Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ooo

Edited by சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு

இந்த நிலையில் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பானது முதல் கட்டமாக 217 பாதிக்கப்பட்ட யாழ்

பல்கலைகழக மாணவர்களுக்கு தலா 3000 ரூபா வீதம் அவசர நிதி உதவியினை கடந்த வாரம் வழங்கி உள்ளனர் .

மேலும் கிழக்குப் பல்கலைகழகம் , பேராதனை , மொரட்டுவ , ஜெயவர்த்தனபுர , கொழும்பு

பல்கலைகழகங்களில் தமது பட்டப் படிப்பை ஆரம்பித்திருக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும்

சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பினர் தலா 5000 ரூபா வீதம் 76 மாணவர்களுக்கு கடந்த வாரம் வழங்கி உள்ளனர் .

இது சம்மந்தமான உதவிகள் கிடைத்தவர்கள் விபரங்களையும் இங்கு விபரமாகத் தந்தால், பலர் நம்பிக்கையுடன் உதவ முன்வருவார்கள் என்று நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே மாதிரியான உதவிகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எனவே இணைந்த செயற்ப்பாடுகள் நிறைந்த பலனைத்தரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பினர் விரும்பின் 416 520 1214 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற முடியும்.!

இதுவரையில் ம 300க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் உதவிகளை பெற்றுக்கொண்டிருக்கின்றனர். தனிப்பட்ட ரீதியில் விபரங்கள் பங்களிப்பு செய்வோருக்கு வழங்கப்பட்டுள்ளன.

Edited by Nitharsan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் பல்கலைகழகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுபவர்கள் மொத்தம் 600 க்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர் . இதில் வன்னி தமிழ் சங்கம் உண்மையில் மாதாந்தம் உதவி செய்துகொண்டிருப்பது 200 க்கும்

குறைவான மாணவர்களுக்கே . அவர்கள் அத்தனை பெரும் யுத்த காலகட்டத்திலேயே பல்கலை கழகத்தில் இருந்த மாணவர்கள் .

தற்போது நலன்புரி முகாமில் இருந்து வெளிவந்த எந்த ஒரு மாணவனுக்கும் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பினை தவிர வேறு எவரும்

இன்னும் உதவிகள் எதனையும் செய்யவில்லை . இதனை தாங்களே பல்கலை கழக மாணவர்களை தொடர்பு கொள்வதன் மூலமாக அறிந்து கொள்ளலாம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

இணைந்த செயற்ப்பாட்டை வேண்டியே இத்தகவல் இங்கு பரிமாறப்பட்டதேயோழிய அவர்கள் மட்டுமே செய்கின்றார்கள் என்று சொல்வதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகின்றேன். தனித்து செயற்ப்படுவதை விடு பாரிய அளவில் ஒன்றினைந்து செயற்படுதல் காலத்தின் தேவையாக உள்ளது. அதை நீங்கள் உணரவில்லை என்பது மிகவும் கவலைக்கிடமான விடயம்.

தொலைபேசி அழைத்து செயற்பாடுகள் பற்றி கேளுங்கள் என்று சொன்னல் தொலைபேசி இலக்கத்தை நீக்குங்கள் என்று நீங்கள் அவர்களோடு கதைத்திலிருந்து ஒற்றுமை என்பது வெறும் பேச்சில் இருப்பதை என்னால் உணரமுடிகின்றது.

எப்படியோ நானோ நீங்களோ பெரியவன் அல்ல நாம் அனைவரும் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து குறிப்பிட்ட அமைப்பு, அல்லது நபர்கள் சார்ந்து நிற்பதால் தான் இழந்தவையை கூட மீட்க முடியாமல் இருக்கின்றோம்.

அமைப்பின் பெயரை குறிப்பிடாமல் தான் நான் உங்களிடம் தகவலைப்பரிமாறியாமைக்கும் அதுவே காரணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ,

கடந்த 4 மாத காலமாக கனடா , ஆஸ்திரேலியா , நோர்வே போன்ற நாடுகளில் இருந்து செயற்படும் அனைத்து அமைப்புக்களுடன் ஒன்றிணைந்தே வேலை செய்கிறோம் . எங்களுக்குள் தகவல் பரிமாற்றம் , தொலைபேசி உரையாடல்கள் என்பன தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்றது . ஒரு மாணவருக்கு ஒரு அமைப்பு மட்டுமே உதவி செய்தல் வேண்டும் என்பதையும் நாங்கள் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறோம் .

ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தினை நாங்கள் நன்றாகவே அறிந்து வைத்து இருக்கின்றோம். எம் அமைப்பு மாத்திரமோ அல்லது வேற எந்த அமைப்புக்களோ தனித்து நின்று அத்தனை மாணவர்களுக்கும் உதவி செய்வது என்பது சாத்தியமில்லாத விடயம் . பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து வேலை செய்வதன் மூலமே இந்த உதவிவழங்கும் திட்டத்தினை சிறப்பாக செயல் படுத்த முடியும்.

மேலும் தாங்கள் குறிப்பட்டது போன்று 300 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படவில்லை . இன்னும் அந்த மாணவர்கள் கையில் 100 ரூபாய் கூட இல்லாத நிலையில்தான் இருக்கிறனர் . மாணவிகளின் நிலைமை

இதைவிட மோசம் . இவை அனைத்தையும் நாங்கள் வீடியோ பதிவுகளாக எடுத்துள்ளோம் . இவை அனைத்தும் அடுத்த வாரமளவில் வெளியிடப்படும் . அந்த நேரத்தில் யாழ் பல்கலைகழகம் மற்றும் பிற பல்கலைகழகங்களில் உள்ள எமது மாணவர்களின் உண்மையான நிலைமை என்ன என்பதனை அனைவரும் குறிப்பிட்ட மாணவர்களின் மூலமாகவே அறிந்துகொள்ளலாம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

மன்னிக்கவும் மக்களுக்கான சேவைகளை விவாதப்பொருளாக்க நான் விரும்பவில்லை.

அதே நேரம் உங்களை போன்றே நானும் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.கனடாவிலிருந்து 300 வரையான மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அதில் மறுப்பதற்கோ மறைபதற்கோ எதுகும் இல்லை. நாம், நம்மோடு இணைந்த மக்கள் வழங்கும் உதவிகளுக்கான ஆதரபூர்வமான தகவல்கள் எம்மிடமும் உண்டு!

அவற்றை ஆவணப்படுத்தி சில நிகழ்வுகளின் ஒளிப்படங்களாக காட்சிப்படுத்தியுள்ளோம். கனடாவில் இருக்க கூடியவர்களுக்கு அவை தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அது மட்டுமன்றி இவ்வாறான திட்டங்களின் போது தவறுகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது என்பதையும் நாம் அறிவோம்.

இனியும் இனிமேலும் எம்மிடம் விண்ணப்பங்கள் கிடைக்கப்படுமிடத்து அவற்றுக்கான நிதியுதவியை சேகரித்து வழங்க நாம் தயாராக இருக்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

தம்மிழ் சமூகத்தின் கல்வி இன்று திட்டமிட்ட முரையில் சிதைக்கப்பட்டுள்ள நிலையில் , அவர்களின் கல்வி மற்றும் அன்றாட வாழ்வுக்கான அடிப்படை வசதிகளை அமைத்துக்கொடுக்கும் வகையில் சில தனிநபர்களும், அமைப்புக்களும் தம்மாலானதைச் செய்துவருவது மிகவும் வேண்டப்பட்டதும், காலத்தின் கட்டாயமானதும் என்பதே எனது கருத்து.

அந்தவகையில், இன்று அர்வதேச மாணவர் அமைப்பு எடுத்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. அவ்வாறான சில நடவடிக்கைகள் இங்கு அவுஸ்த்திரேலியாவிலும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறான சில நடவடிக்கைகள் பற்றிய சில தகவல்களை இங்கு தரலாம் என்று நினைக்கிறேன்.

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இங்கிருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவர் அமைப்பினர், வன்னியில் அல்லப்படும் யாழ் பல்கலைக்கழக மாண்வர்களுக்கென சுமார் 6,000 அவுஸ்த்திரேலிய டொலர்களை யாழ்ப் பல்கலைக்கழக உபவேந்தர் உதவி நிதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவ்வாறே இன்னொரு தனிப்பட்ட உதவியாக 1000 டொலர்கள் இந்த வருடம் ஏப்ரில் மாதத்தில் இக்கட்டான நிலையில் தவித்த மாணவர்களுக்கென ஒரு நலன்விரும்பியினால் அனுப்பிவைக்கப்பட்டது

இதற்கு மேலதிகமாக அவுஸ்த்திரேலிய தமிழ் பட்டதாரிகள் சங்கத்தினரும் உடனடி உதவித்தொகையாக 5,000 லாடலகளை அனுப்பி வைத்துள்ளதோடு, மேலும் தெரிவுசெய்யப்பட்ட 85 மாணவர்களுக்கு மாதம் தலா 50 டாலர்கள் வீதம் உதவுவதெனவும் தீர்மானித்து உப வேந்தரின் உதவி நிதிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இவ்வாறான நடவடிக்கைகள் அங்காங்கே நடந்துவந்தாலும் அவை யாவும் ஒரு குடையின்கீழ் ஒன்றிணைய வேன்டுமென்பதே பலரின் கருத்தாகும்.

ஒன்றிணைக்கப்பட்ட உய்தவிகள் உப வேந்தரின் நிதிக்குச் செல்வதன் மூலம் அவர் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவ்வுதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும்.

ஆகவே நாம் அனைவரும் இந்த உதவிகளை ஒரு அமைப்பின்கீழ் ஒன்றிணைத்து செயப்பட வேன்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ நானோ நீங்களோ பெரியவன் அல்ல நாம் அனைவரும் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து குறிப்பிட்ட அமைப்பு, அல்லது நபர்கள் சார்ந்து நிற்பதால் தான் இழந்தவையை கூட மீட்க முடியாமல் இருக்கின்றோம்.

நிதர்சன் இன்னும் ஒற்றை நிருவாகத்தின் கீழ் இணைத்தாலே நமது மக்களுக்கு சிறப்பாக உதவ முடியுமென்ற கருத்தை விடுங்கள். இழந்தவற்றுக்கெல்லாம் முழுமையான காரணம் இத்தகைய ஒன்றுபடுத்துகிறோம் என் பம்மாத்துக்கள்தான்.

ஏற்கனவே இருந்த ஒற்றை தொண்டு நிறுவனத்தால் இப்ப என்னத்தை மக்களுக்குச் செய்ய முடிகிறது ?

சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பும் தனது பக்கத்தால் உதவிகளைச் செய்வது எதிர்காலத்தில் நிறைந்த பலனைக் கொடுக்கும் என்பது எனது கருத்து.

இந்தளவு செய்தோம் இந்தளவு பேரை எங்கள் தலையில் தாங்கினோம் என்ற அறிக்கைகளுக்காக பரந்த உதவிகளை ஒரு வன்னித் தமிழ்ச் சங்கம் தனக்குள் அடைத்துவிட நினைக்காமல் மற்றைய அமைப்புகளையும் இயங்க விடுதலே சிறந்தது.

காலப்போக்கில் ஒன்றிணைவு கூட்டிணைவு பற்றி செயற்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் இனிமேலும் எம்மிடம் விண்ணப்பங்கள் கிடைக்கப்படுமிடத்து அவற்றுக்கான நிதியுதவியை சேகரித்து வழங்க நாம் தயாராக இருக்கின்றோம்

ஏற்கனவே விண்ணப்பங்களை மாதக்கணக்கில் உங்கள் சங்கத்துக்கு அனுப்பிவிட்டுக் காத்திருக்கும் மாணவர்களுக்கு இதுவரையில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா ?

பத்தாயிரம் கொடுத்துவிட்டு முப்பதாயிரம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட கதைக்கு ஏதாவது பதில் பெற்றீர்களா ?

இவ்வாறான நடவடிக்கைகள் அங்காங்கே நடந்துவந்தாலும் அவை யாவும் ஒரு குடையின்கீழ் ஒன்றிணைய வேன்டுமென்பதே பலரின் கருத்தாகும்.

ஒன்றிணைக்கப்பட்ட உய்தவிகள் உப வேந்தரின் நிதிக்குச் செல்வதன் மூலம் அவர் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவ்வுதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும்.

ஆகவே நாம் அனைவரும் இந்த உதவிகளை ஒரு அமைப்பின்கீழ் ஒன்றிணைத்து செயப்பட வேன்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

ஒன்றிணைவு நல்லதுதான் ரகுநாதன். அவை தொடர்ந்து நீண்டகால பயனுடையதாக இருக்கும். ஆனால் இப்போது ஒரு குடையில் நின்று பெரியளவில் பங்களிப்புகள் செல்ல முடியாத நிலமையிருக்கிறது.

உபவேந்தர்களும் தமக்குப் பிடித்த தமக்கு தெரிந்தவர்களுக்கே முதலிடம் கொடுக்கிறார்கள். இவையெல்லாம் திருத்தப்பட்டு சரியாக உதவிகள் போகும் வரை பல பக்கங்களால் உதவிகள் செல்வதுதான் அந்த மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் உதவியில் மோசடியா ? செல்வாக்கா ?

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து பல மாணவர்கள் தமது பல்கலைக்கழக மற்றும் பாடசாலைக்கல்வியைக் கற்க முடியாத பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறார்கள். இந்த மாணவர்களுக்கு சில அமைப்புக்களும் பல தனிநபர்களும் அங்கங்கு உதவிக் கொண்டுமிருக்கிறார்கள்.

இத்தகைய உதவிகளை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டுமென சில ஒன்றியங்களின் செயற்பாட்டாளர்கள் முயற்சி செய்வதும் வரவேற்கத்தக்க விடயம். ஏற்கனவே தமிழர்களுக்காக இருந்த கட்டமைப்புகள் போல ஒரு அமைப்புத்தான் இருக்க வேண்டும் அதன் ஊடாகத்தான் உதவிகள் கொடுபட வேண்டுமென்ற விதியை இனியும் நாங்கள் எழுதி வைக்க வேண்டுமா ?

ஏற்கனவே நாம் உதவவிரும்பின் அது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மட்டும்தான். அதைத்தான் நாமும் எல்லாருக்கும் சிபாரிசு செய்தோம். மற்றும் எந்த நிறுவனங்களையும் நாம் வளர விடவுமில்லை வளர்க்கவுமில்லை. அதன் விளைவு இன்று தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் கையில் பலகோடிகள் இருந்தும் அது சிலரது சொத்தாகிவிட்டது. தேவையானவர்களுக்குப் பயன்படாமல் தனிச்சொத்தாக அங்குமிங்கும் அடிபாடும் இழுபாடும் நடக்கிறது.

இதுபோன்றதொரு நிலமைக்கு இட்டுச் சென்று அடுத்தும் ஒற்றை நிறுவனங்களை உருவாக்குவதை விட்டு மேலும் பல உதவும் அமையங்களை தமிழர்கள் உருவாக்குவதுதான் சிறந்தது என்பது எனது கருத்து.

இன்னும் பல உதவும் அமையங்களை அமைய ஏற்கனவே இருக்கும் அமையங்கள் வழி விடவேண்டும். ஒன்றில்லாவிடில் அடுத்த அமையத்தால் உதவிகள் சென்று கொண்டிருக்க வேண்டும். ஒரு அமைப்பால் எல்லா மாணவர்களது தேவைகளையும் பூர்த்தி செய்வது இலகுவானது அல்ல. இதை குறிப்பிட்ட சில சங்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் *வன்னித் தமிழ்ச் சங்கம்* கனடாவிலிருந்து யாழ் மற்றும் பிற மாவட்டங்களிலுள்ள தமிழ் மாணவர்களுக்கு உதவுகிறது. தற்போது சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பும் தனது உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. இவற்றை விடவும் தனிநபர்கள் மற்றும் சில நண்பர்கள் இணைந்தும் தேவைகளைப் பொறுத்து உதவி வருகின்றனர்.

இவற்றில் வன்னித் தமிழ்ச் சங்கம் செய்யப்படும் உதவிகள் அவர்களால் சொல்லப்பட்டது போல உண்மையில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. பல மாணவர்கள் இந்தச் சங்கத்திடம் தமது விண்ணப்பங்களை எழுதிக் கொடுத்துவிட்டு கப்பல் வருமா கப்பல் வருமா என வன்னி மக்கள் காத்திருந்தது போலக் காத்திருக்கிறார்கள்.

இப்படிக் காத்திருக்கும் மாணவர்கள் பலரிடம் ஒரு நூறு ரூபாய் கூட இல்லாத நிலையில் இந்த அமைப்பைச் சார்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ள தொலைபேசியெடுத்துத் தமது நிலமையை விளக்கியும் இன்னும் எதுவும் கிடைக்காத நிலமையில் இருக்கிறார்கள். இவர்களை விட இன்னும் சிலருக்கு ஒரு தரம் அல்லது இருதரத்துடன் உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவர்கள் உதவுவார்கள் என்று இன்னும் பலர் நம்பியிருக்க என்ன செய்வதென்று தெரியாத நிலையில் மேலும் பல மாணவர்கள் வன்னித் தமிழ்ச் சங்கத்தை நம்பியிருக்கிறார்கள்.

இதற்கான காரணம் வன்னித் தமிழ்ச் சங்கமா அல்லது வன்னித் தமிழ்ச் சங்கத்தின் உதவியைப் பங்கீடு செய்யும் பங்கு பிரிப்போரா என்பது புரியவில்லை. எதுவாயினும் இவற்றைக் கண்டறிந்து நடவடிக்கைகள் எடுப்பது வன்னிச் சங்கத்தின் பொறுப்பானவர்களின் பொறுப்பே. இத்தகைய உதவிகள் கிடைக்காமை தொடர்பாக வன்னித் தமிழ்ச் சங்கத்தின் தொடர்பாளர் ஒருவருக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இந்தத் தவறு குறித்து வன்னித் தமிழ்ச் சங்கம் நடவடிக்கை ஏதும் எடுத்ததாகவும் தெரியவில்லை. ஆனால் எவராவது பல்கலைக்கழக மாணவர்களுக்கோ அல்லது முகாம்களிலிருந்து வெளிவந்திருக்கும் ஆதரவற்ற சிறுவர்களுக்கோ உதவிகள் கோரினால் உடனடியாக இந்தச் சங்கம் தம்முடன் இணையுங்கள் ஒரு குடையின் கீழ் இயங்குவோம் என்ற விண்ணப்பத்தை வைத்துவிடுகிறது. குறிப்பிட்ட சிலருக்கு தொடர்ந்து உதவிகள் கிடைப்பதை மட்டுப்படுத்தலாம் என்றொரு ஆலோசனையையும் வழங்குகிறார்கள். ஆனால் உதவிகள் கிடைக்கிறது என இவர்களால் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு இவர்களால் வாக்குறுதியழிக்கப்பட்ட உதவி கிடைக்காமல் இன்னும் அவதிப்படுகிறார்கள் பலர்.

இந்த நிதிகளைப் பங்கீடு செய்து கொடுக்கும் மாணவர் பிரதிநிதிகள் மற்றும் பேராசிரியர்கள் கூட செல்வாக்குச் சார்ந்தும் முன்னுரிமை கொடுத்து உதவுவது கூட நடைபெறுகிறது.

மேமாதம் அளவில் 3யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவிகள் கோரியிருந்தேன்.

வவுனியாவில் ஒரு நண்பர் தனது அலுவலாகச் சென்ற ஓர் அலுவலகத்தில் ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு உதவி கோரிய விண்ணப்பத்துடன் அங்குமிங்கும் அலைந்ததைக் கண்டார். அங்கு அவர்கள் கேட்கும் எதனையும் சரியாக புரிந்து கொள்ள முடியாத ஒரு ஏழைத்தாய் அந்தத்தாய். ஏற்கனவே தனது ஒரு பிள்ளையை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இழந்தவர். தனது மிஞ்சிய 3பிள்ளைகளுக்காக உதவிகள் கேட்டுக் கடைசி முயற்சியாக அந்த இடத்தில் வந்திருப்பதைக் கண்ணீரோடு தெரிவித்தார். அப்பிள்ளைகளுக்கு உதவி கோரிய நண்பர் அந்தத்தாயுடன் தொடர்பெடுத்துத் தந்தார் பேசுவதற்கு. அந்தத்தாயின் அழுகை இன்னும் காதுக்குள் கேட்டபடியிருக்கிறது. எத்தனை பேரிடம் தனது பிள்ளைகளுக்கு உதவும்படி அந்தத்தாய் ஏறியிறங்கியிருக்கிறாள் என்பது அந்தத்தாயின் கண்ணீரால் வெளிப்பட்டது.

