Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களின் இன்றைய நிலைக்கு புலிகளே காரணம் - சம்பந்தன் திடீர் பாய்ச்சல்

Featured Replies

தமிழர்களின் இன்றைய நிலைக்கு புலிகளே காரணம் - சம்பந்தன் திடீர் பாய்ச்சல்

கொழும்பு: கடந்த 2005 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் திடீரென தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சம்பந்தன் கூறுகையில், தேர்தல் புறக்கணிப்பு முடிவு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் நான் நீண்ட நேரம் வாதிட்டேன். அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கா விட்டால், நிச்சயமாக தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் சென்றிருக்கலாம். மக்களின் வாழ்விலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கின்ற போது இந்த விஷயத்தை எல்லாரும் மனதில் கொள்ள வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலின் முக்கிய வேட்பாளர்களைச் சந்தித்து பல விஷயங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாங்கள் இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்றார்.

பிரிந்து கிடந்த பல்வேறு தமிழ்க் கட்சிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வர பிள்ளையார் சுழி போட்டதே விடுதலைப் புலிகள் தான். அந்த நடவடிக்கையால்தான் இலங்கை அரசின் பல்வேறு அராஜக நடவடிக்கைகளின் வேகத்திற்கு முட்டுக்ட்டை போடப்பட்டது.

விடுதலைப் புலிகள் கை காட்டியதால்தான் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அத்தனை எம்.பிக்களையும் தமிழ் மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், இந்த நிலையில் விடுதலைப் புலிகள் எடுத்த முடிவுதான் தமிழர்களின் அழிவுக்கு முக்கியக் காரணம் என்று சம்பந்தன் பாய்ந்திருப்பது ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2009/12/27/sampanthan-s-sudden-fume-on-ltte.html

தமிழரின் இண்றைய நிலைக்கு ஏதும் செய்யாமல் முடங்கி கிடந்து கொண்டு தலைமை பொறுப்பில் இருந்த சம்பந்தன் போண்ற கோணங்கிகளே காரணம்...

19 வருடங்களுக்கு மேலாக ஒரு ஆட்ச்சியை நிறுவி 70% மான நிலப்பகுதிகளோடு அதுக்கான அலகுகளை எல்லாம் அமைத்து ஆட்ச்சி செய்து கொண்டு இருந்த புலிகளுக்கு சம்பந்தன் போண்றவர்கள் எவ்வளவு உறுதுணையாக இருந்து இருப்பார்கள் என்பது நண்றாக புரிகிறது...

2001 ம் ஆண்டு புலிகள் போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு போன போது தமிழீழம் நிறுவப்பட்டு அங்கீகாரத்துக்காக காத்து இருந்தது... அதேகாலப்பகுதியில் தமிழர்களுக்கு தீர்வாக எதுவும் கொடுக்க தயார் இல்லை என்பதை சிங்களம் தெளிவாக சொல்லியும் நிண்றது...

இந்தக்காலப்பகுதியில் தான் 2005 ம் ஆண்டின் தேர்தல் வந்தது... தனித்துவமான எல்லாம் அலகையும் கொண்டு இருந்த தமிழர்கள் தீர்வு எண்று கண்ணுக்கு தெரியாத ஒண்றான ஒரு விடயம் கிட்டும் எனும் நம்பிக்கையில் வாக்கு அளித்து இருக்க வேண்டும் எண்று சம்பந்தன் கூறுவது அவரின் அரசியல் தெளிவற்ற நிலையையே காட்டுகிறது...

அல்லது சம்பந்தன் சரத்திடம் ( இணைத்தலைமை நாடுகளிடம் ) வாங்கி கொண்டு மாற இருப்பதுக்கு சப்பை கட்டு கட்டுகிறாரோ என்னவோ...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் புதிதல்ல. விடுதலைப்புலிகள் இருந்த காலத்திலேயே சம்பந்தன் சிங்கள பேரினவாதக் கட்சிகளோடு நெருங்கிச் செயற்பட்டவர் தான்.

சந்திரிக்கா அம்மையார் காலத்தில் அவர் கொண்டு வந்து நாடகமாடிய தீர்வுப் பொதியில் சம்பந்தனின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்துக் கொண்டும்.. பேச்சுக்களுக்கு போகுமிடங்களில் விடுதலைப்புலிகளைப் பற்றிய தப்பான அபிப்பிராயங்களை சம்பந்தன் தனிப்பட்ட வகையில் வெளியிட்டும் வந்திருக்கிறார். இவை விடுதலைப்புலிகளுக்கும் தெரிந்த விடயமே.

