Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவை தண்டிப்பதானால் அவர் மீள வெற்றிபெற வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவை தண்டிப்பதானால்

அவர் மீள வெற்றிபெற வேண்டும்

கோபி in Ponguthamil.com

"உங்களை தமிழர்களின் நிலையில் வைத்துக்கொண்டு யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுங்கள்: உங்கள் மீதும் உங்களது குடும்பத்தினர் மீதும் தாக்குதல்களை நடாத்துமாறு உத்தரவிட்ட அரச தலைவருக்கா, அல்லது அந்த உத்தரவுகளை நிறைவேற்றிய இராணுவத்தை, தலைமை தாங்கி நடாத்தியவருக்கா வாக்களிக்கப் போகிறீர்கள்?"

இம்மாதம் 26ம் திகதி சிறிலங்காவில் நடைபெறவிருக்கிற அதிபர் தேர்தல் தொடர்பாக நியுயோர்க் ரைம்ஸ பத்திரிகையில், ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக வேந்தரும், சர்வதேச பிணக்குகள் தொடர்பான சிந்தனை மையத்தின் இணைத்தலைவரும், கொங்கொங் நாட்டின் ஆளுனராக முன்பு கடமையாற்றியவருமான கிறிஸ் பற்றன் எழுதிய கட்டுரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். உண்மையில் ஈழத்தமிழர்கள் அனைவரும் தங்களுக்குள் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வியையே அவரும் முன்வைத்துள்ளார்.

யுத்தத்தில் தமிழர்தரப்பை முழுமையாக தோற்கடித்தாகக்கூறி வெற்றி விழாக்களை நடாத்திய மகிந்த இராஜபக்ச, காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள நினைத்து, தனது ஆட்சிக்காலம் முடிவடைய இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில், தேர்தலை நடாத்த முன்வந்தபோது அவர் தனித்து சிங்கள வாக்காளர்களைப் பற்றியே சிந்தித்திருப்பார்.

ஏனெனில் எதிர்த்துப் போட்டியிட்டு வெல்லும் ஆளுமை கொண்ட இன்னொரு சிங்கள அரசியல்வாதி இல்லாத நிலையில், சிங்கள மக்களின் நேசிப்புக்குரியவராக, அவர்களால் துட்டகைமுனு மன்னனுக்கு நிகராக வைத்துப் போற்றப்பட்ட அவருக்கு, தேர்தலில் வெல்ல சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளே போதுமானதாக இருந்திருக்கும்.

ஆனால் எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக சரத் பொன்சேகா தேர்தல் களத்தில் இறங்கியதுடன் நிலமை முற்றாகவே மாற்றமடைய ஆரம்பித்தது. எதுவித அரசியல் அனுபவமும் இல்லாத, மக்கள் மத்தியில் ஓர் இராணுவ அதிகாரியாக மட்டும் அறியப்பட்ட பொன்சேகாவால் இராஜபக்சவை எவ்வாறு எதிர்கொள்ள முடிகிறது? அதற்கான காரணிகளை அறிந்து கொண்டால் சிறிலங்கா தொடர்பான புவிசார் அரசியலை பெருமளவு விளங்கிக் கொள்ளமுடியும்.

யுத்தம் தீவீரமடைந்து, தமிழ்மக்கள் பெரும் அழிவுகளை எதிர்கொண்டபோது, மேற்குலகம் வெறும் கண்டன அறிக்கைகளுடன் நிறுத்திக் கொண்டது. இந்நிலையானது மாறிவரும் உலக ஒழுங்கில், மேற்குலகத்தின் ஆதிக்கம் தேய்வடைந்து செல்வதனைக் காட்டுவதாக சில அரசியல் பண்டிதர்கள் அப்போது விளக்கமளித்தார்கள்.

ஆசியப் பிராந்தியத்தில், புதிய பொருளாதார சக்திகளான, வல்லாதிக்க நாடுகளை மீறி மேற்குலகம் அங்கு வாலாட்ட முடியாது எனவும் அவர்கள் அடித்துக் கூறினார்கள். ஆனால், யுத்தம் முடிவடைந்த பின்னர் நிலமை மாற்றமடைய ஆரம்பித்தது. படிப்படியாக மேற்குலகின், குறிப்பாக அமெரிக்காவின் பிடிக்குள் சிறிலங்கா சென்றுகொண்டிருக்கிறது.

