Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டத்தைத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது - தமிழீழ விடுதலைப் புலிகள்

Featured Replies

போராட்டத்தைத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது - தமிழீழ விடுதலைப் புலிகள்

திகதி: 08.11.2009 // தமிழீழம்

போராட்டத்தைத் தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

09-11-2009

சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் இனவாத உணர்வும், தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்டுள்ள வரலாற்று ரீதியான பழிவாங்கும் மனப்பான்மையும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதிகரித்துச் செல்வது வரலாற்றின் உண்மையாகும்.

காலத்திற்குக் காலம் ஆட்சிபீடம் ஏறுகின்ற சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாது அவர்களது உரிமைகளைப் பறித்து தமிழ் தேசிய இனத்தைச் சிதைவடையச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் தொடர்ச்சியாக தமது அரசியல் உரிமைகளை இழந்த தமிழ் பேசும் மக்கள் அவ் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு போராட்டத்தை நிகழ்த்த வேண்டிய வரலாற்றுத் தேவை தோற்றுவிக்கப்பட்டது.

அதன் ஆரம்ப வடிவமாக அகிம்சை வழியிலும் அரசியல் முறையிலும் நடைபெற்ற போராட்டத்தை வன்முறை மூலம் அடக்க முற்பட்டதாலேயே தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப்போராட்டமாகப் பரிமாணம் பெற்றது.ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்துவரும் விடயம் என்பதுடன் அதை அடையும் வரை தமிழ் மக்கள் ஒய்ந்துவிடப் போவதுமில்லை.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலான ஆயுதம் தாங்கிய வீரமிகு போராட்டம் முள்ளிவாய்க்கால் மானிடப் பேரவலத்தினைத் தவிர்ப்பதற்காக ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன. அத்தகைய இன்றைய சூழலில் இப்போராட்டத்தைத் தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழம் என்பது விடுதலைப் புலிகளின் விருப்பம் மட்டுமே என்று திரித்துக்கூறி, நியாயமானதும் ஈழத்தமிழரின் மிக நீண்டகாலப் போராட்டத்தின் எதிர்பார்ப்புமாகிய சுதந்திரத்தையும் இறைமையையும் மறுதலிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களிலும் நடைபெற்றுவருகின்றன. உண்மைக்குப் புறம்பான மாறுபட்ட செய்திகளையும், கருத்துக்களையும் பரவலடையச் செய்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைச் சிதைக்கும் நோக்குடனும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஆகவே இன்றைய நிலையில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத்திற்கான தமது விருப்பையும், தாம் அதற்கான தாயகமும் தேசியமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்பதையும் முழு உலகிற்கும் ஆணித்தரமாகச் சொல்லவேண்டியதும், விடுதலைக்கான அரசியற் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதும், ஈழத்தமிழ் மக்களின் உடனடியான வரலாற்றுக் கடமையாகின்றது.

இவ்வகையில், ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் அபிலாசையை மக்களாணை மூலம் வெளிப்படுத்தியமையும், முழுமையான சுதந்திர விருப்பைப் பிரகடனப்படுத்தியதுமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீண்டும் வழிமொழிவது, ஐயத்துக்கிடமின்றி இன்றைய மக்களின் விருப்பும் அதுவே என்பது உலகிற்குத் தெளிவாகப் பறைசாற்றும் நிகழ்வாக அமையும். இந்த வழிமொழிவு இன்று ஈழத்தமிழரின் தேசிய அரசியற் போக்கைத் தீர்மானிக்கும் முதற்கட்டமாகும்.

அதேநேரத்தில் பன்னாட்டுப் பரிமாணம் பெற்றுவிட்ட இலங்கைத்தீவின் அரசியற் சூழலிலும் ஈழத்தமிழரின் தற்போதைய நிலையிலும் அவர்களது அரசியற் கட்டமைப்பாக ஜனநாயக வழியில் தெரியப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசு சர்வதேசரீதியில் தமிழ் மக்களது உரிமைகளை நியாயப்படுத்தி தனியரசு அமைய பாடுபடுவது இன்றைய காலகட்டத்தின் கட்டாய தேவையாகவும் உள்ளது.

அதேவேளை, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்படுகின்ற மக்கள் அவைகள் ஜனநாயக முறையில் அமைவதானது மக்கள் பங்களிப்பை விரிவுபடுத்தவும், வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும், நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும், இவ்வரசின் நடைமுறைச் செயற்பாட்டுக்கு உதவக்கூடியதாகவும் அமையும்.

மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும், இவை ஒன்றுக்கொன்று இயைவாகவும் பாதுகாப்புத் தரக்கூடியவையாகவும் அமைதலே இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும். இன்றைய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாங்களே தலைமையேற்று நடாத்துகின்ற ஜனநாயகம் தழுவிய போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகளாகிய நாம் ஆதரிப்பதுடன் இச்செயற்பாடுகள் முழுமையான மக்கள் பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும், அளப்பரிய தியாகங்கள் புரிந்த மக்களையும் எங்கள் மனங்களில் நிலைநிறுத்தி தாயக வேட்கையுடன் விடுதலை பெறும்வரை ஒன்றிணைந்து உழைத்தலே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" www.sankathi.com

இது யாரையோ திருப்திப்படுத்துவதற்காக ஒரு உன்னதமான இயக்கத்தின் பெயரால் விடப்பட்டுள்ளது.சுத்த மோசடிப் பேர்வழிகளை அங்கீகரிக்கச் சொல்லி யார் சொன்னாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இரணைப்பாலையிலிருந்து தொடர்ந்த இனப்படுகொலையை தடுக்கவக்கற்ற ராச'தந்திரக்'கூட்டத்தின் புது மோசடி இது!

கே.பி அறிக்கை...அதற்கு அறிவழகன் மறுப்பு...ராம் கே.பியை அங்கீகரிப்பு....பிறகு லக்ச்மன் மறுப்பு....முன்னா மறுத்த அறிவழகன் திரும்பிவந்து கே.பியை இங்கீகரித்து குத்துக்கரணம்...அதன் தொடர்ச்சி மோசடிதான் இந்த அறிக்கை!!!

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை தீர்மானத்தை வழிமொழிவதென்றால்..அதற்கு பின்னர் புலிகள் கொண்டு வந்த தமிழீழத் தாயகத்தை கைவிட்டயிற்றா.???அதுவும் இந்த அறிக்கை புலிகளின் அறிக்கை என்று யார் விட்டது சங்கதி இணையத்தளமா??அப்படியானால் சங்கதி இணையத்தளம் தான் இனி புலிகளா?? சரி இனிவரும் காலங்களில் புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்பதை விட்டு விட்டு புலிகளின் தாகம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்று மாற்றியமைப்பார்களா?? புலிகள் பெயரில் இன்னும் எத்தனை பேர் கிளம்பப்போகிறார்கள்??

சாத்திரியாரின் திர்மானத்தை வழிமொழிகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழீழத் தனியரசுதானே.அதற்குத்தானே தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுக்குத் தெரிந்த வழியில் போராடுனார்கள். பத்திரிகையாளர் மாநாட்டிலும் தேசியத்தலைவர் சொன்னார்.தமிழீழத் தாயகம் என்பது புலிகளால் முன்மொழியப் பட்டதல்ல வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு சனநாயக முறைப்படி 1977 இல் தமிழீழ மக்களால் ஏக மனதான ஆணை வழங்கப்பட்டது. ஆக சரியான தெளிவான கொள்கை அதை உறுதியாக முன்னெடுக்காதவர்களால் (த.வி.கூ) முன் மொழியப் பட்டதே ஒழிய தமிழ் மக்கள் இன்னும் அதைக் கைவிடவில்லை. அந்தக் கொள்கையை வென்றெடுக்க புலிகள் அளப்பெரிய தியாகங்களுடன் போராடி வருகிறார்கள். தற்போதய நிலமைகள் சர்வதேசத்தால் போடப் பட்ட முட்டுக் கட்டைகள் எல்லாவற்றையும் தாண்டி புதிய வடிவத்தில் போராட்டம் தொடரும். அதைத் தவிர தமிழருக்கு வேறு வழிகளில்லை.

ஆகவே சாத்திய மான எல்லா வழிகளிலும் போராட வேண்டும் என்பதையே இந்த அறிக்கை கூறுகிறது. தவறாக எதுவும் கூறப்படவில்லை.

போராடுபவர்கள் தோற்கலாம். போராடாதவர்கள் ஏற்கெனவே தோற்று விட்டவர்கள். இது ஒரு ஜேர்மன் பழமொழி.

0

Edited by புலவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட்டுக்கோட்டைதீர்மானம் என்றால் என்னவெண்று தெரியாதவர்கள் பேசகூடிய பேச்சு இது.

  • கருத்துக்கள உறவுகள்

சித்தரே எனக்கா பதில் எழுதினீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தரே எனக்கா பதில் எழுதினீர்கள்.

வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது என்னவென்று தெரியாதவர்களுக்கு எழுதப்பட்டது :D

  • கருத்துக்கள உறவுகள்

சித்தரே! அப்படிப் போடுங்க அரிவாளை!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட்டுக்கோட்டைப் பிரகடனம், நாடுகடந்த நாடுகடக்காத அரசுகள், புலம்பெயர்தமிழரிடம் பொறுப்பு, வேற ஏதாவது சண்டையைத்தவிர? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போகிறபோக்கில் இனி இங்கு இயக்கப் பணத்தைக் களவெடுத்தவர்களுக்காகவும்,அவர்கள் எல்லாக் கணக்குகளையும் சரிசெய்து விட்டார்கள் என்றும்

புலிகளின் பெயரில் மோசடி அறிக்கை வெளிவரலாம் பாருங்கள்!!!

