Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீய கொலஸ்ரோல்(LDL) - குறைக்க முடியுமா?

Featured Replies

நன்றி நெடுக்ஸ்,

Trans fat என்பதன் அர்த்தம் என்ன (HDL லா?)

நன்றி நெடுக்ஸ்..

Trans fat என்பது hydrogenate செய்யப்பட்ட கொழுப்பு என்று விளங்கிக் கொண்டால் சரியா? அத்துடன் Trans fatஅதிகமுள்ள பொருட்களையும் தவிர்க்க வேண்டும் அல்லவா?

உயர்தரம் இரசாயனவியல் படித்திருந்தால், உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா தெரியவில்லை, ஐதரோ காபன் (Hydrocarbon) மூலக்கூறுகளில் சிஸ் (Cis), ரான்ஸ் (Trans) என இருவகை இருக்கும்.

fig2_14.gif

பொதுவாக நிரம்பத கொழுப்பமிலங்களி சிஸ் வகையை சார்ந்தவை. பழைய முறை மாஜரீன் தயாரிப்பில், ஐதரசனேற்றம் செய்யும் போது நிரம்பாத கொழுப்பமிலங்களில் ஒரு பகுதி ரான்ஸ் நிரம்பாத கொழுப்பமிலமாக மாறும். இதுவும், நிரம்பிய கொழுப்பமிலங்களை போல உடலில் LDL கூட்ட காரணமாகும்.

0170950303001.png

இப்போ கனடாவில் ரான்ஸ் கொழுப்பமிலங்களின் அளவை கட்டுப்படுத்தும் சட்டம் இருக்கிறது. ஆனாலும் பல டோ நட்ஸ் (Doughnut) வகைகளில் (Tim Hortons பொன்ற கடைகளில் இருக்கும் baked foods) இன்னும் ரான்ஸ் கொழுப்புகள் அங்கீகரிக்கப்பட்ட அளவிலும் அதிகம் இருப்பதாக அறிக்கைகள் சொல்கிறன.

தாவர எண்ணேய்கள்/ கொழுப்புகளிள் பல வகையான கொழுப்பமிலங்களை கொண்டது, அதாவது C10, C12....... இப்படி மாறுபடும். ஒவ்வொரு கொழுப்பமிலமும் அவற்றின் காபன் எண்ணிக்கைக்கு ஏற்ப வெவ்வேறு உருகுநிலை, பளிங்காகும் வெப்பநிலையை கொண்டவை. இந்த வேறுபாட்டை பயன் படுத்தி, நீண்ட காபன் சங்கிலிகளை கோண்ட நிரம்பிய கொழுப்பமிலங்களை பிரிக்க முடியும். இவை அறை வெப்பனிலையில் திண்மாக இருக்கும். பொதுவாக இப்படியான கொழுப்பமிலங்களை தேங்காயேணேய், பாம் எண்ணேய்/ மரக்கறி எண்ணேய் (Palm oil) ஆகியவற்றில் இருந்து பிரித்தெடுப்பார்.

பின்னர், இந்த கொழுப்பமிலங்களை, கனடா போன்ற நாடுகளில் அதிகம் கிடைக்கும் கனோலா எண்ணேய், சூரியகாந்தி எண்ணேயுடன் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து, நீரும் கலந்து மாஜரீன் செய்வார்கள். இந்த முறை தான் இப்போ அதிகம் பயன் பாட்டில் இருக்கிறது. இப்படி செய்த மாஜரினில் ரான்ஸ் கொழுப்புக்கள் இருக்காது. அதனால் தான் ரான்ஸ் கொழுப்பு இல்லாத மாஜரீன் என விளம்பரம் செய்கிறனர்.

Edited by KULAKADDAN

  • Replies 77
  • Views 34.4k
  • Created
  • Last Reply

ஆனைக்கோட்டை நலெண்ணையும், பூ நகரி அரிசியும், உரும்பிராய் கிழங்கும் சாப்பிட்ட பின் .......

வயித்தெரிச்சலிலை ...... வயாக்கரா குழுசை திண்டு போட்டு, திமிர் எடுக்கும் தமிழன் ஒழி.

நல்லெண்ணேயிலும் பல நிரம்பாத கொழுப்பமிலங்கள் இருக்கிறன. அவை உடலுக்கு நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐதரசனேற்றம் செய்யும் போது நிரம்பாத கொழுப்பமிலங்களில் ஒரு பகுதி ரான்ஸ் நிரம்பாத கொழுப்பமிலமாக மாறும். இதுவும், நிரம்பிய கொழுப்பமிலங்களை போல உடலில் LDL கூட்ட காரணமாகும்.

நான் குறிப்பிட நினைத்த முக்கியமான பகுதி.சிலவேளைகளில் ..கொஞ்சம் கூடி விடுமோ என நினைத்து சொல்லவில்லை..இந்த Trans fatty அசிட் நிரம்பிய அமிலங்களை விட உடலுக்கு கூடாதவை..அவைற்ரின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டங்கள் வெவேறு நாடுகளில் உண்டென தெரியும். கனடாவினது பற்றி குறிப்பாக தெரியாது. USA இல் ஸ்டேட்ஸ் க்கு ஸ்டேட்ஸ் வேறுபடுவதையும் கேள்விப்பட்டுள்ளேன். உணவுப் பொருட்டுகளின் விபரத்தை பார்க்கும் பொது தெரியும். இவையும் கொலஸ்ட்ரோல் மாதிரி விலங்குணவில் இருந்தே வருபவை, ஆனால் இப்போது எண்ணைகளை நிரம்பலடைய செய்யும் போதும், பிற செயற்பாடுகளினாலும் இப்போது தாவர எண்ணைகளிலும் அவை காணப்படுகின்றன. வீடுகளில் பாவித்த எண்ணையை திரும்ப பாவித்தாலும் வரும் என்று படித்த/ கேள்விப்பட்ட ஜாபகம்.

