Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்தாவிடின் உயிரை பணயம் வைத்து அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிடப்போகிறேன் - சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தம்மை துன்புறுத்தும் அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தம்மிடம் ஆவணங்கள் இருந்ததாகவும், எனவேதான் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

தம்மை பயமுறுத்துவோர் தேர்தலின் போது மேற்கொண்ட முறைகேடுகள் தொடர்பான சாட்சியங்கள் தம்மிடம் உள்ளதாக தெரிவித்த அவர், தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அதனை மக்களுக்கு தெரியப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

தமது அலுவலகத்தில் தேடுதல் நடத்துவது, பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை, நெருங்கிய அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டமை போன்ற செயல்களில் இறுதியாக தம்மை படுகொலை செய்வதற்கே அரசாங்கம் தயாராகி வருவதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு பாதுகாப்பளித்த 90 படைவீரர்களுக்கு பதிலாக தற்போது 4 பொலிஸ்காரர்கள் கைத்துப்பாக்கிகளுடன் மாத்திரம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படைகளில் இருந்து சட்டரீதியாக வெளியேறிய 3 ஜெனரல்கள், 3 பிரிகேடியர்கள், மற்றும் 2 கேணல்கள் தமக்கு ஆதரவளித்ததாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் சண்டேலீடர் செய்திதாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் சமபந்தப்பட்டவர்கள் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது பொய்யான தகவலாகும். நேற்று மாத்திரம் தமது அலுவலகத்தில் இருந்த 20 பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் 23 கணணிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை யாவும் நீதிமன்ற ஆணையின்றியே இடம்பெற்றுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சட்டம் ஒழுங்கு அனைத்தும் உடைந்துபோய் உள்ளது. யாரும் பொலிஸிற்கோ நீதிமன்றத்திற்கோ செல்லமுடியாது. எந்த நேரத்திலும் யாரும் கைதுசெய்யப்படலாம். இந்தநிலையில் நாட்டில் அனைவரும் தமது பணிகளை உரியமுறையில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தான் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை எனக்குறிப்பிட்ட அவர், தமது உயிரை பாதுகாப்பதற்காக மறைந்து வாழவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தானும் தமது குடும்பத்தினரும் ( மனைவி வெளிநாட்டில் படிக்கும் இரண்டு மகள்மார்) நாட்டில் இருந்து வெளியேற முடியாதவாறு விமானநிலையத்தில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தாம் தமது பாதுகாப்புக்காகவே சினமன் லேக்சைட் ஹோட்டலில் 20 அறைகளை வாடகைக்கு அமர்த்தி தங்கியிருந்ததாக கூறிய அவர், இதன் போது அரசாங்கம் தன்னையோ அல்லது எதிர்க்கட்சி தலைவரையோ கொலை செய்ய திட்டமிடுவதாக செய்தி தனக்கு கிடைத்ததாக குறிப்பிட்டார்.

எனினும் இதனை மறைப்பதற்காகவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்ய தாம் திட்டமிட்டதான செய்தியை அரசாங்கம் பரப்பிவிட்டது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நன்றி பதிவு

மிக நல்லது - உண்மைகளை பேசுவோர் உயர்வடைவர்.

மிக நல்லது - உண்மைகளை பேசுவோர் உயர்வடைவர்.

மேலை அனுப்ப படுவார் எண்டதை தானே உப்பிடி சொல்லுறீயள்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

உயர்வடைவர்.

மேலை அனுப்ப படுவார்

அதுக்கேன் இப்படி வைத்து இழுக்கினம்

முதல் முதல் அனுப்புதலே...

பயப்பட

படபடக்க...

போட்டுத்தள்ளியபடி போய்க்கொண்டிருப்பதை விட்டுவிட்டு...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தற்போதைய தலைவர் சரத் மீதான துன்புறுத்தல்களைக் கண்டித்துக் குளிரையும் பொருட்படுத்தாது ஊர்வலம் போக ஏற்பாடு பண்ணினால் என்ன?