அது என்ன 'சங்கதி;க்கு மட்டும் வந்ததா இந்த அறிக்கை? அல்லது

எல்லாத்தையும் முடிச்சு அழித்துப்போட்டு தென்னிலங்கை விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அண்ணாவிட்ட அறிக்கையா இது???

அது என்ன இவ்வளவுகாலமும் முகாம்களில் மக்கள் மலம்மிதக்கும் தண்ணிருக்குள்ளும் சித்திவதைகளுக்குள்ளும் அல்லல்பட்டபோது அறிக்கை ஏதும் விடாத

விடுதலைப்புலிகள் இப்போது யாரோ ஒருவரை பெரிசு படுத்துவதற்காக விடுவார்களா???

உண்மையான விடுதலைப்புலிகள் ஒருபோதும் செய்யமாட்டார்கள்.

மோசடிகளுக்கு ஒரு அளவுகணக்கு இல்லாமல் போச்சு! இனி ஒருவேளை தலைவரின் கையெழுத்துடனும் அறிக்கை வந்தாலும் யாரும் ஆச்சரியப்படவேண்டாம் ஐயா!!

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை தீர்மானம்.

vk1.jpg

vk2l.jpg

vk3c.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பதற்கும் புலிகள் போராடியதற்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறியக்கூட எமக்கு அரசியல் அறிவு போதவில்லை போலிருக்கிறது.புலிகளின் போராட்டத்தின் அடிப்படையே தமிழரின் தாயகமும் சுய நிர்ணய உரிமையும் தான் என்பது இதுவரை எமக்கு விளங்காமலிருந்திருக்கிறதே?! 1976 இல் வட்டுக்கோட்டையில் தமிழ் அரசியல் தலமைகளினாலும் ஏகோபித்த தமிழரின் ஆதரவினாலும் எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது இது ரெண்டையும் தான் கூறுகிறதென்பது எம்மில் எத்தனை பேருக்குத் இன்னும் தெரியாமல் இருக்கிறது? அப்போது புலிகள் போராடியது எதற்காகத்தான் என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தோம்? சிங்களவனின் நாட்டைப் பிடிக்கவா???

வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீண்டும் உச்சரிக்கப்படுதற்கான காரணம்,முகாம் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதுதான் இன்றுள்ள ஒரே பிரச்சனை என்று அரசு உலகின் முழுக்கவனத்தையும் திருப்பி விட்டிருக்கிறது. சிறிது காலத்துக்குப்பின் அதுவும் மறந்துவிடும். இதன்மூலம் எமது அடிப்படை அரசியல் பிரச்சனை என்பது என்னவென்றே பலருக்கும் ஒரு குழப்பம் வந்துவிடு. அரசும் இதைத்தான் எதிர்பார்க்கிறது.

ஆகவே இதை முறியடிக்க வேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கிறது. அதாவது புலிகள் எனும் ஒரு பயங்கரவாதக் குழு மட்டும்தான் தனியீழம் கேட்டுப் போராடியது. அதுவும் இப்போது அழிக்கப்பட்டு விட்டது. ஆகவே தமிழர்க்கு இங்கு ஒரு பிரச்சனையுமில்லை , இருந்த ஒரே புலிப்பிரச்சனையையும் அழித்துவிட்டோம் என்று அரசு செய்யும் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். புலிகளின் உருவாக்கத்தின் முன்பே தமிழரின் தாயகக் கோற்பாடும், சுய நிர்ணய உரிமைக்கான தேவையும் எழுந்திருக்கிறது என்பதை நாம் அறைந்து சொல்ல வேண்டும். புலிகள் அழிக்கப்பட்டுள்ள இன்றைய கால கட்டத்தில் இன்னும் இதை நாம் ஆழமாகச் சொல்ல வேண்டும். அதாவது தனி ஈழம் என்பது தமிழரின் தேவையேயன்றி அது அரசு சொல்வதுபோல ஒரு தீவிரவாத இயக்கத்தின் கொள்கை அல்ல என்பதை பறைசாற்ற வேண்டும்.

