Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சின்ன silly question?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம், வணக்கம்

நான் சில நாட்களாக யாழிற்கு வரவில்லை, எனது வேலையில் நெஞ்சம் பிஸியாக போய்விட்டேன்.... நிறைய விவாதங்கள் நடந்திருக்கு, ...

நான் இப்ப ஒரு சின்ன "silly question" ஓட வந்திருக்கிறேன்,

Surname எண்டால் என்ன Firstname எண்டால் என்ன? பெரும்பாலான தமிழ் இந்துக்களுக்கு familyname மற்றைய ஆட்களுக்கு உள்ளபடி இல்லைதானே, அதனால் நான் எனது பெயரையே surname ஆக பாவிக்கிறேன், என்னுடைய மனைவி, பிள்ளை என்னுடைய surname தங்கட surname ஆக பாவிக்கினம்..ஆனால், என்னுடைய Firstname அல்லது Givenname ஆக அப்பாவினுடையத்தை பாவிக்கும் போது சில நேரங்களில் சங்கடங்கள் வருகிறது...நீங்கள் யாரவது என்னைப்போல பெயர் மாத்தி பயன்படுத்துகிறீர்களா?

உங்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

.

எனக்கும் இதே..... பிரச்சினை ஏற்பட்டு , எனது பெயரை Surname ஆகவும், அப்பாவின் பெயரை given name ஆக பாவிக்கின்றேன்.இப்போ எனது பெயர் தான் குடும்பப் பெயர்.அது மனைவி பிள்ளைகள் எல்லோருக்கும் குடும்பப் பெயர். இதற்கு முன் மனைவியின் பெயர்(மாமாவின்) தந்தையின் பெயருடன் குறிப்பிடப் பட்டிருந்த போது பல சிக்கலை எதிர்கொள்ள வேண்டிவந்தது.முக்கியமாக விமான நிலையங்களில் கள்ள பாஸ்போட்டுடன் பயணம் செய்வது போல் துருவி, துருவி விசாரித்தார்கள்.இந்தப் பெயர் மாற்றத்திற்கு நான் வாழும் நாட்டின் சமூக நீதிமன்றம், பதிவு திருமண அலுவலகம் ,தூதுவராலயம் என்று பல திணைக்களங்களின் உதவியை நாட வேண்டியிருந்தது. அந்தப் பெயர் மாற்றத்திற்கு ஏற்பட்ட காலம் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள். அதே நேரம் மனைவியின் familynameஐ நீக்க பல அத்தாட்சிப் பத்திரங்கள் கொடுக்க வேண்டியிருந்ததால் இவ்வளவு காலம் எடுத்தது.

பெயர்மாற்றத்தின் முன் , எங்காவது பிரயாணம் மேற்கொள்ளும் போது மேற்குலக விமான நிலையங்களில் , கடவுச்சீட்டுக்களை பரிசோதிக்கும் போது நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இப்போது ஒரு பிரச்சினையுமில்லை.

திருத்தப் பட்டுள்ளது வொல்கானொ. தவறுக்கு வருந்துகின்றேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நான்எனது பெயரை முதல் பெயராகவும் அப்பாவின் பெயரை எனது சேர்நேம் ஆகவும் மனைவி பிள்ளைகளுக்கு எனது பெயரே சேர்நேம் ஆகவும் பாவிக்கிறேன். இதில் பெரிய அளவில் பிரச்சனை இல்லை.அப்படி வந்தாலும் எனக்குத்தான் வரும்.கிறிஸ்தவப் பெயர்களில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பெயர் குடும்பப் பெயராக தொடர்ந்து வரும். அது சேர்நேம்.இதுவே அரச கடிதங்கள் உத்தியேக பூர்வ நடைமுறைகளுக்கு பாவிக்கப்படும். அவர்களை அழைப்பதற்கு (பெற்றோர் நண்பர்கள்) இடும் பெயரே முதற்பெயராகும்.(என்னால் ஆங்கிலத்தில் இiடயிடையே எழுத முடியவில்லை மன்னிக்கவும்.அத்துடன் மேற்கேhள் காட்டி எழுதவும் முடியவில்லை முடிந்தால் உதவி செய்யவும்.நான் பாமினி தமிழ்- ஆங்கிலம் பாவிக்கிறேன்.

Edited by புலவர்

பல இந்துக்களுக்கு இருக்கும் இந்தப் பெயர் மாற்ற பிரச்சினையை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லைப் போல் தெரிகின்றது.

இதனால் பிற்காலத்தில் பென்சன் எடுக்கும் போது பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிவரும் .

வயோதிப காலத்தில் ஒவ்வொரு அலுவலகமாக ஏறி, இறங்குவதை தவிர்க்க வேண்டுமாயின் இப்போதே தமது பெயர்களை மாற்றிக் கொள்வது நன்று. எனக்கு தெரிந்த ஒரு பெண் தனது துணையை இழந்த பின் ஓய்வூதியப் பணம் எடுக்க...., பட்ட துயரங்களை நான் அறிவேன்.

புலவர் , நானும் ஆங்கிலம்-தமிழ் முறையில் தான் தட்டச்சு செய்கின்றனான்.

