Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சி.பி.ஐ.யின் தேடப்படுவோர் பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கம்

Featured Replies

சென்னை,​​ மார்ச் 24: மத்திய புலனாய்வுப் பிரிவின் ​(சி.பி.ஐ.)​ இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மானின் பெயர் மட்டும் இணையதளத்தில் நீக்கப்படாமல் உள்ளது.

பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை இலங்கை அரசு இந்திய அரசிடம் அண்மையில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ராணுவத்துக்கும்,​​ விடுதலைப் புலிகளுக்கும் கடந்த 25 ஆண்டுகளாக நீடித்து வந்த கடும் சண்டை கடந்த 2009 மே மாதத்துடன் முடிவுக்கு வந்தது.​ 2009 மே 18}ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன்,​​ இலங்கையிலுள்ள நந்திக்கடல் பகுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.

இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த பிரபாகரனின் முன்னாள் மெய்க்காப்பாளர் தயா மாஸ்டர்,​​ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா ஆகியோர் பிரபாகரன் உடலை அடையாளம் காட்டினர்.

ஆனால்,​​ பிரபாகரன் இறந்தது தொடர்பாக தொடர்ந்து மர்மம் நீடித்து வந்தது.​ அதேநேரத்தில்,​​ பொட்டு அம்மான் இறப்பிலும் சந்தேகம் நீடித்து வருகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய எதிரியாகக் கருதப்பட்ட பிரபாகரன் மீது இந்தியாவில் வழக்கு உள்ளது.​ இந்த வழக்கு சென்னையிலுள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில்,​​ பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை பெறுவதற்கு இந்திய அதிகாரிகள்,​​ இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு வந்தனர்.

கடந்த பிப்ரவரி 1}ம் தேதி பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை,​​ இலங்கை அரசிடமிருந்து சி.பி.ஐ.​ பெற்றுக் கொண்டதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.​ அதைத் தொடர்ந்து,​​ தற்போது சிபிஐ}யின் இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இடம்பெற்றிருந்த பிரபாகரனின் பெயர் மற்றும் படம் ஆகியவை நீக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை:​​ சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில்,​​ கடந்த 1991 மே 21}ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி,​​ மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.​ இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புப் பிரிவு விசாரித்து வந்தது.

வழக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்,​​ உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் முக்கிய எதிரிகளாகச் சேர்க்கப்பட்டனர்.​ இந்த வழக்கில் பிரபாகரன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து சிபிஐ}யின் இணையதளத்தில் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

Dinamanai.

  • Replies 53
  • Views 3.6k
  • Created
  • Last Reply

பிரபாகரன் இன்றைக்கு இல்லையெண்டு நினைனைச்சதால பெயரை எடுத்திட்டாங்கள்

திரும்ப வந்தால் திரும்ப போடுவாங்களா போடமாட்டாங்களா?

இந்த நாடகத்தில் என்றாலாவது றோவின் கைவரிசை வெல்லுமோ! !...

பார்க்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

வெத்து பயலுக, இதையும் செய்வாங்க இதுக்கு மேலையும் செய்வாங்க. இது கால் தூசு.

பிரபாகரன் இன்றைக்கு இல்லையெண்டு நினைனைச்சதால பெயரை எடுத்திட்டாங்கள்

திரும்ப வந்தால் திரும்ப போடுவாங்களா போடமாட்டாங்களா?

சர்வதேச சட்டவிதிமுறைக்கு அமைவாக இணைக்கமுடியாது என நினைக்கிறேன்.

சர்வதேச சட்டவிதிமுறைக்கு அமைவாக இணைக்கமுடியாது என நினைக்கிறேன்.

நன்றிகள்

தங்கா, இதனை இணைத்தன் மூலம் என்ன சொல்ல வாரீர்கள்?, தலைவர் இருக்காரா? இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

தங்கா, இதனை இணைத்தன் மூலம் என்ன சொல்ல வாரீர்கள்?, தலைவர் இருக்காரா? இல்லையா?

கடவுள் இருக்காரா? இல்லையா?

எது எப்படியோ

விந்துக்களில் பலமில்லாதபடியா ஈழம், அரைகுறையில் கருச்சிதையுண்டுபோனது..

இனி பிறக்க முடியாது.. சான்ஸே இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ

விந்துக்களில் பலமில்லாதபடியா ஈழம், அரைகுறையில் கருச்சிதையுண்டுபோனது..

