Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டனில் ஈழத்தமிழர்களை தாக்கிய பிரித்தானிய காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சேரமான் 29/09/2009, 14:40

இலண்டனில் ஈழத்தமிழர்களை தாக்கிய பிரித்தானிய காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு!

கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் நாள் முதல் யூன் மாதம் 17ஆம் நாள் வரையான காலப்பகுதியில் இலண்டன் வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்ற முன்றலில் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர்கள் பல தடவைகள் பிரித்தானிய காவல்துறையினரால் தாக்கப்பட்டிருந்தனர்.

police20attack20tamils.jpg

வன்னி மக்களை வகைதொகையின்றி சிறீலங்கா அரசு கொன்றுகுவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரி, வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்ற முன்றலில் வீதிகளை இடைமறித்து ஒவ்வொரு தடவையும் ஈழத்தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்த பொழுது அவர்கள் மீது பிரித்தானிய காவல்துறையினரால் வன்முறை ஏவிவிடப்பட்டிருந்தது.

police20attack20tamils1.jpg

இதன்பொழுது சிறுவர்கள், இளையோர், மூதாளர்கள் என்ற வேறுபாடின்றி பலரை பிரித்தானிய காவல்துறையினர் தாக்கியதோடு, இது தொடர்பான ஒளிப்படங்களும், நிழற்படங்களும், ஒலிவடிவங்களும் ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டிருந்தன.

police20attack20tamils2.jpg

இவ்வாறான பின்புலத்தில், இவ்வாண்டின் முற்பகுதியில் இலண்டனில் இடம்பெற்ற ஜி-20 ஆர்ப்பாட்டங்களில் பொழுது பிரித்தானியப் பெண் ஒருவரைத் தாக்கிய காவல்துறைக் காவலர் ஒருவருக்கு எதிராக தற்பொழுது குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

g2020protest.jpg

இதனை முன்மாதிரியாகக் கொண்டு தங்களைத் தாக்கிய பிரித்தானிய காவல்துறையினருக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் தாக்கல் செய்து நீதிபெற முடியும் என்று சட்டநிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நிபுணத்துவம் பெற்ற குற்றவியல் சட்டவாளர்களை அல்லது இலவச சட்ட உதவி புரியும் அமைப்புக்களை அணுகி, இவற்றின் ஊடாக பிரித்தானியாவின் குற்றவியல் நடவடிக்கை அமைப்பான CPS நிறுவனத்திடம் ஆதாரங்களை சமர்ப்பிப்பதன் மூலம், தம்மை தாக்கிய காவல்துறைக் காவலர்களை பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் நீதிமன்றங்களின் முன்னிறுத்த முடியும் என்றும், சட்டநிபுணர்கள் சுட்டிக் காட்;டியுள்ளனர்.

பதிவு

இப்பிடித் தான் பிரித்தானியாவில் மும்மூரமாக ஆர்ப்பாட்டங்கள் நடந்த போது, புலிக்கொடி பிடிப்பதற்கு காவல்துறையினர் தடைவிதித்தது பற்றி GTVயில் ஒரு தமிழ் வக்கீல் வந்து இது விடயமாக எப்படி எப்படியெல்லாம் காவல்துறையினர் மீது இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்று விளக்கினார். பின்பு காவல்துறையினர் இந்தத் தடையை எழுத்து மூலமாகத் தந்திருந்தால் அதை ஆதாரமாக வைத்தே இலகுவாக தன்னால் நடவடிக்கை எடுக்கு முடியும் என்றும் கூறினார். அப்போது அருகிலிருந்த அறிவிப்பாளர் பிறேம் காவல்துறையினர் இந்தத் தடையை ஏற்கனவே எழுத்து மூலமாகத் தான் தந்துள்ளனர் எனக் கூறினார். :lol: உடன் தடுமாறிய வக்கீல் அப்படியா அதை நான் பார்க்கவில்லை என்பதோடு முடித்து விட்டார். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களை தொடர்ந்து தாக்கும் மகிந்தா கும்பலுக்கு எதிராக முதலில் சட்ட நடவடிக்கை எடுக்கப் பாருங்கள்.

