Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு: நிழலி

Featured Replies

ஐயா செல்வராகவன் பாண்டியட்ட பரம்பரையில வந்தவரோ என்னமோ... நிழலியிண்ட, மிச்ச ஆக்களிண்ட விமர்சனங்களையும் பார்த்தன். உந்த முள்ளிவாய்க்காலை கொண்டுபோய் எப்பிடி உதுக்கை கொழுவிவிட்டு இருக்கிறீனம் எண்டுற விசயம் விளங்க இல்லை. அது ஐயா செல்வராகவனிண்ட கற்பனையோ இல்லாட்டிக்கு ரசிகப்பெருமக்களிண்ட கற்பனையோ.

  • Replies 65
  • Views 16.4k
  • Created
  • Last Reply

உந்த முள்ளிவாய்க்காலை கொண்டுபோய் எப்பிடி உதுக்கை கொழுவிவிட்டு இருக்கிறீனம

கதாநாயகன் புலி பச்சைகுத்தியிருக்கிறான்,சோழரும் புலிக்கொடி வைச்சிருக்கினம்,அப்ப இரண்டையும் கொழுவி விடுகிரதுதானே

எழுபது எண்பதுகளில் டமில் நாட்டிலிருந்து வந்த அத்தனை திரைப்படங்களும் ஓகோவென்றுதான் ஓடின--அதில் குப்பைகளும் அடங்கும்.அது பரவாயில்லை ஆனால் வெளி நாட்டில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்துகொண்டு இன்னும் இந்த மூன்றாம்தர சினிமாவை பார்க்கின்றோமே அதுதான் கவலைக்குரிய விடயம்.

நிழலியின் பார்வை, கருத்துக்கள் ஏற்புடையவை. பாடல் நன்றாக இருந்தது. எமது நாட்டு சூழ்நிலைக்கு எதேச்சையாக, ஓரளவு பொருந்துவதாக உள்ளது.

கடந்த 20 வருடங்களாக நான் படம் பார்ப்பது மிகமிகக் குறைவெனினும், இந்தப்படம் வித்தியாசமான முயற்சி.

தினமும் பலருடன் பழகி, பலரது பிரச்சனைகளையும் அறிந்து வருபவன் என்ற முறையில், பெரும்பாலான தமிழ் படங்கள் தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் பலரின், குறிப்பாக இளையவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதை பார்த்துள்ளேன், பார்த்து வருகிறேன்.

சினிமா மிகவும் சக்தி வாய்ந்த ஊடகம். மனதில் ஆழமாக கருத்துக்களை பதிக்கவல்லது. நல்ல கருத்துக்களை பதித்து வந்தால் நல்ல சமுதாயமும், தீய கருத்துக்களை பதித்து வந்தால் தீய சமுதாயமும், கீழ்த்தரமான கருத்துக்களால் கீழ்தர சமுதாயமும் உருவாகிவிடும்.

இன்றைய தமிழ் நாட்டு தமிழரின் உணர்வற்ற, கற்பனையில் வாழும் நிலைக்கு இந்த கீழ்த்தரமான தமிழ் சினிமா உலகம் தான் காரணம்.

தமிழ் சினிமா துறையை சேர்ந்த 95 % ஆனவர்கள் உருப்படியான ஒரு தலைப்பை - நேர்த்தியாக, செழுமையாக, தேவையற்ற பொய்மை இன்றி, திரிவு இன்றி, யதார்த்தபூர்வமாக அமைக்கத் தெரியாதவர்கள். விரச, காம - கவர்ச்சி காட்சிகள், பேச்சுகள், பாடல்கள் மூலம் மனிதனின் காம உணர்வை - போதையை தட்டியெழுப்பி, அவனை அதற்கு அடிமையாக்கி, அவனை சினிமாவால் கட்டிப்போட்டு பிழைப்பு நடத்துபவர்கள். இதன் மூலம் தமிழர்களின் வீர, நேர்மை ... உணர்வுகளையும், மனவுறுதியையும், நல்லொழுக்கத்தையும் சிதைத்து தமிழினத்தை பலமிழக்கச் செய்து வருகின்றனர்.

இதற்கு சினிமா துறைக்கு வரும் பெரும்பாலானவர்கள் கீழ்த்தரமான மனநிலையும், கீழ்த்தரமான பழக்கவழக்கங்களும் கொண்டிருப்பதுடன், காமுகர்களாகவும் இருப்பது தான். இவர்களின் பிடியிலிருந்து விடுபடும் வரை தமிழரின் எதிர்காலம் அதல பாதாளத்தை நோக்கியே செல்லும்.

ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் தேவையற்ற கீழ்தர கலப்புகளையும், தேவையற்ற கொடூரங்களையும் தவிர்த்திருந்தால் முழுமையாக பாராட்டியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி ஆயிரத்தில் ஒருவன் வாசித்தேன். பொங்கல் படங்கள் எல்லாம் அடிபட்டுவிட்டது. படங்கள் எதுவும் நல்ல ஆக்கம் இல்லை என்றார்கள். உங்கள் கடுரைக்குப்பின் ஆயிரத்தில் ஒருவன் பார்க்க உள்ளேன். எனினும் நன்றாக எடுக்கப் படவில்லை என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

  • தொடங்கியவர்

நிழலி ஆயிரத்தில் ஒருவன் வாசித்தேன். பொங்கல் படங்கள் எல்லாம் அடிபட்டுவிட்டது. படங்கள் எதுவும் நல்ல ஆக்கம் இல்லை என்றார்கள். உங்கள் கடுரைக்குப்பின் ஆயிரத்தில் ஒருவன் பார்க்க உள்ளேன். எனினும் நன்றாக எடுக்கப் படவில்லை என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

நன்றி அண்ணா...

