Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எது சரியான வயது!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவரது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி..என்னால் இரு நாட்களாக யாழுக்கு வர முடியவில்லை அதற்குள் இவ்வளவு பேர் கருத்துப் பகிர்ந்து உள்ளார்கள்...நான் புலம் பெயர் நாட்டை வைத்து தான் இக் கருத்தாடலை ஆரம்பித்தேன் அதுவும் குறிப்பாக எமது சமூகத்தை முன் நிறுத்தியே ஆரம்பித்தேன்...எங்கள் சமூகத்தில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குறைவு.[கல்யாணத்திற்கு முன் பிழை செய்பவர்களை பற்றி நான் இங்கு கதைக்கவில்லை]

இங்கு கருத்து எழுதியவர்களில் பெரும்பாலொனோர் நிலாமதி அக்கா தவிர குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் திருமண முடித்தால் ஏற்படும் பிரச்சனை பற்றி தான் எழுதியுள்ளார்கள்... குறிப்பிட்ட வயதுக்கு முன் மணம் முடிக்கும் பெண்ணுக்கு பிரச்சனையே இல்லையா...மேலும் நிலா அக்கா குறிப்பிட்ட மாதிரி குறித்த வயதுக்கு முன் மணம் முடித்த பெண் தான் குழந்தை பெறுவதை இரண்டு மூன்று வருடங்களுக்கு பிற் போட்டால் பின்பு குழந்தை பிறப்பது கஸ்டம் என ஒரு சிலர் சொன்னார்கள் இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

நெடுக்ஸ்,வொல்கனோ,ஆசான்,ஈசன் உங்கள் கருத்துப்படி முப்பதைந்து வயதுக்கு பின்னர் திருமணம் முடிக்கும் பெண்களுக்கு இயற்கையாக குழந்தை பிறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதா...குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ நீரிழிவு அல்லது கொலஸ்ரோல் அதிகமாக இருந்தால் அது குழந்தை பெறுதலுக்கு தடையாய் இருக்குமா...மேலும் இது இரண்டும் ஆணுக்கா அல்லது பெண்ணுக்கா அதிகம் இருக்க கூடாது?...ஈசன் டவுன் சிண்ட்ரோம் பற்றி எழுதியிருந்தார் டவுன் சிண்ட்ரோம் என்றால் என்ன...தயவு செய்து விளக்கமாக கூறவும்.

நிழலி விதவைகள்,விவாகரத்து ஆன பெண்களுக்கு மறுமணம் என்பது எமது சமூகத்தில் வெகு அரிதாகவே நடக்கிறது...படித்த பணக்கார குடும்பத்தில் அது சாதரணம் என்றாலும் இப்ப கூட நடுத்தர குடும்பங்களில் இது நடக்க கூடாததொன்றாகவே கருதுகிறார்கள் என நான் நினைக்கிறேன்...

ஏன் ரதி அக்கா விவாகரத்து செய்ய போறியளோ?

ஏன் நான் விவாகரத்து செய்தால் நீங்கள் என்னை கட்ட ரெடியா?

  • Replies 59
  • Views 13.3k
  • Created
  • Last Reply

நிழலி விதவைகள்,விவாகரத்து ஆன பெண்களுக்கு மறுமணம் என்பது எமது சமூகத்தில் வெகு அரிதாகவே நடக்கிறது...படித்த பணக்கார குடும்பத்தில் அது சாதரணம் என்றாலும் இப்ப கூட நடுத்தர குடும்பங்களில் இது நடக்க கூடாததொன்றாகவே கருதுகிறார்கள் என நான் நினைக்கிறேன்...

எங்கள் குடும்பமும், ஆச்சியின் குடும்பமும் மத்தியதர வர்க்க குடும்பம். என் சித்தி காதலித்து ஓடிக் கட்டி, பின் கணவனை இழந்தவர். அவர் மறுமணம் முடித்து அவரின் மகளுக்கும் மணம் முடிக்கும் வயது வந்துவிட்டது. எம் சமூகத்தில் விதவை to தபுதாரன் (அல்லது மறுதலை), விவாரத்து ஆனவர் to விவாகரத்து ஆனவர் என்ற சமன்பாடு கூட இன்று உடைந்து விதவை to திருமணம் முடிக்கா ஆண் (அல்லது மறுதலை) என்று விரிந்து போகின்றது. உண்மையில் பணக்கார குடும்பத்தில் சொத்து என்ற விடயம் முன்னுக்கு வருவதால் இவை கொஞ்சம் தாமதமாகவே நடைபெறுகின்றன

எம் சமூகத்தில் துணை இழந்தவரும், துணையை நிராகரித்தவரும் கூட சாதி பார்த்து, சாதகம் பார்த்து கட்ட முற்படுவதால்தான் இப்படியான பல திருமணங்கள் மிகத் தாமதமாக நடக்கின்றன. இந்த Filtering இல்லாமல் மனுசரை மனுசர் மதிக்கும் நிலையிருப்பின் இவை தாமதிக்காது

Edited by நிழலி

டவுன் சிண்ட்ரோம் என்றால் என்ன...தயவு செய்து விளக்கமாக கூறவும்.

