Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் 1?

Featured Replies

இந்த சமூகச் சாளரம் (சாளரம் என்றால் window, ஆனால் அதை ஒவ்வொரு அறையிலும் வைத்த பின், தம் மனசுள் சாளரங்களை மூடி காற்றைப் புக விட விரும்பா என் சமூகத்திடம் எனக்கென்ன வேலை என்று கேட்குது அறிவு)

என் கேள்வி சின்னது..... மிகச் சின்னது

நனவிலி என்றால் என்ன (sub-conscious / un-conscious) என்றால் என்ன?

1. 12 வயசு இருக்கும், என் கண் முன்னே 36 ஊதிய பிணங்கள் (குருநகர் மீனவர்கள்: கொல்லப்பட்டது மண்டை தீவில் நேவியால்)..அதை 10 செக்கன் கூட பார்திருக்க மாட்டன். ஆனால் அவ்வளவு உடல்களின் அத்தனை அடையாளங்களையும் எப்படி என் மனம் cover பண்ணியது? அழும் அவர்களின் உறவுகளின் அழுகை கூட இதை எழுதும் போது மனசுக்குள் வருகின்றது.. இது எப்படி? Garbage என்று மனசு ஒதுக்கிய ஒரு விடயம், 26 வருடம் பின்பும் இன்று நடந்தவை போல் கனவில் வருவது ஏன்? மூளை என்றால் என்ன / மனசு என்றால் என்ன?

Edited by நிழலி

கலைச்சொற்கள் - Technical Termsக்கு அப்பால.. உங்கட தரவை பார்த்தால்.. என்னால சொல்லக்கூடியது;

சில உறுத்தல்கள் - Triggers வாழ்க்கையில இருக்கிறது நல்லது என்று நினைக்கிறன். உங்களுக்கு கிடைக்கிற கசப்பான அனுபவங்களை சில விசயங்களை உங்கள் உள்ளை நினைவுபடுத்துறதுக்கு சாதகமான வகையில பயன்படுத்தலாம் என்று நினைக்கிறன். உதாரணத்துக்கு.. இப்பிடியான நினைவுகள் அடிக்கடி வருகிறதால.. அது உங்களை ஓர் கவிஞனாக மாற்றி இருக்கலாம். உங்கட சிந்தனைகள் சிறுவயதில இருந்து செழுமைப்படுத்தப்படுகிறதுக்கு இப்பிடியான உறுத்தல்கள் உதவி இருக்கலாம்.

நான் முந்தி பாடசாலை போகேக்க ஒவ்வொருநாளும் தெருவில பிணம் கிடக்கும். ஒருநாள் ஒரு இளைஞனிண்ட பிணம் இருந்திச்சிது. தலையில சூடு. பிணம் ஒருபக்கமாய் சரிஞ்சு இருந்திச்சிது. முதுகில பின்பக்கத்தால் சன்னம் துளைச்சு பின்பக்க சதை பிஞ்சு தொங்கிக்கொண்டு இருந்திச்சிது. நான் பேசாமல் பாடசாலை போயிட்டன். திரும்ப வீட்ட வந்தபிறகுதான் தெரியும் அது என்னோட முந்தி பாடசாலைக்கு ஒன்றாக வருகின்ற நண்பன் ஒருவனிண்ட உடல் எண்டு. கேட்க அதிர்ச்சியாய் இருந்திச்சிது.

ஒருவிதத்தில பார்த்தால்.. இந்த நினைவுகள் வரேக்க என்னடா வாழ்க்கை என்று இருக்கும். ஆனால், மறுபுறம்.. இப்பிடியான அக்கிரமங்கள் நடக்காமல் இருக்க நாங்கள் ஏதாவது செய்யவேணும் எண்டு ஓர் உறுத்தல் எங்களுக்கை இருக்கும்.

இன்று யாழுக்கை நான் தாயக விசயம் சம்மந்தமாய் கருத்துக்கள் எழுதேக்க இப்பிடியான உறுத்தல்கள் எண்ட சிந்தனைகள் சரியான வகையில பிரயோகிக்கபடுறதுக்கு பின்புலமாய் இருக்கிது.