நீங்கள் ஒருவருக்கு பதில் எழுத முற்படும்போது, அவரின் பதிவின் கீழ் வலது பக்க மூலையில் Reply என்னும் சாளரம் இருக்கும்,

அதனை கிளிக் பண்ணியவுடன் உங்களது கணனி திரையில் அவர் எழுதிய பதிவும் , கீழ் நீங்கள் பதில் எழுதுவதற்கு இரண்டு பெட்டிகள் காணப்படும்.

இப்போ மேல் பெட்டியில் காணப்படும் பதிவை அப்படியே .... உங்கள் எலி மூலம் (மவுஸ்) பிரதி எடுத்துக் கொண்டு ....... கீழ் பெட்டியில் நீங்கள் அந்தக் கருத்துக்கு வழமை போல் பதிலை எழுதுங்கள்.

இனி, நீங்கள் மேல் உள்ள பெட்டியில் உங்கள் மவுஸ் மூலம் பதிந்து வைத்திருக்கும் கருத்தை மவுஸ் மூலம் Copy பண்ணி விடுங்கள்.

இப்போ .... அவதானம். கீழ் பெட்டியில் ஒன்றுமே எழுதக்கூட்டாது. எழுதினால் நீங்கள் எழுதிய பதிவுகள் அழிந்து விடும்.

ஆங்கில சொற்களை நீங்கள் மேல் பெட்டியில் நேரடியாக எழுதுங்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சிறி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்சிறி, புலவர் இருவருக்கும் நன்றி..

தமிழ்சிறி, உங்களது பதிலில் surname உம் familyname உம் வேற வேற என்பது போல் வருகிறது ....அது என்னவென்று சொல்லமுடியுமா? மற்றப்படி நீங்களும் உங்கள் குடும்பமும் , உங்களது அப்பாவின் பெயரை family name ஆக பாவித்தால் ஒரு பிரச்சனையும் இல்லை .. ஆனால் எங்களின் மரபு அப்படிப்பட்டது அல்லது அல்லவா?

புலவர், நீங்கள் பயன்படுத்தும் முறையிலும் ஒருவித நெருடல்/சிக்கல் உள்ளது என்பதை ஏற்கிறீர்கள்தானே?

எங்களுடைய ( நான் பயன்படுத்துகிற) முறையில் கணவன் ஒரு மாற்றம் செய்துள்ளார்.. family / surname பதிலாக தனது உண்மையான first / given name பாவிக்கிறார்... ஆனால் அவருடைய மனைவி பிள்ளைகள் ... ?தமிழ் மரபு படி கணவனின்/ தந்தையின் பெயரை பாவிக்கிறார்கள்...

ஆனால் நீங்கள் (புலவர் ) சொல்லுவதில், கணவனும், மனைவி, பிள்ளைகளும் சரியான/ உண்மையான firstname / surname பாவித்தாலும், குடும்பம் என்பதற்குரிய அடையாளம் இல்லாமல் போகிறது...ஒருகுடும்பத்தில் , 2 family names / surnames கொஞ்சம் சிக்கல்லும் உடையது.

மீண்டும் நன்றி இருவருக்கும்...

உங்கள் கேள்விக்கான பொதுவான விளக்கம்:

உங்களை வழமையாக கூப்பிடுகிற பெயர் - முதற்பெயர்

உங்கட அப்பாவிண்ட பெயர் - கடைசிப்பெயர்

உதாரணமாக உங்கட பெயர் தர்சன் சிவசோதிலிங்கம் என்றால்..

First Name: தர்சன்

Last Name / Surname: சிவசோதிலிங்கம்

Middle Name: --

ஆனால்.. நாட்டுக்கு நாடு, பல்வேறு கலாசாரங்களில் இதை கொஞ்சம் வித்தியாசமாக பயன்படுத்துவார்கள். எனவே, இது எங்கெங்கு நீங்கள் வாழுறீங்கள், உங்கள் கலாச்சாரம், மதம், பரம்பரை போன்றவறை பொறுத்து இருக்கிது.

உதாரணமாக கிறீஸ்தவ குடும்பங்களில பரம்பரை பரம்பரையாக ஒரு பெயரை கடைசிப்பெயராக பயன்படுத்தி வருவாரகள். இதைவிட நடுப்பெயரையும் தாராளமாக பயன்படுத்துவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எம்மவர்க்கு ஒரு பெரிய பிரச்சனை தான் நான் வாழும் நாடு சுவிஸ் வந்த புதிதில் எம்மைபற்றிய தகவல்களை பெற்றபோது விண்ணப்பத்தைஎன்னிடமே தந்து பூர்த்தி செய்யச்

சொன்னார்கள் நானும் பெயர் என்ற இடத்தில்;(டோச்மொழியில்)எனது பெயரை எழுதினேன் (ஆங்கிலம் என புரிந்;துகொண்டு) அதுவே புழக்கத்திலிருகக்க திருமணம் என்று வரும்போது எமது கன்ரோனில் எமது நாட்டு முறைமைக்கு செய்யமுடியாது எனச்சொல்ல அவர்களின் முறைக்கேற்ப செய்து கொண்டேன் அதாவது எனது அப்பவின் பெயருக்குபின்னால் தான் மனைவி பிள்ளைகளின் பெயர்கள் வரும் பிள்ளைகளின் பிறப்புச்சான்றிதழ்களிலும் அது தொடர அந்நாட்டில் பிராஐh உரிமை பெறும்போது மட்டும்