21 வது சோடி பரம்பரை அலகு மேலதிகமாக ஒரு பிரதியைக் கொண்டிருந்தால் பிறக்கும் குழந்தை மொங்கோலிய முக அமைப்புடன் பிறக்கின்றது. 35 வயதிற்குப் பின் கருத்தரிக்கும் பெண்ணிற்கு வயதுடன் இதற்கான சாத்தியகூறு அதிகரிக்கின்றது.

நிறைய வெள்ளைக்கார பிள்ளைகளை இந்தக் குறைபாடுடன் பார்த்திருக்கிறேன். :D

எம்மவர்கள் எவரையும் இதுவரைப் பார்த்ததில்லை.

http://en.wikipedia.org/wiki/Down_syndrome

25-1408505107m.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,வொல்கனோ,ஆசான்,ஈசன் உங்கள் கருத்துப்படி முப்பதைந்து வயதுக்கு பின்னர் திருமணம் முடிக்கும் பெண்களுக்கு இயற்கையாக குழந்தை பிறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதா...குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ நீரிழிவு அல்லது கொலஸ்ரோல் அதிகமாக இருந்தால் அது குழந்தை பெறுதலுக்கு தடையாய் இருக்குமா...மேலும் இது இரண்டும் ஆணுக்கா அல்லது பெண்ணுக்கா அதிகம் இருக்க கூடாது?...ஈசன் டவுன் சிண்ட்ரோம் பற்றி எழுதியிருந்தார் டவுன் சிண்ட்ரோம் என்றால் என்ன...தயவு செய்து விளக்கமாக கூறவும்.

35 வயதிற்குப் பிறகு தான் பல வெள்ளையினப் பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். எமது சமூகத்திலும் முதலாவது பிள்ளையை இள வயதில் பெற்றுக் கொண்டாலும் 3 வது 4 வது 5 வதை எல்லாம் 35 வயதிற்குப் பிறகு வெகு லாவகமாகப் பெற்றெடுத்துக் கொள்கின்றனர். அப்படி இருக்கிறது நிலைமை. நீங்க என்னடான்னா..!!

அதுமட்டுமன்றி நான் ஏலவே சொன்னது போல் இப்போ செயற்கை முறைக் கருக்கட்டல் வசதிகள் சர்வ சாதாரணமாக இருப்பதால் வளமான கருப்பையுள்ள எந்தப் பெண்ணும் குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதியைப் பெற்றுக் கொள்கிறாள். வயது அங்கு பெரும் தடையில்லை. அதேபோல் ஒரு சில வளமான ஆண் அணுக்களை உருவாக்கக் கூடிய ஆணும் இப்போது குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

நீரிழிவு... மற்றும் கொலஸ்ரோல் உள்ளவர்கள் கூட அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம். பெண்களில் அது இளம் பெண்களாக இருந்தாலும் கூட கர்ப்ப கால நீரிழிவு நோய் இப்போ அநேகரில் அவதானிக்கப்பட்டிருக்கிறது. குழந்தை பிறந்ததும் அது பலருக்கு நீங்கிவிடும். சிலருக்குத் தொடரும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் கர்ப்ப காலத்தில் மருத்துவ ரீதியில் அவதானமாக கவனிக்கப்படுவதோடு அவர்களின் பிரசவம் Risk பிரசவம் என்ற வகைக்குள் கொண்டு வரப்பட்டு விசேட கவனிப்புக்கள் வழங்கப்படும். அந்த வகையில் இனறு நீரிழிவால் குழந்தை பிறக்காது என்பதெல்லாம் அர்த்தமற்றதாக்கப்படுகின்றன. ஆண்களிலும் நீரிழிவுள்ள ஆண்களால்.. புகைப்பிடிக்கும் ஆண்களால் வளமான ஆண் அணுக்களை உருவாக்க முடியாது என்று கருதப்பட்டாலும்.. இவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இயற்கை அல்லது செயற்கை முறைக்கருக்கட்டலுக்கு வேண்டிய ஆண் அணுக்களை தேவையான அளவில் உருவாக்கிக் கொள்ள முடியும்.

ஆண்கள் பொதுவாக 45 வயதை தாண்டியும் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். எனவே அது ஒரு பிரச்சனையே அல்ல.

