Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடத்தியவர்கள் அரைகுறையில் விடுதலை செய்தது பிழை என்றுதான் கூறினாரம்: கொலை மிரட்டல் விடுக்கவில்லையாம்! கிஷோர் எம்.பி. தன்னிலை விளக்கம் .

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க வெளிநாட்டில இருந்து போய் வந்த நாலு பேர் சொல்லுகினம். அதுகள் சந்தோசமாக இருக்குதுகள். இனியாவது அதுகளை சும்மா இருக்க விடுங்கோவாம்.

சகோதரர் நேசன், இது புதுசா எங்கட வெள்ளை வான் அமைச்சர் எடுத்து குடுத்த விஷயம். எனக்கும் பின்னால துவக்கோட ஆர்மி நிண்டால் சந்தோசமா இருக்கிறன் எண்டு தான் நானும் சொல்லுவன். நானும் வவுனியாவில நிண்டனான். அங்க அப்படி ஒண்டும் அவை சந்தோசமா இல்லை. பயந்து பயந்து சாகினம். ஊரடங்கு சட்டத்துக்குள்ள இருபது வருசமா இருந்தபடியால் அவர்களுக்கு உயிரோடு இருப்பதே ஒரு சந்தோசமான விஷயம் தான்.

இது ஒரு வெளிநாட்டு தமிழரை அரசியல் போராட்டத்தில் இருந்து திசை திருப்பும் யுக்தி. சில அரசியல் சூனியங்கள் நம்புவார்கள்.

கவனிக்க வேண்டிய விடயம். வெளிநாடுகளில் இருக்கும் இருபது இலட்சம் தமிழரில் " நாலு" பேரின் கருத்து இது. :lol:

  • Replies 63
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதிலையும் இரண்டு விதம் இருக்கிறது ஒண்டு பதவிக்காக விட்டு கொடுத்து போவது... மற்றது எதையாவது வாங்கி கொடுக்க விட்டுக்கொடுப்பது... கிசோர் இரண்டு வகையிலும் அடக்கமாக கூட இருக்கலாம்...

மக்களுக்கு இந்த நாள் வரைக்கு அவரசாங்கத்திட்டை இருந்து வாங்கி கொடுக்க நினைக்காத சம்பந்தருக்கும், கிசோருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது...

வரும் பொதுத் தேர்தலில் கிசோர் தனித்து போட்டியிட்டு அமைச்சரானால் கூடுதல் நன்மைகள் தமிழ் மக்களுக்குக் கிடைக்கும் அப்படித்தானே!

அரசியல் அதி மேதாவிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்ககின்றனர். அவர்கள் கிசோருக:கு உரிய சந்தர்ப்பத்தை வழ்காவிட்டால் அப்படியானால் கூட ஆச்சர்யப்பட எதுகும் இல்லை. இதுவரை கிசோர் அரசியல் பேரத்தில் ஈடுபடவில்லை. அரசாங்கத்துடன் சார்ந்து நின்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்கவும் இல்லை. அப்பயிருக்கையில் அவருக்கு எதிரான ஊடகப்போர் தவறு என்பதே எனது கருத்து. குறிப்பிட்ட ஒருவர் அவரது தனிப்பட்ட விடயங்களுக்கு அப்பால் மக்கள் சேவையை செய்யும் போது அதை நாம் தர்க்கக ரீதியில் பார்க்க வேண்டும். டக்கிளஸ் தேவானந்தா தமிழீழ விடுதலைப்புலிகளால் அரசியயலுக்குள் கொண்டு செல்லப்பட்டவர் அல்ல. அதே போல கருணாவோ பிள்ளையானோ அப்படிச் செய்தவர்கள் இல்லை.

கிசோரின் பக்க தவறுகளை சுட்டிக்காட்டும் உரிமையம் கடமையும் ஊடகங்களுக்கு உண்டு, ஆனால் அதே ஊடகங்கள் அவர் பக்கத்து நியாயங்களையும் உள்ளார்ந்து சிந்திக்க தலைப்பட வேண்டும். நீங்கள் சொல்வது போல தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விட்டு விலகி நிற்க வேண்டும் என்று அவர் நினைத்தால் ஜனாதிபதி தேர்தலிலே அதை செய்திருக்க முடியும். அந்த வல்லமை கிசோருக்கு உண்டு. என்னைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வவுனியாவில் ஆதரவு உண்டு என்றால்.. அதில் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் கிசோர் தவிர்ந்த யாராலும் உருவாக்கப்பபட்டதல்ல. இருவரும் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள மூப்பர்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளனர்.

