Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் ஆதரவு இல்லாமல் எமது பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது

Featured Replies

"60 வருட காலமாக தொடரும் தமிழ் மக்க ளின் போராட்ட வரலாற்றில் நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் எமது மக்கள் ஒரு நியாயமான தீர்வை வலியுறுத்தும் வகையிலேயே வாக்களித்து வந்துள்ளனர்.'' இன்றைய கால கட்டத்தில் இப்பாராளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமானது. ஆயு தப் போராட்டம் மெளனிக்கப்பட்ட நிலையில் சர் வதேசம், இந்தியா போன்றவை தெளிவான ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றன. இந்த சூழலில் எமது நீண்ட போராட்டத்தின் கோரிக்கையை மிகவும் அழுத்திச் சொல்ல வேண்டிய நேரம் இது.

எனது எமது கோரிக்கையை அழுத்திச் சொல்வதற்கான அதிகாரத்தை உங்களுடைய வாக்குப் பலத்தின் மூலம் மிகவும் உச்சமாக நீங்கள் வழங்க வேண்டும். அப்போது தான் நா·மும் உள்நாட்டிலும் இந்தியா உட்பட்ட சர்வதேசத்திற்கும் எமது கோரிக்கையை அழுத்தமாக துணிந்து தெரிவிக்க முடியும்'' அதன் மூலம் தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.

இந்தியாவின் ஆதரவு இல்லாமல் எமது பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அவர்களுடன் நாம் தொடர்ந்து பேசி வருகின்றோம். ஜனாதிபதித் தேர்தலின் பின்னரும் பேசினோம். அவர்கள் மாத்திரமின்றி பல சர்வதேச பிரதிநிதிகளுடனும் பேசி வருகின்றோம்,

அவர்களும் எங்கள் நியாயங்களை ஏற்றுக் கொள்கின்றனர். ஆயினும் இந்தியாவின் நிலைப்பாட் டையும் பார்க்கின்றனர். இறுதியாக இந்திய அதிகாரிகளுடன் பேசிய வேளை இந்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிட்டு மக்கள் ஆணையைப் பெற்று வாருங்கள். அப்போது நாமும் உங்களுடன் நின்று நியாயமான தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய சூழலில் இத் தேர்தல் மிகவும் ·முக்கியமானது. இந்த நிலையில் சில விசயம றியாதவர்கள் புரிந்து கொள்ளாமல் குழப்பங் களில் பிரிந்து ஈடுபட முயற்சிக்கின்றனர்.

எமக்கு சர்வதேசத்தின் ஆதரவும் தேவை. மிக முக்கியமாக இந்தியாவின் ஆதரவும் தேவை.

சிலர் சில கட்டுரைகளை எழுதி விமர்சனங் களைச் செய்தால் அது புலம்பெயர் தமிழர்களின் கருத்தாக அமைந்து விடாது. எமது யதார்த்தத்தை புரிந்து கொண்ட மக்கள் அங்கும் உள்ளனர். அவர்களுடன் நாம் பேசி வருகிறோம்.

இத்தகைய சூழலில் எமது மக்களின் நிரந்தர தீர்வை நாம் பெற்றுக் கொள்ள கடுமையான போக்கை கை விட்டு, எமது அடிப்படையை விட்டுக் கொடுக்காமலும் சுயநிர்ணய உரிமையை விட்டுக் கொடுக்காமலும் இந்தியா, அவுஸ்திரேலியா, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளில் நடை முறையில் இருக்கும் ஆட்சி முறையை பெற்றுக் கொள்ள நாம் உழைக்க வேண்டும்.

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு அவ்விதமான தீர்வு வழங்க வேண்டும் என ஜனநாயக ரீதியான தீர்வை மக்களாகிய நீங்கள் உங்கள் வாக்குப் பலத்தின் மூலம் எமக்கு வழங்கி அதிகப்படியான வாக்குகள் மூலம் பாராளுமன்றத்திற்கு அதிகப்படியான உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்ப வேண்டும்.

அவ்வாறு அனுப்பினால் சர்வதேசத்திடமும் இந்தியா உட்பட உள்நாட்டிலும் எமது கோரிக்கையை அழுத்திச் சொல்ல, போராட எம்மால் முடியும்.

எங்களுடைய சமூக, கலாசார, பொருளா தார, கல்வி போன்ற பல்வேறு விடயங்களை நாமே கவனிக்கக் கூடிய தீர்வு எமக்கு வேண்டும். இதில் ஒரு போதும் நாம் மாற மாட் டோம், எமது மக்களை நாம் காட்டிக் கொடுக்க மாட்டோம்.

இந்த நிலைப்பாட்டில் உள்ள எமது மக் களை திசை திருப்ப, எமது கட்சியை தோல்வி யடையச் செய்ய எமது நீண்ட கால கோரிக்கையை மழுங்கடிக்க அரசு பல முயற் சிகளை செய்கிறது. 100, 50 வாக்குகளைப் பெறக் கூடிய சிறிய கட்சிகளை குழுக்களை களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது. அதனைப் பற்றி நாம் கவலைப்படவில்லை, எமது மக்கள் எமது இந்த 60 வருட கால போராட்ட வரலாற்றை நன்கு புரிந்தவர்கள். மிகவும் தெளிவானவர்கள். இதற்கெல்லாம் விலை போக மாட்டார்கள்.

இன்றைய கால கட்டத்தில் நாம் முஸ்லிம் காங்கிரஸுடனும் பேசி வருகின்றோம், அவர்களும் எம்முடன் இத் தீர்வு முயற்சியில் ஒருமித்த நிலைப் பாட்டில் உள்ளனர். முஸ்லிம்களை ஒதுக்கி நாங்களும் எங்களை ஒதுக்கி அவர்களும் வாழ முடியாது. தீர்வை பெற முயாது என்பதனை நன்கு உணர்ந்துள்ள நிலையில் உள்ளோம். அதனை கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் நாம் காட்டியுள்ளோம்.