படத்தின் இரண்டாம் பாகத்தில் பல இடங்களில் லொஜிக் சறுக்கல்களும், பார்த்திபன் பாத்திர வடிவமைப்பை குழறுபடியாக்கியதும், ஈற்றில் படத்தின் நாயகன் கார்த்திக்கு முற்பிறப்பி ஞாபகம் போன்ற ஒன்று வருவதும் பார்வையாளர்களை மிகவும் குழப்பியுள்ளது. இந்தியாவில் (தமிழகத்தில்) இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் 24 நிமிடங்கள் வெட்டப்பட்டதாக அறிந்தேன்...அதில் இரண்டாவது தடவை வரும் "நில்லாடிய நிலமெங்கே" பாடலும் 'பெம்மானே.." பாடலும் அடக்கம் என்றும் அறிந்தேன்

அநேகமாக இந்த வார இறுதியில் பலர் என்னை திட்டப்போகின்றார்கள் என்பது மட்டும் உறுதி (ஏற்கனவே ஒரு பெண் யாழ் வாசகி திட்டி ஒரு மெயில் தனிப்பட்ட ரீதியில் அனுப்பியிருந்தார் :rolleyes: )

அருமையான உணர்வுகளுக்குள் வரை போகும் ஒரு பாடல்...

http://agnicreation.com/A/Aayirathil%20Oruvan/Tamilmp3world.Com%20-%20Thaai%20Thindra%20Manne%20(Classical%20Version).mp3

பாடல் இணைப்பிற்கு நன்றி தயா

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி இன்று தான் எனக்கு இப் படத்தை பார்க்க கிடைத்தது ...நீங்கள் எதை வைத்து ஈழப் பிரச்சனைக்கும் சோழர்களுக்கும் முடிச்சு போட்டீர்கள் ...பார்த்திபன் முதல் தோன்றும் காட்சியில் அவ் மக்கள் அழுது கொண்டு கதைக்கும் போது நம்மவர்கள் கதைப்பது போல உள்ளதா...அல்லது அந்தப் பாட்டை வைத்தா...புலிச் சின்னத்தை பச்சை குத்தி இருப்பதாலா...

நீங்கள் சொல்கிற மாதிரி எங்கள் பிரச்சனைக்கும் இப் படத்திற்கும் சம்மந்தம் இருந்தால் ஜில் சொல்கின்ற மாதிரி செல்வராகவன் தமிழரை அவமானப்படுத்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும்...சில வேளை 3 வருடங்களின் படம் எடுக்க தொடங்கையில் வேறு மாதிரி எடுக்க நினைத்து முள்ளிவாய்க்கல் முடிவை பார்த்து தன்ட படத்தையும் இடை வேளைக்கு பின் சொதப்பி விட்டாரோ தெரியாது.திரும்ப தன் சொந்த நாட்டுக்கு போக வேண்டும் என நூற்றாண்டு காலமாக காத்திருக்கும் ஒரு சோழ இளவரசன் இப்படியா ஒரு பெண்ணீடம் ஏமாறுவார்...

ஈழப் பிரச்சனை இதனோடு சம்மந்தபடுத்தாமல் ஒரு தென்னிந்தியப் படம் என்ற வகையில் பார்க்கப் போனால் வித்தியாசமானதொரு படம்...ஹீரோயிசம் இல்லாத படம்...செல்வா தான் ஒரு சிறந்த டைரக்ரர் என நிருபித்து உள்ளார்...படத்தில் ஒரு காட்சியில் நடித்தவர்களில் இருந்து கதாநாயகன்,நாயகி அனைவரும் சிறந்த தேர்வு...ரீமாசென்னுக்கு சிறந்த நடிகைக்கான விருது கொடுக்க வேண்டும்.அந்த இடங்கள்,கலை பிரமிக்க வைக்கிறது.தியேட்டரில் படம் பார்த்த சில பேருக்கு படம் புரியவேயில்லை மற்றப் படங்கள் மாதிரி ஹீரோ பழி வாங்குவார் என நினைத்தார்களோ தெரியாது...

ஆனால் நிச்சயமாக பகுதி இரண்டு வரும்.

இன்று நான் பார்க்கையில் கார்த்திக்கு பழைய ஞாபகம் வாற காட்சி இல்லை வெட்டி விட்டார்கள் போல கிடக்குது...மொத்தத்தில் சிறந்த டைரக்டர் ஆன செல்வா வித்தியாசமாக படம் எடுக்க வெளிக்கிட்டு கொஞ்சம் சொதப்பிட்டார் என்பது என் கருத்து.

படம் முடிவில் கார்த்தி அந்த பிள்ளை தூக்கி வைத்திருக்கும் அந்த படத்தை பார்த்தால் நம்மட தலைவர் மாதிரி இல்லையா?

ஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு

நெல்லாடிய நிலமெங்கே

சொல்லாடிய அவையெங்கே

வில்லாடிய களமெங்கே

கல்லாடிய சிலையெங்கே

தாய் தின்ற மண்ணே

தாய் தின்ற மண்ணே

மு.கு

பி.கு 1:

இதனை இந்தப் பகுதியில் இணைத்தது அனைவரும் (ஆகக் குறைந்தது (ஈழத்) தமிழர்கள் ) கண்டிப்பாக பார்க்க தூண்ட வேண்டும் என்பதற்காகவே.

நான் திரையரங்கிற்கு செல்வதேயில்லை உங்களால் தூண்டப்பட்டுள்ளேன்.

சிறந்த அலசல் .. நானும் திரையரங்கு சென்று பார்க்கிறேன் ..

சிறந்த அலசல் .. நானும் திரையரங்கு சென்று பார்க்கிறேன் ..