முள்ளிவாய்க்காலிலை சனம் எப்பிடி துடிச்சு இருக்கும் எண்டதை இப்ப சரத் பொன்சேகாவுக்கு ஓரளவுக்கு புரிந்து இருக்கும்...

இப்ப தமிழர்களுக்கு ஒரு நன்மை நடக்கும் எண்டால் அது சரத் பொன்சேகாவுக்கு நடப்பதுதான்... சரத் ஒருவேளை உள்ளை அனுப்ப பட்டாலும் இல்லை தப்பி வெளியாலை வந்தாலும் நல்லது...

உள்ளை போனால் போர்க்குற்றங்களை மறைக்க இலங்கை செயற்படுகிறது எண்று உலகமாக சொல்லும்... வெளிய வந்தால் அவன் மீது அயர்லாந்து தீர்ப்பாயத்தின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட வேண்டும்... அப்போது மகிந்த மீது குற்றம் சாட்ட வேண்டிய தருணம் அவனுக்கு வரும்...

தமிழர்களின் தற்போதைய தலைவர் சரத் மீதான துன்புறுத்தல்களைக் கண்டித்துக் குளிரையும் பொருட்படுத்தாது ஊர்வலம் போக ஏற்பாடு பண்ணினால் என்ன?

சும்மா இருக்கோ சனம் உண்மையிலை செய்து போடப்போகுது.... தீக்குளிக்க கூட தயாராக இருக்கினம்...

புலத்து புத்திசீவிகளின், இராசதந்திர மொழியில், சர்வதேசம் மகிந்தருக்கு, எதிராக நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதற்கு, சரத்திற்கு எதிரான இந்த நிலையைக் கையிலெடுத்து மக்களைத் தெருவில் இறங்கி போராட அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை காத்திருப்போம். புதிய சர்வதேச இராசதந்திர நகர்வுக்காக!

  • கருத்துக்கள உறவுகள்

உள்ள போட்டு எடுத்தாத்தான் நல்லது.போட்டுத் தள்ளினால் சர்வதேசம் ஒரு நாள் கண்டிச்சுப் போட்டு மறந்திடும். சரத்தும் வெளியிலை வந்து ஜேவிபியோடை சேர்ந்து ஆயதப் பரட்சி செய்தா நல்லா இருக்கும்.

எனக்கென்னவோ மகிந்த்தவும் சரத்தும் சேந்து எல்லாருக்கும் அரைக்கிறாங்கள் போல கிடக்குது....

தாம் வாழ தன் தாயையே கூட்டிக்கொடுத்த இனத்திலிருந்து வந்தவங்களல்லவா....

உண்மையாக இப்படி பொன்ஸ் சொன்னால் மகிந்த்த கொம்பனி இது வரைக்கும் விட்டு வைச்சிருக்கிமா ??

தற்போதய தேர்தல் முடிவின்படி மகிந்தவின் வாக்கு வங்கி ஒ.கே.அதுவும் டபுள் ஓ.கே.

ஜே.வி.பி யை யு.என்.பி பொதுத்தேர்தலில் கூட்டுக்கு அழைக்கதாம் எண்டு செய்தி வேற கசியுது,

ஆகவே தான் அமோக வெற்றி பெற எதிரணியை பல கூறாக்கினால் மகிந்தவிற்கு வெற்றியே..

அதனால் மகிந்த- சரத் ட்ராமா, குறைந்தது பொதுதேர்தல் மட்டுமாவது சூடு பிடிக்கும்.

சிங்களவருக்கு என்ன வேண்டுமொ அதை சரத்தால் செயற்படுத்த முடியாத காலமிது. உயிரைப் பணயம் வைத்து வெளியிட சரத்திடம் ஏதுமில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். அப்படியேதேனும் இருந்திருந்தால் சரத் இந்நேரம் உயிரிழந்திருப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் தற்போதைய தலைவர் சரத் மீதான துன்புறுத்தல்களைக் கண்டித்துக் குளிரையும் பொருட்படுத்தாது ஊர்வலம் போக ஏற்பாடு பண்ணினால் என்ன?

என்ரை வாழ்க்கையிலை இதைமாதிரி ஒரு நக்கலை இன்னும் சந்திக்கேல்லை.

