Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

30 வருடத்தின் பின்னர் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக்கின்றோம் - யாழ் ஆயர்

Featured Replies

30 வருடத்தின் பின்னர் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக்கின்றோம் - யாழ் ஆயர்

யாழ் நிருபர்

ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 4, 2010

முப்பது வருட காலமாக நடந்த போரின் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக் கின்றோம். இராணுவக் கெடுபிடிகள் ஓய்ந்து மக்கள் சுதந்திரமாக நடமாட, பயணம் செய்ய முடிகின்றது. தெற்கில் இருந்தும் எண்ணற்ற மக்கள் நாள்தோறும் யாழ்ப்பாணப் பிரதேசத்தை தரிசித்து மீண்டும் தமது உறவுகளைப் புதுப்பித்து கொள்கிறார்கள்.

இன்னும் நான்கு நாள்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தமிழர்களின் விடிவை நிர்ணயிக்க உள்ளது. ஆகையால் ஏனோ தானோ என்று இருக்காமல் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சிந்தித் துக் கவனத்துடன் வாக்களியுங்கள். அதன் மூலம் எமது எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்வோம். இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் யாழ்.ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை.

கிறிஸ்து உயிர்ப்பு விழாவை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே ஆயர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக் கப்பட்டுள்ளவை வருமாறு,

நாம் கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை நினைவு கூரும் பாஸ்கா விழாவை எதிர் கொண்டுள்ளோம்.

போர் ஓய்ந்தாலும் இதனால் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்துக் கும் அதிகமான மக்களுடைய துன்பங்கள் இன்னும் ஓயவில்லை. எண்பதாயிரத்துக் கும் அதிகமான மக்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட வன்னி அகதி முகாம்களிலே துயர வாழ்வை எதிர்கொண்டுள்ளார்கள். எப்போது வீடு திரும்புவோம் என்ற அங் கலாய்ப்போடு அவர்கள் நாள்களை கழிக்கிறார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு, வடமராட்சி பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், இன்னல்கள், சிலுவைகளில் நாமும் பங்கு கொள்ள முயல்வோம்.

குழப்பமும் சலிப்பும் இந்நிலையிலும் மீண்டும் ஒரு முக்கிய தேர்தலை நாம் எதிர்கொள்கின்றோம்.

நாடாளுமன்றத் தேர்தல் என்ற வகையில் முன்னைய தேர்தல்களை விட முக்கியமா னதும் தேவையானதுமாக இது அமைகின் றது. இத்தேர்தலில் வெற்றி பெற ஆளும் கட்சியும், மற்றவர்களும் பலமாக பிரசா ரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தேர் தலில் பெரும் எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிடுவது வாக்காளர்களுக்கு பெரும் குழப்பத்தையும் சலிப்பையும் தருவதாக அமைகின்றது.

இருப்பினும் தமிழ் மக்கள் முன்னைய தேர்தல்களைப் போல இத்தேர்தலிலும் ஏனோ தானோ என்ற மனநிலையோடு நடந்துகொள்ளாது தமது விடிவை நிர்ண யிக்கும் முக்கியமான தேர்தல் எனச் சிந்தித்து போதிய கவனம் செலுத்தி தமது அரிய வாக்குகளை சீரிய முறையில் பயன் படுத்தி தமது எதிர்காலத்தை நிர்ணயித் துக்கொள்ள முன்வரவேண்டுமென விநய மாக வேண்டி நிற்கின்றோம். இதுவே இன்று சீரிய முறையில் சிந்திக்கும் அனைத்துத் தமிழ் மக்களுடைய விருப்பமாகும்.

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் பலனைக் கொடுக்கும். இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு, கிறிஸ்தவ ஆன்மீக வாழ்வின் ஊற்றாக விளங்குகின்றது. உயிர்ப்பு ஞாயிறு திரு விழாவும் இதனையே உணர்த்துகின்றது. எமது துன்பங்கள் முடிவுறும். எம் கண் ணீரை அவர் துடைத்தருள்வார். மனிதம் மீண்டும் சிறப்புறும். இதுவே உயிர்த்த ஞாயிறு எமக்கு விடுக்கும் நற்செய்தி. அனைவருக்கும் எமது உயிர்த்த இயேசுவின் அன்புமிகு வாழ்த்துக்கள் உரித்தாகட் டும் என்றுள்ளது.

http://www.eelanatham.net/story/30-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பு சரியோ? :)

30 வருடத்தின் பின்னர் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக்கின்றோம் - யாழ் ஆயர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மஹிந்த வட பகுதி செல்லும் சிங்கள இனவாதிகளுக்கு தேர்தல் பரிசாக 7500 ரூபா கொடுக்கிறாராம்

இந்த ஆயரெல்லம் கருணா நிதியின் சுவாமிகளுக்கு சமமானவரா?