டவுன் சின்ரோமோ பிற பரம்பரைக் குறைபாடுகளோ இப்போ எல்லாம் கருத்தரித்து 6 தொடக்கம் 8 வது கிழமையில் செய்யப்படும் முளையக் கலப் பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டு குறைபாடுள்ள குழந்தைகள் குறித்து பெற்றோருக்கு அறிவுரைகள் வழங்குகின்றனர். குறைபாடுள்ள குழந்தைகள் இனங்காணப்பட்டு பெற்றோர் அவற்றை பெற்றெடுக்க விரும்பாவிடின் அவற்றைக் கருக்கலைப்புச் செய்ய மிக இலகுவாக அனுமதிக்கின்றனர்.

நாம் இன்று வாழ்வது நவீன மருத்துவ உயிர் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் (medical biotechnology, medical technology) வளர்ந்துவிட்ட காலத்தில் என்பதை தயவுசெய்து உணரத்தலைப்படுங்கள். இன்னும் உங்கள் பாட்டி பாட்டா காலத்துச் சிந்தனைகளையே உங்கள் பெற்றோரிடம் இருந்து உள்வாங்கிக் கொண்டு அதைப்படி வாழ முனையாதீர்கள்.

என்னைக் கேட்டால்.. நான் எல்லாம் திருமணம் செய்யாவிட்டாலும்.. தெரிவுக்குரிய முட்டை ஒன்றை முட்டை வங்கியில் வாங்கி.. ஒரு பெண்ணை வாடகைக்கு அமர்த்தி நிச்சயம் என்னுடைய பாதி பரம்பரை அலகைக் கொண்ட குழந்தையை உருவாக்கியே தீருவேன்.எமது குழந்தை என்பது எமது பாதிப் பரம்பரை அலகிற்கு மட்டுமே சொந்தமானது. மிகுதிப் பாதி தாயுடையது. தாய் யாராக இருந்தால் தான் என்ன. அது திருமணம் செய்துதான் பெறப்பட வேண்டும் என்பது சுத்த கட்டுப்பெட்டித்தனம் மட்டுமன்றி.. திருமணம் என்பதன் மூலம்.. ஆண்கள் பெண்களுக்கு அடிமைப்படுத்தப்படுவதில் இருந்து இது பாதுகாப்பளிப்பதுடன்.. தனிப் பெற்றோருக்கு அரச சலுகைகளும் அதிகம் கிடைக்கச் செய்யப்படுகிறது.

இப்படி... வாழ எந்தனையோ வழி இருக்க.. இதுதான் வாழ்க்கை என்று ஒரு கேடுகெட்ட வாழ்க்கையை எமது சமூகம் காட்டினால் அப்படித்தான் வாழ வேண்டும் என்றில்லை.

தனி மனித ஒழுக்கத்தை மீறாத.. பிறரின் வாழ்வுரிமையைப் பறிக்காத எந்த வாழ்க்கையையும் நாம் தெரிவு செய்து வாழலாம். :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

21 வது சோடி பரம்பரை அலகு மேலதிகமாக ஒரு பிரதியைக் கொண்டிருந்தால் பிறக்கும் குழந்தை மொங்கோலிய முக அமைப்புடன் பிறக்கின்றது. 35 வயதிற்குப் பின் கருத்தரிக்கும் பெண்ணிற்கு வயதுடன் இதற்கான சாத்தியகூறு அதிகரிக்கின்றது.

நிறைய வெள்ளைக்கார பிள்ளைகளை இந்தக் குறைபாடுடன் பார்த்திருக்கிறேன். :D

எம்மவர்கள் எவரையும் இதுவரைப் பார்த்ததில்லை.

http://en.wikipedia.org/wiki/Down_syndrome

ஊரில் டவுன்சின்றோம் பிள்ளைகள் ஒரு சிலரைக் கண்டிருக்கிறேன். வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் பல தமிழ் பெற்றோரிடத்தில் (இள வயதுப் பெற்றோர் மத்தியில் கூட) டவுன்சின்ரோம் பிள்ளைகள் இருப்பதை கண்டிருப்பதோடு அவர்களோடும் பிற அதே வகைப் பிள்ளைகளோடும் ஆய்வு ரீதியில் பணியாற்றி இருக்கிறேன்.