எனது கருத்து பத்திரிகை மீதான மிரட்டல் தொடர்பாக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அதற்க்கு ஒத்து ஊதும் உதயன், சுடரொளி போன்ற பத்திரிகைகளுமே!

தம்மை தாமே தேசியப் பத்திரிகை என்ற சொல்லிக்கொள்ளும் உதயன், சுடரொளி பத்திரிகைகள் தேசியம் சார்ந்தும் அதன் செயற்ப்பாடுகளின் நியாயத்தன்மை பற்றியுமே வாதாடுது சிறந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிசோர் செய்தது எல்லாம் பிராட்டு வேலை. போராட்டத்தின் போது தேவைப்பட்ட கள்ளவேலைகளை செய்தவர். அதன் நன்றி கடனாக தான் வவுனியா அரசியல் பிரவால் சந்தர்ப்பம் கொடுத்து தமிழீழ அரசியல் பிரிவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ்தேசீய கூட்டமைப்பில் சந்தர்ப்பம் வாங்கி கொடுக்கபட்டது.

இப்ப அவர்கள் இல்லை என்றவுடன் தனது மமதையை காட்டுவது தவறு.

அப்படிப்பார்த்தால் தமிழ் மக்களில் பாதிக்கு மேல் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றனர்.

அரசியல் பிரிவால் நன்றிக்கடனாக வழங்கப்பட்ட சந்தர்ப்பம் அல்ல அது. வவுனியாவில் தேசியத்துக்கு ஆதரவான சமூக சேவை மனப்பாங்குள்ள மக்கள் ஆதரவு பெற்ற ஒருசிலருக்குள் கிசோர் அடக்கம் என்பதால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

ஒன்றுமே செய்யாது புலம் பெயர்நாடுகளில் பதவிக்கு சண்டை பிடித்து தேசியத்தின் பின்னடைவுக்கு காரணமாக நிற்க்கும் இரு அணிகளை விட கிசோர் மிகவும் நன்றாகவே செயற்ப்படுகின்றார். தளத்தில் உள்ள மக்களை சற்று விசாரித்து பாருங்கள். முகாமுக்குள் சென்ற முதலும் அது தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் கிசோர் மட்டுமே!

மீண்டும் சொல்ல விரும்புகின்றேன் இது கிசோரக்கான வக்காலத்து அல்ல. அவர் பற்றிய அறிதல் மற்றும் மக்களின் கருத்துக்களில் இருந்து எழுதுபவையே!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

சில கருத்துக்களை வைப்பதன் ஊடாக பலரின் விமர்சனத்தை நான் பெறுவேன் என்று நினைக்கின்றேன். கிசோர் என்பவர் தான் விரும்பி அரசியலுக்குள் வந்தர் அல்லர். தமிழீழ விடுதலைப்புலிகளினால் இணைக்கப்பட்டவர். அது மட்டுமன்றி அதற்க்கு முன்னர் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக மக்களுக்கு நிறையவே செய்துள்ளார். முகம் தெரியாதா நீங்களும் நானும் அவர் மீது விமர்சனங்களை அள்ளி வீச முடியும். துரோகியாக்கி நடு ரோட்டில் விட்டாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே நாளை அவருக்கு போட்டியிடும் சந்தர்பத்தை வழங்க மறுத்தாலும் கிசோரின் தேர்தல் வெற்றி என்பது வவுனியா வாழ் மக்களின் வாக்குகளால் நிச்சயிக்கப்படும். அதற்காக அவர் நிறையவே செய்திருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள் ஓரளவுக்காவது மக்களோடு வாழ்ந்த பாராளுமன்ற உறுப்பினர், அவர்களது பிரச்சினைகளுக்குள் தன்னை உள்வாங்கி கொண்டவர். அது மட்டுமன்றி அவரது பேச்சை மக்களுக்கு நன்றாகவே தெரியும். சம்பந்தர் ஐயாவை போற்றும் உதயன் கிசோர் பற்றிய விமர்சனங்களை ஏன் முன்வைக்கின்றது என்பதையும் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். கிசோர் அரசாங்கத்தோடு இணைந்து செயற்ப்படுகின்றார் என்று சொல்லும் வித்தியாதரன் போன்றோர் இப்போது யாரின் நிழலில் இருக்கின்றனர் என்பதையும் வெளிச்சத்துக்கு கெண்டு வருதல் நன்று.

