Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று என்ன தேவை!

Featured Replies

இன்று என்ன தேவை!

இந்திய, தமிழ் நாட்டு அரசியல் எமக்கு தேவையற்ற ஒன்று. அதனுள் தலையை நுளைப்பது எமது வேலை அல்ல! அதனை தமிழ் நாட்டு மக்களே தீர்மானிக்கவேண்டும்!!

நாம் எதிரிகதை; தேடுவதா? அல்லது நண்பர்களைத் தேடுவதா?? எது முக்கியம்???

உதாரணத்துக்கு ஒரு கதை..... நான் சிறு வயதில் படித்தது.... இது வெறும் கதையாகவே இருந்தாலும் இதனுள் உள்ள கருத்தை தயவுடன் நோக்கவேண்டுகிறேன்.

அக்பர் என்றொரு மாமன்னர் இருந்தார். அவர் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்டுவந்தார்.

ஆனால் அவருக்கு ஒரு பிரச்சனை வந்தது. அவருடைய நாட்டைச் சுற்றியிருந்த சிற்றரசர்களெல்லாம் ஒன்றுசேர்ந்து அவரது நாடு மீது படையெடுக்கத் திட்டமிட்டனர்.

இந்தச் செய்தி அக்பருக்கு ஒற்றர்கள் மூலமாகத் தெரிய வந்தது. அவர்கள் எல்லோரும் சேர்ந்து படையெடுத்தால் அக்பர் கதி அவ்வளவுந்தான் என்பது அக்பருக்குத் தெரியும்.

அக்பர் தனது மந்திரி பீர்பல் என்பவரை அழைத்து "எனது எதிதிகள் இவ்வளவுபேரையும் அழிக்கவேண்டும் என்ன செய்வது?" என்று கேட்டார். பீர்பல் தன்னிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருக்குமாறு மன்னருக்கு சொன்னார்.

பீர்பல் அயலிலுள்ள சிற்றரசர்களுக்கெல்லாம் அக்பார் நடாத்தும் ஓரு விருந்துக்கு வரமாறு ஓலை அனுப்பினார். சிற்றரசர் அனைவரும் விருந்தில் கலந்து கொண்டனர். அனைவரும் அக்பரின் நண்பர்களாயினர்.

பீர்பல் அக்பரிடம் சொன்னார் "அரசே தங்களுடைய எதிரிகள் அனைவரையும் அழித்துவிட்டேன்... இப்பொழுது தங்களுக்கு புதிய பல நண்பர்களையும் உருவாக்கியுள்னே;."

எதிரிகளை உருவாக்குவதா? அவர்களை நண்பர்களாக்குவதா? எது சிறந்தது?

... முதலில் எம் அயலவனை நண்பனாக்குவோம்! ... அவனன்றி அணுவும் அசையாது!!

... முதலாம், இரண்டாம் உலக மகாயுத்ததில் போட்டி போட்டு அழித்த நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, யப்பான், பிரான்ஸ், ... எல்லாம் இன்றல்ல, அன்றே நண்பர்களாகி விட்டார்கள்! ... இப்படிப் பல

ஆனால் நாம் மட்டும் ... பாரதத்துடன் நண்பர்களாகக் கூடாது!!!!!!!!! ... ஏனெனில் எமக்கு நண்பர்கள் என்றாலே என்னவென்று தெரியாது!!! யாராவது எமக்கு நண்பர்களாக ...???? .

.... இவற்றை எழுதினாலும் அதே துரோகி பட்டம் ...........

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் எதிரிகளை உருவாக்காமல் விடுவது தான் முதற்படி.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களை வெளியில் எடுப்பது தான் முக்கியதேவை.

முதலில் எம் அயலவனை நண்பனாக்குவோம்! ... அவனன்றி அணுவும் அசையாது!!

இதற்கு நாம் என்ன செய்ய வேணும்...அவன் நண்பனாக தயாரா?...அவன் எங்களை எதிரியா பார்க்கேக நாங்க மட்டும் நண்பனா அவன எப்படி கருத முடியும்..இல்லாட்டி நாங்க என்னத்த விட்டு கொடுத்தா அவன் நண்பனாவார்?

... முதலில் எம் அயலவனை நண்பனாக்குவோம்! ... அவனன்றி அணுவும் அசையாது!!

... முதலாம், இரண்டாம் உலக மகாயுத்ததில் போட்டி போட்டு அழித்த நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, யப்பான், பிரான்ஸ், ... எல்லாம் இன்றல்ல, அன்றே நண்பர்களாகி விட்டார்கள்! ... இப்படிப் பல

ஆனால் நாம் மட்டும் ... பாரதத்துடன் நண்பர்களாகக் கூடாது!!!!!!!!! ... ஏனெனில் எமக்கு நண்பர்கள் என்றாலே என்னவென்று தெரியாது!!! யாராவது எமக்கு நண்பர்களாக ...???? .