போய் பாருங்கோ ஆனால் பார்த்துபோட்டு வந்து திட்டாதையுங்கோ :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படத்தை திரையரங்கில் சென்று பார்த்தேன்.படத்தில் வரும் இறுதிப்பகுதியில் வரும் சம்பவங்கள் ஈழப்போராட்டத்துடன் ஒத்துப் போகின்றன. அதாவது ஈழ இராணுவப் போராட்டம் தோல்வியடைந்த போது, தடுப்பு முகாம்களில் இருக்கும் பெண்களில் சிலர் கற்பளிக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் சிலர் கொல்லப்படுகிறார்கள். பலர் சித்திரவதை அனுபவிக்கிறார்கள். எனினும் எமது போராட்டம் முடியவில்லை.எமது போராட்டம் தொடரும். இதைப்போன்ற சம்பவங்கள் இப்படத்தில் வருகின்றன. கூட இருந்து குழிபறிக்கும் பாத்திரமும் இப்படத்தில் வருகிறது. செல்வராகவன் இப்படத்தை மூன்று வருடங்களாக இயக்கி வந்தார். முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு நடந்த சம்ப்வங்களைப் பார்த்து சிலவேளை தனது படத்திலும் தோல்வி அடைந்த இனத்துக்கு வெற்றி அடைந்த இனத்தினால் ஏற்படுத்தும் கொடுமைகளை இப்படத்தில் காண்பித்து இருக்கலாம். இப்படம் ஈழப்போராட்டம் சம்பந்தமான படமல்ல. சில சம்பவங்கள் ஈழப்போராட்டத்துடன் ஒத்துப்போகின்றன என்றே சொல்ல வேண்டும்.

விதுரன் 'செல்வராகவன் பெரிய தமிழ் இன உணர்வாளன் ' என்று இங்கே பதிந்திருக்கிறார். இப்படத்தில் 2ம் பாகத்தில் சோழர்களின் கதை வருகிறது. ஆங்கில வேற்று மொழிக்கலப்பின்றி , வெளியுலகத்தோடு தொடர்பு அற்ற வாழ்க்கையினை வாழ்பவர்களாக இப்படத்தில் இவர்கள் வருகிறார்கள். அதனால் தான் இப்படத்தில் செல்வராகவன் தூய தமிழிலில் சோழர்களின் உரையாடலை அமைத்திருக்கிறார். இதனை வைத்து செல்வராகவனைத் தமிழின உணர்வாளர் என்று சொல்ல முடியுமா?. இயக்குனர் தங்கர் பச்சான் தனது படங்களின் எழுத்துக்காட்சிகளின் போது ஆங்கிலக்கலப்பற்ற தமிழ் சொற்களையே பெரும்பாலும் உபயோகிப்பார். இயக்குனர் சீமானின் 'வாழ்த்துகள்' படத்திலும் பெரும்பாலும் ஆங்கிலக் கலப்பற்ற தமிழ் உரையாடல்களும், கதாபத்திரங்களுக்கு தூய தமிழ்ப் பெயர்களையும் சூட்டி இருந்தார். இலக்கணம் என்ற படம் சிலவருடங்களுக்கு முன்பு வந்தது. அப்படத்தில் முழுமையாக தமிழில் தான் உரையாடுவார்கள்.

இப்படத்தை திரையரங்கில் பார்க்கும் போது பல இந்தியத்தமிழர்களுக்கு 2ம் பகுதி கதை விளங்காமல் என்னையா பேசுறாங்கள் என்று தங்களுக்குள் கதைத்தது எனக்கு கேட்டது. ஆனால் ஈழத்தமிழர்கள் பலர் நகைச்சுவை உரையாடல்களை இரசித்துச் சிரித்தார்கள் (உ+ம் -லிங்க தரிசனம்). இந்தியர்களில் சிலர் , ஈழத்தமிழர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்று ஈழத்தமிழர்களைத் திரும்பிப்பார்த்தார்கள். 'சோழனின் பயணம் தொடரும்.' என்ற எழுத்துடன் படம் முடிகிறது. ஒரு இந்தியத்தமிழர் 'ஏன் சோழனின் பயணம் தொடரும் என்று போட்டிருக்கிறார்கள்' என்று கேட்க , இன்னொரு இந்தியத்தமிழர் செல்வராகன் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போகிறார்' என்று தங்களுக்குள் கதைத்ததும் எனக்குக் கேட்டது.தான் இழந்த நிலம் மீட்கும் வரை ஓயாது சோழர்கள் தொடர்வார்கள் என்பதை அவ்விந்தியர்களுக்கு விளங்கவில்லை.

இப்படத்தை திரையரங்கில் பார்த்தால் தான் இரசிக்க முடியும். இப்படம் ஆங்கிலப்படங்கள் போல சிறப்பாக எடுக்கப்பட்டதே என்று தான் சொல்ல வேண்டும். இறுதிக்காட்சிகளில் சோழர் இனம் தோற்கடிக்கப்படும் போது, முள்ளிவாய்க்காலில் எம்மினம் அழிக்கப்பட்டபோதும், அதன் பிறகும் ஏற்பட்ட சோகம் இப்படத்தைப் பார்க்கும் போது ஏற்பட்டது. நல்ல படம் பார்த்த திருப்பி ஏற்பட்டது.

தமிழர்களது வரலாற்றினதும் நிகழ்காலத்தினதும் அதிகாரத்தின் எதிர்மறைச் செயற்பாடுகளை கற்பனைக்குள் திணித்து பரவசமாக கட்சிப்படுத்தப்பட்டிருக்கினறது. முற்காலத்தில் சேரசோழ பாண்டியர்கள் தமக்குள் சண்டையிட்டு மூக்கறுத்து முலையறுத்து தலையறுத்துக் கிடந்த வரலாற்றின் நீட்சி பேசப்படுகின்றது. எவன் அதிகாரத்தில் இருந்தானோ அவனது வம்சாவழிகளும் அவனை அண்டிப்பிழைத்தவர்களும் இன்றயகாலத்திலும் அதிகாரத்துடன் சம்மந்தப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்களது அதிகாரவெறி என்றைக்கும் மாறாது என்பதையே இந்தக் கற்பனைகள் அதிகளவு பேசுகின்றது.

