Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள் - திரு செல்வராசா கஜேந்திரன்

Featured Replies

ஊடகஅறிக்கை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகியவறின் அடிப்படையிலான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு மேற்படி கொள்கைகளுக்காக உழைப்போம் என்ற உறுதிப்பாட்டுடன் த.தே.கூ இனால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தினை ஏற்றுக் கொண்டு தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளின் மூலம் ‘22’ பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

கூட்டமைப்பின் அரசியல் வேலைத்திட்டங்களை இலகுபடுத்தும் நோக்கில் கிளிநொச்சியில் இடம் பெற்ற கலந்துரையாடல்கள் மூலம் வேலைத்திட்டங்களின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுக்களுக்குமான பொறுப்புக்கள் ஒதுக்கப்பட்டது.

அதில் ஒரு குழு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெளிவிவகாரக்குழு.

அக்குழுவின் தலைவராக ஆரம்பத்தில் மறைந்த மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களும் உப தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் நியமிக்கப்பட்டனர். அதன் அங்கத்தவர்களாக செல்வராசா கஜேந்திரன் ஆகிய நானும் திருமதி. பத்மினி சிதம்பரநாதன், செல்வம் அடைக்கலநாதன், ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் அங்கம் வகித்தோம். பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட நாளில் இருந்து தமிழ் தேசியக் கொள்கைகளுக்கான சர்வதேச அங்கீகாரம் பெறும் நோக்கில் வெளிநாட்டுத் தூதரக மட்டங்களிலும் வெளிநாட்டிலுள்ள அரசுகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செயற்பட்டு யுத்தத்தை நிறுத்தவும், தாயத்ததிலுள்ள மக்களுடனும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுடனும் இணைந்து அரசியல் வேலைத் திட்டங்களை முன்னெடுத்தோம்.

2006ஆம் ஆண்டு யுத்த சூழல் உருவான போது விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறி வன்னிப்பகுதிக்கு சர்வதேச இராஜதந்திரிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள், ஊடகவியலாளர்கள், வெளிநாட்டுப் பிரஜைகள் என எவரும் செல்லக்கூடாதென அரசு தடைவிதித்தது. அவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாகிய நாமும் வன்னிக்கு செல்லாதிருந்தால் இலங்கை அரசு கூறுவது போல புலிகளை பயங்கரவாதிகள் என நாமும் ஏற்றுக்கொள்வதாக உலகம் கருதும் ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக நானும் இன்னும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் வன்னிக்குச் சென்று அங்கு 2006 – 2008 இறுதி வரை தங்கியிருந்தோம். அங்கிருந்து சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்ததுடன் அவ்வப்போது புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகளுக்கும் சென்று அங்கு வாழும் புலம்பெயர் மக்கள் மத்தியிலும், அரசுகள் மட்டத்திலும் அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு திரும்பினோம்.

2006 ல் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்ற அரசு யுத்தத்தைத் தீவிரப்படுத்திய போது அதற்கெதிராகவும் அங்கு இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிராகவும் உறுதியாகக் குரல் கொடுத்தோம். பாராளுமன்றின் உள்ளேயும் வெளியேயும் ஐனநாயக ரீதியாக மேற்கொண்ட போராட்டங்கள் மூலம் தமிழ் மக்கள் மீது இடம்பெற்று வந்த இனப் படுகொலையை தடுக்க சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் செயற்பட்டோம். அதன் விளைவாக சக நாடளுமன்ற உறுப்பினர்களான மாமனிதர் நடராஜா ரவிராஜ் மற்றும் மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களையும் நாம் இழந்தோம்

கிழக்கு மாகாணத்தை இராணுவம் ஆக்கிரமித்ததை தொடர்ந்து வன்னிப் பெருநிலப்பரப்பு மீது இலங்கையரசு யுத்தத்தை ஆரம்பித்ததில் இருந்து தொடர்ச்சியாக யுத்தம் நிறுத்த்பபடல் வேண்டும் எனக் குரல் கொடுத்து வந்தோம். யுத்தத்தை நிறுத்தி இராணுவம் பழைய நிலைகளுக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்தியதுடன் எமது உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டு;ம் எனவும் உறுதியாகச் சர்வதேச சமூகத்தை வற்புறுத்தினோம். யுத்தம் உச்சக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்த நிலையிலும் நாம் வன்னியில் தொடர்ந்து யுத்த அவலத்தில் வாழ்ந்த மக்களோடு மக்களாக தங்கியிருந்தோம். இதனை பொறுக்க முடியாத மகிந்த அரசு கிளைமோர் தாக்குதல் மூலம் வன்னிப் பகுதிக்குள் வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சிவநேசன் அவர்களை படுகொலை செய்தது.