கேட்டார்கள் கடவுச்சீட்டில் பெயர் எப்படி எழுதவேண்டும் என ஆனால் திருமணப்பதிவும் பிறப்புச்சான்றிதழும் எக்காரணத்தாலும் மாற்றமுடியாது என்றனர்

எனவே அதை நான் மாற்ற விரும்பவில்லை அப்படியே விட்டுவிட்டேன் ஐரோப்பிய நாடுகளிற்கு பயணம் செய்வது சிக்கலில்லை ஆசிய நாடுகளிற்கு இன்னமும் செல்லவில்லை

இதனால் பிரச்சனை வருமா? தெரியவில்லை

உதாரணத்திற்கு

எனது அப்பாவின் பெயர் சிவபாலன் எனது பெயர் மயில்வாகனன் எனது மனைவி பெயர் சிவபாலன் தெய்வானை பிள்ளைகளின் பெயரும் சிவபாலன் மூத்தவன்

நீங்கள் கன்ரோன் ரிசினோவா?

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிப்பெயர், குடும்பப்பெயர். முதற்பெயர்...

இந்தப் பெயர்ச் சிக்கல் தமிழர்களுக்கு நிறையவே உண்டு. புலம்பெயர்ந்து வரும்வரை பிரச்சினை தராத பெயர், இங்கு வந்ததும் பிரச்சினையாகி விட்டது. எனக்கு ஒரு பெயர்தான் உண்டு என்ற சொன்னபோது, என்னவோ அனாதப்பயலைப் பார்க்கிற மாதிரிப் பார்த்தார்கள். எனது முழுப்பெயரை எழுதச் சொல்லி குடும்பப்பெயரை அடிக்கோடிடச் சொன்னபோது, நான் எனது பெயருக்கு அடிக்கோடிட்டேன். ஆனால் அது கடவுச் சீட்டுடன் ஒத்துப் போகவில்லை! எனினும் விடாப்பிடியாக எனது பெயர்தான் எனது குடும்பப் பெயர் என்று வற்புறுத்தி அப்படியே எல்லா ஆவணங்களிலும் வருமாறு பார்த்துக்கொண்டேன். எனினும் விசா எடுக்கப் போகும்போதும், விமான நிலையத்தினூடாகப் போகும்போது (குறிப்பாக பிற ஐரோப்பிய விமான நிலையங்கள்) பெயரைப் பற்றி விளக்கம் சொல்லவேண்டி வரும்.

ஆனால் இந்தப் பிரச்சினை பொதுவாக தமிழர்களுக்கு மட்டும்தான் இருக்கின்றது போலுள்ளது. சிங்களவர்களும் வட இந்தியர்களும் குடும்பப் பெயர்களைப் பாவித்து வருகின்றார்கள்.

தமிழர்களுக்கு மட்டும் last name, surname, family name என்று ஒன்றில்லை. அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்?

எனக்குத் தெரிந்து தமிழ் மக்கள் எல்லோருக்குமே ஒரேயொரு பெயர்தான் (செல்லப்பெயர், பட்டப்பெயர், புனைபெயர், முகமூடிப்பெயர் இதெல்லாம் கணக்கில் எடுப்பதில்லை). சட்டபூர்வமாக பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் இருக்கும் given name அல்லது first name என்பதுதான் எங்களைக் குறிக்கும் தனிப்பெயர் (single name). சண்முகம், கந்தசாமி என்று எதுவானாலும் ஒரே ஒரு பெயர்தான்.

இதற்குள் நடுப்பெயர் (middle name) என்று வேறு இருக்கின்றது. ஆங்கிலேயரின் வழக்கப்படி தந்தைவழி கடைசிப் பெயரும், தாய்வழி நடுப்பெயரும் வந்து சேர்ந்துவிடும். முதற்பெயர்தான் தனி ஒருவரைச் சுட்டும்பெயர். எனினும் பொதுவாக மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போது முதற்பெயரையும், கடைசிப்பெயரையும் கட்டாயம் சொல்லி மரியாதை செய்யவேண்டும். நமது முதற்பெயரை (அதையும் நாம் சுருக்கி ஓரசை, ஈரசை என வைத்திருந்தாலும்) சொல்லவே பிறநாட்டவருக்கு நாக்கு சுளுக்கிவிடுகின்றது. இதற்குள் பல அசைகள் (syllables) உள்ள எங்கள் கடைசிப்பெயரைச் சொல்ல அவர்கள் முயலும்போது நமக்கே கஸ்டமாக இருக்கும். எனது ஆஸ்திரிய நண்பர் ஒருவர் என்னுடைய பெயரை மிகவும் எளிதாகச் சொன்னபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்படி கற்றுக்கொண்டாய் எனக்கேட்டபோது, எனது நண்பர் சொன்னபதில் இன்னும் ஆச்சரியாமாக இருந்தது. அவர் எனது கடைசிப்பெயரை எழுத்துப் பிழைகள், உச்சரிப்புப் பிழைகள் இன்றி எழுதுவதற்கும், சொல்லுவதற்கும் அரைமணி நேரத்தைச் செலவளித்தாராம். முதற்பெயரையும், கடைசிப்பெயரையும் மரியாதையுடன் சொல்லவேண்டும் என்பதற்காகவே ஐரோப்பியர் இப்படியும் கஸ்டப்படுகின்றார்கள்.