வறுமைப்பட்ட மக்கள் காட்டுவாசிகள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுகின்றனர். வரலாறு நீளவும் இது நடந்தேறுகின்றது. இன்றும் அதுவே இந்திய அதிகாரவர்க்கத்தால் அரங்கேறுகின்றது. பாண்டியன் சோழன் என்ற இரண்டு தமிழ்மன்னர்களுக்கிடையிலான பகை பழிதீர்த்தல் கொல்லுதல் அடிமைகளை ஆழுதல் போன்றன தொடர்கின்றது.

தமிழர்களுக்குள் நடக்கும் உள்கலவரங்கள் போர்கள் பழிதீர்த்தல் போன்றவைகளை வரலாறாகப்பேசும் கலிங்கத்துப்பரணிகள் புறநாநூறு அகநாநூறு என்ற சுவடுகள் வரிசையில் அதே விசயத்தை இக்கால பரவசத்துடன் இந்தப் படம் பேசுகின்றது. மாற்றம் எதுவும் இல்லை.

தமிழர்களுக்குள் நடந்த சண்டைகளுடன் நகரும் இந்த வரலாற்றில் வானுயர்ந்த திருத்தலங்கள் அணைக்கட்டுகள் பெருமளவு விவசாயம் நாகரீகம் மொழிவளர்ப்பு இலக்கியம் என சாதகமான பக்கங்களை சாதகமாக நாம் என்றும் ஆராய்பவர்கள் இல்லை. நம் பழிதீர்பதற்காகவே அதை ஆராய்கின்றோம். இந்தப் படத்தின் தொல்பொருள் ஆய்வு என்பது ஒரு பழிதீர்க்கும் பழைய பகைமைக்காக பயன்படுகின்றது. வரலாற்றை திருப்பி படித்து நாம் திருந்தும் சாதி இல்லை மாறாக எமது எதிர்மறைப்பக்கங்களை புதிப்பிற்கும் சாதிகளாக இருக்கின்றோம்.

சேர சோழ பாண்டியர்கள் மற்றும் பல குறுநில மன்னர்கள் இவர்களுக்கிடையிலான மோதல்கள் மாறாத பழி பகை வஞ்சம் இறுதியில் எவனிடமும் அரசும் இல்லை ஆட்சியும் இல்லை. கட்டிய திருத்தலங்கள் சொந்தமும் இல்லை. காவிரியில் தண்ணியும் இல்லை விவசாயமும் இல்லை. பலதை இது நினைவு படுத்துகின்றது. எமக்குள்ளும் முப்பது இயக்கங்கள் மோதல்கள் இறுதியில் கோமணமும் இல்லை. ஆனால் பகை இன்னும் இருக்கின்றது. போட்டுத் தள்ளவேண்டும் என்ற கணக்குக்குக்குள் சிலர் எப்பவும் இருக்கின்றார்கள்.

அதிகாரத்தின் வெறியாட்டம் ஈழத்து நிகழ்வுகளை நினைவுபடுத்துகின்றது. எமக்கு இந்த உணர்வு ஏற்படுவது இயல்பாக நடக்கின்றது.

http://www.youtube.com/watch?v=xtwxs6djzlc&feature=related

செல்வராகவன் தோண்டினால் என்ன எவர் தோண்டினால் என்ன பானையில் உள்ளது தான் அகப்பையில் வரும். சிலர் சோற்றுப்பானைக்குள் தோண்டி வேறு எதையோ எடுப்பார்கள் ஆனால் செல்வராகவன் அந்தக்காலத்து சோற்றுப் பானையில் இந்தக்காலத்திலும் சோற்றையே எடுத்திருக்கின்றார்.

http://www.youtube.com/watch?v=CUfuAFDczB0

இந்தப்படம் குறித்த எனது பார்வையிது.

Edited by sukan

  • தொடங்கியவர்

சுகனுடைய பார்வை இந்த திரைப்படத்தின் இன்னுமொரு கோணத்தினை அலசுகின்றது.

அதிகாரத்துக்கான போட்டியில் தன் இருப்பையும், வரலாற்றையும், மண்ணையும், உரிமைகளையும் இழக்கும் தமிழர்களின் வரலாற்றினை பேசும் கோணமும் அதே விதத்தில் ஈழத்தின் இன்றைய விடுதலைப் போராட்டமும் அழிந்து போனதை சமாந்திரமாக பார்க்கும் சுகனின் பார்வை வித்தியாசமாக ஆனால் யதார்த்த பூர்வமாக இருக்கின்றது. பகையும், பழியுமாகவே போகும் புறநானூற்று தமிழர்களின் வரலாற்றின் போக்கில்தான் நாம் இன்றும் பயணிப்பதை உணரும் போது எம் தோல்விகளின் வித்து நூற்றாண்டுகளிற்கு முன்னமே முளைவிட்டுள்ளது அதிர்ச்சியாக உறைக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

:lol: பி.கு 2:

திரைப் படத்தின் இறுதியில்இ கொல்லப்பட்ட தலைவனின் உடலை மிச்சமிருப்பவர்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அடக்கம் செய்வதை காணும் போதுஇ நெஞ்செங்கும் ஒரு குற்ற உணர்வு வந்து அடைக்கின்றது

நிழலி எல்லாம் சரிதான் பி.கு2 க்குரிய விளக்கத்தினை விலாவாரியாக விளக்கவும் தாங்கள் பி.கு.2 இன் மூலம் சொல்லவருவதுதான் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தில் எனக்கு சில சந்தேகங்கள்;

சோழர்கள் எல்லாரையும் ஏன் கறுப்பாக காட்டினார்கள் விதி விலக்கு மகராணியும் கார்த்தியும்...

பிரதாப்பொத்தன் என்ன ஆனார்...