ஏற்கனவே அந்தத்தாயின் பிள்ளைகள் வன்னித் தமிழ்ச் சங்கத்திடம் தமது விண்ணப்பங்களை அவர்களது தொடர்பாளர்களிடம் விண்ணப்பித்துவிட்டுக் காத்திருந்தார்கள். எதுவும் உதவி கிடைக்காத நிலையில் தன் பிள்ளைகளுக்கு ஒவ்வொருவரும் சொல்லும் அலுவலகங்களுக்கு அவர்களது விபரங்களோடு திரிந்த அம்மாவிடம் இனி யாரிடமும் அலையாதீர்கள் என அறிவித்துவிட்டு நமது நண்பர்கள் வட்டத்திற்குத் தெரிவித்தேன்.

இரு மாணவர்களுக்கு ஒருவர் உதவ முன்வந்தார். அந்த நண்பர் இதுபற்றி இந்த வன்னித் தமிழ்ச் சங்கத்திடம் கூறியிருந்தார். உடனடியாக வன்னித் தமிழ்ச் சங்கம் தம்மிடம் அந்த மாணவர்களின் விபரங்கள் வந்திருக்கிறது தாம் உதவுவதாக வாக்குறுதி தந்தார்கள். சொல்லப்பட்ட 2வாரத்தில் ஒரு மாணவருக்கு வன்னித் தமிழ்ச் சங்கத்தினால் இலங்கை ரூபாவில் பத்தாயிரம் (இரண்டு மாதங்களுக்கானது) யூன் மாதம் கிடைத்தது. ஆனால் வன்னித் தமிழ்ச் சங்கத்திலிருந்து தொடர்பு கொண்டவர் தாம் முப்பதாயிரம் ரூபாய் (ஆறு மாதங்களுக்கான தொகை) கொடுத்திருப்பதாகவும் ஏனையவர்களுக்கும் அடுத்துச் சிலவாரங்களில் உதவுவதாகத் தெரிவித்தார்கள்.

ஆனால் யூலைவரை ஏனைய இருவருக்கும் உதவிகள் கிடைக்கவில்லை. உதவிகள் சென்றடையும் என்ற நம்பிக்கையில் நாமும் அதனை அப்படியே விட்டுவிட்டோம். ஆனால் ஒரு மாணவருக்குக் கொடுக்கப்பட்ட பத்தாயிரம் ரூபாவைத் தவிர வன்னித் தமிழ்ச் சங்கத்தால் இதுவரையும் எந்தவித நிதியும் கொடுக்கப்படவில்லை.

எதிர்பாராமல் செப்டெம்பர் இந்த மாணவர்களது தாயாரிடம் தொடர்பு கொண்டு உதவிகள் கிடைக்கிறதா எனக் கேட்ட போதுதான் மேற் குறிப்பிட்ட பத்தாயிரம் ரூபா மட்டும் கொடுபட்டது தெரியவந்தது. உதவி கிடைக்கப்பெற்ற மாணவனோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போதுதான் தெரிந்தது அவரது சகோதரர்களும் இன்னும் பலரும் வன்னித் தமிழ்ச் சங்கத்தை நம்பிக் காத்துக் கொண்டிருப்பது.

இதன் பின்னர் மீண்டும் உதவி கோரி நான் இணையத்தில் போட்டபோது இந்தச் சங்கம் வாயும் திறக்கவில்லை. இணையத்தில் செய்தியைப் பார்த்துவிட்டுப் பல மின்னஞ்சல் உதவ விரும்பம் தெரிவித்து வந்தது. ஆனால் சிலர் உதவத் தயாராக இருப்பதாயும் அவர்களது கணக்கிலக்கத்தையும் கேட்டார்கள். 3மாணவர்களுக்குமான 4மாதங்களுக்குமான உதவிகள் ஒக்ரோபர் 6ம் திகதி கிடைக்கும் வகை செய்துள்ளார்கள்.

இந்த மாணவர்கள் ஊடாக மேலும் சிலருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களிடம் தொடர்பு கொண்ட போது பலர் வன்னித் தமிழ்ச் சங்கத்திடம் உதவிக்கு விண்ணப்பித்துவிட்டு வேறு எந்த வழியையும் தேடாமல் இருக்கின்ற உண்மை புரிந்தது.

இப்படித் தொடர்பு கொண்ட ஒரு மாணவிக்கு ஒரு குடும்பத்திடம் உதவி கேட்டேன். அவர்கள் சம்மதித்தார்கள். அவர்களது உறவினரான பேராசிரியர் ஊடாக ஒரு மாதம் உதவி கிடைத்தது. மறுமாதம் உதவி போகவில்லை. காரணம் கேட்ட போது சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தார்கள். கனடா வன்னித் தமிழ்ச் சங்கத்திலிருந்து அந்த மாணவி உதவி பெறுவதாக அந்தப் பேராசிரியர் சொன்னதாக. அவர்கள் அவளுக்கான உதவியை நிறுத்திவிட்டார்கள்.

அந்த பேராசிரியர் நாம் உதவி கோரும் வரை தனது உறவினருடன் எதுவிதமான மாணவர்களுக்கான உதவிகள் தேவை பற்றி கூறவுமில்லை உதவிகள் கோரவுமில்லை. ஆனால் குறித்த மாணவிக்காக அவர்கள் அனுப்பிய பணத்தை தான் வேறு மாணவர்களுக்கு கொடுக்கப் போவதாகவும் மாணவர்களுக்கு உதவுமாறும் கோரிக்கை விட்டுள்ளார்.

அந்த மாணவியைக் குறித்த பேராசிரியரின் வீட்டிற்குச் சென்று பணத்தை வாங்கும்படி பண உதவி செய்தவர்கள் கூறியுள்ளார்கள். பேராசிரியர் அந்த மாணவியை விசாரணை செய்ய வேண்டுமாம் எங்கிருந்தாவது உதவி கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய.

உண்மையிலேயே அந்த மாணவிக்கு வன்னித் தமிழ்ச் சங்கத்தால் எதுவும் கிடைக்கவில்லை. பேராசிரியரின் வீட்டுக்குப் போகாமல் இதனைத் தனது தாயாருக்குச் சொல்லி அழுதிருக்கிறாள். ஏற்கனவே குடும்பம் திக்கொன்றாய் பிரிந்த நிலையில் இருக்கும் இந்த மாணவியின் நிலைபற்றி அவளது தாயார் தொலைபேசியில் தெரிவித்திருந்தார். தற்போது அந்த மாணவிக்கு லண்டனிலிருந்து ஒருவரால் 2மாதங்களுக்கான கொடுப்பனவு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா முகாம்களுக்குள்ளிருந்து வெளிவந்த பல மாணவர்கள் கடந்த 2வருடங்களாக முல்லைமாவட்டத்தில் பாடசாலை போகாது இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நமது *நேசக்கரம்* நண்பர்கள் வட்டத்தினால் கற்றலுக்கான உதவிகள் கொடுக்கப்படுகிறது. சில மாணவர்களை பொறுப்பேற்றுக் கவனிக்கிறோம். (பங்களிப்போருக்கு விபரங்கள் பயனாளர்கள் பயன்பெற்றமைக்கான கடிதங்கள் மற்றும் சிலருக்கு நேரடித் தொடர்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது)

இவர்களுக்கான உதவிகள் கோரிய செய்தியொன்றும் அண்மையில் வெளியிட்டிருந்த போது இதே வன்னித் தமிழ்ச் சங்கத்திலிருந்து நண்பர் ஒருவர் அவசர அவசரமாக தொடர்பு கொண்டு தமது ஒன்றியத்துடன் இணைப்பை ஏற்படுத்துமபடி கோரினார். இணைந்த கூட்டு முயற்சியால் பலர் பயனடையலாம் என்ற நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நல்நோக்கில் இணைந்து செயற்படுதலில் எந்த முரண்பாடுமில்லை. ஆனால் எல்லாரும் என் பின்னால் வாருங்கள் எல்லாவற்றையும் எல்லாரையும் ஒரு குடையின் கீழ் நிறுத்திச் செயற்படுவோம் என்பது தற்போதைய நிலையில் தமிழரைப் பொறுத்தவரை இயலாத விடயம். ஒரு அமையத்தின் கையில் நிதிகள் குவிய வேண்டும் என்பதும் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இயங்க வேண்டும் என்ற எழுதாத விதியில் இதுவரை இயங்கியதால் தமிழினம் பெற்ற வெற்றி எல்லாவற்றையும் இழந்தது தான் என்பதை இந்தச் சங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாடுகளிலும் பல நிறுவனங்கள் இயங்குகின்றது. ஒற்றைக் குடையில் வடம் பிடிக்க வேண்டுமென்ற சட்டத்தை வைக்காமல் பல நிறுவனங்கள் செயற்படுகின்றன. இவற்றால் பல நாடுகள் பயன்பெறுகின்றன. அது போல ஏன் நாங்களும் உதவும் நிறுவனங்களை உருவாவதைத் தடுக்க வேண்டும் ?

இங்கிருந்து பணம் சேகரித்து அனுப்புவது என்பது எவ்வளவு சிரமம் என்பதை நாமும் புரிந்து கொள்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் எங்கள் தலையில் வையுங்கள் நாங்கள் சுமந்து போய் கொடுக்கிறோம் என்ற எண்ணத்தை வன்னித் தமிழ்ச் சங்கம் கைவிடுவது நல்லதே.

எமது மக்களுக்கு இப்போது தேவையானவற்றை உங்கள் ஒரு சங்கத்தால் மட்டும் நிறைவேற்ற முடியாது. ஏற்கனவே உங்களால் செய்யப்படுகிறதாகச் சொல்லப்படும் உதவிகள் சரியாகச் சென்றடையவில்லை. இவற்றை முதலில் சரிபாருங்கள். காலப்போக்கில் இன்று சிறியளவில் இயங்கும் ஒன்றியங்களோ மற்றும் நிறுவனங்களோ ஒன்றாகும் நிலமையை உருவாக்கலாம்.

வன்னித் தமிழ்ச் சங்கத்தின் சேவையில் குறைபிடிக்கும் எண்ணம் அல்ல இக்கட்டுரையின் நோக்கம். உங்கள் உழைப்பை உங்கள் நடுவில் நின்று நடைமுறைப்படுத்தும் தரகர்களின் மோசடிகளை அல்லது செல்வாக்கைக் கண்டறியுங்கள். உதவி கோரியுள்ள மாணவர்கள் ஏதோ பிச்சையெடுக்க வரிசையில் நிற்பது போல கெஞ்ச விடாதீர்கள். வசதியுள்ளவர்கள் முன்னால் வசதியற்றோர் மண்டியிட்டு இறைஞ்ச வேண்டுமென்ற எங்கள் தரித்திரம் பிடித்த தமிழ்க் குணத்தை இனங்காணுங்கள். வசதியுள்ளவர்கள் பலருக்கு மேலதிகமாக உங்கள் சங்கத்தின் பணம் போகிறது. இதனைக் கண்டறிந்து உண்மையாக உதவி தேவைப்படுவோருக்கு உங்கள் பணத்தைச் செலவிடச் செய்யுங்கள். தவறுகள் உங்கள் சங்கத்தின் பெயரால் நடைபெறுவதைத் தெரிவித்துள்ளேன். எங்கே எந்த இடத்தில் என்பதைக் கண்டுபிடியுங்கள். உங்கள் நல்நோக்கம் தேவையானவர்களுக்குக் கிடைக்க வழி செய்யுங்கள்.

