Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்கள் வோட்டு யாருக்கு

உங்கள் வோட்டு யாருக்கு 40 members have voted

  1. 1. ஐதேக ஜேவிபி என்பவற்றின் ஆதரவை பெற்று மகிந்தவிடம் இருந்து விலகி வந்து , மகிந்தவின் போர் குற்றத்தை விசாரிப்பேன் எண்று அதிபர் தேர்தலில் நிக்கும் டக்ளசுக்கே எங்கள் தமிழ் கூட்டமைப்பின் ஆதரவும்... நீங்கள் டக்கிளசை ஆதரிக்கிறீர்களா..???

    • ஆம்
    • இல்லை
    • புறக்கணிக்கிறேன்

Please sign in or register to vote in this poll.

Featured Replies

... ஆட்டைக் கடித்து .......... மாட்டைக் கடித்து ........?????????????????

  • Replies 80
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

... ஆட்டைக் கடித்து .......... மாட்டைக் கடித்து ........?????????????????

எதை சொல்கிறீர்கள் 1994 தேர்தலில் தமிழ் மக்கள் சந்திரிக்காவுக்கு ஆதரவு கொடுத்தனர் எண்டு நீங்கள் விட்ட கதையையோ....??

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளசும், சித்தார்த்தனும் எக்காரணம் கொண்டும் இணைக்கப்பட்டிருக்க மாட்டார்கள். த.தே.கூ இன் உருவாக்கத்திற்கும் கருத்துருவாக்கம் செய்து முன்னின்று உழைத்த டி.சிவராம், நடேசன் அண்ணா போன்றவர்களுக்கு புலிகளின் தரப்பில் கொடுக்கப்பட்ட முக்கிய நிபந்தனையாக இவை இருந்தன.

மேற்சொன்ன கருத்தை எழுதியது நான் என்பதால் சிலவற்றை துரைரத்தினத்திற்கு குறிப்பிட விரும்புகின்றேன்

தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட எமக்கு ( சிவராம் நடேசன் உட்பட) விடுதலைப்புலிகள் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை.

புளொட் அமைப்பையையும் இதில் இணைத்துக்கொள்வதற்காக நான்கு தடவைகள் புளொட் தலைவர் சித்தார்த்தன் உட்பட புளொட் அமைப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

அவர்களை இணைத்துக்கொள்ள முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் கூட்டமைப்பை உருவாக்கத்திற்காக முன்னின்று உழைத்த தமிழர் மறுமலர்ச்சிக்கழகம், மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியன ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய வற்றிடம் சில நிபந்தனைகளை விதித்திருந்தன.

1. தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்க கூடாது

2. அவர்களிடம் இருக்கும் ஆயுதக்குழுவை கலைக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளுக்கு ஒரு கட்டத்தில் சித்தார்த்தன் இணங்கி வந்து தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து கொள்வதற்கு சம்மதித்த போதிலும் புளொட்டில் இருந்த சிலர் அதற்கு சம்மதிக்காததுடன் இராணுவத்தினருடன் தாம் தொடர்ந்து சேர்ந்து இயங்கப்போவதாக தெரிவித்திருந்தனர். இதனையடுத்தே புளொட் அமைப்பை தமிழ் தேசியக்கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ளும் முயற்சி கைவிடப்பட்டது.

நான் கூறியதை மறுத்து விட்டு நீங்கள் இன்னொரு விதத்தில் அதனையே கூறியிருக்கின்றீர்கள். 87 இன் பின் ஒன்றில் ஆயுத ரீதியில் அல்லது அரசியல் ரீதியில் தமிழ் மக்களின் எதிரிகளுடன் இணைந்து கொண்டு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு குறுக்காக நின்றவர்கள் பலர். அதில் சம்பந்தர் ஐயா அங்கம் வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், அஈ.என்.டி.எல்.எப் வரைக்கும் எல்லோரும் அடக்கம். த.தே.கூ என்ற அமைக்கும் முன் இதில் இருந்த அனைவருமே புலிகளையும்,மக்களையும், போராட்டத்தையும் காட்டிக் கொடுக்கின்றவர்களாகத்தான் இருந்தனர். த.தே.கூ போன்ற ஒரு ஆயுத போராட்டம் செய்யாத அரசியல் அமைப்பின் அவசியம் பற்றிய கருத்துருவாக்கம் வலுப்பெற்று வரும் போதுதான் ஆயுத அமைப்பை வைத்திருக்கும் இயக்கங்கள் தவிர்ந்த ஏனையவற்றை ஒன்றிணைக்கும் செயல் உருவானது. அதன்போது தான் ஆயுத அமைப்பை வைத்திராத தமிழர் விடுதலைக் கூட்டணியை முதன்மைப் படுத்தி ஏனையவற்றை ஒருங்கிணைக்கும் பணி ஆரம்பமானது.இந்த ஆயுத அமைப்புகள் தொடர்பான விதி/நிபந்தனைகள் புலிகளால் முன்வைக்கப்பட்டு டி.சி, நடேசன் போன்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிபந்தனைகள் முற்றிலும் நியாயமானவை என்றே மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தது. அன்றைய காலகட்டத்தில் ஆயுத அமைப்பை வைத்திருந்தவர்கள்

1. புளொட்

2. ஈ.பி.டி.பி

3. ரொலோ

4. ஈ.பி.ஆர்.எல்.எப் (வரதர் அணி)