இது கிசோருக்கான வக்காலத்து அல்ல. குறிப்பிட்ட கால பகுதில் நானும் அந்த பிரதேசத்தில் வாழ்ந்தவன் என்ற வகையிலும், மக்களுக்கான, தேசியத்துக்கான பணிக்காக கிசோர் சிறை சென்றதையறிந்தவன் என்ற முறையிலும் எழுதுகின்றேன்.

தமது விருப்பு வெறுப்புக்களுக்குள் ஊடகங்கள் தனிநபர்களை இழுத்து வசைபாடுவதே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் காரணமாகின்றது. இத்தனை தமிழ் இணையங்கள், ஊடகங்கள் கிசோரின் மிரட்டல் தொடர்பான செய்தியை வெளியிட்ட போது அவர் சார்ந்த விளக்கங்களை கேட்காமையிலிருந்தே நாம் எங்கிருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

கிஷோரின் அரசியல் நுளைவு பற்றியும், அதற்கு முன்னைய அவரின் செயல்பாடு பற்றியும் உங்களால் கூறப்பட்ட தரவுகள் அத்தனையும் உண்மையே.

ஆனால் இன்று தாயகத்தில் உள்ள அரசியல் வாதிகளின் செயல்பாடுகள் பற்றி எவராலும் எதுவும் உறுதிப்பட கூறமுடியாது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கிசோர் அவர்கள் பற்றிய விளக்கத்துக்கு நன்றி

கிஷோரின் அரசியல் நுளைவு பற்றியும், அதற்கு முன்னைய அவரின் செயல்பாடு பற்றியும் உங்களால் கூறப்பட்ட தரவுகள் அத்தனையும் உண்மையே.

ஆனால் இன்று தாயகத்தில் உள்ள அரசியல் வாதிகளின் செயல்பாடுகள் பற்றி எவராலும் எதுவும் உறுதிப்பட கூறமுடியாது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதுதான் எனது கருத்தும்

பொறுத்திருப்போம்

அனைவரையும்சந்தேகிப்பதையும்

விமர்சிப்பதையும்

கேள்வ கேட்பதையும் முதலில் நிறுத்துவோம்

ஒன்றை மட்டும் முதலில் உணர்வோம்

தேசிய விடுதலைப்போராட்டத்தில் அவர்களின் பங்கு என்றுமே எமக்கு எவ்விதத்திலும் குறைந்தது அல்ல.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யப்பட்ட போராளிகளின் குடும்பங்களுக்கு முகம் சுளிக்காமல் உதவும் ஒரே தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பியும் கிசோர் மட்டுமே... எல்லா விடயங்களையும் அவரால் செய்து கொடுக்க முடிந்தது எண்று சொல்ல வரவில்லை... ஆனால் முயற்சி செய்கிறார்... இராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறார் அதனால் சிங்கள இராணுவத்தோடு விட்டுக்கொடுப்புடனும் செயற்படுகிறார்...

இதுகளை செய்ய வேண்டும் எண்டால் மகிந்தவையோ இராணுவத்தையோ முறைத்து கொண்டு நிற்பதினால் ஆகப்போவது இல்லை...

20 வருடமாக உயிரைத் துச்சமாக மதித்து பல போர்க்களங்களில் வெற்றிவாகை சூடிய கருணா அம்மானும் சில காரணங்களுக்காக அரசுடன் சேர்ந்து செயற்பட்டாலும், தமிழர்களுக்கு நல்லது செய்யவே நினைக்கின்றார். அவரும் முகாம்களிலும், சிறைகளிலும் உள்ள முன்னைய போராளிகளுக்கு சில உதவிகளைச் செய்வதாகவும் கேள்வி. அவரது பெயரையும் சில பட்டியலில் இருந்து நீக்கினால் தமிழர்களுக்கு நல்லது!

வரும் பொதுத் தேர்தலில் கிசோர் தனித்து போட்டியிட்டு அமைச்சரானால் கூடுதல் நன்மைகள் தமிழ் மக்களுக்குக் கிடைக்கும் அப்படித்தானே!