ரீமாசென் செய்தி அனுப்பியவுடன் படைகள் வந்திறங்கியது எண்டால் ஏன் முதலே இவர்கள் விமானத்திலே தேடி இருக்கலாமே...பிரதாப் முதலே தனியே இவ்வளவு தடையை தாண்டி எவ்வாறு வந்தார்...

காட்டுக்குள் ஒளித்து வாழ்ந்த அந்த மக்களுக்கு வேண்டுமானால் நவீன போர் தந்திர முறை தெரியாமல் இருந்திருக்கலாம் ஆனால் கார்த்திக்கு தெரியும் அப்படி இருந்தும் எப்படி போருக்கு கூட்டி சென்றார்[பார்த்திபன் கூட இந்த போர்க்களத்திற்கு என்ன பெயர் எனக் கேட்பாரே]

கார்த்தியை சோழர்கள் பிடித்ததுமே சொல்லியிருக்கலாமே நான் தான் சோழ ஒற்றன் என ஏன் சொல்லவில்லை!

இப்படி பல ஓட்டைகள் இந்தப் பட‌த்தில்.

ஆனால் இந்தத் திரைப்படம் எத்தனை பேரைச் சேரும் என்பது கவலைக்குரிய கேள்வி. நான் இன்று பார்க்கும் போது திரையரங்கு எங்கும் சலிப்பான குரல்களையும், 'எப்படா படம் முடியும்' என்ற சில குரல்களையும் கேட்க முடிந்தது. வேட்டைக்காரன் போன்ற நாலாம்தர சினிமாக்களை வரவேற்கும் ஒரு சமூகத்தில் இத்தகைய படங்கள் வெற்றி பெற்றால், அதுவே பெரும் சாதனை

தமிழர் எதையுமே எளிதில் மறந்து விடுவர்....

இந்த படத்தில் எனக்கு சில சந்தேகங்கள்;

சோழர்கள் எல்லாரையும் ஏன் கறுப்பாக காட்டினார்கள் விதி விலக்கு மகராணியும் கார்த்தியும்...

பிரதாப்பொத்தன் என்ன ஆனார்...

ரீமாசென் செய்தி அனுப்பியவுடன் படைகள் வந்திறங்கியது எண்டால் ஏன் முதலே இவர்கள் விமானத்திலே தேடி இருக்கலாமே...பிரதாப் முதலே தனியே இவ்வளவு தடையை தாண்டி எவ்வாறு வந்தார்...

காட்டுக்குள் ஒளித்து வாழ்ந்த அந்த மக்களுக்கு வேண்டுமானால் நவீன போர் தந்திர முறை தெரியாமல் இருந்திருக்கலாம் ஆனால் கார்த்திக்கு தெரியும் அப்படி இருந்தும் எப்படி போருக்கு கூட்டி சென்றார்[பார்த்திபன் கூட இந்த போர்க்களத்திற்கு என்ன பெயர் எனக் கேட்பாரே]

கார்த்தியை சோழர்கள் பிடித்ததுமே சொல்லியிருக்கலாமே நான் தான் சோழ ஒற்றன் என ஏன் சொல்லவில்லை!

இப்படி பல ஓட்டைகள் இந்தப் பட‌த்தில்.

நல்லதை மட்டும் பாப்பமன்... ஏன் குறைகளை சுட்டிகாட்டுவான்?

போர்க்களத்திற்கு = போர்க்கலம் (weapon)

ரீமாசென் செய்தி அனுப்பியவுடன் படைகள் வந்திறங்கியது எண்டால் ஏன் முதலே இவர்கள் விமானத்திலே தேடி இருக்கலாமே...பிரதாப் முதலே தனியே இவ்வளவு தடையை தாண்டி எவ்வாறு வந்தார்...

எமது கதையும் இது தானே... உள்ளிருந்து செய்தி வந்தவுடன் தானே சிங்களத்துக்கு அடிக்கலாம் எண்ட துணிவு வந்தது...

கார்த்திக்கு தெரியும் அப்படி இருந்தும் எப்படி போருக்கு கூட்டி சென்றார்

போகாமல்? ஒளிந்து வாழ்வதோ?

ஒருவேளை இரசாயண ஆயுதம் பற்றி தலைவருக்கு பொட்டு கூறவில்லையோ?? :P

பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான கதைபோல் தான் உள்ளது. எனக்கென்னவோ படம் எடுக்க தொடங்கிய பின் அடிக்கடி மாற்றங்களை செய்திருக்கின்றார் போன்றொரு பிரமை,படத்தில் ஆங்காங்கே தொடர்பு விட்டது போல் ஒரு உணர்வு.படம் துவங்கும் போது சீட் நுனிக்கு கொண்டு போனதும் பின் இடைவேளை வரை அந்தபிரமாண்டம் தொடர்ந்ததும் உண்மை.கார்த்தி,ரீமா சென்,அண்ட்ரியா மூவரின் கதாபாத்திரமும் மிக அழகு,அவர்களும் நன்கு நடித்திருந்தார்கள்.கொடுத்து வைத்த கார்த்தி கொமெடி வேறு நன்றாக செய்திருந்தார்.இடைவேளை வந்து பார்திபனின் வரவுடன் மகா குழப்பம்.மேக் அப் தொடக்கம் வன்முறை வரை அதிகப்படுத்தி விட்டார் செல்வா. கடைசியில் மழையும் விட்ட பாடில்லை படமும் முடிந்த பாடில்லை என்றமாதிரி போய்விட்டது.

நல்ல ஒரு படத்தை தேவை இல்லாமல் சொதப்பி விட்டார்.

இப்படியான பிழைகள் பல தமிழ் படங்களில் உண்டு. கே ராம்,குணா,ஆளவந்தான் போன்றவை

பெரும்பாலும் ஆங்கில படங்களில் இந்த தவறுகள் நடப்பதில்லை மிக தெளிவாக படம் தொடங்கி முடியும்.அவதார்,கிளாடியேற்றர்,லாரென்ஸ் ஒf அரேபியா இப்படியே பல படங்கள் பட்டியலிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் ஈழப்போரட்டத்தை மையப்படுத்தி என்பது நம்பக் கூடியதாக இல்லை. அப்படியான கதை அர்த்தமும் கிடையாது.