இதில் ரெலோ ஏற்கனவே புலிகள் ஆதரவை வெளிப்படையாகவே எடுத்திருந்ததுடன் அதன் புலிகளுக்கு எதிரான ஆயுத பயன்பாடும் இராணுவத்துடன் சேர்ந்தியங்குவதும் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது. அதே போல் வரதருக்கும் சுரேசுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் சுரேஸ் அணிக்கும் ஆயுத அமைப்பை கைவிட வேண்டி வந்தது (ராசிக் குறூப்புக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்த சுரேஸ் எப்ப மட்டக்களப்புக்கு போனாலும் ராசிக் குறூப்பின் முகாமில் தான் தங்கினார் என்பது கிழக்கைச் சேர்ந்த உங்களுக்கும் தெரிந்திருக்கும். ஆனால் வரதரின் பின்னால் ஏனைய ராசிக் உறுப்பினர்கள் சென்றதால் சுரேசுக்கு வேறு வழியிருக்கவில்லை) நீங்கள் சொன்ன மாதிரி புலிகளின் நிபந்தனை கீழ் வர முடியாதவர்கள் புளொட்டும், ஈபிடிபியினரும் தான். இதில் ஈபிடிபி யுடன் எந்தவிதமான பேச்சுக்கும் எவரும் பெரியளவில் முனையவில்லை. சித்தார்த்தன் ஆரம்பத்தில் சில உடன்பாட்டுடன் வரப்போவதாக வெளிக்காட்டிக் கொண்டாலும் ஆயுத அமைப்பை தொடர்ந்து வைத்திருக்கவும், இராணுவத்துடன் தொடர்ந்து இயங்க விரும்பியதாலும் இணைக்க முடியவில்லை

த.தே.கூ அமைப்பு உருவாக்கம் பற்றி நான் எழுதியதில் டி.சி யையும் நடேசனையும் மாத்திரம் குறிப்பிட்டது அவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்பதால் தான். இதில் சம்பந்தப் பட்ட ஏனையவர்களின் விபரமும் எனக்கு தெரிந்தும் இன்றைய காலகட்டத்தில் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான அக்கறையால் என் பதிலில் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் புலிகள் நிபந்தனை விதித்தனர் என்பது ஏதோ நான் அவர்களை குற்றம் சொல்வதற்காக சொல்லியவை என்பதைப்போலவும் உங்கள் பதிலில் குறிப்பிட்டு உள்ளீர்கள். அது தவறு. வேண்டுமென்றால் நிபந்தனை என்பதை கோரிக்கை என்று மாற்றுகின்றேன். ஆனால் அந்த இரண்டு கோரிக்கைகளும் த.தே.கூ எனும் அமைப்பு என்ன நோக்கத்திற்காக உருவானதோ அந்த நோக்கங்களிற்காக விடுக்கப்பட்டவையாகவே இருந்தன

தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒன்றிணைக்கும் முயற்சி சொற்ப காலத்தில் நடந்த விடயம் அல்ல. 1997ஆம் ஆண்டு தொடக்கம் 2002ஆம் ஆண்டுவரை நடைபெற்றது.

அது ஒரு நீண்டவரலாறு. ஏனைய கட்சிகளை விட அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி முரண்டு பிடித்து நிபந்தனைகளை விதித்த சம்பவங்கள் பல உண்டு.

த.தே.கூ இனை ஒன்றிணைக்கும் முயற்சி அல்ல. தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி என்று சொல்லுங்கள். இதனை முதலில் குமார் பொன்னம்பலம் அவர்களும் முயன்றது உங்களுக்கு நன்றாக நினைவில் இருப்பதால் தான் தமிழ் காங்கிரஸ் பற்றி போகின்ற போக்கில் 'நிபந்தனைகள்' விதித்து இருந்தனர் என்றும் சொல்லி விட்டு போகின்றீர்கள். இந்த முயற்சியில் பல பேராசிரியர்களும் கூட உங்களுடன் ஈடுபட்டு இருந்தனர் என்பதும் நான் அறிந்தவை தான்

இதில் இப்போது மிகப்பெரிய கவலை என்னவெனில் காலத்தின் தேவை கருதி மிகப்பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைப்பதற்கும் இப்பொழுது நாட்டில் இருக்கும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒரேஒரு அரசியல் தலைமையான தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைக்கும் வகையிலும் யாழ் இணையம் உட்பட சில இணையத்தளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வருவதை பார்க்கும் போது கவலையாக இருக்கிறதுx

விடுதலை வேண்டி நிற்கும் ஒரு இனம் உறுதியான அரசியல் தலைமையை கொண்டிருக்க வேண்டும். இப்போது தளத்தில் விடுதலைப்புலிகள் இல்லை. அங்கு இப்போது தமிழ் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை தரக்கூடிய ஒரே அரசியல் தலைமை தமிழ் தேசியக்கூட்டமைப்புத்தான். அவர்களையும் துரோகிகள் என்று கூறி சிதைத்து விட்டால் அந்த மக்களுடைய அரசியல் தலைமையாக யார் செயற்பட போகிறார்கள்.

.

இது என் பதிலுக்கு சொல்லப்படாதவையாக இருந்தாலும் இது தொடர்பாக சில கருத்துகளையும் கேள்விகளையும் முன்வைக்கின்றேன்

முதலாவது, அரசியல் ரீதியில் இயங்கும் த.தே.கூ. தன் மீதான விமர்சனங்களை விரும்பாமல் மீண்டும் கேளிவிகளுக்கு அப்பாற்பட்ட 'புனித' பார்வைக்குள் புகுந்து கொள்ள முடிகின்றதா? இணையங்கள், ஊடகங்கள் தம் மீது விமர்சனம் வைக்காது தாம் செய்கின்றதை முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று த.தே.கூ எதிர்பார்க்கின்றதா? அவர்கள் சனாதிபதித் தேர்தலில் எடுத்த முடிவை எவரும் கேள்வி கேட்க கூடாது என்ற பாசிச உணர்வுடனா இயங்குகின்றது இப்போது?

சரி இனி முக்கிய கேள்விகளுக்கு வருவோம்

1. த.தே.கூ ஆனது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை முன்னிறுத்தியும், எமக்காக போராட புறப்பட்டு ஈற்றில் சிறைக்குள் போன 11000 போராளிகளின் விடுதலையை (அதில் 8000 பெண் போராளிகள்) முக்கிய கோரிக்கையாகவும் கொண்டு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை சனாதிபதித் தேர்தலில் நிறுத்தி சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற்றுக் கொண்டு தெற்குக்கும், சர்வதேசத்திற்கும் தெளிவான ஒரு செய்தியையும் கருத்தையும் முன்வைப்பார்கள் என்று பலர் எதிர்பார்த்து கொண்டிருக்கும் போது ஏன் தமிழ் மக்களின் உரிமைகளை முற்றாக எதிர்த்து, ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த சரத்துக்கு ஆதரவு வழங்கியது?