சர்வதேச நாணய நிதியம் கேட்டதுக்கு அதிகமாக கடன் வழங்கியதும், ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தியதும், போர்க் குற்றங்கள் பற்றி ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளும் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெற்று வருகின்றன.

அதன் தொடர்ச்சியாகவே பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தையும் எடுத்துக் கொள்ளவேண்டும். சரத் பொன்சேகா யாரால் களமிறக்கப்பட்டுள்ளார் என்பது இப்போது சிறிலங்காவின் அரசியல் விவகாரங்களில் அக்கறை கொண்ட அனைவருக்கும் புரிந்திருக்கும். இராஜபக்ச சகோதரர்களுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் சற்று அதிகமாகவே தெரிந்திருக்கும். வேண்டுமானால், இவ்விடயத்தில் பிராந்திய வல்லரசுகள் குறிப்பாக இந்தியா, ஏன் மேற்குலகை அனுசரித்துப் போகிறது என்பது சிலருக்கு வியப்பைத் தரலாம்.

யுத்தம் முன்னெடுக்கப்பட்ட காலத்தில், மகிந்த இராஜபக்சவினால், முன்னெப்பொழுதும் இல்லாதளவுக்கு அதிகாரமும், ஊடகங்களில் முக்கியத்துவமும் வழங்கப்பட்ட அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அரசியலில் இறங்கும் எண்ணம் முன்னரே இருந்திருக்கலாம்.

ஆனால் அதிபர் தேர்தலில் குதிக்கும் எண்ணம் அவருக்கு இருந்திருக்க நியாயமில்லை. ஆனால் யுத்த வெற்றியால் இனவாதச் சகதிக்குள் நன்கு மூழ்கியிருக்கிற சிங்கள வாக்காளர்களைக் கவரக்கூடிய ஒருவராக அவர் இருக்கிறார் என்பதை யாரும் இலகுவில் கணிப்பிட்டிருக்க முடியும். மறுவளமாகக் குறிப்பிட்டால், சிங்கள மக்கள் மத்தியில் கடுங்கோட்பாளர்களின் கையோங்கியுள்ள நிலையில், மகிந்த இராஜபக்சவை பதவியிலிருந்து இறக்க சரத் பொன்சேகாவை விட்டால் பொருத்தமான வேறொருவர் கிடைத்திருக்க மாட்டார்.

அமெரிக்கா வருடாவருடம் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரிகளுக்கு சீட்டிழுப்பு மூலம் வதிவிடவுரிமை வழங்கும் திட்டத்தின் (Green card lottery) வழியாகவே சரத் பொன்சேகா அமெரிக்க வதிவிடவுரிமையை பெற்றுக்கொண்டார். இதிலிருந்து அவரது “தேசப்பற்றினை” நன்கு விளங்கிக் கொள்ளலாம் என்பதனால் அவரை மகிந்த முகாமிலிருந்து பிரித்தெடுப்பது ஒன்றும் சிரமமான பணியாக இருந்திருக்க முடியாது.

சரத்பொன்சேகாவை எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக ஆக்கும் விடயத்தில், மேற்குலகத்தின் சொற்படி கேட்கும் ரணிலையும், ஏற்கனவே மேற்கத்தைய அரசுகளின் அனுசரணையுடன் இயங்கும் மனோ கணேசனையும், ரவூப் ஹக்கிமையும் இணங்க வைப்பதில் பிரச்சனை இருந்திருக்காது. அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு முகத்தைக் காட்டியபடியே அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் பேச்சுகளை நடாத்தவோ, அவர்களது விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளவோ எதுவித தயக்கமும் காட்டாத ஜேவிபியினை இணங்க வைப்பதிலும் எதுவித சிக்கலும் இருந்திருக்காது.