புலிகளும் அழிக்கப்பட்டாயிற்று, இதுவரை தமிழரின் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்திப்போராடிய புலிகளின் பின்னர் ஒரு வெற்றிடம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அது மீண்டும் புலிகளால் முன்னெடுக்கப்படும்வரையாவது நாம் அதைத் தூக்கிச் செல்ல வேண்டும். அதைச் செய்வதற்கு மக்களின் ஏகோபித்த அபிலாஷை இன்று என்னவென்று எமக்குத் தெரிய வேன்டும். ஆகவேதான் வட்டுக்கோட்டைத்தீர்மானத்தை அடிப்படையாக வைத்து கேள்வி கேட்க வாண்டியிருக்கிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்கிற பெயர் எம்மிலேயே பலருக்குத் தெரியாமலிருக்கும் போது உலகிற்குத் தெரிய எந்த வாய்ப்புமில்லை. ஆகவேதான் அதை மீளவும் சொல்ல வேன்டிய தேவையிருக்கிறது. குறிப்பாக புலம் பெயர் நாடுகளில் இவை செயல்படுத்தப்படும்போது உலகின் காதுகளை எட்டுவதற்கான சந்தர்ப்பமும் இருக்கிறது.

வட்டுக்கோட்டை என்கிற பெயரை விடுங்கள்.அது ஒரு ஊரின் பெயர் மட்டும்தான். ஆனால் அந்த ஊரில் 1976 இல் தமிழ்மக்களின் ஒட்டுமொத்த அபிலாஷையும் அன்று எழுதப்பட்டது என்பதை மறக்க வேண்டாம். இதுவேதான் புலிகளின் தாரக மந்திரமும் என்பதை மறக்க வேண்டாம்."புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்பதால் இதுவரை என்னத்தைத்தான் நாம் விளங்கி வைத்திருந்தோம். " தமிழீழத் தாயகம்" என்பது முதம் முதலில் தமிழ் மக்களால் புலிகளுக்கு முன்பே உச்சரிக்கப்பட்டதென்பதையும் அதையே புலிகளும் தமது இலட்சியமாக வரிந்து கொண்டார்கள் என்பதையும் மரக்க வேண்டாம்.

1977 பொதுதேர்தலில் 24 இடங்களில் 23 இடங்கலைப் பெற்றுத் தமிழரின் தாயகக் கோட்பாட்டோடு பாரளுமன்றம் சென்றது தமிழர் கூட்டணி. அன்றைக்குப் பின்னர் இன்றுவரை இலங்கையில் தமிழர் சுதந்திரமாகவும், அச்சமின்றியும், எந்தவித அரச பயங்கரவாத அழுத்தங்களின்றியும் தமது அரசியல் அபிலாஷைகளை சொல்லக்கூடிய தேர்தல் நடைபெறவில்லை என்பதுதான் உண்மை. ஆகவேதான் புல்மபெயர் நாடுகளில் இருக்கும் தமிழர் இவ்வாறானதொரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டிய தேவை இருக்கிறது.

இந்த சர்வஜன வாக்கெடுப்பின் பெறுபேறுகளை நாம் எந்த வழியில் எமது தாயக விடுதலையை நோக்கிப் பாவிக்கப் போகிறோம் என்பதில்த்தான் இந்த வட்டுக்கோட்டைதீர்மானத்தின் மீளுருவாக்கத்தின் வெற்றி தங்கியிருக்கிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழீழத் தனியரசுதானே.அதற்குத்தானே தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுக்குத் தெரிந்த வழியில் போராடுனார்கள். பத்திரிகையாளர் மாநாட்டிலும் தேசியத்தலைவர் சொன்னார்.தமிழீழத் தாயகம் என்பது புலிகளால் முன்மொழியப் பட்டதல்ல வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு சனநாயக முறைப்படி 1977 இல் தமிழீழ மக்களால் ஏக மனதான ஆணை வழங்கப்பட்டது. ஆக சரியான தெளிவான கொள்கை அதை உறுதியாக முன்னெடுக்காதவர்களால் (த.வி.கூ) முன் மொழியப் பட்டதே ஒழிய தமிழ் மக்கள் இன்னும் அதைக் கைவிடவில்லை. அந்தக் கொள்கையை வென்றெடுக்க புலிகள் அளப்பெரிய தியாகங்களுடன் போராடி வருகிறார்கள். தற்போதய நிலமைகள் சர்வதேசத்தால் போடப் பட்ட முட்டுக் கட்டைகள் எல்லாவற்றையும் தாண்டி புதிய வடிவத்தில் போராட்டம் தொடரும். அதைத் தவிர தமிழருக்கு வேறு வழிகளில்லை.

ஆகவே சாத்திய மான எல்லா வழிகளிலும் போராட வேண்டும் என்பதையே இந்த அறிக்கை கூறுகிறது. தவறாக எதுவும் கூறப்படவில்லை.

போராடுபவர்கள் தோற்கலாம். போராடாதவர்கள் ஏற்கெனவே தோற்று விட்டவர்கள். இது ஒரு ஜேர்மன் பழமொழி.