2008ஆம் ஆண்டு இறுதிவரை வன்னியில் தங்கியிருந்து அந்த மக்களோடு மக்களாக நின்று உரிமைப் போராட்டத்தின் அங்கீகாரத்திற்காகவும் யுத்தம் நிறுத்தப்பட்டு இராணுவம் பழைய நிலைகளுக்குத் திரும்ப வேண்டும் பேச்சுக்கள் மூலம் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டுமெனவும் குரல் கொடுத்தோம்.

இந் நிலையில் வன்னியில் யுத்தம் தீவிரமாகிப் பொது மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட போது அதனைத் தடுத்து நிறுத்ததுவதற்காக புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களை மேற்கொள்வதற்காக 2008 இறுதியில் புலம்பெயர் தேசத்திற்குச் சென்றோம்.

இவையெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் வேறுபட்ட நிலைப்பாட்டைச் சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்திக் கொண்டிருந்னர். தமிழீழ விடுதலைப் புலிகளால் நிராகரிக்கப்பட்ட ஒஸ்லோ அடிப்படையில் தீர்வுகளை ஏற்றுக் கொள்ளத் தாம் தயார் என்ற நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தி வந்தனர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்புத் தலைமைகள் கொள்கைகளைக் கைவிட்டு தீர்வுகளை ஏற்றுக் கொள்ளத் தயார் என்ற நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தி வந்த நிலையில் சில கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டுத் தூதரகங்களுடனும் சர்வதேச இராஜதந்திரிகள் மற்றும் வெளிநாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களச் சந்தித்து கொள்கை நிலைப்பாட்டை ஆணித்தரமாக வலியுறுத்த முற்படும் போது நாம் விடுதலைப் புலிகளைக் காப்பாற்றுவதற்காகவே இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதாக அவர்களால் கருதப்பட்டதுடன் தமிழ் மக்களது நிலைப்பாடு, வேறுபட்டது என்றும் அவர்களால் கூறப்பட்டது.

தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தேசம், இறைமை என்ற நிலைப்பாடுகள் தமிழ் மக்களது கோரிக்கைகள் இல்லை என்றும் அது புலிகளதே என்ற கருத்து நிலை கூட்மைப்புத் தலைமைகளால் சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது. மேற்படி கோரிக்கைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் இல்லை என்ற கருத்து நிலை கூட்;மைப்பின் மூத்த தலைவர்களால் ஏற்படுத்தப்பட்ட நிலையில் அக்கோரிக்கைகளின் அங்கீகாரத்திற்காக போராடிய விடுதலைப் புலிகளை அழித்தால் அக்கோரிக்கைகள் மீண்டும் எழாது என்ற கருத்து போராட்டத்தை அழிக்க விரும்பிய சக்திகளுக் வசதியாகிவிட்டது.

2004 ம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக கூட்டமைப்பின் தலைமைகள் செயற்பட்டமையின் விளைவு முள்ளிவாய்க்காலில் 50,000கும் அதிகமான மக்கள் அழிக்கப்படவும் பலகோடி பெறுமதியான சொத்துடமைகளை அழிக்கப்படவும், மக்களின் வாழ்வும் வளமும் அழிக்கப்பட்டு சொந்த மண்ணில் இருந்து அவர்கள் துடைத்தெறியப்படவும் தூண்டுதலாக அமைந்தது.

விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும் வரை பொது மக்களுக்குத் தெரியாத வகையில் தவறான பாதையில் பயணித்த கூட்டமைப்புத் தலைமைகள் இப்போது வெளிப்படையாகவும் ஏதேச்சதிகாரமாகவும் கொள்கைகளுக்கு மாறாக செயற்படத் தொடங்கிவிட்டன. கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் இரகசியமாக அடிப்படைக் கொள்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகிய கோரிக்கைகளைக் கைவிட்டு தீர்வுத் திட்டத்தைத் தயாரித்து அதனை இறுதி செய்துள்ளனர்.