இப்போது மீண்டும் சட்டத்தரணிகள் எங்களின் மீட்பர்களாக வலம்வரத் தொடங்கி இருக்கிறார்கள்.மக்களுக்கு புரியாத நீண்ட வசனங்களை

சொல்லி ஏதோ வித்தை காட்ட தொடங்கி விட்டார்கள்.போன சனிக்கிழமை கனடாவில் நாடுகடந்த அரசு என்ற பத்திரிகை வெளியீட்டு

நிகழ்வுக்கு போயிருந்தேன்.அதில் பேராசிரியர் சந்திரகாந்தன் 'சில நாடுகள் நாடுகடந்த அரசை ஆதரிப்பதாக உறுதி தந்து இருக்கிறார்கள்'

என்று பேசினார். அதற்குப் பிறகு பேசிய ஒருவர் 'பதினாறுநாடுகள் நாடுகடந்த அரசை ஆதரிப்பதாக' முழங்கினார்.

மேடையின் கீழே அவர்கள் இருவரையும் சந்தித்தேன். 'எந்தெந்த நாடுகள் ஆதரிப்பதாக உறுதிஅளித்துள்ளதாக' கேட்டேன்.

'இல்லை அந்த நாடுகளின் கதைகளிலை இருந்து தெரிந்துகொண்டோம்' என்றார்கள்.

'நீங்கள் அந்த நாடுகளுடன் கதைத்தனீங்களா' என்று கேட்டேன்.

'இல்லை ..அப்பிடிஇல்லை..அந்த நாடுகள் நல்ல நாடுகள்.அதுதான் எதிர்பார்க்கிறோம்' என்றனா இருவரும்.

'இப்பிடித்தான் அவையள் வருவினம் இவையள் புடுங்குவினம் என்று சொல்லிச் சொல்லியே எங்களின் மக்களையும் போராளிகளையும்

முள்ளிவாய்க்காலில் காத்துநிக்க வைத்து கொன்று விட்டீர்கள்..இனி நாடு கடந்த அரசு என்று பொய் சொல்லி ஏமாத்தப் போகிறீங்களா?'

என்று கேட்டேன்.

லண்டனிலும் இதே நிலைதான்.இந்தா உண்ணாவிரத்ததை நிப்பாட்டுறம். அவன் ஐக்கியநாடுகள் சபைக்கு கூட்டிப் போறன் என்று உறுதி

தந்தான் என்பார்கள்.அல்லது எங்களை கூப்பிட்டு வெளிவிவகார அமைச்சர் கதைத்தார்.ஆனால் என்ன கதைத்தார் என்று வெளியே

சொல்ல முடியாது என்பார்கள்.ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று எமது மக்களுக்கு தெரிய நீண்டநாள் ஆனது.

இந்தக் கோமாளிஆட்டத்தின் நாயகர்கள் இப்போதும் தங்களை ஏதொ கரும்புலிகள் போல நினைத்து வலம்வருவதுதான் கேவலம்!!

எல்லா இடத்திலும் இத்தகைய பொய் வதந்திகளும் புனைவுகளும்தான்.மக்கள்தான ஆறஅமர யோசித்து முடிவு எடுக்கவேணும்.

ஈழத்தமிழர்களை தொடர்ந்து தாக்கும் மகிந்தா கும்பலுக்கு எதிராக முதலில் சட்ட நடவடிக்கை எடுக்கப் பாருங்கள்.

அதானே நம்ம அமெரிக்க வக்கீல்மார் சிலர் மகிந்த குடும்பத்தை உள்ளே அனுப்புகின்றோம் வாரி வழங்குங்கள் என்று, 2 வருடங்களுக்கு முன்பே தேவையானதைச் சேர்த்து விட்டார்களே !! என்ன மகிந்த குடும்பத்திற்குத் தான் ஒன்றும் நடக்கவில்லை. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு, அவர்கள் தேவையானதைச் சேர்த்துவிட்டார்கள், தேவையில்லாததை கைவிட்டுட்டார்கள்.