0

1976ல் வட்டுக்கோட்டையில் அத்திவாரம் போட்டு மகாநாடாய் சுழிபுரத்தில் கோட்டை அமைத்து கூட்டணி கோபுரமானது. அன்று கலசங்களாக இருந்த கூட்டணித் தலைவர்கள் ஒலித்தார்கள். இன்று எம்மக்களை ஒழித்தார்கள். இக்கூட்டணி தொடர்ந்து தானே கோபு

ரக் கலசமாக இருக்க வேண்டும் என்பதற்காக சொன்னபடி எதையும் செய்யாமல் இருக்க கோட் டையைப் பிடிக்க இளைஞர்கள் படையெடுத்து, ஒன்றை ஒன்று கொன்று தின்று, வட்டுக் கோட்டை புலிக் கோட்டையானது. ஆனால் அது மக்கள் கோட்டையாக அமையவில்லை. இக் கோட்டைக்குக் கொத்தளமாகவும் அத்திவாரமாகவும் அமிழ்ந்து போய் இருந்தவர்கள் அப்பாவி எம்தமிழ்மக்களே.

கருவே அழிந்தபின்பு எப்படிப் பிள்ளைப்பேறு என்பதுதானே முள்ளிவாய்கால் முடிவு. தலைபோனபின்பு அந்த வெற்றிடத்தை நிரப்ப தலைபோனவர்கள் ஓடித்திரிகிறார்கள். இன்னும் மண்ணாயும், மனிதராயும், கோட்டை, கோபுரங்களைத் தாங்கி நின்ற ஈழமக்கள் கருத்தை கவனத்தில் கொள்ளாது கடல்கடந்த கடக்கா ஈழம் என்று உடைந்து போன வட்டுக்கோட்டை எனும் கோட்டையைக் கட்டித் தட்டி எழுப்புவதை விட காலத்துக்கேற்றால்போல் கட்டக்கூடிய ஒரு சிறுகுடிசை ஒன்றையாவது சரியாகக் கட்ட முன்வருவார்களா? சரியாகத்தான் சிந்திப்பார்களா?

இன்றும் கூட தமிழ் தலைவர்கள் இராஜபக்சவுக்கு அவர் மொழியிலேயே உணர்த்த வேண்டியது ஒன்று உள்ளது. இன்று அவர்வகிக்கும் பதவி தமிழ் மக்களாலேயே தரப்பட்டது என்பதையும், அந்த மக்கள்தான் இன்று வன்னியில் கம்பிவேலிக்குள் கன்னம் உரசுகிறார்கள் என்பதையும் சரியான முறையில் எடுத்துச் சொல்ல வேண்டிய நிலையும் நிலைப்பாடும் உள்ளது. கோட்டைக்கு ஆசைப்பட்டு குடிசையே இல்லாது போன நிலையைக் கண்ணால் கண்டும் திருந்த மாட்டேன் என்று அடம்பிடிப்பவர்கள் ஈழத்திலுள்ள கடைசித் தமிழனையும் கொன்று விட்டுத்தான் மீதி என்று எண்ணுகிறார்களோ என்னவோ?

Thank you Kulan from Thesamnet.

Thank you Kulan from Thesamnet.

தேசம் நெற்க்கு இது ஒட்டுக்குழுக்களின் ஊடகம் என்று கேள்விப்பட்டேன் ?

இவைகளுக்கு இங்கு அனுமதி உண்டா ?

இந்த அறிக்கை யார் விட்டார்கள் என்று பார்ப்பதை விட ஏன் எதற்கு என்று பார்ப்பது ந்ல்லது

ஓரு வேளை ? நாளை தேசிய தலைவர் அறிக்கை விட்டால் கூட இனி சந்தேக கண்ணோடு தான் பார்க்கப் போகின்றீர்கள் ?

இப்போது பரபரப்பாக ஒன்றும் செய்ய முடிவில்லை ?

ஏன் என்றால்

உணர்வாளர்களை விட உளவாளிகள் தான் அதிகமாகி விட்டார்கள் எமது அமைப்புக்களில் ?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

""ஓரு வேளை ? நாளை தேசிய தலைவர் அறிக்கை விட்டால் கூட இனி சந்தேக கண்ணோடு தான் பார்க்கப் போகின்றீர்கள் ? ""

"""ஓரு வேளை ? நாளை தேசிய தலைவர் அறிக்கை விட்டால் கூட இனி சந்தேக கண்ணோடு தான் பார்க்கப் போகின்றீர்கள் ? """

மற்றக்களை விடுங்கோ, நீங்கள் எப்படி பார்க்கப் போகின்றீர்கள்?

மன்னிக்கவும், நான் பொதுவா இப்படியில்லை..ஒராள் கொஞ்ச‌ம் கடுப்போத்தி போட்டார்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.uthayan.com/Welcome/afull.php?id=162&L=T&1257737108,

யாழ்ப்பாணத்து தமிழ் உதயன் பத்திரிகை..

எங்களுடைய மக்களின் இன்றைய தேவை..