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

கலைச்சொற்கள் - Technical Termsக்கு அப்பால.. உங்கட தரவை பார்த்தால்.. என்னால சொல்லக்கூடியது;

சில உறுத்தல்கள் - Triggers வாழ்க்கையில இருக்கிறது நல்லது என்று நினைக்கிறன். உங்களுக்கு கிடைக்கிற கசப்பான அனுபவங்களை சில விசயங்களை உங்கள் உள்ளை நினைவுபடுத்துறதுக்கு சாதகமான வகையில பயன்படுத்தலாம் என்று நினைக்கிறன். உதாரணத்துக்கு.. இப்பிடியான நினைவுகள் அடிக்கடி வருகிறதால.. அது உங்களை ஓர் கவிஞனாக மாற்றி இருக்கலாம். உங்கட சிந்தனைகள் சிறுவயதில இருந்து செழுமைப்படுத்தப்படுகிறதுக்கு இப்பிடியான உறுத்தல்கள் உதவி இருக்கலாம்.

நான் முந்தி பாடசாலை போகேக்க ஒவ்வொருநாளும் தெருவில பிணம் கிடக்கும். ஒருநாள் ஒரு இளைஞனிண்ட பிணம் இருந்திச்சிது. தலையில சூடு. பிணம் ஒருபக்கமாய் சரிஞ்சு இருந்திச்சிது. முதுகில பின்பக்கத்தால் சன்னம் துளைச்சு பின்பக்க சதை பிஞ்சு தொங்கிக்கொண்டு இருந்திச்சிது. நான் பேசாமல் பாடசாலை போயிட்டன். திரும்ப வீட்ட வந்தபிறகுதான் தெரியும் அது என்னோட முந்தி பாடசாலைக்கு ஒன்றாக வருகின்ற நண்பன் ஒருவனிண்ட உடல் எண்டு. கேட்க அதிர்ச்சியாய் இருந்திச்சிது.

ஒருவிதத்தில பார்த்தால்.. இந்த நினைவுகள் வரேக்க என்னடா வாழ்க்கை என்று இருக்கும். ஆனால், மறுபுறம்.. இப்பிடியான அக்கிரமங்கள் நடக்காமல் இருக்க நாங்கள் ஏதாவது செய்யவேணும் எண்டு ஓர் உறுத்தல் எங்களுக்கை இருக்கும்.

இன்று யாழுக்கை நான் தாயக விசயம் சம்மந்தமாய் கருத்துக்கள் எழுதேக்க இப்பிடியான உறுத்தல்கள் எண்ட சிந்தனைகள் சரியான வகையில பிரயோகிக்கபடுறதுக்கு பின்புலமாய் இருக்கிது.

நீன்கள் சொல்வது 100% சரியாக இருக்கலாம்... ஆனால் என் கேள்வி மனசுக்கு யார் இதைத் தான் பொத்தி வைச்சிரு, இதை இலகுவாக பார்க்கும் விதமாக வைத்திரு என்று யார் கட்டளை போட்டார்?

அந்த குருநகர் சம்பவத்தின் பின் பல வருடம் கழித்து என் Commerce வாத்தியார் சிவராஜா சேர் என்னுடன் கதைத்து சரியாக 30 செக்கனில் மண்டை சிதறி இலங்கை விமானப் படையின் குண்டுத்தாக்குதலில் செத்துப் போனார். நான் பரியோவான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். அவரின் பின் மண்டை பெரிய ஓட்டையாக திறந்து இருக்கும் போதுதான் அவரின் செத்த உடலைப் பார்த்தேன். மூளையும் அதில் இருந்து வெளியான சில நிணநீர்களும் மண்டை வழியாக வழிந்து யாழ் ஆஸ்பத்ரி வீதிக்கும் புகையிரத நிலையதுக்கும் இடையேயான வீதியில் ஓடிக்கொண்டிருந்தது. அதிர்ச்சி மிகுந்து உடலைப் பார்த்த பின், அவரின் மனைவிக்கு நான் தான் தகவல் சொன்னேன் (அப்ப அவா கர்பமாக இருந்தா என்று சொன்னார்கள்...)