சேரமான் 29/09/2009, 14:40

இலண்டனில் ஈழத்தமிழர்களை தாக்கிய பிரித்தானிய காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு!

வன்னி மக்களை வகைதொகையின்றி சிறீலங்கா அரசு கொன்றுகுவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரி, வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்ற முன்றலில் வீதிகளை இடைமறித்து ஒவ்வொரு தடவையும் ஈழத்தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்த பொழுது அவர்கள் மீது பிரித்தானிய காவல்துறையினரால் வன்முறை ஏவிவிடப்பட்டிருந்தது.

இப்படியான ஆவேசமான கருத்துக்கள் வருவது சரியல்ல. பிரித்தானிய காவல்துறையினர் மிகவும் பொறுமை காத்து பாதுகாப்பும் அளித்துவந்தனர். ஆனால் எம்மக்கள் அவர்களின் அறிவுருத்தல்களை கடைப்பிடிக்காது அத்துமீறி லண்டன்வாழ் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த முனைந்தபோதே அவர்கள் அதைத்தடுக்க நடவடிக்கைகள் எடுத்தனர்.

இனி உந்த வக்கீல்களின் வாலைப்பிடித்துக்கொண்டு பிரித்தானிய மக்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவையும் இல்லாமல் செய்ய வழிதேடலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருச்சுணன், இன்னுமா இவர்களை நம்பி அந்தக் கூட்டங்களுக்குப் போகிறீர்கள்? சந்திரகாந்தனுக்கும் அரசியலுக்கும் வெகுதூரம். ஏதோ பல்கலைக்கழகத்தில் பேராசியரியராக இருக்கிறார் என்ற ஒரு காரணத்திற்காக சிலர் தங்கள் சுயலாபங்களுக்கா தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்றால் நீங்களும் அதை நம்பிப் போகிறீர்கள். எல்லாம் சுயதம்பட்டமும் சுயலாபமும் தானே தவிர வேறொன்றுமில்லை. அதைவிட வேடிக்கையான விடயம் என்னவென்றால், இந்த அமைப்பிலிருக்கும் பலருக்கும் கல்வித் தகுதிக்கும் வெகுதூரம். எல்லாம் மக்களை ஏய்க்கும் கூட்டம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் நான் கிட்டத்தட்ட சேர்ந்துவருகிற தலையங்கமாய் புதிதாய் திரி போட்டிருக்கிறேன், எங்களுடைய பெரிய பலவீனங்களில் ஒன்று, எங்களை பற்றி அளவிற்க்கு அதிகமாக எண்ணுவதும் நினைப்பதும். தமிழ் செய்தி ஊடகங்கள் தங்களை திரும்பி பார்த்தல் நலம்.சிங்களவனை மோடன்,மோடன் என்று சொல்லி நாங்கள் கற்காலத்துக்கு போய்விட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