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஒருத்தர் காலையில் நான் எழுதிய கருத்துப்பற்றி பேச வேன்டும் என்று கேட்டார். அதுவும் திண்ணையில் பேசினால் நல்லது என்றார். நானும் சரி, பேசலாமே என்று கூறினேன்.

ஆனால் அவரது கேள்வியெல்லாம் இந்த வாக்கெடுப்புச் சம்பந்தமாக இல்லாமல், புலிகளின் ஏக பிரதிநிதித்துவம் பற்றியே இருந்தது.

"நீங்களும் உங்களைப்போன்ற சிலரும் மட்டுமே புலிகளை தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று கருதுகிறீர்கள்" என்ற ஏளனத்துடந்தான் இவரது பேச்சுத் தொடங்கியது. இவரது முதலாவது கேள்வியின் தொணியைப் பார்த்தவுடனேயே இவர் எங்கிருந்து வருகிறார், இவரது நோக்கமென்ன என்பது ஓரளவிற்குப் புரிந்து விட்டது.

இன்னொரு இடத்தில், " நாம் இந்த ஏக பிரதிநிதித்துவம் , ஏகம் இல்லாப் பிரதிநிதித்துவம் பற்றி மற்ற எல்லாப் பிரச்சனைகளுக்கு முன்னர் ஒரு முடிவிற்கு வரவேண்டும்" என்று ஒரு அரிய கருத்தை முன்மொழிந்தார்.

இதற்குப்பின் இவருடன் கதைப்பதில் எந்தப்பயனுமில்லை என்று உணர்ந்துகொண்டேன். அதனால் இவருக்குப் பதில் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

உடனேயே, 5 நிமிடங்களை செலவழிக்க முடியாதவர்கள், தலைக்கனம் பிடித்தவர்கள் என்றெல்லாம் வசை பாடுகிறார்.

உண்மை என்னவென்றால் இவரைப் போல் பலர் இங்கும் இன்னும் பல இணையங்களிலும் உலாவி வருகிறார்கள். இப்படியானவர்களின் நோக்கமெல்லாம் தமிழரின் இழப்புகளுக்குப் புலிகளைக் காரணம் காட்டுவதும், இன்றுவரை சிங்களப் பயங்கரவாதத்துடன் கைகோத்துக்கொண்டு தமிழின அழிப்பில் ஈடுபட்டிருக்கும் தமிழ்த் துரோகிகளை நியாயப்படுத்துவதும்தான். இன்று செயல்ப்பட்டு வரும் தன்னார்வத் தொண்டர்களை இம்சிப்பதும் இவர்களது இன்னுமொரு கைங்கரியும். இவர்களுடனான எந்தக் கருத்துப்பகிர்வும் எமக்கு நண்மை பயக்கப்போவதில்லை. இவ்வாறான பலருடன் ஏற்பட்ட கசப்பான வாக்குவாதங்கள்தான் என்னை இப்படியான விதண்டாவாதங்களை தவிர்க்க வேண்டும் என்கிற நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

நண்பரே, உண்மையிலேயே கடுப்பாகிப்போனது நீங்கள் இல்லை. உங்கள் கருத்தாடலால் என்னைக் கடுப்பாக்கியது நீங்கள்தான்.

வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழீழத் தனியரசுதானே.அதற்குத்தானே தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுக்குத் தெரிந்த வழியில் போராடுனார்கள். பத்திரிகையாளர் மாநாட்டிலும் தேசியத்தலைவர் சொன்னார்.தமிழீழத் தாயகம் என்பது புலிகளால் முன்மொழியப் பட்டதல்ல வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு சனநாயக முறைப்படி 1977 இல் தமிழீழ மக்களால் ஏக மனதான ஆணை வழங்கப்பட்டது. ஆக சரியான தெளிவான கொள்கை அதை உறுதியாக முன்னெடுக்காதவர்களால் (த.வி.கூ) முன் மொழியப் பட்டதே ஒழிய தமிழ் மக்கள் இன்னும் அதைக் கைவிடவில்லை. அந்தக் கொள்கையை வென்றெடுக்க புலிகள் அளப்பெரிய தியாகங்களுடன் போராடி வருகிறார்கள். தற்போதய நிலமைகள் சர்வதேசத்தால் போடப் பட்ட முட்டுக் கட்டைகள் எல்லாவற்றையும் தாண்டி புதிய வடிவத்தில் போராட்டம் தொடரும். அதைத் தவிர தமிழருக்கு வேறு வழிகளில்லை.

ஆகவே சாத்திய மான எல்லா வழிகளிலும் போராட வேண்டும் என்பதையே இந்த அறிக்கை கூறுகிறது. தவறாக எதுவும் கூறப்படவில்லை.

போராடுபவர்கள் தோற்கலாம். போராடாதவர்கள் ஏற்கெனவே தோற்று விட்டவர்கள். இது ஒரு ஜேர்மன் பழமொழி.