2. மேற் சொன்ன சிறுபான்மையின வேட்பாளர் என்ற கோரிக்கையை த.தே.கூ முன் வைத்தால் முஸ்லிம் காங்கிரஸ் தன் ஆதரவைத் தரும் என்று அறிவித்து இருந்தது. அதே போல் மேல்மாகாண முன்னணியும் த.தே.கூ இடம் உறுதி கொடுத்திருந்தது. இலங்கையில் சிறுபான்மை இனமே இல்லை என்று மகிந்தவும், இலங்கை சிங்களவருக்கு சொந்தமான தேசம் என்று சரத்தும் அறைகூவல் விட்டு சிறுபான்மை தேசிய இனங்களின் அடையாளமே அழிந்து கொண்டிருக்கும் போது, அதனை மறுத்து சிறுபான்மை இனத்தின் உறுதியான குரலை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் மீண்டும் சிங்களத் தேசியவாததிற்குள் தமிழர்களை அடகு வைத்தது ஏன்?

3. எந்த ஒரு எழுத்து வடிவான உறுதியும் இல்லாமல் (அப்படி எழுத்து வடிவில் தந்தாலும் வென்ற பின் தூக்கி எறிவார்கள் என்பது வேறு விடயம்) வெறும் உதட்டளவிலான உறுதி மொழியை ஏற்று மீண்டும் மீண்டும் சிங்களத் தலைமைகளிடம் தமிழர் நலன்களை விட்டுக் கொடுப்பது ஏன்? எந்த நம்பிக்கையில் சரத் துக்கு தமிழ் மக்களை வாக்குப் போடச் சொல்லி வேண்டுகோள் விடுக்கின்றீர்கள்? மகிந்தவை அகற்றுவது தான் தமிழ் மக்கள் மூச்சு விடக்கூடிய சூழ்நிலையை தோற்றுவிக்கும் என்று என்ன அடிப்படையில் கூறுகின்றீர்கள்.

4. சிறையில் இருக்கும் போராளிகளின் விடுதலை (வழக்கு தாக்கல் செய்வது அல்ல) பற்றி எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல், அந்த போராளிகளை தந்த தமிழ் மக்களிடமே சிறையில் அடைக்கச் சொன்ன ஒருவருக்கு வாக்களிக்கச் சொல்வது ஏன்?

5. சம்பந்தர் ஐயா மற்றும் அவரது கட்சி அன்று தொடக்கம் இன்று வரை மாவட்ட சபை, மாவாட்ட ஒரு சபை, இலங்கை இந்திய ஒப்பந்தம் போன்ற தமிழர் பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும் விடயங்களுக்கே அன்றில் இருந்து இன்று வரை சாணக்கியம் என்ற பெயரில் ஆதரவு கொடுக்கின்றார். காலம் தோறும் இவர்கள் எடுத்த மோசமான முடிவுகளே தமிழர்களின் வாழ்வை சூறையாடியது. அதே போல் தான் சரத்துக்கான ஆதரவும் என்று சந்தேகித்து கேள்விகள் கேட்டால் விளக்கம் கொடுக்காமல், கேள்வியே கேட்க வேண்டாம் என்று புலம்புவது ஏன்?

டக்ளசையும் கருணாவையும் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளாக கொண்டுவருவதற்காகவா தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைக்க முற்படுகிறார்கள் என்ற கேள்வியே என்னிடம் எழுகிறது

எம் பயம் எல்லாம், இந்த டக்ளஸும் கருணாவையும் போல மகத்தான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட த.தே.கூ வும் ஆகக்கூடாதே என்பதுதான்.

இன்று வடக்கு கிழக்கில் இருக்கும் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரித்து வருவதையே அவதானிக்க முடியகிறது. இது ஆரோக்கியமானதல்ல.

வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் நிலைமைகளை யதார்த்தங்களை கருத்தில் கொண்டு மேற்குலக நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் செயற்படுவதே தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவக்கூடியதாக இருக்கும்.

உண்மை...ஆனால் வடக்கு கிழக்கில் இருக்கும் மக்களின் எண்ண ஓட்டங்கள் எத்தகையது என்பதை தெளிவாக எமக்கும் சர்வதேசத்திற்கும் காட்டக் கூடிய வாய்ப்பு வந்தும் அதனை உதறித் தள்ளிவிட்டு, தமிழ் மக்களை படுகொலை செய்த சரத்துக்கு வாக்களிக்க அதே தமிழ் மக்களை கேட்டு, அந்த மக்களுக்கு எந்த ஒரு உருப்படியான தெரிவையும் இல்லாமாக்கிய புண்ணியவான்கள் த.தே.கூத்தமைப்பை விட புலம்பெயர் மக்களின் எண்ண ஓட்டங்கள் சரியாகத் தானிருக்கின்றது

இப்படிக்கு:

பிழம்பு

(ஈழத்தில் பணியாற்றிய பத்திரிகையாளன்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களிட்ட இருக்கிற ஒரு கெட்ட பழக்கம் எல்லாம் விளக்கமாய் சொல்ல வேணும், தலையை குடுத்திட்டன் இழுத்து பாக்கிறன் :)

தமிழன் வேறு சோறும் சிங்களவன் வேறு சோறும் சாப்பிடுகிறார்களா...??? என்ன சொல்ல வாறிர்கள்...??? இலங்கையில் உற்பத்தியாகும் அரிசி சிங்களவனுக்கு எண்டும் தமிழனுக்கும் எண்டும் உற்பத்தியாகிறது இல்லை...

முதலிலை துரோகி எண்றால் என்ன வரைவிலக்கணம் எண்டதை சொல்லுங்கோ... பிறகு யார் துரோகி எண்டு பாக்கலாம்...