எமது மக்கள் மிகவும் சோர்ந்து போயுள்ளனர். இந்த நிலையில் எமது பிரச்சினையை சர் வதேசமும் இந்தியா உட்பட அரசும் இழுத்தடிக்க முடியாது. வன்னியிலும் சம்பூர், கொடி காமம் போன்ற பல இடங்களிலும் எமது மக்கள் இன்னும் மீள் குடியமர்த்தப்படாமல் அகதி வாழ்வு வாழ்ந்து வருகின்றனர், இந்த சூழலில் தண்ணீர் பம்பு, தையல் மெசின், பணம் என யாவற்றையும் தருவார்கள்.

அவற்றை தந்து எமது நியாயமான கோரிக் கைகளை மழங்கடிக்க சூழ்ச்சி செய்கிறார்கள். தருவதனை பெற்றுக் கொள்ளுங்கள், அதை விட சுயேட்சைக் குழுக்கள், கட்சிகளை இறக்கி விட்டும் உள்ளனர்.

மஹிந்த தேரர் இலங்கைக்கு வந்தவேளை திருகோணமலையில் திருக்கோணேஸ்வரம் மன்னாரில் திருக்கேதீஸ்வரம், சிலாபத்தில் சனீஸ்வரம், யாழ்ப்பாணத்தில் நகுலேஸ்வரம், தென் பகுதியில் தொண்டீஸ்வரம் என பல ஈஸ்வரங்கள் இருந்துள்ளன. ஆகவே அவரது வரவிற்கு முன்னர் இங்கிருந்தவர்கள் யார்?

கிழக்கு மாகாணத்தில் பிரிட்டிஷ் காலமுடி வில் 1941 இல் 91 வீதமான தமிழ் பேசும் மக் கள் இருந்தார்கள். 1821 இல் 96 வீதமாகவிருந் தது. பின்னர் திட்டமிட்ட முறையில் இதனை குறைக்க வரும் அரசுகள் முயற்சிக்கின்றன.

இந்த அரசு மக்கள் சட்டவிரோதமாக குடிய மர்த்துவதனை பார்க்கிலும் கம்பனிகள் என்ற பெயரில் நிலங்களை அபகரிக்க முயற்சிக்கின்றன. குச்சவெளியில் 805 ஏக்கர் காணியை உப்பு உற்பத்திக்கு, கம்பனி ஒன்றிற்கு வழங்கியுள்ளது.

இவ்வாறு எமது சுய நிர்ணயக் கோரிக்கையை மழுங்கடிக்க முனைகிறது. இதனை நாம் அனுமதிக்க மாட்டோம், தமிழ் மக்கள் சிங்கள மக்களாக முடியாது, சிங்கள மக்கள் தமிழ் மக்களாக முடியாது.

எனவே எமது கோரிக்கையில் உறுதியாக நின்று எமது கோரிக்கையை அழுத்திச் சொல்லி இந்தியா உட்பட சர்வதேசத்தின் உதவியுடன் ஒரு நிரந்தரமான தீர்வை பெற் றுக் கொள்வதற்கான உங்களின் அதிகபட்ச ஆதரவை நீங்கள் உங்கள் வாக்குப் பலத்தை பிரயோகித்து வழங்க வேண்டும். இனியும் எமது மக்களின் துன்பத்தை நீடிக்க வைக்க முடியாது.

திருகோணமலை சிவன் கோவிலடியில் ஞாயிறன்று நடை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப் பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முதன்மை வேட் பாளருமான இரா. சம்பந்தன் ஆற்றிய உரை.

http://tamilskynews.org/index.php?option=com_content&view=article&id=792:2010-03-02-01-10-48&catid=34:2009-11-28-06-27-40&Itemid=100

ஆயு தப் போராட்டம் மெளனிக்கப்பட்ட நிலையில் சர் வதேசம், இந்தியா போன்றவை தெளிவான ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றன????????? :) .

இந்தியாவின் ஆதரவு இல்லாமல் எமது பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது???????. :huh:

இறுதியாக இந்திய அதிகாரிகளுடன் பேசிய வேளை இந்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிட்டு மக்கள் ஆணையைப் பெற்று வாருங்கள். அப்போது நாமும் உங்களுடன் நின்று நியாயமான தீர்வுக்கு??????? ஒத்துழைப்பு வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளனர். :D:D:D

இந்த நிலையில் சில விசயமறியாதவர்கள் புரிந்து கொள்ளாமல் குழப்பங் களில் பிரிந்து ஈடுபட முயற்சிக்கின்றனர்.?????

சிலர் சில கட்டுரைகளை எழுதி விமர்சனங்களைச் செய்தால் அது புலம்பெயர் தமிழர்களின் கருத்தாக அமைந்து விடாது. ????

எமது மக்களை நாம் காட்டிக் கொடுக்க மாட்டோம். :huh::D:lol:

தமிழின படுகொலைகளை இரண்டு கட்டங்களில் பெருமெடுப்பில் செய்துமுடித்த வட இந்திய பயங்கரவாதிகளின் உதவி கிடைக்கும் என எந்த அடிப்படையில் சம்பந்தன் சொல்லுகிறார்? தேர்தல் காலத்தில் உவர் சொல்வதை மக்கள் எப்படி நம்புவது?

இந்திய பயங்கரவாதிகள் "நாம் தமிழினத்துக்கு எதிரான பயங்கரவாதத்தை கைவிட்டுவிடோம். தமிழ் மக்களின் அனைத்து அபிலாசைகளையும் நிறைவேற்றுவோம்" என பகிரங்கமாக அறிவித்துள்ளார்களா? அல்லது மன்மோகன்சிங் எழுதி கையெழுத்து போட்டு சம்பந்தரிடம் கொடுத்துள்ளார?

இனியும் தமிழன் வட இந்திய வெறியர்களிடம் ஏமாறுவான் என எதிர்பார்க்க வேண்டாம்?

