Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Featured Replies

டென்மார்கில குமாரதுரையரின்ர பெடியளோட திரிச்சதெல்லாம் தமிழ்வொயிஸ்... காலம் கெட்டுப்போய் கிடக்கு......

  • Replies 55
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்து, இந்தியா மூலம் மேற்குலகிற்கு 'செக்' வைப்பதே கோத்தபாயவின் திட்டம்!

விடுதலைப் புலிகளால் தமிழ்த் தேசியத்திற்கான அரசியல் களமாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயணிக்க முயற்சிக்கும் பாதை குறித்த சந்தேகம் தமிழ் மக்களிடம் அதிகரித்தே வருகின்றது. இந்திய நிகழ்ச்சி நிரலுடன் களம் இறங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படியாவது இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முன்னுக்குப் பின் முரணாக எத்தனையோ கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், இன்றுவரை இந்தியா குறித்த தமது கருத்துக்களை மாற்ற முடியாதவர்களாகவே உள்ளனர்.

«தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணயம் பற்றி குறிப்பிட்டதை இந்தியா விரும்பாது. இந்தியாவை நிராகரித்து அரசியல் தீர்வை சிந்திப்பது ஆரோக்கியமானதாக இருக்காது» என்ற கருத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் செயலாருமான மாவை சேனதிராஜா தற்போது தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களது சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கும் இந்தியாவின் விருப்பங்களை ஏற்றுக்கொண்டு, ஈழத் தமிழர்களுக்கான எந்த அரசியல் தீர்வைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொடுக்கப் போகின்றது? எதை நோக்கி, யார் கரம் பற்றிப் பயணிக்கப் போகின்றது? என்பது இன்றுவரை அவர்களால் வெளிப்படுத்தப்டவே இல்லை.

«தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்தால் தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் உள்ள தமிழ் மக்களை ஒன்றிணைத்து அதற்க்கு எதிராக ஜனநாயக ரீதியான போரட்டங்கள் நடாத்தபடும்» என்ற இன்னொரு கருத்தையும் மாவை சேனாதிராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட போது அவர்கள் அவர்கள் இவ்வாறு தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் உள்ள தமிழ் மக்களை ஒன்றிணைத்து அதற்க்கு எதிராக ஜனநாயக ரீதியான போரட்டங்கள் நடாத்த முன்வரவில்லை. முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய மூன்று இலட்சம் தமிழர்கள் முள்வேலி முகாமுக்குள் முடக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளானபோது, கடத்திப் படுகொலைகள் புரியப்பட்டபோது, பாலியல் கொடுமைகள் புரிந்தபோது, அடிமைகளாக்கி அவமானப்படுத்தப்பட்டு, பெற்ற குழந்தைக்குப் பால் வாங்க முடியாத நிலையில், மானத்தைப் பலிகொடுத்து சிங்களக் காமுகர்களுக்கு விருந்தாக நிர்ப்பந்திக்கப்பட்ட போது இவர்களுக்குத் தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் உள்ள தமிழ் மக்களை ஒன்றிணைத்து அதற்க்கு எதிராக ஜனநாயக ரீதியான போரட்டங்கள் நடாத்த வேண்டும் என்று தோன்றவில்லை. தற்போது, தமது அமைப்பைத் தடை செய்தால் இப்படியெல்லாம் போராடப் போவதாக வெட்கம் கெட்டுப் பிதற்றுகிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாத்தும் நாடகத்தின் ஒரு அங்கம்தான், «பயங்கரவாத, பிரிவினைவாதத்தை மீண்டும் தோற்றுவிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யவேண்டும்» என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் தமிழ் மக்களை உசுப்பேற்றும் பேச்சு என்பது ஈழத் தமிழர்களுக்கு நன்றாகவே புரிந்துள்ளது. மகிந்த ராஜபக்ஷ சிங்கள அதிபர்த் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற இந்திய விருப்பத்தை நிறைவேற்ற, சிங்களவர்களை உசுப்பேற்றுவதற்காக சம்பந்தர் கையாண்ட அதே முறையைத்தான் நன்றிக்கடன் செலுத்த விரும்பிய கோத்தபாய பின்பற்றியுள்ளார். சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியதன் மூலம், சிங்கள இனவாதத்தை உசுப்பேற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த வாக்குக்களை மகிந்தவுக்கு ஆதரவாகத் திருப்பியது. கோத்தபாய அதே உசுப்பேற்றலைத்தான் தற்போது தமிழ் மக்களிடம் உருவாக்கி, அவர்களது வாக்குக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சாதகமாகத் திருப்ப முனைகிறார்.

கோதபாய தமிழத் தேசியக் கூட்டமைப்பு வெல்வதற்கு எதற்காக உதவ வேண்டும் என்ற கேள்வி எழுகின்றதல்லவா? அது ஒரு சாதாரண கணக்குத்தான். வடக்கே ஈழத் தமிழர்களது வாக்குக்கள் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு விழப் போவதில்லை என்பது மகிந்த சகோதரர்களுக்கு நன்றாகவே தெரியும். வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மைக் கட்சிகள் போட்டியிடுவதன் மூலம் சிங்கள மேலாதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்தாலும், தமிழ் வாக்குக்களை இப்போதைக்கு தமக்குச் சாதகமாகத் திரட்ட முடியாது என்பது சிங்கடக் கட்சிகள் அனைத்தும் புரிந்து கொண்டே போட்டியிடுகின்றன. யாழ். குடாநாட்டில் டக்ளசை வெற்றிலைச் சின்னத்தில் நிறுத்தி, அவருக்குக் கிடைக்கக் கூடிய வாக்குக்களின் மூலம் ஆகக் கூடியது ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை மட்டுமே பெற முடியும் என்பது மகிந்த சகோதரர்களுக்கு நன்றாகவே புரியும்.

