Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Sex Un-Sells: No blood for Panties

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசான் அண்ணா, ஓமோம் எங்கட ஆக்கள் நல்லாத்தான் தங்கட பிள்ளைகளை விரசத்தில இருந்து தள்ளி வளர்க்கினம். ஏன் அண்ணா தமிழ் சூப்பர் ஸ்டார் செய்யாத உள்ளாடை கொமடியா? இப்டித்தான் கலாசார சீரழிவு எண்டு எனக்கு தெரிஞ்சவர் ஸ்பீச் குடுத்திட்டு காருக்க ஏறினால், "டாடி மம்மி வீட்டில் இல்லை, தடை போடா யாரும் இல்லை" என்று கதறுது! அண்ணா, இதை எங்கட பொடியள் தங்கட பேஸ் புக்ல போட்டு பெமசாக்கிடுவான்கள்.

ஓ நீங்கள் இப்புடி திங் பண்ணுறியளோ?

நிச்சியமாய் இந்த யங்கி விளம்பரத்தாலை அங்கை இருக்கிறசனத்துக்கு விமோசனம் கிடைக்கும். :wub::D

அடுத்தது

இயக்கம் கன பிழைவிட்டுட்டுது இப்பிடியான விசயத்தை முந்தியே தொடங்கியிருக்கோணும்.

அப்பதான் இஞ்சை நடந்த ஊர்வலங்களிலை பொடிச்சியளையும் பிரேசில் சம்பா டான்ஸ் மாதிரி ஆட விட்டிருக்கலாம். :(:blink:

சினிமாபாட்டுக்கும் விடுதலை உணர்வுக்கும் முடிச்சு போடும் உங்களை என்னவென்பது? :lol:

கந்தப்பு, குழவி - உங்கள் முயற்சிகள் பயனளிப்பதாக நீங்கள் கூறுவது மகிழ்ச்சியே.

தொடருங்கள் உங்கள் பணியை .....

மேற்குலகினர் காரணங்களை அறியாது இந்த காட்சியை பார்த்ததும் ஸ்ரீ லங்கா பொருட்களை விட்டுவிடுவர் என்ற கற்பனை கொஞ்சம் அதிகம் தான். ஒன்றை செய்ய நினைத்து, அதை தலைகீழாக செய்து, ஈற்றில் ஏமாந்து போவது .......

தமிழன் இப்படித்தான் முக்கிய விடயங்களில் கற்பனையை கொட்டி, அதை தானும் நம்பி, தன் பணி முடிந்தது என இறுதிவரை வாளாவிருந்து, தலைக்குமேல் வெள்ளம் போகேக்கே, அவர்களில் குற்றம் கண்டு, தானும் அழிந்து, தன் இனத்தையும் அழிப்பதை வழமையாக்கி வருகிறான் போலத் தெரிகிறது.

ஏன் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கேள்விக்கு மூல காணொளியில் பதில் இல்லை. இணைப்புக்களில் வரும் நேர்காணலில் ஓரளவு உள்ளது.

மிக சிறப்பாக அமைக்கப்பட்ட இத்தகைய உசுப்பல், விரச காட்சிகளுடன் நின்றுவிடாது, இதை தயாரித்தவர்கள் தமது நல்ல திறமைகளை - நாகரீகமான முறையில் இனப்படுகொலையை மேலை நாட்டவர்கள், அரசியல் வாதிகள், தூதுவர்கள், உயர் அதிகாரிகள் .... மனதில் நிறுத்தும் வண்ணம் - இடம் திகதியுடன் கூடிய ஆதரப் படங்கள் அடங்கிய உயர்தர வர்ணப் புத்தகங்கள், விபரிப்புக்களுடன் கூடிய படுகொலை காணொளிகள் அடங்கிய குறுந்தட்டுக்கள், ..... 100,000 க்கணக்கில் தயாரித்து அவர்களிடமும், முக்கிய நூலகங்களிலும், பல்கலைக்கழக - பயிற்சிக்கல்லூரி நூலகங்களிலும் கொடுக்கும் பணியை செய்தால் அது உண்மையில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