.... இவற்றை எழுதினாலும் அதே துரோகி பட்டம் ...........

நாய் வாலை நிமிர்த்த முடியாது!

ஈழத் தமிழன் என்றைக்குமே இந்தியாவை நண்பனாக பார்த்தது இல்லை.தன் தாயாக தன் தாய் வீடாகவே பார்த்தான். தாய்க்கும் நண்பனுக்குமுள்ள வித்தியாசம் என்னவென்று உங்களுக்கு தெரியுமென்று நினைக்கிறேன் (சில பெற்ற தாயையே விற்று ஈனப் பிழைப்பு நடத்தும் எட்டப்பர்களுக்கு புரியாது) தமிழிலே ஒரு சிறந்த பழமொழி உள்ளது 'பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு' இங்கே கல்லானது பிள்ளை மனமல்ல பெற்ற மனமே. தாயே எங்களின் தாய் வீடே எங்களுக்கு நஞசு வைத்தது. இந்திய தன் காவலரை அனுப்பி எங்களை வேட்டையாடி எங்களின் விடுதலை இயக்கத்தை அழிக்க நினைத்த போது நாங்கள் இந்தியாவிற்கு எதிராக எந்த தீங்கும் செய்திருக்க வில்லை.கனவிலும் எந்த தீங்கும் நினைத்ததில்லை.

உலக யுத்தங்களின் போது மேலே நீங்கள் கூறிய நாடுகள் தங்களை எதிரிகளாகவே வகைப் படுத்தி காட்டி வெளிப்படையான யுத்தப் பிரகடனம் செய்தே போரிட்டார்கள்.

ஆனால் எம் அன்னை தேசம் எங்களுக்கு பாலும் சோறும் ஊட்டி முதுகிலல்லவா குத்தியது. மகா பாரதப்போர் தொடக்கம் ஈழப் போர்-2 வரை இந்திய தேசம் சூழ்ச்சிகளையே கைக் கொண்டது. இந்திய தேசம் என்றுமே எவருடனேனும் நேர்மையாக இருந்ததில்லை.

இக் கதை யாருக்குப்பொருந்தும் ? ஆயுதப்போராட்டத்திக்கு தூண்டியவர்கள் அவர்களே.தன்சுயநலத்துக்காக ஒரு இனத்தையே அழித்தமகாபாவி இவர்கள்.உண்மை நண்பன் அதைச்செய்வானா?

வேண்டாம் இவர்கள் . இன்றல்ல நாளை விடிந்தேஆகும்.

நுணாவிலான்,

நல்ல கருத்து, மனமுடைந்து நாம் முடிவெடுக்கக் கூடாது, எதிரிகள் எல்லோரும், சிங்களத்தால் எமக்கு புலத்தில் எதிரியாக்கப் பட்டவர்கள். உமக்கும், எனக்கும் புலத்தில் பெயர் சொல்லக்கூடிய எதிரிகள் உண்டா?, புலத்தில் நாம் எம் இன விடுதலைக்குப் பலம் சேர்க்காமல், எல்லாம் அவர் செய்வர் என்று உண்டு, உடுத்து இருந்ததுதான் மிச்சம்.

நுணாவிலான்,

நல்ல கருத்து, மனமுடைந்து நாம் முடிவெடுக்கக் கூடாது, எதிரிகள் எல்லோரும், சிங்களத்தால் எமக்கு புலத்தில் எதிரியாக்கப் பட்டவர்கள். உமக்கும், எனக்கும் புலத்தில் பெயர் சொல்லக்கூடிய எதிரிகள் உண்டா?, புலத்தில் நாம் எம் இன விடுதலைக்குப் பலம் சேர்க்காமல், எல்லாம் அவர் செய்வர் என்று உண்டு, உடுத்து இருந்ததுதான் மிச்சம்.

கந்தப்பு சொல்வது சரி. முகாமிலுள்ள மக்களை உடன் வெளியில் எடுப்பது அவசியம்.

அவர்கள் வெளியில் வரும் அதே வேளையில், அவர்கள் மீண்டும் உரிமையுடன் வாழ வழி அமைத்துக் கொடுப்பது எமது கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் முள்ளி வாய்க்காலில் மக்கள் அவலம் ஏற்பட்ட போது ரொரண்டோவிலோ அல்லது லண்டனிலோ ,சுவிசிலோ உருவாக்கப்பட்ட ஊர்வலங்கள் ஏன் நோர்வேயுடனான பேச்சு வார்த்தையில் மேற்குலகம் காட்டும் ஒர வஞ்சனைக்கு எதிராக ஏன் புலம் பெயர் புலிகளின் அமைப்பால் ஒன்றும் செய்யவில்லை? .