இவங்களையெல்லம் சுமாமிகள், ஆயர், ஐயர்,.....என்று மக்கள் அடிமைப்பட்டதுதான் மிச்சம்

  • தொடங்கியவர்

தலைப்பு சரியோ? :)

30 வருடத்தின் பின்னர் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக்கின்றோம் - யாழ் ஆயர்

அது உண்மையாக இருக்க வேணும் எண்டதுதான் எனது ஆசையும்... அப்பதான் புலம் பெயந்தவையின் காசு ஊருக்கு தேவை இருக்காது... அங்கத்தைய அரசாங்கமே எல்லாத்தையும் பாத்து கொள்ளும்...

ஐநா குடுத்த 10 000 நிறுத்தி போட்டாங்கள் எண்டதும் கூட யாரும் கவலை பட வேண்டியது இல்லை பாருங்கோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்....ஜேஆர் கருனையால எல்லாரும் பணக்காரார வந்தாச்சு....கொள்ளை அதுதானெண்டா..... :)

அமைதி வந்திட்டா போதும். :lol:

  • தொடங்கியவர்

ம்....ஜேஆர் கருனையால எல்லாரும் பணக்காரார வந்தாச்சு....கொள்ளை அதுதானெண்டா..... :)

அமைதி வந்திட்டா போதும். :lol:

அரசாங்கம் அந்த சனத்துக்கு ஒண்டையும் செய்ய இல்லை செய்ய போவதும் இல்லை... ஐநாவும் தொண்டு நிறுவனங்களும் கொடுத்தவைகளும் இப்ப இல்லை... இலங்கைக்கு பணம் கொடுக்க வெளிநாடுகளும் தயாராக இல்லை...

அதோடை அங்கை இருக்கு சனத்துக்கு எண்டு போறதை புடுங்கி தின்ன அரசாங்கத்தோடையே ஒரு தமிழ் கூட்டம் இருக்கும் போது அமைதி எப்படி வரும்....??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது உண்மையாக இருக்க வேணும் எண்டதுதான் எனது ஆசையும்... அப்பதான் புலம் பெயந்தவையின் காசு ஊருக்கு தேவை இருக்காது... அங்கத்தைய அரசாங்கமே எல்லாத்தையும் பாத்து கொள்ளும்...

ஐநா குடுத்த 10 000 நிறுத்தி போட்டாங்கள் எண்டதும் கூட யாரும் கவலை பட வேண்டியது இல்லை பாருங்கோ...

அரசாங்கம் அந்த சனத்துக்கு ஒண்டையும் செய்ய இல்லை செய்ய போவதும் இல்லை... ஐநாவும் தொண்டு நிறுவனங்களும் கொடுத்தவைகளும் இப்ப இல்லை... இலங்கைக்கு பணம் கொடுக்க வெளிநாடுகளும் தயாராக இல்லை...

அதோடை அங்கை இருக்கு சனத்துக்கு எண்டு போறதை புடுங்கி தின்ன அரசாங்கத்தோடையே ஒரு தமிழ் கூட்டம் இருக்கும் போது அமைதி எப்படி வரும்....??

:):lol:

  • தொடங்கியவர்

:):lol:

ஐநா குடுத்ததை இவ்வளவு காலமும் அரசாங்கம் குடுத்ததாக காட்டி வெற்றி பெற்ற மகிழ்ச்சியோ...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐநா குடுத்ததை இவ்வளவு காலமும் அரசாங்கம் குடுத்ததாக காட்டி வெற்றி பெற்ற மகிழ்ச்சியோ...??