நான் எனது தனிப்பெயரை கடைசிப் பெயர் (last name) ஆகவும், எனது அப்பாவின் பெயரை நடுப்பெயர் (middle name) ஆகவும், அப்பாவின் அப்பா (அப்பப்பா) பெயரை முதற்பெயர் (first name) ஆகவும் வைத்திருக்கின்றேன். இந்த மூன்றையும் எழுத பத்திரங்களில் இடம் போதாது என்பது வேறு ஒரு பிரச்சினை! அதற்காக சுருக்கி/வெட்டி, ஆங்கிலப் பெயர் மாதிரி உச்சரிப்பு வரும்மாதிரிச் செய்ய எல்லாம் விருப்பமில்லை.

ஒரு குடும்பத்தில் எல்லோருக்கும் கடைசிப்பெயர் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். கணவன், மனைவி பிள்ளைகளுக்கு வேறு வேறு கடைசிப்பெயர் இருந்தால் ஒரு மாதிரி மேலேயும் கீழேயும் பார்ப்பார்கள். குறிப்பாக திருமணம் முடித்து வரும் பெண், தனது மாமானாரின் பெயரைத் தனது கடைசிப் பெயராக வைத்திருக்க சங்கடப்படுவதும், பிள்ளைக்கு வைத்தபெயர்தான் (முதற்பெயர்) பிள்ளையின் கடைசிப்பெயர் என்பதும், அதுவே பெண்பிள்ளையாக இருந்தால் எந்தப் பெயரைக் கடைசிப் பெயராக வைப்பதென்றும் பல குழப்பங்கள் உண்டு.

ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி இந்தப் பெயர்ச்சிக்கலைக் கையாளுகின்றார்கள். சில ஐரோப்பிய நாடுகளில் தகப்பன் பெயரைக் குடும்பப் பெயராக்க கட்டாயப்படுத்துகின்றார்கள். எனினும் சரியானமுறை எதுவென்று இலகுவாகச் சொல்லமுடியாது.

ஐரோப்பிய நாட்டில் இருப்பதாலும், எனது பெயர் நூற்றாண்டுகளாக நிலைத்து இருக்கவேண்டும் என்ற சிறிய ஆசை உள்ளதாலும் எனக்கு வைத்த பெயரையே எனது கடைசிப்பெயராக்கி உள்ளேன். பிறநாட்டவரின் நாக்கு சுளுக்கிக் கொண்டாலும் இதுவே தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்கட்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உங்கள் கருத்துக்களுக்கு செல்வம், மச்சான் , மருதங்கேணி...

இன்று நான் ஒருவருடன் கதைத்தேன் , அவர் கனடாவில் வரவேற்பாளர் ஆக வேலை செய்கிறார்.. சொன்னார் சிலவேளைகளில் சில தமிழ் பெண்கள் இரண்டு ஆண் பெயர்களுடன் வருவார்களாம் ....மருதலிங்கம் ..சுந்தரலிங்கம் ///////சுவாமிநாதன் பரமநாதன் /////கந்தசாமி பொன்னுத்துரை ///// ஏன் என்று பார்த்தல் தகப்பனுடைய பெயரை FIRSTNAME ஆக முதலில் பதிந்தது பின்னர் கலியாணத்துக்கு பின் கணவனின் பெயரை LASTNAME போட இரண்டு ஆண் பெயர் வந்து விடுகிறது...

ஆனால் நான் நினைக்கிறேன் ஆண்கள் தப்பனுடைய பெயரை FIRSTNAME ஆக போடுவதில் தவறு இல்லை என்று.. ஏனெனில் , நாங்கள் வந்த கலாச்சாரம் ...ஒரு பெயர் கலாச்சாரம் எப்பவும் எங்கடை FIRSTNAME தான் எல்லாத்திற்கும் பாவிக்கிறனாங்கள் , 2 அல்லது 3 பேர் ஒரே பேரில் இருந்தான் , அப்பாவின் பெயரை சிந்திப்ப்போம்.. ஒராள் கு. சுப்பிரமணி, மற்றவர் அ. சுப்பிரமணி, மற்றவர் வை. சுப்பிரமணி... எங்களுக்கு எல்லாமே firstname தான்... SURNAME / FAMILYNAME / LAST NAME கதை இல்லை... அதனால் அந்த first name ஐ இங்கு surname ஆக பயன்படுத்தல்லாம் என்று...

என்னுடைய எல்லா documents உம் என்னுடைய ஒரிஜினல் first name இல் தான் உள்ளது .. எண்டபடியால் அதை நான் இங்கே surname ஆக மாற்றியுள்ளேன்...ஏனெனில் இங்கு surname தான் கூடுதலான ஆபீசியால் தொடர்புகளுக்கு பயன்படுத்துகிறார்கள்...மற்றது மனைவி பிள்ளைக்கும் சுகம்.. ஊரில் உள்ளபடி என்பேரில் வருகிறது...