தேர்தலின் பின்னரும் ஈழத் தமிழர்களுக்கான ஒரு அரசியல்த் தீர்வை சிங்கள அரசு முன்வைக்காமல் அடுத்த நகர்வை மேற்கொள்ள முடியாத அளவிற்கு மேற்குலகி;ன் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு நீண்ட கால அவகாசத்தை வழங்கும் நிலையும் தற்போது அருகி வருகின்றது. இந்த நிலையில், தம்முடன் பேசக் கூடிய தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம் பெறுவதே தமக்குச் சாதகமானதாக இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் கைகளுக்குள் இருப்பதால், தம்மால் வழங்கக் கூடிய பிரிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பொலிஸ், காணி அதிகாரங்களற்ற மாவட்ட அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கும். இந்தியா அதனை ஏற்க வைக்கும் என்பதே சிங்கள அரசியல் கணக்கு. அதனையே, தற்போது இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தியாவின் வளர்ப்புப் பிராணியான வரதராஜப் பெருமாளும் தெரிவித்துள்ளார். '13 வது அரசியல் திருத்தம் தற்போது சாத்தியப்படாது' என்ற அவரது இந்திய வார்த்தை வடக்கு, கிழக்கு என்ற தனித் தனி மாகாண அதிகாரங்களையே குறிக்கின்றது. அந்தக் கணக்கின் பிரகாரமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சாதகமாக சிங்கள அரசு தேர்தலுக்கு முன்னதாக இத்தகைய அவசர அச்சுறுத்தல்களை வெளிப்படுத்தி வருகின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லோருமே புரிந்து கொள்ளக் கூடிய கணக்காக இருப்பதுதான் இதன் பலவீனம்.

சிங்கள தேசத்திற்கு மிக அச்சுறுத்தலாக விழங்கும் புலம்பெயர் தமிழர்களது ஆதரவுடன் களம் இறங்கியுள்ள தமிழத் தேசியத்திற்கான அரசியல் முன்னணி வெற்றி பெறுவதை மகிந்த அரசோ, இந்திய அரசோ விரும்பப் போவதில்லை. அந்த முன்னணி வெற்றி பெற்றுப் பலமான சக்தியாக உருவானால், புலம்பெயர் தமிழர்களின் உதவியோடு மேற்குலகின் தலையீட்டை உருவாக்கி விடுவார்கள். அது ஈழத் தமிழாகளுடைய அரசியல் தளத்தை வெற்றியை நோக்கி நகர்த்திச் சென்றுவிடும் என்பதே சிங்கள அச்சமாக உள்ளது. இதற்காகவே, இந்தியாவின் கரம் பற்றி நடைபோடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெல்வதை உறுதி செய்ய வேண்டிய நிலையில் மகிந்த சகோதரர்கள் களத்தில் இறங்கியுள்ளார்கள்.

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் புலம்பெயர் தமிழர்களால் மீண்டும் ஜனநாயக முறைப்படி மீள் வாக்களிப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் இந்த ஜனநாயக விருப்பங்களைப் புரிந்து கொண்ட மேற்குலகு ஈழத் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றை வழங்கும்படி சிங்கள அரசை நிர்ப்பந்தித்து வருகின்றது. முள்ளிவாய்க்கால் பேரவலங்களைத் தவிர்க்க முயற்சித்த மேற்குலகை இந்தியா மூலம் தடுத்து நிறுத்திய மகிந்த அரசு, மேற்குலகின் அரசியல் தீர்வுக்கான அழுத்தங்களையும் அதே இந்தியப் பேயரசின் மூலம் தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றது. அதற்கு ஒரே வழி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்து, இந்தியா மூலம் மேற்குலகிற்கு 'செக்' வைப்பதே. இதனைப் புரிந்து கொள்ள ஈழத் தமிழர்கள் தவறினால், இன்றுவரை தம் உறவுகளுக்காகப் போராடிய புலம்பெயர் தமிழர்களது தமிழ்த் தேசிய உணர்வைப் படுகொலை செய்வதாக அமைந்துவிடும்.

ரகுநாதண்ணோய் .. நீங்கள் ஒஸ்ரேலியாவில கிடந்து என்னமாதிரி குத்திமுறிஞ்சாலும்... எல்லா இடத்திலயும் கூட்டமைப்புதான் அண்ண வெல்லப்போகுது.... பாவம் உவன் ஜிஜியின்ர பேரனுக்கு யாழ்ப்பாணத்தில ஒருமாதிரி ஒண்டு கிடைக்கும் போல.... உங்களை இனைக்க பாவமாக்கிடக்கண்ண 9ம் திகதி எந்த முகத்தோட ஆக்களட்ட முளிக்கப்போறீங்களோ தெரியாது....

  • கருத்துக்கள உறவுகள்

:) நான் முகத்தில முழிக்கிறதிருக்கட்டும், உங்கட முகம் துலையாமல் பார்த்துக்கொள்ளுங்கோ.உங்கட நக்கித்திண்ணும் அரசியலும், சரணாகதி, சமரச அரசியலும் கூட்டிக்குடுத்துப்பழகிய உங்களுக்கும், உங்கள் ஐய்யாவுக்கும் தான் சரி. நீங்களே முகத்தை காட்டுறதைப்பற்றிக் கவலைப்படாதபோது, நான் எதுக்குக் கவலைப்பட வேணும்??

இந்திய அடிவருடிகளும், 75 வருடப் பழமைபேசித்திரியும் பிரயோசனமற்றவர்களும் தாங்களும் மனிதர்கள் என்று திரியும்போது நான் முகம் காட்டுவதைப்பற்றிக் கவலைப்படுவதில் எந்த அர்த்தமுமில்லை.

DAM

டென்மார்கில குமாரதுரையரின்ர பெடியளோட திரிச்சதெல்லாம் தமிழ்வொயிஸ்...

சாண்டில்யனின் வொயிஸ் ஆக DAM ஆ அல்லது வேறு பெயரில் சாண்டில்யனா ?

திரிச்சதெல்லாம்-??? திரிக்கும் ஆலை ?

nedukkalapoovan

நீங்கள் தமிழ்வொயிஸை சாட்டுவைத்து தலைவரின் செயற்பாடுகளை ஏகமனதாக விமர்சனம் செய்து வருகிறீர்கள்.

ragunathan

இங்கே முன்வைக்கப்படும் விமர்சனங்கள் உங்கள் மேல் தனிப்பட்ட ரீதியாக முன்வைக்கப்படுவதாக பாசாங்கு செய்யப்பட்டாலும் உண்மையிலேயே தேசியத்தலமையை தாக்கித்தான் முன்வைக்கப்படுகிறதென்பது தெளிவாகிறது.