0

தமிழீழத் தாயகம் என்பது புலிகளால் முன்மொழியப் பட்டதல்ல வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு சனநாயக முறைப்படி 1977 இல் தமிழீழ மக்களால் ஏக மனதான ஆணை வழங்கப்பட்டது. ஆக சரியான தெளிவான கொள்கை அதை உறுதியாக முன்னெடுக்காதவர்களால் (த.வி.கூ) முன் மொழியப் பட்டதே ஒழிய தமிழ் மக்கள் இன்னும் அதைக் கைவிடவில்லை. அந்தக் கொள்கையை வென்றெடுக்க புலிகள் அளப்பெரிய தியாகங்களுடன் போராடி வருகிறார்கள். தற்போதய நிலமைகள் சர்வதேசத்தால் போடப் பட்ட முட்டுக் கட்டைகள் எல்லாவற்றையும் தாண்டி புதிய வடிவத்தில் போராட்டம் தொடரும். அதைத் தவிர தமிழருக்கு வேறு வழிகளில்லை.

ஆகவே சாத்திய மான எல்லா வழிகளிலும் போராட வேண்டும் என்பதையே இந்த அறிக்கை கூறுகிறது. தவறாக எதுவும் கூறப்படவில்லை.

எனது கருத்தும் இதுவே

இதுதான் உண்மையும கூட

இதுதான் தமிழ்மக்களுக்கு நன்மையளிக்கும்

அதேநேரத்தில் பன்னாட்டுப் பரிமாணம் பெற்றுவிட்ட இலங்கைத்தீவின் அரசியற் சூழலிலும் ஈழத்தமிழரின் தற்போதைய நிலையிலும் அவர்களது அரசியற் கட்டமைப்பாக ஜனநாயக வழியில் தெரியப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசு சர்வதேசரீதியில் தமிழ் மக்களது உரிமைகளை நியாயப்படுத்தி தனியரசு அமைய பாடுபடுவது இன்றைய காலகட்டத்தின் கட்டாய தேவையாகவும் உள்ளது.

அதேவேளை, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்படுகின்ற மக்கள் அவைகள் ஜனநாயக முறையில் அமைவதானது மக்கள் பங்களிப்பை விரிவுபடுத்தவும், வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும், நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும், இவ்வரசின் நடைமுறைச் செயற்பாட்டுக்கு உதவக்கூடியதாகவும் அமையும்.

மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும், இவை ஒன்றுக்கொன்று இயைவாகவும் பாதுகாப்புத் தரக்கூடியவையாகவும் அமைதலே இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும். இன்றைய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாங்களே தலைமையேற்று நடாத்துகின்ற ஜனநாயகம் தழுவிய போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகளாகிய நாம் ஆதரிப்பதுடன் இச்செயற்பாடுகள் முழுமையான மக்கள் பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயம் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் சன நாயக கட்டமைப்புகளை நிறுவி தாயகவிடுதலைக்குச் சர்வதேச சட்டதிட்டங்களை மதித்துப் போராடும்படி கூறப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது இந்த அறிக்கை இக்காலச் சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கும்.

இந்த ஒரு அறிக்கை மே 19 இல் வந்திருந்தால் போதுமானதாக இருந்திருக்கும்.

புதியவர்கள் புதிய கட்டமைப்புகளை நிறுவி செயற்பட்டிருக்கலாம் அல்லவா? ஏன் குழப்பகர மான அறிக்கைகளை வெளியிட்டவர்கள், புலிகள் அமைப்பிற்கு புதிய கொள்கை விளக்கம் கொடுக்க முற்பட்டவர்கள். புலிகள் அமைப்பு வேறு, இந்தக் கட்டமைப்புகள் வேறாக பேணவேண்டியதேவையை உணரவில்லையா? புலத்து, பெரும் சட்டவல்லுனர்கள்.

Edited by kalaivani

இதில் உள்ள அறை கூவலின் படி இழையோர்கள் போராடினார்கள்

Edited by rajcan

போராட்டத்தைத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது - தமிழீழ விடுதலைப் புலிகள்

புலிகளே உறுதியாக கூறிவிட்டார்கள், இனி போராட்டத்தை நாம் நடத்தப்போவதில்லை, உங்களிடம் கையளிக்கிறோம் என்று! இனியாவது புலிகளின் பெயர்களை பயன்படுத்தி வாழ்ந்து வரும் காஸ்ரோக்கள் ஒதுங்க வேண்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளே உறுதியாக கூறிவிட்டார்கள், இனி போராட்டத்தை நாம் நடத்தப்போவதில்லை, உங்களிடம் கையளிக்கிறோம் என்று! இனியாவது புலிகளின் பெயர்களை பயன்படுத்தி வாழ்ந்து வரும் காஸ்ரோக்கள் ஒதுங்க வேண்டும்!