இருக்கலாம் பல மக்கள் ஊர்வலத்தில் பங்களிக்கவில்லை அல்லது காசு கொடுக்கவில்லை. அதற்காக எப்படி அம்மக்கள் போராட்டத்துக்கு எதிரானவர்கள் ஆக முடியும்? ஒரு வேளை இம்மக்களுக்கு தமிழீழம் தான் ஒரு வழி என்று வாக்களிக்க சொல்லுங்கள். வாக்களித்து விடுவார்கள் நிச்சயமாக.

பல பேருக்கு புலிகளை பிடிக்காது. ஏனெனில் அவர்கள் சகோதர படுகொலை செய்தவர்கள் என முகத்துக்கு நேராக சொல்கிறார்கள். இதன் காரணகாரியங்களை அறியும் நேரமல்ல இது என்ற போதும் எதிரி எப்படி எம்மை உபயோகித்துள்ளான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீணட கால பலஸ்தீனிய நண்பர் அடிக்கடி கூறுவது இது தான் "கை விடாதீர்கள் நம்பிக்கையை". வெற்றி என்பது எம்மை பொறுத்தது தான் என்று.

எம்மை விட பல காலம் போராடும் போராளி குழுக்களையாவது முதலில் எமது நண்பர்களாக அரவணைக்க வேண்டும்.

எமது மக்கள் சார்பாக பல நாடுகளிலும் அரசியல் ரீதியாக வெற்றி பெற்று வர சிங்களவர்களை விட எமக்கே பலமான சாத்திய கூறுகள் உள்ளன.இவற்றை நாம் சரியாக பயன்படுத்துவோமெனில் சிறிலங்கா அரசை அரசியல் பொருளாதார ரீதியாக தனிமை படுத்த முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சிங்களவனை நண்பனாக்கச் சொல்கிறீர்களா நெல்யைன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இந்தியன் நானும் இந்தியன் என்று தலைகீழா நிக்கிற தமிழ்நாட்டுத்தமிழனையே மாக்களா நினைக்கிற இந்தியாவா எங்களை நண்பனா ஏற்கும்? நேரு பரம்பரை இருக்கிறவரை எந்தத்தமிழரும் தலையெடுக்கேலாது. சீக்கியர் சொல்வதுபோல் அந்தப்பரம்பரையே அழியோணும்.

இந்தியா என்றால் இந்து மதம் தான் நினைவில வரும் அந்த இந்து மதத்தை உலகம் பூராவும் கோயில் கட்டி பரப்பினவன் ஈழத்தமிழந்தான்.கடந்த 20 வருடங்களிள் இந்தியா,இலங்கையை தவிர எனைய உலகநாடுகளில் இந்தியனின் அடையாளத்தை கொடுக்கும் இந்து கோயிலை கட்டியவன் ஈழத்தவன் .

இது ஒன்ரே போதும் நாங்களும் அவர்களும் ஒண்றுக்குள் ஒண்ரு என்று காட்ட...

அரோகரா ராம்.....ராம் ...ராம் அரோகரா

  • தொடங்கியவர்

இந்த திரியை நான் ஆரம்பித்த காரணம், இங்கு நாங்கள் ஒரு தெளிவுக்கு வரவேண்டும் என்பதே. சிங்கள அரசு எமக்கு நிரந்தர எதிரி என்பது எம் எல்லோருக்கும்மிகத் தெளிவாகத் தெரிந்த விடயம். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

அண்மையில் பேராசிரியர் சுப.வீ அவர்க்ள் பற்றிய கருத்துகள் இங்கு ஆராயப்பட்டன. அவர் உண்மையில் ஈழத் தமிழ் மக்களுக்கு மிக ஆதரவான ஒருவர். ஆனால் அவரது தமிழ் நாட்டு அரசியல் எமக்கு தேவையற்றது. அதுபற்றிய விமர்சனங்களும் தேவையற்றவை. இவ்வாறான விமர்சனங்கள் அவரை எம்மிலிருந்து விலகிச் செல்லவே வழி வகுக்கும். இவ்வாற்ன தவிர்க்கும் அதே நேரம் அவர்களை தொடர்ந்தும் நண்பர்களாக வைத்திருப்பதும் புதிய நண்பர்களை உருவாக்குவதும் அவசியம்.

முயற்சிப்போமா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பற்றி நாம் என்ன நினைக்கின்றோம் என்பதைவிட

இந்தியா எம்மைப்பற்றி என்ன நினைக்கின்றது என்பதே முக்கியம்

இந்தியாவை என்றுமே நாம் மதித்தே வந்துள்ளோம்

இந்தியாவின் பின் செல்லவே துடிக்கின்றோம்

ஆனால்இந்தியா???

தலைவர் கடைசிவரை இந்தியாவை மீறாது காத்திருந்து அழிக்கப்பட்டார் என்ற உண்மைக்குப்பின்பும்.....???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.