20 வருடமாக உயிரைத் துச்சமாக மதித்து பல போர்க்களங்களில் வெற்றிவாகை சூடிய கருணா அம்மானும் சில காரணங்களுக்காக அரசுடன் சேர்ந்து செயற்பட்டாலும், தமிழர்களுக்கு நல்லது செய்யவே நினைக்கின்றார். அவரும் முகாம்களிலும், சிறைகளிலும் உள்ள முன்னைய போராளிகளுக்கு சில உதவிகளைச் செய்வதாகவும் கேள்வி. அவரது பெயரையும் சில பட்டியலில் இருந்து நீக்கினால் தமிழர்களுக்கு நல்லது!

இண்டைக்கு தலைமை கனவோடை திரியும் கருணாவும் டக்கிளசும் சம்பந்தரும் அப்படி ஒரு போட்டியில் இல்லாத கிசோருக்கும் வித்தியாசம் இருக்கிறது... யாரும் கிசோர் தான் அடுத்த தலைவர் எண்று பரிந்துரைக்கவில்லை...

மக்களுக்காக எதையும் செய்யாத மேற்படி தலைவர் கனவு நாயகர்களை விட எதையாவது செய்யும் கிசோர் கொடியவராக எனக்கு படவில்லை...

கருணா மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் எண்று அரசோடு இணைந்து மக்களை துன்புறுத்தாது உதவிகளை செய்து இருந்து இருந்தால் அதையும் கூட வரவேற்று இருக்கலாம்... ஆனால் நிலமை அப்படி இல்லை... கருணாவின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது அனேகமாக பொதுமக்களே... ஆக மக்களில் இருந்து கருணா தானாகவே தூரம் போய் நிக்கிறான்...

இங்கை நடப்பதை கொஞ்சம் ஆளமாக பாருங்கள்... கூட்டமைப்பின் ஆதரவு பத்திரிக்கையான உதயன் கூட்டமைப்பின் எம்பியான கிசோருடன் உரசல்... கடுப்பான கிசோர் உதயன் ஆசிரியர் வித்தியாதரனுக்கு மிரட்டல் இதுதான் செய்தி...

கூட்டமைப்பு அடுத்து வரும் பாராளுமண்ற தேர்தலில் கிசோருக்கு ஆசனம் வழங்காது என்பதை இது குறித்து நிக்கிறது... வித்தியாதரன் அவர்களுக்கு கூட்டமைப்பின் ஆசனம் வழங்கப்படலாம் அதனால் கூட்டமைப்பின் மீது பாசமாக இருக்கும் அவர் விலக்க வேண்டியவர்களை கொடியவர்களாக இனம் காட்டுகிறார்... கூட்டமைப்பு எடுத்த முடிவை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முடிவான கிசோரை புறக்கணிப்பது தெளிவாகவே இருக்கிறது... கூட்டமைப்பின் நரித்தனம் இதில் தெரிவது தவிர்க்க முடியவில்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தயா அவர்கள் அதைத்தான் செய்கிறார்

கிஷோருக்கு உண்மையிலேயே மக்கள் ஆதரவு இருந்தால், கூட்டணி புறக்கணித்தாலும் அவர் மக்கள் ஐக்கிய முன்னணியின் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராக வரலாம். இதைத்தான் மகிந்தவும் விரும்புவார்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ கூட்டமைப்பை எப்படியும் எவரும் உடைக்கலாம் மக்கள் கவலைப்படமாட்டார்கள் என்கிறீர்கள்

தொடருங்கள்

அப்போ கூட்டமைப்பை எப்படியும் எவரும் உடைக்கலாம் மக்கள் கவலைப்படமாட்டார்கள் என்கிறீர்கள்

தொடருங்கள்

சரி கிசோர் பிழையானவராக இருந்து விட்டு போகட்டும்... (கூட்டமைப்பால் வெளியேற்ற படப்போகும் புலிகளினால் கூட்டமைப்பில் இணைக்கப்பட்ட வெளியாட்டகளையும் விட்டு விடுங்கள்)

கூட்டமைப்பில் இருக்கும் சம்பந்தன் முதலானோர் தமிழ் மக்களுக்காக இதுவரை செய்த நன்மைகள் என்ன...?? அவர்களால் யார் பயன் அடைந்தார்கள்...??