மாதிரி விலங்குணவில் இருந்தே வருபவை,

விலங்குணவு என பொதுப்படையாக கூறுவதிலும், இரை மீட்கும் விலங்குகள் மாடு, ஆடு என்பவற்றை குறிப்பாக சொல்லவது பொருத்தம். இரை மீட்கும் விலங்குகளின் உணவுச்சமிபாட்டில் பக்ரீரியா போன்ற நுண்ணங்கிகள் பங்கெடுக்கிறன. அவை ரான்ஸ் கொழுப்புக்களை உருவாக்குகிறன். பின் இந்த கொழுப்பு பால் சுரப்பிக்கு எடுத்து செல்லப்பட்டு பால் கொழுப்பின் ஒரு பகுதியாக வரும். இதனால் பட்டரில் 4 % வரையான ரான்ஸ் கொழுப்பமிலங்கள் இருக்கலாம். பழைய முறையில் தயாரிக்கப்பட்ட மாஜரீனில் 15 % வரை ரான்ஸ் கொழுப்புக்கள் இருக்கலாம். இப்போது ஐதரசனேற்றம் செய்யாத மாஜரீன்கள் சந்தையில் தாரளமாக கிடைக்கிறன. அவற்றில் ரான்ஸ் கொழுப்புகள் இருக்காது.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா போன்ற நாடுகளில் அதிகம் கிடைக்கும் கனோலா எண்ணேய்,

வேறு ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தேன் பஸ் இல் கனடாவின் கிழக்கு மேற்காக பயணம் செய்ததென..இந்த கனோலா "வயல்" ( சரியோ தெரியவில்லை) பார்க்க வேண்டுமானால் "greyhound" ஒரு டிக்கெட் எடுத்துக்கொண்டு போக வேண்டும். மணித்தியாலம் அல்ல நாட்கணக்காக ( 2 அரை நாள் ) கனோலா வெளிகளின் ஊடக பயணம். சலிப்பூட்டாத பயணம்.. பூ ஒரு மஞ்சள் நிறமானது, நான் போன நேரத்தில் ஜூன்/ ஜூலை என்று நினைக்கின்றேன் ஒரே மஞ்சள் வெளி..

இந்த greyhound பற்றி --கனடாவிற்கு வெளியில் உள்ள யாழ் நண்பர்களுக்காய்...வட அமெரிக்காவின் மிகப்பெரிய தனியார் போக்குவரத்து சேவை..அதன் குறியீடு hound --ஒருவிதமான "நாய்" சாதி..இதை எனக்கு தெரிய சிலர்/ஒரு தமிழ் ஐயர் உட்பட அழைப்பது .."நாய் பஸ்" என. சில பிரதான நகரங்களுக்கு சொல்லும் பஸ்களில் இப்போது இன்டர்நெட் வசதியும் உண்டு. சூரியாவின் வாரணம் ஆயிரம் படத்தில் சொல்லுவார்.."greyhound இல டிக்கெட் எடுத்துகொண்டு வரதெண்டு"

இன்னுனொரு தகவல்..கனடாவில் சச்கேசுவான் என்று ஒரு மாகாணம் உள்ளது..அதுவே கனடாவின்/ ? உலகத்தின் கோதுமை களஞ்சியம்..ஆனால் இந்த கனோல பிசினஸ் ஆல் அது தனது தனித்தன்மையை இழந்து வருவதாக எனது ஆங்கில ஆசியர் சொன்னார்..அவரது பூர்வீகம் ஐரோப்பா ஆனால் ஒரு காலத்தில் நிறைய ஐரோப்பா ஆட்கள் வந்தவர்களாம்..இங்கு பொன்னும் மணியும் இருக்கென நினைத்து..அப்படி வந்த குடியேறிய குழுமத்தை சார்ந்தவர்..அவர் இங்கு கன காலம் வாழ்ந்தது சச்கேசுவான் என்று சொன்னார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பகுதியுடன் கொழுப்பு பகுதியை முடிக்கலாம் என்று நினைக்கிறேன்..

TG ட்ரைகிளிசெறைடே...

முன்னுள்ள நெடுக்கால போவானின் இணைப்பில் உள்ள படங்களை பார்த்தால் தெரியும் TG க்கு fatty அசிட் உம் சிளிசெரோல் உம் தேவையென..இந்த கிளிசெரோல்..காபோவைதறேர்ருக்களில் / மாப்போருள்களில் இருந்து வருவது. எனவே மேலதிகமாக எமது உடலில் உள்ள மாப்பொருள் TG ஆகவும் மாறும்..

என்னவோ அடிப்படை இதுதான்...மேலதிகமாக உள்ள சக்தி.. உடம்பில் சேமிக்கப்படும்..அது TG , கொலஸ்ட்ரோல்,... வேற வேறாகவும் வருமாக்கும் எனக்கு அது தெரியாது..மாப்பொருளாக உள்ள சேமிப்பு ஒருநாளில் / ஒருநாள் பட்டினியுடன் போய்விடும் அது பெரிய பிரச்சனை இல்லை. புரதம் / கூடுதலா எடுக்கும் புரதம் ..சில அனுசேப தாக்கங்களுக்கு உட்பட்டு..யூரியா ஆகவும்..குளுக்கொசுக்கிரிய மூலப்போருளாகவோ அல்லது கொளுப்பமிலங்களுக்குரிய மூலப்போருலாகவோ மாறும்..மற்றது இந்த கொழுப்பு அதுதான் எல்லா சிக்கலுக்கும் காரணம்..