இனி பிறக்க முடியாது.. சான்ஸே இல்லை..

ஆம். எப்போது ஈழம் காண்பது பிரபாகரனின் கடமை என்று உங்கள் பலவீனங்களை எல்லாம் அவர் தலையில் மூட்டை கட்டிவிட்டு ஊரைவிட்டு எதிரியை நாடி வசதி வாய்ப்பான வாழ்க்கையை போரின் நிலையைக் காட்டி தேடி ஓடினீர்களோ அப்போதே ஈழம் தகர்ந்துவிட்டது.

முள்ளிவாய்க்கால் வரை 2009 வரை அதைக் காத்து நின்றது பிரபாகரனும் அவரை நம்பிய மக்களுமே அன்றி வேறு எவரும் அல்ல. அவர்கள் தங்கள் இயலுமை வரை பெரும் தியாயகங்கள் செய்து தங்கள் கடமைக்காக உயிர் வரை தந்து போயிருக்கின்றனர். அந்த ஈழத்தை மீட்க நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்கள் மனச்சாட்சியை முன்னிறுத்தி நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளுங்கள். தாயகத்தை காக்க திராணியற்ற மலடுகள் யார் என்பது தெரிய வரும்..! அதில் நீங்களும் அடங்கி இருக்கலாம். இதை அறியாமல் பிறரை நோக்கி மலடு என்று திட்டும் தமிழர் சமூகத்தை நீங்கள் பிரதிநிதித்துவம் செய்வது கூட தெரியாமல் வாழ்வது வெட்கக் கேடு. :lol:

Edited by nedukkalapoovan

தனிப்பட்டமுறையில்..

மிக மிக ஊறிப்போயிரிந்தேன்.. வியர்வை சிந்தி உளைத்த பல ஆயிரம் பவுன்ஸ்களை ஈழவிடுதலைக்காக கொடுத்தேன்... 2002 பெருமிதத்துடன் ஊருக்கு போனபோது, நாய் மாதிரி நடத்தப்படேன்.. பயந்தோடின நாய்களதானே எண்டு முகத்திற்க்கு முண்ணே சொன்னார்கள்.. என் வியர்வையில் முளைத்த மரம் எனக்கு நிழல் தர மறுத்தது..

திரும்பி வந்ததும் ஈழம் வேணும் தமிழர் வேண்டம் எண்ட முறையில் செயற்பட அரம்பித்தேன். பல பல பல இன ஆர்வம் உள்ளதமிழர்கள்ளுக்கும் இதுதான் நடந்தது எண்டு அறிந்தேன்..

பல முக்கிய புலி உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு தமிழர்கள் வேண்டாம் ஆணல் அவயிண்ட காசு பொருள் வேணும்...

மிக முக்கியமான இப்பிரச்சினையை தலைவர் கவனிக்காமல் விட்டது பெரும்பிழை

மில்லியன் பவுண்களை கொடுத்திருந்தால் கூட அதனை மீள உழைத்துப் பெற்றிடலாம். ஆனால் தாயகத்தை போர் செய்து காப்பதென்பது பவுண்களால் மட்டும் செய்யப்பட முடியாதது. மீள முடியாத விலை மதிப்பற்ற மனித உயிர்களை அங்கு விலையாகச் செலுத்த வேண்டும்.

நாளுக்கு 20 போராளிகளை களத்தில் இழக்கும் நிலை வன்னிப் போரின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதை நடேசன் அண்ணா சொன்ன போது எவர் அதன் தாக்கத்தை உணர்ந்தீர்கள். முள்ளிவாய்க்காலுக்குள் முடங்கும் வரை புகலிடத்தில் இருந்தோர் மெளனமாகத்தானே இருந்தீர்கள். முள்ளிவாய்க்காலுக்குள் இழப்புகள் வந்து போதுதான் வீதிக்கு இறங்கினீர்கள். அப்படி இருக்குது புலம்பெயர்ந்தவர்களின் தாயகப் பற்று.