புலவர்

தான்(சாண்டில்யன்) தலைவரை வழிநடத்தினோம் என்று சொல்வதை நம்ப தமிழர்கள் ஒன்றும் இளிச்ச வாயர்கள் இல்லை.

நன்றிகள் மற்றும் அனைவருக்கும்

சம்பந்தருக்காக புலிகளை இழிவுபடுத்தும் போதும் கூட சிலர் சம்பந்தர் புராணத்தை இடைவிடாது வாசித்து வருகின்றார்கள் ஒப்புக்குக் கூட கண்டிக்க முன்வரவில்லை

ஆக இவர்கள் நிச்சயமாக தமிழ்த்தேசியத்திற்காக சம்பந்தர் புராணத்தை ஊதவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது

கயேந்திரன் பிளவு என்பது எமக்கு பல புலி எதிர்ப்பு[பச்சோந்திகள்] ,பிரதேச,சம்பந்த, பிழைப்பு வாதிகளை இனம் காண வைத்திருக்கின்றது

Edited by tamilsvoice

கூட்டு என்பது கொள்கைகளின் அடிப்படையில்தான் இருந்தது. விடுதலைப்புலிகளினால் காக்கக்பட்ட கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டவர்களுடன் தொடர்ந்தும் கூட்டில் இருப்பது கொள்கைகளுக்கு விசுவாசம் காட்டுவதைவிட்டு, தலைமைகளைக்கு விசுவாசம் காட்டுவதாகத்தான் அமையும்.

கொள்கைகளை இறுகப்பற்றியதனால்தான் விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்கால் வரை சென்று நந்திக்கடலில் ஒட்டுமொத்தமாக முடிந்துபோனார்கள். கொள்கைகளை விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் கைவிட்டிருந்தால், நாம் இன்று த.தே.கூ.வைப் பற்றி விவாதிக்கவேண்டிய தேவை இருந்திருக்காது.

22 பாராளுமன்ற உறுப்பினர்களின் பலத்தோடு இருந்த த.தே.கூ. முள்ளிவாய்க்கால் பேரழிவைத் தடுக்கக் காத்திரமான எந்த நடவடிக்கைகளையும் செய்யவில்லை. எனவே ஒருமைப்பாட்டைப் பேணிக்கொண்டு இவர்களால் எதுவும் செய்யமுடியும் என்று நம்புவது வீண்.

விடுதலைப் புலிகளின் அழிவின் பின்னர் தமிழர்கள் நடுக்கடலில் தத்தளிக்கும் நிலையில் உள்ளனர். தத்தளிப்பவனுக்குப் பற்றிக்கொள்ளக் கிடைக்கும் பலகைத்துண்டு போல சிலர் த.தே.கூ.வை பார்க்கின்றார்கள். எனினும் தத்தளிப்பவன் பார்வையில் தெரியும் பலகைத்துண்டு உண்மையில் ஒரு முதலை என்பதுதான் எனது கருத்து.

நல்லது கிருபன். கொள்கைகள் எவ்வாறு கைவிடப்படுகிறது, என கொள்கைபற்றிக் கதைப்பவர்கள் எங்கெல்லாம் நழுவியிருக்கிறார்கள் என்பது இந்தப் பத்தியில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. இனி கஜேந்திர புராணம் பாடுபவர்கள் சம்பந்தர் புராணம் பாடுகிறார்கள் என மற்றவர்களை மடக்கி என்ன பயன்.

இந்தத் தொடுப்பில் எங்கெங்கு வழுகிச் செல்கிறார்கள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70680

இனி கஜேந்திர புராணம் பாடுபவர்கள் சம்பந்தர் புராணம் பாடுகிறார்கள் என மற்றவர்களை மடக்கி என்ன பயன்.

இந்தத் தொடுப்பில் எங்கெங்கு வழுகிச் செல்கிறார்கள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70680

இழப்புக்களை மூலதனமாக வைத்து இணக்க அரசியல் பேச கூடாது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70678

இங்கே உறவுகள் புடுங்குப்படுவதை பார்க்க கவலையாக உள்ளது

சிங்களவன் நினைச்சதச் சாதிச்சிற்ரான்

நல்லது கிருபன். கொள்கைகள் எவ்வாறு கைவிடப்படுகிறது, என கொள்கைபற்றிக் கதைப்பவர்கள் எங்கெல்லாம் நழுவியிருக்கிறார்கள் என்பது இந்தப் பத்தியில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. இனி கஜேந்திர புராணம் பாடுபவர்கள் சம்பந்தர் புராணம் பாடுகிறார்கள் என மற்றவர்களை மடக்கி என்ன பயன்.

இந்தத் தொடுப்பில் எங்கெங்கு வழுகிச் செல்கிறார்கள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70680

சரி சம்பந்தரை நேரடியாக எதிர்ப்பவர்கள் பிழையானவராக இருந்து விட்டு போகட்டும்... ஆனால் இந்திய அடிவருடித்தனத்தை அப்பட்டமாக கொண்ட சப்பந்தர் கூட்டம் எப்படி நல்லவர்களாயினர்...

மற்றவன் பிழை விடுகிறான் ஆகவே நான் நல்லவன் எண்டு சொல்கிறார்களோ...??

இங்கே உறவுகள் புடுங்குப்படுவதை பார்க்க கவலையாக உள்ளது

சிங்களவன் நினைச்சதச் சாதிச்சிற்ரான்

இங்கு சம்பந்தர் ,கயேந்திரன் வெல்லுவதோ ,தோற்பதோ அல்ல ?

இவர்களே சொல்லுகின்றார்கள் சம்பந்தரை சந்தர்ப்பவாத அரசியலுக்கு சிறந்தவர் என்று தான் தவிர அவர் ஒன்றும் புலி ஆதரவாளர் இல்லை என்று ஆனால் கயேந்திரன் புலிகளால் நியமிக்கப்பட்ட கடைசி வரை அதில் உறுதியாக நிற்கும் ஒருவர்

கொள்கையில் உறுதியானவரை சந்தர்ப்பவாதத்திற்கு பயன் படுத்துவதா ?? அல்லது சந்தர்ப்பவாதிக்கு சந்தர்ப்பம் கொடுப்பதா ? பயன்படுத்துவதா ?

