Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமண வா(ள்)ழ்த்துக்கள்

Featured Replies

இங்கு கடந்த வாரம் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் கழகத்தின் ஆண்டு பரிசளிப்பு நிகழ்வில் .... என்னுடன் முன்பு வேலை செய்த ஒரு நபரை சந்தித்தேன். இங்குள்ள பிரபலமான பல்கலைக்கழகத்தில் படித்திருந்தாலும், தமிழில் மீதுள்ள தீராக்காதலினால் ஆங்கிலத்தை கண்டாலே ..ம்ம்ம்... வெறுப்பு.அடிச்சுப்போட்டாலும் ..... வராது!

அவரும் என்னை மாதிரி நல்ல ஒரு நாட்டுக்கட்டை. ஆனால் அடைந்தால் மகாதேவி, இல்லையேல் ... என்ற பிடிவாத கொள்கைப்பற்றால் .... தேடிப்பிடித்து ஒரு மலேசியன் கிளியோபற்றாவை கரமும் பிடித்தார். கட்டியதற்கு பின் ... அவரின் நண்பர்களிடமும் பேரழகியை வர்ணித்தபடி இருப்பாராம்.

.... சில வருடங்களின் பின் சந்தித்தேன். பிள்ளைகளை அறிமுகப்படுத்தினார். கலியாண வயதை மூத்தவன் எட்டிப்பிடிக்க கன வருடம் தேவையில்லை. அண்ணர் தனியே உட்காந்திருந்தார், ஒரு மேசையில். என்ன பிள்ளைகளுடன் மட்டும் வந்தனீங்களோ? மனைவி வரவில்லையோ? என்றேன். இல்லை, அவ முன்னுக்கு இருக்கிறா என்றார்.

நிகழ்வு முடிவதற்கு முன்பே நான் கிளம்பிவிட்டேன். அடுத்த அடுத்த நாள் அண்ணருடன் இங்கு படித்த இன்னொருவரை சந்தித்தேன்.... அண்ணரை கன்டேன் என்றவுடன் .... அண்ணர் பாவம், இப்போ பிரிந்து விட்டார் என்றார். என்ன? ஓம், மரீஞ் வேக்கவுட் பண்ணேலையாம், பிரிந்திட்டினமாம்(என்னுடன் வேலை செய்த ஒரு கிழட்டு வெள்ளை சில கிழமைகள் வேலைக்கு வராமல் திரும்ப வந்தான், ஏன்? என்றேன், மரீஞ் வேக்கவுட் ஆகவில்லையாம்,அந்த பிரட்சனையில் ... 30 வருடம் கலியாணம் கட்டியாம் .... கிட்டத்தட்ட அதே வார்த்தைகள்).

முடவன் கொம்புத்தேனுக்கு .... அண்ணர் நல்ல ஒரு நாட்டுக்கட்டை!! ஆனால் அண்ணரின் தேவை கிளியோபற்றாக்களோ இல்லை மார்லின் மன்றோக்களோ(முன்பு ஒரு நண்பர் கலியாணம் கட்டும் போது தனக்கு சிறிதேவி போல பெண் தேவை என்று ஒற்றைக்காலில் நின்றார், அப்போது அவருக்கு பெண் பார்த்த ஒருவர் சொன்னார், பொப்ப்பளைகளும் இப்ப கமலகாஷனுகளை தேடிகிறார்கள் என்று, என் நண்பருக்கு வழிந்தது ...)!! நல்ல நாட்டுக்கட்டையாக பார்த்து கட்டுவதற்கு என்ன???

அதைவிட அண்ணருக்கு இன்னொரு கல்யாணம் பேசியாச்சாம்!! பெண் கனடாவாம்!! ஏற்கனவே மூன்று முறை அவ ...... டிவோஷாம்!!!! இந்த ரேன் அண்ணரது .....

வளவான வாழ்வு தேடி புலம் வந்தோம்!! செழிப்பான(?) மேற்கத்தேய கலாச்சாரத்துடன் ........

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

இது உலகம் பூராகவும்தான் நடக்கின்றது!

நண்பரை போட்டு வாங்குவதை பார்த்தால். அவர் கிளியோபட்ரா போல் ஒரு பெண்ணை அடைந்தது...... மிகுந்த பொறாமையை கொடுத்திருக்கும்போல. இப்ப பிரிந்துபோனதால் வந்த மகிழ்சிகர வார்தைகளாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இது உலகம் பூராகவும்தான் நடக்கின்றது!