31.10.09

வன்னி மக்களையும் மாணவர்களையும் சாட்டி பலர் தம்மை வளம்படுத்தப் பார்க்கின்றார்கள் என்ற உண்மைகள் பல வகையிலும் அறிந்தே வருகின்றேன். இதனை நான் சொன்னால் பலருக்கு மூக்கின் மேல் கோபம் வரும். உண்மையில் அந்த மாணவர்களுக்கு அல்லது அந்த மக்களுக்கோ உதவ விரும்புபவர்கள் அவர்களின் விபரங்களைப் பெற்று நேரடியாகவே அவர்களோடு தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வங்கிக் கணக்கின் மூலம் உதவுங்கள். அது ஒன்று தான் நம்பிக்கையான வழி என்றும்..........

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களிற்கான கல்வி உதவியென்பது ஒன்றும் இராணுவ இரகசியம் இல்லையே எனவே சம்பந்தப் பட்ட அமைப்புக்கள் பகிரங்கமாகவே தங்கள் தகவல்களை வெடியிடுவதில் தவறேதும் இல்லை.அதே நேரம் வன்னி தமிழ்சங்க அமைப்பி்ன் உதவிகளை கொடுப்பவர்கள் தேவையில்லாமல் பல நெருக்கடிகளை மாணவர்களிற்கு கொடுப்பதாக நானும் அறிந்துள்ளேன் சம்பத்த பட்டவர்கள் கவனத்திலெடுக்கவும்..அதே நேரம் தங்களுடன் இணைந்தவர்கள் மட்டுமே மாணவர்களிற்கான உதவிகளை செய்யமுடியும் என்கிற போக்கினையும் அந்த அமைப்பு கைவிட்டு முடிந்தளவு உதவிகளை செய்வது நல்லது

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சன் இன்னும் ஒற்றை நிருவாகத்தின் கீழ் இணைத்தாலே நமது மக்களுக்கு சிறப்பாக உதவ முடியுமென்ற கருத்தை விடுங்கள். இழந்தவற்றுக்கெல்லாம் முழுமையான காரணம் இத்தகைய ஒன்றுபடுத்துகிறோம் என் பம்மாத்துக்கள்தான்.

மன்னிக்கவும் சாந்தியக்கா,

ஒற்றை நிர்வாகத்தின் கீழ் நீங்களோ நானோ ஒரு போதும் இன்றுவரை இருக்கவில்லை. அப்படியிருக்க நீங்களோ நானோ விரும்பியதில்லை. ஏன் எனில் மற்றவர்கள் எம்மிடம் கேள்வி கேட்பதை நாம் விரும்பவில்லை. விரும்பியோ விரும்பாமலோ நீங்களும் நானும் நடித்து வாழ்ந்திருக்கின்றோம் என்ற கருத்தை விடுவோம். நாளையை பற்றி சிந்திக்கும் யாரிடமும் நாளைக்கு அப்பால் என்ன நடைபெற வேண்டும் என்பது பற்றிய அக்கறை இல்லை. ஏதோ காயத்துக்கு மருந்து போட்டோம் பசிக்கு சோறி போட்டும், கல்விக்கு காசு போட்டோம் என்ற கதையை விடுவோம்.

இனி நாம் என்ன செய்ய போகின்றோம். இழந்தோம் இழந்தோம் என்று ஒப்பாரியையும் மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுக்களையும் வைத்துக்கொண்டு இருக்க போகின்றூமா? இல்லை வெற்றுக்கு நாலுபேரை இழுத்து வைத்துக்கொண்டு ஏதாவது கட்டமைப்குள் போக போகின்றோமா?

ஒற்றுமை பற்றி பேசினால் உங்களுக்கு கோபம் வருகின்றது. அதனால் தான் நாம் இழந்தோம் என்று சொல்கின்றீர்கள். பாரிய தமிழர் தொண்டு நிறுவனத்தை முடக்கி இயங்கா நிலைக்கு கொண்டு சென்றதில் சிங்கள அரசை விட தமிழர்களின் கரங்களே அதிகமாய் பங்கு பற்றின. இதை தான் உங்கள் மொழியில் ஒற்றுமையாய் ஒரு நிருவாகத்தின் கீழ் இருந்தோம் என்பீர்களோ என்னவோ?!

யாரின் மீதும் குற்றம் சாட்டுவது எனது நோக்கமல்ல. குற்றம் சாட்டுகின்றோம் என்ற பெயரில் குற்றவாளிகளை நீங்கள் காட்டும் போது அங்கே சுற்றவாளிகளாக யாரும் இருக்க போவதில்லை. பின்னர் பிணங்களோடும் சுடுகாடுகளிலும் நாம் நல்லவர்களை தேட வேண்டிய தேவை ஏற்படலாம்!

மாணவர்களிற்கான கல்வி உதவியென்பது ஒன்றும் இராணுவ இரகசியம் இல்லையே எனவே சம்பந்தப் பட்ட அமைப்புக்கள் பகிரங்கமாகவே தங்கள் தகவல்களை வெடியிடுவதில் தவறேதும் இல்லை.அதே நேரம் வன்னி தமிழ்சங்க அமைப்பி்ன் உதவிகளை கொடுப்பவர்கள் தேவையில்லாமல் பல நெருக்கடிகளை மாணவர்களிற்கு கொடுப்பதாக நானும் அறிந்துள்ளேன் சம்பத்த பட்டவர்கள் கவனத்திலெடுக்கவும்..அதே நேரம் தங்களுடன் இணைந்தவர்கள் மட்டுமே மாணவர்களிற்கான உதவிகளை செய்யமுடியும் என்கிற போக்கினையும் அந்த அமைப்பு கைவிட்டு முடிந்தளவு உதவிகளை செய்வது நல்லது

கருத்துக்கள் திரிக்கப்பட்டுள்ளன அல்லது தவறாக புரியப்பட்டுள்ளன. இதற்காக நான் நேர விரயம் செய்ய போவதில்லை.!

மாணவர்களுக்கு உதவி செய்வது இராணுவ இரகசியம் அல்ல ஆனால் புலிகளாலா உதவி செய்யப்படுகின்றது என்று கேள்வி கேட்கும் அளவுக்கு முக்கியமானது சாத்திரியரே! தெடர்புகளுக்கு மின்னஞ்சல் முகவரிகள் வழங்கப்பட்டுள்ளன. மின்னஞ்சல் அனுப்ப முடியாத சூழலில் மாணவர்கள் இருக்கின்றனர் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்!

சாந்தியக்கா,

அந்த கட்டுரை இடம் பெற்ற ஊடகம் எது என்று சொல்லவில்லையே..... ஏன் எனில் இது அமைப்பு சார்ந்தபடியால் அமைப்பால் முறைப்படி கட்டுரைக்கான பதிலை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது.

Edited by Nitharsan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனாலும் திரிபுகளின் அடிப்படையில் உங்கள் கட்டுரைகளில் உள்ள முரண்பாட்டை பற்றிய கருத்தை நான் முன்வைப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.

ஒரு போதும் ஒற்றை தலைமை அல்லது ஒரு அமைப்பின் கீழ் தான் இயங்க வேண்டும் என்று உங்களையோ வேறு எந்த அமைப்பையோ யாரும் கோரவில்லை. மாறாக இணைந்த செயற்ப்பாட்டுக்கான அழைப்பாகவே அவை முன்வைக்க்கப்பட்டன. இரண்டுக்குமான வித்தியாசத்தை வேறு பாட்டை ஒரு ஊடகவியலாளராக, பொதுநல தொண்டராக நீங்கள் புரிந்து கொள்ளாமை அல்லது புரிந்து கொண்டு இன்னோர் கருத்து உங்கள் கட்டுரையில் திணிக்கப்பட்டுள்ளது.

இந்த திணிப்பை உங்களுக்கு ஒற்றுமைப்படுவதன் மீது இருக்கும் வெறுப்பாக என்னால் கணிக்க முடிகின்றது. அல்லது உங்கள் குற்றச்சாட்டுக்களுக்கு வலுச் சேர்க்கவே அவை திணிக்கப்பட்டுள்ளது

அடுத்து,,

வெற்றி பெற்று கோட்டைகளை தகர்த்த பொது எமது ஒற்றுமையின் புரட்சீ என்றும், தோற்ற போது எமது ஒற்றுமையால் ஒற்றைத்தலமையால் வந்த வீழ்ச்சி என்றும் செல்லிக்கொள்ள நான் தயார் இல்லை. எப்போதும் ஒன்றுபட்ட இனமே தன் விடுதலையை வென்றெடுக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்திருக்க சந்தர்ப்பமில்லை. அதே போல தான் எமது சமூகம் நோக்கிய சேவையிலும் நாம் ஒன்றாக இயங்க வேண்டும் என்பது எமது விருப்பு. அதை தவறாக புரிந்து கொள்பவர்களிடம். ஒற்றுமை என்ற ஒப்பாரியை வைத்தது எமது தவறே!

பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்பார்கள்... இப்போது தான் முதன் முறையாக.. கவனம் மனிதர்களை அறிந்து அவர்களுக்கு ஏற்ப கதைக்க வேண்டும் என்பதில் அக்கறைப்பட வைத்துள்ளீர்கள்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் திரிபுகளின் அடிப்படையில் உங்கள் கட்டுரைகளில் உள்ள முரண்பாட்டை பற்றிய கருத்தை நான் முன்வைப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.

ஒரு போதும் ஒற்றை தலைமை அல்லது ஒரு அமைப்பின் கீழ் தான் இயங்க வேண்டும் என்று உங்களையோ வேறு எந்த அமைப்பையோ யாரும் கோரவில்லை. மாறாக இணைந்த செயற்ப்பாட்டுக்கான அழைப்பாகவே அவை முன்வைக்க்கப்பட்டன. இரண்டுக்குமான வித்தியாசத்தை வேறு பாட்டை ஒரு ஊடகவியலாளராக, பொதுநல தொண்டராக நீங்கள் புரிந்து கொள்ளாமை அல்லது புரிந்து கொண்டு இன்னோர் கருத்து உங்கள் கட்டுரையில் திணிக்கப்பட்டுள்ளது.