இந்த TG ஒப்பீடு அளவில் இதயத்திர்ற்கு பாதிப்பு கொடுப்பது குறைவு. வேறு எந்த risk factors உம் இல்லாவிடில் அதனால் இதயதிர்ற்கு பாதிப்பு இல்லை என்றே கொள்ளலாம்..(Risk factors பற்றி பிறகு எழுதுகிறேன்)..நான் நினைக்கிறேன் நிழலி தனக்கு TG கூட என்று சொன்னமாதிரி..அப்படியெனில் ..அவருக்கு ?50 வயதிக்கு ( சரிபாத்து பிறகு வடிவாக எழுதுகிறேன்) குறைவாகவும் , பிரஷர் இல்லாமல், வேறு ஹார்ட் வருத்தம் இல்லாமல், அவரது குடும்ததில் ஒருவருக்கும் ஹார்ட் வருத்தம் வராவிடிருந்தால், குண்டாக நிறைகூடியவராக இல்லாமல் இருந்தால்,................... அவருக்கு உள்ள கூடிய நிலையில் உள்ள TG ஆல் பிரச்சனை இல்லை. ஆனால் அவருக்கு மேற்கூறிய பிரச்சனைகள் இருந்தால்..கவனிக்க வேண்டும்..(நிழலி மன்னிக்கவும் உங்கள் பெயரை பாவித்ததர்ற்கு)

முடிவாக TG காபோவைதரேற்று இருந்து வரும் பாகம் ஒன்றையும் கொண்டுள்ளதால்..கூடுதாலாக மாப்பண்டங்கள் சாப்பிபவர்களுக்கு வர சந்தர்பம் உண்டு. மற்றைய வற்றோடு ஒப்பிடும் போது இதனால் வரும் தீமை குறைவு..இதய சம்பந்தமான.. ஆனால் TG கூடின அளவுகளில் பன்கிரியடிஸ் என்கின்ற சதைய அலற்ர்சி நோயை ஏற்படுத்தும்

இன்னுமொன்று..ஒருவர் சொல்லியிருந்ததவர்..உடம்பு வாசி பற்றி, உண்மையிலே அது ஒரு தனியான கொழுப்பு சம்பந்தம்பட்ட வியாதிகள்..அது பொதுவாக குறைவு என்றுதான் சொல்லுவேன்..அது சிலருக்கு மிகக் கூடுதலான அளவு TG , கொலேச்ற்றோல் கூடின தன்மை.அது பரம்பரை வியாதிகள்..கொழுப்பு சேமிப்பு வியாதிகள் என்ற வகைக்குள் வரும்.. அது பெரிதாக தேவையில்லை..எனக்கும் தெரியாது :)

இன்னுமொன்று முடிவாக விசு / அல்லது வேறு ஒருவர் சொல்லியிருந்தார்..."குளிசை இல்லாத சிகிச்சை" பற்றி..

விசு இதை தனிப்பட்ட கருத்தாக/ எதிரானதாக எடுக்க கூடாது..

எங்களில் பலர் குளிசைகள் எடுப்பது பற்றி பல விதமான பயங்கள் கொடுள்ளோம்..எனது உறவினர் ஒருவர் பிரான்சில் உள்ளார்..டியாபெடிக் சுகர் கொன்றோல் சரியான வகையில் இல்லை..மருந்து எடுக்க பயம்/ தயக்கம்..முலிகை மருத்திவம்/ ஒருவிதமான tea குடிக்கிறவா..ஒருவருக்கு ஓரளவுதானே சொல்ல முடியும்..அடிக்கடி கஸ்ரபடுகிரா..

டியாபெடிக் ஒ அல்லது கொலஸ்ட்ரோல் என்று வந்தால் குளிசை எடுக்க வேண்டும் என்றால் தவறாமல் எடுக்க வேண்டும்..side effect வருமென குளிகைகள் எடுக்காதது..கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் மணிவண்ணன் சொன்னது போல."பினன்சே கொம்பனியில் காசு போட்டால் நல்ல வட்டி தருவாங்கள் ஆனால் பிறகு முதலே போடும்" என்றமாதிரி குளிசைகள் எடுக்காட்டி side effect பக்க விளைவுகள் வராது ஆனால் ஆளே சில காலத்தில் போகவேண்டி வரும்.

கடைசி..யார் யாருக்கு எத்தினை/அல்லது லிமிட் என்பது கொஞ்சம் குழப்பமானது..அது ஒரு பொதுவான/standard MCQ ..அதை தவிக்க விரும்புகிறேன்.

குணசீலனிடம் யாழ்பாணத்தில் போண்டனி படித்திருந்தால்.."heading போடுங்கோ செஸ்ட் பெயின்" வகை வகையான நெஞ்சு வலி

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொன்று முடிவாக விசு / அல்லது வேறு ஒருவர் சொல்லியிருந்தார்..."குளிசை இல்லாத சிகிச்சை" பற்றி..

விசு இதை தனிப்பட்ட கருத்தாக/ எதிரானதாக எடுக்க கூடாது..

எங்களில் பலர் குளிசைகள் எடுப்பது பற்றி பல விதமான பயங்கள் கொடுள்ளோம்..எனது உறவினர் ஒருவர் பிரான்சில் உள்ளார்..டியாபெடிக் சுகர் கொன்றோல் சரியான வகையில் இல்லை..மருந்து எடுக்க பயம்/ தயக்கம்..முலிகை மருத்திவம்/ ஒருவிதமான tea குடிக்கிறவா..ஒருவருக்கு ஓரளவுதானே சொல்ல முடியும்..அடிக்கடி கஸ்ரபடுகிரா..

டியாபெடிக் ஒ அல்லது கொலஸ்ட்ரோல் என்று வந்தால் குளிசை எடுக்க வேண்டும் என்றால் தவறாமல் எடுக்க வேண்டும்..side effect வருமென குளிகைகள் எடுக்காதது..கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் மணிவண்ணன் சொன்னது போல."பினன்சே கொம்பனியில் காசு போட்டால் நல்ல வட்டி தருவாங்கள் ஆனால் பிறகு முதலே போடும்" என்றமாதிரி குளிசைகள் எடுக்காட்டி side effect பக்க விளைவுகள் வராது ஆனால் ஆளே சில காலத்தில் போகவேண்டி வரும்.கடைசி..யார் யாருக்கு எத்தினை/அல்லது லிமிட் என்பது கொஞ்சம் குழப்பமானது..அது ஒரு பொதுவான/standard MCQ ..அதை தவிக்க விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தங்களது கருத்துக்கு

ஆனால் எனது கருத்து என்னவெனில் முதலாவது பரிசோதனையின் பின்..