டவுன்சின்ரோம் மற்றும் ஆட்டிசும் ( http://en.wikipedia.org/wiki/Autism ).. போன்ற பிரச்சனைகளோடு எமது சமூகப் பிள்ளைகள் பலர் வெளிநாடுகளில் உள்ளனர். குறிப்பாக ஆட்டிசும் பிள்ளைகளின் பெற்றோரை இட்டு பல தடவை மனம் நோக வேண்டி ஏற்பட்டிருக்கிறது. பல பெற்றோர் தமது பிள்ளைக்கு ஆட்டிசும் என்று அறியக் கூட வாய்ப்பிருந்தும் அதை நம்ப மறுத்து இந்தியாவிற்கு பாதயாத்திரை செல்லும் கொடுமையைக் கூடக் கண்டிருக்கிறேன். பரம்பரை அலகு சார்ந்து ஏற்படும் ஒரு குறைபாட்டிற்கு இந்தியக் கோவில்களில் பல ஆயிரம் டாலர்களைக் கொட்டி எம்மவர்கள் யாத்திரை செல்வதிலும்.. அப்படியான பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய நாளாந்த பயிற்சிகளை வழங்க நேரத்தைச் செலவிடுவது நல்லது.

பல பெற்றோர் எனது பிள்ளை பிறந்து ஒரு வயது வரை கதைத்தான் பிறகு திடீர் என்று நிற்பாட்டிட்டான்.. கதைக்கிறான் இல்லை என்று வருவார்கள். இது ஆட்டிசும் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகவும் இருக்கலாம். வேறு பிரச்சனையாகவும் இருக்கலாம். எனவே இவ்வாறான பிரச்சனைகளைக் கொண்ட பிள்ளைகளை தயவுசெய்து உடனடியாக மருத்துவரிடம் காட்டி அவர்களுக்கு செய்ய வேண்டிய மருத்துவப் பரிசோதனைகளை செய்து பிரச்சனையை சரியாக இனம் கண்டு கொள்ளுங்கள்.

இப்படியான பிள்ளைகளின் பெற்றோருக்கு இரத்த மாதிரி எடுத்து பரம்பரை அலகுப் பரிசோதனை செய்ய கேட்பார்கள். எம்மவர்களில் பலர் இதற்கு தயக்கம் காட்டுகின்றனர். உண்மையில் இது தவறு. தேவையான பரிசோதனைகளைச் செய்து கொண்டு உங்கள் வருங்காலப் பிள்ளைகள் பற்றிய தெரிவை தகவை திருத்திக் கொள்ள முனையுங்கள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுமட்டுமன்றி நான் ஏலவே சொன்னது போல் இப்போ செயற்கை முறைக் கருக்கட்டல் வசதிகள் சர்வ சாதாரணமாக இருப்பதால் வளமான கருப்பையுள்ள எந்தப் பெண்ணும் குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதியைப் பெற்றுக் கொள்கிறாள். வயது அங்கு பெரும் தடையில்லை. அதேபோல் ஒரு சில வளமான ஆண் அணுக்களை உருவாக்கக் கூடிய ஆணும் இப்போது குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் கர்ப்ப காலத்தில் மருத்துவ ரீதியில் அவதானமாக கவனிக்கப்படுவதோடு அவர்களின் பிரசவம் Risk பிரசவம் என்ற வகைக்குள் கொண்டு வரப்பட்டு விசேட கவனிப்புக்கள் வழங்கப்படும். அந்த வகையில் இனறு நீரிழிவால் குழந்தை பிறக்காது என்பதெல்லாம் அர்த்தமற்றதாக்கப்படுகின்றன.

ஆண்கள் பொதுவாக 45 வயதை தாண்டியும் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். எனவே அது ஒரு பிரச்சனையே அல்ல.

டவுன் சின்ரோமோ பிற பரம்பரைக் குறைபாடுகளோ இப்போ எல்லாம் கருத்தரித்து 6 தொடக்கம் 8 வது கிழமையில் செய்யப்படும் முளையக் கலப் பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டு குறைபாடுள்ள குழந்தைகள் குறித்து பெற்றோருக்கு அறிவுரைகள் வழங்குகின்றனர். குறைபாடுள்ள குழந்தைகள் இனங்காணப்பட்டு பெற்றோர் அவற்றை பெற்றெடுக்க விரும்பாவிடின் அவற்றைக் கருக்கலைப்புச் செய்ய மிக இலகுவாக அனுமதிக்கின்றனர்.