தாம் வாழ தன் தாயையே கூட்டிக்கொடுத்த இனத்திலிருந்து வந்தவங்களல்லவா....

விளக்கம் வேணும்...

எந்த கணமும் கைதாகலாம்.

http://sundaytimes.lk/100131/News/nws_01.html

தமிழர்களின் தற்போதைய தலைவர் சரத் மீதான துன்புறுத்தல்களைக் கண்டித்துக் குளிரையும் பொருட்படுத்தாது ஊர்வலம் போக ஏற்பாடு பண்ணினால் என்ன?

தலைவருக்கு ஜால்ராக்கள் ரொம்ப ரொம்ப அதிகம்,ஆகவே ஊர்வலம் எண்டால் பல்லக்கில் தூக்கிகொண்டுதானே!!,

எதிலும் ஒரு மாற்றம் அவசியம் தேவையல்லோ அப்போதுதான் அடுத்த கட்டத்திற்கு போகலாம்,ஆகவே பாடல் ஒப்பாரி என்று, தெருக்கூத்து மாதிரி பண்ணினால் ஒரே ஜோர்தான் போங்கோ!!!,

Edited by vimalk

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தற்போதைய தலைவர் சரத் மீதான துன்புறுத்தல்களைக் கண்டித்துக் குளிரையும் பொருட்படுத்தாது ஊர்வலம் போக ஏற்பாடு பண்ணினால் என்ன?

நல்ல யோசனை. ஊர்வலத்தை எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது. :rolleyes:

நல்ல யோசனை. ஊர்வலத்தை எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது. :rolleyes:

உதிலை என்ன சந்தேகம் பிரித்தானிய பாராளுமண்றத்துக்கு முன்னாலைதான்....

ஆனால் ஒண்டு உண்ணாவிரதம் இருக்க போறம் எண்டு ஒருத்தரும் அடம் பிடிக்க கூடாது...ஊர்வலத்தோடை நிப்பாட்ட வேணும்... அங்க இருக்கிற பெடியை பட்டினி போட்டுவிட்டு நாங்கள் வந்து நிண்டு ஆதரவு தாறம் எண்டு மக்டொனால்சிலை வாங்கி சாப்பிட அதை இங்கிலாந்து பத்திரிகையிலை உண்ணாவிரதம் இருந்தவை மக்டொனால்ஸ் பிக் மக் சாப்பிட்டவை எண்டு பொடி வச்சு எழுத.... இருந்த பெடி பட்ட கஸ்ரத்துக்கும் வேலை இல்லாது போகப்பண்ணாமல் விட மாட்டம் இல்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உதிலை என்ன சந்தேகம் பிரித்தானிய பாராளுமண்றத்துக்கு முன்னாலைதான்....

ஆனால் ஒண்டு உண்ணாவிரதம் இருக்க போறம் எண்டு ஒருத்தரும் அடம் பிடிக்க கூடாது...ஊர்வலத்தோடை நிப்பாட்ட வேணும்... அங்க இருக்கிற பெடியை பட்டினி போட்டுவிட்டு நாங்கள் வந்து நிண்டு ஆதரவு தாறம் எண்டு மக்டொனால்சிலை வாங்கி சாப்பிட அதை இங்கிலாந்து பத்திரிகையிலை உண்ணாவிரதம் இருந்தவை மக்டொனால்ஸ் பிக் மக் சாப்பிட்டவை எண்டு பொடி வச்சு எழுத.... இருந்த பெடி பட்ட கஸ்ரத்துக்கும் வேலை இல்லாது போகப்பண்ணாமல் விட மாட்டம் இல்லை...

article-1184251-04FDA877000005DC-593_634x368.jpgflag-sri-lanka.gif

என்ன கொடி பிடிக்கிறது எண்டு தான் ஒரே யோசனயாயிருக்கு. :rolleyes:

என்ன கொடி பிடிக்கிறது எண்டு தான் ஒரே யோசனயாயிருக்கு. :rolleyes:

சிங்க கொடியிலை இருக்கிற சிங்கத்தை தூக்கி போட்டு புலி கத்தியை பிடிக்கிறது மாதிரி ஒரு கொடியை செய்து பிடிக்கலாம்...