உடனேயே மாத்திரைகளை பாவிப்பது தேவையற்றது என்பதுதான்.

சாப்பாட்டு முறைகளை மாற்றுவதுதான் முதலாவது சிகிச்சை.

இது முதலுதவி போன்றது.

அதன்பின்பும் தங்கள் ரத்தபரிசோசனையில் மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும்

அதனடிப்படையில் தான் தங்களது அடுத்த கட்ட சிகிச்சைகள் இருக்கவேண்டும் என்பது தான் எனது கருத்து.

பலர் இங்கு சாப்பாட்டில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தாமல் குளிசைகள் பாவிப்பதன் அளவை அதிகரித்தபடியே உள்ளனர்.

இதன் விளைவு....?

நான் இதுவரை மாத்திரைகள் பாவிக்காது காலத்தை ஓட்டிவிட்டேன்

6 மாதத்துக்கு ஒருமுறை ரத்த பரிசோதனை செய்வேன்

எல்லாமே எனது வயசுக்கு ஏற்ப கணக்காக உள்ளது.

ஆனால் இரத்த அழுத்தம் வருமா..?

கடவுளுக்கே வெளிச்சம்.

Edited by விசுகு

நன்றி தங்களது கருத்துக்கு

ஆனால் எனது கருத்து என்னவெனில் முதலாவது பரிசோதனையின் பின்..

உடனேயே மாத்திரைகளை பாவிப்பது தேவையற்றது என்பதுதான்.

சாப்பாட்டு முறைகளை மாற்றுவதுதான் முதலாவது சிகிச்சை.

இது முதலுதவி போன்றது.

அதன்பின்பும் தங்கள் ரத்தபரிசோசனையில் மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும்

அதனடிப்படையில் தான் தங்களது அடுத்த கட்ட சிகிச்சைகள் இருக்கவேண்டும் என்பது தான் எனது கருத்து.

பலர் இங்கு சாப்பாட்டில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தாமல் குளிசைகள் பாவிப்பதன் அளவை அதிகரித்தபடியே உள்ளனர்.

இதன் விளைவு....?

நான் இதுவரை மாத்திரைகள் பாவிக்காது காலத்தை ஓட்டிவிட்டேன்

6 மாதத்துக்கு ஒருமுறை ரத்த பரிசோதனை செய்வேன்

எல்லாமே எனது வயசுக்கு ஏற்ப கணக்காக உள்ளது.

ஆனால் இரத்த அழுத்தம் வருமா..?

கடவுளுக்கே வெளிச்சம்.

உண்மையில் மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பதோ அல்லது உணவு முறையை மாற்றுவதன் மூலம் சரி செய்ய முடியுமா என்பதையோ உங்களின் இரத்த பரிசோதனை முடிவுகள் வைத்து உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடனே தீர்மானிக்க வேண்டும். குருதியில் கொலஸ்திரோல் அளவு உணவு மாற்றம் மூலம் குறிப்பிட்ட கால அளவுக்குள் குறைக்க முடியாத அளவுக்கு கூடிவிட்டதென்றால், மாத்திரை எடுக்க வேண்டித்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்த சாப்பாடு எண்ணெயில் பொரித்து சாப்பிடுதல் ஆகும்...நானும் எவ்வளவோ குறைக்கப் பார்க்கிறேன் முடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதய நோயை குணப்படுத்தும் தங்காளி மாத்திரை

தக்காளியில் இருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரையான Ateronon இதய நோய்க்கு முக்கிய காரணியான இருக்கும் கெட்ட கொலஸ்ரோலின் அளவை குருதியில் கட்டுப்படுத்தி அந்நோய் மற்றும் மூளையுடன் சம்பந்தப்பட்டு ஏற்படும் பக்கவாதம் போன்ற நோய்களை கட்டுப்படுத்த உதவுவதாக கண்டறிந்துள்ளனர்.

தக்காளியின் தோலில் அதன் செந்நிறத்துக்கு காரணமாக இருக்கும் lycopene என்ற வேதியற் பொருள் கெட்ட LDL என்ற கொலஸ்ரோலை உடற்கலங்களுக்கு அதிக அளவில் காவும் கூறை கட்டுப்படுத்தி அதன் மூலம் உடலில் கொலஸ்ரோல் பெருகாமல் தடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த மாத்திரை தற்போது கொலஸ்ரோலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் statin ஐ விட அதிக அளவு வினைத்திறன் உள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமும் உள்ளெடுக்கப்பட்டக் கூடியதாக இருக்கும் இந்த மாத்திரை இன்னும் பல சுற்று சோதனைகளின் பின்னே தான் பாவனைக்கு அனுமதிக்கப்படும் என்று கூறும் ஆய்வாளர்கள் இம்மாத்திரை தக்காளியில் இருந்து பெறப்பட்ட கூறில் இருந்து அல்லது இயற்கையில் இருந்து பெறப்பட்ட ஆனால் மறுசீரமைப்பட்ட வேதியற் கூறைக் கொண்டும் தயாரிக்கப்படலாம் என்பதால் இந்தச் சோதனைகள் அவசியம் எங்கின்றனர்.

உலகில் மனிதரிடத்தில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்களில் இதய நோய்களும் உள்ளடங்குகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

source:குருவிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Functional food எனும் பதத்தை எப்படி தமிழாக்குவது என்பதில் ஒரு குழப்பம். செயற்பாட்டு உணவுகள்/ தொழிற்பாட்டு உணவுகள் என்பதா? என் வசதிக்கு செயற்பாட்டு உணவுகள் என இப்பகுதியில் பயன்படுத்துகிறேன்.

செயற்பாட்டு உணவுகள் என்றால் என்ன ? என்பது சிந்திக்க வைக்கும் ஒரு வினா. அதைப் பற்றி முதலில் சிறிது சொல்லிவிட்டுப் பின்னர் விடயத்துக்கு வருகிறேன்.