ஊரில் டவுன்சின்றோம் பிள்ளைகள் ஒரு சிலரைக் கண்டிருக்கிறேன். வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் பல தமிழ் பெற்றோரிடத்தில் (இள வயதுப் பெற்றோர் மத்தியில் கூட) டவுன்சின்ரோம் பிள்ளைகள் இருப்பதை கண்டிருப்பதோடு

டவுன்சின்ரோம் மற்றும் ஆட்டிசும் ( http://en.wikipedia.org/wiki/Autism ).. போன்ற பிரச்சனைகளோடு எமது சமூகப் பிள்ளைகள் பலர் வெளிநாடுகளில் உள்ளனர். குறிப்பாக ஆட்டிசும் பிள்ளைகளின் பெற்றோரை இட்டு பல தடவை மனம் நோக வேண்டி ஏற்பட்டிருக்கிறது. பல பெற்றோர் தமது பிள்ளைக்கு ஆட்டிசும் என்று அறியக் கூட வாய்ப்பிருந்தும் அதை நம்ப மறுத்து இந்தியாவிற்கு பாதயாத்திரை செல்லும் கொடுமையைக் கூடக் கண்டிருக்கிறேன். பரம்பரை அலகு சார்ந்து ஏற்படும் ஒரு குறைபாட்டிற்கு இந்தியக் கோவில்களில் பல ஆயிரம் டாலர்களைக் கொட்டி எம்மவர்கள் யாத்திரை செல்வதிலும்.. அப்படியான பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய நாளாந்த பயிற்சிகளை வழங்க நேரத்தைச் செலவிடுவது நல்லது.

உண்மையிலே பல நல்ல கருத்துக்கள்...நானும் யோசித்தனான் இதுபற்றி குறிபிடுவதர்ற்கு..ஆனால் இதுபற்றி எழுத கொஞ்ச்சம் வாசிக்க வேண்டி இருந்தலால்...

மற்றது நெ நீங்கள் மருத்துவத்தின் முன்னேற்றம் என்று சொல்லுவதை சொல்லும் விதம் பயமாக உள்ளது. இது, எனக்கு இந்தியாவிற்கு பாத யாத்திரை போவதர்ற்கு கொடுக்கிற ஆக்கமும் உக்கத்திர்ற்கும் இணையாக நீங்கள் வெஸ்டன் மருத்துவத்தை சொல்வது போல் உள்ளது ...தவறென்றால் மன்னிக்கவும்...

மற்றது டவுன் சின்றோம் டெக்ஸ்ட் பண்ணுவது ஒரு இலகுவானது என எழுதி உள்ளீர்கள் ...அந்த டெஸ்ட் செய்வதர்ற்குரிய ரிஸ்க் ஐ சொல்லவில்லையே...அதனுடைய அடிப்படியே ..35 கூடியவர்களுக்கு செய்யும் போது...அந்த வயதில் டவுன் வர ரிஸ்க் க்கும் ..அந்த டெஸ்ட் ஆல் கரு அழிவதற்கான ரிஸ்க்கும் ஒன்று என்பதால் ஆகும்.

மற்றது இந்த திரி தொடங்கின நேரத்திலே சொல்லியிருந்தேன் ...கலியாணம், சேர்ந்து வாழ்வது எப்பவும் செய்யலாம் ..(அல்லது எனக்கு அதைபற்றி அதிகம் தெரியாது ) ஆனால் நல்ல ஆரோக்கியமான பிள்ளை கிடைப்பதர்ற்கு முதலாவது பிள்ளையை 25 -30 பெற்றுக்கொள்ளவதுதான் நல்லம் என்று சொல்வேன்...

பிறகு வருகிறேன் ...

சிறிதாக ..விவாகரத்து/ விதவை மறுமணம் பற்றி ...

எனது அப்பம்மாவும் மறுமணம் (சிறியவயதிலே அப்பப்பா இறந்து விட்டார்) செய்தவா...1950 களில். நான் நினைக்கிறேன் மறுமணம், சீதனம் பெரியவில் பிரச்சனைஆக உள்ளது ...மத்திய வர்கக்க்தில் என்றுதான் ...(மாறுகிற வர்க்கம் என்றும் சொல்லாமோ ) இப்ப விவசாயம் செய்கிற ஒரு குடுப்பத்தில் ஒருவர் ஆசிரியராக வந்தால், ஒரு ஆசியரின் மகள் வைத்தியரை வந்தால்..ஒரு பிசினஸ் ஆள் MP வந்தால். ஆனால் மீன் பிடிக்கிறவன் அந்த சமுகத்தில் ஒரு பெண் எடுப்பதாகோ, O /L , A /L படித்த பெண் இங்கே odd ஜொப்ஸ் செய்கிற வெளிநாட்டு மாப்பிள்ளை பிடிப்பகவோ ,,மறுமணம் பிடிக்கவோ பெரியளவில் மிகக் கடினம் இல்லை என்று சொல்லுவேன்...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே பல நல்ல கருத்துக்கள்...நானும் யோசித்தனான் இதுபற்றி குறிபிடுவதர்ற்கு..ஆனால் இதுபற்றி எழுத கொஞ்ச்சம் வாசிக்க வேண்டி இருந்தலால்...