உருத்திரகுமார் வெறும் வாக்கெடுப்புக்களுடன் காலத்தை ஓட்டாமல், மேற்கூறிய இனப்படுகொலை ஆவணப் பணியை உடன் முன்னெடுப்பது அர்த்தம், பயன் கூடியதாக அமையும். அவர் சந்திக்கும் முக்கியமானவர்களிடம், அறிக்கை, கடிதங்களுடன் மட்டும் நின்று விடாமல் இத்தகைய ஆவணங்களை கொடுத்து வந்தால் அது எமது விடிவை நோக்கிய அர்த்தமுள்ள பயணத்தின் உறுதியான அத்திவாரமாக அமையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினிமாபாட்டுக்கும் விடுதலை உணர்வுக்கும் முடிச்சு போடும் உங்களை என்னவென்பது? :rolleyes:

தமிழ் நாட்டு சினிமாவிற்கும் எங்கட விடுதலை உணர்விற்கும் நிறைய்ய தொடர்பிருக்கு. ஒரு உதாரணம். நாங்கள் 60 வருசத்திற்கு முதல் இப்ப செய்யிற மாதிரி கலியாணங்கள் செய்யிறதில்லை. முந்தி சோறு குடுக்கிறதெண்டு சொல்லுவினம்.

சினிமா தான் வைஷ்ணவ(பார்சி) கலியான முறையை எங்கட ஆக்களுக்கு பரப்பினது. இப்ப புதுசா எங்கட ஆக்கள் தமிழ் சினிமா, சீரியல பாத்து வளை காப்பு போட தொடங்கிட்டினம்! அதுவும் இருபதாயிரம் டாலர் செலவழிச்சு.

இன்னொரு விஷயம், எண்ட நண்பன் ஒருத்தன் கனடா பொலிசில வேலை செய்யிறான். அவன் சொன்னது கத்தி குத்து விசயத்தில 18 வயசிக்கு கீழ்பட்ட தமிழ் பொடியள் தானாம் அங்க நம்பர் வன். அவைன்ட போலீஸ் குழு ஆராய்ச்சி பண்ணி வந்த முடிவு " தமிழ் படங்களே காரணம்"!

சும்மா ஜோசப் தன்னை விசை எண்டு படங்காட்ட என்கடயலும் தங்கச்சி கை பிடிச்சவன் கைய வெட்டுவன் எண்டு ஜெயிலுக்கு போக அங்க தங்கச்சி கருவளோட ஓடி போகுது. அது சரி இங்க விரசம் விரசம் எண்டு கத்துற ஆக்களில எத்தனை பேருக்கு தெரியும் சிலோனில 40 000 சின்ன பொடியல விபச்சாரத்தில ஈடுபடுத்திறது?

உலகத்தில உள்ள அத்தனை விரசமானவனுக்கு ஸ்ரீ லங்கா எண்டால் உயிர். சும்மா யங்கிய கண்டால் பொங்கிஎழுவம் ஆனால் 40 வருசமா சிங்களவன் சின்னதுகள வைச்சு விபச்சாரம் செய்தால் பார்த்து கொண்டிருப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்குலகினர் காரணங்களை அறியாது இந்த காட்சியை பார்த்ததும் ஸ்ரீ லங்கா பொருட்களை விட்டுவிடுவர் என்ற கற்பனை கொஞ்சம் அதிகம் தான். ஒன்றை செய்ய நினைத்து, அதை தலைகீழாக செய்து, ஈற்றில் ஏமாந்து போவது .......