நண்பரை போட்டு வாங்குவதை பார்த்தால். அவர் கிளியோபட்ரா போல் ஒரு பெண்ணை அடைந்தது...... மிகுந்த பொறாமையை கொடுத்திருக்கும்போல. இப்ப பிரிந்துபோனதால் வந்த மகிழ்சிகர வார்தைகளாக உள்ளது.

கொடுமை.. அவன் கட்டினானாம்..விட்டானாம்.. இன்னொன்றைக் கட்டப் போறானாம். இதால நெல்லைக்கு என்ன பிரச்சனை என்று தெரியல்ல..!

நெல்லை எல்லாருக்கும் அவரவர் எண்ணுவது போல் வாழ்வு அமைவதில்லை. பல பேர் நல்ல எண்ணங்களோட வாழ விளைந்தும்.. அவங்க துணைகள் சரிவர அமையாமல்.. நலிந்து போவதுண்டு. மனிதரில் ஆயிரம் வகைகள்...! எல்லோரையும் ஒரு வகையில் மதிப்படுவதும்.. அடுத்தவன்ர தனிப்பட்ட விடயங்களால் அவனை புறஞ்சொல்லித் திரிவதும் தமிழர்களுக்கு உள்ள பொதுவான குணம் என்றாலும்... அவை முற்றிலும் நாகரிமற்ற செயற்பாடுகள் என்றே கருதுகிறேன்.

அதென்ன "நாட்டுக் கட்டை". இது பெண்கள் தொடர்பான இழிநிலைப்படுத்தல் என்றே நினைக்கிறேன். பெண்களும் மனிதர்கள் தானே. ஒரு குடும்பம் பிரிவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். அதில் எல்லாம் மூக்கை நுழைப்பது அழகல்ல. அப்படி நுழைப்பதாக இருந்தாலும் அந்த சேர்ந்து வாழ்ந்த குடும்பத்தை சேர்த்து வைப்பதையே முதன்மையாகக் கொண்டியங்க வேண்டும்.

அடுத்தவன் துன்பத்தில் நமக்கு நகைப்பு என்ன இருக்கிறது..???! இது சிரிப்புக்குரிய விடயமா..????! :D:):unsure:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நெடுக்ஸ் .... உண்மைதான் இது நகைப்புக்குறிய விடயமா??? (நேற்று இரத்தக்கலரில் இருக்கும் பாணம், இதயத்துக்கு நல்லது என்றார்கள், அதை எடுத்தவுடன் ... இடம் மாறி விட்டது!)(மேல் குறிப்பிட்டவர் எனது நண்பரல்ல, சிறிது காலம் என்னுடன் வேலை செய்தவர்)... ம்ம்ம்ம் ....

நிச்சயமாக .... இன்று மேலைத்தேய மோகத்தில் ... எம்மைத்தொலைத்து ... நடைபெறுபவைகளை சமூகத்தின் மீது பழி சுமத்தி விட்டு தப்புகிறோம்!!

நான் பிறந்து இங்கு வரும் வரை என் ஊரிலேயோ அல்லது பழகிய இடங்களிலேயோ ... திருமண முறிவு/பிரிவு ... கேள்விப்படவே இல்லை! இன்றோ எம்மத்தியில் சந்தைக்கு வந்து விட்டது!! கேட்டால் இது அவரவரது தனிப்பிரட்சனை என்றும் காரணங்களும் கூறுகிறோம்!!!

நாட்டுக்கட்டை :- என்ன இது? கலாச்சார இடைவெளிகளால் .... ஏற்பட்டது என்று கூறலாமா??? ... உண்மைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்(உதாரணத்துக்கு மருதங்கேணியில் பிறந்து வளந்தவருக்கும், கொழும்பில் பிறந்து வளந்தவருக்கும் உள்ள இடைவெளி போன்றது என்று கூறலாமா/)!!

புலத்தில் தற்போது இன்னொரு அவலம் எம்மிளைஞர்கள் மத்தியில் ... வெளிநாட்டுப் பெண்ணுடன் வாழ்வதையோ அல்லது திருமணம் செய்வதையோ தாம் சாகஷம் செய்வதாக நினைக்கிறார்கள். இச்சாகஷங்கள் எத்தனை நாளைக்கு நிலைக்கின்றதென்றால் .......???????