மற்றது நெ நீங்கள் மருத்துவத்தின் முன்னேற்றம் என்று சொல்லுவதை சொல்லும் விதம் பயமாக உள்ளது. இது, எனக்கு இந்தியாவிற்கு பாத யாத்திரை போவதர்ற்கு கொடுக்கிற ஆக்கமும் உக்கத்திர்ற்கும் இணையாக நீங்கள் வெஸ்டன் மருத்துவத்தை சொல்வது போல் உள்ளது ...தவறென்றால் மன்னிக்கவும்...

மற்றது டவுன் சின்றோம் டெக்ஸ்ட் பண்ணுவது ஒரு இலகுவானது என எழுதி உள்ளீர்கள் ...அந்த டெஸ்ட் செய்வதர்ற்குரிய ரிஸ்க் ஐ சொல்லவில்லையே...அதனுடைய அடிப்படியே ..35 கூடியவர்களுக்கு செய்யும் போது...அந்த வயதில் டவுன் வர ரிஸ்க் க்கும் ..அந்த டெஸ்ட் ஆல் கரு அழிவதற்கான ரிஸ்க்கும் ஒன்று என்பதால் ஆகும்.

மற்றது இந்த திரி தொடங்கின நேரத்திலே சொல்லியிருந்தேன் ...கலியாணம், சேர்ந்து வாழ்வது எப்பவும் செய்யலாம் ..(அல்லது எனக்கு அதைபற்றி அதிகம் தெரியாது ) ஆனால் நல்ல ஆரோக்கியமான பிள்ளை கிடைப்பதர்ற்கு முதலாவது பிள்ளையை 25 -30 பெற்றுக்கொள்ளவதுதான் நல்லம் என்று சொல்வேன்...

பிறகு வருகிறேன் ...

நான் கல்வி கற்ற நாட்டில் எல்லாக் கர்ப்பிணிகளுக்கும் கர்ப்பம் தரித்து பொதுவாக 6 தொடக்கம் 8 கிழமை அளவில் இந்த முளைய நிலைப் பரிசோதனை நடத்தப்படும். இது வயது பார்த்துச் செய்யப்படுவதில்லை. கட்டாயம் எல்லோரும் செய்தாக வேண்டும். அதில் முளையத்தில் குறைபாடுகள் காணப்பட்டால் மட்டும் பரிசோதனைகள் தொடரும். மற்றும்படி முளையத்தின் வளர்ச்சி மட்டும் சீராக கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்.

பரம்பரை நோய்கள் இன்னாருக்கு வரும் என்பதை பெற்றோரிடம் இருந்து இரத்தப் பரிசோதனையில் இருந்து தீர்மானிக்க கஸ்டப்படுவதைக் காட்டிலும் இந்த முளையப் பரிசோதனை குழந்தைகள் குறைபாடுகளோடு பிறப்பதை குறைக்க உதவும்.

_41785614_embrio_implant416x309.gif

_41785340_embrio_implant416x226.gif

இது போன்ற பரிசோதனைகள் இயற்கையாக கருத்தரிக்கும் பெண்களில் கருத்தரித்து சில காலங்களின் பின் செய்யப்படும்.

http://news.bbc.co.uk/1/hi/health/5079802.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெ மற்றும் இந்த திரியை அவதானிப்பவர்கள் ......

இது நாங்கள் பேசுவது ரதி முதலில் இணைத்த, அல்லது தொடங்கின தலைப்பைவிட்டு வெளியே போய்விட்டதோ என்று எண்ண தோன்றுகிறது..

டவுன் சின்றோம் இலங்கையிலும் நான் பார்த்திருக்கிறேன். நான் இருந்த இடத்தில் 2 பிள்ளைகள் இருந்தவர்கள் . பின்னர் உடுவிலில் ஒரு "உணமுற்ற பிள்ளைகளின் இல்லத்திலும் பார்த்திருக்கிறேன் ..அவர்களுடைய பெயர் ?(ARC ) " ஆக்" என்று தான் சொல்லுற நாங்கள்...உடுவில் பெண்கள் பாடசாலைக்கு கிட்ட என நினைவு. அகவே இது ஒரு இல்லாத பிரச்சனை என கருத வேண்டாம்.

