Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜிலிங்கம் யாரின் துரும்புச்சீட்டு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் யாரின் துரும்புச்சீட்டு?

தென்னிலங்கை அரசியலின் மற்றொரு முக்கிய பேசுபொருளாய் மாறியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம். தனக்குள் எழுந்த அதீத தமிழ் பற்று மேலீட்டால் தனது கட்சிகளின் ஒருமித்த கொள்கைகளை எல்லாம் தகர்த்தெறிந்து ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணமும் செலுத்தியுள்ளார். தற்போது பரப்புரை நடவடிக்கைகளிலும் தோளில் கறுப்புச் சால்வையுடன் ஈடுபட ஆரம்பித்துள்ளார் என்பது யாவரும் அறிந்த விடயம்.

இந்தியாவின் கொள்கை வகுப்பு சக்திகளும், சிறீலங்காவின் தற்போதைய அரச பீடமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பிரதிபலிப்பாய் சிவாஜிலிங்கத்தின் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் கிட்டியுள்ளன.

சிறீலங்காவின் தேர்தல் களத்தில் எதிர் எதிர்த் தரப்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் சராசரியான சம பலத்துடன் கூடிய போட்டி நிலை காணப்படுகின்றது. இந்தநிலையில் இந்தத் தேர்தலின் வெற்றி தோல்வியையும் தீர்மானிக்கும் சக்தி தமிழ் மக்களுக்கே உண்டென்பதை இந்தியாவும் சிறீலங்காவும் நன்கு விளங்கிக் கொண்டுள்ளன. ஆட்சிப் பீடத்தில் சரத் பொன்சேகா ஏறுவதை இந்தியா விரும்பவில்லை. காரணம்வேறு, ஆனால் இலக்கு ஒன்று என்ற ரீதியில் மஹிந்த தரப்பும் சரத்தின் வருகையை ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே, தமிழர் தரப்பின் வாக்குகள் மஹிந்தவிற்கு இல்லாதுவிடினும் பரவாயில்லை சரத் பொன்சேகாவிற்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை முற்றாகத் தடுக்கவேண்டும் என்று முடிவெடுத்த இந்திய மற்றும் சிங்கள ஆட்சிப் பீடங்கள் சிவாஜிலிங்கம் என்ற துரும்புச் சீட்டைத் தமது கைகளில் எடுத்துக் கொண்டன. தமிழ்த் தேசியத்திற்காகவே தொடர்ந்து போராடிவந்த சிவாஜிலிங்கம் சிறீலங்கா, இந்திய ஆட்சிப்பீடங்களின் சதியை அறியாதவராக அவர்களின் வலையில் விழுந்துவிட்டமைதான் இன்னும் ஆச்சரியமாகவிருக்கிறது.

பெறுமதிமிக்க வாகனம் ஒன்றை வன்னிப் பகுதிக்குக் கொண்டு சென்று விற்றார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு பல பத்து மணித்தியாலயங்களாக சிறீலங்காவின் பொலிஸாரினால் கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த சிவாஜிலிங்கம் இந்தியாவிற்குச் சென்று பின்னர் பல மாதங்களாக வெளிநாடுகளுக்கும் தமிழ் நாட்டிற்கும் மாறி மாறி பயணம் செய்த செய்திகள் அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

இந்தக் காலப் பகுதியில் தமிழ் நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவினதும் இலங்கையினதும் இறையாண்மை என்று இரு நாட்டு ஆதிக்க சக்திகளாலும் கூறப்படுகின்ற அந்த விடயத்தை கேள்விக்குறியாக்குகின்ற வகையிலான காரசாரமான மேடைப் பேச்சுகளை நிகழ்த்திவந்த சிவாஜிலிங்கத்தால் எவ்வாறு இரு நாட்டில் இருந்தும் இலகுவாகத் தப்பிக்க முடிந்தது என்ற கேள்வி உங்களுக்கு எழவில்லையா?