இல்லை புலிக்கொடியிலை இருக்கிற புலிக்கு பதிலா சரத் சிங்கத்தின் படத்தை போடலாம்... :rolleyes:

மகிந்தவை கொண்டு வந்தது இப்ப நாங்களோ.... நல்ல டமாசு...:rolleyes: :rolleyes:

18 லட்ச்சம் வாக்குகள் வித்தியாசத்தை காட்டி மகிந்த வெண்டு இருக்கிறான்... வெல்ல வைத்து சிங்களவன்... 7 லட்ச்சம் தமிழர் வாக்காளரும் போட்டு இருந்தாலும் எட்டாத தூரம் அது...

ஒருவேளை கூட்டமைப்பின் தலைவர் சரத்பொன்சேகா ஆட்ச்சிக்கு வந்திரிந்தால் தமிழர் வாழ்வு மலர்ந்து வடக்கிலையும் கிழக்கிலையும் பாலாறும் தேனாறும் ஓடி இருக்கும்... அதுக்கும் மேலை இப்ப எல்லாம் ஈ மொய்க்க தொடங்கி இருக்குமாக்கும்... :(

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தன் 18 லட்டசவாக்கில் வெல்வது இப்போது நடந்தது, தேர்தலுக்கு முன் வாக்களித்த மக்களதும் அவர்களது தலமை எடுக்கும் முடிவையும் எதி்ர்க்க புலம்பெயர் தேசிய வியாதிகளுக்கு என்ன உரிமை இருக்கு, :(

உதிலை என்ன சந்தேகம் பிரித்தானிய பாராளுமண்றத்துக்கு முன்னாலைதான்....

ஆனால் ஒண்டு உண்ணாவிரதம் இருக்க போறம் எண்டு ஒருத்தரும் அடம் பிடிக்க கூடாது...ஊர்வலத்தோடை நிப்பாட்ட வேணும்... அங்க இருக்கிற பெடியை பட்டினி போட்டுவிட்டு நாங்கள் வந்து நிண்டு ஆதரவு தாறம் எண்டு மக்டொனால்சிலை வாங்கி சாப்பிட அதை இங்கிலாந்து பத்திரிகையிலை உண்ணாவிரதம் இருந்தவை மக்டொனால்ஸ் பிக் மக் சாப்பிட்டவை எண்டு பொடி வச்சு எழுத.... இருந்த பெடி பட்ட கஸ்ரத்துக்கும் வேலை இல்லாது போகப்பண்ணாமல் விட மாட்டம் இல்லை...

மக்டோனஸில் பிக்மாக் சாப்பிட்ட்துக்கான ஆதாரம் விடியோவாக இருக்கு என்று லண்டன் போலீஸ் சொல்லி இருக்கு :rolleyes::rolleyes::(

Edited by சித்தன்

கிளிநொச்சியில் புலிகள் வைத்திருந்த 4000 கிலோ தங்க நகைகள் எங்கே..?

சரத் வெளியிடப் போகும் உண்மை இதுவா இல்லை இதற்கும் மேலா…

கிளிநொச்சியில் ஒரு வானொலிப் பெட்டிகூட இல்லாமல் திருடப்பட்டதை யார் அறிவார்..

கிளிநொச்சியில் புலிகள் சுமார் 4000 கிலோ எடையுள்ள தங்கத்தை வைத்திருந்துள்ளார்கள். இந்த நகைகள் அனைத்தும் யாரிடமென்று தெரியாமல் மர்மமாக மறைந்துவிட்டன. இதைத் திருடியது யார்… ? இது குறித்து இன்றய தினமலர் வெளியிட்டுள்ள கட்டுரை

அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, பொன்சேகா மீது புதியக் குற்றச்சாட்டுகளை சுமத்தி விசாரணை நடத்த இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. உள்நாட்டுப் போரின் போது, புலிகளிடம் கைப் பற்றப்பட்ட நான்காயிரம் கிலோ தங்கம் பற்றிய விசாரணையும் நடக்கும் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ஷே தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். புலிகளுடனான இறுதிப்போரில் ராணுவத்தை வழிநடத்திய அப்போதைய ராணுவ தலைமை தளபதி பொன்சேகா, இந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.