எம் முன்னோர்கள் சிலவற்றை பழமொழிகளாக கூறிவிட்டுச் சென்றார்கள் ..... உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி .......

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிறந்து இங்கு வரும் வரை என் ஊரிலேயோ அல்லது பழகிய இடங்களிலேயோ ... திருமண முறிவு/பிரிவு ... கேள்விப்படவே இல்லை! இன்றோ எம்மத்தியில் சந்தைக்கு வந்து விட்டது!! கேட்டால் இது அவரவரது தனிப்பிரட்சனை என்றும் காரணங்களும் கூறுகிறோம்..!!!

நான் ஊரில் நகரங்களை அண்டி வாழ்ந்ததால்.. அங்கும் இப்படியான் திருகுதாளங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் கூட அவர்கள் கையாண்ட வழக்குகளில் அநேகம் குடும்பப் பிரச்சனைகள் பற்றியதாக.. சுதந்திரப்பறவைகள் ஏட்டில் வெளிவந்திருந்த ஒரு புள்ளி விபரத்தில் கண்டிருக்கிறேன். அது கிட்டத்தட்ட ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்னர். ஆனால் இன்று அது பல மடங்காகி இருக்கும்.

புகலிடத்தைப் பொறுத்தவரை தங்கி வாழும் குடும்ப வாழ்வு இல்லை. அவனும் உழைக்கிறான் அவளும் உழைக்கிறாள்.. அவனும் குடிக்கிறான்.. அவளும் குடிக்கிறாள்.. இப்படி அவனும் அவளும் எல்லாமும் செய்ய முடிவதால்.. யாரும் யாரிலும் தங்கி இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி இருக்கும் போது வெறும் பாலியல் அடிப்படையில் அமையும் திருமணங்கள் நிச்சயம் நீடிக்க முடியாது. ஊரிலேயே பார்ப்போமே.. நாய்கள் வீதியில் நின்று ஏறுப்படுங்கள்.. ஓரிரண்டு நாட்களுக்கு ரோட்டெல்லாம் ஒரே நாய் ஓட்டமா இருக்கும். பின்னர் எல்லாம் அடங்கி விடும். அதுபோலத்தான் புலம்பெயர் நாட்டிலும் மனித ஆண் நாய்களும் மனிதப் பெண் நாய்களும்.. அலையுங்கள். ஏறுப்படுங்கள். பிரிஞ்சிடுங்கள். இதை தான் நாம் ஆண் பெண் சுதந்திரம் என்று வரையறுக்கிறோம். புரட்சிகர குடும்ப அமைப்பின் அத்திவாரமே இந்த நாய்த்தனத்தில் இருந்துதான் கட்டி எழுப்பப்படுகிறது.

மனித வாழ்க்கை பணம்.. ஆடம்பரம்.. வசதியான வாழ்க்கை.. இவற்றை மையப்படுத்தி எழுப்படுவதால்.. முன்னரெல்லாம் மன இணக்கப்பாட்டையும் கருத்தில் கொண்டு ஏற்பட்ட திருமணங்கள் இன்று அவருக்கு என்ன படிப்பாம்.. அவருக்கு என்ன வேலையாம்.. அவருக்கு எத்தினை வீடாம்.. அவருக்கு என்ன விசாவாம்.. அவருக்கு எவ்வளவு பாங்கில இருக்காம்.. அவருக்கு கார் ஓடத் தெரியுமாமோ.. அவருக்கு வெஸ்டேனா நடக்கத் தெரியுமாமோ.. அவருக்கு ஆங்கிலம் நுனி நாக்கில் வருமாமோ.. என்று இவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் இன்று எழுப்பப்படுகின்றன.

இத்தனை கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்கு ஒருவருக்கு மட்டும் ஒருத்தி வாழ்க்கைத் துணையாக வருவாவாம். இத்தனையும் உள்ள ஒருவன் ஏன்... ஒருத்தி கூட கட்டிக்கிட்டு அல்லல்படனும் என்று நினைப்பான் இல்லையா.