ம்.....கணக்கு காட்டியிருப்பாங்கள் என்னண்ணை! :)

கள்ள கணக்கு :lol:

  • தொடங்கியவர்

ம்.....கணக்கு காட்டியிருப்பாங்கள் என்னண்ணை! :)

கள்ள கணக்கு :lol:

பறிச்சு திண்ட உங்கட ஆக்களுக்கு தெரியாத கணக்கோ...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறிச்சு திண்ட உங்கட ஆக்களுக்கு தெரியாத கணக்கோ...?

ம்.... கள்ள கணக்கெண்டாலும் கணக்கு இருக்கெண்டு சொல்லுறீங்கள்.....

இவளவு காலமும் ஐநா தான் குடுத்திருக்கு.....

குடுத்த காசுக்கு கணக்கில்லை எண்டு .........ஐநா கணக்கதான் சொல்லுறன்.

இங்கால....

நாடும் இல்ல......ஆயுதமும் இல்ல.....அரசியல்பிரிவு அவங்களோட...... உதுகளுக்கு கணக்குமில்ல. :)

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30 வருடத்தின் பின்னர் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக்கின்றோம் - யாழ் ஆயர்

இவர்களெல்லாம் மக்களுக்கு நல்லதை போதிப்பவர்கள்????????????

மதத்தை குற்றம் சொல்லவில்லை.

எவன் எந்த மண்ணில் பிறக்கின்றானோ அவனுக்கு அந்த மண்ணின் குணம் இருந்தே தீரும்.

மண்ணின் மகிந்தர்கள்

போ..

  • தொடங்கியவர்

இங்கால....

நாடும் இல்ல......ஆயுதமும் இல்ல.....அரசியல்பிரிவு அவங்களோட...... உதுகளுக்கு கணக்குமில்ல. :)

அதுதான் எல்லாரும் பயங்கரவாதிகளிட்டை இருந்து தப்பி வாங்கோ வாழ வைக்கிறம் எண்டு வருந்தி கூப்பிட்ட உங்கட ஆக்கள் எல்லாம் இருக்கினம் தானே...??

இல்லை கூப்பிட்டதுகளை மறந்து போனியளோ...?? வாழவைக்க மாட்டினம் எண்டுறியளோ... இல்லை இப்ப அதுகளை எங்களை மறக்க சொல்லுகிறீர்களோ...??

Edited by தயா

போலிகளும், பச்சோந்திகளும், கப்பக்காரர்களும் தான் ஆயர்களாக வரமுடியும் என்பதை உணர்த்தியுள்ளார் யாழ் ஆயர்.

மன்னார் ஆயர் மன்னாரில் ஒருசில அரச உயர் அதிகாரிகள் துணையுடன் கப்பம் வாங்குவது, பேசாலை பகுதிகளில் மீன் பிடிக்க இந்துக்களுக்கு உரிமையில்லை என தடுப்பது, என குட்டி ராஜாங்கம் நடத்த முனைவதாக கூறுகின்றனர்.

முன்னைய கால நல்ல ஆயர்மார் இப்போது எங்கும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆயர் சார்.. ஜேசு வின் பெயரால் குளிரூட்டப்பட்ட வீடுகளில் செல்வாக்கோடு வாழ முடிகிறதல்லவா. அப்ப இப்படித்தான் சொல்வீர்கள். புலிகள் இருந்த போது.. மின்சாரமே இல்லை. யாழ்ப்பாண வெக்கைக்குள்ள அவிஞ்சனியள் எல்லோ. ஒரு மதிப்பு மரியாதைக்கு இடமில்லாமல் அலைஞ்சனியள் எல்லோ. இப்ப உங்களை உச்சாரக் கொப்பில தூக்கி வைக்க ஆக்கள் இருக்கினம். அதுவும் தென்பகுதியில இருந்து வருகினம். அப்ப உங்களுக்கு அதில சமாதானம்.. அமைதி.. சாந்தி.. செளயன்னியம்.. சக வாழ்வு.. சகோதரத்துவம்.. இப்படி நிறைய இருக்கத்தான் செய்யும்.

என்ன நீங்கள் எல்லாம்.. மனிதம் காக்க தன்னையே சிலுவையில் அறையும் மட்டும் வாழாதிருந்துவிட்ட ஜேசுவின் காலத்தில் இல்லாமல் போனதுதான் கொடுமை. இருந்திருந்தால் அவரை சிலுவை ஏறவே அனுமதித்திருக்க மாட்டீர்கள். அதுதான் ஐயா கவலையாக இருக்கிறது.