இந்த திணிப்பை உங்களுக்கு ஒற்றுமைப்படுவதன் மீது இருக்கும் வெறுப்பாக என்னால் கணிக்க முடிகின்றது. அல்லது உங்கள் குற்றச்சாட்டுக்களுக்கு வலுச் சேர்க்கவே அவை திணிக்கப்பட்டுள்ளது

அடுத்து,,

வெற்றி பெற்று கோட்டைகளை தகர்த்த பொது எமது ஒற்றுமையின் புரட்சீ என்றும், தோற்ற போது எமது ஒற்றுமையால் ஒற்றைத்தலமையால் வந்த வீழ்ச்சி என்றும் செல்லிக்கொள்ள நான் தயார் இல்லை. எப்போதும் ஒன்றுபட்ட இனமே தன் விடுதலையை வென்றெடுக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்திருக்க சந்தர்ப்பமில்லை. அதே போல தான் எமது சமூகம் நோக்கிய சேவையிலும் நாம் ஒன்றாக இயங்க வேண்டும் என்பது எமது விருப்பு. அதை தவறாக புரிந்து கொள்பவர்களிடம். ஒற்றுமை என்ற ஒப்பாரியை வைத்தது எமது தவறே!

பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்பார்கள்... இப்போது தான் முதன் முறையாக.. கவனம் மனிதர்களை அறிந்து அவர்களுக்கு ஏற்ப கதைக்க வேண்டும் என்பதில் அக்கறைப்பட வைத்துள்ளீர்கள்.

நிதர்சன்,

இன்று இப்பகுதியில் நான் எழுதுவதற்கு உங்கள் குழுவிலிருந்து றோய் என்பவர் போட்ட மின்னஞ்சல்தான் காரணம். ஆதில் அவர் எழுதியவற்றையும் கீழே இணைக்கிறேன். ஆதில் உள்ள விடயங்கள் பற்றி விரும்பின் நீங்களும் தெளிவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் எப்படி எங்கள் அமைப்பை கேள்வி கேட்க முடியும் என்ற வகையில் அவரது மடல் அமைந்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் உங்கள் பக்கத்தை மட்டும் நியாயப்படுத்துவதாகவே எனக்குப்படுகிறது. ஆதனால் உங்களுக்கான பதிலைத் தவிர்த்தேன். ஏற்கனவே நான் குறிப்பிட்டபடி நீங்கள் உதவுவதாக குறிப்பிட்ட மாணவர்களுக்கு உங்கள் வாக்குறுதிப்படி நீங்கள் சொன்ன தொகை கிடைத்ததா ? அதை தெளிவுபடுத்துங்கள்.

ஒற்றை நிருவாகம் பற்றி எழுதிய உங்கள் தரப்பு நியாயங்கள் உங்களுக்கானவை. ஏற்கனவே இருந்த கட்டமைப்புடன் ஒற்றை நிருவாகத்தோடு இயங்கியுள்ளேன். ஆக நடிப்புமில்லை நம்பிக்கையீனமுமில்லை.

மற்றும் உங்கள் தரப்பு கண்ணப்பன் அவர்களுக்கும் இப்பகுதி ஊடாக பதில் தரலாம்.

ஏனக்கு நீங்கள் குறிப்பிட்டபடி நான் தந்த மாணவர்களுக்கு உங்களால் உதவிகள் கிடைக்கவில்லையென்பதை நீங்கள் தொடர்பு கொண்ட நேரம் குறித்த மாணவர் தெரிவித்திருந்தார். அதுவும் அவரது குரலில் உள்ளது.

ஊங்களுக்கு நான் போட்ட மின்னஞ்சல்களும் மற்றும் நான் உங்களுக்கு இக்கட்டுரை போட முதல் போட்ட மின்னஞ்சல்களும் பதிவில் உள்ளன. ஊங்களிடமும் இருக்கும் அதனை உங்கள் குழு றோய் அவர்களுக்குக் கொடுங்கள். அவருக்கு நேசக்கரம் , சர்வதேச மாணவர் அமைப்புக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

சர்வதேச மாணவர் அமைப்பு சார்பாக இங்கு இணைக்கப்பட்ட உதவி கோரலுடன் எனக்குத் தொடர்பில்லை. சர்வதேச மாணவர் ஒன்றியத்தில் யாரையும் தனிப்பட எனக்குத் தெரியாது. ஆக யாரென்று கூடச்சரியாக அறியாத உங்கள் வன்னிச்சங்கம் றோய் அவர்களுக்கு இதுபற்றி தெளிவுகள் இல்லையென்றே நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்பார்கள்... இப்போது தான் முதன் முறையாக.. கவனம் மனிதர்களை அறிந்து அவர்களுக்கு ஏற்ப கதைக்க வேண்டும் என்பதில் அக்கறைப்பட வைத்துள்ளீர்கள்.

இது கூட உங்களின் அவசரமே தவிர ஒரு விடயத்தைப் பேசிப்புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்மைலயென்பதையே குறிப்பிடுகிறது. இதுபற்றி நிறையவே வாதிடலாம். அதை விட்டுவிடுகிறேன்.

Nitharsan

கட்டுரை எழுதுவதற்கு கிட்டத்தட்ட 3வாரம் முதலே உங்களுக்கு அதுபற்றி தெரிவித்திருந்தேன். ஆனால் நீங்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. கட்டுரையில் நான் குறிப்பிட்ட விபரங்களுக்கான ஆதாரங்களுடன்தான் போட்டிருந்தேன். எனது தொடர்பில் இருக்கும் மாணவர்களின் உண்மை நிலவரம் யாவும் அறிந்து அவர்களுக்கும் எழுதப்போகும் விடயம் பற்றியும் தெரிவித்துவிட்டே எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கீழே நான் இணைக்கும் கருத்து அல்லது விமர்சனம் எழுதியவர் வன்னிச்சங்கத்தினருடன் இணைந்து செயலாற்றும் றோய் என்பவர் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பியிருந்தார்.

சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பின் சார்பில் எழுதப்பட்ட விடயங்களும் சரவேதேச தமிழ் மாணவர் அமைப்பின் பெயரில் நானே எழுதுவதாகவும் அந்த அமைப்புக்கும் எனக்கும் நேரடித் தொடர்பு உள்ளதாகவும் புரிந்து கொண்டுள்ளார் கீழேயுள்ள மடலை எழுதிய றோய் அவர்கள். இதில் நிதர்சனும் சம்பந்தப்பட்டுள்ளதால் நிதர்சனுக்கு இது தொடர்பில் தொடர்புள்ளதாகக் கருதுகிறேன்.

சர்வதேச தமிழ் மாணவர் அமைப்புக்கும் அவர்கள் இங்கு வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கம் எனக்கும் தொடர்பில்லையென்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். றோய் அவர்களால் துரோக முத்திரையிடப்பட்டுக் கருத்து பகிரப்பட்டுள்ளது. எங்கள் சாபம் கேள்வி கேட்டால் துரோகி அல்லது பிழைப்பு இதை.

நிதர்சன் அவர்களுடன் ஏற்கனவே தொலைபேசியில் ஒருமுறை கதைத்துள்ளேன். ஆனால் இவர்களது சங்கத்துக்கு ஊடாக போகின்ற உதவிகள் எந்துத் தரகர் ஊடாகப் போகிறது அல்லது கிடைக்கிறது என்ற உளவறியும் வேலை எனக்குத் தேவையில்லாதது. நூன் எழுதிய விடயத்துக்கான சகல விபரங்கள் மாணவர்களின் வாக்குமூலங்களுடன் தான் எழுதினேன்.

கனடாவிலிருந்து நான் எழுதிய கட்டுரை வெளியாகி மறுநாள் எனது தொடர்பில் உள்ள மாணவர் ஒருவரை தொடர்பெடுத்து கதைத்துள்ளார்கள். ஆவர்களது விபரங்களைத் தரும்படி கோரினார்கள். ஆனால் அம்மாணவன் தனக்கு தற்போது கிடைக்கும் நேசக்கரம் ஊடாக உதவிகள் வருகிறது என்பதனையும் வன்னித்தமிழ் சங்கத்தால் தனக்கு உதவிகள் கிடைக்காமையையும் தெரிவித்துள்ளார்.

நிதர்சனால் குறிப்பிடப்பட்ட தொகை அவர்களுக்கும் கிடைக்கவில்லை போன்ற விபரங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். இவற்றிற்கான எந்தவித பதிலும் நிதர்சனால் இதுவரை தரப்படவில்லை.

இப்பகுதியில் கருத்தாளர்கள் தெளிவுக்கு கீழே வன்னித் தமிழ்ச் சங்கத்தின் றோய் என்பவரின் கருத்து இணைக்கிறேன்.

கருத்தாடல் மூலம் தெளிவுகள் வருவதை நானும் வரவேற்கிறேன்.

உண்மை ஒன்றிருக்க அறியாமையால் பொய்மைகள் திணிக்கப்படுகின்றன.

யாழ் இணையத்தின் கருத்துக்களத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் வணக்கம்.

கருத்துக்களத்தில் உங்களது கருத்துக்களை வாசித்தவன் என்ற வகையிலும் உண்மை நிலைகள் பலவற்றில் ஒரு சிலவற்றை நேரடியாக அறிந்து உணர்ந்து கொண்டவன் என்ற வகையிலும் இக் கருத்துக் களத்தின் ஊடாக உங்களுடன் நானும் இணைந்து கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். ஏனெனில் நானும் என்னுடன் இணைந்து கொண்ட நண்பர்கள் ஒன்பது பேரும் இணைந்து யாழ் பல்கலைக்கழகத்திலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்று வருகின்ற 10 மாணவர்களுக்கு தற்போது கனடாவில் இருந்து நேரடியாக நிதி உதவி செய்து வருகின்றோம். இதனைச் செய்யும்படி எங்களைத் தூண்டியவர்கள் யார்? எவ்வாறான தகவல்களை எங்களுக்குத் தந்தார்கள்? எங்களுக்கு எப்படி இவ் உதவித் திட்டத்தில் நம்பிக்கை ஏற்பட்டது? நாங்கள் ஏன் இந்த உதவியினை இன்றும் தொடர்து செய்கின்றோம்? என்ற வினாக்கள் உட்பட நீங்கள் என்ன தவறுகளை உங்கள் அறியாத் தனத்தினால் வெளியிட்டுள்ளீர்கள் என்பதனையும் நீங்கள் விடுகின்ற இத்தகைய தவறுகள் எத்தகைய விழைவுகளை ஏற்படுத்தும் என்பதனையும் நீங்கள் உண்மை நிலையினை அறிவதில் எவ்வளவிற்கு முனைப்புக் காட்டுகின்றீர்கள் என்பதனையும் விடயம் அறியாமல் கருத்துத் தெரிவித்த உங்களுக்கும், உங்களது தவறான செய்திக் கருத்துக்களை படித்துத் தவறாகப் புரிந்து கொண்டிருப்பவர்களுக்கும் தெரிவிக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளேன்.