காசினி அவர்கட்கு வணக்கம்,

தங்கள் கருத்தினை வாசித்தேன். இவர்களைப் பற்றிய விடையங்கள் உங்களுக்கு எந்தவரையில் தெரியும்? விபரமாகக் கூறவும் அவர் எதோ பேராசிரியராக இருக்கிறார் என்றால் இந்திய கல்லூரிகளில் இருக்கும் விசுக்கோத்துப் பேராசிரியர்கள்போலா. அப்போ கனடாவில் கல்வித்தகமை இல்லாதோர் பல்கலைக்கழகங்களிலோ அன்றேல் கல்லூரிகளிலோ பேராசிரியராக இருக்கலாமா? நாடு கடந்த தமிழீழ அரசினை உருவாக்கும் முயற்சியினை ஒத்தை வரியில் விமர்சித்துள்ளீர்களே. இல்லைத் தெரியாமல்தான் கேட்கிறேன் யாழ்களத்திலோ அன்றேல் வேறு எந்தக்களத்திலோ அதுபற்றிய பகிரங்கமான கருத்துக்களை யாராவது முன்வைத்தார்களா? கள உறவுகளிடம் இதுபற்றிய விளக்கம் இருக்கிறதா. அன்றேல் இதுபற்றி விளக்கம் உள்ளவர்கள் யாராவது இல்லாதவர்கட்கு புரியும்படி இவ்விணையத்தில் கருத்துக்களை முன்வைத்தார்களா? அல்லது எதிர்கருத்துக்களையாவது நடைமுறைச்சாத்தியம் அற்றது என நிரூபித்தார்களா? இங்கே சிலருக்கு நாட்டில் வெடிசுட்டுச் சத்தம் கேட்கவேண்டும் அங்கு வாழும் இளையவர்கள் அனைவரும் குண்டை மடியில் கட்டிச் சாகவேண்டும். வெளிநாட்டில் வாழ்பவர்களது உறவுகள் சிலர் வெளிநாட்டுக்கு வந்து அசைலம் அடிக்க வேணும் அதுக்காக தமிழன் பிணம் விழவேண்டும். இதையா எதிர் பார்க்கிறீர்கள். கொடுத்த விலை போதாதா? இன்னும் வேணுமா? உலக ஒழுங்குகளுக்கு அமைவாக நாம் அறிவிபூர்வமாகச் செயற்படல்வேண்டும் . எமது மண்ணை கூறுபோட்டு அந்நியனுக்கு சிங்களவன் தாரை வார்க்கிறான் பிரபாகரன் எனும் பெரும் தீ, உலகமயமாக்கல்ப் பூதம் இலங்கைத்தீவினை முழுங்கி விடாது இவ்வளவு காலமும் காத்து நின்றது. இதில் தமிழர்கள் பெற்ற பயனைவிட இலங்கைத்தீவில் அனைத்துச் சமூகமும் குறிப்பாக எமது எதிரியான சிங்களவனது பிரதேசங்களுமே சேர்ந்து பாதுகாக்கப்பட்டது. இப்போது பல்தேசியக் கம்பனிகள் தமது உலகமயமாக்கல் வலையை விரித்து வீச ஆரம்பித்துள்ளது இதில் அகப்படுபவை காலம் காலமாக் நாம் காத்த எமது பூர்வீக நிலங்கள் . வீரகேசரியை வாசித்தால் தெரியும் குத்தகைக்கு வயல் நிலங்கள் வேண்டும் என ஒவ்வொருநாளும் விளம்பரம் வருகின்றது குத்தகை எனும்பேரில் எமது அறியாமையை மிகவும் தந்திரமாக அந்நியன் பயன்படுத்தப் போகிறான் எமக்கு விளங்காத சொல்லாடல்களை ஒப்பந்தங்களில் சேர்த்து காலத்துக்கும் எமது நிலங்கள் எமக்குத் திருப்பிக் கிடைக்கமல் அபகரிக்கப் போகிறான் ( யாராவது உங்கள் உறவுகளுக்கு, தமது விளைநிலங்களை குத்த்கைக்கு கொடுக்கும் எண்ணம் இருந்தால் தயவுசெய்து அதனை நிறுத்தவும்) இப்படியான விடையங்களில் எதாவது ஒன்றை யாழில் யாராவது இடுகை இட்டு இதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என கருத்துக்களைப் பரிமாறியது உண்டா? அதவிடுத்து மேம்போக்கான கருத்டுக்களை எழுந்தமானத்தில் இங்கு யாரும் முன்வைக்கவேண்டாம்.

உங்கள் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் இங்கு பலர்; சிலரின் சுயலாபப் போக்கை சுட்டிக் காட்ட கருத்தை வைக்கும் போது, யாழ் நிர்வாகவே அவற்றைத் தூக்கி ஏமாற்றிப் பிழைப்போருக்கு துணை போகின்றது. அதன் பின் எவரால் இங்கு உண்மைகளை எழுத முடியும் ?? இக்கருத்தும் தூக்கப்பட்டால் ஆச்சரியப்படத் தேவையில்லை... :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுஞாயிறு அவர்களுக்கும் எனையோருக்கும்,

நான் நினைக்கிறேன், காசினி, கனடா பேராசியர்களின் கல்வித்தகுதி பற்றி கதைக்கவில்லை என்று, அவர் சொன்னது அந்த நாடுகடந்த அரசியல் அமைப்பிலுள்ளவர்களைத்தான் கூறியுள்ளார் என..