ஆங்கிலப்படம் ஒன்றின் தழுவல் என்கின்றார்கள். ஆனால் அது எப்படி எடை போடுகின்றார்கள் என்பது புரியவில்லை. தமிழ் சினிமாவில் ஒருவன் மாதிரி என்னுமொருவன் இருப்பானாம். அதனால் குழப்பங்கள் ஏற்படுமாம். பிறகு உண்மை தெரியுமாம். சுபம் என்ற மாதிரியான கதைகளை எத்தனையைக் கண்டிருப்போம், எம்ஜிஆர் காலம் முதல் ஜுன்ஸ், வேல் என்று ஒரே அடிப்படைக் கதையை வைத்து ஏமாற்றுவது என்று தழுவல் இல்லை.... இதில் என்ன வித்தியாசம் கண்டார்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவரினதும் கருத்தை வாசித்தேன். நன்று....

இவர்(செல்வராகவன்) இப் படத்தை ஈழபோராட்டத்துடன் தொடர்புபடுத்தி எடுத்திருப்பதாக அதிகமானவர்கள் சொல்கின்றனர். ஆனாலும் அவர் ஈழபோராட்டத்தை பற்றி எடுப்பதாக இருப்பின் இன்னும் அட்புதமாக எடுத்திருக்க முடியும். அவர் தேவையில்லாமல் சேர்த்த காட்சிகளின் மூலம் படத்தை சிதைத்துவிட்டார். அவர் தன் படங்களில் ஆபாசமான காட்சிகள் வருவதை மிகவும் விரும்புகிறார் போலும். அதிகளவான காட்சிகள்....

ரீமாசென் பங்குகொள்ளும் காட்சிகள்..... சிறுநீர் கழிப்பது, பார்தீபனுடன் உறவுகொள்ள முயற்சிப்பது. அவ்வாறான காட்சிகள்.

சும்மா ஈழதமிழர் கதையை எடுத்தார் என்பதற்காக எல்லாவற்றையும் அங்கீகரிக்ககூடாது. அவர் எடுத்த முறைமை பிளை...

இருப்பினும் படத்தின் அனைத்து விதமான தொழில்நுட்பமும் சிறந்தது. ஒளிபதிவு, கணணி தொழில்நுட்பம், இசை அனைத்தும் அருமை.

இங்கே கருத்து தெரிவித்தவர்களில் பலர் நரமாமிசம், பசி, இரைச்சல்(பழைய ஊரில்) போன்றவற்றில் லோஜிக் போன்றவற்றை கதைக்கின்றனர். ஆனால் மற்றையவற்றில் நிராகரிக்கின்றனர்.

இது போன்ற படங்களை நம்மவர் பார்பதே அரிது. அதிலும் இதிலுள்ள ஆபாச காட்சிகளினால் நம்மவர் பார்பது அரிதாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பிரபல பதிவரும் வானொலி அறிவிப்பாளருமான லோசன் எழுதிய இத் திரைப் படத்திற்கான விமர்சனத்தின் ஒரு பகுதி..நன்றி லோசன்.

படத்தின் கடைசிக் கட்டங்களின் விஷயங்கள்,விளக்கங்களுக்கு வருகிறேன்..

ஈழப்போரின் கடைசிக் கட்டங்களில் நடந்த அவலங்களைத் தான் இயக்குனர் சோழர்கள் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் நடக்கும் அழிவுகளும் அழிப்புக்களும் காட்டப்படுவதாக ஒரு சாரார் சொல்லிவருகின்றனர்.

எனினும் இயக்குனர் செல்வராகவன் ஒரு பேட்டியில் ஈழப்போரின் இறுதிக்கட்டத்துக்கு முன்னதாகவே தான் இந்தக் காட்சிகளை எடுத்து முடித்துவிட்டதாகக் கூறியதை ஆதாரமாக வைத்துக் கொண்டு இல்லை இது தற்செயல் தான்.இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என்று இன்னும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

செல்வராகவன் பொய் சொல்கிறார் எனபதை விட சிக்கல்,சர்ச்சைகளை தவிர்த்துக்கொள்ள விரும்புகிறார் என்ற கோணத்தில் நோக்கலாமே..

எனினும் ஆழமாகவும்,அனுபவ ரீதியாகவும் பார்த்தால்...

இதை ஒருவகை உருவாக,எடுத்துக்காட்டு விமர்சனப் படமாக்கலாகவே நான் காண்கிறேன்.

புலிக்கொடி உடைய சோழர்கள் இலங்கையின் வடபால் தமிழராகக் காட்டப்பட்டால்.. மன்னர் யார் என்ற கேள்விக்கு இடமில்லை.

சோழர்கள் குகையில் அவலவாழ்வு வாழ்வது,மன்னரைப் பலர் விமர்சிக்கவும்,அவருடன் மோதிக்கொள்ளவும் முனைவது,தங்கள் பஞ்சம்,வறுமை பற்றி மன்னர் அறியாதுள்ளாரே எனப் புலம்புவது எல்லாம் உள்ளக விமர்சனங்கள்.

கடைசிக்கால ஈழப் போர் பற்றி எழுந்த விமர்சனங்கள் அனைவரும் அறிந்தவையே..

ரத்தம்,பலி,சித்திரவதைகள்,எதிரிகள்,ஒற்றர்கள் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்படல்,சொந்த மக்கள் காட்டும் பயத்துடன் கூடிய மரியாதை,க்ளாடியேட்டர் பாணியிலான வீர விளையாட்டுடன் கூடிய வதை என்று குரூரமாக காட்டப்படும் அனைத்துமே ஒருவிதமான மாற்றுக்கருத்துடனான உருவாக விமர்சனங்கள் என்றே எடுத்துக் கொள்ளவேண்டியதாயுள்ளது.