இவ்வாண்டு வைகாசி மாதம் 28ம் திகதி நான் எனது நன்பர்களால் வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமைய உறுப்பினர்கள் கலந்து கொள்கின்ற எங்களது ஊர்ச்சங்கக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அக் கூட்டத்தில் உக்கிரமாக போர் முடிவடைந்திருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் என்ன உதவித் திட்டங்கள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது,, என்ன உதவிகள் செய்யப்பட வேண்டி உள்ளது என்பவற்ரைத் தெளிவான ஒளிப்பட, புகைப்பட, எழுத்து மூல ஆதாரங்களோடு எடுத்து விளக்கினார்கள்.

அவர்களது உதவித்திட்ட நடைமுறைகளில் ஒன்றுதான் இலங்கையில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவி புரியும் திட்டமாகும். இத்திட்டத்திற்காக அவர்கள் எங்களது பார்வைக்காக பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்களையும் அதனோடு இணைதிருந்த மாணவர்களின் கைப்பட எழுதிய கடிதங்களையும் தந்தார்கள். விண்ணப்பப் படிவத்தில் மாணவரது புகைப்படம், மாணவரது சுயவிபரங்கள், கல்வி கற்கும் நிறுவன விபரங்கள், நிதி வைப்புச் செய்வதற்கான வங்கி விபரங்கள், உறுதிப்படுத்தல் விடயம் என்பன அடங்கியிருந்தன. அவர்கள் இணைத்திருந்த கடிதத்தில் அம்மாணவர்களது குடும்பத்தின் தற்போதைய நிலை, குடும்பப் பாதிப்புக்கள், குடும்ப அங்கத்தவர் விபரங்கள், குடும்பத்தில் வெளிநாட்டில் வதியும் உறுப்பினர்களது விபரங்கள், அரச உத்தியோகத்தரது விபரங்கள், மாணவர்கள் தற்போது பெற்றுக் கொண்டிருக்கின்ற நிதி உதவியினது விபரங்கள் என்பன அடங்கியிருந்தன.

மேற்படி திட்டமானது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்ற தொடர்ச்சியான அவர்களது விளக்கத்தில், இந்த உதவித்திட்டமானது ஓர் தற்காலிக உதவித் திட்டம் என்பதோடு மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் உதவியாளர்களே மாவர்களது வங்கிக் கணக்கிற்கோ அல்லது நேரடியாகவோ நிதியினை அனுப்பி வைத்தல் வேண்டும் என்பதனை உறுதியாக எடுத்துச் சொன்னார்கள். அத்தோடு தாங்களும், விண்ணப்பங்களைப் பொறுப்பேற்று அனுப்பியவர்களும் மாணவர்களது நிலையினை அறிந்ததன் பிற்பாடுதான் இவற்றை இங்கு உங்களுக்குத் தருவதற்குக் கொண்டுவந்திருக்கின்றோம். ஆனாலும் விண்ணப்பங்களைப் பெறுகின்ற நீங்களும் மாணவர்களது நிலையினை உங்கள் ஊரானவர்களாயின் அறிந்து கொள்வதற்கும், அல்லது மாணவர்களது ஊரைச் சேர்ந்தவர்களை விசாரித்த அறிவதுடன், மாணவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பல விடயங்களையும் விசாரித்து உறுதி செய்து கொண்டதன் பிற்பாடே நிதி உதவியினை வழங்க வேண்டும் என்றும் எஙகளைக் கேட்டுக் கொண்டார்கள். இவர்களால் இவ்வாறாக விளக்கமளிக்கபட்ட இந்தத் திட்டம் எனக்கு நன்றாகப்பிடித்திருந்தது. ஏனெனில் அமையத்தினர் பணத்தினை எங்களிடம் இருந்து வசூலிக்கவில்லை. மாணவர்களுடன் நாங்களே நேரடியாகத் தொடர்பு கொண்டு மாணவர் உண்மை நிலையினை அறிந்து அவர்களுக்கு நேரடியாக உதவி செய்ய வாய்ப்பும் கிட்டியுள்ளது. இதனால் நானும் எனது நண்பர்களும் இணைந்து செய்வதற்காக 5 விண்ணப்பங்களை ஆரம்பத்தில் பெற்றேன். இன்று வரைக்கும் நாங்களே அம் மாணவர்களுக்கு நேரடியாப் பணம் அனுப்பியும் வருகின்றோம். இதுவரையில் எவரும் எந் நாட்டிலும் செயற்படுத்தாத சிறப்பான திட்டாமாக இதனது செயல் முறை உள்ளதனை நான் நன்கு உணர்ந்தேன்.

இச் சந்தர்ப்பத்தில் சாந்திக்கு ஒரு விடயத்தினைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகி;ன்றேன். உங்களது செய்தியின் தலைப்பில் நீங்கள் போட்டிருக்கின்ற வசனம் சரியானதா என்பதனை ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். எந்த விடயத்தையும் ஆராய்ந்தறிந்து எழுத முனைய வேண்டும். அவர்கள் விண்ணப்பங்களை எங்களிடத்திலே தந்தார்கள். நாங்கள்தான் தெரிவு செய்து 5 விண்ணப்பங்களை எடுத்தோம். இங்கு எந்த இடத்திலே அவர்கள் வசதியானவர்களுக்கு அல்லது தமக்கு விரும்பியவர்களுக்கு செல்வாக்குச் செலுத்தி இருக்கின்றார்கள். அல்லது அவர்கள் பணத்தினைப் பெற்று எந்த இடைத்தரகர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அன்றைய கூட்டத்தில் இருந்த பல உறுப்பினர்களும் தாங்களாகவே தங்களுக்குப் பிடித்த மாதிரியாக விண்ணப்பங்களைத் தெரிவு செய்து எடுத்தார்கள். தலைப்புப் போடத் தலையில்லாத நீங்கள் எல்லாம் செய்தியாளர்கள் என்று செய்தி வெளியிடக் கங்கணம் கட்டிவிட்டீர்கள். நீங்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட நினைக்கின்றீர்கள். கிணற்றுத் தவளையாக இருந்து கொண்டு பேனா குற்றாதீர்கள். நீங்களே முதலில் உங்களிடம் உள்ள வற்கடநிலையைத் திருத்திக் கொண்டு மற்றவர்களைத் திருத்த முற்படுங்கள்.

நீங்கள் நியாயமானதொரு மக்கள் சேவையாளரும், பத்திரிகையாளருமாக இருந்திருந்தால் நடுநிலைமை தவறியிருக்க மாட்டீர்கள், உண்மைநிலையினை எடுத்துக் கூறப் பின்னிற்க மாட்டீர்கள். உங்களது எழுத்துக்களில் இருந்து நான் அறிந்து கொண்ட விடயம் நீங்கள் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு உதவி தொடர்பான தெளிவினைப் பெறவில்லை என்பதாகும். நிதர்சனினால் கொடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கத்துடன் இதுவரையில் நீங்கள் தொடர்பு கொண்டு உரியவர்களிடம் உங்கள் அறியாமையைப் போக்கிக் கொள்ளக் கூடிய தகவல்களைப் பெற்றிருக்கவும் மாட்டீர்கள் என்பது எனது எண்ணம். ஏன் அவ்வாறு குறிப்பிடுகின்றேன் என்றால் நீங்கள் எழுதிய எழுத்துக்கள் “நான்” என்ற அகங்காரத்தைத்தான் தொனித்து நிற்கின்றன. மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதில் தவறுகள் நடக்கின்றனவா இல்லையா என்பதனைச் சரியாக அறிந்தும் புரிந்தும் கொள்ளாமல் செய்தி வெளியிட முந்தியமை உங்களின் முதற் தவறாகும்.

உள்வீட்டில் குழப்பங்கள் எதுவும் இல்லை. குழப்பங்கள் எல்லாம் தூர இருப்பவர்கள் இடத்தில்தான் உள்ளது. கனடாவில் இருந்து அல்லது வேறு இடங்களில் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று நேரடியாக மாணவர்களுக்கு பணம் அனுப்பி வைப்பவர்கள் யாரும் கருத்துக் களத்தில் குழப்மான கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்களா? எனப் பாருங்கள். கருத்துக்களை முன்வைத்திருக்கின்ற நீங்கள் யாவரும் அவர்களிடத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நேரடியாக மாணவர்களுக்கு உதவி செய்யாதவர்களாகத்தான் உள்ளீர்கள். அதனைத்தான் உங்கள் எழுத்துக்கள் காட்டி நிற்கின்றன. இப்படி இருக்கும்போது உண்மைநிலை தெரியாமல் தயவு கூர்ந்து கருத்துக் கூற முனையாதீர்கள்.

அடுத்ததாக நீங்கள் ஒழித்துப் பிடித்து விளையாடப் பார்க்கின்றீர்கள். என்ன தவறுகள் இடம்பெறுகின்றது யார் அதனைச் செய்கின்றார் அதனைத் தடுப்பதற்கு என்ன நடைமுறைகளைக் கையாளலாம் என்ற ஆலோசனைகளை முன்வைக்காமல் முடிந்தால் கண்டுபிடியுங்கள் என்று மொட்டையாகக் குறிபிட்டுள்ளீர்கள். குழம்புகின்றவரும் குழப்புகின்றவருமாக நீங்கள் இருக்கின்றீர்கள். தொடர்பு இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு குழப்பமற்ற உண்மைநிலையினை அறிந்ததன் பிற்பாடு தெளிவுடன் கூடிய உண்மைக் கருத்துக்களை முன்வைக்க முன்வாருங்கள்.