உங்களிடம் என்று சொல்லியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள், அவர்கள் கருணா, டக்கிளஸ், போண்ற போண்ற கள்ளரையும், அவர்களுக்கு வால்பிடிக்கும் அவுஸ்ரேலிய விலங்கு வைத்தியருக்கும் என்று சொல்ல வில்லை, மக்களிடம் என்று சொல்லி இருகிறார்கள். :D:lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகுநாதனுக்கு..

"அவர்கதைத்து எல்லாம், புலியை வசபாடினது மட்டும்தான் என்று சொல்லுவது சொல்ல வேண்டாம்". நான் கதைத்துக்கொண்டிருக்கும் போதே சொன்னான், உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி வேண்டாம் என்று..பிறகு என்னத்துக்கு 5 நிமிடம் வீண் போன‌ கதை.

நான் உங்களை சொல்லவில்லை 2 நிமிடமோ அல்லது 3 நிமிடமோ கதைத்து போட்டு புலியை சாட்டி தங்கட வயிறு வளர்க்கும் கூட்டம் என்று..நீங்கள் என்னவென்று முடிவு எடுத்தனீங்கள், நான் டக்ளஸ்,கருணா..என்று..அதுவும் முதலேயே சொல்லிப்போட்டேன் நான் அப்படியான ஆள் இல்லை என்று..மற்றது,நண்பர், மெற் என்பதற்கு ஒரு கருத்திருக்கு...ஒருவரோடு 5 வசனம் கதைக்க தெரியாத ஆட்கள் அந்த சொற்களை பாவிக்கிறது பற்றி 2 முறை யோசித்தால் நல்லம்..

அத‌ற்கு மேல‌, ந‌டுநிலையாய்..அப்ப‌டி எதும் உங்க‌ளுக்கு தெரியுமெண்டால்..

யோசித்து பாருங்கோ,

இப்ப‌ வ‌ட்டுக்கோட்டை தீர்மான‌த்தால‌,ஆருக்கு என்ன‌ வ‌ரும்? அதும் புலி சாய‌த்தோட‌ வ‌ந்தா? இங்க‌ கொஞ்ச‌ப்பேர்,சொன்ன‌வை..யுத்த‌ நிறுத்த‌ம் சாமாதான‌ம்,சரணடைவு,சனத்தை வெளியேற விடுங்கோ... என்று சொல்லும் போதும், சிங்களவனிட்ட வந்த விடவே போகிறான், அடிபட்டு செத்தாலும் பாரவாயில்லை என்று..

பிறகு..அதுகள், காம்பில இருக்கேக்கை.1 சதம் குடுக்காமல்..சிங்களவன் நம்பி வந்தவை அவைகளுக்கு இதுவும் வேணும்,இன்னும் வேணும் எண்டவை..

இப்போது..அவர்களுக்காய்..நாடு கடந்த நாடு..

உங்களுக்கு கொஞ்சமாவது இரக்க குணம் இருந்தால்..அதுகளுக்கு உதவி செய்யுங்கோ..கொடுத்த துன்பம் ஆயிரம்,கோடி வருசங்களுக்கு போதும்..

புலியை பிழை சொல்லுகிர எல்லாரும் துரோகியும் இல்லை..அதை வால் பிடிக்கிற எல்லாரும் சுதந்திர புருசர் இல்லை.

ர‌குநாத‌னுக்கு..

என்னுடைய‌ குடும்ப‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர்,முக்கிய‌மான‌ நாடு ஒன்றில் உள்ள‌ நா.க‌.அர‌சிய‌ல் குழுவில் இருக்கிறார்..சில‌ வேளை அவ‌ருடை ச‌மூக‌ அந்த‌ஸ்தை நா.க‌.குழுவில் உப‌யோக‌ ப‌டுத்திவ‌ற்க்காக‌ இருக்க‌லாம். ஆனால் அவ‌ருட‌ன், கிட்ட‌த்த‌ட்ட‌ 2 வ‌ருட‌த்துக்கு முன் கதைத்த‌ போது சொன்ன‌வ‌ர்..3 த‌ர‌ப்பு த‌மிழ‌ரிட‌ம் இருந்து வ‌ராம‌ல் ஒரு தீர்வும் வ‌ர‌மாட்டாது என்று..அவ‌ர் த‌ன‌து உண்மையான‌ ஆத‌ங்க‌த்தில் இணைந்திருக்க‌லாம்..என்னுடைய‌ க‌ருத்தும் அதுதான்..(3 தரப்பு..புலி,எதிர்புலி,3ம் தரப்பு)

முத‌ல் தேவை இல‌ங்கையில் உள்ள‌ த‌மிழ‌ரின் தேவை

இப்போது நா.க‌.அ. தேவையில்லை..

அது வேணும் என்றால்..புலித்தோலை க‌ழ‌ற்றி வைத்திட்டு செய்வ‌ம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.