சோறு என நான் குறிப்பிட்டது அவன் அவனுக்கு அந்த அந்த இனம் செய்யும் உதவியை, பொன்னனுக்கு சிங்களம் கொடுக்கும் சம்பளத்துக்கும் உதவிக்கும் அவன் தனது இனத்துக்கு விசுவாசமாக இருகிறான், டக்கிக்கு தமிழ் இனம் சம்பளம் கொடுகவில்லை ஏன் என்றால் அவன் வேலையே செய்தது இல்லை :( போராளியாக உருவாக தமிழினம் செய்த உதவிக்கு தமிழருக்கு விசுவாசமாக இல்லை, கைகாசு செலவழித்து சுயமாக உருவானான் என்று சொல்லாதீர்கள். :o

துரோகி எனப்படுபவன் உதவிகளை பெற்று அந்த இனத்தின் நம்பிக்கையை சிதைப்பவன் உதாரனம்,எட்டப்பன்,காக்கை வன்னியன், மாத்தையா,அமிர்தலிங்கம் இவர்கள் வரலாற்றில் எப்போது துரோகிகள், டக்கிக்கும்,கருனாவிற்கும்,பிள்ளையானுக்கும் காலம் இருகிறது திருந்த,ஆயுத குழுவை கலைத்து அரசுடன் சேர்ந்து இயங்காமல், கூட்டமைப்பில் இணைந்து தமிழர் பலத்தை பலப்படுத்தலாம், நடகிற கதையா இது :lol: கடைசி பஸ் ஜனவரி 26 புறப்பட்டு விடும்.

அவனுக்கு ஆரம்பம் முதல்.. EPDP யின் ஆரம்பம் என்பது பிரேமதாசாகாலத்தில் அப்போதுதான் டக்கிளஸ் எண்றால் யார் எண்று தமிழர்களுக்கு தெரிய வந்தது... அப்போதில் இருந்து ஒருமித்த இலங்கை என்பதுதான் டக்கிளசின் வாதம்...

டக்கிளஸ் எப்போதும் தமிழ் மக்களுக்கு தனிநாடு வாங்கி தருவேன் எண்று கூட்டணியை போலவோ, கூட்டமைப்பினர் போலவோ காதிலை பூ சுற்றியது கிடையாது... அவன் எப்போது ஒரு கருத்தில் இருப்பவன்... அவன் தனி நாட்டுக்காக பாடுபடும் யாரையும் ஆதரிக்க வில்லை பலவிதமான இன்னல்களை கொடுக்கிறான்... கொலைகள் வரை செய்கிறான்... இதையேதான் சரத் பொன்சேகாவும் செய்கிறான்...

டக்கிளசை போலவே யாழ் தீவகமே சரத் பொன்சேகாவின் முதலாவது களமும்...

மாத்தையா, கொள்ளை கற்பளிப்பா...?? தலை சுத்துது...

பொண்களை வல்லுறவுக்கு டக்கிளசின் குழுக்கள் ஈடுபட்டது உண்மை... அதேபோல கடந்த ஐந்து வருடங்களில் சரத் பொன்சேகாவின் படைகளும் அவனது ஆதரவுடனே தமிழர் பெண்கள் வல்லுறவு நடை பெற்றது...! ஆக சரத் பொன்சேகாவை இப்ப மன்னிக்க முடியும்.. எண்டால் டக்க்கிளசை மன்னிப்பதில் என்ன பிரச்சினை...??

அட அட கற்பழித்தவனையே மன்னிக்க எனது சமூகம் தயாராகி விட்டது :( அது சரி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது எனது சகோதரியா என்ன?

கருணாவும் மாத்தையாவுக்கும் டக்கிளசுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிண்றது... தமிழ் மக்களுக்கு ஒருவிதமான நம்பிக்கையை கொடுத்து ஏமாற்றுவதை செய்தமையால் கருணாவும் மாத்தையாவும் துரோகிகள் ஆக இருக்க முடியும்... ஆனால் டக்கிளஸ் எப்போது என்ன நம்பிக்கையை கொடுத்தான்...???

அவன் எந்த விதமான நம்பிக்கைகளையும் கொடுப்பதாக இல்லாததால்தான் அவனை நிராகரிக்கிறோம் :lol::lol:

இதைத்தானே இண்று கூட்டமைப்பு செய்ய விளைந்து இருக்கிறது... இல்லை எண்று மறுக்க போகிறீர்களா...?? இல்லை கூட்டமைப்பு செய்வது இராச தந்திரம் எண்டு சொல்வீர்களா...?? அப்படியானால் டக்கிளஸ் செய்ததுக்கும் பேர் இராச தந்திரமாம் எண்டு தான் அவனது ஆதரவாளர்கள் சொல்லுகினம்...

யார் அவனுக்கு வாக்கு போட்ட 8 சனமுமோ :lol: அதுவும் கள்ள வாக்காகத்தன் இருக்கும், போட்டதுதான் போட்டாங்கள் ஒரு 50,100 போட்டு இருக்க கூடாதோ கள்ளவாக்கு போட்டவனுக்கு என்ன ஒரு ஆத்திரம் டக்கி மேல :lol:

இதில் இருந்து டக்கிளஸ் எப்போதும் வழுவியது இல்லை... ஒருவேளை இப்படியான ஒண்றில் சரத் பொன்சேகா வழுக்கி மூண்று மாதம் முதல்

மானில ஆட்சியில் இருந்து இணக்க(அடிமை) அரசியலுக்கு வந்தது வழுக்கல் இல்லாமல் சறுக்கலா? :lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற் காணப்படும் கருத்துக்கு வந்த ஒரு மின்னஞ்சலை இங்கு இணைக்கிறேன்:

டக்ளசும், சித்தார்த்தனும் எக்காரணம் கொண்டும் இணைக்கப்பட்டிருக்க மாட்டார்கள். த.தே.கூ இன் உருவாக்கத்திற்கும் கருத்துருவாக்கம் செய்து முன்னின்று உழைத்த டி.சிவராம், நடேசன் அண்ணா போன்றவர்களுக்கு புலிகளின் தரப்பில் கொடுக்கப்பட்ட முக்கிய நிபந்தனையாக இவை இருந்தன.

மேற்படி கருத்துக்கள் யாழ் கருத்துக்களத்தில் எழுதப்பட்டிருப்பதை பார்த்தேன். யாழ் இணைய கருத்துக்களத்தில் நான் அங்கத்தவராக இல்லாத காரணத்தால் இதை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.