புலிகளால் நியமிக்கப்பட்டு அவர் தாயகக்கோட்பாட்டிலிருந்து விலகாத மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை விலத்தியது மக்களையும் புலிகளையும் உதாசீனப்படுத்தியதற்கு சமனானது

சந்தர்ப்பவாத அரசியல் எமக்குத் தெரியாது இந்த ஆய்வாளர்கள் ஏன் சம்பந்தர் புலிகள் உருவாக முதலேயே அல்லது சமாந்திரமாகவே இருந்தார்கள் ஆனால் அவர்களால் எதையும் இதுவரை சாதிக்கவில்லை சாணக்கிய அரசியலும் செய்யவில்லை

அதே போல் தான் ஆய்வாளர்களும் எல்லாமே மண் குதிரை ஆய்வுகள் என்று அம்பலமான பின்னரும்

இன்னும் இந்த ஆய்வாளர்களும் இனித்தான் சந்தர்ப்பவாத அரசியல் சாணக்கியம் பேசுவது மட்டுமல்ல

கொள்கையில் உறுதியாக இருப்பவர்களை துரோகிகள் தூற்றுவதும் பழிப்பதும் தான் இவர்களின் மேல் ஏற்பட்ட சந்தேகங்கள் ?

எங்கிருந்தது இவ்வளவு காலமும் ??? புலிகளா இவர்களது சாணக்கியத்தை சாகடித்தார்கள் ?

ஆகக் குறைந்தது ஜனாதிபதித் தேர்தலில் கூட இவர்களது சாணக்கியம் வெறும் சரணாகதி அரசியல் என்று நிரூபித்தாகி விட்டது இனித் தான் சாணக்கியம் சந்தர்ப்பவாத அரசியல் என்று வெற்றுக் கோசம் போடுகின்றார்கள்

இழப்புக்களை மூலதனமாக வைத்து இணக்க அரசியல் பேச கூடாது

இந்தப் பிண்ணனியில் தான் கயேந்திரனை ஆதரிக்கின்றோம்

அது தவிர இருவராலும் இலங்கை அரசியலில் எதையும் சாதிக்க முடியாது

ஏன் இங்கே காட்டுக்கத்து கத்துவது தாயகத்தில் ஒருவருக்கும் தெரியப்போவது கூட இல்லை ?

அரசியல்வாதிகளுக்காக புலிகளையே பழிக்கும் இவர்களின் சுயரூபம் தெரியவந்தது நல்லதே ?

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியத்தை தூக்கிப் பிடிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்வதுதான் அவர்கள் தற்போது கொண்டிருக்கும் கொள்கைக்கு நல்லது. தேசியத்தை வாய்ச்சொல்லில் மாத்திரம் வைத்து வாக்குவேட்டை செய்வதை விடுத்து தங்களின் உண்மையான கொள்கைகளுக்கு மக்களை வாக்களிக்கச் செய்யக்கோரி த.தே.கூ. பிரச்சாரம் செய்தால் அவர்களின் நம்பகத்தன்மையில் கேள்விவராது.

இதற்காக தேசிய மக்கள் முன்னணி மக்களுக்குத் தீர்வு ஒன்றை வென்று தருவார்கள் என்று தற்போதைய இலங்கை அரசியல் நிலையைப் புரிந்துகொண்டவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.

அபிவிருத்திதான் முக்கியம் என்றால் கருணா, டக்ளஸ் போன்று அரசை அண்டிப் பிழைத்து வாழலாம். அது தேசியம் என்ற போர்வையில் பம்மாத்து அரசியல் செய்வதைவிட நேர்மையானது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே உறவுகள் புடுங்குப்படுவதை பார்க்க கவலையாக உள்ளது

சிங்களவன் நினைச்சதச் சாதிச்சிற்ரான்

தங்கள் ஆதங்கம்தான் எனக்கும்

ஆனால் இங்கு எழுதுபவர்கள் எல்லோரும் ஒரே நோக்கமே

ஆனால் வழி வேறுபடுகிறது

தீவிரவாதம்

அதிதீவிரவாதம்

ஒருவர் புலி முத்திரையுடன் போகலாம் என்கிறார்

நான் அதை கொஞ்சம் மனதுக்குள் வைத்தபடி சூழ்நிலைக்கு ஏற்றவாறு முன்னேறி காலம்வரும்போது காட்டலாம் என்கிறோம்

களம் அதைத்தான் எமக்கு விட்டுள்ளது

சிங்களவன் மற்றும் சர்வதேசம் மட்டுமல்ல தலைவரும் இந்த வழியைத்தான் இப்போ விட்டுவைத்துள்ளார்

அதை நாங்கள் சொன்னால் புலிகளுக்கு துரோகம் என்கின்றனர்

நீங்கள் எதை தெரிவு செய்வீர்கள்....???

பிறகு எதுக்கு சம்பந்தரை எதிர்க்க கூடாது எனும் வாதம்....?? சித்தார்த்தனை எல்லாம் நல்லவன் எண்று சொல்ல வேண்டுமா...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

பதில்

9ந்திகதி வரட்டும்

பதில்

9ந்திகதி வரட்டும்

இந்தியாவில் சிதம்பரம் , மகிந்தா வென்றது போல் தான் இனி எல்லாம் ஏற்கனவே 12 பேர் குழு கொழும்பில் நிற்குதாம்

9ம் திகதி வரப்போவது மகிந்த- இந்திய பதிலாகத்தான் இருக்கும்

களம் அதைத்தான் எமக்கு விட்டுள்ளது

சிங்களவன் மற்றும் சர்வதேசம் மட்டுமல்ல தலைவரும் இந்த வழியைத்தான் இப்போ விட்டுவைத்துள்ளார்

தமிழகத்தில் வந்ததது போல் உங்களுக்கும் மின்னஞ்சல் வந்ததா ??

ஒருவர் புலி முத்திரையுடன் போகலாம் என்கிறார்

நான் அதை கொஞ்சம் மனதுக்குள் வைத்தபடி சூழ்நிலைக்கு ஏற்றவாறு முன்னேறி காலம்வரும்போது காட்டலாம் என்கிறோம்

புலி முத்திரையுடன் போபவர் துரோகி என்று அல்லவா சொல்லுகின்றீர்கள் ???