இதெல்லாம் நடந்தது கிட்டத்தட்ட 21 வருடம் முன்

5 வருடம் முன் என் அப்பா செத்த நிகழ்வை விட, இந்த நிகழ்வுகள் எப்படி மிகத் துல்லியமாக எனக்குள் பதிந்து இருந்தன....? அப்பா செத்த பின் அம்மா கதறும் போது, இது சிவராஜா சேரின் மனைவி நான் செய்தி சொல்லும் போது கத்திய கதற்லை விட குறைவுதான் என்று என் மனம் சொல்லியது? அது எப்படி..? ஒரு போதும் மீண்டும் நினைக்காத ஒரு விடயம், எப்படி ஒப்பீடுகளில் வந்து நின்றது? நான் 100% மறந்து விட்டேன் என்ற நினைவு, அப்பாவிற்காக ஐயர் என்னை உரலை இடித்து தேவாரம் பாடும் கேட்கும் போது ஏன் வந்தது?

மனசு Garbage என்று எறியும் ஒரு விடயம், எப்படி எம் மனசுக்குள் நிறைந்து விடுகின்றது? அது எப்படி எம் நனவிலியை நிரப்புகின்றது?

அது அதுக்கு நினைவுகள் வாறநேரம் தன்பாட்டில வந்துபோட்டு போகட்டும். நினைவுகளை ஏன் நீங்கள் உங்கட மூளையில இருந்து அகற்றவேணும் எண்டு நினைக்கிறீங்கள்? எங்களுக்கு விருப்பமான நினைவுகளை மாத்திரம் சேமிச்சு வைக்கிறதுதான் மூளையிண்ட வேலை எண்டால்.. வாழ்க்கை எவ்வளவு ஆபத்து மிகுந்ததாய் இருக்கும் என்று ஒருக்கால் யோசிச்சு பாருங்கோ.

நீங்கள் ஊரை விட்டு வெளிநாடு வந்தபிறகும் இப்பிடி நினைவுகள் அடிக்கடி வந்து உறுத்துகிது என்றால் நீங்கள் அதிகளவு ஊர்விசயங்களை தலையுக்கை போட்டு பிசையுறது காரணமாய் இருக்கலாம். தவிர, நாங்கள் சிறுவயதில இருந்து பலவேறு தரப்புக்களால பல்வேறு கட்டங்களில பல்வேறு நோக்கங்களால மூளைச்சலவை செய்யப்பட்டு இருக்கிறதும் இதற்கு ஓர் காரணமாய் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எதை மறக்க நினைக்கிறமோ அது தான் கனவில் வருமாம்...சில பேருக்கு தங்கட மூன்று வயதில் நடந்தது கூட ஞாபகம் இருக்குமாம்...சில செயல்கள் மூளையில் ஆழமாகப் பதிந்தால் அது அரை செக்கனோ அல்லது ஒரு நிமிடமோ அது நம் மனத்தை விட்டு அகழாது.

ஆனந்தவிகடன் பதிப்பகத்துக்காக சுஜாத்தா அவர்கள் எழுதிய தலைமை செயலகம் எனும் புத்தகம் 1990 களில் வெளி வந்தது... நீங்கள் கேட்ப்பதுக்கான பதில நிச்சயமாக நான் அங்கு படித்தும் உணர்ந்தும் இருக்கிறேன்... ஆனால் கரண கரியங்களை விளக்கி என்னால் சொல்ல விவரித்த விடயங்கள் கோர்வையாக வருகுது இல்லை...

ஆனாலும் கொஞ்சம் மேலோட்டமாக சொல்ல முனைகிறேன்...

இவை எல்லாவற்றையும் சுலபமாக புரிந்து கொள்ள மூளையை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டால் இலகுவாக இருக்கும்..

உங்களுக்கு ஆள்மனம் , மனம் என்பன.. ( மனம் என்பது மூளையின் இயங்கு தொகுதியில் ஒரு பகுதி) இந்த ஆள் மனம் என்பது உங்களின் சேமிக்க பட்ட தரவுகளை கொண்ட memory பகுதியாகும். இந்த memory என்பது நீங்கள் சிறுவயதாக இருக்கும் போது தான் வளர்ச்சி உற்று உங்களுக்கு 20 களில் முழு வளர்ச்சியையும் அடைந்து பின்னர் அழிய தொடங்குகிறது... memory யின் துகள்கள் சிறுக சிறுக அழிந்து போய் உங்களின் 80 களில் உங்களால் பழயவைகளை நினத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு போய் விடுகிறது..