கூட்டமைப்பின் தலைவர் என்ன செய்தார்...?? குறைந்தது பாராளுமண்றத்தில் தமிழர்களுக்காக குரல் கொடுத்த (பல உறுப்பினர்கள் போல) உயிரக்காக்க நாட்டை விட்டு ஓடும் நிலையிலாவது...??

மே 2009 வரை அவர்கள் சொந்தமாக ஒன்றும் செய்யமுடியாத நிலைதானே இருந்தது. அதன் பின்னர் மகிந்த அரசின் நெருக்குதல்களுக்குள் உடையாமல் தாக்குப் பிடித்ததே பெரிய காரியம். கூட்டணிக்கு தற்போது நல்ல சந்தர்ப்பம் உள்ளது. மக்களுக்கு நல்லது செய்து தமிழரின் உண்மையான தலைமையாக வரட்டும். இல்லாவிட்டால், மக்கள் தமது தலைமையைத் தாங்களே தேர்ந்தெடுப்பார்கள்!

கிஷோருக்கு உண்மையிலேயே மக்கள் ஆதரவு இருந்தால், கூட்டணி புறக்கணித்தாலும் அவர் மக்கள் ஐக்கிய முன்னணியின் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராக வரலாம். இதைத்தான் மகிந்தவும் விரும்புவார்!

அப்படி ஒரு வேலையை கிசோர் செய்வார் எண்று நான் எதிர்பார்க்கவில்லை... ஒரு சிங்கள நாடாளுமண்றத்தின் தமிழ் உறுபினராக கிசோர் என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் சரியாக செய்து இருக்கிறார்...

90 களில் பிரேமதாசா காலங்களில் ஈரோஸ் அமைப்பின் 4 எம்பிகள் பாலகுமார் அண்ணா புலிகளில் இணைந்தபின் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தனர்... அப்போது போராளிகளால் யாழ்மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரிடம் ஒரு கேள்வி கேக்க பட்டது... அதாவது அந்த எம் பி களால் எங்களுக்கு என்ன நன்மை... அதுக்கு அரசியல் பிரிவு பொறுப்பாளர் சொன்ன பதில்...

இப்ப ஒரு சண்லைட்டின் சவற்காரத்தின் விலை நூறு ரூபாக்கள்... ஒரு எம்பி எங்கட கட்டுப்பாட்டுக்கு உள்ளை வரும் போது நாலு சண்லைட் கொண்டு வரலாம்... அப்படி எண்டால் எங்கட மக்களுக்கு 400 ரூபா லாபம் தானே...?? இதன் மூலம் சொல்ல வந்த செய்தி சுலபமானது... அந்த எம்பிக்களூடு எங்களின் மக்களுக்கு என்ன எல்லாம் பெற்று கொடுக்க முடியுமோ ( தற்காலிகமாக) அவைகளை பெற்று கொடுப்பது... எமது மக்களை காட்டி அரசு வாங்கும் கடனில் எமது மக்களுக்கு சேர வேண்டியதை வாங்கி கொடுக்க முடிந்தால் அது பிழையானதாக எனக்கு படவில்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அதன் பின்னர் மகிந்த அரசின் நெருக்குதல்களுக்குள் உடையாமல் தாக்குப் பிடித்ததே பெரிய காரியம். கூட்டணிக்கு தற்போது நல்ல சந்தர்ப்பம் உள்ளது. மக்களுக்கு நல்லது செய்து தமிழரின் உண்மையான தலைமையாக வரட்டும். இல்லாவிட்டால், மக்கள் தமது தலைமையைத் தாங்களே தேர்ந்தெடுப்பார்கள்!

மே 2009 வரை அவர்கள் சொந்தமாக ஒன்றும் செய்யமுடியாத நிலைதானே இருந்தது. அதன் பின்னர் மகிந்த அரசின் நெருக்குதல்களுக்குள் உடையாமல் தாக்குப் பிடித்ததே பெரிய காரியம். கூட்டணிக்கு தற்போது நல்ல சந்தர்ப்பம் உள்ளது. மக்களுக்கு நல்லது செய்து தமிழரின் உண்மையான தலைமையாக வரட்டும். இல்லாவிட்டால், மக்கள் தமது தலைமையைத் தாங்களே தேர்ந்தெடுப்பார்கள்!