வந்திட்டாங்கையா ஆளாளுக்கு பண்டிகையும்.. அறிக்கையும் என்று கொண்டு. இதுதான் தமிழ் மக்கள் கேட்ட சுதந்திரமாக்கும். தென்பகுதியில் இருந்து ரம்புட்டான் கேட்டுத்தானே தமிழ் மக்கள் 35 வருடமா போராடினவை..! :D:lol::):D

அப்ப நாங்கள்... ஆயருக்கு டபிள் துரோகி பட்டம் குடுப்பம்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆயர் தமிழருக்கு துரோகியோ இல்லையோ ஜேசு கிறிஸ்துவின் மனிதத்துவம்.. சுதந்திர வாழ்வு.. அடிமை விலக்கல்.. சமத்துவம்.. இவற்றுக்கு எதிரானதாக இருக்கிறார் என்பதை தெளிவாகச் சொல்ல முடியும்.

ஒரு இன மக்களை அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் ஆட்டிப்படைத்தது.. அதனை எதிர்த்து அந்த வலிமை இழந்திருந்த மக்களின் விடுதலைக்காக மனிதம் காக்க உழைத்து அதற்காக அதிகார பீடங்களின் ஆதிக்க அதிகார வெறியால் சிலுவையில் ஏற்றப்பட்டு சிலுவை சுமந்து.. அதிலையே இறப்பையும் சந்தித்தவர் ஜேசு.

தனது மரணத்தைக் கண்டு மனிதத்தை.. வலிமையிழந்திருந்த மக்களின் வாழ்வை அதிகார பீடத்தில் இருந்த ஆதிக்க சக்திகளிடம் அவர் அடகு வைக்கவில்லை. ஜேசுவின் வரவு தொடங்கி இறப்பு வரை பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியிடப்பட்ட போதும் அவர் மனிதத்தைத் தான் முன்னிறுத்தினார். எதிர்கால மனிதர்களிடம் சுதந்திர சம உரிமை வாழ்வை மனிதத்தை நிலைநாட்ட அது உதவும் என்று நம்பினார். பலிகளுக்கு பயந்திருந்தால் ஜேசு இன்று வணக்கப்பட்டிருக்கமாட்டார். அவரின் பெயரால் சாதாரண மனிதர்கள் ஆயர்களாகி உலா வந்திருக்க முடியாது.

ஜேசு வன்முறை கண்டு பயந்து ஒளியச் சொல்லவில்லை. மனிதத்தை முன்னிறுத்தி போராடு. உன் சுதந்திர வாழ்வை இந்தப் பூமிப் பந்தில் உறுதி செய்து கொள். அதேவேளை சமத்துவம்.. மனிதத்தை.. அன்பை.. மற்றவர்கள் மீது காட்டு என்றார். ஆனால்.. நேற்றுவரை ஒரு இன மக்களின் அடிமை விலங்கு தகர்க்க குரல் கொடுத்த ஒருவர்.. இன்று ஆக்கிரமிப்பாளனின் அதிகார வெறிக்குள் அடங்கி இருந்து கொண்டு அதற்குள்.. மக்களின் சுதந்திரத்தை சுருட்டிப் போடுவது. ஜேசுவின் அடிப்படை நிலைப்பாடுகளுக்கு முற்றிலும் முரணானது.

இது ஒன்றே போதும்.. இவர் ஜேசுவின் வழியில் இருந்தும் பிறழ்ந்து வாழ்வதை உறுதியாகக் காட்ட. அதன் பின்னரும் இவரை ஆயர் என்று போற்ற பகுத்தறிவுள்ள மனிதன் விரும்பமாட்டான். இதைச் சொல்வதில் துரோகம் நிலைநாட்டப்படுவதாக கனவு காண்பவர்கள்.. கண்டுகொண்டே அதிகாரமுள்ள ஆக்கிரமிப்பாளனிடம் மண்டியிட்டு வாழ்ந்து தொலைத்து விட வேண்டியதுதான்.

