Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும்படை கும்பலே இருளைக் கிழித்து வெளியே!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/phpbb/viewtopic.php?f=33&t=7813

http://www.uktamilnews.com/

இந்த ஆக்கத்தை படிக்கச் செல்லும் உறவுகளே

உங்களோடு ஒரு நிமிடம்……

நடுநிலைமை என்று வெளியுலகுக்குச் சொல்லிக் கொண்டு- தமிழ்த் தேசிய இனத்துக்கு நன்மை தரமுடியாத விடயங்களை உள்ளீர்த்துக் கொள்வதில் எமக்கு உடன்பாடு கிடையாது. அதேவேளை, சமூகத்துக்குச் சொல்ல வேண்டியதை- சொல்லாமல் விடும் தவறையும் நாம் இழைக்க மாட்டோம்.

இன்றைய உலகில் மலிந்து போயுள்ள ஊடக யுத்தத்துக்குள்ளே சிக்கிக் கொள்வதற்கும் நாம் தயாரில்லை.

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் கொடுப்பதே இன்றைய தேவை.

தமிழ் மக்களின் வெளிக் கொணர வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கும் போது- வீண் விவாதங்களில் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்க முடியாது.

ஊடகங்கள் மக்களின் பிரச்சினையை எடுத்துச் சொல்லும்- அவர்களுக்கு சரியான பாதையைச் சுட்டிக்காட்டும் கருவிகளாக இருக்க வேண்டும். ஆனால் அந்தப் பாதை வழியிலான நகர்வும் நடப்பும் தமிழ் மக்களின் விருப்பின்பாலானது. அந்த உரிமையை மறுக்கின்ற போக்கில் எம்மால் உடன்பட முடியாது.

மாறிவரும் உலகுக்கு ஏற்றவாறு- நாமும் புதிய புதிய சிந்தனைகளில்- ஆய்வுகளில் இறங்கும்போது தான் தெளிவு பிறக்கும். சரியான பாதையை இனங்காண முடியும்.

மாற்றுச்சிந்தனை என்று புறக்கணிக்கப்படும் போது தான் கருத்துத் திணிப்பும் இயல்பாகவே உருவாக்கம் பெறுகிறது.

அந்த வகையில் நாம் கீழே குறிப்பிடும் ஆக்கம் உங்களுக்கு விசனத்தை ஏற்படுத்தலாம்..?

ஆனால் ….

எல்லாம் நடந்து முடிந்து நடப்பவை நல்லவையகட்டும் என்று ஆனபின்பும்….

உள்ளிருந்து கொல்லும் வியாதிபடைத்தோரின் வன்மமும் மறைமுக சதிவலைப்பின்னல்களும் துரோகங்களும் தொடரவே செய்கின்றன.

இவ்வாறான இழிசெயல்களை நிறுத்தும்படி ஏன் எவரும் தட்டிக்கேட்கவில்லை?

துணிவில்லையா?

இல்லைப் பயமா?

இல்லை விடுதலை வியாபாரமா?

ஏன் எதற்கு இந்த வன்மம்?

இன்நிலையில் எவரெவரோவெல்லாம் தாயகவிடுதலையை உரிமைகொண்டாடி கொடுமைசெய்யும்போது நாம் மட்டும் உண்மைகளை வெளிக்கொணர காலம் தாழ்த்துவதென்வது ஒரு தவறாகவே உணருகின்றோம்…

எனவே:

வெளியிருந்து கே.பி காட்டிக்கொடுத்து இயக்கத்தை அழித்தது எதிர்வினை வாதமென்றால் உள்ளிருந்தே காஸ்ரோ இயக்கத்தைக் காட்டிக்கொடுத்தா முள்ளிவாய்காலில் முழு இயக்கத்தையும் அழிக்கத் துணிந்தார் என்று நாம் திருப்பிக்கேட்டால்?