டவுன் வார சந்தர்பங்களை பார்க்க இந்த இணைப்பபை பாருங்கள்...இருபது வயதில் 2000 இல் ஒன்று என்ற நிலையில் இருப்பது 35 வயதில் 350 இல் ஒன்றாகவும் 40 வயதில் அதுவே 100 ஒன்றாகவும் பின்னர் 45 வயதில் 30 இல் ஒன்றாகவும் கூடி செல்வதை ...

http://www.ndss.org/index.php?option=com_content&view=article&id=61:incidences-and-maternal-age&catid=35:about-down-syndrome&Itemid=78

மற்றது எனக்கு தெரிய இலங்கை கனடா, usa , பெரும்பாலும் UK ..இல் டவுன் சின்றோம் க்கு டெஸ்ட் செய்வதில்லை..இணைப்பை பார்க்க..(கனடா, USA பாவிப்பது மிகவும் பிரபல்யமான சுகாதார அமைப்பு (CDC என்று சொல்வது) ...இங்கு செய்வது ஸ்க்ரீனிங் மட்டுமே. கூடின ரிஸ்க் உள்ளவர்களுக்கே மேற்கொண்டு டவுனுக்குரிய சிறப்பு டெஸ்ட் செய்வது.. ஏனெனில் அந்த டெஸ்ட் களில் கரு அழிவதற்கான சந்தர்பம் 200 இல் ஒன்று..எனவே...35 வயதிர்ற்கு கூடிய ஒருவருக்கு செய்வது அவர் விரும்பினால் செய்யலாம்..ஏனெனில் அவருக்கு பிள்ளை டவுன் அக வருவதும் அது இந்த டெஸ்ட் ஆல் கலைவதும் கிட்டதட்ட ஒன்றே...

Screening tests during pregnancy

Various screening tests can help identify whether you have a high risk of carrying a baby with Down syndrome. Blood tests typically have been offered around the 16th week of pregnancy to screen for Down syndrome, spina bifida and various other chromosomal disorders.

If you want an earlier risk assessment, the first trimester combined test, done in two steps from the week 11 to week 13 of pregnancy, may be your best choice. About 5 percent of women who undergo the first trimester combined test have a false-positive result, meaning they're identified incorrectly as having a high risk of delivering a baby with Down syndrome. The first trimester combined test includes:

* Ultrasound. The doctor uses ultrasound to measure a specific region on the back of a baby's neck. This is known as a nuchal translucency screening test. When abnormalities are present, more fluid than usual tends to collect in this tissue.

* Blood tests. Results of the ultrasound are paired with blood tests that measure levels of pregnancy-associated plasma protein-A (PAPP-A) and a hormone known as human chorionic gonadotropin (HCG). Abnormal levels of PAPP-A and HCG may indicate a problem with the baby.

If early assessment isn't your first priority, you can have full integrated testing, which is done in two parts during the first two trimesters of your pregnancy. The results of the two parts are combined to estimate your risk that your baby has Down syndrome. Only about 1 percent of women have a false-positive result with full integrated testing, so fewer women require more invasive testing.

* First trimester. Part one includes an ultrasound to measure nuchal translucency and a blood test to measure PAPP-A.

* Second trimester. Done at 15 to 20 weeks of pregnancy, the quad screen measures your blood level of four pregnancy-associated substances, alpha-fetoprotein, estriol, HCG, and inhibin A.

If a screening test indicates a high risk of Down syndrome, a more invasive test may be used to determine whether your baby actually has Down syndrome.

About one in 20 women will have a positive result with any of these screening tests — far more than those who eventually deliver a baby with a chromosomal abnormality. In fact, most women who have a positive result from a screening test deliver healthy babies.

Diagnostic tests during pregnancy

If your screening tests are positive or worrisome or you're at high risk of having a baby with Down syndrome, you might consider further testing to confirm the diagnosis. Diagnostic tests that can identify Down syndrome include:

* Amniocentesis. A sample of the amniotic fluid surrounding the fetus is withdrawn through a needle inserted into the mother's uterus. This sample is then used to analyze the chromosomes of the fetus. Doctors usually perform this test after 15 weeks of gestation. The test carries a one in 200 risk of miscarriage.

* Chorionic villus sampling (CVS). Cells taken from the mother's placenta can be used to analyze the fetal chromosomes. Typically performed between the ninth and 14th week of pregnancy, this test carries a one in 100 risk of miscarriage.

* Percutaneous umbilical blood sampling (PUBS). Blood is taken from a vein in the umbilical cord and examined for chromosomal defects. Doctors generally perform this test after 18 weeks of gestation. This test carries a greater risk of miscarriage than does amniocentesis or chorionic villus sampling. Generally, this test is only done when speed of diagnosis is essential.

Each of these three tests is 98 to 99 percent accurate in diagnosing Down syndrome before birth.

எனக்கு தெரிகிறது இங்கே நான் எழுதுவதும் திரியின் ஆரம்பமும் வேறு வேறு என..ஆனால் வேறு ஓரிடத்தில் சொன்னது போல் இங்கே சில புலத்தில் சில பல "மித்" உலாவுகிரன்றன...என்னால் முடிந்தவர்ரிக்கு எனக்கு தெரிந்தவற்றை சொல்ல விரும்புகிறேன்...மற்றது டவுனை பற்றி பிறகு எழுதுகிறேன்...