அதைவிட..சிலவேளைகளில் உங்களுக்கு நிறைய இந்திய பேராசியர்களை தெரிந்திருக்கலாம், அதற்காக..அவர்களில் ஒரு பகுதியினரை நாகரிக குறைவாய் அழைப்பது சரியல்லா.வட அமெரிக்காவில், இலங்கைத்தமிழரை விட இந்தியதமிழர்கள் அகக் குறைந்தது பல்கலைக்கழக மட்டத்தில்தன்னும் மேம்பட்ட நிலையில் உள்ளார்கள். யாழிலும் இந்திய தமிழர்கள் வருபவர்கள்.. எனவே உங்கள் கருத்துக்களை சரிபார்த்து வையுங்கள்..நானும் எனது கருத்துக்களை பிழையாக வைக்கலாம்..சுட்டிக்காட்டினால

் எற்றுக்கொள்வேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் எழுஞாயிறு அவர்களே, நான் சுட்டிக் காட்ட விரும்பியது, அந்த அமைப்பிலுள்ளவர்களைத்தான். நாடுகடந்த அரசை நாம் முழுமையாக வரவேற்கிறேன். அதனைத் தலைமை தாங்கும் உருத்திரகுமாரன் அண்ணா அவர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆனால், அதிலுள்ள மற்றவர்களைப் பார்க்கும்போது, அது சாத்தியமாகத் தெரியவில்லை. சந்திரகாந்தன் பேராசிரியர் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அவர் அரசியல் பேராசிரியர் அல்ல. அவர் இதில் முன்னிலையிலிருந்து செயற்பட விரும்பினால், அதற்கான தகுதிகளைப் பெற முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து, பேராசிரியர் என்பதால் மட்டும், அவருக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கக்கூடாது. அதுமட்டுமின்றி, மாலையை எதிர்பார்ப்பதில் அவர் முன்னிற்கிறார் என்பதை இங்குள்ளவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் தெரியும். மற்ற நாடுகளைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், கனடாவில் இதற்காக வேலை செய்பவர்கள் மீது எனக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை. இவர்கள் இங்கு செய்த தவறுகளால், சமாதானகாலத்தில் விடுதலைப் புலிகளால் விலக்கி வைக்கப்பட்டவர்கள்தான் அதில் முன்னிலையில் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, இங்கு முன்னிலையில் இருப்பவர்களின் தகுதிகளை ஆராய்ந்து பார்த்தால் தெரியும். கல்வித்தகுதியோ அல்லது வேறுதகுதிகளோ அற்றவர்கள்தான் இதில் முன்னிலையிலிருக்கிறார்கள். இவர்களை வைத்து ஓரு அமைப்பையே நடத்த முடியவில்லை. ஒரு நாட்டின் அரசியலை எப்படித் தீர்மானிக்கமுடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காசினி,

உங்களுடைய சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை..