"இந்தியா இல்லாவிட்டால் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்" என்பது தான் யதார்த்தமானது.

  • கருத்துக்கள உறவுகள்

"இந்தியா இல்லாவிட்டால் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்" என்பது தான் யதார்த்தமானது.

இந்தியா இல்லாவிட்டால் என்று நாம் இனியும் இழுத்துகொண்டிருக்க முடியாது.

தமிழ்ஈழ பிறப்பிற்கு இந்தியா என்ற பாறாம் கல்லே பெரும் தடையாக தொண்டுதொட்டு உள்ளதை தமிழர்கள் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும். சிலர் கூறுவதுபோல் வல்லரசுடன் நாம் போராடி வெல்லமுடியாது என்ற உண்மையையும் ஏற்றுகொள்வேண்டும். அதலால் கிந்தியாவை வல்லரசாக விட்டால்தான் வெற்றி கேள்விகுறி. கிந்தியாவை துண்ணடாட வேண்டும்.............. அதற்கு துணையாக பல நாடுகளுளே துணைவரும் பாகிஸ்தானே உதவிதரும்.

கிந்தியாவை இல்லாது செய்யவேண்டும். எமது அடுத்த போராட்டம் இல்லாத புலிகளால் தொடரவேண்டும். இல்லாது இருப்பதே எதிரிக்கு இலக்கில்லாது இருக்கவும் பாதுகாப்பாக போராட்டம் இருக்கவும் சிறந்த வழி.

  • கருத்துக்கள உறவுகள்

87 ல் மேடையேறிய அதே நாடகம் வேறு பெயரில் திரும்பவும்.

எல்லோரும் சம்பந்தர் பற்றி கதைத்துக் கொண்டிருக்க சத்தமில்லாமல்

பிரேமச்சந்திரன் மூலமாக பழைய நாடகம்

கௌரவ நடிகராக வரதராசப்பெருமாள்.

இந்த நாடகங்களை மேடையேற விடுவதுதான் நல்லது................. அவர்களின் கவனங்கள் அதிலேயே ஊன்றி நிற்கும்.

எந்த நடிகரை இறக்கினாலும் இராணுவம் இல்லாது மக்கள் முன் யாராலும் நாடகம் ஆடமுடியாது. ஆக இராணுவத்திற்கு பின் நின்று கொண்டுதான். அதாவது சிங்களவனின் பாதுகாப்பில் தமிழர்களிடம் இருந்து தம்மை பாதுகாத்துகொண்டுதான் இந்த நடிகர்களால் தமிழர்களுக்கான விடிவு பற்றி பேசமுடியும். ஆக இதுகளை பற்றி நாம் அதிகம் அலட்டிகொண்டு எமது நேரத்தை வீணடிக்காது. கிந்தியாவை துண்டாடுடுவது எப்படி என்று நேரடியான வடயத்திற்கே போய்விடவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழின படுகொலைகளை இரண்டு கட்டங்களில் பெருமெடுப்பில் செய்துமுடித்த வட இந்திய பயங்கரவாதிகளின் உதவி கிடைக்கும் என எந்த அடிப்படையில் சம்பந்தன் சொல்லுகிறார்?

//

ஆசான் அண்ணா, சம்பதருக்கு ஸ்ரீ கொங்கிரசு கூலி குடுக்கிறது மாதிரி எங்களுக்கும் கூலி தருவினம் எண்டு சொல்ல வருறார் ஆக்கும். ஒரு அரசியல் தீர்வை சுண்டைக்காய் சிலோனில் கொண்டுவர வக்கில்லாமல் ஆயுதப்போராட்டத்தை தூண்டிவிட்டு நம்மில் இரண்டு இலட்சம் பேரை கொண்டவரிடம் தீர்ப்பு கேட்க சொல்லுது கிழடு!

தமிழர்கள் இந்தியாவை உதறித்தள்ளவேண்டும். இதற்காக தமிழர்கள் சிங்களவர்களுடன் இணைந்துகொள்ளவேண்டும். தமிழர்கள் தனியாக சீனா போன்ற நாடுகளுடன் உறவை ஏற்படுத்துவது சாத்தியமற்றது. சிங்களவர்களுடன் இணைந்து இந்தியா மற்றும் மேற்குலகுக்கு எதிரான சீனா ரசியா போன்ற நாடுகளுடன் உறவை வளர்க்க முற்பட வேண்டும். தமிழர்கள் இந்தியாவை எதிர்பார்க்கும் வரை இந்தியா இலங்கையை கையாள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும். தமிழர்களுக்கான சிறு அளவிலான உரிமை என்றாலும் கிடைப்பதற்குரிய முதற் படி இந்தியா மீது எந்த எதிர்பார்ப்பையை வளர்க்கமல் இருப்பது மட்டுமில்லாமல் இந்தியாவுக்கு எதிராக இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டும். எவன் தமிழர்கள் வாழ்வை சிதைத்து சின்னபின்னமாக்கினானோ அவனே வலிய தமிழர்களுக்கான உரிமையை பெற்றுத்தர முற்படும் அளவுக்கு தமிழர்கள் தந்திரமாக செயற்படுவதே இனிவரும் காலங்களில் போராட்டமாகும். ஆனால் தமிழர்கள் அவ்வாறு நடந்து கொள்ளப்போவதில்லை. அதற்கான பொறுமையும் தமிழர்களிடம் இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவோடு அரசு அமைக்கவெளிக்கிட்டாச்சு தவிர முட்கம்பி வேலிக்குள் முடங்கிய மக்கள் குறித்து யாரும் அக்கறைப்படவில்லை. தேசியவாதம் என்றால் அரசு அமைப்பது வாக்கெடுப்பு நடத்துவது என்றளவில் செயற்படுகின்றனர். தமிழ்த்தேசியவாதம் என்பது சிங்களவர்களுடன் இணைந்து இலங்கையர்களாக வாள முற்படும் போதே தக்கவைக்கப்படும் என்பதே இன்றய காலகட்டத்திற்கு பொருத்தமானது. ஏனெனில் தேசியவாதம் தன்னாட்சி சுய நிர்ணயம் என்பதெல்லாம் எங்கள் கைகளில் இல்லை மாறாக பலசாலி நாடுகள் அவை சார்ந்த நலன்கள் கையில் உள்ளது.