பொங்கு தமிழ் நிகழ்வுகளில் உரை நிகழ்த்தினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அதற்காக, சிறீலங்காவின் பொலிஸாரினால் இறையாண்மைக்கு எதிராகப் பேசினார்கள் என்று மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் சிவாஜிலிங்கம் திடீரென்று இலங்கைக்கு வரவும் அவருக்கு எந்த ஒரு நெருக்கடி நிலையும் ஏற்படவில்லையே. இதன் மூலம் சிறீலங்காவில் திடீர் ஜனநாயகம் முளைத்திருக்கிறதா என்றெண்ணினால் அது நகைப்புக்குரியது.

இந்த விடயங்கள் அனைத்திற்கும் பின்னால் இரண்டு நாட்டு ஆட்சிப் பீடங்களும் இருக்கின்றமை தற்போது அம்பலமாகி வருகின்றது. சிவாஜிலிங்கத்தின் திடீர் நடவடிக்கை இதற்கு சான்று பகிர்கின்றது. சிவாஜிலிங்கத்தினை அணுகிய சிங்கள ஆட்சிப்பீடம் தமிழ்த் தேசியப் பற்றாளரைத் தந்திரமாகப் பயன்படுத்துவதன் மூலம் தனக்குக் கிடைக்காத வாக்குகளைத் தனது எதிரிக்கும் கிடைக்கக்கூடாது என்பதில் கவனமாகச் செயற்படுகின்றது.

அதேவேளை, இந்தியாவில் அவர் இருந்த வேளையில் அவரை இந்தியாவின் கொள்கை வகுப்பு சக்திகள் சந்தித்து அவரது தலையில் மிளகாய் அரைத்துள்ளன. இந்த அரசுகளின் சதிகளை அறியாத சிவாஜிலிங்கத்திற்கு உசுப்பேத்திவிட இன்னொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தாவும் இணைந்துகொண்டார். அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டு அவர்களின் இடங்கள் நிரப்பப்பட்டபோது அந்தக் கதிரைகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டவர்தான் சிறீகாந்தா. இவர் சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தச் சென்றபோது கூடவே சென்றிருக்கின்றார். இவரே சிறீலங்காவின் அரச தலைப்பீடத்திற்கும் சிவாஜிலிங்கத்திற்கும் இடையிலான தரகர் பணி புரிந்தவர் என்ற உண்மையும் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

மஹிந்தவோடு சமரச அரசியல் நடத்தினால்தான் தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கமுடியுமென அண்மைக்காலமாக சொல்லியும் அதற்கு ஏற்றவாறு செயற்பட்டும் வந்தவர்களில் ஒருவர் சிறிகாந்தா. தற்போது மறைமுகமாக மஹிந்தவுக்கு உதவி செய்வதற்குதானோ இவர் சிவாஜிலிங்கத்தைக் கூட்டமைப்பிலிருந்து கூட்டிச்சென்றார் என்ற கேள்வி எழவே செய்கின்றது.

தமிழ்த் தேசியத்தினை எவரும் விலைக்கு விற்கவோ வாங்கவோ முடியாது. சிவாஜிலிங்கத்திற்கோ அல்லது அவருக்குத் துணை நிற்கும் சிறிகாந்தாவிற்கோ மக்களால் வழங்கப்பட்ட வாக்குகள் என்பது அவர்களைப் பெரிதுபடுத்தி மக்களால் வழங்கப்படவில்லை. மாறாக மண்ணிற்காய் விதையான உயிர்களுக்கான காணிக்கைகளாகவே மக்கள் தமது வாக்குகளை வழங்கினர் என்பதை இந்திய மற்றும் சிறிலங்காவின் அதிகார வர்க்கங்கள் புரிந்துகொண்டுள்ளன. அதனை சரியாகப் பயன்படுத்த மஹிந்தவின் தந்திரபுத்தி பெருமளவில் உதவிசெய்திருக்கிறது. தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்திய ஒரு பிரதிநிதியின் மூலமே மஹிந்த தனது வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த முயற்சிப்பதை இங்கு வெளிப்படையாகவே கண்டுகொள்ளலாம். தமிழ்த் தேசியத்தை உண்மையாகவே பலப்படுத்தவேண்டும் என சிவாஜிலிங்கம் நினைப்பாரானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த ஆதரவுடன் தனது பணியை முன்னெடுத்திருக்கவேண்டும். அதனைவிட்டு தமிழ்த் தேசிய சக்திகளைப் பல முனைகளில் உடைக்கும் எதிரிகளின் சதிகளுக்குத் துணைபோனவராகவே அவர் வரலாற்றில் இனங்காணப்படுவார்.

