Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் கண்ணிவெடிகளை அகற்ற தமிழ்ப் பெண்கள் பாவிக்கப்படுகின்றனர்

Featured Replies

வன்னியில் கண்ணிவெடிகளை அகற்ற தமிழ்ப் பெண்கள் பாவிக்கப்படுகின்றனர் , ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரிகள் மேற்பார்வை! அபாயகரமான பணியில் தமிழ்ப் பெண்கள். நோர்வேயின் மக்கள் உதவிக்குழு கவலை. .

தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் அபாயகரமான பணிகளில் அப்பாவித் தமிழ்ப் பெண்களை இலங்கை இராணுவம் ஈடுபடுத்தியுள்ளது. அவர்களுக்கு உதவியாக ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஈழத்தில் போர் முடிவுக்கு வந்ந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றி வருவதாக கூறிக் கொண்டிருக்கிறது இலங்கை இராணுவம். போர் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்கி விட்ட நிலையில் இன்னும் இந்தப் பணிகளை முடிக்கவில்லை.

இதைக் காரணம் காட்டியே அங்கிருந்து இடம் பெயர்ந்து வந்த அப்பாவித் தமிழர்களை இன்னும் மீள் குடியேற்றம் செய்யாமல் இலங்கை அரசு இழுத்தடித்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அப்பாவித் தமிழ்ப் பெண்களை இலங்கை இராணுவம் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரிகளும் உதவியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இலங்கையின் வட பகுதியில் உள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்தப்பணி அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சசிகாந்த் பித்ரே தலைமையில் பெண்கள் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

ஆனால் இது மிகவும் அபாயகரமானது. இதுபோன்ற ஆபத்தான பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவது எங்கும் கிடையாது. கண்ணிவெடி விதைக்கப்பட்டள்ள பகுதிகளில் அவர்கள் நடமாடுவது ஆபத்தானது என்று நோர்வேயின் மக்கள் உதவிக்குழு கவலை தெரிவித்துள்ளது.

http://seithy.com/

  • தொடங்கியவர்

srilanka20use20womens20.jpg

srilankausewomensclearm.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் கண்ணிவெடிகளை அகற்ற தமிழ்ப் பெண்கள் பாவிக்கப்படுகின்றனர் , ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரிகள் மேற்பார்வை! அபாயகரமான பணியில் தமிழ்ப் பெண்கள். நோர்வேயின் மக்கள் உதவிக்குழு கவலை. .

http://seithy.com/

இது கன்னி வெடியை விட ஆபத்து :wub:

எம் கையே எமக்கு உதவி

சீக்... வெட்கம் கெட்ட எழுத்து! பிழைகளை பிழை என்று கூட சொல்லத்தெரியாத கேடுகெட்ட மனிதர்கள்! ... உங்களைப் போன்று நாலு விடிவெள்ளிகள் எம்மினத்துக்கு போதும்! :wub:

எம் கையே எமக்கு உதவி

அதுதானே எதுக்கு சிங்களவனை நம்பி வாழ வேணும்...??? நாங்கள் தனியா போகலாம்...

சிங்கள அரசாங்கத்துக்கு சும்மா வரி எல்லாம் செலுத்தி கொண்டு எங்கட கையே எதுக்கு எங்களுக்கு....??

  • கருத்துக்கள உறவுகள்

சீக்... வெட்கம் கெட்ட எழுத்து! பிழைகளை பிழை என்று கூட சொல்லத்தெரியாத கேடுகெட்ட மனிதர்கள்! ... உங்களைப் போன்று நாலு விடிவெள்ளிகள் எம்மினத்துக்கு போதும்! :wub:

நன்றி ஐயா

முதலில் தமிழனுக்கு இவற்றைக்கண்டால் கோபம் வரணும்

காறித்துப்பணும்

எமக்குள் இருக்கும் சிக்கலைத்தீர்க்கணுமே தவிர...