[மன்னிக்கவும் இது உங்களுக்கு கோவம் வரும் என்பது எங்களுக்கு தெரியும்]

உங்கள் மனம் எப்படித்துடிக்கிறது என்பதை அடுத்தவனின்மீது குற்றம் சாட்டுவோர் புரிந்துகொண்டால் வேதனையின் வலி புரியும்…..,

ஆனால் நாம் அப்படிக் கேட்க மாட்டோம்.

காரணம்

தாயக விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்த அந்தப் புனிதனின் சத்தியத்தைக் களங்கப்படுதமாட்டோம்.

இந்தக் குற்றச்சாட்டை உங்களிடம் நேரடியாய் முன் வைப்பதற்குக்காரணம்

உருத்திரகுமாரன் உட்பட பலருக்கு எதிரான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் கரும்படை வன்மம், அனைத்துலகத் தொடர்பகத்தின் நேரடியான கட்டுப்பாட்டில் இருந்து இயங்கும் அனைத்துலக தொடர்பகத்தின் வெளியீட்டு பிரிவின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து தான் எல்லோருக்கும் அனுப்பப்படுகிறது

இது எமக்கு வேதனை தருவதனால் தான் இதை இங்கு நேரடியாக குறிப்பிடுவதோடு. மாவீரர் புகழ்பாடும் அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப்பிரிவு இத்தகைய இழிவான காரியங்களில் ஈடுபடுவது வேதனையான ஒன்றே.

இதுபற்றி நாங்கள் உரியவர்களிடம் முறையிட்டோம் அவர்கள் அதற்கு கூறிய கற்பிதங்கள் விசித்திரமானவை.

எங்களுக்கும் பிழையான கருத்தூட்டல்கள் வருகின்றன நாங்கள் அவற்றுக்கு மதிப்பளிப்பதுமில்லை அதை மற்றவர்களுக்கு மறு வினியோகம் செய்வதுமில்லை.

இன்போ தமிழ் இணையம் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளையின் பரப்புரைப்பிரிவின் அதிகார பூர்வத்தளம். நாங்களும் காஸ்ரோ அவர்களின் பொறுப்பின் கீழிருந்து பணிசெய்தவர்கள். எனவே நீங்கள் இவ்வாறான இழிசெயலைச் செய்து, புனிதனான அந்த மாவீரனைக் களங்கப்படுத்துவதை எம்மால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.

ஆகையால்.....? ஒடுக்கப்பட்டோரே ஒடுக்குமுறையாளர்களாய் ஆகிய நிலையில்........?

எங்கள் கருத்தை நேரடியாகவே உரியவர்களிடம் முன்வைக்கின்றோம்

- இன்போதமிழ் குழுமம்-

இனி……

உங்களிடம் நேரடியாகக் கேட்கின்றோம் நாடு கடந்த தமிழீழ அரசை நாசமாக்க எழுந்து விட்ட நாசகாரக் கும்பல்களே உங்கள் உள் நோக்கம் தான் என்ன?

நீவீர் யாருடைய கைக் கூலி ?

தமிழினத்தின் இன்றைய பரிதாப நிலையை, அவசர அவசிய தேவைகளை முதலில் அறிந்து கொள் தெளிந்து கொள் அடுத்த நிலைக்குப் போகத் துணிந்து கொள் !

கரும்புலியாக எங்காயினும் போய் வெடித்துச் சிதறப் போகும் உணர்விருந்தால் அதைச்செய்துகொள்?

அதை உனக்கு செய்யும் துணிவை உன் தொடர்பகத் தளபதிகள் ஊட்டி வழர்க்கவில்லையா?

உண்மைக்காய் உயிர் கொடுத்த தலைவன் பாசறையில் வளர்ந்த்தாய் பறைசாற்றும் உங்கள் பிதற்றல்களுக்கு உது புரியவில்லையா?

அதுவே உன் அறிவுச் சுடரின் ஒளியாக இருக்குமெனில் அதற்கான முழுச் சுதந்திரமும் உனக்கு உண்டு , உடனே முதலில் அதனைச் செய்து காட்டி காவியமாகுங்கள்?