இக்கால பகுதியில் நாட்டில் ஊடகவியலாளராகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவன் என்ற வகையிலும் சில குறிப்புக்களை தருவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட எமக்கு ( சிவராம் நடேசன் உட்பட) விடுதலைப்புலிகள் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை.

புளொட் அமைப்பையையும் இதில் இணைத்துக்கொள்வதற்காக நான்கு தடவைகள் புளொட் தலைவர் சித்தார்த்தன் உட்பட புளொட் அமைப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

அவர்களை இணைத்துக்கொள்ள முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் கூட்டமைப்பை உருவாக்கத்திற்காக முன்னின்று உழைத்த தமிழர் மறுமலர்ச்சிக்கழகம், மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியன ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய வற்றிடம் சில நிபந்தனைகளை விதித்திருந்தன.

1. தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்க கூடாது.

2. அவர்களிடம் இருக்கும் ஆயுதக்குழுவை கலைக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளுக்கு ஒரு கட்டத்தில் சித்தார்த்தன் இணங்கி வந்து தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து கொள்வதற்கு சம்மதித்த போதிலும் புளொட்டில் இருந்த சிலர் அதற்கு சம்மதிக்காததுடன் இராணுவத்தினருடன் தாம் தொடர்ந்து சேர்ந்து இயங்கப்போவதாக தெரிவித்திருந்தனர். இதனையடுத்தே புளொட் அமைப்பை தமிழ் தேசியக்கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ளும் முயற்சி கைவிடப்பட்டது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சி நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினரையும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் சந்தித்திருந்தது. ஆனால் அந்த சந்திப்புக்களில் ஒரு போதும் விடுதலைப்புலிகள் நிபந்தனைகளை விதிக்கவில்லை. இந்த முயற்சியில் ஈடுபட்ட சிவராம் நடேசன் ஆகியோருக்கு விடுதலைப்புலிகள் நிபந்தனை விதித்திருந்தார்கள் என்பது முற்றிலும் தவறானதாகும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒன்றிணைக்கும் முயற்சி சொற்ப காலத்தில் நடந்த விடயம் அல்ல. 1997ஆம் ஆண்டு தொடக்கம் 2002ஆம் ஆண்டுவரை நடைபெற்றது.

அது ஒரு நீண்டவரலாறு. ஏனைய கட்சிகளை விட அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி முரண்டு பிடித்து நிபந்தனைகளை விதித்த சம்பவங்கள் பல உண்டு.

தேவை ஏற்படின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தோற்றம் பற்றி பின்னர் விரிவாக எழுதுவேன்.

இதில் இப்போது மிகப்பெரிய கவலை என்னவெனில் காலத்தின் தேவை கருதி மிகப்பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைப்பதற்கும் இப்பொழுது நாட்டில் இருக்கும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒரேஒரு அரசியல் தலைமையான தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைக்கும் வகையிலும் யாழ் இணையம் உட்பட சில இணையத்தளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வருவதை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது.

விடுதலை வேண்டி நிற்கும் ஒரு இனம் உறுதியான அரசியல் தலைமையை கொண்டிருக்க வேண்டும். இப்போது தளத்தில் விடுதலைப்புலிகள் இல்லை. அங்கு இப்போது தமிழ் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை தரக்கூடிய ஒரே அரசியல் தலைமை தமிழ் தேசியக்கூட்டமைப்புத்தான். அவர்களையும் துரோகிகள் என்று கூறி சிதைத்து விட்டால் அந்த மக்களுடைய அரசியல் தலைமையாக யார் செயற்பட போகிறார்கள்.

டக்ளசையும் கருணாவையும் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளாக கொண்டுவருவதற்காகவா தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைக்க முற்படுகிறார்கள் என்ற கேள்வியே என்னிடம் எழுகிறது.

இன்று வடக்கு கிழக்கில் இருக்கும் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரித்து வருவதையே அவதானிக்க முடியகிறது. இது ஆரோக்கியமானதல்ல.

வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் நிலைமைகளை யதார்த்தங்களை கருத்தில் கொண்டு மேற்குலக நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் செயற்படுவதே தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவக்கூடியதாக இருக்கும்.

தயவு செய்து தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு அரசியல் தலைமையான தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைக்கின்ற வகையில் கருத்துக்களை உருவாக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இரா.துரைரத்தினம்

ஊடகவியலாளர்

இந்த கருத்தை பார்த்த பின்னராவது தமிழ் உணவாளர்கள் கூட்டமைப்பை பலப்படுத்த முன்வரவேண்டும், கூட்டமைப்பை சிதைக்கும் சிறுநரி கூட்டத்தின் வாதத்தை தவிடு பொடியாக்க முன்வரவேண்டும். கூட்டமைப்பை சிதைக்க நினைத்தவர்களை டெலோவில் இருந்து நீக்கி கூட்டமைப்பின் பலத்தை சிதையாது காத்த செல்வம் அடைக்கலநாதன் தமிழர் மத்தியில் உயர்ந்து நி்ற்கிறார். நீக்கபடவர் இந்தியாவிடம் விலை போனாரோ, அல்லது மகிந்தாவிடம் விலை போனாரோ அல்லது மிகவும் நல்லவரோ யாராக இருந்தாலும் தமிழரது நம்பிகை சக்தியை சிதைக்கும் எவரையும் தூக்கி எறிவோம்.

கருத்து பகிர்வுக்கு நன்றிகள்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை..

இங்கு நடப்பது கருத்து கணிப்பு இல்லை

கருத்து திணிப்பு

பாருங்கள் ஒருவர் மட்டுமே தொடர்ந்து திணிக்கின்றார்

மற்றவர்கள் எதிர்க்கின்றனர்

சிலர் கலைத்து கலைத்து திணிப்பின் முடிவில் ஆமா போடுகின்றனர்

சிலர் தெரிந்த முகம் என்பதற்க்காக இருண்டும் கெட்டான்களாகின்றனர்

அதைவிட டக்ளசை மேலானவர் என்று நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக அவர் நல்லவர் என்று மட்டும் கிட்டத்தட்ட ஆயிரம் தடவைகளுக்குமேல் எழுதப்பட்டுள்ளதுயார் கேட்டார் இதை இப்போ... இங்கே....?