இதற்கு முன்னும் கீளுள்ள விடயம் பற்றி இத்தளத்தில் குறிப்பிட்டு உள்ளேன். தமிழ் மொழியையே படாத பாடு படுத்திய இந்தியா தமிழர்களை எப்படி விட்டு வைக்கும்? தமிழ் ஒரு செம்மொழி என்ற இந்தியாவிற்கே பெருமை சேர்க்க கூடிய உண்மையையே அது தமிழ் என்ற காரணத்தால் ஏற்க மறுத்த இந்தியாவா எமக்கு ஏதாவது உதவி செய்யும்? வட-இந்தியர்கள் தமிழர்களை வெறுப்பதற்கும் தமிழர்களை அழிப்பதற்கும் அவர்கழிடம் இல்லத தொன்மையான மொழி கலாச்சாரம் என்பனவற்ரை கொன்டு இருப்பதுடன் இந்தியாவின் ஆதி வாசிகளாக திரவிடர் இருப்பதும் தான் காரணமே ஒழிய விடுதலைப்புலிகளோ இராசீவ் காந்தி கொலையோ அல்ல. சிங்களவர்கள் தமிழரை அழிப்பதற்கும் இதுவே காரணம். சிங்கள மொழி தெரிந்தவர்களுக்கு புரியும் சிங்களம் அப்ப்டியே தமிழின் நகல்(பிரதி) என்று. ஆனால் இன்னும் கொஞ்சகாலத்தில் சிங்களவன் சொல்லுவான் தமிழ் சிங்கழத்தில் இருந்து தான் வந்தது என்று. அதையும் நாம் கேட்டுகொண்டு இருக்க வேண்டியது தான்.

இந்த செய்தியை வாசித்தால் இந்தியாவின் உண்மை சொரூபத்தை ஓரளவிற்கேனும் புரிந்து கொள்ளலாம்.

India to declare Tamil as classical language"To deny that Tamil is a classical language is to deny a vital and central part of the greatness and richness of Indian culture."

The declaration merely recognises a fact known about Tamil and will not create a new status for the language.

Tamil's classical status is already known the world over by its length (duration of existence) and depth (amount of literature).

Tamil is one of the primary independent sources of modern Indian culture and tradition.In trying to discern why Tamil has not been recognized as a classical language, I can see only a political reason

My link

ஏனெனில் தேசியவாதம் தன்னாட்சி சுய நிர்ணயம் என்பதெல்லாம் எங்கள் கைகளில் இல்லை மாறாக பலசாலி நாடுகள் அவை சார்ந்த நலன்கள் கையில் உள்ளது.

அதுதான் சம்பந்தர் இந்தியாவுடன் உறவை வைத்திருக்கிறார்...

சிங்களவரூடன் இனைந்து எப்படி தமிழ் தேசியவாதத்தை தக்கவைக்லாம் சுகன்?

மஹிந்த தேரர் இலங்கைக்கு வந்தவேளை திருகோணமலையில் திருக்கோணேஸ்வரம் மன்னாரில் திருக்கேதீஸ்வரம், சிலாபத்தில் சனீஸ்வரம், யாழ்ப்பாணத்தில் நகுலேஸ்வரம், தென் பகுதியில் தொண்டீஸ்வரம் என பல ஈஸ்வரங்கள் இருந்துள்ளன. ஆகவே அவரது வரவிற்கு முன்னர் இங்கிருந்தவர்கள் யார்?

பம்பல் சம்பந்தன் ஜயா நேபாளத்திலயும் ஈஸ்வர வழிபாடு இருந்திருக்கு இப்பவும் இருக்கு ஆனபடியால் நேபாளி எல்லாம் தமிழனே?

சிங்களவரும் ஈஸ்வரனின் ரசிகர்களாக இருந்து இருக்ககூடும் ,மகிந்த தேரர் வந்தபின்பு எல்லோரும் புத்தனின் ரசிகர்களாக மாற்றம்பெற்றிக்கலாம்

அதுதான் சம்பந்தர் இந்தியாவுடன் உறவை வைத்திருக்கிறார்...

சம்மந்தர் வைத்திருக்கும் உறவு எந்த அடிப்படையும் அற்ற வழமையான பாணியிலானது. பிரிட்டிஷ் காரன் போனதில் இருந்து இந்தியாவை தொங்கிக் கொண்டிருக்கும் மாற்றம் அற்ற அதே பாணியிலானது.

சிங்களவரூடன் இனைந்து எப்படி தமிழ் தேசியவாதத்தை தக்கவைக்லாம் சுகன்?

சிங்களவர்களுடன் சேர்ந்து இலங்கையர்களாக தமிழர்கள் இருக்கும் போது தமிழர்களுக்கான தனித்துவத்தை பேணவேண்டிய அவசியம் புறநிலையில் இந்தியாபோன்ற நாடுகளுக்கு எற்படுவது தவிர்க்க முடியாததாகும். சிங்களவர்களுடன் இணைவது என்பதின் அர்த்தம் சிங்களம் படித்து புத்தமதத்திற்கும் மாறி சிங்களவர்களாவது என்பதில்லை. இலங்கையர்களாக ஒருங்கிணைந்து இந்தியாவிடம் இருந்து இலங்கையர்கள் அன்னியப்படுவதும் சீனா போன்ற நாடுகளுடன் வர்த்தக உறவுகளை முன்னெடுப்பதும் என்ற நோக்கிலான செயற்பாடுகள் குறித்தாகின்றது.