ஒருமித்த குரலில் ஓங்கி எழுப்பவேண்டிய உரிமைக்குரலை ஒவ்வொரு கூறாக உடைக்கும் இந்த முயற்சிகளை தமிழ்மக்கள் இனங்கண்டுள்ளார்கள். இதனை சிவாஜிலிங்கம் போன்றவர்கள் புரிந்துகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த சக்தியாக பயணிக்க முன்வரவேண்டும். அதுவே காலத்தின் தேவை.

இராவணேசன் நன்றி: ஈழநேசன்

****

நன்றி - உதயன் இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

அவசரம் வேண்டாம்

அவர் புரிந்து கொள்வார்

இன்னும் பேரம் பேசுவது முடிவடையாது இருக்கலாம்

இன்னும் சிறிதுகாலம் இழுத்து ஏதாவது பெறமுடியுமாயின்...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியத் தலைவரின் தந்தையின் இறுதி நிகழ்வு சம்பந்தமான பொறுப்புக்களையும் சிவாஜிலிங்கத்திடம் கையளிக்கப்பட்டதிலும் ஏதோ உள்குத்து இருக்கின்றது. வல்வெட்டி துறையில் அடக்கம் செய்யவேண்டும் என்று உறவினர்கள் கோரினார்களாம். யாரிவர்கள்? புலி என்றலே கிலி பிடிக்கும் யாழ் குடாநாட்டிலிருந்து எவ்வாறு இந்த உறவினர்கள் துணிந்து கோரிக்கை முன்வைத்தார்கள்?

சரி கோரிக்கை முன் வைத்ததும் இவ்வளவு நாளும் நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு எதுவித இரக்கமும் காட்டாத மகிந்த அரசு திடீரென் இறுதி நிகழ்வு விடயத்தில் பெருந்தன்மை காட்டியது எவ்வாறு?

ஒன்று மட்டும் நன்கு விளங்குகிறது சிவாஜிலிங்கத்திற்கு ஹீரோயிக் இமேஜை தமிழர் மத்தியில் ஏற்படுத்த மகிந்த அரசு முயல்கிறது.

குறுக்கர் சொன்னது போல் அவரின் மரணம் கூட கொலை தானோ என சந்தேகம் அளிக்கிறது???

  • கருத்துக்கள உறவுகள்

புரியவேண்டியவர்கள் புரிந்துகொண்டால் சரி! காலம் மாற்றமடையும்போது.....

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

அறுபது வருஷ இலங்கை அரசியல் வரலாற்றையே மறந்து போட்டு த.தே.கூ கொலைஞன் சரத்துக்கு முண்டு கொடுக்க நிக்குது. இந்த லட்சணத்தில யாரோட சேர்ந்து யாரப் பலப்படுத்தச் சொல்லி அழுகீனம் இவை? பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையான பேச்சு மூலம் தான் யாரென்பதை ஒளிவு மறைவின்றிக் காட்டி வந்தவர் சிவாஜி லிங்கம், மே மாதப் போரில த.தே.கூ இந்தியாக் காரனின் "வீணியக்" குடிக்க டெல்லி ஒடிய போது போகக் கூடாது எண்டு வெளிப்படையாகவே சொன்னவர் தான் இந்த சிவாஜிலிங்கம். அண்மையில கூட இந்தியாவுக்குள்ள நுழைய விடாம திருப்பி துபாய்க்கு அனுப்பப் பட்டவர் இவர்-இதையெல்லாம் மறந்து போட்டு "செலக்ரிவ் அம்னீஷியா" வோட வந்து ஒரு அரை குறை கட்டுரை எழுதுது, அதை நாங்கள் நம்புறம். என்ன தெளிவு எங்களுக்கு? புல்லரிக்குது! :wub:

(தலைவருடைய தந்தையின்ர பூதவுடல் விஷயத்தில மகிந்த நல்ல பேர் எடுக்க விரும்பி சிவாஜிலிங்கம் சொன்னதைக் கேட்டிருக்கலாம், அல்லது யாராவது வெளிநாட்டு ராசதந்திரிகள் சொல்லியும் செய்திருக்கலாம், இதையெல்லாம் ஒரு சாத்தியப் பாடா யோசிக்க மாட்டாங்களாமோ? எங்கயிருந்து தான் வண்ணம் வண்ணமாக் கிளம்பி வாராங்களோ தெரியாது!)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில கூட இந்தியாவுக்குள்ள நுழைய விடாம திருப்பி துபாய்க்கு அனுப்பப் பட்டவர் இவர்-

இதெல்லாம் சுத்த டிராமா எண்டு உங்களால புரிய முடியவில்லையா? வெளுத்ததெல்லாம் பாலென நம்புவீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவருடைய தந்தையின்ர பூதவுடல் விஷயத்தில மகிந்த நல்ல பேர் எடுக்க விரும்பி சிவாஜிலிங்கம் சொன்னதைக் கேட்டிருக்கலாம், அல்லது யாராவது வெளிநாட்டு ராசதந்திரிகள் சொல்லியும் செய்திருக்கலாம், இதையெல்லாம் ஒரு சாத்தியப் பாடா யோசிக்க மாட்டாங்களாமோ? எங்கயிருந்து தான் வண்ணம் வண்ணமாக் கிளம்பி வாராங்களோ தெரியாது!

சரி உங்கட வழிக்கே வருகிறேன். சிவாஜிலிங்கம் சொன்னதை மகிந்த கேட்டிருக்கலாம் என்றால் சிவாஜியும் மகிந்தவும் அவ்வளவு நெருக்கம் என்று தானே அர்த்தம் கொள்ளவேண்டும். சரி உங்கள் அடுத்த ஊகமான வேறு யாரவது சொல்லிக் கேட்டிருக்கலாம் என்று வைத்தாலும் ... ஏன் பொறுப்பை சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்? வேறு ஒருவரைக் கொண்டு செய்திருக்கலாமே? அல்லது மகிந்த நேரடியாக அந்த உறவினர்களிடம் கொடுத்திருக்கலாமே? ஏதற்கு சிவாஜிலிங்கம் இடை நடுவில்?

சரி உங்கட வழிக்கே வருகிறேன். சிவாஜிலிங்கம் சொன்னதை மகிந்த கேட்டிருக்கலாம் என்றால் சிவாஜியும் மகிந்தவும் அவ்வளவு நெருக்கம் என்று தானே அர்த்தம் கொள்ளவேண்டும். சரி உங்கள் அடுத்த ஊகமான வேறு யாரவது சொல்லிக் கேட்டிருக்கலாம் என்று வைத்தாலும் ... ஏன் பொறுப்பை சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்? வேறு ஒருவரைக் கொண்டு செய்திருக்கலாமே? அல்லது மகிந்த நேரடியாக அந்த உறவினர்களிடம் கொடுத்திருக்கலாமே? ஏதற்கு சிவாஜிலிங்கம் இடை நடுவில்?

சிவாஜிலிங்கம் உறவினராக, குடும்நண்பகராக, ஒரு சிறிய ஊரில் பிறந்து ஒருவருக்கு ஒருவர் தாயக்தில் வாழ்தபோது தினம் சந்தித்தவர்களாக இருந்து இருக்கலாம் ஏதோ ஒரு அடிப்படையில், பிள்ளைகள் தமக்குத்தெரிந்த ஒரு வரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்.

***

Edited by இளைஞன்
தொடர்ந்தும் இதுபோன்று தலைப்புக்கு தொடர்பில்லாமல் எழுதினால் தடைசெய்யப்படுவீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ ஒரு அடிப்படையில், பிள்ளைகள் தமக்குத்தெரிந்த ஒரு வரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்.

***

சொல்லவேயில்லை.. மகிந்த இவ்வளவு நல்லவன் எண்டு :wub: .. (பிரபாகரனின் சகோதரர்கள் கோரிக்கை வைத்தவுடன் தட்டாமல் நிறைவேற்றியிருக்கிறானே!)