மீண்டும் நன்றி உங்கள் கருத்து பகிர்வுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபன்

I'm sooooooo happy in seeing your argument and explanation .. காலமை 2 மணித்தியாலமாய் ..என்ற மனிசி, அவவினுடைய பட்டளங்களுக்கு சொன்னது இதுதான், அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அது வேற பிரச்சனை.. ஆனால் இதுதான் உண்மை...நாங்கள் ஒருபெயர் சாதி அது சிறிலங்காவில் FIRSTNAME ஏதோ, இங்கே SURNAME / LAST NAME / FAMILYNAME சுபம் :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்சிக்கலால நான் அவதிப்படுறது கொஞ்ச நஞ்சமில்லை. :D

நான் என்னுடைய அப்பா பெயரை கடைசிபெயரா (குடும்பப் பெயரா) குடுத்திருக்கிறன். என்னுடைய பெயர்தான் முதல்பெயர். அதனால் என்னை யாரும் அழைக்கும் போது என்னுடைய பெயரைச் சொல்லி அழைக்கிறார்கள். ஆனால் தொழில்முறையில் வரும் கடிதங்களில் மிஸ்ரர் என்று போட்டு என்னுடைய தகப்பனாரின் பெயரை எழுதுகிறார்கள். அந்த கடிதங்களைப் பார்த்தால் என்னுடைய அப்பாவுக்கு வந்தது போல இருக்கும். :)

இதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குரிய குடும்பப்பெயர்களை உருவாக்கவேண்டியது அவசியம் என்று நினைக்கிறன். முதல்பெயராக எங்கள் பெயரையும், நடுப்பெயராக தகப்பனாரின் பெயரையும் கடைசிப்பெயராக உருவாக்கப்பட்ட ஒரு பெயரையும் (ஏதாவது மரம், செடி கொடி) போட்டால் சரிவரும். :D

அதுபோல எங்கள் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதும்போது ஆங்கில உச்சரிப்பு சரியா வருகிறமாதிரி எழுதப் பழக வேண்டும். உதாரணமாக, மலர் என்கிறபெயரை நாங்கள் Malar என்று எழுதுவோம். அதை இங்குள்ளவர்கள் வாசிக்கும்போது மாலர் என்று படிப்பார்கள். அதையே Meller என்று எழுதினால் மலருக்கு கிட்டவா என்று படிப்பார்கள் என்று நினைக்கிறேன். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

Surname எண்டால் என்ன Firstname எண்டால் என்ன? பெரும்பாலான தமிழ் இந்துக்களுக்கு familyname மற்றைய ஆட்களுக்கு உள்ளபடி இல்லைதானே, அதனால் நான் எனது பெயரையே surname ஆக பாவிக்கிறேன், என்னுடைய மனைவி, பிள்ளை என்னுடைய surname தங்கட surname ஆக பாவிக்கினம்..ஆனால், என்னுடைய Firstname அல்லது Givenname ஆக அப்பாவினுடையத்தை பாவிக்கும் போது சில நேரங்களில் சங்கடங்கள் வருகிறது...நீங்கள் யாரவது என்னைப்போல பெயர் மாத்தி பயன்படுத்துகிறீர்களா?

உங்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்...

மற்றவர்கள் கூறியது போல firstname என்பது உங்கள் பெயர். familyname என்பது உங்கள் அப்பாவின் பெயர் (மற்றவர்கள் போல நாங்கள் பரம்பரை பெயரை பாவிக்காததனால்). எங்கள் முறைப்படி உங்கள் மனைவி பிள்ளைகள்களின் familyname உங்கட firstname.

கனடா சட்டபடி திருமணமான ஒரு வருடத்தில் உங்கள் மனைவி உங்கள் familyname ஐ அவாவின் familyname ஆக மாற்ற எந்த கட்டணமும் இல்லை. அவா விரும்பாவிடின் சட்டபடி அவாவின் திருமனத்திற்கு முன்னரான (அவாவின் தகப்பனின் பெயர்) familyname ஐ தொடரலாம். அதே போல பிள்ளைகள் பிறக்கும் பொது அவர்களுக்கு சட்டப்படி தகப்பனின் familyname அல்லது தாயின் familyname தான் familyname ஆக வரும். (இது பொதுவாக உள்ள விடயம்)

எங்களின் முறையில் மாற்ற விரும்பினால் (யாரும் பெயர் மற்றம் செய்யலாம் அதற்கு 130/140 டொலர் கட்டணம் செலுத்த வேணும்) கட்டணத்தை செலுத்தி உங்கள் மனைவியின் familyname மாற்ற வேணும் (அவரின் பிறப்பு அத்தாட்சி பத்திரம், மற்றும் திருமண அத்தாட்சி பத்திரம் வேணும்... காரணத்திற்கு திருமணத்தின் பின் எங்கள் கலாச்சார முறைப்படி பெயர் மாற்றம் எனக் குறிப்பிடலாம். அவரின் familyname மற்றம் பண்ணி ஒரு அத்தாட்சி பத்திரம் அனுப்புவார்கள் Thrundarbay இல் உள்ள registery office க்கு தான் பெயர் மாற்ற படிவத்தை அனுப்ப வேண்டும்.

இப்போது உங்கள் மனைவியின் familyname உங்கள் firstname ஆக மாறி விடும். இனி, பிள்ளைகள் பிறக்கும் பொது தாயின் familyname தன பிள்ளையின் familyname என கூறினால் சரி.