தமிழர்களின் பிரதான பொது எதிரியாக துரோகியாக நயவஞ்சனாக இந்தியா இருக்கின்றது. இந்தியாவை கையாழுவதைப் பொறுத்தே எமது இருப்பு தக்கவைக்கப்படும். இந்த இடுக்கையின் தலைப்பு நூறு வீதம் உண்மையே இந்தியாவின் ஆதரவு இல்லாமல் எமது பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது. இந்தியா எம்மை ஆதரிக்கவேண்டுமாயின் நாம் இந்தியா எம்மை பயன்படுத்த எந்தச் சந்தரப்பத்தையும் கொடுக்காமல் இருக்கவேண்டும். நாம் இந்தியாவுக்கு தேவையானவர்கள் என்ற நிலையை உருவாக்கவேண்டும். சம்மந்தரின் இப்போதைய இந்தியச் சார்பு என்பது வழமை போல் பொல்லுக் கொடுத்து அடிவாங்கும் மார்க்கமே.

வழமையான தமிழ்த்தேசியவாதம் என்பது தோற்கடிக்கப்பட்டுள்ளது. மாற்றுவழியை தேடுவதை காலம் நிர்ப்பந்தித்துள்ளது. கூட்டமைப்புகளின் செயற்பாடுகள் ஆகட்டும் புலத்து வாக்கெடுப்பு நாடுகடந்த அரசு போன்றன வழமையான தமிழ்த்தேசியவாதத்தில் இருந்து மாற்றத்தை விரும்பாத செயற்பாட்டுக்குள்ளாகவே அடங்குகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை இலங்கையை தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் நாடுகள் பயன்படுத்தும் என்பதே உண்மை.

அதுதான் சம்பந்தர் இந்தியாவுடன் உறவை வைத்திருக்கிறார்...

சிங்களவரூடன் இனைந்து எப்படி தமிழ் தேசியவாதத்தை தக்கவைக்லாம் சுகன்?

வட இந்தியன், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் அவர்கள் திருகுதாளக் கதை சொல்ல வெளிக்கிட்டுட்டார்.

முதலாவது விடையம் இவர்களிடம் இந்தியா சொன்னதாம் பாராளுமன்றத்தேர்த்தலில் நின்று மக்கள் ஆணையைப்பெற்று வாருங்கள், அப்போது நாங்களும் உங்களுடன் ஒத்துழைக்றோம் என. இப்பிடித்தான் எழுபதுகளில சும்மா கிடந்த பொடியளை கூட்டணிக்காரர்கள் உசுப்பிவிட அதுக்குச்சமமாக இந்தியாவும் ஆயுதங்களைக் கொடுத்து சிறீலங்காவுக்கு எதிராகத் தாக்குதல்கள ஆரம்பியுங்கோ மற்ற விடையங்களை நாங்கள் பாத்துக்கொள்கிறோம் எண்டு சொன்னவை இப்ப முள்ளிவாய்காலிலை கொண்டுவந்து மிகப்பெரிய இனச்சுத்திகரிப்பினை நடாத்தி தமது முதலாவது பாத்துக்கொள்ளுகிறம் அத்தியாயத்தை முடித்துவைத்திருக்கினம். இதன்மூலம் பத்துலடசத்துக்கும் அதிகமான மக்கள் தமது வாழ்நிலங்களைவிட்டு வெளிநாடுகளில் போய்த் தங்கிவிட்டார்கள் இவர்களில் அனேகர் திரும்பிவரப்போவதில்லை. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மனநோயாளிகளாக்கப்பட்டும் அன்றாட வாழ்விற்கே அல்லாடும் ஒரு இனக்குழுமத்தின் அங்கமாக மாற்றப்பட்டும், பல்வேறு கலாசசாரச்சீர்கேடுகளுக்கு உள்ளாக்கியும், இராணுவப் புலனாய்வுத்துறையால் அடக்கி ஒடுக்கப்பட்டும் தனது சமூகம்சார்ந்து கனவில்கூட சிந்திக்க முடியாதவண்ணம் பயப்பிராந்தியில் வாழப்பழக்கப்படுத்தி மொத்தத்தில் ஈழத்தமிழர்களைக் கையேலாதாவர்களாக மாற்றியாகிவிட்டது. தவிர்ந்து எதிர்காலத்தில் யாராவது முளைத்தெழுந்தால் அவர்களை அடக்குவதற்கும் இன்னுமொரு முள்ளிவாய்க்காலை நாளையோ, நாளைமறுதினமோ அன்றேல் இன்னமொரு முப்பது வருடம் கழித்தோ தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப விரைவபடுத்தியோ அன்றேல் தாமதப்படுத்தியோ நடாத்தி முடிப்பதற்கான களநிலைமைகளை ஆயத்தப்படுத்துவதிலேயே இந்தியா தற்போது தமிழர் கூட்டமைப்பெனும் பெயரில் சிலருக்குக் கொம்புசீவிவிடுகின்றது. சம்பந்தன் ஐயா இதுநல்லதுக்கல்ல. கடந்தகாலத்தில் உங்களைப்போன்றோரது மென்மையான சுயநலம்மிக்க அரசியல் நடவடிக்கையின் மூலமே பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் விரக்தியடைந்து ஆயுதபலத்தின் மூலம் விடுதலையை வென்றிடமுனைந்து இப்போது மீளாப்புதைகுழியில் மாண்டுவிட்டனர். மீணடும் ஆரம்பத்திலிருந்து இனப்பிரச்சனையின் சிக்கல் முடிச்சக்களை அவிழ்கப்போகிறோம் எனக்கூறி மேற்கூறிய மீளாப்புதைகுழியை இன்னமொருக்கால் உருவாக்க வைப்பதே இந்தியாவின் திட்டம். இதுக்குத்தான் சம்பந்தன், சுரெஸ், மாவை போன்றோர் உடந்தையாகவிருக்கிறார்கள்.