இப்போ அவர்களே ஆமிக்காரன் நல்ல பிரன்சிப்பா இருக்கிறான்... என்று சொல்லிக் கொண்டு சிறீலங்கன் எயார் லைன்ஸில் ரிக்கட் புக் பண்ணி இருக்கிறார்கள். இது ஒரு போராளியின் உயிர் தியாகத்திற்கு ஈடாகுமா..???! அந்த உயிர்களை மீளத்தான் பெற முடியுமா..??! அதன் முன் உங்களின் பவுண்கள் தூசிற்குச் சமன்..! :blink::lol:

மிக முக்கியமான இப்பிரச்சினையை தலைவர் கவனிக்காமல் விட்டது பெரும்பிழை

நீங்கள் பிரபாகரனை உங்கள் தலைவராக ஏற்றுக்கொள்கிறீர்களா?

நெடுக்ஸ்.. என்ன சொல்லுறீங்கள்... கத்தி பொல்லு செய்யக்கூட காசு வேணும்.

எமக்குத்தெரிந்த பிரபாகரனே தமிழரின் ஒரே தலைவன். அன்றும் இன்ரும் எண்ரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் வருவார் ஆனா வரமாட்டார் எண்டு சொல்லி எவளவு காலம் ஓட்டுறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிப்பட்டமுறையில்..

மிக மிக ஊறிப்போயிரிந்தேன்.. வியர்வை சிந்தி உளைத்த பல ஆயிரம் பவுன்ஸ்களை ஈழவிடுதலைக்காக கொடுத்தேன்... 2002 பெருமிதத்துடன் ஊருக்கு போனபோது, நாய் மாதிரி நடத்தப்படேன்.. பயந்தோடின நாய்களதானே எண்டு முகத்திற்க்கு முண்ணே சொன்னார்கள்.. என் வியர்வையில் முளைத்த மரம் எனக்கு நிழல் தர மறுத்தது..

திரும்பி வந்ததும் ஈழம் வேணும் தமிழர் வேண்டம் எண்ட முறையில் செயற்பட அரம்பித்தேன். பல பல பல இன ஆர்வம் உள்ளதமிழர்கள்ளுக்கும் இதுதான் நடந்தது எண்டு அறிந்தேன்..

பல முக்கிய புலி உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு தமிழர்கள் வேண்டாம் ஆணல் அவயிண்ட காசு பொருள் வேணும்...

மிக முக்கியமான இப்பிரச்சினையை தலைவர் கவனிக்காமல் விட்டது பெரும்பிழை

தம்பி பனங்காய்........... நீர் கிழக்குப்பக்கமோ? வரும் வார்த்தைகள் கருணாவுக்கு ஈடு இணையாக தோன்றுது.

இல்லையுங்கோ....

வடமராட்சி.. பிரம்படி.. இனத்துரோகம் எங்கட சமூகச்சொத்தாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம். எப்போது ஈழம் காண்பது பிரபாகரனின் கடமை என்று உங்கள் பலவீனங்களை எல்லாம் அவர் தலையில் மூட்டை கட்டிவிட்டு ஊரைவிட்டு எதிரியை நாடி வசதி வாய்ப்பான வாழ்க்கையை போரின் நிலையைக் காட்டி தேடி ஓடினீர்களோ அப்போதே ஈழம் தகர்ந்துவிட்டது.

முள்ளிவாய்க்கால் வரை 2009 வரை அதைக் காத்து நின்றது பிரபாகரனும் அவரை நம்பிய மக்களுமே அன்றி வேறு எவரும் அல்ல. அவர்கள் தங்கள் இயலுமை வரை பெரும் தியாயகங்கள் செய்து தங்கள் கடமைக்காக உயிர் வரை தந்து போயிருக்கின்றனர். அந்த ஈழத்தை மீட்க நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்கள் மனச்சாட்சியை முன்னிறுத்தி நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளுங்கள். தாயகத்தை காக்க திராணியற்ற மலடுகள் யார் என்பது தெரிய வரும்..! அதில் நீங்களும் அடங்கி இருக்கலாம். இதை அறியாமல் பிறரை நோக்கி மலடு என்று திட்டும் தமிழர் சமூகத்தை நீங்கள் பிரதிநிதித்துவம் செய்வது கூட தெரியாமல் வாழ்வது வெட்கக் கேடு. :)

இதை நான் 100 வீதம் ஏற்றுக்கொள்கின்றேன்

இதுதான் உண்மை

ஒவ்வொரு தமிழனும் நெஞ்சில் கை வைத்து பதில் சொல்லவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்டமுறையில்..