காவாலித்தனமாய் இருந்து கரும்படைக் கழுத்தறுப்புச் செய்து புனிதர் திருவடுயை களங்கப்படுத்தாதீர்.?

யாருடைதோ எடுபிடியாக அடியாளாக இயங்கும் உன்னிடம் கருத்துச் சுதந்திரமும் செயல் வீரமும் பற்றிப் பேசுவதும் அவற்றைப் புரிய வைப்பதும் நாயின் வாலை நிமிர்த்தும் செயல்தான். எனவே அதுபற்றிப் பேசுவதில் பயனில்லை.

ஏதோ தலைவரும் உருத்திரகுமாரனும் பற்றிய பல அந்தரங்க விடையங்கள் தெரிந்தவன் போல் பேசுகிறீரே?

நீவீர் என்ன தலைவரின் அந்தரங்கச் செயலாளரா?

அல்லது அவருக்கே எமனாக முளைத்துக் கடைசிவரை உடனிருந்து காட்டிக் கொடுத்த தமிழனத்தின் துரோகியா?

உன் சொல்லையும் செயலையும் கவனத்தில் கொள்ளும் எவரும் அப்படித்தான் நினைப்பர். எமக்கும் அப்படித் தெரிந்தால் வியப்பில்லையே!

வெளியிருந்து கே.பி காட்டிக்கொடுத்து இயக்கத்தை அழித்தது உன்வாதமென்றால் உள்ளிருந்தே காஸ்ரோ இயக்கத்தைக் காட்டிக்கொடுத்தா முள்ளிவாய்காலில் முழு இயக்கத்தையும் அழிக்கத் துணிந்தார் என்று நாம் திருப்பிக்கேட்டால் ? மன்னிக்கவும் இது உங்களுக்கு கோவம் வரும் என்பது எங்களுக்கு தெரியும் உங்கள் மனம் எப்படித்துடிக்கும் என்பதுவும், ஆனால் நாம் அப்படிக் கேட்க மாட்டோம். காரணம் விடுதலை விடுதலைக்காக வாழ்நாள்முழுவதும் தன்னைஅர்ப்பணித்து அந்தப்புனிதனின் சத்தியத்தைக் களங்கப்படுத்தாதீர் . இந்தக்குற்றச்சாட்டை உங்களிடம் நேரடியாய் முன்வைப்பதற்குக்காரணம் உருத்திரகுமாரன் உட்பட பலருக்கு எதிரான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் கரும்படை வன்மம், அனைத்துலகத் தொடர்பகத்தின் நேரடியான கட்டுப்பாட்டில் இருந்து இயங்கும் அனைத்துலக தொடர்பகத்தின் வெளியீட்டு பிரிவின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து தான் எல்லோருக்கும் அனுப்பப்படுகிறது இது வேதனை தருவதனால் தான் இதை இங்கு நேரடியாக குறிப்பிடுவதோடு. மாவீரர் புகழ்பாடும் அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப்பிரிவு இத்தகைய இழிவான காரியங்களில் ஈடுபடுவது வேதனையான ஒன்றே. இதுபற்றி நாங்கள் உரியவர்களிடம் முறையிட்டோம் அவர்கள் அதற்கு கூறிய கற்பிதங்கள் விசித்திரமானவை. எங்களுக்கும் பிழையான கருத்தூட்டல்கள் வருகின்றன நாங்கள் அவற்றுக்கு மதிப்பளிப்பதுமில்லை அதை மற்றவர்களுக்கு மறு வினியோகம் செய்வதுமில்லை. இன்போதமிழ் இணையம் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளையின் பரப்புரைப்பிரிவின் அதிகார பூர்வ செய்தித்தளம். நாங்களும் காஸ்ரோ அவர்களின் பொறுப்பின்கீழிருந்து பணிசெய்தவர்கள். எனவே நீங்கள் இவ்வாறான இழிசெயலைச் செய்து, புனிதனான அந்த மாவீரனைக் களங்கப்படுத்துவதை எம்மால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.