செயற்பாட்டு உணவுகள் என்பவையாவன உணவு அல்லது உணவு தயாரிப்புகள் சாதாரணமாக உணவு கொடுக்கும் பயன்களுக்கு மேலதிகமாக உடல் நலனைப் பேணும் செயலை ஆற்றக்கூடியன.

உதாரணமாக: ஒமேகா 3 கொழுப்பமிலத்தை அதிகளவில் கொண்டிருக்கும் மீன், தாவர எண்ணெய் வகைகள் (சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், சோயா எண்ணெய்) உடல் கொலஸ்திரால் அளவைக் குறைத்தல்.

வளர்ந்த நாடுகளில் இன்று சந்தையில் கிடைக்ககூடிய செயற்பாட்டு உணவு வகைகளாக

ஒமேகா 3 கொழுப்பமிலத்தைச் செறிவாகக் கொண்ட முட்டை, பாண் (Bread), சில வகைச் சிறப்பியல்பான இலாக்டிக் அமில பாக்டீரியாக்களைக் ( Lactic acid bacteria)கொண்டு நொதிக்கச்செய்யப்பட்ட யோகர்ட், போன்றனவாகும்.

மீனும், மீனில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களும் செயற்பாட்டு உணவுக்கூட்டத்தில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.

மீன்

1. கல்சியத்திற்கான நல்ல மூலமாக இருக்கிறது

2. உயர்குருதி அழுத்தத்தை எதிர்க்கும் புரதம் (Protein),

பெப்ரைட்டுகளைக் கொண்டிருக்கிறது

3. ஒட்சியேற்ற எதிரிகளை மீன் தோல் கொண்டிருக்கிறது

4. செலனியம், கைற்றின்( Chitin)

5. ஒமேக 3 கொழுப்பமிலம்

6. Taurine

1. மீனின் கழிவுப் பொருட்களில் இருந்து கால்சியம்

மீன் எலும்பானது கல்சியத்துக்கான மிக நல்ல மூலமாகும். முழுமையான சிறிய மீன் வகைகள் கல்சியத்தை அதிகளவில் கொண்டிருப்பதுடன் கல்சியத்தின் உயிரியல் கிடைதகவு (Bio availability) அதிகமாகும். ஆனால் பாற்பொருட்களுடன் ஒப்பிடும் கல்சியத்தின் கிடைதகவு மீனில் குறைவாகும். அண்மைய ஆராய்ச்சிகளில் மீன் எலும்பு, நண்டு ஓடு என்பவை கல்சியம் nutraceuticals தயாரிப்பதற்கு மிக நல்ல மூலப்பொருட்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

2. உயிர்தொழிற்பாட்டு புரதங்களும், பெப்ரைட்டுக்களும்

மீனானது உயர் குருதியழுத்ததிற்கு எதிரான பெப்ரைட்டுகளை (Anti-hypertensive peptides) கொண்டுள்ளது. Sadine மீன் தசைகளில் இருந்து 13 வகையான உயர் குருதியழுத்ததிற்கு எதிரான பெப்ரைட்டுகளை ஆராய்ச்சியாளர்கள் பிரித்தெடுத்துள்ளானர். இவை மனிதரில் குருதியழுத்தத்தைக் குறைக்கும் சாத்தியப்பாட்டை அதிகமாக கொண்டுள்ளன.

நொதியங்கள் (Enzyme) மூலம் பரிகரிக்கப்பட்ட மீன் புரத பெறுதிகளும் இதயத்தைப் பாதுகாக்கும் ( Cardioprotective: Anti-atherogenic) காரணியாக இருப்பதால் செயற்பாட்டு உணவாக/ மருந்துப் பொருளாகக் கருதப்படுகிறது.

3. ஒட்சியேற்ற எதிரிகள்

Anguilla japonica, Conger myriaster ஆகியவை சீன உணவில் பிரசித்தமான eel மீன் இனங்களாகும். அத்துடன் இவை பாரம்பரிய சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.

ஒட்சியேற்ற எதிரிகள் உடலை ஒட்சியேற்ற தாக்கத்திலிருந்து பாதுகாக்கின்றன. இவை உயிரியல் ரீதியில் தாக்கமடையக்கூடிய ஒட்சிசன் இனங்களின் தாக்கத்தைத் தடுக்கின்றன.

இம் மீன் இனங்களின் தோலில் இருந்தும், உடற் சதையில் இருந்தும் எடுக்கப்பட்ட சாறு free radical, hydroxyl radical ஆகியவற்றை அகற்றுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

4. செலனியம்

பொதுவாக மக்கள் செலனியம் குறைபாடு உடையவர்களாக இருக்க முடியும். அண்மைய ஆய்வுகள் சேதன செலனியமானது ஒரு புற்றுநோய் எதிரியாக இருக்கும் சாத்தியத்தை எடுத்துக்கூறுகின்றன. மீன் பண்ணைகளில் இயற்கையில் அதிகளவு சேதன செலனியத்தைக் கொண்ட மூலப்பொருளான உள்ளி கலக்கப்பட்ட உணவைக் கொடுப்பதன் மூலம் மீனில் சேதன செலனியத்தின் அளவை அதிகரிக்க முடியும் என அறியப்பட்டுள்ளது.

5. ஒமேக 3 கொழுப்பமிலம்

மீன் பண்ணைகளில் வழங்கப்படும் உணவுகளில் ஒமேக 3 கொழுப்பமிலத்தின் அளவை அதிகரிப்பதன் மூலம் மீனில் இதன் அளவை அதிகரிக்க முடியும். இக்கொழுப்பமிலமானது இதய நலனுக்கு அத்தியாவசியமானதாகும்.

6. Taurine

அண்மைய மருத்துவ ஆய்வுகள் ஒரு நாளைக்கு 1 கிராம் Taurine உள்ளெடுப்பது இதய நலனுக்கு உகந்ததாக சொல்கிறன. மீனானது இதற்கான நல்ல மூலமாகும்.