கொள்கைகளைக் கைவிடக்கூடாது என நாம் வாதாடினோம். ஆனால் எமது கோரிக்கைகளை கூட்டமைப்புத் தலைமை அடியோடு நிராகரித்து விட்டது. கொள்கை என்று கோசங்கள் போட வேண்டாம் என்றனர். இந்தியா விரும்பாது என்றனர். இந்தியா விரும்புவததையே நாம் செய்ய முடியும் என்றனர். இந்தியா விரும்பாததை செய்ய மாட்டோம் என்றனர். மேலும் தாம் தயாரித்துள்ள தீர்வுத்திட்டமே இறுதியானது அதனையே இனப்பிரச்சினைக்கான தீர்வுதிட்டாக முன்வைக்கப் போவதாகவும் கூறினர். மேலும் திரு சம்பந்தன் அவர்கள்,'நீங்கள் ஒத்துழைக்கா விட்டாலும் எஞ்சியவர்களது உதவியுடன் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தே தீருவேன்" என்று அதிகாரத்துடனும் அகங்காரத்துடனும் கூறிவிட்டார். கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக நின்றமையினால் நானும் திருமதி பத்மினி சிதம்பரநாதன் அவர்களும் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களால் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டு வெளியேற்றப்பட்டோம்.

தமிழ் தேசிய இனத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் தீர்வுத்திட்;டமானது அடிப்படை அரசியல் கொள்கைகளை உள்ளடக்கியதாக முன்வைக்கப்படும் என்ற எழுத்து மூல உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை கூட்டமைப்பு தலைமைகளால் நிராகரிக்கப்பட்ட நிலையில், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தினை மீள முடியாத ஆபத்தில் சிக்க வைக்கும் வகையில் கூட்டமைப்பு தலைமைகள் மேற்கொள்ளவுள்ள பேரழிவு நடவடிக்கைக்கு துணைபோக விரும்பாத நிலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினுடைய பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இச் சூழ் நிலையில் இப் பாராளுமன்றத் தேர்தல் இடம் பெறவுள்ள நிலையில் கூட்டமைப்பு தலைமைகளின் நடவடிக்கைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமை அக் கூட்டமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்ற வகையில் எங்களுக்கு எழுந்தது. இவ்வாறு த.தே.கூ தலைமைகளின் தவறான நடவடிக்கைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் பொழுது அந்த உண்மைகளை ஏற்றுக் கொண்டு த.தே.கூ தலைமைகளை நிராகரிக்க விரும்பும் மக்களுக்கு சரியான ஓர் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு ஏற்பட்டாதல் இந்த தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தோம்.

உரிமைகளை பெறவேண்டும் என்ற வேணவாவில் உயிர் கொடுத்த மக்களதும் இளைஞர், யுவதிகளதும் தியாகங்களை எம் நெஞ்சினில் சுமந்து சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அடிபணியாது உறுதியாக நின்று கொள்கைப் பற்றுடன் தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுடன் கரம்கோர்த்து எமது உரிமைகளுக்காக இறுதி மூச்சு வரை உறுதியுடன் உழைப்போம்.

போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களது மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக புலம்பெயர் தமிழ் மக்களதும், சர்வதேச சமூகத்தினதும் உதவிகளை பெற்றுக் கொடுக்க அற்பணிப்புடன் உழைப்போம்.

உரிமைப் போராட்ட காலத்தில் சிறீலங்கா அரச படைகளாலும் ஈபிடிபி உள்ளிட்ட துணை இராணுவக் குழுக்களாலும் கடத்தப்பட்டு காணமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கும், தடுப்பு முகாம்களிலும், சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி இளைஞர்கள், முன்னாள் போராளிகள் அனைவரதும் விடுதலைக்காகவும் அக்கறையுடன் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம்.