அவர் ஒரு அரசியல் பேராசிரியர் இல்லைஎன்பதால் அவர் அதற்கு பொருத்தம் இல்லாதது போல் சொல்லுவது சரியாக படவில்லை..அவர் மாலைக்கு முந்திநிற்பதுபற்றி எனக்கு தெரியாது..எங்கட பிரச்சனைகளை தீர்க்க பேராசிரியர்கள்தான் வேணும் எண்டால் அது இப்போதைக்கு சரிவராது..இங்கே புலத்தில் கூட மரபு மாறிய துறைகளுக்கு போவர்களின் எண்ணிக்கை போதுமானதல்ல. அதாவது இப்பவும், பல்கலைக்கழகம்,டொக்ரர்,என் ஜினியர்,அக்கவுன்டன்ட்...என்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வொல்கானோ, ஓரளவு நியாயமான தலைமைத்துவம் இருந்தபோதே, விடுதலைப்புலிகளின் பெயரைப் பாவித்து சொத்து சேர்த்தவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு தீர்வைத் தருவார்கள் என்று நீங்கள் நம்புவது வேடிக்கையாக உள்ளது. எமக்குக் கிடைத்திருப்பது கடைசிச் சந்தர்ப்பம். இப்போதும், துரோகிகளும் கயவர்களும் முன்னிற்கிறார்கள் எனில், தமிழ் மக்களுக்கு விடிவு என்பதே கிடைக்கப் போவதில்லை என்பது உறுதி. அக்குழுவில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள். பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் நிலை இக்குழுவிற்கு வரக்கூடாது என்பதே எனது நோக்கம். மேடையிலோ அல்லது ஊடகங்களிலோ பேசுவதற்கு முன்னர், நீங்கள் பேசவிடயங்கள் பற்றிய ஆய்வைச் செய்துவிட்டு வந்து பேசலாமே. ஆனால், பேராசிரியர் சந்திரகாந்தன் அப்படிச் செய்வதில்லை. தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் சரி, மேடைகளிலும் சரி, அவர் பேசும் விடயம் பற்றிய தெளிவு அவரிடம் இல்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இது தமிழ் மக்களுக்கான விடிவிற்குக் கிடைத்த கடைசிச் சந்தர்ப்பம் என்பதை இக்குழுவில் இருப்பவர்கள் கருத்திற்கொண்டு செயற்படவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதற்காகத் தான் இந்தத்திரியில் கருத்தெழுதிகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காசினி,

எனக்கு பேராசிரியர் சந்திரகாந்தனைப் பற்றி எதுவும் தெரியாது.சிலதடவை தொலைகாட்சியில் பார்த்ததை தவிர..சிலவேளைகளில் இது நகச்சுவையாக (மாத்திரம்) இருக்கலாம்.

..பூவேட சேர்ந்த நாரும் மணம் பெறும்..

நன்றி எனக்கு வேறு ஏதும் தெரியாது..

இலண்டனில் ஈழத்தமிழர்களை தாக்கிய பிரித்தானிய காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு!

.... இன்று அகதிகள் அந்தஸ்து கோரும் எம்மவர்கள் மிக அரிது!!! .... எமது வக்கீல் வியாபாரிகளுக்கு இப்போது வருமானம் குறைவு ... ஏனெனில் அகதி அந்தஸ்து கோரினால் தான் "கிரீன் போம்" இல் ஒரு கைநாட்டு வேண்டி, பிரித்தானிய அரசிடன் ஆயிரங்களை கறக்கலாம்!!! ... இந்த வியாபாரிகளினால் இதுவரை வாழ்க்கையையே தொலைத்தவர்கள் எத்தனை பேர்!!! ஆனால் இந்த வியாபாரிகள் ஒவ்வொருவருக்கும் 20, 30 வீடுகள் ... இந்த அகதி அந்தஸ்து கோரியவர்களின் புண்ணியத்தில்!!!!!!

இன்று இவைகள் இல்லாத படியினால், இப்படியானவைகளை கைகளில் எடுக்கப்பார்க்கிறார்கள். ஏனெனில் இவைகளுக்கும் ஆயிரக்கணக்காக, அரசபடியில் இருந்து வரும்!!!

இன்றுவரை தாயகத்தில் கொல்லப்பட்டு, வாழ்வே அழித்தொழிக்கப்பட்டு அல்லல்படும் மக்களுக்கு நடந்த மனித உரிமை மீறல்களை ... கொண்டு வர வெட்கப்படுகிறார்கள், இந்த வியாபாரிகள்!!!!!! ஏனென்று தெரியுமோ???????? இவைகளுக்கு சிலவேளை இவர்களின் கையினாலும் போட வேண்டி வந்தாலும் என்ற பயம்தான்!!!!!!!!!!!!!