ஆசான் அண்ணா, அங்க தான் நாங்கள் தெருவில வந்து போராடினது உதவுது. வெள்ளையன் என்ன மொக்கனே? அவனுக்கு தெரியாதே ஒரு இலட்சம் சனம் மெனக்கெட்டு தெருவுக்கு வந்த பொது சிங்களவன் எங்களை அடிக்கிறது? இப்ப தமிழன் எண்டு சொல்லுறது தான் நல்லது ஸ்ரீ லங்கா எண்டால் வெள்ளையள் கேட்கிறது உண்ட குடும்பத்தில யாராவது செத்தவையலோ எண்டு!

அது மட்டுமில்லை அண்ணா, எங்கட மாதங்கி பெட்டைய உலகத்தில ஒரு நூறு கோடி பேருக்கு தெரியும். அந்த பிள்ளையும் ஸ்ரீ லங்கா எண்டால் ஜெனோசைட் எண்டு எல்லாருக்கும் பரப்பி போட்டுது.

யாரவது காங்கிரசு அடிவருடி பயங்கரவாதம் அது இது எண்டு வாய திறந்தால், நீங்கள் தான் புளிய உருவாகினநீன்கலாம் எண்டு ஒரு கேள்வி கேட்டால் எங்கட டெலோ நியூஸ் அண்ணன் போல் கழுவுற தண்ணியில நழுவிவினம்.

சிங்களவன நாங்கள் ஒரு தடியால் தான் அடிகொனும் எண்டு சட்டமில்ல. யங்கி விளம்பரமும் செய்யாலாம், வாக்கெடுப்பும் செய்யலாம், அயர்லாந்தில வழக்கு போடலாம், சிங்களவன் இரான், சீனாவோட கூடி குலாவுரத காட்டி கொடுக்கலாம், உங்கட வெளிநாட்டு ஊர் சமூக, வழிபாடு தள்ளங்களில் பிரச்சாரம் செய்யலாம், ....................................................... மொத்ததில யூதன பாத்து நாங்கள் பழகோணும்.

6000 இசுலாமியர் செத்ததுக்கு கொசோவோ எண்ட நாடு கிடைத்தால், இரண்டு இலட்சம் உறவுகளை இழந்த எங்களுக்கு நாடு கிடைக்காமலே போயிடும்?

உங்கட சமூக சேவை எங்களுக்கு இன்னும் தேவை!

... அங்க தான் நாங்கள் தெருவில வந்து போராடினது உதவுது. வெள்ளையன் என்ன மொக்கனே? அவனுக்கு தெரியாதே ஒரு இலட்சம் சனம் மெனக்கெட்டு தெருவுக்கு வந்த பொது சிங்களவன் எங்களை அடிக்கிறது? இப்ப தமிழன் எண்டு சொல்லுறது தான் நல்லது ஸ்ரீ லங்கா எண்டால் வெள்ளையள் கேட்கிறது உண்ட குடும்பத்தில யாராவது செத்தவையலோ எண்டு! .....

குழவி - நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் நல்லது.

ஆனால் ஒரு விடயம் கடுமையாக உதைக்குது: உங்கள் வீதிப் போராட்டத்தால் எல்லாம் அறிந்து கொண்ட வெள்ளையன் - ஏன் இன்னமும் புலிகளை "பயங்கரவாதிகளாக" தடை செய்திருப்பது மட்டுமல்லாது இனப்படு கொலைகாரர்களை ஜனநாயகவாதிகளாக அங்கீகரித்து வைத்துள்ளான்?

அது மட்டுமில்லை அண்ணா, எங்கட மாதங்கி பெட்டைய உலகத்தில ஒரு நூறு கோடி பேருக்கு தெரியும். அந்த பிள்ளையும் ஸ்ரீ லங்கா எண்டால் ஜெனோசைட் எண்டு எல்லாருக்கும் பரப்பி போட்டுது.

மாதங்கியின் முயற்சி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருவது மகிழ்ச்சியே!

  • கருத்துக்கள உறவுகள்

குழவி - நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் நல்லது.