அடுத்து இருப்பது தமிழர் தரப்பு. டக்ளஸ், ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், சிறிதரன், பிள்ளையான் போன்றோரின் வாக்குப்பலம் பற்றி அனைவரும் அறிந்திருப்பதால், தமிழ்த் தேசிக் கூட்டமைப்பினை இணைத்துக் கொள்வதில் மட்டுமே அக்கறை காட்டப்பட்டது. சூரிக், வியன்னா, கொழும்பு என்று நடந்த சந்திப்புகளில் அவர்கள் இணங்க வைக்கப்பட்டார்கள். மேற்குலகுடன் இணைந்து செயற்படுவதில் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடுகள் இல்லை எனினும், அவர்களுக்கு இரண்டு வித தயக்கங்கள் இருந்தன.

ஒன்று இந்தியா இந்த விடயத்தில் ஒத்துவருமா என்பது மற்றையது ஒரு போர்க் குற்றவாளி என தமிழ் மக்கள் கருதுகிற சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு அவர்களை எவ்வாறு வேண்டுவது. இந்தியா இவ்விடயத்தில் மேற்குலகை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பது கூட்டமைப்பிற்கு ஆறுதலைத் தரும் ஒரு விடயமாக இருந்தது. இரண்டாவது விடயம் சிக்கலான ஒன்றாக இருப்பினும், “ஆட்சி மாற்றம்” அவசியம் என்பதன் அடிப்படையில் தமிழ் மக்களை இணங்க வைக்க முடியும் என கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது.

தமிழ் மக்களில், மேற்குலகிற்கு ஆதரவாகச் செயற்படும் கல்வியாளர்கள், மதகுருமார், ஊடகவியலாளர்கள் ஆகியோர் தமிழ் மக்கள் தவறியும் இம்முறை தேர்தலைப் புறக்கணிக்கக்கூடாது என வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது, அவர்கள் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு வேண்டிக்கொள்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் கடந்தமுறை தேர்தலைப் புறக்கணித்ததால்தான் மகிந்தவால் வெல்ல முடிந்தது என்று நோகிறவர்கள், இந்தத் தடவை அந்தத் தவறைச் செய்ய வேண்டாம் என வேண்டுவதன் பொருள் வேறு என்னவாக இருக்கும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலை இதுதான். மிகவும் பலவீனமான நிலையில், மேற்குலகின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். இதில் இந்தியாவே இணங்கிப் போகையில், கூட்டமைப்புக்கு சாக்குச் சொல்வதற்கு எதுவுமில்லை.

ஆதலால்தான் முதலில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்துடன் இருந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணங்கிப் போக வேண்டியிருந்தது. தமிழ் ஊடகங்களுக்கும் இதே நிலமைதான் ஏற்பட்டுள்ளது. கொழும்புக்கு பயணம் மேற்கொண்டிருந்த றொபர்ட் ஓ பிளேக், யாழ்பாணத்திலிருந்து வெளியாகும் “உதயன்” பத்திரிகையின் ஆசிரியர் வித்தியாதரனை அழைத்து பேசிக்கொண்டார் என்ற தகவலை இவற்றுடன் தொடர்புபடுத்திக் கொள்ளலாம்.

இந்நிலையில் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிப்பதன் மூலம் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும், மகிந்தவின் ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது. இங்கு “ஆட்சி மாற்றம்” என்பது வெற்று எதிர்பார்ப்புகளை கொண்ட ஒரு சொற் பிரயோகமாக அமைகிறதே தவிர, அதற்கு சாதகமாக வைத்துப் பார்க்கக்கூடிய காத்திரமான கொள்கைத் திட்டம் எதுவும் சரத் பொன்சேகாவிடமிருந்தோ, எதிர்க்கட்சிகளின் கூட்டிலிருந்தோ வெளிவரவில்லை என்பதனை நாம் அவதானிக்க வேண்டும்.

அதே சமயம், ஆட்சி மாற்றத்தைக் காரணங்காட்டி சிறிலங்கா அரசு செய்த போர்க்குற்றங்கள் மறைக்கப்பட வாய்ப்புகள் உண்டு. மேற்குலகம் தற்போது சிறிலங்கா மீது பிரயோகித்து வரும் அழுத்தங்கள் தணிக்கப்படும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் அதிகளவு உலகமக்களால் அந்நாடு வெறுக்கப்பட காரணமாகவிருந்தவர் எனக் கருதப்படும் ஜோர்ஜ் டப்ள்யூ புஷ் ‘இன் பதவிக்காலம் முடிவடைந்து, தேர்தலில் அவரது குடியரசுக்கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு ஜனநாயகக்கட்சியை சேர்ந்த பராக் ஒபாமா வென்றபோது, ஆட்சி மாற்றம் பற்றி பெரிதாகப் பேசப்பட்டது.