எனக்கு தெரிஞ்ச அளவில் எந்த சட்ட சிக்கலும் இல்லை.

http://www.ontario.ca/en/life_events/married/012160

http://www.ontario.ca/en/information_bundle/individuals/ONT06_018602

  • கருத்துக்கள உறவுகள்

அதையே Meller என்று எழுதினால் மலருக்கு கிட்டவா என்று படிப்பார்கள் என்று நினைக்கிறேன். :):D

Meller ஐ மெல்லேர் எண்டு தான் படிப்பினம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனது தனிப்பெயரை கடைசிப் பெயர் (last name) ஆகவும், எனது அப்பாவின் பெயரை நடுப்பெயர் (middle name) ஆகவும், அப்பாவின் அப்பா (அப்பப்பா) பெயரை முதற்பெயர் (first name) ஆகவும் வைத்திருக்கின்றேன்.

அப்படி என்றால் உங்களை நட்பாக அழைப்பவர்களும் உங்களின் அப்பப்பா பெயரை சொல்லி தானே அழைப்பார்கள்? (இங்கு நட்பாக முதற் பெயரை சொல்லியே அழைப்பார்கள்)

ஐரோப்பிய நாட்டில் இருப்பதாலும், எனது பெயர் நூற்றாண்டுகளாக நிலைத்து இருக்கவேண்டும் என்ற சிறிய ஆசை உள்ளதாலும் எனக்கு வைத்த பெயரையே எனது கடைசிப்பெயராக்கி உள்ளேன். பிறநாட்டவரின் நாக்கு சுளுக்கிக் கொண்டாலும் இதுவே தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்கட்டும்!

எனக்கும் உதே ஆசை தான். அதனால் மனைவி பிள்ளைகளின் கடைசி பெயர் ஆக எனது பெயரையே வைத்து இருக்கிறேன். அடுத்த சந்ததி இல் இருந்து உந்த சிக்கல் எல்லாம் இல்லாமல் எனது பெயர் நிலைத்து இருக்க இப்போதைக்கு எந்த சிரமம் எண்டாலும் சரி. (மற்றவர்கள் கூறும் அளவுக்கு எந்த பிரச்சனையும் இருக்க இல்லை - பெயரை வெட்டி விழுத்தி முறிச்சு கூப்பிடுறதை தவிர) :)

  • கருத்துக்கள உறவுகள்

Meller ஐ மெல்லேர் எண்டு தான் படிப்பினம். :)

மெல்லேர் எண்டு வாசிக்கிறது எங்கட முறை. இவையள் ரெண்டு எல் க்கு அழுத்தம் குடுக்கிறேல்ல தானே.. (follow, fellow மாதிரி).. அப்ப மெலர் என்கிறமாதிரி வரும்.. கிட்டத்தட்ட சரி...! :D

  • கருத்துக்கள உறவுகள்

-----

அதுபோல எங்கள் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதும்போது ஆங்கில உச்சரிப்பு சரியா வருகிறமாதிரி எழுதப் பழக வேண்டும். உதாரணமாக, மலர் என்கிறபெயரை நாங்கள் Malar என்று எழுதுவோம். அதை இங்குள்ளவர்கள் வாசிக்கும்போது மாலர் என்று படிப்பார்கள். அதையே Meller என்று எழுதினால் மலருக்கு கிட்டவா என்று படிப்பார்கள் என்று நினைக்கிறேன். :o:lol:

நீங்கள் ஏன் மலர் என்ற பெயரை , உதாரணமாக எடுத்தனீர்கள்.

நெடுக்ஸ்,மச்சான், கு.சா. போன்றவர்களை உசுப்பேத்தவா ? :D:lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால் உங்களை நட்பாக அழைப்பவர்களும் உங்களின் அப்பப்பா பெயரை சொல்லி தானே அழைப்பார்கள்? (இங்கு நட்பாக முதற் பெயரை சொல்லியே அழைப்பார்கள்)

வேலையிடத்து நண்பர்கள் அப்பப்பாவின் பெயரைச் சொல்லித்தான் அழைப்பார்கள். மற்றவர்கள் எனது தனிப்பெயர் (சுருக்கிய வடிவம்), பட்டப்பெயர், செல்லப்பெயர் கொண்டு அழைப்பார்கள். அழைக்கும் பெயரைப் பொறுத்து அவர் எந்த நட்புக்குழுமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்துவிடும்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதில் பிரச்சனை எதுவும் எழவில்லை.

பெஸ்ட்நேமா எனது பெயரையும்..

சேர்நேமாக தந்தையின் பெயரும் உள்ளது. இப்படியேதான் எப்போதும் பாவித்து வருகிறேன். :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேஷ்,

நன்றி உங்கள் கருத்துகளுக்கு,

உங்களுடைய முறை விதி முறைப்படி சரியானது ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதில் உள்ள குழப்பம், பொதுவாக ஒரு குடும்பத்திற்கு ஒரு family name ஆனால் நீங்கள் கூறிய முறைப்படி தகப்பனுக்கு ஒரு family name ஏனையோருக்கு ஒரு familyname அதுவும் தகப்பனின் firstname மற்றையவர்களின் familyname , அது பொதுவானது அல்ல . 2 familyname இங்குள்ளவர்களுக்கு தெரியும்/ வழக்கத்தில் உள்ளபோதிலும் அது வழைமையாக ஒன்று தாய் வழி மற்றையது தந்தை வழி...ஆனால் நாங்கள் ஒரே குடும்பத்தில் உள்ள ஒருவரின் (தந்தையின்) பெயரை firstname ஆகவும் familyname ஆகவும் பயன்படுத்துகிறோம்..அது எந்தளவிற்கு சரி?