பிறசக்திகளின் நலன்களுக்காக எம் மக்களின் வாழ்வை மீண்டும் சீரழிக்க கங்கணம் கட்டிநிற்கும் த.தே.கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய சக்திகளை நிராகரித்து நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து உங்களது அரசியல் உரிமைகளுக்காக குரல் கொடுக்கக் கூடிய உண்மையான, நேர்மையான, கொள்கை கொண்ட எம்மை பலப்படுத்துங்கள்.

அதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள்.

செல்வராசா கஜேந்திரன்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
rofl2.gif
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஒற்றுமை உலகறிந்தது என்றாலும்.. இதை வைத்து ஈழ தோழர்கள் எதுவும் செய்யமுடியாதா? தமிழ்நாடு மாதிரி.. யாதவர் பேரவை.. யாசிக்காதவர் பேரவை என?

சிங்களவர் சாதி அமைப்பு முறை

* Ahinkuntaya - Gypsies

* Badahäla (Kumbal) - Potters

* Bathgama - Traditionally cultivators. Called Palanquin bearers during the British period

* Berava - Tom-tom beaters

* Govigama - Traditional cultivators, farmers and herdsmen

* Hannali - Tailors

* Hunu - Lime burners

* Kinnaraya - Outcastes

* Navandanna - Artisans (many subcategories)

* Pamunu - Tenant farmers

* Panna - Grass cutters

* Pannikki - Barbers

* Patti- Herdsmen

* Porowakara - Wood cutters

* Radala - Nobility of the Kandyan Kingdom

* Rajaka - Dhobies, Washermen

* Rodiya - Outcastes

* Wahumpura - Jaggery makers

Southern Castes

* Ahinkuntaya – Gypsies

* Badahäla (Kumbal) - Potters

* Berava - Tom-tom beaters

* Demala Gattara - Tamil Outcastes

* Durava - Traditional Soldiers

* Gattara - Cultivators

* Govigama - Traditional cultivators, landworkers and herdsmen

* Hannali - Tailors

* Hinna - Washers to the Salagama,

* Navandanna - Artisans (Many subcategories)

* Pamunu - Tenant farmers

* Pannikki - Barbers

* Porowakara - Wood cutters

* Rajaka (Hena) - Washermen

* Rodiya - Outcastes

* Salagama - Cinnamon tapers,Soldiers,& Weavers

* Wahumpura - Jaggery makers

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்...

நன்றி வீக்கிலிபீடியா..

  • தொடங்கியவர்

rofl2.gif

grenade.gif

post-7400-12684993334268.gif

Edited by Aasaan

  • கருத்துக்கள உறவுகள்

rofl2.gif

உண்மைதான் காவாலி

ஆனால் நான் வேதனைப்படுகின்றேன்

உண்மைதான் காவாலி

ஆனால் நான் வேதனைப்படுகின்றேன்

இப்படித்தான் 1977ல் பசப்பு வார்த்தைகளால் தமிழர்களை ஏமாற்றி வட்டுகோட்டை தீர்மானத்தை காட்டி வாக்கு வாங்கியது தமிழ் கட்ச்சிகளின் கூட்டணி. அப்போது கூட்டணியில் இருந்து பிரிந்து வந்த குமார்பொன்னம்பலம் அவர்கள் கூட்டணியின் இரண்டகத்தை சொல்லி அவர்களின் நோக்கம் உண்மையான தனி நாடு அல்ல, பொய்யான வாக்குறுதி தரும் கூட்டணியை ஆதரிக்காதீர்கள் எண்று சொல்லி நிண்றவர். அப்போது குமார் பொன்னம் பலம் எங்கட தமிழ் மக்களுக்கு துரோகியாக பட்டார்.

ஆனால் தேர்தலின் பின் கூட்டணி தமிழர்களை கைவிட துடிப்பான தமிழ் இளைஞர்கள் ஆயுதமே கதி எண்று பயணித்தனர். அரசியல் பாதைக்கு இதே கூட்டணி இந்தியாவுடனும் இலங்கை சிங்களவருடனும் சேர்ந்து தடையாக நிண்றனர். அதன் பலனை அனுபவித்தும் உங்களுக்கு அறிவு வரவில்லை எண்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்.