ஆனால் ஒரு விடயம் கடுமையாக உதைக்குது: உங்கள் வீதிப் போராட்டத்தால் எல்லாம் அறிந்து கொண்ட வெள்ளையன் - ஏன் இன்னமும் புலிகளை "பயங்கரவாதிகளாக" தடை செய்திருப்பது மட்டுமல்லாது இனப்படு கொலைகாரர்களை ஜனநாயகவாதிகளாக அங்கீகரித்து வைத்துள்ளான்?

மாதங்கியின் முயற்சி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருவது மகிழ்ச்சியே!

உங்கட கதையைப்பார்த்தால் எதோ வெள்ளைக்காற பொதுச்சனம் தான் புலியை

தடை செய்தமாதிரி எல்லோ இருக்குது.அந்த அந்த நாட்டு அரசுகள்தான்

உண்மை தெரிந்தும் செய்த வேலை.இது அரசியல்.நாம் ஒவ்வொரு கிளைகளை

வெட்டுவதை விட கொஞ்சம் கொஞ்சமாக வேரை அறுப்பது சில வேளை

நீண்ட நாட்களில் பயன்தரலாம்.

இதை பாத்து உங்கள் பின்னூட்டல்களையும் Rating ஐ யும் கூட்டுங்கோ....

http://www.youtube.com/watch?v=0OzuQTC-OiQ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை பாத்து உங்கள் பின்னூட்டல்களையும் Rating ஐ யும் கூட்டுங்கோ....

http://www.youtube.com/watch?v=0OzuQTC-OiQ

தம்பி நாய்க்குட்டி, அந்த சைடுல யாரோ சிங்களவன் தமிழரை போட்டு கிளிச்சிருகிறான் ஒருக்கா போய் பாருங்கோ!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விளம்பரத்த பற்றி தான் எல்லோரும் அலட்டினம். எல்லாரும் சமூக சீரழிவு எண்டு தான் தொடங்கினவை..... அது தான் நான் யோசிச்சு பார்த்தன், இனி இத என்கட தமிழ் கலாச்சாரத்தின் படி மாற்ற வேணும் எண்டு.

அதாவது இனி அந்த வெள்ளை பெட்டை சீலை கட்டி ஆனால் அதை பொக்குளுக்கு அரை அடி கீழ கட்டவேணும். பிறகு இப்ப தமிழ் நாட்டின்ட வருங்கால அரசியல் தலைவர மாதிரி பம்பரத்த பெட்டையிண்ட இடுப்பில சுத்தி விடலாம். அல்லது தமிழரிண்ட நடன புயல் செய்தது மாதிரி ஸ்ரீ லங்கா முட்டைய இடுப்பில ஆம்லேட் போட்டு... பாத்தீங்களே ஸ்ரீ லங்கா முட்டை வேகாது எண்டு பிரச்சாரம் செய்யலாம். அல்லது தமிழ் மக்களின் ஹீரோக்கள் செய்வது போல் அவளை இடுப்பை ஆட்ட விட்டு அதை கிள்ளியோ அல்லது தட்டியோ விடலாம். இவ்வளவும் நடக்கும்போது தமிழரின் பல்லில்லாத டூப்பர் ஸ்டார் மற்றும் தமிழ் மைஸ்ட்ரோவின் பாட்டான "மாசி மாசம் ஆளான பொண்ணு" பாட்டை பின் புறத்தில் ஒலிக்கவிடலாம்.

இப்படி செய்வதால் நாம் தமிழரின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழியாமல் காப்பற்றலாம். எப்படி யோசனை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழவி இனிநான் குத்துவன்

  • 2 weeks later...