மீன் இனங்களுக்கு ஏற்ப இதன் அளவு வேறுபடும் உதாரணமாக

Plaice = 126mg/100g

cod = 93 mg/100g

mackerel= 69 mg/100g

Albacore tuna =155g/100g

ray wing = 128g/100g

இவ்வாறு பல் வேறு உடல் நலனுக்கு உகந்த பல பொருட்களை மீன் கொண்டுள்ளதால் எதிர்காலத்தில் மீனானது தொழிற்பாட்டு உணவு/ மருந்துப் பொருள் தயாரிப்பில் மிக முக்கியமான ஒரு உணவுப் பொருளாக கருதப்படுகிறது.

http://jeyachchandran.blogspot.com/2006/09/blog-post_26.html

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தங்களது நேரத்திற்கு நுணாவிலான்

நான் எனது அனுபவத்தை வைத்துத்தான் எழுதினேன்

இன்னுமொன்றையும் எழுத மறந்துவிட்டேன்

அது எமது மனம்

அது சாய்ந்து போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்

அது எல்லாவற்றையும் மாற்றிவிடும்

நான் கடந்த முள்ளிவாய்க்காலிலிருந்து............ எனது நண்பனின் இழப்பு போன்றவற்றால் கொஞ்சம் கவனிக்காமல் விட்டது மட்டுமல்ல கண்டதையும் சாப்பிட்டுவிட்டேன்

10 கிலோ கூடியிருக்கின்றேன்

இனிமருந்துதான்

Edited by விசுகு

இந்த காலத்துக்கு மிகவும் தேவையான தகவல், மிகவும் அருமையான விளக்கங்கள் (படம் போட்டு விளக்கியிருக்கிறது சூப்பர்).

எனக்கு ஒரு சந்தேகம்:

கொலஸ்ரோல் இருக்கிறவர்கள் முட்டை சாப்பிடலாமா கூடாதா?

Edited by Tamilpriyaa

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த காலத்துக்கு மிகவும் தேவையான தகவல், மிகவும் அருமையான விளக்கங்கள் (படம் போட்டு விளக்கியிருக்கிறது சூப்பர்).

எனக்கு ஒரு சந்தேகம்:

கொலஸ்ரோல் இருக்கிறவர்கள் முட்டை சாப்பிடலாமா கூடாதா?

http://nutrition.about.com/od/askyournutritionist/f/eggs_protein.htm

நீங்கள் தந்த தகவலுக்கு நன்றி, இருந்தாலும் என் கேள்விக்கு பதில் நீங்காளும் சொல்லவில்லை, நீங்கள் தந்த இணையதளத்திலும் சரியான பதில் இல்லை. :D

சில தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்று நினைக்கிறன், இது பற்றி உங்கள் கருத்தை அறியத்தரவும் :

உணவில் இருக்கும் கொலஸ்ரோல் ரத்தத்தின் கொலஸ்ரோல் அளவை பாதிக்காது என்றால், நாம் உணவில் இருக்கும் கோரஸ்ரோல் பத்தி கவலைப்பட தேவை இல்லையே, ஆனால் கொலஸ்ரோல் குறைவாக உள்ள உணவை உண்ணும்படி மருத்துவர்கள் கூறுகிறார்களே ! ?

தவிர, ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவதால் கொலஸ்ரோல் அளவில் மாற்றம் நிகழாது என்றால், ஒன்றுக்கு மேல் பட்ட முட்டைகளை சாப்பிடுவதால் (உணவில் உள்ள கொலஸ்ரோலின் மூலம் ) இரத்த கொலஸ்ரோலின் அளவு மாறுபடும் என்பது தானே பொருள்?

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தந்த தகவலுக்கு நன்றி, இருந்தாலும் என் கேள்விக்கு பதில் நீங்காளும் சொல்லவில்லை, நீங்கள் தந்த இணையதளத்திலும் சரியான பதில் இல்லை. :D

சில தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்று நினைக்கிறன், இது பற்றி உங்கள் கருத்தை அறியத்தரவும் :

உணவில் இருக்கும் கொலஸ்ரோல் ரத்தத்தின் கொலஸ்ரோல் அளவை பாதிக்காது என்றால், நாம் உணவில் இருக்கும் கோரஸ்ரோல் பத்தி கவலைப்பட தேவை இல்லையே, ஆனால் கொலஸ்ரோல் குறைவாக உள்ள உணவை உண்ணும்படி மருத்துவர்கள் கூறுகிறார்களே ! ?

தவிர, ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவதால் கொலஸ்ரோல் அளவில் மாற்றம் நிகழாது என்றால், ஒன்றுக்கு மேல் பட்ட முட்டைகளை சாப்பிடுவதால் (உணவில் உள்ள கொலஸ்ரோலின் மூலம் ) இரத்த கொலஸ்ரோலின் அளவு மாறுபடும் என்பது தானே பொருள்?

:D

http://www.cholesterol-and-health.com/Cholesterol-Rich-Foods-Raise-Blood-Cholesterol.html

இன்னுமொரு இணையதளமா, கைவசம் கனக்க இணையதலவிலாசம் வச்சிருக்கிறீங்கள் போல இருக்கு.

சரி ஓகே, என் கேள்விக்கு பதில் இந்த இணையதளத்தில் இருக்கிறதா எண்டு போய் பார்கிறேன்.

தகவலுக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தந்த தகவலுக்கு நன்றி, இருந்தாலும் என் கேள்விக்கு பதில் நீங்காளும் சொல்லவில்லை, நீங்கள் தந்த இணையதளத்திலும் சரியான பதில் இல்லை. :lol:

சில தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்று நினைக்கிறன், இது பற்றி உங்கள் கருத்தை அறியத்தரவும் :

உணவில் இருக்கும் கொலஸ்ரோல் ரத்தத்தின் கொலஸ்ரோல் அளவை பாதிக்காது என்றால், நாம் உணவில் இருக்கும் கோரஸ்ரோல் பத்தி கவலைப்பட தேவை இல்லையே, ஆனால் கொலஸ்ரோல் குறைவாக உள்ள உணவை உண்ணும்படி மருத்துவர்கள் கூறுகிறார்களே ! ?