இண்டைக்கும் வரலாறு திரும்பி இருக்கு. SMS குழுவின் இரண்டகத்தை சொல்லி குமார் பொன்னம் பலம் அவர்களின் மகன் கஜேந்திரன் பொன்னம்பலம் வந்து இருக்கிறார். நீங்கள் கூட்டமைப்பை பிரித்தவர் பொன்னம்பலம் எண்டும் சம்பந்தன் கூட்டம் ஆடின ஆட்டத்தை மறைச்சும் நிக்கிறீயள்.

எண்டைக்கு திருந்த போறியள்.?

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ஐயா

வரலாற்றை இப்போதுதான் கூட்டமைப்பு சம்பந்தமான இது போன்ற குற்றச்சாட்டுக்களைப்பார்க்கின்றேன்

இதனுடன் சேர்ந்து வளர்ந்தவன் என்கின்றரீதியில் இதை நம்பமுடியவில்லை.

அவசரப்படுகிறோம் என்றுதான் தோன்றுகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படித்தான் 1977ல் பசப்பு வார்த்தைகளால் தமிழர்களை ஏமாற்றி வட்டுகோட்டை தீர்மானத்தை காட்டி வாக்கு வாங்கியது தமிழ் கட்ச்சிகளின் கூட்டணி. அப்போது கூட்டணியில் இருந்து பிரிந்து வந்த குமார்பொன்னம்பலம் அவர்கள் கூட்டணியின் இரண்டகத்தை சொல்லி அவர்களின் நோக்கம் உண்மையான தனி நாடு அல்ல, பொய்யான வாக்குறுதி தரும் கூட்டணியை ஆதரிக்காதீர்கள் எண்று சொல்லி நிண்றவர். அப்போது குமார் பொன்னம் பலம் எங்கட தமிழ் மக்களுக்கு துரோகியாக பட்டார்.

ஆனால் தேர்தலின் பின் கூட்டணி தமிழர்களை கைவிட துடிப்பான தமிழ் இளைஞர்கள் ஆயுதமே கதி எண்று பயணித்தனர். அரசியல் பாதைக்கு இதே கூட்டணி இந்தியாவுடனும் இலங்கை சிங்களவருடனும் சேர்ந்து தடையாக நிண்றனர். அதன் பலனை அனுபவித்தும் உங்களுக்கு அறிவு வரவில்லை எண்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்.

இண்டைக்கும் வரலாறு திரும்பி இருக்கு. SMS குழுவின் இரண்டகத்தை சொல்லி குமார் பொன்னம் பலம் அவர்களின் மகன் கஜேந்திரன் பொன்னம்பலம் வந்து இருக்கிறார். நீங்கள் கூட்டமைப்பை பிரித்தவர் பொன்னம்பலம் எண்டும் சம்பந்தன் கூட்டம் ஆடின ஆட்டத்தை மறைச்சும் நிக்கிறீயள்.

எண்டைக்கு திருந்த போறியள்.?

வட்டுக்கோட்டைப்பிரகடனம் பசப்புவார்த்தை

தூன்டப்பட்ட இளைஞர்களால......அதன் பலனை அனுபவித்தும்கூட புத்தி வரேல்ல...

எல்லாமே முன்னுக்குப்பின் முரனா.....எங்கயோவெல்லாம் இடிக்குது...... :rolleyes::D

எல்லாமே முன்னுக்குப்பின் முரனா.....எங்கயோவெல்லாம் இடிக்குது...... :wub::wub:

வரலாறு எண்டால் சாப்பிடுகிற சாமானோ எண்டு கேக்கிறவைக்கு விளங்க கஸ்ரமாக தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரலாறு எண்டால் சாப்பிடுகிற சாமானோ எண்டு கேக்கிறவைக்கு விளங்க கஸ்ரமாக தான் இருக்கும்.

அண்ணை வட்டுக்கோட்டைப்பிரகடனமே பசப்புவார்த்தையெண்டா போராட்டத்தின் நியாயமே கேள்விக்குறியாகிவிட்டது. :wub:

அதையெடுத்த இளைஞர்களுக்கு மூளையில்லை ....... :wub:

அதையெடுத்தது மட்டுமல்லாமல் இவ்வளவு அழிவுகளுக்கும் கொலைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணமாகி நின்ற இளைஞர்கள்..... :wub:

திரும்ப வட்டுக்கோட்டைப்பிரகடனம் எண்டு தூக்கிவச்சிருக்கிறது ....நாடுகடந்து அரசுஅமைக்கிறது....... :wub::wub:

விளங்க கஸ்ரமாயிருக்கு விளங்கப்படுத்தவும்.