ஒருவா.. வெளிநாட்டில் மாப்பிள்ளை டாக்டர்.. விசா வீடு பாங் எல்லாம் சரி... என்று வந்தா. ஆளும் பார்க்க ஓகே. இறுதியில் என்னாச்சு ஒருவருடம் கூட ஆகவில்லை. வந்தவா பழையபடி ஊருக்குப் போய்டா. அவையள் கொழும்பில் வாழ்ந்தவர்கள் என்பதால் ஊர் போக முடிவு செய்தார்கள். இதையே யாழ்ப்பாணத்தில இருந்து வந்த ஒருத்தி என்றால் அசைலம் அடித்து செற்றிலாவோமோ என்று தான் சிந்தித்திருப்பாள்.

இப்படியான தங்களின் வசதியான வாழ்க்கை என்பதையே நோக்காகக் கொண்டு அமைக்கப்படும் அல்லது தீர்மானிக்கப்படும் திருமணங்கள் நிச்சயம் நிலைக்கப் போவதில்லை. அதுமட்டுமன்றி வெறும் பாலியல் தேவைகளுக்காக மட்டும் தங்கி இருக்கும் திருமணங்களும் நிலைக்கப் போவதில்லை.

பழைய குடும்ப அமைப்பு என்பது மனிதனின் சமூக வாழ்வின் அடிப்படை அலகு என்று தீர்மானிக்கப்படக் கூடிய வகைக்கு அமைந்திருந்தது. இன்று அம்மா எங்கோ இருப்பாள்.. பிள்ளை எங்கோ இருக்கும். அம்மாவிற்கும் பிள்ளை மேல் அக்கறையில்லை.. அவன் அனுப்பும் பணம் தான் முக்கியம். அப்படி மாறிவிட்ட உலகில்.. பாசம் என்ன பந்தமென்ன.. எல்லா.. ஊரோடு அலையும் நாய்க் கூட்டங்களாகிவிட்டமையே இன்தைய மனித நாகரிகத்தின் நிலை..!

இது வருந்தத்தக்கது ஆயினும்.. நாமும் இந்த சாக்கடையில் தான் வாழ வேண்டி இருப்பதால்.. சாக்கடையில் அலையும் நாய்களாக மாறினால் அன்றி நாமாக மனிதர்களாக.. நல்லவர்களாக வாழ முடியாது. வாழவும் அனுமதிக்கமாட்டார்கள். நாம் என்னதான் நல்லவனாக இருக்க விரும்பினாலும்.. எம்மை ஏமாற்றியோ.. அல்லது எம்மீது வீண் பழிபோட்டோ இந்தச் சமூகம் எம்மை நோகடித்து.. கெட்டவர்களாக காட்டாமல் ஓயாது. விடாது. அப்படிப்பட்ட சமூக அமைப்பில்.. மனித சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எமது விடுதலைப்போராட்டத்திற்கு என்ன நடந்ததோ அதுதான் ஒவ்வொரு மனிதனின் வாழ்வுக்கும் இன்றுள்ள கதி. எத்தனைதான் நல்லவனாக இருந்தாலும் அவனையும் கெட்டவனாகக் காட்டி பிழைக்க என்று ஒரு கூட்டம் அலைகிறது. இப்படியான உலகில்.. பழைய திருமண.. அல்லது குடும்ப கட்டமைப்பை எனி எதிர்பார்க்க முடியாது.

அப்படி அமைய வேண்டின்.. இந்த உலகில் பல நிலை பொருளியல் அரசியல் சமூக கட்டமைப்புக்களில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அதை முதலாளித்துவ முதலைகள் அனுமதிக்கா. முதலாளிகள் தொழிலாளிகள் மீது பழிசுமத்தி வாழ்ந்து பழகிவிட்டார்கள். இது இயற்கையின் விதிப்பல்ல. மனிதனின் விதிப்பு..! இதை மாற்றலாம். ஆனால் ஓரிருவரின் கருத்தால்.. இதனை எதுவும் செய்ய முடியாது. இதுதான் யதார்த்தம். :)

Edited by nedukkalapoovan

கொடுமை.. அவன் கட்டினானாம்..விட்டானாம்.. இன்னொன்றைக் கட்டப் போறானாம். இதால நெல்லைக்கு என்ன பிரச்சனை என்று தெரியல்ல..!