என்னுடைய கருத்து, இந்த 2 பெயர் , பெயரிடல் எங்களுக்கு பழக்கமில்லாதது, இதை பயன்படுத்துகிற யாரும் ஏதாவது ஒரு மற்றம் செய்யவேண்டும், நான் பயன்புடுத்துகிற/ விளங்கப்படுதுகிற முறையில், ஒரு மாற்றம், தந்தை தனது உண்மையான firstname ஐ , familyname ஆக மாறி பாவிக்கிறார் இதனால், குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் ஒரு பேர் வருகிறது, முக்கியமாக, தந்தையின் உண்மையான firstname தொடர்ந்து பாவனையில் இருக்கும் (ஆபீசியால்லி)

இன்னுமொன்று, நீங்கள் சிறிலங்காவில் இருந்து வந்திருந்தால் எப்படியோ சில reference அங்கத்தைய ஆட்களை கொடுத்திருப்பீர்கள், அந்த நேரத்தில், இங்குள்ளவர்கள் எங்களை, எங்களது அப்பாவின் பெயரால் அழைத்தல் அவர்களுக்கு நிறைய குழப்பங்களே வரும். எனக்கு சிலர் சிங்களவர்கள், அவர்களுக்கு எனது அப்பாவின் பெயர் , மருந்துக்கும் தெரியாது, இந்த நிலையில், இங்குள்ளவர்கள் என்னுடைய அப்பாவின் 10 எழுத்து பெயரை உச்சரித்தால், சிங்களவன் wrong call என்று வைச்சு போட்டுத்துதான் மிச்ச அலுவல் பார்ப்பான். நான் சொல்லமாட்டேன் இதுதான் சரியெண்டு, ஆனால் நடைமுறைக்கு இலகுவானது இது என்பேன், முக்கியமாக, இலங்கையில படிச்சு குப்பை கொட்டிப்போட்டு இங்கே வந்தால்.

பதில் எழுதிய ஏனையோருக்கும் நன்றிகளும் வணக்கங்களும்..

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதில் பிரச்சனை எதுவும் எழவில்லை.

பெஸ்ட்நேமா எனது பெயரையும்..

சேர்நேமாக தந்தையின் பெயரும் உள்ளது. இப்படியேதான் எப்போதும் பாவித்து வருகிறேன். :o

இப்ப ஓ.கே.கலியாணம் செய்து பிள்ளை குட்டிகளென்று வருகையில்தான் பிரச்சனை.

ஓ உந்தப்பிரச்சனையெல்லாம் இருக்கிது என. நானும் நெடுக்காலபோவானின் எதிர்காலம் எப்படி இருக்கும் எண்டுறதை அறிய ஆவலாய் இருக்கிறன். :o

  • கருத்துக்கள உறவுகள்

சபேஷ்,

நன்றி உங்கள் கருத்துகளுக்கு,

உங்களுடைய முறை விதி முறைப்படி சரியானது ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதில் உள்ள குழப்பம், பொதுவாக ஒரு குடும்பத்திற்கு ஒரு family name ஆனால் நீங்கள் கூறிய முறைப்படி தகப்பனுக்கு ஒரு family name ஏனையோருக்கு ஒரு familyname அதுவும் தகப்பனின் firstname மற்றையவர்களின் familyname , அது பொதுவானது அல்ல . 2 familyname இங்குள்ளவர்களுக்கு தெரியும்/ வழக்கத்தில் உள்ளபோதிலும் அது வழைமையாக ஒன்று தாய் வழி மற்றையது தந்தை வழி...ஆனால் நாங்கள் ஒரே குடும்பத்தில் உள்ள ஒருவரின் (தந்தையின்) பெயரை firstname ஆகவும் familyname ஆகவும் பயன்படுத்துகிறோம்..அது எந்தளவிற்கு சரி?

என்னுடைய கருத்து, இந்த 2 பெயர் , பெயரிடல் எங்களுக்கு பழக்கமில்லாதது, இதை பயன்படுத்துகிற யாரும் ஏதாவது ஒரு மற்றம் செய்யவேண்டும், நான் பயன்புடுத்துகிற/ விளங்கப்படுதுகிற முறையில், ஒரு மாற்றம், தந்தை தனது உண்மையான firstname ஐ , familyname ஆக மாறி பாவிக்கிறார் இதனால், குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் ஒரு பேர் வருகிறது, முக்கியமாக, தந்தையின் உண்மையான firstname தொடர்ந்து பாவனையில் இருக்கும் (ஆபீசியால்லி)