அது சோழர்களுக்கு என எடுத்துக் கொண்டாலும் சரி, ஈழப்பக்கம் என்றாலும் சரி,அடக்குமுறைகளுக்குள்ளான,ஒடுங்கிவாழும் ஒரு சமூகத்தின் வன்மம் கலந்த குரூர உணர்வுகள் என எடுத்துக்கொள்ளவேண்டியது தான்.

ராஜகுரு நோய்வாய்ப்பட்ட பின்னர் மன்னர் ஏமாந்துபோவது

சோழ மக்கள் விரைவில் தஞ்சை புறப்படுவதாக மன்னர் அறிவிக்கும் நேரத்தில், 'இத்தனை நாளாக என்னைப் பார்த்து நீங்களும்,உங்களைப் பார்த்து நானும் மிரண்டு கிடந்த காலம் போகட்டும்' என்னும் இடம்,

யுத்தத்தில் பாரம்பரிய முறையில் சோழர்களும், இந்தியப் படை துப்பாக்கிகள்,குண்டுகளோடு மோதுவதும்..

நீரில் விஷம் கலந்து சோழர்களை சாகடிப்பது.. (விஷ வாயு தாக்குதலை யாரும் மறந்திருக்க மாட்டோம் தானே)

படத்தில் வரும் இந்தியபடைகள் தாக்குதலுக்கு முன்பதாக ஆகாய மார்க்கமாக 'இந்தியாவிலிருந்து' மேலதிக துருப்புக்களை அழைப்பது..

இந்த இடங்கள் மூலமாக இயக்குனர் காட்டுவது என்ன?

சோழர் படை தோற்கடிக்கப்பட்டு மன்னர்,தூதுவானாக மாறிப்போன கார்த்தி, சோழ மக்கள்,பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அடிமைகளாக்கப்பட்டு துன்புறுத்தப்படும் இடத்தைப் பாருங்கள்.. இட அமைப்பு..

ஆறு,கடல்,தீவு சேர்ந்தது போன்ற ஒரு நில அமைப்பு..

முள்ளிவாய்க்கால்,நந்திக்கடல் ஞாபகம் யாருக்கும் வருமே..

பாலியல் வன்முறைகள்,கொத்துக் கொத்தாய் உயிர்ப்பலி நிகழ்தல்..

சோழ மன்னன்/தலைவன் அடித்துக் கொள்ளப்படும் இடத்தில் கூட,அவன் கடல் பக்கமாக நகர்ந்து சென்று மரிக்கும் அந்தக் கணங்கள்..கடலிலே தங்களை ஏற்றிக் செல்ல வரும் கப்பல்கள் அவன் மனக்கண்ணில் விரிகின்றன.. நம்ப வைக்கப்பட்டு எமாற்றப்பட்டோமே என்ற வலியுடன்,இயலாமையுடன் அவன் வீழ்ந்து மடிகின்றான்..

அப்போதும் அவன் தலையிலும்,கண்ணுக்கு மேலே நெற்றியிலும் இரத்தக் காயங்கள்.. ஏதோ ஒரு ஞாபகம் உங்களில் ஒரு சிலருக்காவது வரவில்லையா?

எனக்கு மிக வலித்தது..

இடைவேளைக்குப் பிறகு கையில் வைத்திருந்த மிக்சர்,கொரிப்பான்கள் கூட உண்ண முடியாமல் அருகில் வைத்துவிட்டேன்..

இறந்த தங்கள் மன்னன் உடல் தாங்கி வீரர்கள் அணியணியாய் நீருக்குள்ளே இறங்கும்போது பின்னணியில் ஒலிக்கும் பெம்மானே பாடலின் பொய் வா ஏந்தலே வரிகள் ஓலமாய் நெஞ்சுக்குள்ளே இன்னும் எதிரொலிக்கின்றன..

மன்னன் மகன் ஒருவனும், தூதுவனாய் வந்தவனும் அல்லது தளபதி எனக் கருதப்படக் கூடியவனும் மட்டும் தப்புவதாக இயக்குனர் காட்டுவது நம்பிக்கைக்கான ஒரு தூண்டுதாலா?

சோழன் பயணம் தொடரும் என்பது பலரின் மனதில் இன்னும் இருக்கும் விழுந்துவிடா நம்பிக்கை.அதை ஏமாற்றிவிடாமல் இருக்க செல்வா முனைந்துள்ளாரா?

மன்னன் முடிந்தாலும் மண்ணுக்கான தேடல் முடியா என்பதா அவர் சொல்லும் கருத்து?

இது உண்மையிலேயே ஈழத்துப் போரின் மீதான இயக்குனரின் வாசிப்பாக இருக்குமேயானால்,அவர் இத்தனை விஷயங்களை ஆழமாகப் பார்க்க அவருடன் இணைந்து பணியாற்றிய ஒருவரோ சிலரோ இந்த விஷயங்களில் ஆழ்ந்த அனுபவம்,அறிவு உடையவராக இருந்திருக்க வேண்டும்.

இயக்குனர் இதை வர்த்தக நோக்கோடு கபடமாக அணுகவில்லை.அப்படி அவர் விரும்பியிருந்தால் முழு மசாலாக் குப்பையாக்கி,மன்னரைக் கூட உயிரோடு தப்ப விட்டோ,சோழ நாட்டை வென்றெடுத்து புலிக்கொடி பறக்கிறது எனக் காட்டி உசுப்பேற்றி இருக்கலாம்.

எனவே செல்வராகவனின் நேர்மை பிடித்திருக்கிறது.