தவிர, ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவதால் கொலஸ்ரோல் அளவில் மாற்றம் நிகழாது என்றால், ஒன்றுக்கு மேல் பட்ட முட்டைகளை சாப்பிடுவதால் (உணவில் உள்ள கொலஸ்ரோலின் மூலம் ) இரத்த கொலஸ்ரோலின் அளவு மாறுபடும் என்பது தானே பொருள்?

:lol:

தினமும் முட்டை சாப்பிடலாமா?

மார்ச் 1, 2010 vayal மறுமொழியவும் Go to comments

`முட்டை சைவமா..? அசைவமா?’ என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர். சரி அதை விட்டுவிடுவோம். தினந்தோறும் முட்டைகள் சாப்பிடலாமா?

அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணபடுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை.

அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில்தான் இந்த உண்மைகள் வெளிவந்தன. முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை! ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடு தலையும் செய்யாது என ஆய்வு தெரிவிக்கிறது. `சரிவிகித உணவு தயாரித்து அதன்படி சாப்பிடு கிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்கு பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் `பி’ கு வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன’ என்கிறார் டாக்டர் டெனால்ட் மெக்மைரா.

1976-ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கபட்டு குறிப்புகள் சேர்க்கபட்டன. இந்த ஆய்வு 2 வருடம் நடந்தது.

1986-ம் ஆண்டு முதல் அமெரிக்க பல் டாக்டர்கள், கண் டாக்டர்கள், கால்நடை வைத்தியர்கள் தினமும் முட்டை சாப்பிட்டனர். இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, 12 ஆண்டுகள் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.

80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவ குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவ குறிப்பேடுகள் தெரிவிக்கும் உறுதியான தகவல்கள்: தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்பதுதான்.

சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். இதில் வெண்ணெய், பன்றிக்கறி, பாம் ஆயில் போன்றவை சேர்த்துச் சாப்பிட்டால் கெடுதல் தான்.

நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைபடி வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம்.

http://senthilvayal.wordpress.com/2010/03/01/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%be/

more info: http://docgerrytan.com/2009/02/23/can-daily-intake-of-eggs-be-healthy/

Edited by nunavilan

இந்த கட்டுரை பற்றி உங்கள் கருத்தென்ன? இதுவும் ஒரு ஆய்வின் முடிவாம்.

http://sirippu.wordpress.com/2008/04/09/egg/

Edited by Tamilpriyaa

நீங்கள் தந்த தகவலுக்கு நன்றி, இருந்தாலும் என் கேள்விக்கு பதில் நீங்காளும் சொல்லவில்லை, நீங்கள் தந்த இணையதளத்திலும் சரியான பதில் இல்லை. :D

சில தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்று நினைக்கிறன், இது பற்றி உங்கள் கருத்தை அறியத்தரவும் :

உணவில் இருக்கும் கொலஸ்ரோல் ரத்தத்தின் கொலஸ்ரோல் அளவை பாதிக்காது என்றால், நாம் உணவில் இருக்கும் கோரஸ்ரோல் பத்தி கவலைப்பட தேவை இல்லையே, ஆனால் கொலஸ்ரோல் குறைவாக உள்ள உணவை உண்ணும்படி மருத்துவர்கள் கூறுகிறார்களே ! ?

தவிர, ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவதால் கொலஸ்ரோல் அளவில் மாற்றம் நிகழாது என்றால், ஒன்றுக்கு மேல் பட்ட முட்டைகளை சாப்பிடுவதால் (உணவில் உள்ள கொலஸ்ரோலின் மூலம் ) இரத்த கொலஸ்ரோலின் அளவு மாறுபடும் என்பது தானே பொருள்?

:)

கொலஸ்திரோல் என்பது உடலில் உள்ள கலங்களின் கல மென்சவ்வு, பித்தம் மற்றும் ஸ்ரிறொயிட் ஓமோன்கள் உருவாக்கத்துக்கு பயன்படுகிறது. எனவே கொலஸ்திரோலும் உடலுக்கு தேவையானது தான். ஆனால் மனித உடல் தனக்கு தேவையான கொலஸ்திரோலை தொகுக்கும் ஆற்றல் உடையது (உடலின் செயற்பட்டுக்கு ஒரு நாளுக்கு 100 மில்லிகிராம் கொலஸ்திரோல் தேவை) . இதன் காரணமாக நாம் உண்ணும் உணவின் மூலம் அடையும் கொலஸ்திரோல் தேவைக்கு அதிகமானது தான்.

ஒரு முட்டையில் குறைந்தது 153 மில்லிகிராம் ( மி கி) கொலஸ்திரோல் உண்டு. முட்டையில் இருக்கும் கொல்ஸ்திரோல் அதன் மஞ்சள் கருவிலேயே இருக்கும். எனவே கொல்ஸ்திரோல் பிரச்சனை உள்ளவகள் மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளை கருவை மட்டும் உணபது நல்லது. (http://vfu-www.vfu.cz/acta-vet/vol70/pdf/70_387.pdf)

உடலில்/ குருதியில் கொல்ஸ்திரோல் அதிகரிப்பு என்பது உணவின் மூலம் உள்ளெடுக்கும் கொலஸ்திரோல் அளவுக்கு நேர்விகித சமனாக அதிகரிக்காது. உடலின் தேவைக்கு (100 மி கி) அதிகமாக உள்ளெடுக்கப்படும் ஒவ்வொரு 100 மி கி கொல்ஸ்திரோலுக்கும் குருதியின் கொலஸ்திரோல் அளவு 2 - 3 % ஆல் அதிகரிக்கலாம். ஆனால் 500 மி கி க்கு அதிகமாக கொல்ஸ்திரொல் உள்ளெடுத்தால் மேலும் குருதி கொல்ஸ்திரோல் பெரிய அளவில் அதிகரிக்கது. இதற்கு காரணம் உடல் அதிக கொல்ஸ்திரோலை உறிஞ்சாமல் விடுவதாக கூட இருக்கலாம்.