இதில் வேடிக்கையான விடையம் என்னவெனில் குச்சவெளியில் உப்புக்கம்பனிக்கு நிலம்கொடுத்தது சுயநிர்ணய உரிமையைப் பாதிக்குதாம்.

அரைகுறை ஒப்பந்தமான இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்மூலம் ஒன்றிணைக்கப்பட்ட வடக்குக்கிழக்கை பிரித்ததைத் தடுக்கவோ அன்றேல் மீண்டும் அதை இணைக்கவோ கொள்கையளவில்கூட ஆதரவு தெரிவிக்காத இந்தியா, முப்பது வருடமாக நாம் தொப்புள்கொடி உறவு எனக்கூறி எமது உரிமைகளை மீட்டிட ஆவனசெய் எனக்கேட்டும், மன்றாடியும் எதுவுமே செய்யாத இந்தியா, ராஜீவ்காந்தியை வேறுபிற தீயசக்திகளுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு ஈழத்தமிழர்தலையில் குற்றம் சுமத்தி, பழவாங்குவதாகக் கூறிப் பாதகம்செய்த இந்தியா, எதிர்காலத்தில் ஈழத்தமிழனுக்கு மட்டுமல்ல இந்தியாவில் வசிக்கும் தமிழனுக்கும் நன்மைசெய்யம் எனச்சம்பந்தர் கூறினால், கிழவி சாமத்தியப்டுவாள் எனக்கூறுவொரை இழிவாகப்பார்ப்பதுபோல் பார்க்கவேண்டும். இவர்களது இருப்பினையும் தமிழர் இனவிரோத இந்தியாவின் தொடர்பாளர்களையும் வேரடிமண்ணுடன் சாய்க்கவேண்டும்.

தவிர எழுபதுகளில் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி எனும் பெரும் அரசியல் இயக்கம் உடும்புக்கறி புகழ் ஆனந்தசங்கரியால் முடக்கப்பட்டுள்ளதே அது முடக்கப்பட்டு பத்து வருடங்களை அண்மிக்கின்றதே அதைமீடபதற்கு இந்த அப்புக்காத்துக் கனவான்கள் ஏதாவது நடவடிக்கைகளை இதுவரை எடுத்தார்களா? ஒப்புக்குச்சப்பாணி நீதிமன்ற அமர்வுகள்மூலம் இழுத்தடித்துக்கொண்டுபோவதற்க்குக் காரணம் ஒருவேளை தமிழர் கூட்டமைப்போ அன்றேல் தமிழரசுக்கட்சியோ தமக்குச் சார்பற்றவர்களது கைகளுக்குப்போய்விட்டால் நீதிமன்ற வாசலில் தூசிபிடித்து நிற்கும் அதில்ஏறிப் பயணம் போகலாம், அப்போது முரண்டுபிடிக்கும் ஆனந்த சங்கரியாரை உடும்பக்கறியுடணோ அன்றேல் இந்தியாவின் அனுசரணையுடணோ சரிக்கட்டிவிடலாம் என்பதே.

சீதை களங்கமற்றவள் என்பது இராமனுக்குத்தெரியும், ஆனால் காலத்தின்கோலம் ராமனே சீதையின் தீக்குளிப்பை ஏற்றுக்கொணடான். ஆனால்; தமிழர் கூட்டமைப்பினர் வெறும்சோரம்போய்விட்டனர் எனும் சந்தேகத்துடன் நின்றுவிடவில்லை அவர்களது அண்மைக்கால நடவடிக்கைகளினால் அது நிரூபிக்கப்பட்டுள்ளது புலத்தில், தேர்த்தலில் தோல்வியெனும் தீக்குளிப்பைச் சந்தித்தேதீரவேண்டும் காரணம் இந்திய ஆதரவு நிலையெனும் களங்கத்தில் ஊறிவிட்டனர். தமிழர்க்கான உரிமைப்போராட்டமென்பது எதிர்வரும் பொதுத்தேர்தலுடன் முடிவடைந்து விடுவதில்லை அதன்பின்பே புதிய பரிணாமத்தைப் பெறப்போகின்றது அதற்கு முந்தைய படிநிலையே தற்போதைய தேர்த்தல்களம். மாறாக, ஈழத்தமிழர்களது வளமான, சுதந்திரமான வாழ்வு அண்மித்துவிட்டது அதுகூட்டமைப்புத் தோல்வியடைந்தால் வீணாகிப்போய்விடப்போகின்றது என்பதெல்லாம் வீண்கதை. இந்தியா எனும் எதிரிக்கு எமது எதிர்ப்பினைத் தெரிவிக்கவேணடுமாகவிருந்தால், அதனது பெயரை உச்சரிக்கும் எவரையுமே நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என இத்தேர்த்தலின்மூலம் உணர்த்துவதற்க்கு தமிழனுக்குக் கிடைதத் சந்தர்ப்பமாக நாம் இத்தேர்த்தலைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இதற்காக புலம்பெயர் தேசமெங்கும் மக்கள் ஓரியக்கமாக ஒன்றுசேர்ந்து எமது கருத்துக்களை புலத்திலுள்ள எமதுறவுகளுக்கு அறிவுறுத்துவதன்மூலம் (அனுப்பிய பணத்தையா திருப்பிக்கேட்கப்போறம் இல்லைத்தானே, இதுவரை தீர்மானிக்காது இருப்பவர்கட்கு நாம் ஐடியா கொடுக்கப்போறம் அவ்வளவுதான்) தமிழர் கூட்டமைப்பினை இத்தேர்தலில் தோல்வியடையச் செய்வதன்மூலம் இந்திய நிகழ்ச்சிநிரல் எனும் தாளத்திற்கேற்ப நடனமாடும் இவர்களை தற்காலிகமாகவேனும் ஜனநாயக ரீதியில் தண்டனை வழங்குவோம். மாறாக எமது நிலைப்பாட்டுடன் ஓரளவேனும் ஒத்துவரக்கூடிய, தற்போது தேர்த்தல்களத்தில் நிற்கின்ற அரசியல் இயக்கத்தை அடையாளம் காண்போம்.

