!

இருக்க மறுத்து போய்விட்டார்

அதன் பின்பும் விடமாட்டேன் என்றால்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீலங்கா அரசாங்கத்திட்ட முதலில போனது புலிகள், அந்த நேரத்தில வேற எந்த இயக்கமும் அரசாங்கத்திட்ட போகவில்லை. அது சரித்திரம் அதுக்குப்பிறகு நடந்ததெல்லாம் சம்பவம். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா அரசாங்கத்திட்ட முதலில போனது புலிகள், அந்த நேரத்தில வேற எந்த இயக்கமும் அரசாங்கத்திட்ட போகவில்லை. அது சரித்திரம் அதுக்குப்பிறகு நடந்ததெல்லாம் சம்பவம். :lol:

1987 இல் இந்திய - இலங்கை ஒப்பந்தம் எழுதின உடன விழுந்தடிச்சு.. ஜனநாயக நீரோடையில நீச்சலடிக்கப் போறம் என்று கொழும்புக்குப் போய் கட்சிகளை பதிவு செய்திட்டு.. இந்திய ஆமிக்காரனோட துவக்கு தூக்கிக் கொண்டு சன நாய் அகம் செய்தவை.. இருக்க புலிகளை முன்னுக்கு கொண்டு வந்து உங்களுக்கு அம்னீசியா என்றதை சொல்லாமல் சொல்லுறீங்கள் போல..!

உவர் அமிர்தலிக்காரும் தான் 1977 வட்டுக்கோட்டையில தீர்மானம் போட்டிட்டு.. படுத்தது.. புரண்டது.. எழும்பினது.. பிள்ளைகளை படிக்க வைச்சது.. சென்னையிலும் கொழும்பிலும்... லண்டனிலும்..! 1977 தனித் தமிழீழ தீர்மானம் போட்டதற்குப் பிறகு அவர் வட்டுக்கோட்டை பக்கமே தலை வைச்சுப் படுத்ததில்லையாம். கேள்விப்படல்லையோ.. இல்ல திட்டமிட்டு மூளை மறந்திட்டுதோ..! :wub::lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.