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை நம்பும் நம்பந்தரை நம்புவதை விட டக்கிளசுக்கு போட்டால் டக்களசு தன் செல்வாக்கைப் பயன் படுத்தி காசை வேண்டிக் கொண்டென்றாலும் போர்க் கைதிகளாகி இருக்கும் ஒரு சிலரையாவது விடுவித்துத் தருவான்.சம்பந்தர் கூட்டத்தால் எதுவுமே ஆகப் போவதில்லை.தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை ஏன் நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்றால் நாளை சர்வதேச் சூழ்நிலைகள் மாறி எமக்குச் சார்பான சந்தர்ப்;பம் வரும் பொழுது எமக்கு என்ன தேவை எம்முடைய அபிலாசை என்ன என்பதற்கான தாயகக் கோட்பாட்டை தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொண்டிருப்பதும் இந்தியாவின் சூழ்ச்சிகளை தற்காலிகமாக வேனும் முறியடிப்பதற்குத்தான்.தாயகக் கோட்பாட்டை நாம் சந்ததி சந்ததியாகக் காவிச் சென்றாலே அந்த இலட்சியத்தை வென்றெடுக்க தமிழினம் இன்னுமொரு பிரபாகரனை தோற்றுவிக்கும்.அல்லாது போனால் தமிழின விடுதலைக்காக வீரமும் தியாகமும் நிறைந்த போராட்டம் நடைபெற்றதையே தமிழினம் மறந்து விடும்.ததேகூட்டமைப்பு புலம் பெயர்ந்த மக்களின் தாயகம் மீதான உரிமையை மறுதலிக்கிறது.புலம் பெயர்ந்த மக்கள் தாயக மக்களின் அரசியலில் பங்கெடுக்கத் தேவையில்லை என்பதும்.புலம் பெயர்ந்த மக்களின் அரசியல் முன்னெடுப்புக்களை கவனத்தில் எடுக்காது கொச்சைப் படுத்துவதும்.தாயக மக்களுக்கும் புலம் பெயர்ந்த மக்களுக்கும் இடையில் விரிசலை உண்டு பண்ணுவதும் எந்த விதத்தில் தமிழின விடுதலைக்கு உதவப் போகிறது.ததேகூட்டமைப்பின் தலமையை அகற்றித்தான் தமிழரின் ஒற்றுமை பேணப்படவேண்டுமாயின் அதைச் செய்வதற்குத் தமிழினம் பின்னிற்கக் கூடாது.

சரி சம்பந்தரை நேரடியாக எதிர்ப்பவர்கள் பிழையானவராக இருந்து விட்டு போகட்டும்... ஆனால் இந்திய அடிவருடித்தனத்தை அப்பட்டமாக கொண்ட சப்பந்தர் கூட்டம் எப்படி நல்லவர்களாயினர்...

மற்றவன் பிழை விடுகிறான் ஆகவே நான் நல்லவன் எண்டு சொல்கிறார்களோ...??

இங்கு சம்பந்தர் ,கயேந்திரன் வெல்லுவதோ ,தோற்பதோ அல்ல ?

இவர்களே சொல்லுகின்றார்கள் சம்பந்தரை சந்தர்ப்பவாத அரசியலுக்கு சிறந்தவர் என்று தான் தவிர அவர் ஒன்றும் புலி ஆதரவாளர் இல்லை என்று ஆனால் கயேந்திரன் புலிகளால் நியமிக்கப்பட்ட கடைசி வரை அதில் உறுதியாக நிற்கும் ஒருவர்

கொள்கையில் உறுதியானவரை சந்தர்ப்பவாதத்திற்கு பயன் படுத்துவதா ?? அல்லது சந்தர்ப்பவாதிக்கு சந்தர்ப்பம் கொடுப்பதா ? பயன்படுத்துவதா ?

புலிகளால் நியமிக்கப்பட்டு அவர் தாயகக்கோட்பாட்டிலிருந்து விலகாத மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை விலத்தியது மக்களையும் புலிகளையும் உதாசீனப்படுத்தியதற்கு சமனானது

சந்தர்ப்பவாத அரசியல் எமக்குத் தெரியாது இந்த ஆய்வாளர்கள் ஏன் சம்பந்தர் புலிகள் உருவாக முதலேயே அல்லது சமாந்திரமாகவே இருந்தார்கள் ஆனால் அவர்களால் எதையும் இதுவரை சாதிக்கவில்லை சாணக்கிய அரசியலும் செய்யவில்லை

அதே போல் தான் ஆய்வாளர்களும் எல்லாமே மண் குதிரை ஆய்வுகள் என்று அம்பலமான பின்னரும்

இன்னும் இந்த ஆய்வாளர்களும் இனித்தான் சந்தர்ப்பவாத அரசியல் சாணக்கியம் பேசுவது மட்டுமல்ல

கொள்கையில் உறுதியாக இருப்பவர்களை துரோகிகள் தூற்றுவதும் பழிப்பதும் தான் இவர்களின் மேல் ஏற்பட்ட சந்தேகங்கள் ?

எங்கிருந்தது இவ்வளவு காலமும் ??? புலிகளா இவர்களது சாணக்கியத்தை சாகடித்தார்கள் ?

ஆகக் குறைந்தது ஜனாதிபதித் தேர்தலில் கூட இவர்களது சாணக்கியம் வெறும் சரணாகதி அரசியல் என்று நிரூபித்தாகி விட்டது இனித் தான் சாணக்கியம் சந்தர்ப்பவாத அரசியல் என்று வெற்றுக் கோசம் போடுகின்றார்கள்

இழப்புக்களை மூலதனமாக வைத்து இணக்க அரசியல் பேச கூடாது

இந்தப் பிண்ணனியில் தான் கயேந்திரனை ஆதரிக்கின்றோம்

அது தவிர இருவராலும் இலங்கை அரசியலில் எதையும் சாதிக்க முடியாது

ஏன் இங்கே காட்டுக்கத்து கத்துவது தாயகத்தில் ஒருவருக்கும் தெரியப்போவது கூட இல்லை ?

அரசியல்வாதிகளுக்காக புலிகளையே பழிக்கும் இவர்களின் சுயரூபம் தெரியவந்தது நல்லதே ?