எவர் எது எழுதினாலும் அவர்மேல் திணிப்பு தொடர்கிறது

இதில் வேதனை என்னவென்றால் எமது மட்டுனரும் ஆமாம் சாமியாகியதுதான்......

நான் முன்பு சில நல்லவிடயங்களை விவாதத்துக்கு கொண்டு வந்தேன்

அதற்கு மோகன் அண்ணா கடிதம் போட்டுஇருந்தார்

நீங்கள் நல்லதற்காகத்தான் இந்த கருத்தில் விவாதத்தை ஆரம்பிக்கின்றீர்கள் என்பது எனக்கு தெரிகிறது

ஆனால்

இன்றைய நிலையில் தப்பான அர்த்தங்களை மக்களின் மனங்களில்விதைக்க சிலர் இதை பயன்படுத்தக்கூடும்

எனவே அனுமதிக்கமுடியவில்லை

என எழுதியிருந்தார்

ஆனால் இன்று.....???

யாருக்கும் தமிழர் வாக்களிக்கலாம். இது தேவை கருதியது. இத் தேர்தலில் மட்டுமல்ல, எப்போதும் தமிழர் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியுடையதாகத் திகழவேண்டும்.

டக்ளசுக்கு, அல்லது வேறு எந்தத் தமிழ் போட்டியாளருக்கு வாக்களிப்பதால் எந்தப் பயனுமில்லை.

  • தொடங்கியவர்

இந்த கருத்தை பார்த்த பின்னராவது தமிழ் உணவாளர்கள் கூட்டமைப்பை பலப்படுத்த முன்வரவேண்டும், கூட்டமைப்பை சிதைக்கும் சிறுநரி கூட்டத்தின் வாதத்தை தவிடு பொடியாக்க முன்வரவேண்டும். கூட்டமைப்பை சிதைக்க நினைத்தவர்களை டெலோவில் இருந்து நீக்கி கூட்டமைப்பின் பலத்தை சிதையாது காத்த செல்வம் அடைக்கலநாதன் தமிழர் மத்தியில் உயர்ந்து நி்ற்கிறார். நீக்கபடவர் இந்தியாவிடம் விலை போனாரோ, அல்லது மகிந்தாவிடம் விலை போனாரோ அல்லது மிகவும் நல்லவரோ யாராக இருந்தாலும் தமிழரது நம்பிகை சக்தியை சிதைக்கும் எவரையும் தூக்கி எறிவோம்.

கருத்து பகிர்வுக்கு நன்றிகள்.

நீங்கள் எல்லாரையும் தூக்கி எறிவியள் எண்டது எல்லாருக்கும் தெரியும்...

தேர்தல் நடை பெறுவதுக்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன... பொறுத்து இருந்து பாருங்கள் தமிழ் மக்களின் உணர்வுகள் எப்படி இருக்க போகின்றன எண்று...!

என்னைப்பொறுத்தவரை..

இங்கு நடப்பது கருத்து கணிப்பு இல்லை

கருத்து திணிப்பு

பாருங்கள் ஒருவர் மட்டுமே தொடர்ந்து திணிக்கின்றார்

மற்றவர்கள் எதிர்க்கின்றனர்

சிலர் கலைத்து கலைத்து திணிப்பின் முடிவில் ஆமா போடுகின்றனர்

சிலர் தெரிந்த முகம் என்பதற்க்காக இருண்டும் கெட்டான்களாகின்றனர்

அதைவிட டக்ளசை மேலானவர் என்று நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக அவர் நல்லவர் என்று மட்டும் கிட்டத்தட்ட ஆயிரம் தடவைகளுக்குமேல் எழுதப்பட்டுள்ளதுயார் கேட்டார் இதை இப்போ... இங்கே....?

எவர் எது எழுதினாலும் அவர்மேல் திணிப்பு தொடர்கிறது

இதில் வேதனை என்னவென்றால் எமது மட்டுனரும் ஆமாம் சாமியாகியதுதான்......

நான் முன்பு சில நல்லவிடயங்களை விவாதத்துக்கு கொண்டு வந்தேன்

அதற்கு மோகன் அண்ணா கடிதம் போட்டுஇருந்தார்

நீங்கள் நல்லதற்காகத்தான் இந்த கருத்தில் விவாதத்தை ஆரம்பிக்கின்றீர்கள் என்பது எனக்கு தெரிகிறது

ஆனால்

இன்றைய நிலையில் தப்பான அர்த்தங்களை மக்களின் மனங்களில்விதைக்க சிலர் இதை பயன்படுத்தக்கூடும்

எனவே அனுமதிக்கமுடியவில்லை

என எழுதியிருந்தார்

ஆனால் இன்று.....???

தமிழ் தமிழர் தேசியம் எண்டு மூச்சுக்கு 300 தடவை சொல்லுறாங்கள்,

இப்போ Doggles க்கு வக்காலத்து வாங்குறாங்கள்.

என்ன கொடுமை விசுகு? :)

  • தொடங்கியவர்

தமிழ் தமிழர் தேசியம் எண்டு மூச்சுக்கு 300 தடவை சொல்லுறாங்கள்,

இப்போ Doggles க்கு வக்காலத்து வாங்குறாங்கள்.

என்ன கொடுமை விசுகு? :)

ஏன் தமிழர் தேசியம் எண்டு நீங்கள் கொலை செய்த சரத்துக்கு வக்காலத்து வாங்கும் போது வராத ரோசம் இப்ப மட்டும் வந்துட்டுது...???

ஓ... நீங்கள் இப்பவும் சிங்களவனின் அடிமை எண்டு சொல்லி கொள்வதில் தான் பெருமை படுகிறீர்களாக்கும்... தமிழன் ஒருவனுக்கு வாக்கு போடுவது உங்களின் இனப்பெருமையை அழித்து விடுமாக்கும்...

இதுக்கு காரணம் வேற ஒண்டும் இல்லை... உங்களுக்கை விழுது விட்டு இருக்கும் அடிமை தனம்... எங்களுக்கு தலைமை பொறுப்பிலை வர தமிழனுக்கு தகுதி இல்லை எண்டு ஆழ ஊறிவிட்டுது...