ஜேசு கூட தங்களிடம் மன்னிப்புக்கேட்டு சரணடைய வேண்டும் என்று அதிகார பீடம் கேட்டுக் கொண்டதை நிராகரித்ததால் தான் சிலுவையில் ஏற்றப்பட்டார் என்பதை அர்ப்ப சலுகைகளுக்காக காவியும் ஜிப்பாவும் போடும் மனிதர்கள் உணர முடியாது. இந்தப் போலி மனிதர்களை இறைவனின் தூதுவர்களாகப் போற்றுவதும் மதிப்பதும் தான் அறியாமை. அதை மக்கள் முதலில் கைவிட வேண்டும். இவர்களின் அறிக்கைகள்.. அதிகார வர்க்கங்களின் ஆதிக்கப் போக்கிற்குள் மக்களிற்கு சுதந்திரம் நிலவுவதாகக் காட்ட முனைவதில் இருக்கும் நச்சுத் தன்மைதான் இவர்களின் இந்தப் போலி முகங்களை வெளிக்காட்டச் சொல்கிறது.

எவன் ஒருவன் மக்களின் சுதந்திர வாழ்வை அதிகார ஆதிக்க வெறியர்களிடம் தாரை வார்க்கச் சொல்கிறானோ.. அவன்.. அந்த மக்களின் முன் கருத்துச் சொல்லும் தகுதியை இழக்கிறான். ஜேசுவின் நிலைப்பாடும் இதுவாகவே இருந்தது. ஜேசு அடிமைப்பட்டு அதிகார ஆதிக்க வெறியர்களால் துன்பப்பட்ட மக்களுக்காகவே இறுதி வரை.. அதாவது தனது மரணம் வரை போராடினார். அதிகார பீடத்திடம் அவர் சரணடையவில்லை. மக்களை காட்டிக் கொடுக்கவில்லை. காட்டிக் கொடுத்தவனையே மன்னித்தார். அதுதான் ஜேசு வரலாறு.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக நாடுகளில் இவர்களைப் போன்ற பாதிரிமார்தான் மேற்குலக நாடுகளில் சிறுர்களைப் பாலியல் துஸபிரயோகம் செய்தவர்கள். இதுபற்றி வத்திக்கானுக்க பலவருடங்கட்கு முன்பு அறியத்தந்திருந்தும் தற்போதைய பாப்பரசர் கவனிக்காதுவிட்டு இப்போது பெரும்பிரச்சினையில் வந்திருக்குது. மனிதவாழ்வில் யாரும் புனிதரல்ல. ஆயர்பதவி என்பது எவ்வளவு பதவிசான பதவி என்பதை மிசனறிகளுக்கு உள்நுழைந்து பார்த்தால்தான் தெரியும். நாட்டின் அதிபர்களுக்குக்கூட அதிகாலை எழுந்தால் பதவி நிலைக்குமோ, எதிர்க்கடசி எதைச்செய்ய யோசிக்குது, பாதுகப்பு இல்லாமல் யாராவது போட்டுத்தள்ளுவாங்களோ இப்படிப்பல யோசனைகள். ஆனால் இவர்களுக்கான இன்ஸ்டன் பிரச்சனை, இண்டைக்கு என்னமாதிரிப் பிரசங்கம் செய்யவேண்டும் என்பதுமட்டுமே. அப்போ இச்சகங்களை அனுபவிக்க உயிர்வாழவேண்டுமே. பூமி தட்டையானதல்ல உருண்டையானது சூரியன் அதனைச்சுற்றிவரவில்லை பூமியே சூரியனைச் சுற்றிவருகன்றது எனச்சொன்ன அறிவியல்மோதையையே தெய்வக்குற்றம் செய்தவர் எனக்கூறி நஞ்சூட்டிக் கொலை செய்தவர்கள் வழிவந்தவர்களல்லோ இவர்கள்.

ஆயர் இனி சேச்சில பிரசங்கம் வைக்கிறதெண்டால் கூட லண்டனில இருக்கிறவையட்டை கேட்டுத்தான் பிரசங்கம் செய்ய வேணும். எங்களட்ட கேக்கயில்ல எண்ணால் நாங்கள் துரோகி பட்டம் தருவம்

தமிழனுக்கு தமிழனே துரோகிகள்.

பிறகு ஆயர் தான் என்ன விதி விலக்கா?