தமிழ்த் தேசியத்தை தூக்கிப் பிடிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்வதுதான் அவர்கள் தற்போது கொண்டிருக்கும் கொள்கைக்கு நல்லது. தேசியத்தை வாய்ச்சொல்லில் மாத்திரம் வைத்து வாக்குவேட்டை செய்வதை விடுத்து தங்களின் உண்மையான கொள்கைகளுக்கு மக்களை வாக்களிக்கச் செய்யக்கோரி த.தே.கூ. பிரச்சாரம் செய்தால் அவர்களின் நம்பகத்தன்மையில் கேள்விவராது.

இதற்காக தேசிய மக்கள் முன்னணி மக்களுக்குத் தீர்வு ஒன்றை வென்று தருவார்கள் என்று தற்போதைய இலங்கை அரசியல் நிலையைப் புரிந்துகொண்டவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.

அபிவிருத்திதான் முக்கியம் என்றால் கருணா, டக்ளஸ் போன்று அரசை அண்டிப் பிழைத்து வாழலாம். அது தேசியம் என்ற போர்வையில் பம்மாத்து அரசியல் செய்வதைவிட நேர்மையானது.

இந்திய அடிவருடித் தனம், இந்திய நிகழ்ச்சி நிரல் இவைகள்தான் கஜேந்திரன் குழுவினரை கூட்டமைப்பிலிருந்து துரத்தியது என்றால், இதுகாலவரையில் தமிழ் ஈழவரலாற்றில் மட்டுமல்ல முழுத் தேசத்திற்குமான வரலாற்றில் இந்திய நிகழ்ச்சிநிரலுக்கான போக்கு எப்படியிருந்தது? அதற்கு வெகு தூரம் வரலாற்றின் பின்செல்லத் தேவையில்லை. 8 வருட வரலாற்றின் பின் சென்றாலே போதும்.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் இந்திய நிகழ்ச்சிநிரலுக்குள் கொண்டுவரப்பட்ட தன்மையை நாம் அறிவோம்.

அந்த ஆயுதப் போராட்டம், இலங்கை இந்திய ஒப்பந்தம் என்னும் போர்வையில் இந்திய நிகழ்ச்சிநிரலுக்குள் உள்வாங்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது.

மீண்டும் தொங்கிய ஆயுதப் போராட்டம், ரஜீவின் மரணத்தின் பின்பு, அந்த மரணத்திற்காகவே தனது நிகழ்ச்சிநிரலை மாற்றியமைத்து, தமிழர் பிரச்சனையை நீட்சிபெறச் செய்தது.

மூன்றாவது அனுசரணையுடனான பேச்சுவார்த்தைகளில் தமிழர் தரப்பு ஈடுபட்டபோது, தான் தலையிடாக் கொள்கை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, இலங்கையரசுக்கு ஆதரவு, ஆலோசனை வழங்கியதுடன் சர்வதேசத்தையும் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்து விட்டது.

மூதூரில் தொடங்கிய தண்ணீர் பிரச்சனை சிறியவிடயமானாலும் அதை பெரிதாக்கி இலங்கையை யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகச் செய்து முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்று முடித்துவைத்திருக்கிறது.

தற்போது தமிழர் அரசியல் பிரிவுக்குள்ளாகி நிற்பதற்கும் அதுதான் காரணம் எனக் கற்பிக்கப்படுவதும் இந்திய நிகழ்ச்சி நிரல்தான். இதற்கு சம்பந்தர் மட்டுமல்ல கஜேந்திரகுமார் அணியும் ஆட்பட்டுள்ளது.

இவ்வாறு இந்திய நிகழ்ச்சி நிரலைத் தவிர்த்து கஜேந்ரகுமாரினால் கூட வெளியில் வர முடியாது. புலிகளால் முடியாமல் போனது கஜேந்திரகுமாரினால் முடியும் என எழுதுபவர்கள் இதற்கான விடைகளை முன்வைக்க வேண்டும்.

இந்தியாவின் நிகழ்ச்சிநிரலுக்குளிருந்து எப்படி வெளியேறுவது என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

இந்திய அடிவருடித் தனம், இந்திய நிகழ்ச்சி நிரல் இவைகள்தான் கஜேந்திரன் குழுவினரை கூட்டமைப்பிலிருந்து துரத்தியது என்றால், இதுகாலவரையில் தமிழ் ஈழவரலாற்றில் மட்டுமல்ல முழுத் தேசத்திற்குமான வரலாற்றில் இந்திய நிகழ்ச்சிநிரலுக்கான போக்கு எப்படியிருந்தது? அதற்கு வெகு தூரம் வரலாற்றின் பின்செல்லத் தேவையில்லை. 8 வருட வரலாற்றின் பின் சென்றாலே போதும்.

இதைவிட அனேக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன... ஆனால் உங்களுக்கு குத்துவது இவை இரண்டும் தான்... ஏன் எண்றால் உண்மை சுடும்..

8 வருட வரலாறா... சரி அந்த வரலாறு எப்படியான விளைவுகளை தந்தது எண்று உங்களுக்கு புரியவில்லையா....???

வரலாறு கூட உங்களுக்கு படிப்பினையை தராவிட்டால் உங்களை காப்பாத்த கடவுளாலும் முடியாது... கொலைகாறரையும் காடையர்களும் தான் தமிழர்களுக்கு தீர்வை தர முடியும் எண்றால் அதை நேரடியாக சிங்களவனாலும் தரமுடியும்... அப்படியானால் மட்டுமே அது பாதுக்காப்பாக கூட இருக்கலாம்...

எந்த நேரத்திலும் சிங்களவனால் கிளித்து எறியப்பட கூடிய ஒரு தீர்வை பெற்று தந்துவிட்டு எல்லாரையும் ஏமாளியாக்கலாம் என்பது உங்களிக்கு இனிப்பாக கூட இருக்கலாம்... அந்த வகையில் உங்களின் கனவு நாயகர்களாக கூட்டமைப்பினர் உங்களுக்கு பெரிதாக படலாம்...

ஆனால் பல உயிர்களை பலியிட்டு நாங்கள் பெற்ற வரலாற்றை மறப்பதுக்கு இல்லை...