அதுதான் சம்பந்தர் இந்தியாவுடன் உறவை வைத்திருக்கிறார்...

சிங்களவரூடன் இனைந்து எப்படி தமிழ் தேசியவாதத்தை தக்கவைக்லாம் சுகன்?

நீங்கள் எதை விரும்புகிறீர்கள் இந்தியனுக்கு அடிமையாக வேலை செய்வதையா..?? சிங்களவனுக்கு அடிமையாக வேலை செய்வதையா...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எதை விரும்புகிறீர்கள் இந்தியனுக்கு அடிமையாக வேலை செய்வதையா..?? சிங்களவனுக்கு அடிமையாக வேலை செய்வதையா...??

இந்தியனுக்கு நாம் பயன்பட்டகாலம் முடிந்துபோனது,இனி எமக்காக இந்தியனை பயன்படுத்துmகாலமே தொடங்குகிறது. இந்தியனை வைத்து எமதுகாரியம் ஆற்றவேண்டும் பின்னர் அவன் கழுத்தை அறுக்க வேண்டும். நண்பனாக இருந்து நயவஞ்சம் செய்தல் என இதை வகை படுத்தலாம்.

"நப்ப நட, நம்பி நடவாதே"

இந்த இடுக்கையின் தலைப்பு நூறு வீதம் உண்மையே இந்தியாவின் ஆதரவு இல்லாமல் எமது பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது. இந்தியா எம்மை ஆதரிக்கவேண்டுமாயின் நாம் இந்தியா எம்மை பயன்படுத்த எந்தச் சந்தரப்பத்தையும் கொடுக்காமல் இருக்கவேண்டும். நாம் இந்தியாவுக்கு தேவையானவர்கள் என்ற நிலையை உருவாக்கவேண்டும். சம்மந்தரின் இப்போதைய இந்தியச் சார்பு என்பது வழமை போல் பொல்லுக் கொடுத்து அடிவாங்கும் மார்க்கமே.

எப்படி இந்தியாவை எம்பக்கம் திருப்ப வேணுமோ அதேபோல் சிங்களவரையும் எம்பக்கம் திருப்ப வேண்டும்,தமிழருக்கு உரிமை கொடுத்தால்தான் சிங்களவர்களும் நிம்மதியாக வாழமுடியும் என்று நிலைப்பாட்டை உருவாக்க வேண்டும்.

தமிழன் இந்தியாவுடன் சேர்ந்து இலங்கைக்கு தொந்தரவு தருவான் என்ற தாக்கம் சிங்கள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட வேண்டும் அதற்கு ஏற்ற வகையில் நாம் அரசியல் நடத்த வேண்டும்

நீங்கள் எதை விரும்புகிறீர்கள் இந்தியனுக்கு அடிமையாக வேலை செய்வதையா..?? சிங்களவனுக்கு அடிமையாக வேலை செய்வதையா...??

இருவரும் எமக்கு அடிமையாக இருக்கவேண்டும் .அதற்கு ஏற்ற சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும்

வட இந்தியன், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள் ...

கேரளாக்காரர்,மேனன்,நாராயணன் நல்லவையளோ? :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எதை விரும்புகிறீர்கள் இந்தியனுக்கு அடிமையாக வேலை செய்வதையா..?? சிங்களவனுக்கு அடிமையாக வேலை செய்வதையா...??

வெள்ளயனுக்கு அடிமயாக வேலைசெய்ய எண்டுறதயும் போட்டிருக்கவேணும். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பிராந்தியத்தில் செல்வாக்கிழந்துவிட்ட ஒரு தேசம்.

திபெத்திய தலைவர் கூட அண்மையில் அமெரிக்கா சென்ற பின் வெளியிட்ட கருத்துக்களில்.. தான் சீனாவிடம் இருந்து பிரிந்து செல்ல விருப்பப்படவில்லை மாறாக சீனா தமக்கு அரசியல் சமூக கலாசார சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். சீனா திணிப்புக்களைச் செய்யக் கூடாது என்றிருந்தார்.

இது திபெத் தனிநாடு என்ற தலய்லாமாவின் முன்னைய இந்திய ஆதரவுடனான கோசத்தில் இருந்து அவர் பின்வாங்கி இருப்பதையே காட்டுகிறது. இது திபெத்தை வைத்து சீனாவை அச்சுறுத்த நினைத்த இந்தியாவின் கொள்கைக்கு ஏற்பட்ட முதற் சறுக்கல் என்றே கொள்ள வேண்டும்.

இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் எங்கனும் சீனா வலுவாக காலூற்றிவிட்டுள்ளது. மியான்மாரில் இருந்து சிறீலங்கா வரை சீனாவை புறக்கணித்து அரசுகள் செயற்படும் நிலைக்கு அப்பால் அந்தந்த நாடுகளை சீனா தனக்குள் எடுத்துக் கொண்டு விட்டது.

இந்த நிலையில் இந்தியா இன்று பிராந்தியத்தில் இராஜதந்திர ரீதியில் தனிமைப்பட்டு மேற்குலக அமெரிக்க நலன்சார்ந்து முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

இப்படியான ஒரு நிலையில்.. இந்தியாவின் ஆதரவை ஈழத்தமிழர்கள் பகிரங்கமாக நாடிச் செல்வதன் சாதக பாதக நிலைகளை சரியாகக் கணக்கிட்டுச் செயற்பட வேண்டும்.

இந்தியா ஒரு செல்வாக்கிழந்துள்ள தேசம் மட்டுமன்றி சீன இராஜதந்திரத்தின் முன் தோற்றுக் கிடக்கும் தேசமும் கூட. அப்படியான ஒரு பலவீன தேசத்தின் மீது பகிரங்க ஆதரவு தெரிவிப்பது தமிழர்களை மேலும் தனிமைப்படுத்தி.. இந்தியா தான் நினைத்தபடிக்கு தமிழர்களை பாவிக்க அவர்களைப் பலவீனப்படுத்தி நிற்கும். மீண்டும் அது எமது இனத்தின் எதிர்காலத்தை படுகுழிக்குள் தள்ளி நிற்கும்.