மிக மிக ஊறிப்போயிரிந்தேன்.. வியர்வை சிந்தி உளைத்த பல ஆயிரம் பவுன்ஸ்களை ஈழவிடுதலைக்காக கொடுத்தேன்... 2002 பெருமிதத்துடன் ஊருக்கு போனபோது, நாய் மாதிரி நடத்தப்படேன்.. பயந்தோடின நாய்களதானே எண்டு முகத்திற்க்கு முண்ணே சொன்னார்கள்.. என் வியர்வையில் முளைத்த மரம் எனக்கு நிழல் தர மறுத்தது..

திரும்பி வந்ததும் ஈழம் வேணும் தமிழர் வேண்டம் எண்ட முறையில் செயற்பட அரம்பித்தேன். பல பல பல இன ஆர்வம் உள்ளதமிழர்கள்ளுக்கும் இதுதான் நடந்தது எண்டு அறிந்தேன்..

பல முக்கிய புலி உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு தமிழர்கள் வேண்டாம் ஆணல் அவயிண்ட காசு பொருள் வேணும்...

மிக முக்கியமான இப்பிரச்சினையை தலைவர் கவனிக்காமல் விட்டது பெரும்பிழை

இதில் 50 வீதம் உண்மை

எல்லாத்தமிழரும் செய்யவில்லை என்ற உண்மையையும்

தலைவர் அறிந்திருந்தார் பலமுறை நன்றி சொன்னார் என்பதனையும் மறக்கக்கூடாது

அதேநேரம் நானும் 2003 இல் ஊர்போய்த்திரும்பி வரும்போது தலையைத்தொங்கப்போட்டபடிதான் வந்தேன்.

அதேநேரம் 2009 மாசியில் அவசரக்கூட்டம் கூட்டி காசு கேட்டபோது முதலாவதாக எழுந்து காசைக்கொடுத்தவன் என்ற ரீதியில் சிலர் கடைசிவரை செய்தோம் என்பனையும் மறுக்கமுடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை நான் 100 வீதம் ஏற்றுக்கொள்கின்றேன்

இதுதான் உண்மை

ஒவ்வொரு தமிழனும் நெஞ்சில் கை வைத்து பதில் சொல்லவேண்டும்

இல்லை அண்ணா இல்லை....மடுவிலிருந்து மக்களை கூட்டிச்செல்ல துடங்கியபோதே தங்களை பாதுகாக்கத்தான் கூட்டிச்செல்கிறார்கள் என்பது விளங்கிவிட்டது. எங்களது சூள்நிலை வாயைத்திறந்து கேட்கமுடியவில்லை சொல்லமுடியவில்லை. பணம்கேட்டு வாசலுக்கு வந்தவாகளுடன்கூட இதைப்பற்றி கதைப்பதுக்கு பயம். ஊரிலிருந்த பாராளுமன்றத்தவர்களே வாய்மூடி மௌனமாயிருக்கும்போது எங்கள் குரல் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்று எல்லோருமெ அடக்கித்தான் வாசித்தோம். மே 12 கூட தாங்கள் பலமாக இருப்பதாக நடேசண்ணை சொன்னபோது .... பாலிமன் சுகயாரில் அத்தனைபேரையும் காவுகுடுத்தாவது தமிழீழம் பெற்வேண்டுமென்றுதான் கதைத்துக்கொண்டார்கள். ஆதரவு குடுத்துவிட்டோம் எப்படியாவது அவர்களது உயிர்களை காப்பாற்றியாகவேண்டுமென்ற துடிப்பே அப்போது ஏற்பட்டது.

இப்போதய மனநிலை அப்போதயதோடு ஒப்பிடும்போது எவ்வளவோ ஆறுதலாயிருக்கிறது. எங்களுக்கு தமிழீழம் தேவை என்பதற்காக அங்குள்ள தமிழரை காவுகுடுப்பதில் உடன்பாடு இல்லை. வந்து துரோகிப்பட்டம் குடுப்பவர்கள் உங்கள் நெஞ்சை தொட்டுசொல்லுங்கள் , அங்குள்ளவர்களின் பிணத்தின்மீது உங்களுக்கு தமிழீழம் தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்

தங்களிடமிருந்து முதன்முதலாக ஒரு ஆக்கபூர்வமான

நாம் எல்லோரும் சேர்ந்து தீர்வுகாணவேண்டிய கேள்வி..?