Edited by Mathivathanang

வாசிப்பு பழக்கமும் அதை கிரகிக்கும் அறிவும் இல்லாததுகளுக்கு சொல்லி புரிய வைப்பது கடினம்.

ஆனாலும் உமக்காக இல்லை எண்டாலும் மற்றவர்களுக்காக சொன்னதை இன்னும் விளக்கமா சொல்லுறன்.

அண்ணை வட்டுக்கோட்டைப்பிரகடனமே பசப்புவார்த்தையெண்டா போராட்டத்தின் நியாயமே கேள்விக்குறியாகிவிட்டது. :wub:

வட்டுகோட்டை பிரகடனம் பிழையானது எண்று நான் எங்கையாவது குறிப்பிட்டு இருக்கிறனா.? தேடிப்பாத்தன் எனக்கு கிடைக்க வில்லை ஆனால் அதை கண்டு கொண்ட உமது அறிவு பார்வை வியக்க வைக்குது.

வட்டுகோட்டை தீர்மானத்தை தமிழர் விடுதலை கூட்டணியின் தந்தை செல்வா தலைமையில் 1976ல் தமிழ் காங்கிரசும் சேர்ந்தே வட்டுகோட்டை தீர்மானத்தை கொண்டு வந்தது.

தந்தை செல்வா 1977 சித்திரை 26ல் சாவடைந்த போது கூட்டணிக்கு புதிய தலைமை பொறுப்பெடுத்தது. அந்த தலைமை யார் எண்டதும் தமிழகளுக்கு தெரியும். தந்தை செல்வாவின் உன்னதை இலச்சியத்தை அமிர்தலிங்கம் கூட்டணி தங்களின் நலன்களுக்கு பாவித்து.

இதன் மூலம் சொன்னது தங்களுக்கு புரிய வளி இல்லை. ஆனாலும் சுருக்க மாக சொன்னால் பிரகடனம் பிழை இல்லை. ஆனால் அதை கையில் வைத்து இருந்த அமிர்தலிங்கம் பிழையானவர்.

அதையெடுத்த இளைஞர்களுக்கு மூளையில்லை ....... :wub:

அதையெடுத்தது மட்டுமல்லாமல் இவ்வளவு அழிவுகளுக்கும் கொலைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணமாகி நின்ற இளைஞர்கள்..... :wub:

அதுதான் உண்மை. எத்தினை இயக்கங்கள். ?

பிரபாகரன் எனும் ஒருவரால் மட்டும் நிலைத்து நிற்க்க முடிந்தது. அவரின் பின்னால் போனவர்களாலும் முடிந்தது. ஆனால் மற்றவர்களால். ? ஏன் முடியவில்லை.?

கொள்கையில் எவரும் உறுதியாக நிற்க முடியவில்லை. அதுக்கு காரணம் வெறும் தூண்டுதலால் வந்து கூட்டணியை பார்த்து சுயநலமிகளானதுதான் காரணம்.

இந்தியாவும் அவர்களுக்கு பயிற்ச்சியை குடுத்து கட்டாயமாக ஆயுதத்தை கையிலை குடுத்து விட்டால் யாரை சுடுகிறது எண்டதிலேயே குழப்பம்.

இந்த எச்சங்களும் மிச்சங்களுமே எங்களின் போராட்டம் இவ்வளவு கேவலம் ஆனதுக்கு காரணம் எண்று சொன்னாலாவது புரியுமா.?

திரும்ப வட்டுக்கோட்டைப்பிரகடனம் எண்டு தூக்கிவச்சிருக்கிறது.... நாடுகடந்து அரசுஅமைக்கிறது....... :wub::wub:

விளங்க கஸ்ரமாயிருக்கு விளங்கப்படுத்தவும்.

:lol: இது எல்லாம் உங்களுக்கு எலும்பு போடுவறவையிட்ட கேக்க வேண்டியது தானே. ?