சிறீலங்கா பொருட்கள் - புறக்கணிப்பு போராட்டங்களை தீவிரப்படுத்த புலம்பெயர் தமிழ் சமூகம் திட்டம்

திகதி: 06.02.2010 // தமிழீழம்

சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கும் போராட்டங்களை இன்று சனிக்கிழமை அமெரிக்காவில் மேற்கொள்வதற்கு புலம்பெயர் தமிழ் சமூகம் திட்டமிட்டுள்ளது. இந்த போராட்டங்கள் கனடா, பிரித்தானியா, மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் நகரங்களிலும் மேற்கொள்வதற்கு ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கும் போராட்டங்களை இன்று சனிக்கிழமை அமெரிக்காவில் உள்ள வர்த்தக நிலையங்களின் முன்னால் நடத்துவதற்கு புலம்பெயர் தமிழ் சமூகம் திட்டமிட்டுள்ளது.

“சிறீலங்காவில் தயாரிக்கப்பட்டது” என்ற பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் மக்களை கேட்டுக்கொள்வதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அமெரிக்காவின் பிரதான 16 நகரங்களில் உள்ள “கப்” மற்றும் “விக்ரோரியா சிக்கிரட்” வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக புறக்கணிப்பு போராட்டங்களை அவர்கள் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த வர்த்தக நிலையங்கள் விற்பனை செய்யும் பொருட்களில் 50 வீதமானவை சிறீலங்காவில் தயாரிக்கப்பட்டவை.

சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கும் போராட்டங்கள் கனடா, பிரித்தானியா, மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் நகரங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.

தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருந்த இனவாத அரசின் போக்கில் இத்தகைய புறக்கணிப்பு போராட்டங்கள் மாற்றங்களை ஏற்படுத்தியதுண்டு. எனவே சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை அமெரிக்க மக்கள் கருத்தில் எடுப்பார்கள் என நாம் நம்புகிறோம் என இந்த போராட்டங்களை ஒழுங்கு செய்துள்ள குழுவின் பேச்சாளர் கலாநிதி எலியன் சாண்டர் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் சிறீலங்கா அரசு 25,000 பொதுமக்களை படுகொலை செய்துள்ளது. 400,000 இற்கு மேற்பட்ட மக்களை முகாம்களில் ஆறு மாதங்களுக்கும் மேலாக அடைத்த வைத்திருந்தது. சிறீலங்கா இராணுவம் முற்றுமுழுதாக சிங்கள இனத்தவர்களை கொண்டது.

முகாம்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக தான் வழங்கிய உறுதிமொழிகளை அரசு மீறியுள்ளது.

ஆசியாவிலேயே மிகவும் இராணுவமயப்படுத்தப்பட்ட நாடாக சிறீலங்கா உள்ளது. அதன் பொருளாதாரத்தில் ஏற்றுமதித்துறை 25 வீதமாக உள்ளதுடன், அதில் 50 வீதம் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படும் புடவை ஏற்றுமதி மூலம் பெறப்படுகின்றது.

முகாம்களில் உள்ள மக்களின் அடிப்டைத் தேவைகளுக்காக மனிதாபிமான அமைப்புக்களுக்கு அமெரிக்கா 16 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியிருந்தது. ஆனால் சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் பிரதேசங்களில் தனது படையினரின் முகாம்களின் விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகின்றது.

எனவே மனித உரிமைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தும் நாடுகளிடம் இருந்து புடவைகளை கொள்வனவு செய்வதற்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ளும் அமைப்பு கேட்டுள்ளது.

அமெரிக்க மக்கள் புடவை பொருட்களை கொள்முதல் செய்யும் போது அது எங்கு உற்பத்தி செய்யப்பட்டது என பார்வையிட்ட பின்னர் கொள்முதல் செய்ய வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அமெரிக்க மக்களை கேட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பின்வரும் இணையத்தளத்தின் ஊடாக வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்.

http://www.boycottsrilanka.com/

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3373&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

  • 5 months later...

இவர்களின் முயற்சிக்கு நீங்களும் ஊக்கிவிக்கலாம் http://www.boycottsrilanka.com/

  • 2 months later...

இதை தேவையான இடங்களில் பரப்புரைக்கு பாவிக்கலாம். நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.