இவ்வாட்சி மாற்றம் எவ்வாறு அமெரிக்காவின் தொடர்ச்சியான தவறுகளை, அது இழைத்த போர்க்குற்றங்களை, மனிதவுரிமை மீறல்களை மறைக்கப் போதுமானதாக இருந்ததோ, அதே நிலை சிறிலங்காவிலும் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. அமெரிக்காவின் ஆட்சி மாற்றத்தால் அதன் ஆட்சி இயந்திரம் மாற்றப்படவில்லை. அதுபோல் இன்னொரு போர்க் குற்றவாளியை ஆட்சியில் அமர்த்துவதால் சிங்களப் பேரினவாத சக்திகள் பலமிழக்கப் போவதில்லை.

மாறாக, மகிந்த இராஜபக்ச மீள ஆட்சிக்கு வருவாரேயானால், அவர் மீது இப்போது சர்வதேச அளவில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் மறைந்து விடப்போவதில்லை. அவரை அகற்ற வேண்டும் என்ற கருத்து தீவிரமடையும்.

தமிழர்களது பிரச்சனையைக் காட்டியே அவரை வழிக்கு கொண்டுவர முடியும் எனக் கருதும் மேலைத்தேச நாடுகள் அவர் மீது போர்க்குற்ற விசாரணைகளை முடுக்கி விடக்கூடும். சிறிலங்காவில் முழுமையான சனநாயக முறையைக் கொண்டுவர தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

மகிந்த இராஜபக்சவை தண்டிப்பதானால் அவர் மீள தேர்ந்தெடுக்கப்படவேண்டும். அதுவும் தனித்து சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டுமே அவர் வெற்றிபெற வேண்டும்.

- http://tamilnation.org/tamileelam/democracy/100118pongu.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரை முழுக்க மேற்குலக எதிர்ப்பும் இந்திய ஆதரவும் தூக்கலாக இருக்கிறது. சிறு உதாரணம்:

இந்தியா இவ்விடயத்தில் மேற்குலகை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பது கூட்டமைப்பிற்கு ஆறுதலைத் தரும் ஒரு விடயமாக இருந்தது.

ஒன்றை மட்டும் நினைவில் வைத்திருப்போம். எம்மை அழித்தொழித்தது இந்தியா. இந்தியா. இந்தியா. சிங்களப் பேரினவாதம் இரண்டாம் பட்சமே!

மகிந்தவை தண்டிப்பதானால்

அவர் மீள வெற்றிபெற வேண்டும்

மகிந்த இராஜபக்ச மீள ஆட்சிக்கு வருவாரேயானால், அவர் மீது இப்போது சர்வதேச அளவில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் மறைந்து விடப்போவதில்லை. அவரை அகற்ற வேண்டும் என்ற கருத்து தீவிரமடையும்.

தமிழர்களது பிரச்சனையைக் காட்டியே அவரை வழிக்கு கொண்டுவர முடியும் எனக் கருதும் மேலைத்தேச நாடுகள் அவர் மீது போர்க்குற்ற விசாரணைகளை முடுக்கி விடக்கூடும். சிறிலங்காவில் முழுமையான சனநாயக முறையைக் கொண்டுவர தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

மகிந்த இராஜபக்சவை தண்டிப்பதானால் அவர் மீள தேர்ந்தெடுக்கப்படவேண்டும். அதுவும் தனித்து சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டுமே அவர் வெற்றிபெற வேண்டும்.