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட்டுக்கோட்டை பிரகடனத்தை கொண்டுவந்தது கூட்டமைப்புத்தானே......கூட்டமைப்பே பசப்பு வார்த்தைகளால் என்று நீங்கள் சொல்லும்போது....... :wub::wub::wub:

Edited by Mathivathanang

வட்டுக்கோட்டை பிரகடனத்தை கொண்டுவந்தது கூட்டமைப்புத்தானே......கூட்டமைப்பே பசப்பு வார்த்தைகளால் என்று நீங்கள் சொல்லும்போது....... :wub::wub::wub:

கூட்டமைப்புக்கும் கூட்டணிக்கும் வித்தியாசம் இருக்கண்ணை. :wub::wub::lol:

கூட்டணியின் இண்டைய தலைவர் ஆ, சங்கரி . :lol:

கூட்டணியிலை 3 முக்கிய கட்ச்சிகள் சுதந்திரா கட்ச்சி, தோட்ட தொழிலாளர் காங், தமிழ் காங்கிரஸ் . இவைதான் வட்டுக்கோட்டை தீர்மானம் கொண்டு வந்த ஆக்கள். இதிலை கூட்டணியிலை இருந்து தோட்ட தொழிலாளர் காங்கிரசும், தமிழ் காங்கிரசும் இருந்த முஸ்லீம்கள் எல்லாம் பிரிஞ்சு முஸ்லீம் காங்கிரஸ் எண்டு எப்பவோ பிரிஞ்சிட்டுது.

கூட்டமைப்பிலை சுதந்திரா கட்சி, TELO, EPRLF ,தமிழ் காங்கிரஸ் + சுயேட்ச்சைகள்.

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப நீங்கள் அந்த கூட்டணி கொண்டுவந்த வட்டுக்கோட்டைப்பிரகடனத்த பசப்பு பிரகடனம் என்டு சொல்லுறீங்கள். ...

இப்ப இருக்கிற கூட்டமைப்பு அதை விட்டிட்டு நோர்வே பிரகடனத்த எடுத்திருக்கு அது உங்களுக்கு பிடிக்கேல்ல....

கூட்டமைப்பு பசப்பு கூட்டணி கொண்டுவந்த வந்த வட்டுக்கோட்டய.......இல்ல நோர்வே பிரகடனத்த... சா.... இன்றைய வட்டுக்கோட்ட பிரகடனத்த.....

கொன்பீசா இருக்கண்ண...... :wub::wub:

அப்ப நீங்கள் அந்த கூட்டணி கொண்டுவந்த வட்டுக்கோட்டைப்பிரகடனத்த பசப்பு பிரகடனம் என்டு சொல்லுறீங்கள். ...

வாசிப்பு பழக்கமும் அதை கிரகிக்கும் அறிவும் இல்லாததுகளுக்கு சொல்லி புரிய வைப்பது கடினம்.

ஆனாலும் உமக்காக இல்லை எண்டாலும் மற்றவர்களுக்காக சொன்னதை இன்னும் விளக்கமா சொல்லுறன்.

வட்டுகோட்டை பிரகடனம் பிழையானது எண்று நான் எங்கையாவது குறிப்பிட்டு இருக்கிறனா.? தேடிப்பாத்தன் எனக்கு கிடைக்க வில்லை ஆனால் அதை கண்டு கொண்ட உமது அறிவு பார்வை வியக்க வைக்குது.

வட்டுகோட்டை தீர்மானத்தை தமிழர் விடுதலை கூட்டணியின் தந்தை செல்வா தலைமையில் 1976ல் தமிழ் காங்கிரசும் சேர்ந்தே வட்டுகோட்டை தீர்மானத்தை கொண்டு வந்தது.

தந்தை செல்வா 1977 சித்திரை 26ல் சாவடைந்த போது கூட்டணிக்கு புதிய தலைமை பொறுப்பெடுத்தது. அந்த தலைமை யார் எண்டதும் தமிழகளுக்கு தெரியும். தந்தை செல்வாவின் உன்னதை இலச்சியத்தை அமிர்தலிங்கம் கூட்டணி தங்களின் நலன்களுக்கு பாவித்து.