உங்கள் நாளாந்த கொல்ஸ்திரோல் உள்ளெடுப்பு 500 மி கி இலும் அதிகம் என வைத்து கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் கொலஸ்திரோல் உள்ளெடுப்பை 250 மி கி ஆல் குறைக்கிறீர்கள் என வைத்தால், உங்கள் குருதி கொல்ஸ்திரோல் அளவு 7% க்கு கிட்ட குறைவடையும். இது உங்களுக்கு இதய நோய் ஏற்படும் சாத்தியத்தை கிட்டத்தட்ட 10% ஆல் குறைக்கும்.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

வாழைப்பழத்தோலை மட்டும் சாப்பிடமுடியுமா.?

வாழைப்பழத்தோலை மட்டும் சாப்பிடமுடியுமா.?

உங்களை முட்டை ஓட்டை சாப்பிடச்சொல்லவில்லை :wub: . முட்டை வெள்ளைக்கருவைத்தான் சாப்பிடுவது நல்லது என்றேன். முட்டையில் மஞ்சள் கரு அதிக கொழுப்பையும், வெள்ளைக்கரு அதிக புரத்தையும் கொண்டது. எனவே வெள்ளைக்கருவை உண்பதால் உடலுக்கு புரதம் தாரளமாக கிடைக்கும், உடலுக்கு பாதகமான கொழுப்பு தவிர்க்கப்படும்.

முட்டை வெள்ளைக்கருவைத்தான் சாப்பிடுவது நல்லது என்றேன். முட்டையில் மஞ்சள் கரு அதிக கொழுப்பையும், வெள்ளைக்கரு அதிக புரத்தையும் கொண்டது. எனவே வெள்ளைக்கருவை உண்பதால் உடலுக்கு புரதம் தாரளமாக கிடைக்கும், உடலுக்கு பாதகமான கொழுப்பு தவிர்க்கப்படும்.

முட்டையின் மஞ்சள்கருவில் கொலஸ்ரோல் மட்டும் தான் இருக்கிறது என்றில்லை.

முட்டையின் மஞ்சள்கருவில் நம் உடலுக்கு தேவையான சத்துக்களும் உள்ளன, உதாரணமாக essential fatty acids omega-3 fats vitamins and minerals, iron, potassium, folate, selenium, carotenoid, vitamins A and E, and the B vitamins.

தவிர முட்டையில் இருக்கும் லெசித்தின் (lecithin) முட்டையில் இருக்கும் கொலஸ்ரோல் நம் இரத்தத்தில் சேர்வதை தடுக்கும் /குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் முட்டையிலுள்ள கொலஸ்ரோல் இரத்த கொலஸ்ரோலை கட்டாயம் அதிகரிக்கும் என்றுசொள்ளமுடியது தானே.

Edited by Tamilpriyaa

முட்டையின் மஞ்சள்கருவில் கொலஸ்ரோல் மட்டும் தான் இருக்கிறது என்றில்லை.

முட்டையின் மஞ்சள்கருவில் நம் உடலுக்கு தேவையான சத்துக்களும் உள்ளன, உதாரணமாக essential fatty acids omega-3 fats vitamins and minerals, iron, potassium, folate, selenium, carotenoid, vitamins A and E, and the B vitamins.

தவிர முட்டையில் இருக்கும் லெசித்தின் (lecithin) முட்டையில் இருக்கும் கொலஸ்ரோல் நம் இரத்தத்தில் சேர்வதை தடுக்கும் /குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் முட்டையிலுள்ள கொலஸ்ரோல் இரத்த கொலஸ்ரோலை கட்டாயம் அதிகரிக்கும் என்றுசொள்ளமுடியது தானே.

ஓம் மஞ்சள் கருவில் சத்துக்கள் நிறைய இருக்கு. நான் அதை இல்லை எண்டு சொல்ல இல்லை. கொல்ஸ்திரோல் பற்றி கதைக்கிற படியால் கொல்ஸ்திரோல் அளவை மட்டும் குறிப்பிட்டேன், அது மஞ்சள் கருவில் தான் இருக்கிறது என்பதையும் சொன்னேன். ஒமேக - 3 கொழுப்பமிலங்கள் இயற்கையாக முட்டையில் குறைவு/ இல்லை, ஒமேக 3 கொழுப்பமிலம் உள்ள உணவுகளை கொழிக்கு உண்ணக்கொடுத்தே, முட்டையில் அதனை கொண்டுவரமுடியும். அதனால் அப்படி உணவை உண்ணகொடுத்து எடுத்த முட்டை பெட்டிகளில் ஒமேகா 3 கொழுப்பமிலம் இருப்பதாக குறிப்புடன் முட்டை விற்பார்கள்.சாதாரணமாக எல்ல முட்டை பெட்டியிலும் அந்த குறிப்பு இருக்காது.

முட்டை சாப்பிடுவதால் குருதியில் கொலஸ்திரோல் கட்டாயம் கூடுமா இல்லையா என்பது உங்கள் உணவு பழக்கத்தை, எந்த உணவுகளுடன் முட்டையை உண்கிறீர்கள் என்பதை பொறுத்து. அத்துடன் நீங்கள் நல்ல சுகதேகியா, அல்லது இதய நோய், உயர் குருதி கொலஸ்திரோல் உடையவரா, என்பதை பொறுத்தது. எந்த இதய/குருதி சம்பந்தமான நோயும் இல்லாத நபர் என்றால் முட்டையில் உள்ள கொலஸ்திரோலை பற்றி கவலைப்படத்தேவையில்லை. நீங்கள் கேட்பது மாதிரி கறுப்பு/ வெள்ளை (ஆம்/ இல்லை) என்று ஒரு சொல் பதில் கூற முடியாது.

இது கனேடிய முட்டை உற்பத்தியாளர்களின் இணையம். இதில் முட்டையின் ஒமேகா 3 கொழுப்பமில தரவுகள் உள்ளன.

It is well known that eggs contain cholesterol. However, dietary cholesterol has very little impact on blood cholesterol levels in healthy individuals.

http://www.eggs.ca/pdf/omega-3_e.pdf

Edited by KULAKADDAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.