சும்மா ஜேசு சிலுவை சொல்லியே வாழ்க்கை ஓட்டி விடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆயர் இனி சேச்சில பிரசங்கம் வைக்கிறதெண்டால் கூட லண்டனில இருக்கிறவையட்டை கேட்டுத்தான் பிரசங்கம் செய்ய வேணும். எங்களட்ட கேக்கயில்ல எண்ணால் நாங்கள் துரோகி பட்டம் தருவம்

தோமஸ் செளந்தர நாயகம் உண்மையாக அவரை மதித்த மக்களிடம் ஆயர் நிலையை இழந்து சில ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் தனது நிலையை பிரசங்கத்தை அவரின் மனச்சாட்சியை கேட்டு.. ஜேசுவின் வழிமுறைகளை சரியாக ஆராய்ந்து அவற்றிற்கு உண்மையுள்ளவராக நடந்து அதன்படி வைத்துக் கொண்டாலே போதும்.

ஜேசுவின் வழியில் நிற்கத்தவறி இருக்கும் தோமஸ் செளந்தரநாயம் என்ற தனிமனிதன்.. ஆயராக எண்ணப்பட்ட முடியாத அளவிற்கு.. சிங்கள பேரினவாத கொடும் கொலைக்கார அதிகார வர்க்கத்தின் ஆதிக்க வெறியர்களின் பேச்சாளனாகவே இன்று தென்படுகிறார். இதை முதலில் உங்கள் போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிங்கள அதிகார வர்க்கம் 35 ஆண்டுகளாக 150,000 அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்துள்ளது. அதில் இவருக்கு சமாதானம் நிலைநாட்டப்பட்டிருக்கென்றால்.. ஜேசுவை சிலுவையில் அறைந்ததையும் அதன் மூலமும் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்று இவர் கூற முன்வருவாரா.. அதை இவர் நியாயப்படுத்துவாரா..??! அதுதான் சமாதானத்திற்கான சரியான வழி என்று சொல்வாரா..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"30வருடத்தின் பின்னர் துன்பியல் வாழ்வு முடிந்தது " என்று பொய்மையில் உழலும் அரசியல்வாதிகள் போன்று ஒரு ஆயர் கூறியிருப்பது பெரும் நகைப்பிற்குரியதாகும். 62 வருட இன அழிப்பில் தமிழினம் பட்ட சொல்லொணாத் துயரில் மிகக் கொடுமையானதொரு காலத்தில் தமிழினம் அனைத்தையும் இழந்து பராரிகளாய், அனாதைகளாய், தேடுவோரற்றோராய், நடைபிணங்களாய் சாய்க்கப்பட்டிருக்கும் சூழலில், எதனை சுட்டித் துன்பியல் வாழ்வு முடிந்தது என்று கூறுகின்றார் என்பது தமிழரது மனங்களில் எழும் கேள்வியாகும். தமிழரது உடல்கள் மட்டுமல்ல, மனங்களும் கொத்திக் கிழிக்கப்பட்டடிருக்கும் சூழலில் இந்த வார்த்தை மெருகு தேவையா என்று கேட்டகாது இருக்க முடியவில்லை. தோற்கடிக்கப்பட்ட தமிழினத்தை, வெற்றி கொண்டோமென்ற மமதையில் விலங்ககம்போல் பார்த்துச் செல்லுமிக் காலத்தில் யாழில் இருந்து யாருக்காக இந்த அறிக்கை.

யேசுபிரான் ஒரு சமூக மாற்றத்தின் பிதாமகன். அன்றைய உலகின் ஒளியாக வந்தவர். அதனால் அவர் முள்முடிதரிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு துன்பத்தைச் சுமந்தார் மக்களுக்காக எனில், அதனையே எமது இரண்டு தலைமுறை எதிர்கொண்டது. அதிலும் எமது இளைய தலைமுறையானது அதியுச்ச அர்பணிப்பைச் செய்தது. வெற்று வார்தைகளால் அடக்கிவிட முடியாத வாழ்வின் சிற்பிகளாய் வாழ்ந்த அவர்களது, அந்த ஈகிகளது காலமானது துன்பியல் காலமெனச் சொல்கின்றாரா என எண்ணமேற்படும் வகையிலான கூற்றுப் பொருத்தமானதா? யேசு பாலனைத் தேடிய ஏரோதுவாய்ச் சிங்களம் தமிழினத்தை வெட்டிச் சாய்த்தபோதும் சரி, அன்று யேசுவைத் தேடியழிக்கத் துடித்துபோல் தமிழர்கள் தேடித் தேடிக் கர்பத்திலேயிருந்த குழந்தைகள்வரை கொன்றோழித்தபோது உங்களது சபைகள் ஊடாக ஏதாவது செய்ய முயலாது இருந்தமையானதுகூட அழிவுக்கு ஒத்துழைத்தது போன்றதே.