சொல்லவேயில்லை.. மகிந்த இவ்வளவு நல்லவன் எண்டு

மகிந்தா சகோதரர்கள் நல்லெண்ணம் கொண்டா சிறைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

இது தேர்தல் காலம்.

இதுகும் நடக்கும்

இதற்கு மேலும் நடக்கும்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தேர்தல் காலம்.

இதுகும் நடக்கும்

இதற்கு மேலும் நடக்கும்.

நீங்கள் சொன்னது போல் அதுவே தான் நடக்கிறது. அதற்குத் தான் சிவாஜிலிங்கம் என்ற துருப்புச் சீட்டு. இதற்காகவே எம் மதிப்புக்குரிய தலைவரின் தந்தை அவர்கள் கொல்லப்பட்டும் இருக்கலாம்.

சிவாஜிலிங்கம் உறவினராக, குடும்நண்பகராக, ஒரு சிறிய ஊரில் பிறந்து ஒருவருக்கு ஒருவர் தாயக்தில் வாழ்தபோது தினம் சந்தித்தவர்களாக இருந்து இருக்கலாம் ஏதோ ஒரு அடிப்படையில், பிள்ளைகள் தமக்குத்தெரிந்த ஒரு வரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்.

***

.. சிவாசிலிங்கம் வாழ்க! நம்ம ஓட்டு சிவாசிலிங்கத்துக்கே!!! ... :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறித்து வைத்துக் கொள்ளுங்கள் ... வரும் ஞாயிறன்று தலைவரின் தந்தையின் இறுதி நிகழ்வு பிரமாண்டமான வகையில் பல்லாயிக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இடம்பெறும். இதில் சிவாஜிலிங்கம் ஒரு உணர்ச்சிகரமான ஒரு உரையையும் ஆற்றுவார். இது நிச்சயம் நடக்கும். இருந்து பாருங்கள்.

Edited by காட்டாறு

சிவாசிலிங்கம் வாழ்க! நம்ம ஓட்டு சிவாசிலிங்கத்துக்கே!!! ...

என்னால் இங்கிருந்து சிவாஜிலிங்கத்திற்கு ஓட்டுப் போட முடியாது.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியளா!

எப்படியெல்லாம் லொயிக்காக பேசுறாங்க!

ஆகா தமிழன் புத்திஷாலியாகிட்டானெங்க.

வாழ்க தமிழன்...வளர்க தமிழ்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=55747&st=0&p=505105&fromsearch=1&#entry505105

Edited by Valvai Mainthan

கட்டுரை எழுதினவர் இந்தியாவை புரிந்து கொண்டது இவ்வளவுதான் போல... இந்தியாவை பொறுத்தவரை இருவருமே இந்தியாவுக்கு சார்பானவர்கள்தான்... இந்தியா சேதுகால்வாயை மீண்டும் தூசு தட்டினால் இருவருமே இந்தியாவின் கீழ் தானாக போய் நிக்க போகிறார்கள்...

சிங்களவர் புலிச்சாயம் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட இந்தியாவிட்டை காசை வாங்கி கொண்டுதான் சரத்துக்கு ஆதரவு குடுக்கிறதாய் சொல்லுகினமே... அப்பதான் இனவாதம் கொண்ட பெரும்பான்மை சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராக உள்ள தலைவருக்கு வாக்கு போடுவார்கள் எண்ட நம்பிக்கையில்... அதாவது எதிர்மறையான அரசியல்..

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜிலிங்கம் யாரின் துரும்புச்சீட்டு?

உற..... சங்..... நிகழ்ச்சியில வந்தநேரம் உந்தாளுக்கு இனியில்லையெண்ட சப்போட். தமிழன் திருந்திட்டான் எண்டு யோசிக்க இப்பதானே தெரியிது......அப்பன் அம்மாவையே வித்துப்போடுவானெண்டு. :D

இங்கு அனைவரும் தயவு செய்து ஒரு விடயத்தை முழுமையாக தெரிந்த பின்னர் எழுதுங்கள்.

திரு.வேலுப்பிள்ளை அவர்களின் மரண செய்தி முதலில் வல்வெட்டிதுறையிலுள்ள அவரின் உறவினருக்கே கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டு இறுதிக்கிரிகைகளை செய்ய கொழும்பு வருமாறும் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் இறுதிக்கிரிகைகளை செய்வதால் பின்னர் உங்களால் தொந்தரவுகள் வரும் என்று கூறி மறுத்து விட்டார்கள்.