இந்த memory என்பதும் இரண்டாக இருக்கிறது ஒண்று அழியாத memory மற்றயது அழித்து மீள எழுத்தப்படும் memory

நீங்கள் 12 வயதாக இருக்கும் போது நீங்கள் பார்த்த ஒரு நிகழ்ச்சி உங்களின் மூளையின் memory பதியாவன முதலாவது பாதிப்பான நிகழ்வாக இருக்கலாம்.. அதனால் அது உங்களை பொறுத்த வரை மிகவும் அடிக்கடி நினைத்து பார்த்த நிகள்வாகி விட்டும் இருக்கும்... ஆகவே அது அழியாது உங்களின் memory பதிவாகி இருக்கிறது..

இதை எங்களின் முன்னோர்கள் இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்கிறார்கள்...

நினைத்து பாருங்கள் உங்களின் 20 பதுகளின் பின்னர் நடந்த பல சம்பவங்கள் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தவை கூட அடிக்கடி நினைவில் வராது இருக்கும். யாராவது ஞாபகப்படுத்தினால் மட்டுமே உங்களால் நினைக்கவும் முடியும்.

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிகழ்விற்கும் அந்த நிகழ்வை மூளைக்குக் கடத்திய புலனாகிய கண்ணுக்கும் இடையே உள்ள மிக நெருங்கிய தொடர்பாக இருக்கலாம். நீங்கள் ஒருகாட்சியை நிழற்படமாகப் பார்ப்பதற்கும் நேரடியாகப் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. நேரடியாகக் காணும் நிகழ்சிகள் அடுத்த கணமே மூளைக்குச் சென்று ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த தாக்கம் என்பது காணும் காட்சியைப் பொறுத்திருக்கின்றது. வேதனை,மகிழ்ச்சி,விரக்தி,வெறுப்பு,என்று பல விதமான தாக்கங்களை நாம் காணும் நேரடிக்காட்சிகள் எங்கள் மூளையில் பதிந்து விடிகின்றன.

நேரடி அல்லாத காட்சிகள் எங்கள் மூளையைச் சென்றடைவதற்கு சில நொடிகள் அல்லது நிமிடங்கள் தேவைப் படுகின்றது. காரணம் அதன் உண்மைத்தன்மை அதாவது சில நிழற்படக்காட்சிகளை நமது மூளை ஏற்க மறுக்கின்றது.அந்தக் காட்சியை உண்மையா பொய்யா என்று நமது மூளை ஆராய்கின்றது.இந்த இடை வெளிக்குள் அந்த நிழற்படத்தால் ஏற்படும் தாக்கத்தின் வலு குறைந்து விடுகின்றது.

அப்படியான மூளையின் சக்தியால் ஆராயப்படும் பல காட்சிகளின் தாக்கங்கள் நாளடைவில் மூளைக்கு சாதாரணமாகி விடுவதால் குறிப்பிட்ட ஒரு காட்சி மட்டும் மீண்டும் மீண்டும் எம் நினைவில் வர சந்தர்ப்பங்கள் குறைகின்றது.

மூளையின் ஆராய்வு இல்லாமல் நொடியிலும் குறைந்த நேரத்தில் எம் மூளையில் பதிந்து விடும் சில நேரடிக்காட்சிகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் அதிக வலுக்கொண்டிருக்கின்றன. சில சாதாரணமான நிகழ்வுகளை நம் மூளை உணரும் போது அதிகமான தாக்கங்களை ஏற்படுத்திய நிகழ்வுகளும் அந்தச் சாதாரண நிகழ்வுகளுடன் ஒப்பிடப்படுகின்றன.இதனால் தான் அதிகமான தாக்கங்களை ஏற்படுத்திய நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் எம் கண் முன்னே மூளையால் தோற்றுவிக்கப்படுகின்றது என்று நினக்கின்றேன்.

வாத்தியார்

..............

  • 2 weeks later...

இப்படி பல நினைவுகள் எம்மினத்தவர்களுக்குத் தவிர்க்க முடியாதது.

என்னைப் பொறுத்தவரையில் தியானமும் கடவுள் நம்பிக்கையும்தான் என்னுடைய பின் இருபது வயதுகளில் வடிகால்களாக இருந்தன.

இன்று தியானமும் இல்லை. கடவுள் நம்பிக்கையும் சேடம் இழுக்கிறது.

நினைவுகள் அப்படியே தான் இருக்கின்றன....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.