இந்த தடவை கூட்டமைப்பு மகிந்தவுக்கு ஆதரவு குடுப்பது ஒண்றுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே தெரிவு... ஆட்சி மாற்றம் எண்று போனதடவை மகிந்தவை தூற்றினவை மகிந்தவோடை எப்படி அதுக்குள்ளை ஒட்டுறது எண்டு யோசிக்கலாம்... ஆனாலும் அதை விட்டாலும் வளி இல்லை...

மற்றது கூட்டமைப்பு மே 2009 வரைக்கும் வேறு யாரோதான் ஆட்டி வைச்சவை எண்டது தவறு... புலிகள் தங்களின் தேவைகளை கூட்டமைப்பு ஊடாக செய்ய முற்பட்டு உதவி கேட்டு இருக்க முடியும்.. மற்றும் படி புலி சொன்னது மட்டும் தான் செய்தனர் எண்டது சும்மா...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன்

அதற்கு கொஞ்சம் பொறுத்துப்பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

தயா!!!

உங்களால் தெரிவித்த கருத்துக்கள் அத்தனையும் நிஜத்துடன் ஒத்துப்போகின்றன.

பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரையும் குற்றம் சாட்டி யாருக்கும் ஆதரவு வழங்குவது எனது நோக்கமல்ல. இந்த அரசாங்க நெருக்கடிக்குள் கூட்டமைப் பு உடையவில்லை என்று சொல்வது கேலிக்குரியது. அப்படி உடையா இருந்தால் ஒரு பக்கத்தில் கூட்டமைப்பின் தலமையை புகழ்ந்து கொண்டு மறுபக்கத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அது சார்ந்த பத்திரிகைகள் வசைபாடியிருக்காது. கூட்டமைப்பு தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை கூட்டமைப்பாக பங்கு பற்றுமா? என்பது கேள்வியே! அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மாநாடு இதற்க்கு சான்று!

ஏன் எனில் கூட்டமைப்புக்குள் நான்கு கட்சிகளின் உறுப்பினர்கள் இருக்கும் போது (தமிழரசுக்கட்சி, இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ரொலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழரசுக்கட்சியின் மநாடு நடாத்தப்பட்டமை குறிப்பிட்ட கட்சியை மட்டுமெ முன்னிலைப்படுத்த எடுக்கும் நடவடிக்கையாக படவில்லையா?

கிசோர் பற்றிய விவாதத்தை இதற்க்கு மேல் நாள் இழுத்துச் செல்ல விரும்பவில்லை. நம்பியவர்களுக்கு சாமி, நம்பாதவர்களுக்கு கல் இது தான் யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

தயா!!!

உங்களால் தெரிவித்த கருத்துக்கள் அத்தனையும் நிஜத்துடன் ஒத்துப்போகின்றன.

பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ எது நிஐம் என்று சொல்லமுடியுமா.....?

எல்லாத்தையும் ஒன்றாக்கி ஒரே குட்டைக்குள் போடுவதும், ஏற்கனவே குட்டைக்குள் போடப்பட்டவைகள் வெளியில் நின்றால்...

அதுவும் இதே குட்டையில் ஊறியவைதானே என்பதும், அந்த குட்டைக்குள் ஊறிய மட்டைகளைவிட வெளியில் கிடப்பவைகளை இவற்றைவிட நல்லவை என்பதுவும், அவற்றையும் இதே மட்டைகளுடன் சமபோசனம் செய்வதும்

நிஐத்தை பிரதிபலிக்கின்றன தங்களுக்கு..

இப்படியே போனால்...

தமிழர் தமிழர் எவரையும் நம்புவதை நிறுத்தி சிங்களவன் மேல் என்று முடிவை திணித்து சுபம் போடுவதும் நடக்கும் பாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பில் இருந்து விலகி தனியாக கேட்டால் கேட்டவர் தேர்தல் முடிந்ததும் மாடு மேய்க்க போக வேண்டியதுதான், கூட்டமைப்பு இன்றி ஒரு அணுவும் இனி அசையாது. புத்திசாலித்தனம் கூட்டமைப்போடு இ்ணைந்து நின்று, தம்மையும் காப்பாற்றி, கூட்டமைப்பையும் காப்பாற்றுவதுதான். :unsure:

Edited by சித்தன்

நாம் எல்லோரும் சேர்ந்து இதை நடத்தணும்

கூட்டமைப்பை பலப்படுத்தணும்

இருக்கும் சிறுசிறு பிரச்சினைகளை ஊதிக்கொண்டிருக்காமல்..