பின்னர் உறவினர்கள் வெளிநாட்டிற்கு தொடர்பு கொண்டு இதனை தெரிவித்தார்கள். புலம்பெயர்ந்துள்ள பிள்ளைகள் தங்களது பாதுகாப்பு கருதி அங்கு செல்லதில்லை என்று முடிவெடுத்த பின்னர் ஊரிலும் யாரும் முன்வராததால் கனடாவிலுள்ள மகள் சிவாஜிலிங்கத்துடன் தொடர்பு கொண்டு இறுதிக்கிரிகைகளை செய்யுமாறு கோட்டார்.

இதனால் சிவாஜிலிங்கம் முன்நின்று உடலை வல்வெட்டிதுறைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய அவருடன் இணைந்து உறவினர்களும் பொதுமக்களும் ஈமச்சடங்கிற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளனர்.

இங்கு இந்த இறுதிக்கிரிகைகளில் ஈடுபடுவதால் தமிழ் மக்கள் தேர்தில் சிவாஜிலிங்கத்திற்கு தான் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.

எனவே தயவு செய்து இதனை அரசியலாக்காதீர்கள்.

புலம்பெயர் நாடுகளில் அஞ்சலி செலுத்துகிறோம் என்று உயிருள்ளவரை தனது சொந்த காலில் நின்ற அந்த மனிதரின் சுயகௌரவத்தை தனது அன்பு மனைவியை அன்பாக பராமரித்த அந்த உயர்ந்த உள்ளத்தை கொச்சப்படுத்தாதீர்கள். கொச்சப்படுத்தாதீர்கள்.

அத்துடன் திருமதி. பார்வதிஅம்மா வேலுப்பிள்ளை அவர்களுக்கு மீண்டும் தொல்லைகள் ஏற்படலாம்.

இவர்கள் இருவரும் 1983/4களிலிருந்து இந்தியாவிலோ 2009 இல் செட்டிக்குளத்திலோ அல்லது இராணுவ சிறையிலோ இருக்கும் போது திரும்பிப் பார்க்காத புலம்பெயர் அமைப்புக்களும் வல்வெட்டிதுறை மக்கள் அமைப்பும் இன்று முண்டியடிப்பதற்காகன காரணம் என்ன?

தயவு செய்து திரு.வேலுப்பிள்ளை அவர்களின் மறைவையோ அல்லது திருமதி. பார்வதிஅம்மா வேலுப்பிள்ளை அவர்களின் இனிவரும் நாட்களையோ உங்களின் வியாபாரமாக்காதீர்கள்.

சிவாஜிலிங்கம் உறவினராக, குடும்நண்பகராக, ஒரு சிறிய ஊரில் பிறந்து ஒருவருக்கு ஒருவர் தாயக்தில் வாழ்தபோது தினம் சந்தித்தவர்களாக இருந்து இருக்கலாம் ஏதோ ஒரு அடிப்படையில், பிள்ளைகள் தமக்குத்தெரிந்த ஒரு வரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்.

***

இவர் தலைவர் குடும்பத்தின் உறவினர். இன்றும் கொள்கை மாறாமல் இருப்பவர்.

மாற்றுக் கருத்துடையோர்க்கு காலம் விரைவில் உணர்த்தும்.

சொல்லவேயில்லை.. மகிந்த இவ்வளவு நல்லவன் எண்டு :D .. (பிரபாகரனின் சகோதரர்கள் கோரிக்கை வைத்தவுடன் தட்டாமல் நிறைவேற்றியிருக்கிறானே!)

மகிந்த கோரிக்கையை உடன் நிறைவேற்றவில்லை. தன் கழுத்துக்கு வந்த கத்தியை புத்திசாலித்தனமாக சற்று பின்தள்ளி இருக்கிறான்.தானும் தன்னுடைய அரசும் தாங்கள் தமிழருக்கு விரோதிகள் இல்லை என்று உலகத்தை ஏமாற்றி இருக்கிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.