ஓணாணைப்பிடித்து அதுக்குள்ள விடக்கூடாது

வேலை ஒன்றும் இல்லை எண்டால்.. சாப்பிடுறதுக்கு பிழைக்கிறதுக்கு வழி இல்லையெண்டால் சீவியத்தை கொண்டு செல்லுறதுக்கு இப்படியான ஆபத்தான வேலையில சேருவதற்கு தமிழ்ப்பெண்களே முன்வரத்தான் செய்வார்கள். சரி, தமிழ்ப்பெண்கள் பற்றி கண்ணீர் விடுறனீங்கள் அவர்கள் வாழ்க்கையை செழுமைப்படுத்த ஏதாச்சும் செய்யலாமே..? எல்லாரும் நீண்ட கால நோக்கிலை சிந்திக்கிறீங்களோ.. அதாவது தமிழீழம் கிடைக்கும்.. அதுக்கு பிறகு நாளாந்த பொருளாதார தேவையை நிறைவேற்றலாம் எண்டு..

கண்ணிவெடிகளை புலிகளும் விதைச்சார்கள், சிறீ லங்கா படைகளும் விதைச்சிது, இந்திய ராணுவமும் விதைச்சிது. கண்ணிவெடிகளை விதைப்பதற்கும், செயல் இழக்க வைப்பதற்கும் விடுதலைப்புலிகள் தாராளமாக பெண்களை பயன்படுத்தினார்கள். யாரையாவது குறை சொல்லிறது நோக்கம் இல்லை. ஆனால்.. கருத்து எழுதுபவர்கள் ஒரு லொஜிக் இல்லாமல்.. நாய் பூனை பண்டி எண்டு கருத்து எழுதுறது கேவலமாய் இருக்கிது.

கருத்துக்களம் ஒண்டில உங்கட கருத்துக்களால மற்ற ஆக்களிண்ட கருத்துக்களை வெல்லப்பாருங்கோ. அதைவிட்டுப்போட்டு.. சீ சூ சா எண்டு கொண்டு இருந்தால்.. கருத்துக்களம் மூலம் சிந்தனைகளை பகிர்ந்து கூர்மைப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக எங்கட மன வக்கிரங்களை வளர்த்துக் கொள்வதற்கு மட்டுமே உதவும்.

கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டியது காலத்தின் தேவை. இல்லாவிட்டால் நம்மவர்கள் கால்கள்தான் பதம் பார்க்கப்படும். சரி.. உதை யார் அகற்ற வேண்டும் எண்டு நீங்கள் நினைக்கிறீங்கள்..? புலிகள் வந்து அகற்றுவீனமோ? இது சிறீ லங்கா அரசாங்கத்தின் பணியோ? சிங்கள இளைஞர்கள் மட்டுமே இந்தப்பணியில ஈடுபடுத்தப்படவேண்டுமோ? இல்லாட்டிக்கு அமெரிக்க மரீன் அழைக்கப்படவேணுமோ..?

நோர்வே மக்கள் குழு கண்ணிவெடிகளை அகற்ற யாரை பயன்படுத்துவது நல்லது எண்டு நினைக்கிதாம்..? இந்த உலகில இப்போது ஆண், பெண் எண்டு வேறுபாடு இல்லை. ஆண்கள் செய்கின்ற எல்லா வேலைகளையும் பெண்களும் செய்கிறீனம். பெண்களுக்கு ஆபத்து இல்லையெண்டால்.. ஆண்களுக்கு மட்டும் பாதுகாப்பானதா? ஆண்களிண்ட கால் கண்ணிவெடியால பதம் பார்க்கப்பட்டால் பரவாயில்லையா..? தமிழ் ஆண்கள் இந்த பணியில ஈடுபடுத்தப்பட்டால் நோர்வே குழு திருப்தி அடையுமா?

ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் கண்ணிவெடி அகற்றுகிற பணி மிகவும் ஆபத்தானது. மிகுந்த பயிற்சியும், நல்ல உபகரணங்களும் தேவை.

கண்ணிவெடி அகற்றலில், இப்போ அல்ல 2000 ஆண்டின் இன் ஆரம்ப காலங்களின், கலோ ரஸ்ட், இன்னும் பல நிறுவனக்கள், உள்ளூர் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களே மிதி வெடி அகற்றலில் ஈடுபட்டார்கள். உண்மையில் மச்சான் நீங்கள் சொல்லுற மாதிரி புதைச்ச மிதி வெடியை ஆர் வந்து அகற்றுற, அதுக்கும் ஆக்களை வெளி நாட்டிலை இருந்து இறக்குமதி செய்யிறதோ? அதுக்கு யார் காசு குடுக்கிற?