இன்னுமொன்று, நீங்கள் சிறிலங்காவில் இருந்து வந்திருந்தால் எப்படியோ சில reference அங்கத்தைய ஆட்களை கொடுத்திருப்பீர்கள், அந்த நேரத்தில், இங்குள்ளவர்கள் எங்களை, எங்களது அப்பாவின் பெயரால் அழைத்தல் அவர்களுக்கு நிறைய குழப்பங்களே வரும். எனக்கு சிலர் சிங்களவர்கள், அவர்களுக்கு எனது அப்பாவின் பெயர் , மருந்துக்கும் தெரியாது, இந்த நிலையில், இங்குள்ளவர்கள் என்னுடைய அப்பாவின் 10 எழுத்து பெயரை உச்சரித்தால், சிங்களவன் wrong call என்று வைச்சு போட்டுத்துதான் மிச்ச அலுவல் பார்ப்பான். நான் சொல்லமாட்டேன் இதுதான் சரியெண்டு, ஆனால் நடைமுறைக்கு இலகுவானது இது என்பேன், முக்கியமாக, இலங்கையில படிச்சு குப்பை கொட்டிப்போட்டு இங்கே வந்தால்.

பதில் எழுதிய ஏனையோருக்கும் நன்றிகளும் வணக்கங்களும்..

அப்பிடி எண்டு சொல்ல முடியாது. திருமணமான எல்லா பெண்களும் தங்கள் குடும்ப பெயரை மாற்றுவதில்லை. அவர்கள் தங்களின் குடும்ப பெயரிலேயே தொடர்ந்து இருப்பார்கள். பிள்ளையளுக்கும் ஒரு பிள்ளைக்கு தந்தையின் குடும்ப பெயரையும் மற்ற பிள்ளைக்கு தாயின் குடும்ப பெயரையும் வைத்து இருக்கிறார்கள் (சமத்துவமாம்).

எங்களின் பெயர் முறை இங்கு பல அலுவலகங்களில் தெரியும் போல இருக்கு. கூடுதலா நான் எந்த சிரமமும் இல்லாமல், இது என்னுடைய குடும்ப பெயர், இது எனது மனைவி பிள்ளையின் குடும்ப பெயர் எனச் சொல்வேன். யாரும் எதுவும் கேள்வி கேட்பதில்லை. என்னை பொறுத்த வரையில் அவர்களுக்கு அந்த உரிமையும் இல்லை.

நீங்கள் சொன்ன மாதிரி இலங்கை இந்தியா போன்ற நாடுகளுக்கு போகும் போது எப்பிடி எண்டு தெரியாது. நாங்கள் வேறு நாட்டிற்கு போய் இருக்கிறோம் எந்த பிரச்சனையும் இல்லை. மேல யாரோ, பென்ஷன் பெனபிட்ஸ் எடுக்கும் போது அலைய வேண்டும் எண்டு கூறி இருந்தார்கள். இங்கு தான் ஆர் ப்பெனபிசரி என்று பதியிறோமே... பிறகு ஏன் அலைய வேண்டும்? எதோ... எனக்கு நான் பயன் படுத்தும் முறை அனுகூலமாக இருக்கிறது. எனக்கு தெரிஞ்ச பலரும் அப்பிடியே தன் பயன் படுத்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஓ.கே.கலியாணம் செய்து பிள்ளை குட்டிகளென்று வருகையில்தான் பிரச்சனை.

ஓ உந்தப்பிரச்சனையெல்லாம் இருக்கிது என. நானும் நெடுக்காலபோவானின் எதிர்காலம் எப்படி இருக்கும் எண்டுறதை அறிய ஆவலாய் இருக்கிறன். :lol:

அப்படியெல்லாம் பெரிசா ஒன்றுமில்ல. நான் ரெஸ்ட் ரியுப்புக்கு குறியிடுவது போல.. Baby xx1, baby xy1 இப்படிப் பெயரிடுவேன் அல்லது டி என் ஏ பிக்கர் பிரிட்டை பார்கோட் போல பிள்ளையின் உடலில் பதித்துவிட வேண்டியதுதான். ஒரு பிரச்சனையும் இல்லை.

பழைய கால மனிதன் தான் தனக்கென்று இயற்றிய விதிமுறைகளால் தான் நவீன உலகில் எங்கும் பிரச்சனை. அதுகளைக் கடந்து போக வேண்டிய இடங்களில் போய் புதியதை நிர்மாணிக்க வேண்டியதும் அவசியம். காலத்தின் கட்டாயமும் கூட. ஒரே லெனினிசும்.. லிங்கனிசுமும் கதைச்சுக் கொண்டு அரசியல் செய்வது சாத்தியப்படாது. ஜனநாயகமும் ஒரு நாள் சலித்துப் போகும். மாற்றங்கள் இன்றிய உலக ஓட்டம் சாத்தியமில்லை..!

கலியாணமும் கூட இந்த உலகில் ஒருத்தியை கட்டிக்கிட்டு.. அல்லல்படுவதாகி விட்டது. அது செம போர் அடிக்கிற விடயம். அதையும் தாண்டி.. மனிதன் சிந்திக்க வேண்டியவனாகி விட்டான். ஒரே மனிசியையும் தான் எத்தனை நாளைக்கு பார்த்துக்கிட்டு காலந்தள்ளுறாய்ங்களோ...! செம போரா இல்ல. மைதானத்தில் ஒரு விளையாட்டையே திருப்பி திருப்பி விளையாட சலித்துவிடுகிறது. ஆனால்.. இந்த இந்திய உபகண்டத் தம்பதிகள் எப்படித்தான்...???! :o:lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.