ரணில் ஆட்சிக்கு வந்திருந்தாலும்.. மகிந்த வந்திருந்தாலும்.. முடிவு ஒன்றாகத்தான் இருந்திருக்கும். ஏலவே தீர்மானிக்கப்பட்ட படிதான் இது பிராந்திய உலக வல்லரசுகளால் நகர்த்தப்பட்ட நகர்வு.

சம்பந்தன் இதை அறியாதவரும் அல்ல. ஆனால் இப்போ விடுதலைப்புலிகளை வைச்சு பூச்சாண்டி காட்டுவதுதான் சுத்த சந்தர்ப்பவாத அரசியலாகும். இது சம்பந்தனுக்கும் புதிதல்ல.. தமிழ் மக்களுக்கும் புதிதல்ல..! :o:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை கசக்கும்.

சம்பந்தன் ஐயா, விடுதலைப்புலிகள் அல்ல காரணம். விடுதலைப்புலித்தலைமை மட்டுமே.

அது தானே புலிகள் இல்லையென்றால் சின்னச் சின்ன மந்திரிப் பதவிகள் எடுத்து

உலகத்திற்கே தெரியாமல் அரைவாசித் தமிழரை என்றாலும் அழித்திருப்போமில்ல.

ஐயா சம்பந்தரே!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எல்லோருக்கும் புலிகள் என்ற சொல் இல்லாமல் அரசியலோ அல்லது எதுவுமோ இலங்கையில் செய்யமுடியாது என்பதை அந்த தானைத்தலைவன் னிலை நிறுத்தி சென்று விட்டார்.

ஆனால் நீங்களோ உங்கள் அரசியல் அறிவீனத்தை பலமாக மக்களுக்கு எடுத்தியம்புகிறீர்கள்.

1948- 1977 வரயும், அதன் பின்னரும் உங்கள் போன்ற பச்சோந்திகளிடம் தமிழர்கள் தாரை கொடுத்துதான் இந்த நிலைக்கு வந்தனர் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள்.

நீங்கள் இந்தியாவில் அடைக்கலம் புகுந்த காலம் தெரியுமா?

அதுதான் உங்கள் அரசியல் , மக்களை கைவிட்டு ஓடிய மகானே ஏன் உங்களால் கனகரத்தினம் எம் பி யை .....

  • கருத்துக்கள உறவுகள்

87ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பின் நடந்த தேர்தலில் அமிர்தலிங்கம் ஏன் தோற்றவர் என்பதைச் சிந்தித்து பாரும் ஐயா!புலிகள் உங்களை ஒன்றிணைத்ததால்தான் தமிழ்மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்.புலிகள் இல்லையென்றவுடன் எல்லோருக்கும் குளிர் விட்டுப் போய்ச்சுது.கிடைக்கும் பாராளுமன்றக் கதிரைகளைப் பிடித்துக் கொண்டு உங்கள் சொந்தத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சரத்தோடும் மகிந்தவோடும் பேரம் பேசி அவர்கள் தரும் கைய+ட்டைப் பெற்றுக் கொண்டு சுயலாப் தேடுவதற்காக இனத்தை நிரந்தரமாக அடிமையாக்க நினைக்கிறீர்கள்.மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.மக்கள் பட வேண்டிய உச்ச கட்ட வேதனைகளை பட்டு விட்டார்கள்.இனி புதிதாக வரும் வேதனைகள் அவர்களுக்குப் பெரிதாக இருக்காது.மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.கூட்டமைப்பில் கொள்கை முரண்பாடு கொண்டவர்கள் புலிகளால் கூட்டமைப்புக்குள் சேர்க்கப்பட்டவர்கள் இளைஞர்கள் மாணவர்களை ஒன்றிணைத்து காலத்தின் தேவையாக புதிய அரசியல் இயக்கம் காணவேண்டும்.சுயநலவாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.ஆயுத அமைப்பொன்றின் தேவையை அதாவது புலிகளின் மீள்வருகையை சிங்கள ஆட்சியாளர்கள் நிச்சயம் ஏற்படுத்துவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை கசக்கும்

சம்பந்தன் ஐயா, விடுதலைப்புலிகள் அல்ல காரணம். விடுதலைப்புலித்தலைமை மட்டுமே.

மனிசனுக்கு தலை வேண்டாமாம் முண்டம் மட்டும் போதுமாம்...பதுங்கி இருந்தவர்கள் எல்லாம் தைரியமாய் கருத்து எழுத வந்திட்டாங்கள் :)

சம்பந்தன் ஐயாவுக்கு பொண்ஸ் பிரதமர் ஆசையை ஊட்டிவிட்டார் போலிருக்கிறது...