பிரயோசனமான இணைப்புகள் :

http://www.cdc.gov/ncbddd/birthdefects/DownSyndrome.htm இதில் உள்ள வேறு வேறு இணைப்புகளும் நல்லம்

http://bodyandhealth.canada.com/condition_info_details.asp?disease_id=248

புலம் பெயர்ந்தநாட்டில்,எமது சமூகத்தில் குறிப்பாக பெண்கள்?

யாரும் நீங்கள் கேட்டதை அவதானித்தாயில்லை,பிரான்சிஸ் மாஸ்டர் விலங்கியல் படிப்பித்த கணக்கு தொடங்கிவிட்டார்கள் பிரசங்கத்திற்கு புள்ளிவிபரங்களுடன்.

புள்ளிவிபரங்களும்,விஞ்ஞானத்தரவுகளையும் யார் கேட்டது.அனுபவத்தில் கண்டத்தை சொல்லுகின்றேன்.பெண்கள் 20- 24 வயதில் கல்யாணம் கட்டுவதே புலம் பெயர்ந்த நாட்டில் சிறந்தது.இது நான் நடைமுறையில் கண்டது.எனது நண்பர்களில் இருவர் மாத்திரமே அப்படி கல்யாணம் முடித்தார்கள்.அந்த இருவரின் மனைவிமாரும் தான் உண்மையான சந்தோசமான வாழ்க்கை வாழ்கின்றார்கள்.ஒருவர் லண்டனில்,மற்றவர் கனடாவில்.இருவருக்கும் பிள்ளைகள் இப்போது யுனிவேர்சிடி. அவர்களும் 40 வயதிற்கு இற்கு குறைய இளமையாகவும் அழகாகவும் வேறு இருக்கின்றார்கள்.அந்தமாதிரி வேலைக்கும் போய்வந்து பிள்ளைகளுடனும் நண்பர்கள் மாதிரி திரிகின்றார்கள்.பாட்டிகளுக்கு வந்தாலும் அந்த மாதிரி ஆட்டம்.30 மேல கல்யாணம் கட்டிய எனது நண்பர்களின் மனைவிமார் எந்த நேரமும் பிள்ளைகள் வளர்ந்துவர தங்கள் வாழ்க்கையும் முடிந்துவிடும் என்று ஒரே அங்கலாய்ப்பு.தங்களில் கவனமுமில்லை பார்ததால் இன்னமும் 10 வயது கூடியது போலொரு தோற்றதுடன் வருவார்கள்.இது நான் யாருக்கும் சொல்ல வேணும் என்று பல நாள் நினைத்திருந்த உண்மை

இவ்வளவும் எழுதிய நான் எனது மனைவி பற்றி? அவா எனக்கு என்றும் 16.

நெடுக்ஸ்,வொல்கனோ,ஆசான்,ஈசன் உங்கள் கருத்துப்படி முப்பதைந்து வயதுக்கு பின்னர் திருமணம் முடிக்கும் பெண்களுக்கு இயற்கையாக குழந்தை பிறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதா...

உங்கள் கேள்விக்கு "ஆம்" என்றோ "இல்லையென்றோ" அறுதியாக கூறுவது கடினம்.

தென்-கிழக்கு ஆசிய பகுதியில் சிறப்பு மகபேற்று வைத்தியசாலைகளில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் செய்யப்பட்ட புள்ளிவிபர மற்றும் மருத்துவ-விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகளாக மருத்துவ-விஞ்ஞானிகள் கூறுவது:

முப்பதைந்து (குறிப்பாக 32) வயதுக்கு பின்னர் (திருமணம் முடிக்கும்) பெரும்பாலான பெண்கள், இயற்கையாக முதாலவது குழந்தை உருவாக்கத்தில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர் என்பதையே. அதுமட்டுமல்ல உருவாகும் குழந்தைகளிலும் கணிசமான குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளது.

இளவயதில் முதல் குழந்தையை பெற்றவர், 2 வது, 3 வது, .... குழந்தைகளை 35 வயதின் பின்னர் பெறுவதில் பாரிய பிரச்சனைகள் பதியப்படவில்லை.

எதிலும் விதிவிலக்குகள் உண்டு. தனிப்பட்ட நபரின் உடல் நிலை, ஆரோக்கியம் என்பதுவும் இதில் கருதப்பட வேண்டும் என்பது எனது கருத்து. சுறுசுறுப்பாக இயங்குபவர்களுக்கு (உடல் உழைப்பு), பிரச்சினைகள் குறைவாக இருக்கலாம் என்பது எனது கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.