- http://tamilnation.org/tamileelam/democracy/100118pongu.htm

ஆக அடிpப்படையில் முடிவுகள் தமிழரின் கைகளிலேயே விடப்படுகிறது. சிங்கள வாக்குகளால் மகிந்த தேர்ந்தெடுக்கப்படவேண்டுமென ஈழத்தில் வாழும் தமிழர்கள் தீர்மானிப்பார்களேயானால் அதுவே நடக்கும் அதன் ஒருகட்டமாக திருகோணமலை வாழ் தமிழர்கள் வெளிப்படுத்தியுள்ள கருத்து வரவேற்கப்படலாம்.

ஆனாலும் இன்று தமிழருக்கு வழிப்படுத்தலுக்காக இருக்கும் ஒரே தெரின கூட்டமைப்பினர் இதனைக் கருத்தில் கொண்டால் கட்டுரையாளரின் எண்ணம் நிறைவேறும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவை தண்டிப்பதானால்

அவர் மீள வெற்றிபெற வேண்டும்

கோபி in Ponguthamil.com

இவ்வாட்சி மாற்றம் எவ்வாறு அமெரிக்காவின் தொடர்ச்சியான தவறுகளை, அது இழைத்த போர்க்குற்றங்களை, மனிதவுரிமை மீறல்களை மறைக்கப் போதுமானதாக இருந்ததோ, அதே நிலை சிறிலங்காவிலும் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. அமெரிக்காவின் ஆட்சி மாற்றத்தால் அதன் ஆட்சி இயந்திரம் மாற்றப்படவில்லை. அதுபோல் இன்னொரு போர்க் குற்றவாளியை ஆட்சியில் அமர்த்துவதால் சிங்களப் பேரினவாத சக்திகள் பலமிழக்கப் போவதில்லை.

மாறாக, மகிந்த இராஜபக்ச மீள ஆட்சிக்கு வருவாரேயானால், அவர் மீது இப்போது சர்வதேச அளவில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் மறைந்து விடப்போவதில்லை. அவரை அகற்ற வேண்டும் என்ற கருத்து தீவிரமடையும்.

தமிழர்களது பிரச்சனையைக் காட்டியே அவரை வழிக்கு கொண்டுவர முடியும் எனக் கருதும் மேலைத்தேச நாடுகள் அவர் மீது போர்க்குற்ற விசாரணைகளை முடுக்கி விடக்கூடும். சிறிலங்காவில் முழுமையான சனநாயக முறையைக் கொண்டுவர தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

மகிந்த இராஜபக்சவை தண்டிப்பதானால் அவர் மீள தேர்ந்தெடுக்கப்படவேண்டும். அதுவும் தனித்து சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டுமே அவர் வெற்றிபெற வேண்டும்.

- http://tamilnation.org/tamileelam/democracy/100118pongu.htm

மகிந்த இராஜபக்சவை பதவிக்கு கொண்டுவந்தால் சீனாவின் ஆதரவுடன் மீதமுள்ள தமிழ்மக்களையும் அழித்தொழிப்பான் அல்லது சிங்களவராக மாற்றிவிடுவான். சரத் பொன்சேகாவுக்கு பாராளுமன்றத்தில் எந்த கட்சி ஆதரவு கொடுக்க இருக்கிறது? யூ.என்.பி. சரத் பொன்சேகாவின் அதிகாரத்தை பறித்து ரனிலை ஆட்சிக்கு வரவைக்க வழிபார்க்கும். ஜே.வி.பி. அதற்குள் தனக்கு அதிகாரம் மிக்க யூ.என்.பி.க்கு எதிரான கூட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கும். சரத் இராணுவ ஆதரவுடன், இராணுவ ஆட்சியை அமைக்க முயற்சி செய்வான். இந்த நிலை, மகிந்த ஆட்சிக்கு வருவதிலும் பார்க்க தமிழ்மக்களுக்கு சாதகமானது. குழம்பி போகும் சிறிலங்காவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்தியாவும் அமெரிக்காவும் தமிழர்களின் பிரச்சினையை பயன்படுத்தும் சாத்தியம் இந்த நிலையில் அதிகம். சீன உதவியும், இந்திய உதவியும், பாராளுமன்ற பலமும் உள்ள மகிந்த இராஜபக்சவை அசைப்பது மிகவும் கடினமானது. மகிந்த இராஜபக்ச மீண்டும் பதவிக்கு வந்தால் தமிழர் இல்லாத இலங்கையை எதிர்பார்க்க வேண்டியதுதான்.