மேலும் தமிழ்த்தேசியத்துன் தூணான "பதிவு" .... அங்கு சிங்களவனால் நடத்தப்பட்ட இனவழிப்புகளுக்கு ஆக்கபூர்வமாக ஒன்றையும் செய்யாது, இங்கு எம்மை அரவணைத்து வாழ் விட்ட வெள்ளைக்காரனுக்கு எதிராக வழக்கு போட .................. :)

  • கருத்துக்கள உறவுகள்

அன்புசால் காசினி மற்றும் அனைவர்க்கும், நான் யாரையும் புண்படுத்துவதற்காக எனது கருத்தினை இங்கு முன்வைக்கவில்லை. மாறாக, நாடுகடந்த தமிழீழ அரசு என்பது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல. தற்போது புலம்பெயர் தேசத்திலும் தமிழர்கள் அரசியலில் சூனியமான ஒரு தன்மையிலேயே இருக்கிறர்கள் அதாவது நாம் வாழ்கின்ற நாடுகளில், எக்கால கட்டத்தில் எப்படியான அரசியல் கட்சிகளுடன் ஆதரவு நிலையினைக் கொண்டிருப்பது என்பதுபற்றிய தெளிவின்மை எம்மத்தியில் காணப்படுகின்றது, மேலும் எமது சேமிப்புப் பலம் என்பது ஏனைய இனங்களுடன் ஒப்பிடும்போது பலமடங்கு தீவிரமானது ஆனால் எதிர்வரும் காலங்களில் புலம்பெயர் தேசங்களில் வாழக்கூடிய எமது சந்ததிகள், அவர்களது மூதாதயர்கள் வெறுமனே தாம் சேர்த்த பணத்தினை இந்தாபிடி எனக் கையளிப்பதின் உடன்பாடுடையவர்களாகவிருக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் வாழ்கின்ற சூழல் அப்படி என்னதான் கட்டுப்பெட்டித்தனமாக நாம் வளர்த்தாலும் எகிறிக்கொண்டு போய்விடுவார்கள். ஆகவே பல்துறைகளிலும் நிபுணத்துவம் பெற்ற அறிவாளர்களை உள்வாங்குவ்தே எமக்கு நன்மைபயக்கும் தாங்கள் கூறிய பேராசிரியர் அவர்கள் வெறும் கருவிமட்டுமே அதாவது நாடுகடந்த தமிழீழ அரசினை உருவாக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் செயலணியின் ஒரு அங்கத்தவர் மட்டுமே. இதன் பின்பான வளர் நிலைகளின்போது தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் பொதுமையான அதாவது பகிரங்கமான தேர்தல்மூலம் புலம்பெயர் தமிழர்கள் தமக்கு நம்பிக்கையானவர்கள் எனக் கருதுபவர்கள் போட்டியிடும் பட்சத்தில் அவர்கள் தெரிவுசெய்யப்படலாம். அதற்கான ஆயத்த வேலைகள் நடைபெறும்போது இவர்போன்றவர்களை தமிழீழ அரசின் ஆட்சிமன்றக் குழுவிற்குள் நுழையவிடாமல் தடுப்பது உங்களது கடமை. ஆனால் இவையனைத்தையும் முன்னின்று செய்வதற்கும் நாம் செய்கின்ற விடையம் மக்களது கருத்தினிற்க்குப் போய் அவர்களை இதனில் ஈடுபாடடைய வைப்பது மிகவும் கடினமான விடையம். ஆக யார் குற்றியாவது இப்போது அரிசியாகட்டும் பின்னர் பொங்குவது யார் என நாமே தீர்மானிப்போம். தமிழ்நாட்டில் பேராசிரியர்கள் எனும் பெயரிலும், டாக்டர் எனும் பெயரிலும் அரசியல்வாதிகள் பலர் வாழ்கின்றனர் அவர்களை மனதில் வைத்தே நான் கூறினேன், மற்றும்படி ஒன்றுமில்லை. நாடுகடந்த தமிழீழ அரசு என்பது தற்போதைய ஈழத்தமிழர்களது அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான போராட்டங்களை சட்டரீதியாக்குவதற்கு எதிர்காலத்தில் வழிசெய்யலாம் அனைத்தும் உங்கள் போன்ற இளையோர்கைகளிலேயே தங்கியிருக்கின்றது,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.