இந்தியாவை எங்களிடம் இருந்து வெளியேற்றுவதா...?? செய்யக்கூடியது இருக்கிறது... இந்தியா தவிர்ந்த சக்திகளை மட்டும் தமிழர் நம்புவது, இணைந்து கொள்வதும்... இதைத்தான் சிங்களவன் இந்தியாவை பணியவைக்க செய்ததும், இனிமேல் செய்யப்போவதும் ...

இந்தியவின் இலங்கை மீதான இருப்பை தக்கவைக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு மட்டும் தான் இருக்கிறது... அவைகளுக்கு நாங்கள் கருவிகளாக வேண்டாம்....

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மே 18 2009 வரை கூட்டமைப்புக்கு வாய் இருக்கேல்ல.....எண்டும் சொல்லுறாங்கோ!

மே 18 2009 வரை கூட்டமைப்புக்கு வாய் இருக்கேல்ல.....எண்டும் சொல்லுறாங்கோ!

அதுக்கு பிறகும் இல்லை... இனிமேல் எப்பவும் இல்லை...

இதைவிட அனேக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன... ஆனால் உங்களுக்கு குத்துவது இவை இரண்டும் தான்... ஏன் எண்றால் உண்மை சுடும்..

8 வருட வரலாறா... சரி அந்த வரலாறு எப்படியான விளைவுகளை தந்தது எண்று உங்களுக்கு புரியவில்லையா....???

வரலாறு கூட உங்களுக்கு படிப்பினையை தராவிட்டால் உங்களை காப்பாத்த கடவுளாலும் முடியாது... கொலைகாறரையும் காடையர்களும் தான் தமிழர்களுக்கு தீர்வை தர முடியும் எண்றால் அதை நேரடியாக சிங்களவனாலும் தரமுடியும்... அப்படியானால் மட்டுமே அது பாதுக்காப்பாக கூட இருக்கலாம்...

எந்த நேரத்திலும் சிங்களவனால் கிளித்து எறியப்பட கூடிய ஒரு தீர்வை பெற்று தந்துவிட்டு எல்லாரையும் ஏமாளியாக்கலாம் என்பது உங்களிக்கு இனிப்பாக கூட இருக்கலாம்... அந்த வகையில் உங்களின் கனவு நாயகர்களாக கூட்டமைப்பினர் உங்களுக்கு பெரிதாக படலாம்...

ஆனால் பல உயிர்களை பலியிட்டு நாங்கள் பெற்ற வரலாற்றை மறப்பதுக்கு இல்லை...

இந்தியாவை எங்களிடம் இருந்து வெளியேற்றுவதா...?? செய்யக்கூடியது இருக்கிறது... இந்தியா தவிர்ந்த சக்திகளை மட்டும் தமிழர் நம்புவது, இணைந்து கொள்வதும்... இதைத்தான் சிங்களவன் இந்தியாவை பணியவைக்க செய்ததும், இனிமேல் செய்யப்போவதும் ...

இந்தியவின் இலங்கை மீதான இருப்பை தக்கவைக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு மட்டும் தான் இருக்கிறது... அவைகளுக்கு நாங்கள் கருவிகளாக வேண்டாம்....

இந்தியாவின் எதிர்ப்புச் சக்திகள் எவை? சீனாவைக் குறிப்பிடுகிறீர்களா? அல்லது மேற்கத்தய நாடுகளைக் குறிப்பிடுகிறீர்களா? அல்லது இஸ்லாமியத் தீவிரவாத சக்திகளைக் குறிப்பிடுகிறீர்களா? இதில் எவை? ஏன் இந்தப் போக்கை விடுதலைப்புலிகள் கைப்பிடிக்கவில்லை?

இந்தியா அங்கீகரித்தால்தான், தமிழீழம் என்பது உறுதியானது என அவர்கள் இறுதிவரையில் நம்பியிருந்தார்களே, அதற்கு வேறு ஏதாவது காரணமிருந்ததா? வரலாற்றுப் படிப்பினைதான் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்வதற்கு உதவும். இதுவரையில் இந்தியாவை எதிர்த்து ஒரு கல்லைக் கூட நாட்டுவதற்கு முடியவில்லை என்ற படிப்பினையை உணருங்கள்.

நீங்கள் குறிப்பிடும் இந்தியாவிற்கு எதிரான சக்திகள் தமிழர் தேவையை ஏற்றுக் கொள்ளும் என்று நினைக்கிறீர்களா? அது பகற்கனவு. வரலாறு அப்படித்தான் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறது. சிங்களவன் கிழித்து எறியாத எந்தத் தீர்வையும் இந்திய எதிர்ப்புச் சக்திகள் எனக் கருதப்படும் எவையும் பெற்றுத்தராது. இந்தியாவிற்குத் தேவை தனது பிராந்திய நலன்தான். அதற்கு அது என்ன வேண்டுமானாலும் செய்யும். இதனையும் வரலாறுதான் சொல்லித்தந்துவிட்டுச் சென்றிருக்கிறது.

.

விடுதலைப்புலிகள் வேறு சக்திகளோடு தொடர்புகளை பேணவில்லை எண்றா சொல்கிறீர்கள்... இது வெறும் நகைசுவையை மட்டும் தான் கொண்டு வரும்... வெறும் இந்தியாவை மட்டுமே புலிகள் நம்பி இருந்தார்கள் எண்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்கட அறியாமையை மட்டும் தான் அது காட்டுகிறது...

இந்தியா தான் தமிழர்களின் அழிவுக்கு இலங்கைக்கு பக்கபலமாக இருக்கிறது என்பதை கடைசிக்கால புலிகளின் அறிக்கைகள் அனைத்தும் தெளிவாக எழுத்து வடிவம், ஒலிவடிவம் அனைத்திலும் இடம்பெற்றும் இருக்கிறது...

புலிகள் இந்தியாவை நேரடியாக எதிர்க்க இல்லை எண்றா அதுக்கு ஒரே காரணம் நாங்கள் இந்திய உபகண்ட பகுதியில் நாங்கள் ( புலிகள்) யாருக்கும் அச்சுறுத்தலானவர்கள் கிடையாது என்பதை உணர்த்த வேண்டிய தேவை இருந்தமையால்... ஒரு அங்கீகாரத்தை வேண்டி நிக்கும் ஒரு தேசத்தினால் அதை விட எதுவும் செய்ய முடியாது...