செல்வராகவனின் இந்த ஆயிரத்தில் ஒருவன் ஒரு புதிய முயற்சிக்கான ஒரு சில முதல் அடிகளில் ஒன்று.இதை கொஞ்சமாவது நாம் ஊக்குவித்தாலே அடுத்தகட்ட நல்ல முயற்சிகள் வெளிவரும்.

தயாரிப்பாளர்களும் ஒரே மாதிரியான கலவைக்குள் கிடந்தது உழலாமல் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க முன்வருவர்.

குறைகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து நிறைகளை நிறைவாகப் பார்க்குமிடத்தில் எனக்கு ஆயிரத்தில் ஒருவன் சொல்லவந்த விடயம் பிடித்திருக்கிறது.

புதுப்பேட்டைக்கு அடுத்தபடியாக செல்வராகவனை ஓரளவாவது இயக்குனராக வியந்தேன்.

  • தொடங்கியவர்

லோசன்: இந்த விடயத்தில் 'நீங்கள் என்னைப் போல் ஒருவன் !!'

(இன்றும் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் பால்ய (பாலியல் அல்ல) நண்பன் தொலைபேசி எடுத்து "நீ சொன்ன மாதிரி என்னால் ஈழப் போருடன் கற்பனை பண்ண முடியலைடா" என்று சொல்லி வெறுபேத்தினான் :lol: )

இணைப்புக்கு நன்றி ரதி. விமர்சனம் உங்கள் ரசனையுடன் வேறுபடினும், இதனை இணைத்த உங்கள் நேர்மையை காண சந்தோசம் வருகின்றது

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவரினதும் கருத்தை வாசித்தேன். நன்று....

இவர்(செல்வராகவன்) இப் படத்தை ஈழபோராட்டத்துடன் தொடர்புபடுத்தி எடுத்திருப்பதாக அதிகமானவர்கள் சொல்கின்றனர். ஆனாலும் அவர் ஈழபோராட்டத்தை பற்றி எடுப்பதாக இருப்பின் இன்னும் அட்புதமாக எடுத்திருக்க முடியும். அவர் தேவையில்லாமல் சேர்த்த காட்சிகளின் மூலம் படத்தை சிதைத்துவிட்டார். அவர் தன் படங்களில் ஆபாசமான காட்சிகள் வருவதை மிகவும் விரும்புகிறார் போலும். அதிகளவான காட்சிகள்....

ரீமாசென் பங்குகொள்ளும் காட்சிகள்..... சிறுநீர் கழிப்பது, பார்தீபனுடன் உறவுகொள்ள முயற்சிப்பது. அவ்வாறான காட்சிகள்.

சும்மா ஈழதமிழர் கதையை எடுத்தார் என்பதற்காக எல்லாவற்றையும் அங்கீகரிக்ககூடாது. அவர் எடுத்த முறைமை பிளை...

இருப்பினும் படத்தின் அனைத்து விதமான தொழில்நுட்பமும் சிறந்தது. ஒளிபதிவு, கணணி தொழில்நுட்பம், இசை அனைத்தும் அருமை.

இங்கே கருத்து தெரிவித்தவர்களில் பலர் நரமாமிசம், பசி, இரைச்சல்(பழைய ஊரில்) போன்றவற்றில் லோஜிக் போன்றவற்றை கதைக்கின்றனர். ஆனால் மற்றையவற்றில் நிராகரிக்கின்றனர்.

இது போன்ற படங்களை நம்மவர் பார்பதே அரிது. அதிலும் இதிலுள்ள ஆபாச காட்சிகளினால் நம்மவர் பார்பது அரிதாகவே இருக்கும்.

உங்கள் கருத்து போன்றது தான் என்னதும். இப்படத்தை எத்தனையோ பேர் சின்னப்பிள்ளைக்ளோடு பார்க்கிறார்கள். அவர்களுக்கு எத்தகைய பாதிப்பு வருகிறது என்பதைப்பற்றி ஒருவரும் அக்கறைப்படுவதாக தெரியவில்லை. ஆங்கில திரையரங்கிலும் சிறுவர்களை அனுமதிக்கிறார்கள். ஆனால் இது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான படம்.

எல்லோரும் காசை தான் பார்க்கிறார்கள். ஒரு நேர்மையான ஊடகமாக இருந்தால் இந்தப்படம் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதை தெளிவாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். யார் அப்படிச்செய்கிறார்கள்?

நம்மை பற்றிய அக்கறை உடைய ஒரு இயக்கம் இருந்தால் இப்படத்தை வன்மையாக எதிர்க்கும். கண்டன அறிக்கையும் வெளிவரும்.

அஞ்ஞாதே படத்தில் ஆபாசக்காட்சிகள் நிறைய காட்டி இருந்திருக்கலாம். எடுத்த கதையும் வயது வந்தவர்களுக்குறியது. ஆனால் மிக கன்னியமாய் அந்தப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதை மட்டும் பாப்பமன்... ஏன் குறைகளை சுட்டிகாட்டுவான்?

நம்மவர் படம் எடுத்தால் நம்மவர்கள் பார்க்க விரும்பிகிறார்கள் இல்லை. பார்த்தாலும் பிழைகளைமட்டுமே பார்ப்பார்கள். எனக்கு கோபம் தான் வருகிறது. தென்னிந்திய படங்கள் சரியில்லாமல் இருந்தாலோ பிழைகள் இருந்தாலோ கவலைப்படாமல் தொடர்ந்தும் படம் பார்க்கும் நாம். 1999 போன்ற படங்களை பார்க்காதது ஏன்?! விஜயோ விக்ரமோ ஆரம்பத்தில் பல தோல்விப்படத்தில் நடித்தார்கள். ஆனால் நாங்கள் தொடர்ந்து சளைக்காமல் அவர்களை ஊக்கிவித்து படங்களை பார்த்தோம். கொண்டாடுகிறேம். நமது கலைஜர்களுக்கும் அதையேன் செய்யிரம் இல்லை?

தமிழ் பிழைகளுக்கு மன்னிக்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.