ஏரோதுவால் பெத்தலகேமில் நடாத்தப்பட்டதைவிடக் கொடுமையான படுகொலைகளின்களமாய் வன்னிமண் தமிழினத்தின் குருதியால் சிவந்தபோது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கலாமே. காப்பாற்ற முடியாது, சரி அடையாள ரீதியாகக் குரலாவது கொடுத்தீர்களா? என்றால் இல்லை. ஆனால் இன்றை யேசுவின் புனித நாளில், யேசுபிரான் எதைப் புனிதமானது என்று கூறினாரோ சமத்துவம், சகோதரத்துவம், அடிமை இருளில் இருந்து மீளல் என்பவற்றைக் குழிதோண்டிப் புதைத்துவிடும் விதமான அறிக்கைகள் சிங்கள இனவெறியரசினது இனப்படுகொலைக்கு உரமூட்டுவதாகவே அமையக்கூடியது எனில்; ஐயமில்லை. யேசுபிரான் இப்பூமியின் அடிமை இருளகன்ற வாழ்விற்காக போராடினார். அவர்வழி செல்வோரெனக் கூறுவோர் ஆழமாகச் சிந்தை கொண்டியங்க வேண்டியது கடமையாகும். அதுவே யேசுவின் வழியை பின்பற்றுவதின் உண்மைத் தன்மையாகக் கொள்ள முடியும்.

மனித விடுதலை தேடிய யேசுவோடு யூதரசு இருந்ததுபோல் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு உருவங்களில் பட்டங்களோடு, பதவிகளோடு, கதிரைகளுக்காக, என்று நீண்டு செல்லும் பட்டியல்கள்

தமிழினம் அழிவிலிருந்து உயிர்தெழும் காலமொன்று மலரும். அதுவரை இதுபோன்ற கருத்தியல் பிறழ்வுநிiயும் தொடரும் என்பது உண்மையாயினும், பொறுப்புவாய்ந்த அரசியல் கலப்பற்றோராவது உண்மைகளின் காவலராக நிற்க முடியாவிடினும், பொய்மைத் தோற்றத்தைப் புகழ்ந்துரைக்காதிருக்கலாம் அல்லவா?

Edited by nochchi

ஆயர் நீங்கள் இனி உண்மையைச்சொல்லக்கூடாது... நாங்கள் விடமாட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயர் நீங்கள் இனி உண்மையைச்சொல்லக்கூடாது... நாங்கள் விடமாட்டம்.

ஆயரும் நீங்களும் கிணற்றுக்குள் இருந்து வெளியே வாருங்கள். ஆயருக்கு தேவாலயத்தை சுற்றி நடப்பது தவிர வேறு எதுவும் தெரியாது போல.

பள்ளி மாணவன் கப்பம் கேட்டுக் கொலை. தனிமையில் இருந்த மூதாட்டி கொலை. மாவீரர்களின் நினைவிடங்கள் அழிப்பு. மாநகர சபை காணிகள் சிங்கள வர்த்தகர்களால் பலாத்கார அபகரிப்பு. கொழும்பில் இருந்து சென்றவர் கடத்திக் கொலை. உதவி இன்றி வன்னி மாணவன் தற்கொலை. யாழ்ப்பாணத்தில் 40,000 சிங்களப் படைகள். டக்கிளஸ் குழு தாக்குதல் ஆளும் கட்சி வேட்பாளர் அதிஸ்வசமாக உயிர் பிழைப்பு. வரதராஜப் பெருமாள் சொல்கிறார்.. யாழ்ப்பாணத்தில் இன்னும் அச்ச நிலை தொடர்கிறது. டக்கிளஸ் குழுவின் ஆயுதப் பிரச்சனம் மக்களை அச்சுறுத்துகிறது (அவருக்கு 40,000 சிங்களப் படை நிற்பது கண்ணுக்குத் தெரியல்லை அது வேற விசயம்.) இது எல்லாம் அமைதியின் வெளிப்பாடுகள். ஆயர் மறந்து போன உண்மைகள். :lol::D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.