இதற்குத்தான் நாம் ஒன்று படவேண்டும் முதலில்

நேரம் தற்போது இல்லை

தங்களது குற்றச்சாட்டுகளுக்கு ஆறுதலாக எழுதுகின்றேன்

ஆனால்

நாம் கனக்க கதைக்கவேண்டும்

விவாதிக்க வேண்டும

இதிலிருந்து விடுபட...

இப்போதய மனநிலை அப்போதயதோடு ஒப்பிடும்போது எவ்வளவோ ஆறுதலாயிருக்கிறது.

உண்மை.. எமக்குத்தேவை.. சாப்பாடு மட்டுமே.. கோவணம் கட்ட அனுமதிப்பதுகூட ஆபத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை.. எமக்குத்தேவை.. சாப்பாடு மட்டுமே.. கோவணம் கட்ட அனுமதிப்பதுகூட ஆபத்து.

ம்...பட்டினி பட்டாளத்துக்கு கோவணம் ஒரு கேடா எண்டு கேக்கிறியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. என்ன சொல்லுறீங்கள்... கத்தி பொல்லு செய்யக்கூட காசு வேணும்.

எமக்குத்தெரிந்த பிரபாகரனே தமிழரின் ஒரே தலைவன். அன்றும் இன்ரும் எண்ரும்.

தவறு. கத்தி பொல்லுக்கு அவசியம் இன்றிய காலம் ஒன்றிருந்தது.

போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் எதிரியை விட எமது போராளிகள் அதி நவீன ஆயுதங்கள் சகிதம் விளங்கினர். ஆட் பற்றாக்குறையே முதன்மையாக இருந்தது.

2000ம் ஆண்டில் கூட ஆட்பற்றாக்குறை காரணமாகத்தான் யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்தைக் கைவிட்டு கைப்பற்றிய பகுதிகளை தக்க வைக்க போராளிகளை நிலை நிறுத்திக் கொண்டார் தலைவர். ஆட்களை காசு கொடுத்து வாங்க முடியாது.

எமது போராட்டம் நீண்டு செல்லச் செல்ல எதிரியும் தன்னை பலப்படுத்திக் கொண்டே வந்தான். ஆயுத தொழில்நுட்ப வளத்தில் எம்மவர்கள் எமது தலைவரை எதிரிக்கு நிகராக வைக்கவில்லை. உதவிகள் போதுமானதாக இருக்கவில்லை. ஆனால் புலம்பெயர் தமிழர்களை அதிகம் தங்கி இராத போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் எமக்கிருந்த வெற்றி வாய்ப்புக்கள் பின்னர் அருக ஆரம்பித்தன. இதற்கு முதன்மைக் காரணம்.. சூழ்நிலையை பாவித்து தான் மட்டும் தப்பி சொகுசு வாழ்க்கை தேடும் எண்ணம் எம்மவர்கள் மத்தியில் வலுவாக விஸ்தாபித்ததுதான். நிறைய ஆட்பலம் அளிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் இவ்வளவு இழப்புக்கள் மத்தியிலும் தோல்வி ஏற்பட்டிருக்காது. குறிப்பிடத்தக்க இழப்புக்களோடு வெற்றி கிடைத்திருக்கும்.

எமது சுயநலமும்.. தான் வாழ்ந்தால் சரி என்ற எண்ணமும்.. நான் பாதுகாப்பாக இருந்து கொண்டு மற்றவன் மூலம்.. ஏதாவது செய்ய ஏதாவது கொடுப்பம் என்ற எண்ணமுமே எமது தோல்விக்கு முக்கிய காரணம். புலம்பெயர் தமிழர்களின் ஆதரவை தலைவர் ஆதரித்திருந்தாலும்.. அது முழுமையானதாக இருந்ததை அவர் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. இன்னும் இன்னும் உதவுகள் என்றே சொல்லி இருந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும். :)

Edited by nedukkalapoovan

நிறைய ஆட்பலம் அளிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் இவ்வளவு இழப்புக்கள் மத்தியிலும் தோல்வி ஏற்பட்டிருக்காது. குறிப்பிடத்தக்க இழப்புக்களோடு வெற்றி கிடைத்திருக்கும்.

தவறு என்பது இதுதான்..

சிங்களவனுடய படையைவிட, பத்துமடங்கு அதிகமாக, மூண்டு லச்சம் தமிழ் இளைஞர்களுடன் சிங்களவனுடன் போருக்கு போயிருந்தால்... என்ன நடந்திருக்கும்?

இந்தியா வன்னியில் அணுகுண்டு போட்டிருக்கும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.