சரி நீவீர் திரு. உருத்திர குமாரனைப் பற்றி சொன்னது இனியும் சொல்லப் போவதாக மிரட்டுவது அத்தனையும் அரிச்சந்திர வாக்காகவே இருக்கலாம். ஆனால் அந்த அரிச்சந்திரன் யார் என்பதை உம் அருவருப்பான கரும் உருவம் களங்கப் படுத்துகிறதே!

எனவே உங்கள் திருமுகத்தைக் கொஞ்சம் காட்டுங்கள் மக்கள் முன் வாருங்கள் நேரடி விவாதத்துக்கு. நாங்கள் சொல்கின்றோம் நாம் யாரென்று அதனால் தான் துணிவோடு விமர்சனங்களை முன்வைக்கின்றோம். கோழைத்தனமாக ஆய்வு, பின்பு மறுஆய்வு, இன்று சுவிஸ் ஆய்வு என்று வன்மம் செய்யமாட்டோம். உயிருள்ளவரை உண்மைக்காய் பாடுபடுவோம். முடிந்தால் உண்மையை உரைப்போம் வாருங்கள் மக்கள் மன்றுக்கு.

உங்களுக்கு யாழ் நகரபிதா விசுவநாதனைத் தெரிகிறது. அது முதல் யாழில் இடம் பெற்ற இப்பொழுதும் இடம் பெற்றுவரும் துன்ப துயரங்கள் பற்றி ஏதும் தெரியுமா?

அவற்றுக்கு நீவீரும் உம்போன்ற புரட்டுப் போராட்ட வீரர்களும் காட்டும் தீர்வு என்ன?

அதை செய்து காட்டுங்கள் உங்களிடம் உமையும் சத்தியமும் இருந்தால்

உங்கள் பெரிய அறிவை பாராட்டி உன் வழிக்கே மக்கள் திரு. உருத்திர குமாரனின் தலைமையை விடுத்து உன்னோடு வருவர். ஏன்?

அவர்கள் என்ன நாங்களும்தான் செல்லும் வழிதவறாயினும் செஞ்சோற்றுக்கடனுக்காய் வருவோம்…….?

அப்படி வருவதற்கு ஒரு சிங்களவரான வைத்திய கலாநிதி பிரையன் செனவிரத்னா வட்டுக் கோட்டைத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த தமிழரை நோக்கி விடுத்த மூன்று கேள்விகளுக்கான பதிலை தந்து உங்கள் தெய்வீக முக தரிசனத்தையும் மக்களுக்கு காட்ட வேண்டும்!

வட்டுக் கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பு மட்டும் ஈழத் தமிழரின் அரசியல் பயணத்தை முடிவு செய்யாது? என்பதால்?

நாடு கடந்த அரசின் மூலமே எமது விடுதலைப் போராட்டத்தை இன்றைய உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்ல முடியும்.

அதனால்தான் எம் போன்றவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை ஆதரிக்கிறோமே அல்லாது திரு. உருத்திர குமாரன் கூறுவதற்காக அல்ல.

திரு. உருத்திர குமாரனின் சட்ட அறிவும் கல்வித் தகமையும் ஆளுமையும் அர்ப்பணிப்பும் இலட்சியப் பற்றும் உங்களுக்கோ உன்னை வழிநடத்தும் எந்தக் கொம்பனுக்காயினும் இருந்தால் முன்வந்து வழி நடத்துங்கள் உங்களின் பின்னால் வரத் தமிழினம் துணிந்து விடும்.

இனி டாக்டர் பிரையன் செனவிரத்னாவின் வாதத்தின் சாராம்சம் இதோ!