இதன் மூலம் சொன்னது தங்களுக்கு புரிய வளி இல்லை. ஆனாலும் சுருக்க மாக சொன்னால் பிரகடனம் பிழை இல்லை. ஆனால் அதை கையில் வைத்து இருந்த அமிர்தலிங்கம் பிழையானவர்.

அறிவு கழஞ்சியம் ஒண்டை கண்டு மகிழ்ந்தேன். :wub:

Edited by பொய்கை

துவிச்சக்கரவண்டி எண்டு சொல்லி இருக்கலாமே. தமிழுக்கும் பற்றாக்குறையோ. அங்கை இருக்கிற ஆக்களுக்கு துவிச்சக்கரவண்டி என்றால் என்ன எண்டு விளங்கும்தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்....நானும் ஓரு வளி இல்லாத கழஞ்சியத்தை கண்டேன். :wub:

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்கள் அந்த கூட்டணி கொண்டுவந்த வட்டுக்கோட்டைப்பிரகடனத்த பசப்பு பிரகடனம் என்டு சொல்லுறீங்கள். ...

இப்ப இருக்கிற கூட்டமைப்பு அதை விட்டிட்டு நோர்வே பிரகடனத்த எடுத்திருக்கு அது உங்களுக்கு பிடிக்கேல்ல....

கூட்டமைப்பு பசப்பு கூட்டணி கொண்டுவந்த வந்த வட்டுக்கோட்டய.......இல்ல நோர்வே பிரகடனத்த... சா.... இன்றைய வட்டுக்கோட்ட பிரகடனத்த.....

கொன்பீசா இருக்கண்ண...... :wub::wub:

Smiley+Questions.jpgSmiley+Questions.jpg

அது தான் அண்ணை சொல்கிறம் அறளைபெயர்ந்தவர்களுக்கு எல்லாம் கொன்வீசாய் தான் இருக்கும்.

மற்றது உங்களை போல் பிரயோசானம் இல்லாத ஆட்களுக்கு என்ன விளக்கம் சொல்ல வேண்டும்.? போய் சாப்பிட்டு விட்டு படுமைய்யா? வந்திட்டார் கொன்பீசாம். :wub::wub:

சில காவாலிகள் பெயரிலேயும் நியத்திலேயும் காவாலிகள் தான் நிர்வாகத்திற்கு இது காவலித்தனமாகப் படவில்லையா ?

கனடிய தமிழ் வானொலியில் கயேந்திரன் ஒலிவடிவம்

http://www.ctr24.com/newctr/player/player.htm?plaurl=../Archivesongs/370.mp3

ததேமு வெல்ல வைக்கும் பிரச்சாரத்திலும் பதிவிலும் ஈடு படுங்கள்

பொய்கை க்கு எனது நன்றிகள்

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒரு சல்லியும் கொடுக்காத சம்பந்தர்கள் இப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு பெருமளவு நிதியை பயன்படுத்துகின்றார்களாம் ???? எங்கிருந்து ??

நன்றி

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புசப்பு வார்த்தை கூட்டணி 1977 ல செய்த வட்டுக்கோட்டை பிரகடனத்தால உசுப்பேத்திவிடப்பட்ட இளைஞர்கள் ஆயுதத்த தூக்கினதால பட்ட அவஸ்தைகள கண்டபிறகும் எங்களுக்கு அறிவு வரேல்லயே! அட கடவுளே எங்களுக்கு நீ அறிவ தரமாட்டாயோ? சிந்திக்கிற தன்மைய தரமாட்டாயோ? ஏனிந்த ஓரவஞ்சனை? :rolleyes:

புசப்பு வார்த்தை கூட்டணி 1977 ல செய்த வட்டுக்கோட்டை பிரகடனத்தால உசுப்பேத்திவிடப்பட்ட இளைஞர்கள் ஆயுதத்த தூக்கினதால பட்ட அவஸ்தைகள கண்டபிறகும் எங்களுக்கு அறிவு வரேல்லயே! அட கடவுளே எங்களுக்கு நீ அறிவ தரமாட்டாயோ? சிந்திக்கிற தன்மைய தரமாட்டாயோ? ஏனிந்த ஓரவஞ்சனை? :)

அப்ப ஒத்து கொள்ளுறீயள் உங்களுக்கு ஒரு கோதாரியும் விளங்குவதில்லை எண்டு... :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.