பதவிக்காக எதையும் சொல்லுவாங்க்ள் போலிருக்கிறது இந்த தற்காலீக தமிழ் தலமைகள்!!......

இவர்களை ஒண்றிணைத்ததையும் மறந்து செயல்படுகிறார் சம்பந்தன்...

இந்தகோரிகைகளை தான் இவர்கள் இதுவரைக்கும் ஆராய்துள்ளார்கள் போலிருக்கிறது.....

சம்பந்தன் ஐயாவுக்கு பொண்ஸ் பிரதமர் ஆசையை ஊட்டிவிட்டார் போலிருக்கிறது...

:)

தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி தேர்தலில் தங்கள் சார்பாக நிறுத்தி வெற்றி பெற்றவர்கள் புலிகள்.

எங்க பார்ப்பம் சம்பந்தன் ஒரு அமைப்பை உருவாக்கி தேர்தலில் நிற்கட்டும் பார்ப்பம்.

சிறையில இருக்கிற எம்பி பற்றி கவலை இல்லை பிறகு அறலை வந்து பிசத்துகிறார் சம்பந்தன்.

கிழவனை கலைத்து விட்டு புதியவர் தலைமை பொறுப்பை எடுக்கனும்.

ரவிராஜ் , பரராஜசிங்கம் போன்றவர்கள் கொலை செய்யப்பட்ட போது இவர் மாத்திரம் சிங்களத்திடம் தப்பி இருப்பது சந்தேகமாக இருக்கிறது

ஆமா ஆமா............

மாடு கன்னு போட்டாலும் .......

புலிதான் காரணம்!

நம்ம தலைவர் மதிவதனங்க் -

அவருக்கு லூஸ் மோஷன் ஆனாலும்

புலிதான் காரணம் !............

அப்புறம்?

சம்பந்தன் ஐயா ...................

நல்லாதான் சாணி போடுறீங்க.......

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மகிந்தவைக் கொண்டுவந்ததால்த்தான் இந்த அழிவுகளெல்லாம் நடந்தது என்று இப்போ பலரும் சொலவ்து கேட்கிறது. ஆனால், மகிந்த வராமல் ரணில் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.

மகிந்தவின் வரவை சரியான முறையில் இந்தியா பாவித்துக்கொண்டது. அதனால்த்தான் இந்த அழிவுகளெல்லாம் ஏற்பட்டது.மகிந்த வரமுன்னர் இருந்த ராணுவ சமபலம் அவனது வருகையின் பின்னர் முற்றாக மாறிப்போனது. அந்த சமநிலை மாற்றத்துக்குக் காரனம் இந்தியா...இன்னும் சில நாடுகள்.புல்கள் அழிக்கப்பட வேண்டும் என்று காத்திருந்த நாடுகள் மகிந்தவைச் சரியாகப் பாவித்துக் கொண்டன.

சம்பந்தன் சொல்வது ஓரள்விற்குச் சரி. புலிகள் போராடாமல் இருந்திருந்தால் இந்த அழிவுகளெல்லாம் ஏற்பட்டிருக்காது. ஆனால், தொடர் இனக்கலவரங்கள் என்கிற போர்வையில் தமிழர் இனவழிப்பு இடம்பெற்றிருக்கும். தமிழர் தேசம் குடியேற்றங்களால் நிரம்பி வழிந்திருக்கும். வேலைவாய்ப்பின்மையும், கல்வித்தராதரத்தில் பிரச்சனையும் தொடர்ந்திருக்கும்.இவற்றிற்கெல்லாம் யார் காரணம் என்று சொல்வாரோ தெரியாது?? சிலவேளை செல்வநாயகமும் அவர்களது தோழர்களும்தான் காரணம் என்பாரோ என்னவோ ??

சரணாகதி அரசியலை கைக்கொள்ளத் தொடங்கியிருக்கும் ஒருவரின் கையாலாகாத்தனம்தான் சம்பந்தனின் குற்றச்சாட்டுக்களில் தெரிகிறது. தமது இயலாமையை மறைக்க யார்மீதாவது குற்றத்தைப் போட்டுவிட்டு எதிரியுடன் சமரசம் செய்யும் அப்புக்காத்து மூளை.

சம்பந்தருக்கு திருகோணமலை, கொழும்பு, இந்தியா, லண்டன் எல்லா இடங்களிலும் வீடுகள் உண்டு. அவர் கழுவுகிற மீனில் நழுவுற ஆள். கறிவேப்பிலையாகக் கூட இல்லாத ஆள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.