மற்றும் படி இந்தியா எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது புலிகளின் கோரிக்கையாக எப்போதும் இருந்தது கிடையாது... உபத்திரவம் வேண்டாம் அது மட்டுமே வேண்டிகை...

இந்த அடிப்படையே புரியாத உங்களுக்கு என்னத்தை புரிய வைக்க முடியும்...?

இதை நீங்கள் கூட்டமைபை பார்த்து கேட்க்க வேண்டிய கேள்வி... இந்தியாவின் தயவில் தீர்வு பொதியை தமிழர்களுக்கு காட்ட நிற்பவர்கள் அவர்கள் தான்...

Edited by தயா

இந்தியாவின் தயவில் எமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புபவர்கள், முதலில் இந்தியாவை எமது காலடியில் விழ வைக்க வேண்டும். எமது தயவின்றி இந்தியனது ஒருமைப்பாடு நிலைக்காது என்ற நிலையை உருவாக்கும்போது தான் இந்தியன் தமிழரின் நலனில் அக்கறை கொள்வான். எனவே தமிழரின் நலனை புறக்கணிக்கும் வரை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு உத்தவாதம் இல்லை என்ற நிலையை நாங்கள் உருவாக்கவேண்டும். அதை விட்டுட்டு இந்திய அடிவருடிகளாக இருந்து ஒன்றும் சாதிக்க முடியாது.

உங்களின் அறிவு எனது அறியாமை. எந்தக் காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு வெளிநாட்டு ஆதரவு இருந்திருக்கிறது? அப்படி இருந்ததாகக் கருதப்படும் ஆதரவு, ஆயுத விற்பனை என்ற அடிப்படையிலே இருந்திருக்குமே தவிர தமிழர் நலன்களுக்கான ஆதரவாக இருந்ததில்லை. எந்த ஒரு அரசும் விடுதலைப்புலிகளின் நலன் சார்ந்த அறிக்கைகள் எதையும் விடுத்ததுமில்லை. தமிழர் நலன் சார்ந்த அறிக்கைகளும் மிகக் குறைவாகத்தான் வெளிவந்திருக்கிறது. அதுவும் மனிதநேய, மனிதவுரிமைகள் சம்பந்தமானதாகத்தானுள்ளது.

விடுதலைப்புலிகளின் குரல்களுக்கும் அறிக்கைகளுக்கும் ஏன் ஒரு காத்திமான அதிகாரக்குரல் உலகிலிருந்து ஒலிக்கவில்லை? தமிழர்களால் வீதிகளில் இறங்கி நடத்தப்பட்ட போராட்டங்கள் எத்தனை. இது நடக்கும் அது நடக்கும் என்று முள்ளிவாய்க்கால் முடிவுவரை காத்திருந்தோமே, ஏதாவது நடந்ததா? ஒன்றுமே நடக்கவில்லை. காரணம் இலங்கை சம்பந்தப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளும் இந்திய நிகழ்ச்சிநிரலின் கீழ் இருந்ததுதான்.

இந்திய நிகழ்ச்சிநிரல் இச் செயற்பாட்டில் இருந்திராவிடின் விடுதலைப்புலிகளை அழித்திருக்க முடியாது. இந்தச் செய்தி கஜேந்திரன் அணியினருக்குத் தெரியாததா? அப்படித் தெரிந்திருந்தும் இவர்கள் கூட்டமைப்பினரை இந்திய நிகழ்ச்சிநிரலுக்குள் செயற்படுகின்றார்கள் என்று குற்றம் சாட்டினால், அவர்களும் தமிழரை முழுமையாக ஏமாற்றுகிறார்கள் என்றுதானே அர்த்தம்.

இந்தியாவின் தயவில் எமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புபவர்கள், முதலில் இந்தியாவை எமது காலடியில் விழ வைக்க வேண்டும். எமது தயவின்றி இந்தியனது ஒருமைப்பாடு நிலைக்காது என்ற நிலையை உருவாக்கும்போது தான் இந்தியன் தமிழரின் நலனில் அக்கறை கொள்வான். எனவே தமிழரின் நலனை புறக்கணிக்கும் வரை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு உத்தவாதம் இல்லை என்ற நிலையை நாங்கள் உருவாக்கவேண்டும். அதை விட்டுட்டு இந்திய அடிவருடிகளாக இருந்து ஒன்றும் சாதிக்க முடியாது.

தமிழர்கள் தமிழ்நாட்டை நோக்கிக் கூக்குரலிட்டபோதும் தமிழ் நாட்டினரது உதவி எமது மக்களுக்குக் கிடைக்கவில்லை. தமிழ் நாடும் இந்தியாவினுடைய பகுதிதான். இந்தியா தமிழருக்குத் தீர்வினைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை பொய்யானது. ஈழத்தமிழர் வாழ்வில் அது குறுக்கிடாமல் விட்டாலே தற்போதைக்கு அது பெரிய நிம்மதி. ஆனால் அவ்வாறு நடக்காது. இந்தியத்தலையீடு எப்போதும் இங்கு இருந்து கொண்டேயிருக்கப் போகிறது. அதைத் தடுக்கக்கூடிய வல்லமை இப்போதைக்கு இப்பிராந்தியத்தில் வலுப்பெறவில்லை.

இந்திய சீன முறுகல்கள் எல்லாம் சும்மா பம்மாத்துகள். இந்த இரு நாடுகளும் தமக்குள் நேரடியாக மோதிக் கொள்ளப் போவதுமில்லை.

இந்தியாவைப் பிரிப்பதென்பது கடினமானது. ஏனெனில் எந்த மாநிலத்திலும் பிரிவினையாளர்களைவிடவும் இந்தியத் தேசியப் பற்றாளர்கள் மிகமிக அதிகம். அதைவிடவும் இந்தியா பிரிக்கப்ப்டால் தமது பலம் பறிக்கப்பட்டுவிடும் என்பதையும் இந்தியத் தேசியப்பற்றாளர்கள் அறிவார்கள். அதனால்தான் தனிநாட்டுக் கோரிக்கைகள் அங்கு தோன்றுவதும் கைவிடப்படுவதுமாகவுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.