இன்றுள்ள நிலையில் நாங்கள் 10 மாணவர்களுக்கு நிதி உதவி செய்து வருகின்றோம். எங்களேடு இணைந்து பணம் அனுப்புபவரில் ஒருவர் முதல் 3 மாதங்களுக்குப் பணத்தினை அனுப்பிவிட்டு அடுத்து 2 மாதங்களுக்குப் பணத்தினை அனுப்பாது இருந்துவிட்டார். என்னோடு அமைய உறுப்பினர் தொடர்பு கொண்டு குறித்த மாணவருக்கு நிதி உதவியானது கடந்த இரண்டு மாதங்களாகப் போகவில்லை என்பதனைத் தெரிவித்தார். அதன் பிரகாரம் நாங்கள் எனது நண்பரின் சம்மத்துடன் வேறு ஒருவருக்கு அவ் விண்ணப்பத்தினைக் கொடுத்து இன்று அந்த மாணவனுக்கு நிதி அனுப்பிக் கொண்டிருக்கின்றோம். பொது மக்கள் சிலர் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விண்ணப்பங்களை எடுக்கின்றார்கள். ஆனால் அவர்களது பொருளாதாரப்பலமானது எல்லா நேரங்களிலும் சரியா அமையாமல் விடுகின்றது. இதனாலோயே இந்தச் சிக்கல்கள் தோற்றம் பெறச் செய்கின்றன. இது ஒருவகையான தவறாகும். இதுபோன்று வௌ;வேறு வகையான தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். அதனை இல்லை என்று நான் மறுக்கவில்லை. ஆனால் அதனைத் திருத்திக் கொள்வதற்கு நீங்கள் கையாண்டமுறை கருத்துக்களம் என்ற தளமும், தலையைப் பாவிக்காத தலைப்புமாகும்.

இன்று நாங்கள் எல்லோருமாக ஈழத்தில் வாழ்கின்ற எம் உறவுகளை சிங்கக் குகைக்குள் அடைக்கச் செய்துவிட்டு வெளியால் நின்று தளங்கள் மூலமாகக் கடிபட்டுக் கொண்டிருப்பது சிங்கத்திற்கே மேலும் இரைபோடுவதாகிவிடும். வெளிநாடுகளில் இருந்து ஈழம்வாழ் மாணவ சமுதாயத்திற்கு உதவிகள் கிடைக்கும்போது அதைக்கூட இரண்டெழுத்தாகத் திரிபுபடுத்தி எம் மாணவ உறவுகளுக்கு முழுக்குப் போடவும் இந்த ஆழும் வர்க்கம் தயங்கமாட்டாது. நீங்கள் செய்கின்ற இந்த வேலைகள் எல்லாம் எமது மாணவ சமுதாயத்தை அழிப்பதற்கான அத்திவாரமே தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதனை உணரவில்லை. இன்று முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் விசாரணை என்ற போர்வையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனைச் செய்திகள் வாயிலாக யாவரும் அறிந்திருப்பீர்கள்.

தற்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற உதவிகளானது பொது மக்களால் வழங்கப்படுவதற்காகப் பொது மக்களால் எடுக்ப்படுகின்ற பெருமுயற்சியாகும். இதில் தவறுகள் ஏற்படாதிருக்கமுடியாது என்பதனை யாவரும் நன்குணர்வார்கள். எத்தகைய தவறுகள் எழும்போதும் சிறப்பான தொடர்புகளைப் பேணி தீர்வுகளைச் சிற்பபானதாக்கிக் கொள்ள முனைவதே சிறப்பானதாவும் நன்மை பயப்பதாகவும் அமையும்.

அடுத்ததாக சர்வதேச மாணவர் அமைப்பினால் வெளியிடப்பட்ட செய்தி விளம்பரம் தொடர்பாக பின்வரும் விடயங்களை இறுக்கமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் உங்களது வங்கிக் கணக்கிற்கு பணத்தினை வைப்புச் செய்யும்படியாகக் கேட்டுள்ளீர்கள். புலம் பெயர் ஈழத்தமிழர்களிடத்தில் எத்தனையோ ஏமாற்று நாடகங்கள் நடாத்தப்பட்டு முடிவடைந்ததன் பின்பும் நீங்களும் அதே பாணியில் நாடகத்தை அரங்கேற்றப் பார்க்கின்றீர்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. இது புலம் பெயர் தமிழ் மக்களை ஏமாற்றும் ஓர் திட்டமாக உள்ளது எனப் பொது மக்கள் உணரமாட்டார்களா என்பதனை மறு பரீசீலனை செய்து கொள்ளுங்கள்.

நிதர்சன் என்ற அன்பர் அமையத்தினருடன் தொடர்பு கொள்வதற்காக அமையத்தினது பொதுத் தொடர்பு தொலைபேசி இலக்கத்தினைத் தந்திருந்தார். நீங்கள் உண்மையானவர்களாக இருந்திருந்தால், நீங்கள் தமிழ் மக்களது துன்ப துயரங்களில் பங்கெடுத்து அவர்களுக்கு உதவுபவர்களாக இருந்திருந்தால், நீங்கள் நேர்மைத்திறன் உடையவர்களாக இருந்திருந்தால், உதவி செய்ய வேண்டும் என்ற என்னம் உடையவர்களை ஊக்கப்படுத்தித் தட்டிக் கொடுத்து ஏற்படுகின்ற தவறுகளை எடுத்துக் கூறி உண்மையான உதவிச் செயற்பாடு இடம்பெற ஒத்துளைப்பவர்களாக இருந்திருந்தால், அமையத்தினரோடு தொடர்பு கொண்டு உண்மை நிலையினை அறிய விரும்பியவர்களாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? நீங்கள் அதனைச் செய்தீர்களா? என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். மாறாக நீங்கள் என்ன செய்திருக்கின்றீர்கள்? நிதர்சன் தந்திருந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அந்தக் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்தை கருத்துக் களத்தில் இருந்து நீக்கி விடுங்கள் என்று கேட்டிருக்கின்றீர்கள். ஏன் தொலைபேசி இலக்கத்தினை நீக்கும்படி கேட்டீர்கள்? இதில் இருந்து என்ன தெரிகின்றது? உங்களது பொய்யான செய்திகளையும், கருத்துக்களையும் படிக்கும் மக்களுக்கு உண்மை நிலை என்ன என்பதனை அறிய அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பினை நீங்கள் இல்லாதொழிக்கப் பார்க்கின்றீர்கள், தடுக்கப் பார்க்கின்றீர்கள். அந்தத் தொலைபேசி இலக்கத்தினைப் பாவித்து நீங்களே உண்மைநிலை என்ன என்பதை அறிந்து திருந்திக் கொள்வதோடு செய்தி படிக்கும் மக்களுக்கும் உண்மை நிலை என்ன என்பதனைத் தெளிவாக்கியும் இருக்கலாம். அதனைச் செய்தீர்களா? என்பதனைச் சிந்தித்துப் பாருங்கள்.

இப்போது புலனாகின்றது யார் தமிழினத் துரோகிகள், யார் துன்பப்பட்ட மக்களது பெயரைச் சொல்லி வயிற்றுப் பிளைப்பு நடத்துபவர்கள் என்பது. அந்தப் பாவப்பட்ட மக்களை வைத்துக் கொண்டு உங்களது பொய்யான உணர்ச்சிமிகு வார்த்தைகளை பொது மக்களாகிய எங்கள் மீது வீசி எறிந்து அப்பாவிப் பொது மக்களைப் பகடைக்காய்களாக்கப் பார்க்கின்றீர்கள். இதில் இருந்து நீங்கள் பொதுமக்களிடமிருந்து பணம் கொள்ளை அடிக்கும் கும்பலாகவே உள்ளீர்கள் என்பது புலனாகின்றது.

இரண்டாவதாக யா. பல்கலைக்கழகத்தில் வன்னிச் சங்கம் 200க்கு உட்பட்ட மாணவர்களுக்குத்தான் நிதி உதவிகளைச் செய்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். அப்போ நாங்கள் உதவி வழங்குகின்ற அந்த 10 மாணவர்களில் இறுதியாகப் பெற்றுக் கொண்ட மாணவர்களது விண்ணப்ப இலக்கங்கள் 400க்கு மேற்பட்ட தொடர் இலக்கத்தினை உடையதாக உள்ளது. இதில் இருந்து என்ன தொரிகின்றது. நீங்கள் தொலைபேசி இலக்கத்தினை நீக்குவதில் காட்டிய கரிசினையும் முனைப்பும் உண்மைநிலையினை அறிவதில் காட்டப்படவில்லை என்பதாகும்.

அடுத்து மூன்றாவதாக நீங்கள் வெளியிட்டிருந்த செய்தியின்மூலம் உங்களது சிறுபிள்ளைத் தனத்தைக் காண்கின்றேன். சிறு பிள்ளைகள் சொல்வதுபோன்று நாங்கள்தான் முதன்முதலில் உதவியினைச் செய்தோம் கிழித்தோம் என்றெல்லாம் துன்பப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் வீறாப்புப் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த வீறாப்புக்கள் எவையும் துன்பப்பட்ட ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் எந்தவிதமான முன்னேற்றத்தினையும் கொடுக்காது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் துன்பப்பட்ட ஒட்டு மொத்தத் தமிழினத்துக்கும் உதவுவதற்கு முனைப்புக்காட்டுவீர்களாயின் உண்மை பேசும் உத்தமராக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

என்னுடைய கருத்துக்கள் தொடர்ச்சியாக வெளிவர உள்ளது. அடுத்து வரும் செய்தியில் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு கூடியளவான உண்மைநிலைகளைத் தருவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். காலகதியில் இவ்விடயம் தளத்தில் களமேறும். ஊங்கள் கருத்துக்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றோன்.

றோய்

Roy Balasingam

Email: roybalasingam@gmail.com

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் ஊடாக 12மாணவர்கள் உதவிகள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். உதவிகள் செய்வோருடன் நேரடித் தொடர்பில் சிலர் உள்ளார்கள். இது மாணவர்களும் உதவி செய்வோரும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்கிறார்கள்.

இதில் தமிழகத்தில் இருந்து சிலர் தமிழக நண்பர்கள் உதவுகிறார்கள். அவர்களும் தொடர்புகளோடு மாணவர்களுடன் இருக்கிறார்கள்.

திரு.றோய் அவர்களே உங்கள் குற்றச்சாட்டுகள் மீது திரும்பவும் மீள்விசாரணை செய்து பாருங்கள்.

நீங்கள் கருதும் அல்லது ஊகிக்கும் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு என்ற பெயரில் நான் எழுதவில்லை. நான் சாந்தி என்ற ஒரே பெயரில் மட்டும்தான் எழுதுகிறேன். ஊகங்களின் அடிப்படையில் நீங்கள் எழுதுவது போல என்னால் எழுத முடியாது.

மற்றும் நீங்கள் குறிப்பிட்டது போல உங்கள் சங்கத்துடன் தொலைபேசியில் கதைத்து விசாரித்து விபரம் அறியாமல் எழுதியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளீர்கள். உங்கள் சங்கத்திலிருந்து நிதர்சன் தொடர்பில் இருந்தார். மின்னஞ்சல் ஊடாக நான் எழுதிய விடயம் தொடர்பாக கருத்தாடல் செய்தோம். ஆனால் நிதர்சன் கோபப்பட்ட அளவுக்கு நிதானத்துடன் கருத்துப் பகிரும் நிலையில் இல்லாதிருந்தமையால் தொடர்ந்து விவாதத்தைத் தவிர்த்தேன். இவை பற்றி நிதர்சனுடன் கதையுங்கள். நிதர்சனும் நானும் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல்களை வாங்கி வாசியுங்கள்.