இந்தியா எமது நண்பன் என்று அறிவித்த விடுதலைப்புலிகள் தான் இந்தியா எமது உரிமைகள் மீது ஆதிக்கம் செய்ய முற்பட்ட போது அதனையும் எதிர்க்கத் துணிந்தார்கள். அப்படி தான் தமிழர்கள் இருக்க வேண்டும். தமிழர்கள் தமக்கான தனியான இராஜதந்திரத்தை நிறுவிக் கொண்டு பிராந்திய செல்வாக்குக்குப் போட்டா போட்டி போடும் தேசங்களை எமது உரிமையை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்திக் கொள்ள முனைய வேண்டுமே தவிர இந்தியாவிற்கு விசுவாசம் காட்டுவதன் மூலம் தமிழர்கள் எந்த இராஜதந்திரத்தையும் நிறுவிச் செயற்பட முடியாது.

இந்தியாவிற்கு விசுவாசிகளாக இருப்பதைவிட இந்தியாவை இராஜதந்திர ரீதியில் கையாளும் திறமை தான் அவசியம். இந்தியா மட்டும் தமிழர்களின் நண்பன் அல்ல. பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தமிழர்களுக்கு நண்பன் என்ற நிலை உருவாகாமல் இந்தியாவை எமது விருப்பிற்கு ஏற்ப நகர்த்தி வர முடியாது. இந்தியாவை நகர்த்தாமல் சிறீலங்காவை புடுங்கவும் முடியாது.

அதுமட்டுமன்றி தமிழர்கள் சீனா பாகிஸ்தான் என்று பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுடனும் உறவுகளை மேம்படுத்த வேண்டும். எவருடன் சிறப்பான உறவு மேம்படுகிறதோ அதை பிராந்திய நலன் மற்றும் தேசம் விடுதலை உரிமை நோக்கி பயன்படுத்தி முன்னேற்றி பிழைத்துக் கொள்ளத் தெரிய வேண்டும்.

அதைவிடுத்து குருட்டுத்தனமான இந்திய விசுவாச அரசியல் எமக்கு எதனையும் பெற்றுத்தராது.

நாம் இந்திய விசுவாசிகளாக இருந்து இந்திரா காந்தி காலத்தில் பெற்றதை விட.. இந்திய எதிரிகளாக இருந்து சம்பாதித்த நண்பர்கள் அதிகம்..! நிலைநாட்டிய உரிமைகள் அதிகம்..!

போரில் இழப்பிற்குக் காரணம்.. இந்தியாவை நம்பி தலைவர் போரை நிறுத்திக் கொண்டதுதான். இன்று தலைவரை போராட்டத்தை பிரிந்து நாம் அவதியுற இந்த குருட்டுத்தனமான இந்திய விசுவாசமே காரணமும் ஆனது என்பதையும் மறக்கக் கூடாது.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழன் இந்தியாவுடன் சேர்ந்து இலங்கைக்கு தொந்தரவு தருவான் என்ற தாக்கம் சிங்கள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட வேண்டும் அதற்கு ஏற்ற வகையில் நாம் அரசியல் நடத்த வேண்டும்

வட இந்தியன், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள் ...

.... அதுமட்டுமன்றி தமிழர்கள் சீனா பாகிஸ்தான் என்று பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுடனும் உறவுகளை மேம்படுத்த வேண்டும். எவருடன் சிறப்பான உறவு மேம்படுகிறதோ அதை பிராந்திய நலன் மற்றும் தேசம் விடுதலை உரிமை நோக்கி பயன்படுத்தி முன்னேற்றி பிழைத்துக் கொள்ளத் தெரிய வேண்டும்.

.....

மிக ஆழாமான சிந்தனைகள்.

அற்புதமான பதிவு நெடுக்காலபோவான்

அப்படியே கனவுகண்டுகொண்டே இருங்கோ சோனியாவந்து மிஞ்சியிருக்கின்ற கோவணத்தையும் உருவிக்கொண்டு போவா!

அப்பவும் உதையே சொல்லிக்கொண்டேயிருங்கோ இந்தியாதான் வந்து புடுங்கவேணும் என்று

அதுதான் சம்பந்தர் இந்தியாவுடன் உறவை வைத்திருக்கிறார்...

இந்தியாவுடன் உறவை வைத்திருக்காலாம் ஆனால் சிங்களவனைப்போன்று இந்தியா இல்லாவிட்டால் பாக்கிஸ்தான் என்று இருக்கவேண்டும். ஆனால் தமிழ்கூத்தமைக்கு உலகம் என்றாலே இந்தியா என்று இருக்கிறார்கள். மலசலகூடம் போவதற்கும் டெல்லி போய் கேட்டுவரக்கூடியவர்கள்.

( செய்நன்றி எல்லாம் புராணகாலத்துக்கு சரி இன்றையஅரசியலில் இவையெல்லாம் சரிவராது)

Edited by Subiththiran

இந்தியனுக்கு நாம் பயன்பட்டகாலம் முடிந்துபோனது,இனி எமக்காக இந்தியனை பயன்படுத்துmகாலமே தொடங்குகிறது. இந்தியனை வைத்து எமதுகாரியம் ஆற்றவேண்டும் பின்னர் அவன் கழுத்தை அறுக்க வேண்டும். நண்பனாக இருந்து நயவஞ்சம் செய்தல் என இதை வகை படுத்தலாம்.

"நப்ப நட, நம்பி நடவாதே"

அவ்வளவு ஆளுமையும் பலமும் உங்களிடம் இல்லை என்பது தான் உண்மை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.