எனக்கு தெரிய சரத்துக்கும் டக்கிளசுக்கும் வித்தியாசம் இல்லை... அவன் நல்லவன் எண்டால் இவனும் நல்லவன்... அவன் கெட்டவன் எண்டால் இவனும் கெட்டவன்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தமிழர் தேசியம் எண்டு மூச்சுக்கு 300 தடவை சொல்லுறாங்கள்,

இப்போ Doggles க்கு வக்காலத்து வாங்குறாங்கள்.என்ன கொடுமை விசுகு? :)

நான் கனவிலகூட..

சரத்தை யோ

மற்றதையோ

நல்லவன் என்று சொல்லல

ஏன் கூட்டமைப்பைக்கூட நல்லவ என்று சொல்லல...

நீங்கள் யாராவது சொன்னனீர்களே...?

அல்லது

இதுவும்

திணிப்போ..?

..

இங்கு நடப்பது கருத்து கணிப்பு இல்லை

பாருங்கள் ஒருவர் மட்டுமே தொடர்ந்து திணிக்கின்றார்

மற்றவர்கள் எதிர்க்கின்றனர்

அதைவிட டக்ளசை மேலானவர் என்று நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக அவர் நல்லவர் என்று மட்டும் கிட்டத்தட்ட ஆயிரம் தடவைகளுக்குமேல் எழுதப்பட்டுள்ளதுயார் கேட்டார் இதை இப்போ... இங்கே....?

எவர் எது எழுதினாலும் அவர்மேல் திணிப்பு தொடர்கிறது

இதில் வேதனை என்னவென்றால் எமது மட்டுனரும் ஆமாம் சாமியாகியதுதான்......

நான் முன்பு சில நல்லவிடயங்களை விவாதத்துக்கு கொண்டு வந்தேன்

....இதுதான் இன்று ... நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, புலத்தில்!!! .....

  • கருத்துக்கள உறவுகள்

....இதுதான் இன்று ... நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, புலத்தில்!!! .....

நான் ஒரு சிறு துரும்புதான்

ஆனால் ஏதாவது செய்தாகவேண்டும்

ஒற்றுமை இல்லாமல் நாம் பட்டதை உணர்கிறேன்

இதுதான் இன்று எல்லாவற்றிற்கும் முதலில் செய்யவேண்டியது

அதேநேரம் இருப்பதையும் உடைத்து சிதைக்கும் வேலையில் எவர் ஈடுபட்டாலும் பெரும் கோபம் கொள்வேன்

எவராக இருந்தாலும் எதிர்ப்பேன்

எந்தவிலையும் கொடுப்பேன்

"நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே"

ஏன் தமிழர் தேசியம் எண்டு நீங்கள் கொலை செய்த சரத்துக்கு வக்காலத்து வாங்கும் போது வராத ரோசம் இப்ப மட்டும் வந்துட்டுது...???

ஓ... நீங்கள் இப்பவும் சிங்களவனின் அடிமை எண்டு சொல்லி கொள்வதில் தான் பெருமை படுகிறீர்களாக்கும்... தமிழன் ஒருவனுக்கு வாக்கு போடுவது உங்களின் இனப்பெருமையை அழித்து விடுமாக்கும்...

இதுக்கு காரணம் வேற ஒண்டும் இல்லை... உங்களுக்கை விழுது விட்டு இருக்கும் அடிமை தனம்... எங்களுக்கு தலைமை பொறுப்பிலை வர தமிழனுக்கு தகுதி இல்லை எண்டு ஆழ ஊறிவிட்டுது...

எனக்கு தெரிய சரத்துக்கும் டக்கிளசுக்கும் வித்தியாசம் இல்லை... அவன் நல்லவன் எண்டால் இவனும் நல்லவன்... அவன் கெட்டவன் எண்டால் இவனும் கெட்டவன்...

அண்ணோய்,

திரும்பவும் சொல்லுறேன், மகிந்த மீண்டும் வெல்லகூடாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

வாக்குகள் சிதறுவதால் மீண்டும் மகிந்த வரும் வாய்ப்பு இருக்கு,!

சரத் செய்த கொலைகளை இங்கு நான் நியாயபடுத்தவில்லை.

அவன் சிங்களவன் தமிழனை கொலை செய்தான்! ஆனால் உங்கள் Doggles

சொந்த இனத்தையே கடத்தல் கொலை கொள்ளை கற்பழித்தல் எத்தனை எத்தனை?

ஒருத்தன் மாமிசம் சாப்பிட்டான், ஒருத்தன் மானிடனை சாப்பிட்டான்.

இருவருமே மனிதர்தான், ஆனால் இருவருக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு நீங்கள் இருவரையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பதை ஜீரனிக்க முடியவில்லை!!! :)

அரை வேக்காட்டுத்தனமான கருத்துக் கணிப்பு முயற்சி.

தலை, போற போக்க பார்த்தால் உங்கள் வேட்டு யாருக்கு என்று தலைப்பை மாத்தனும் போல இருக்கிது

  • தொடங்கியவர்

தலை, போற போக்க பார்த்தால் உங்கள் வேட்டு யாருக்கு என்று தலைப்பை மாத்தனும் போல இருக்கிது

இதையும் தமிழ் தேசிய பிரச்சினை ஆக்கி போட்டினம்.... துரோகி பட்டம் வரைக்கும் வாங்கியாச்சு... பாப்பம் முடிவு என்ன எண்டு... என்னை வீட்டுக்கு பின்னாலை வச்சு எரிச்சால் போதும்... :(

Edited by தயா

நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்கிறது எண்டால் துரோகிப்பட்டம் வாங்கி சூடும் வாங்கி மண்டையை போடுகிறதுக்கு தயாராய் இருக்கவேணும் தலை. யாழில ஊர்ப்புதினத்தில புது திரி துவங்கிறது எண்டாலும் உப்பிடித்தான். எதையும் தாங்கும் இதயம் வேணும். உதாலதான் நான் இப்ப உதுக்கை ஒண்டும் கதைக்கவாறது இல்லை. நம்மோட இதயம் ரொம்ப வீக் ஆனது அப்பு. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***