உங்கள் சங்கத்தை வீணாக பழிசுமத்தும் நோக்கம் இல்லை. ஆனால் உங்கள் சங்கத்தின் சார்பில் அஞ்சலிட்டுக் கொண்டிருந்த நிதர்சன் எனக்கு வாக்களித்தபடி எந்த உதவியையும் நான் தொடர்புகள் கொடுத்த மாணவர்களுக்கு செய்யவில்லை என்பது உண்மை. அது நிதர்சனுக்கும் தெரியும்.

ஆக நீங்கள் இதில் தலையை உடைத்து துரோகிகள் பட்டம் தருதல் மற்றும் விளக்கவுரை கேட்டல் பொருத்தமில்லாததாகவே எனக்குப்படுகிறது. இதுவும் தலைக்கனமான பதில் என்று நீங்கள் கருதினால் எதுவும் செய்ய முடியாது.

நன்றி

ஏதாவது கருத்து இருப்பின் தொடர்ந்து இக்களம் ஊடு பேசலாம் வாருங்கள்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் தொடர்பாக இதுவரை நேசக்கரம் பற்றிய விபரங்கள் நெசக்கரம் வலைப்பூவில் இருக்கிறது. பாருங்கள் றோய்.

http://nesakkaram.blogspot.com/

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

நீங்கள் கேட்ட விளக்கம் தருவதற்க்கு எடுத்த கால அவகாசத்தில் அந்த விளக்கத்தை பெறமுன்னர் நீங்கள் கட்டுரையை வெளியிட்டுள்ளீர்கள். அந்த வகையில் அதன் விளக்கத்தை உங்களக்கு வழங்குதென்பது விழலுக்கு இறைத்த நீராகியிருக்கும். அதனால் அந்த விளகத்தை தருவரை தவிர்த்தேன். அதே போல இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் என்பது போல எனது விளக்கங்களை ஏற்றுக்கொள்ளும் நிலமையில் நீங்கள் இல்லை என்பதை உணர்கின்றேன்

எது எப்படியோ, யாழ் களத்தில் கண்ணப்பனோ, உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு மடலனுப்பிய ரோய் அவர்களோ, வன்னித்தமிழ்ச் சமூக காலாச்சார அமையத்தின் உறுப்பினர்கள் அல்ல. அவர்கள் அமைய செயற்ப்பாடுகளி்ல் இணைந்து செயற்ப்படுபவர்கள். அவர்களது கருத்துக்கள் அமைப்பின் கருத்தாக முடியாது.

அதே வேளை யாழ் கருத்துக்களத்தில் உங்கள் கருத்துக்கு பதில் அளிப்பதில் பலன் இல்லை என்ற நிலையில் தான் உங்களுக்கு மேலதிக விளக்கங்கள் எதையும் வழங்கவில்லை. இருப்பினும் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தத்தின் அடிப்படையிலும் ஏதோ ஒரு வகையில் இந்த கட்டுரைக்குள் நான் சம்பந்தப்பட்டிருப்பதாலும் எனது பக்க விளக்கங்களை தரவேண்டியது எனது கடமையாகும். நிதர்சன் என்ற தனி நபர் ஒரு போதும் பல நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையம் ஆகிட முடியாது என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன். எமது அமையத்தின் நான் ஒரு உறுப்பினர். என்ற வகையில் அதன் செயற்ப்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்களை உங்களோடு செய்தேன். பல கட்டத்தில் உங்களது சேவைகளும் எமது அமைப்பின் சேவைகளும் ஒன்றாக இருந்த காரணத்தால் ஒன்றினைந்து செயற்ப்படுவது பற்றி உங்களோடும் அதே நேரம் அமையத்துக்கும் நானோ கருத்துக்களை முன்வைத்தேன். நான் உங்களிடம் கேட்டது போலவே அமைப்பிடமும் நாம் ஒன்றாக இயங்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தேன். நல்லெண்ணம் கொண்ட அமைப்பு ஒரே திசையில் பயணிக்கும் யாருடனும் ஒன்றித்து பயணிக்க தயாராய் உள்ளது. அது மற்றவர்கள் பலாத்காரப்படுத்தி நம்முடன் இணைய வைக்கும் முயற்ச்சி அல்ல. மாறாக எம் மக்களுக்கு உளமாற நாம் செய்யும் பணியை மேம்படுத்தவே!

அதையே நீங்கள் கட்டுரையில் தவறாக அர்த்தப்படுத்தியிருந்தீர்கள். உங்கள் மீது கோபப்படுவதில் எந்த அர்த்தமுமில்லை. அதே நேரம் நானும் நிதானமிழந்தில்லை. மாறாக உங்களின் வீண் பழிசுமத்தலால் கவலையடைந்தேன். நாம் யாரையும் வற்புறுத்தி எமக்கு கீழே தான் நீங்கள் இயங்க வேண்டும் என்று சொன்னதில்லை. அப்படி நான் சொன்னேன் என்று உங்களால் உறுதிப்படுத்த முடியுமெனில் உறுதிப்படுத்துங்கள்.

உங்களுக்கு நான் உறுதியளித்தபடி நாம் குறிப்பிட்ட 3 மாணவர்களுக்கு உதவியளிக்கும் முகமாக விண்ணப்பங்களை பெற்று குறிப்பிட்ட 3 பேரிடம் கையளித்தோம். அந்த வகையில் எமக்கு பணம் அனுப்ப வேண்டியவர்கள் தாம் பணம் அனுப்பிவிட்டதாக உறுதி மொழி தந்தார்கள். ஆனால் அந்த பணம் தம்மை வந்தடையவில்லை என யாழ் பல்கலைக்கழகத்தில் இருக்கும் மாணவ பிரதிநிதிகளோடோ, அல்லது அமையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட செயற்க்குழுவுக்கோ மாணவர்கள் அறிவிக்கவில்லை. குறிப்பிட்ட மூவரில் ஒருவருக்கு 30000 அனுப்பட்டதாக உறுதியளிக்கப்பட்டபோதும் நீங்கள் சொன்னதுபோல 10000 ரூபாவே அனுப்பபட்டுள்ளது. மற்றையவருக்கு விண்ணப்பத்தை பெற்றவர் இன்றுவரை பணம் அனுப்பவில்லை என உங்கள் கட்டுரைக்கு பின்னரே எமக்கு தெரியவந்தது. ஆனால் சம்பந்த பட்ட நபர் தான் தொடர்ந்து பணம் அனுப்புவதாக எம்மிடம் தெரிவித்து வந்தார். மூன்றாமவருக்கு தொடர்ந்து நிதியுதவி கிடைத்து வருகின்றது. அந்த வகையில் மாணவர்கள் தமக்கு பணம் கிடைக்கவில்லை என்று எமது செயற்க்குழுவுக்கோ, அல்லது மாணவ பிரதிநிதிக்கோ தெரிவிக்காத பட்சத்தில் அவர்களுக்கு நிதியுதவி கிடைக்கின்றது எனவே நாம் எடுத்துக்கொள்வோம்.

இதில் தவறை யார் இழைத்தார்கள் என்ற கேள்விக்கான பதிலை உங்களிமே விட்டுவிடுகின்றேன்.

அதே நேரம் உங்கள் கட்டுரையை யாழில் படித்த பின்னர் நாம் சம்பந்தபட்ட கொடையாளர் (அமெரிக்காவிலிருக்கின்றரர்) ஒருவருடன் தொடர்பு கொண்ட போது அவரே அந்த மாணவருக்கு தொடர்பினை ஏற்படுத்தியிருந்தார். மாறாக நாம் மாணவர்களோடு தொடர்புகளை ஏற்ப்படுத்தவில்லை.

விளக்கங்களை தெளிபடுத்த எடுத்த கால அவகாசம் மாதம் ஆனாது வருத்தமே ஆனாலும் நாமும் எல்லேரைப்போலவே எமது தனிப்பட்ட விசயங்களுக்குள் நின்ற படியே தான் பொது வேலைகளையும் செய்ய முடியும் என்ற யதார்த்தை நீங்கள் புரிய மறுக்கின்றீர்கள்!

நேசக்கரத்துக்கோ, அல்லது சர்வதேச தமிழ் மாணவர் அமைப்புக்கோ எதிராக செயற்ப்படுவது வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் நோக்கமல்ல. எமது நோக்கம் எப்போதும் மக்கள் நோக்கிய சேவையே, அதில் தவறுகள் இருக்கின்றது என சுட்டிக்காட்டும் பட்சத்தில் திருத்தி கொள்ள நான் சார்ந்திருக்கு் அமைப்பு தயாராகவே இருக்கின்றது. ஆனால் அவை உரிய முறையில் அமைப்புக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்ற குறைந்த பட்ச எதிர்பார்ப்பு அமைப்பின் நிர்வாகத்திடம் இருப்பது தவறில்லையே?

எமது இனத்துக்கு கிடைத்த சாபம் என்பது விமர்சனம் என்பதன் அர்த்தம் புரியாமல் விமர்சிப்பதே! அந்த வகையில் உங்கள் விமர்சனம் பலரை விசனம் கொள்ள வைத்ததையே ரோய், கண்ணப்பன் போன்றோரின் கருத்தை படித்த நான் உணர்கின்றேன்.

ரோய் அவர்களுக்கு தெளிவு படுத்துவது பற்றிய கருத்தை உங்களிடமே விட்டுவிடுகின்றேன். நீங்கள் அவரின் கருத்தை எனக்கு மின்னஞ்சல் செய்யும் வரை அது பற்றி எதுகுமே நான் அறிந்திருக்வில்லை.

தேவையேற்படின் நீங்கள் என்னோடு நேரடியாக பேச முடியும்:

+1-647-367-9553

  • 2 weeks later...

சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு என்னும் பெயரில் எழுதுபவர் தாம் எழுதிய கருத்தை மற்றையவர்கள் அதற்கு பதில் எழுதிய பின்னர் நீக்கியிருக்கிறார். யாழ் கருத்துக்களத்தில் இதுபோன்ற செயற்பாடுகள் தடைசெய்யப்பட்டிருக்கிறது. விதிமுறையிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற செயற்பாடு இனியொரு தடவை தொடர்ந்தால், கருத்துக்கள நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.