நெல்லை எல்லாருக்கும் அவரவர் எண்ணுவது போல் வாழ்வு அமைவதில்லை. பல பேர் நல்ல எண்ணங்களோட வாழ விளைந்தும்.. அவங்க துணைகள் சரிவர அமையாமல்.. நலிந்து போவதுண்டு. மனிதரில் ஆயிரம் வகைகள்...! எல்லோரையும் ஒரு வகையில் மதிப்படுவதும்.. அடுத்தவன்ர தனிப்பட்ட விடயங்களால் அவனை புறஞ்சொல்லித் திரிவதும் தமிழர்களுக்கு உள்ள பொதுவான குணம் என்றாலும்... அவை முற்றிலும் நாகரிமற்ற செயற்பாடுகள் என்றே கருதுகிறேன்.

அதென்ன "நாட்டுக் கட்டை". இது பெண்கள் தொடர்பான இழிநிலைப்படுத்தல் என்றே நினைக்கிறேன். பெண்களும் மனிதர்கள் தானே. ஒரு குடும்பம் பிரிவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். அதில் எல்லாம் மூக்கை நுழைப்பது அழகல்ல. அப்படி நுழைப்பதாக இருந்தாலும் அந்த சேர்ந்து வாழ்ந்த குடும்பத்தை சேர்த்து வைப்பதையே முதன்மையாகக் கொண்டியங்க வேண்டும்.

அடுத்தவன் துன்பத்தில் நமக்கு நகைப்பு என்ன இருக்கிறது..???! இது சிரிப்புக்குரிய விடயமா..????! :unsure::):D

:D:):D :D

  • கருத்துக்கள உறவுகள்

எமது விடுதலைப்போராட்டத்திற்கு என்ன நடந்ததோ அதுதான் ஒவ்வொரு மனிதனின் வாழ்வுக்கும் இன்றுள்ள கதி. எத்தனைதான் நல்லவனாக இருந்தாலும் அவனையும் கெட்டவனாகக் காட்டி பிழைக்க என்று ஒரு கூட்டம் அலைகிறது. இப்படியான உலகில்.. பழைய திருமண.. அல்லது குடும்ப கட்டமைப்பை எனி எதிர்பார்க்க முடியாது.

சரியாகத்தான் சொல்லியிருக்கிறிர்கள் நெடுக்ஸ்! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன "நாட்டுக் கட்டை". இது பெண்கள் தொடர்பான இழிநிலைப்படுத்தல் என்றே நினைக்கிறேன். பெண்களும் மனிதர்கள் தானே.

என்னப்பா நெடுக்கர் மாறிட்டாரோ :lol::D சரி சரி எத்தினை நாளைக்குத்தான் அந்தாழும் நடிக்கிறது நன்றி நெடுக்கரே உங்களுக்கு நம்மின பெண்கள் மீது அக்கறைதான் ஆனால் சிலர் செய்யும் தாகாத நடவடிக்கைகளால் தான் போட்டுத்தாகுவதென்பது இப்போது பலருக்கு புரியவேண்டும்

அப்படியா இல்லை வேறு ஏதாவது காரணங்கல் இருக்கா?? :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் என்னை நல்லாப்பயப்படுத்திரியள். :unsure: என்னைப்பொருத்த வரையில் திருமணம் செய்யும் பொழுது, அதற்குரிய பக்குவம் இருக்க வேண்டும். பலர் திருமணம் ஆன பின்பும், முன்பு இருந்த மாதிரியே எல்லாம் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இருவர் இணைந்து பயணிப்பது என்று சிந்திப்பது இல்லை. திருமணம் செய்யும் முன்பு ஒருத்தருக்கு ஒரு கருத்து இருக்கும் விரும்பினதை செய்வார். திருமணமான பின்பு, இருவருக்கும் இரண்டு கருத்துக்கள் இருக்கும். சிலவேளை ஒரே கருத்தாக இருக்காலாம். வித்தியாசமான கருத்துக்களோ, சிந்தனைகளோ இருந்தால், அவ்வேளையில் ego இல்லமால், எங்கள் குடும்பத்திற்கு இப்போது எது நல்லது என்று சிந்திக்கவேண்டும். நான் நினைக்கிறது தான் சரி என்று இருவரும் இருந்தால் பிரச்சனை வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.