தோல்வியை அடுத்து, பொன்சேகாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவர் தங்கியிருந்த ஓட்டலை ராணுவம் சுற்றி வளைத்தது. தன்னை ராணவத்தினர் கொன்று விடுவர் என்று குற்றம் சாட்டினார். இவற்றை மறுத்துள்ள இலங்கை அரசு, பொன்சேகா மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறது. ராணுவத்தில் பொன்சேகாவுடன் பணியாற்றிய சிலருடன் சேர்ந்து, இலங்கையில் வன்முறை நடத்த சதி; அதிபர் ராஜபக்ஷேவைக் கொல்ல சதி என்ற குற்றச் சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. இந்த பட்டியல் இன்னும் நீளும் என்று இலங்கை அரசு வட்டாரம் கூறியது.

இலங்கையில் இறுதிக்கட்டமாக உள்நாட்டுப்போர் வன்னியில் நடந்தது. வன்னி என்பது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுடன், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களில் சில பகுதிகளையும் உள்ளடக்கியப் பகுதி. இவற்றில் பெரும் பகுதி பல ஆண்டுகளாக புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இந்த பகுதிகளை ராணுவம் பிடித்தபோது, அங்கு கைப்பற்றப்பட்டப் பொருட்களில் புலிகள் குவித்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தவிர மற்றவை பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த பொருட்கள் பற்றிய கேள்வி, போர் முடிந்தவுடனே எழுந்தது. ஆனாலும் அது பற்றி வெளிப்படையாக எதுவும் பேசப்படவில்லை. புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் நான்காயிரம் கிலோ தங்கம் இருந்ததாக, அரசு தரப்பில் தகவல் கசியவிடப்பட்டுள்ளது.

அவற்றை ராணுவம் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதில் ஒரு குன்றி மணி தங்கம் கூட அரசு கஜானாவில் சேர்க்கப்படவில்லை. அப்படியானால் அந்த தங்கம் எங்கே என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.இறுதிப்போர் உக்கிரமாக நடந்த போது, வன்னிப்பகுதி முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அங்கு வேறு யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அப்படியானால், புலிகள் பதுக்கிய தங்கம் எங்கே போனது என்ற கேள்வி இப்போது எழ ஆரம்பித்துள்ளது.புலிகள் தங்கத்தை பதுக்கி வைத்திருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. புலிகள், இயக்கம் துவங்கியபோது, தமிழர்களிடம் இருந்து பணம், பொருட்களை கட்டாயமாக பெற்றனர்.

வெளிநாட்டு வாழ் தமிழர்களிடம் இருந்தும் பணம் வசூலிக்கப்பட்டது. இயக்க வளர்ச்சி என்ற பெயரில் தமிழர்கள் குடும்ப அளவில் பணம் பொருள் கட்டாயம் தர வேண்டும் என்ற அறிவிப்பை பல முறை வெளியிட்டிருந்தனர்.யாழ்ப்பாணத்தில் 1990 ம் ஆண்டு, ஜூன் 29 ம் தேதி தமிழீழ மீட்பு நிதியம் ஒன்றை புலிகள் துவங்கினர். இதில் நிதியை சேர்க்க பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர். அதன் ஒரு பகுதியாக குடும்பத்துக்கு தலா இரண்டு பவுன் தங்கம் கொடுக்க வேண்டும் என்று 1990 ம் ஆண்டு ஜூலை 1 ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு, கட்டாய வசூலில் ஈடுபட்டதாக யாழ்ப்பாணம் வாசிகள் கூறினர். இவை தவிர, யாழ்ப்பாணம் பகுதியில் இருந்த பல ஆயிரம் முஸ்லிம்கள், புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட போது, உடமைகள் எதையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.