சரி சண்டைக்கு பிறகு தொழில் இழந்து வீடு இழந்து பொருளாதார வலு இழந்து இருக்கும் மக்கள், அவர்களின் நிலங்களில் மிதி வெடி இருக்கும் போது எங்கு போய் இருப்பது, பயிர் செய்வது. இருக்கும், படிப்பை பாதியில் கைவிட்டு தொடரமுடியாமல் பண நெருக்கடியில் இருப்பவர்கள் என்ன செய்வது.

உரிய பயிற்சி கொடுத்து, உபகரணங்களும் கொடுக்கப்பட்டால், அது ஆணோ பெண்ணோ மிதி வெடி அகற்றியவது அவர்கள் வாழ்கையை கொண்டு நடத்த முயற்சி செய்வர்.

இஞ்சை இருந்து சப்பிட்டிடு புளிச்சல் ஏவறையில் உப்பிடி செய்தி எழுதி உங்களையும், புலம் பெயர் மக்களையும் பப்பாவிலை ஏத்தி விட்டு கொன்டு இருங்கோ.

கண்ணிவெடியை கையிலை வைத்து விழையாடியவர்கள் எங்கள் பெண்கள்

post-1459-12700565004413_thumb.jpg

post-1459-12700565109835_thumb.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவங்கள் ஏன் கண்ணிவெடிய அகற்றவேணும்? :lol:

மச்சான் மிக காட்டமாக உண்மையை எழுதியிருக்கின்றீகள்.நன்றி.இதே கருத்தை மச்சானுக்கு பதிலாக அர்ஜுன் எழுதியிருந்தால் 5 பச்சைக்கு பதில் 5 சிவப்பு.

கண்ணிவெடி அகற்றலில், இப்போ அல்ல 2000 ஆண்டின் இன் ஆரம்ப காலங்களின், கலோ ரஸ்ட், இன்னும் பல நிறுவனக்கள், உள்ளூர் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களே மிதி வெடி அகற்றலில் ஈடுபட்டார்கள். உண்மையில் மச்சான் நீங்கள் சொல்லுற மாதிரி புதைச்ச மிதி வெடியை ஆர் வந்து அகற்றுற, அதுக்கும் ஆக்களை வெளி நாட்டிலை இருந்து இறக்குமதி செய்யிறதோ? அதுக்கு யார் காசு குடுக்கிற?

சரி சண்டைக்கு பிறகு தொழில் இழந்து வீடு இழந்து பொருளாதார வலு இழந்து இருக்கும் மக்கள், அவர்களின் நிலங்களில் மிதி வெடி இருக்கும் போது எங்கு போய் இருப்பது, பயிர் செய்வது. இருக்கும், படிப்பை பாதியில் கைவிட்டு தொடரமுடியாமல் பண நெருக்கடியில் இருப்பவர்கள் என்ன செய்வது.

உரிய பயிற்சி கொடுத்து, உபகரணங்களும் கொடுக்கப்பட்டால், அது ஆணோ பெண்ணோ மிதி வெடி அகற்றியவது அவர்கள் வாழ்கையை கொண்டு நடத்த முயற்சி செய்வர்.

இஞ்சை இருந்து சப்பிட்டிடு புளிச்சல் ஏவறையில் உப்பிடி செய்தி எழுதி உங்களையும், புலம் பெயர் மக்களையும் பப்பாவிலை ஏத்தி விட்டு கொன்டு இருங்கோ.

உள்ளதை உள்ள படி எழுதியிருகின்றீர்கள் குளக்காட்டான். இங்கு சும்மா புலம்புவதே இவர்களின் தொழிலாய் போச்சு

Landmine ladies - clearing Sri Lanka's deadly harvest

Making land safe after years of conflict

The work is hard, but I don’t mind as I’m helping my family. I don’t get scared. I just want my children to be able to go to school and live in peace

http://www.dfid.gov.uk/Media-Room/Case-Studies/2010/Landmine-ladies/

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதை உள்ள படி எழுதியிருகின்றீர்கள் குளக்காட்டான். இங்கு சும்மா புலம்புவதே இவர்களின் தொழிலாய் போச்சு

ஆனால் நீங்கள் அவ்வப்போது வந்து எழுதிவைக்கும் தத்துவங்களை வித்துதானே யாழ்களமே இயங்குகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.