அதை எவ்வாறு தணிக்கலாம் என்று சிந்திக்கவேண்டும்

இங்கு சிலர்

நாம் முப்படைகளுடன் பலமாக இருந்த காலத்திலிருந்து இன்னும் மீளவில்லை

தலைவர் சொன்ன செய்தியையும் புரிந்து கொள்ளவில்லை என்பது மிகவும் மனவருத்தம் தருகிறது

... எது உண்மை, எது பொய்மை என்று தெரியவில்லை? சொன்னார்கள் ....

.... ஆரம்பகாலம் முதல் கிஷோர் சிங்கள புலனாய்வுத்துறையின் முக்கிய பொறுப்பில் ..... செஞ்சிலுவை சங்க உறுப்பினர் என்ற போர்வையில் திட்டமிட்டே புகுத்தப்பட்டு வன்னிப்பிராந்தியத்தில் குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டுப்ப்குதிகளில் செயற்பட வைக்கப்பட்டவராம். அவரது கைது ஒரு நாடகம் என்று சொல்கிறார்கள், துப்பாக்கியுடன் பிடிபட்டது என்று!! மற்றும் படி புலிகளுக்கு பலதை செய்தார்/சிலரை இடம் மாற்றினார்/அதை செய்தார்/இதைச் செய்தார் என்பதெல்லாம்... உலகில் இரட்டை புலனாய்வுத்துறை அதிகாரிகள் தம்மை நம்பச்செய்வதற்கு செய்ய வேண்டியனவற்றையே தான் இவரும் செய்ததாக சொல்கிறார்கள்.

முன்பு ஒரு புலிகளின் ***** **** ஒருவருக்கு கூறினாராம், எம்மிடம் கிஷோரின் பயோடேட்டாவே இருப்பதாக!

Edited by Nellaiyan

... எது உண்மை, எது பொய்மை என்று தெரியவில்லை? சொன்னார்கள் ....

.... ஆரம்பகாலம் முதல் கிஷோர் சிங்கள புலனாய்வுத்துறையின் முக்கிய பொறுப்பில் ..... செஞ்சிலுவை சங்க உறுப்பினர் என்ற போர்வையில் திட்டமிட்டே புகுத்தப்பட்டு வன்னிப்பிராந்தியத்தில் குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டுப்ப்குதிகளில் செயற்பட வைக்கப்பட்டவராம். அவரது கைது ஒரு நாடகம் என்று சொல்கிறார்கள், துப்பாக்கியுடன் பிடிபட்டது என்று!! மற்றும் படி புலிகளுக்கு பலதை செய்தார்/சிலரை இடம் மாற்றினார்/அதை செய்தார்/இதைச் செய்தார் என்பதெல்லாம்... உலகில் இரட்டை புலனாய்வுத்துறை அதிகாரிகள் தம்மை நம்பச்செய்வதற்கு செய்ய வேண்டியனவற்றையே தான் இவரும் செய்ததாக சொல்கிறார்கள்.

முன்பு ஒரு புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் ஒருவருக்கு கூறினாராம், எம்மிடம் கிஷோரின் பயோடேட்டாவே இருப்பதாக!

அவர் என்ன செய்தாரோ தெரியாது. இன்றைக்கு அவரின் நடவடிக்கை பண்பில்லாதது. ராஜபக்ச கட்டி பிடித்தது. பள்ளியில் புகுந்து ஆசிரியரை பயமுறுத்தியது.பேப்பர் காரனுக்கு கொலை மிரட்டல்.

இதுதமிழ்நாட்டு தாதா அரசியல் வேலை செய்கிறார். இப்ப இப்படி செய்பவர். கருணா போன்ற ஆயுத குழுக்களில் இணைந்திருந்தால் நிண்டவனுக்கு எல்லாம் சூடு தான்.

இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தொடர்ந்து தேர்தல்க்கு நிற்க தகுதி அற்றவர்..

புது முகம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் வவுனியாவிலிருந்து ஒருவர் தேவை.

இவரை ப்ண்பாணவர் என்று சொல்லி மீண்டும் தேர்தலில் நிற்க வைப்பது தவறு. வவுனியாவில் ஏதோ வேற தமிழ்மகன் இல்லை எண்ட மாதிரி எல்லோ கதை போகுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.