மகிந்த இராஜபக்சவை பதவிக்கு கொண்டுவந்தால் சீனாவின் ஆதரவுடன் மீதமுள்ள தமிழ்மக்களையும் அழித்தொழிப்பான் அல்லது சிங்களவராக மாற்றிவிடுவான்..

மகிந்த ஆட்ச்சிக்கு வந்த அடுத்த 6 வருடங்களில் இதை செய்வது சாத்தியம் இல்லை.... அதை விட முக்கியமாக நீண்ட நெடும் காலமாக இதுக்கான விதையை சிங்களவன் போட்டு விட்டும் இருக்கிறான்... மகிந்த வராவிட்டாலும் தமிழினம் அங்கு அழிந்து போகும்...

கட்டுரை முழுக்க மேற்குலக எதிர்ப்பும் இந்திய ஆதரவும் தூக்கலாக இருக்கிறது. சிறு உதாரணம்:

ஒன்றை மட்டும் நினைவில் வைத்திருப்போம். எம்மை அழித்தொழித்தது இந்தியா. இந்தியா. இந்தியா. சிங்களப் பேரினவாதம் இரண்டாம் பட்சமே!

ஆனால் கூட்டமைப்பு இந்தியாவுடன் கொஞ்சி குலாவுவதில் எந்த விதமான பிரச்சினையும் உங்களுக்கு இல்லதானே....??

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதானே லண்டனில் இருந்து ராஜேஸ் பாலாவும் டண் ரிவி யிலை சொல்லுறார்.. இணைப்பு இங்கு http://www.yarl.com/forum3/index.php?showtopic=67949&pid=561479&st=0&#entry561479

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவை தண்டிப்பதானால்

அவர் மீள வெற்றிபெற வேண்டும்

கோபி in Ponguthamil.com

மகிந்த ஆட்சிக்கு வரவேண்டும் அவரைத் தண்டிக்க அவர் மீளவும் வெற்றிபெற வேண்டுமென ஆரூடம் கூறி ஆய்வு செய்திருந்த பொறுப்பாசிரியர் ஆய்வாளர் திரு.கோபி அவர்களுக்கு,

மகிந்த வென்றுவிட்டார் உங்கள் ஆய்வின் கூற்றுப்படி. இனி நீங்கள் சொன்ன தண்டனையை நிறைவேற்ற உங்கள் பணியை ஆரம்பியுங்கள்.

அடுத்த தேர்தல் வரையும் காலமிருக்கிறது. ஆமை நடையிலும் தண்டனையை நிறைவேற்ற ஐ.நா செல்லலாம் முயல் வேகத்திலும் செல்லலாம். எப்படியாயினும் மகிந்தவுக்கான தண்டனையை நிறைவேற்றுங்கள்.

மகிந்தாவே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதானே லண்டனில் இருந்து ராஜேஸ் பாலாவும் டண் ரிவி யிலை சொல்லுறார்.. இணைப்பு இங்கு http://www.yarl.com/forum3/index.php?showtopic=67949&pid=561479&st=0&#entry561479

புலியாய் உறுமியவர்களே மகிந்தவுக்கு ஆதரவு தேடும்போது :unsure:

என்னங்க shanthy போஸற்மோட்டம் செய்யிறீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க shanthy போஸற்மோட்டம் செய்யிறீங்க.

போஸ்ற்மோட்டமில்லை இது. வா வா என்றார்கள் தண்டிக்க வந்துவிட்டார். இனி தண்டனையை நிறைவேற்றலாம் தானே அதுதான் ஒரு ஞாபகப்படுத்தல்.

போஸ்ற்மோட்டமில்லை இது. வா வா என்றார்கள் தண்டிக்க வந்துவிட்டார். இனி தண்டனையை நிறைவேற்றலாம் தானே அதுதான் ஒரு ஞாபகப்படுத்தல்.

வர மாட்டார் நாங்கள் வர விடமாட்டம் எண்டு கதை விட்டினம்... அதையும் தாண்டி அவர் வந்து விட்டார் கதை சொன்னவை இப்ப அவரோடை சேர முயலுகினம் எண்டும் சொல்லலாம் தானே...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.