சித்தன், on 17 January 2010 - 01:43 PM, said:

இல்லை என்று வாக்களித்து உள்ளேன், சிங்களவன் தனது இனத்துக்காக தமிழினத்தை அழிப்பதையும், தமிழன் தனது சுகபோக அதிகார வாழ்வுக்காக தமிழினத்தை அழிப்பதையும் ஒன்றாக கருத முடியாது, முதலாமவன் எதிரி, இரண்டாமவன் துரோகி, எதிரியுடன் போராடி என்றாவது வெல்லலாம், துரோகியுடன் என்றும் வெல்லமுடியாது. ஏனெனில் துரோகி மிக மிக ஆபத்தானவன் புலிகள் விட்ட தவறு கருணா என்னும் துரோகியை விட்டு வைத்தது, அது எவ்வளவு பெரிய இழப்பில் வந்து முடிந்து இருகிறது. துரோகிகள் அழிக்கப்படவேண்டியவர்கள், எதிரிகள் வெல்லபட வேண்டியவர்கள்.

அதாவது எதிரியை நம்பலாம் துரோகியை நம்பக்கூடாது எண்று.... தமிழர்கூட்டணியின் ஆதரவு பெற்ற சரத்தை நம்பலாம்...

பொன்னன் எப்போதும் பொன்னையன் இல்லை என்பதை நிரூபித்து இருக்கிறான்... இண்றய திகதியில் மகிந்தவை விடவும் ஒரு கொலைகாறன், இனவாதி இலங்கயில் இருக்கிறான் எண்றால் அது நீங்கள் எல்லாரும் வாக்களித்து அடுத்த இலங்கையின் ஜனாதிபதிகாக்க விரும்பும் சரத் பொன்சேகாவே...

அப்படி அவன் ஒருவனுக்கு நீங்கள் வாக்களிக்க முடியும் எண்றால் ஒண்று பட்ட இலங்கை எனும் பதத்துக்குள் இருந்து கொண்டு ஆரம்பம் முதல் செயற்படும் டக்கிளசும் துரோகி இல்லை.... அவனுக்கும் கொள்கை இருக்கிறது... அதனை அவன் எப்போதும் கருணா போண்றோ கூட்டமைப்பு போண்றோ அடிக்கடி மாற்றியது இல்லை... சரத் எனும் சிங்களவனை விட டக்கிளஸ் எனும் தமிழன் தகுதியானவர்தான்....

ஒருவேளை தமிழர்கள் யாரும் தமிழனுக்கு தலைவனாக இருக்க தகுதி இல்லை சிங்களவன் பறவாய் இல்லை என்பது போல உள்ளது உங்கள் வியாக்கியானம்...

நேற்று கூட்டமைப்புக்கு தமிழர் ஒரு தேசிய இனம்... தனியாட்ச்சிக்கு தேவையான தகுதிகளை கொண்டு இருந்தது... ஆனால் இண்று கூட்டாட்ச்சியும் இல்லை ஒற்றையாட்ச்சியின் கீழ் தீர்வு எண்று கொள்கை மாற்றம்... இதை வாக்களித்து நாடாளுமண்றத்துக்கு அனுப்பி வைத்த மக்களுக்கு சொல்கிறார்கள்... மக்களை அரசியல் குருடர்களாக நினைத்து இருக்கிறார்களாக்கும்...

:(:D:D

Edited by இணையவன்
*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

விளக்கமாக எழுதி இருக்கிறன் எண்டு நினைக்கிறன்..... இந்திய இராணுவத்தோடு நிண்டும், 2001 ம் ஆண்டு வரைக்கும்.. தமிழர்களை படுகொலை செய்த EPRLF, TELO ,கொலைகளை ஆதரித்த கூட்டணியை சேர்ந்த்தியாக கொண்ட கூட்டமைப்பும், கருணாவும், பிள்ளையானும் ஏன் டக்கிளசும் ஒரு இனமே...!

அதில் சிங்களவனான சரத்தை ஆதரிப்பதை விட தமிழனாக டக்கிளசை ஆதரிக்கலாம்... கொஞ்சம் புத்தியை பாவித்து படித்து பாரும்... உமது கோணத்தில் அது எழுதப்பட்டு இல்லை...

உங்களது சிங்களவனுக்கான அடிமை மூளை சிங்களவனை தெரிவு செய்ய துடிப்பது தான் வெளிப்படையாக தெரிகிறது...

மரியாதையாக எழுதினீரா? இல்லையா? என்ற பதில் உடனடியாக வேண்டும். :(

Edited by சித்தன்

இந்த நைப்பையும் ஒருக்கா பாருங்கோ... : http://www.groundviews.org/2010/01/20/surveys-with-conflicting-outcomes/

மன்னிக்கவும் என்னால் இதை தமிழுக்கு மொழி பெயர்க்க முடியவில்லை...

இதையும் ஒருக்கா நேரம் ஒதுக்கிப் பாருங்கோ....

நல்ல விஷயம்... இதுக்கு மொழிபெயர்ப்பு அவசியம் இல்லை. இது தமிழிலேயே உள்ளது:

http://www.pathivu.com/news/5163/54/.aspx

  • தொடங்கியவர்

மரியாதையாக எழுதினீரா? இல்லையா? என்ற பதில் உடனடியாக வேண்டும். :lol:

மரியாதை தெரியாதவரா நீர்....??

அங்கை என்ன மேதகு டக்கிளஸ் எண்றா எழுதி இருக்கு...??

  • கருத்துக்கள உறவுகள்

தயா ஏன் நீங்கள் இப்படி புரியல நீங்களா இப்படி எண்டு!!!!!

தாயகத்தில நாம் பட்ட இன்னல்களில். இருந்து கொண்டு சொல்லுறன் யாராக இருந்தாலும் ஆட்சிமாற்றம் தமிழனுக்கு ஒன்று தேவை

தலைவற்ற பாணில சொல்லுறன்................... எதிரியை மன்னிக்கலாம் ஆனால் துரோகியை மன்னிக்க முடியாது!!!

நீலவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.