குறிப்பாக தங்க நகைகளை எடுத்துச் செல்வதில் பெரும் கட்டுப்பாடுகளை விதித்தனர். பெருஞ்செல்வந்தர்களாக இருந்த முஸ்லிம் குடும்பப் பெண்களிடம் இருந்த தங்கம் மற்றும் மதிப்பு மிக்கப் பொருட்களை புலிகள் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது போல் பல முறை நடந்துள்ளதாக யாழ்ப்பாம் வாசிகள் கூறினர். அப்போது பறித்து புலிகளின் பிடியில் வைத்திருந்த தங்கம் 4 ஆயிரம் கிலோ என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த தங் கம் மற்றும் தங்க நகைகள் பற்றிய கேள்வி இப்போது எழுந்துள்ளது.வெளிநாடுகளில் வசூலித்த பணம் மற்றும் போதை மருந்து கடத்தலில் கிடைத்தப் பணத்தில் தான் புலிகள் ஆயுதங்களை வாங்கிவந்தனர்.

இதனால், தங்கத்தை இதற்காக செலவிட்டிருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. உக்கிரமான போர்ச்சூழலில், படையை வழி நடத்திய அதிகாரிகளுக்கு மட்டும்தான், அங்கு என்ன நடந்தது; என்ன இருந்தது என்ற விபரம் தெரியும். போர் நடந்த பகுதிகளுக்கு வந்து செல்ல ராணுவத்தில் உயர் மட்டத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. இந்த நிலையில், போர்க்களத்தில் இருந்த தலைமைத் தளபதி பொன்சேகா மற்றும் அவருக்கு நெருக்கமான அதிகாரிகள் மட்டுமே புலிகள் பகுதில் நடந்த உண்மையை அறிவர் என்ற பரபரப்பு இலங்கையில் ஏற்பட்டுள்ளது.

http://www.alaikal.com/

மக்டோனஸில் பிக்மாக் சாப்பிட்ட்துக்கான ஆதாரம் விடியோவாக இருக்கு என்று லண்டன் போலீஸ் சொல்லி இருக்கு :rolleyes::rolleyes::(

உண்ணாவிரதம் இருந்தவர்( பரமேஸ்வரன்) சாப்பிட்டதாக காவல்த்துறை எங்கும் சொல்ல வில்லை... உண்ணாவிரதம் இருந்த இடத்தில் சாப்பிட்டார்கள் எண்றுதான் சொல்லப்பட்டது...

மகிந்தன் 18 லட்டசவாக்கில் வெல்வது இப்போது நடந்தது, தேர்தலுக்கு முன் வாக்களித்த மக்களதும் அவர்களது தலமை எடுக்கும் முடிவையும் எதி்ர்க்க புலம்பெயர் தேசிய வியாதிகளுக்கு என்ன உரிமை இருக்கு, :(

இப்ப தமிழ் மக்களுக்கு தலைமை தேசிய கூட்டமைப்பே...?? யார் அங்கீகாரம் குடுத்தவை...?? தாங்களோ...?? அப்படி எண்றால் ஆறு லட்ச்சம் தமிழர் வாக்குக்கள் சரத்துக்கு விழுந்து இருக்க வேண்டுமே...?? என்னாச்சு...?? யாழ் களத்திலை இருக்கிறவை குழப்பி போட்டினமோ....??? :D :D :D

எனக்கு தலைமை யார் எண்டதை தெரிவு செய்ய எந்த ---- அருகதை கிடையாது... :(

Edited by நிழலி
நீக்கப்பட்டது

ஓய் என்னப்பா இன்னும் போட்டுத்தள்ளவில்லையா பெடியை அட கலகலப்பில்லாமல் இருக்கு கொழும்பு நிலவரம் .....என்னப்பா சர்வவல்லமை உள்ள ஐனாதிபதி இது வந்தமா போட்டமா எண்டு இல்லாமல் அட போங்கப்பா :rolleyes:

அட அப்ப வசதியா போச்சு நம்மடதலைவர் மான்புமிகு சரத் பொன்சேகா யாருக்காவது தைரியம் இருந்தா போட்டுத்தள்ளுங்கோ பாப்பம் அட ஆகக்குறைந்தது முஞ்சில காறித்துப்துங்கோ பாப்பம் :rolleyes: :rolleyes: :( :( :(:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.