நீங்கள் சிங்கள இனத்துடன் இப்போது உள்ள இரண்டாந்தர அடிமை நிலையில் காலவரையரை இன்றிச் சந்ததி சந்ததியாக வாழச் சம்மதமா?

முட்கம்பி முகாம்களில் வதைபட்டுச் சாகும் மக்களுக்கு நீங்கள் வழங்கும் தீர்வு என்ன?

அரசியல் தீர்வுக்காக காலவரையரை இன்றிக் காத்திருந்து ஒரு அமைதித் தீர்வு கிடைக்கும் என நம்புகிறீர்களா?

உங்களைப் போன்றோரிடம் துப்பாக்கியும் துணிச்சலும் மறு பேச்சுப் பேசுவோரைத் சுட்டுப் போடும் வீரமும் இருக்கலாம்.?

உங்களின் வெத்து வேட்டு வீரத்தை விட விலை மதிப்பற்ற மாவீர மாணிக்கங்களையும் மனித நேயமிக்க மானுடத்தையும் அனைத்துக்கும் உயர்வான தாய் மண்ணையும் தன்மானத்தையும் தமிழினம் இழந்து நிற்கையில் வேண்டாம் இந்த ஐந்தாம் படைத் துரோகத் தனம்.?

இறுதியாக

முஸ்லீம் மக்கள் பற்றிய உங்கள் பொன்னான சிந்தனைகளை ஒரு மூலையில் தூக்கிப் போடுங்கள்.?

உங்களைப் போன்றே 1940களில் இந்தியக் காங்கிரஸ் தலைவர்கள் அன்றைய முஸ்லீம் மக்களினது நியாயமான சந்தேகங்களை கேட்கவோ தீர்க்கவோ முற்படாத காரணத்தால் இன்று வரை பகமையில் இரு நாடுகளும் இந்திய பாக்கிஸ்தானிய மக்கள் மட்டுமன்றி இந்து சமுத்திரப் பிராந்தியமே அழிவுச் சகதியில் சிக்கிக் கிடக்கிறது. இந்திய பிரிவினை பற்றிய அரசியல் வரலாற்றைப் படித்துவிட்டுப் பேசுங்கள்.

அன்று இந்தியத் தலைவர்கள் நடந்த அதே வழியில் தான் இன்று இலங்கைச் சிங்களத் தலைவர்களும் நடந்து நாட்டைக் குட்டிச் சுவராக்கி உள்ளனர். வடக்கு கிழக்கு முஸ்லீம் மக்களின் முழுமையான நம்பிக்கையும் ஆதரவும் இல்லாமல் தமிழீழம் ஒரு போதும் சாத்தியப்படாது.

தமிழீழத்தில் இஸ்லாமிய கிருஸ்தவ மக்கள் இந்துக்களைப் போன்ற உரிரைமகளும் பொறுப்புகளும் பெறத் தகுதியும் உரிமையும் உள்ளவர்கள் என்பதை நீங்களும் உம்போன்ற விடுதலை வீரர்களும் தெரிந்து கொள்வது அவசியம்.

நாம் இன்னமும் காட்டு மிராண்டிகள் நிலையில் இருக்க முடியாது. வீரம் மட்டும் அல்ல விவேகமும் வெற்றிக்கான படிக்கல் தான் என்பதை உணர்ந்து விட்டு ஊருக்கு உபதேசம் செய்ய வாருங்கள்.

"வரலாறு என்றுமே நேர் கோட்டில் பயணிப்பதில்லை" இது எமக்கான எதிர்காலம்

மே18ஆம் திகதிக்குப் பின்னர் தமிழ் தேசியப் போராட்டத்தில் உண்டாகியுள்ள தலைமைத்துவ வெற்றிடம், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதோடு, தமிழர் உரிமைப் போராட்டத்துக்கு எதிரான அவர்களது செயற்பாடுகளும் வலுவாக அதிகரித்து வருகிறது.

அதே வேளை, இந்த தலைமைத்துவ வெற்றிடம் தமிழ் மக்கள் மத்தியில் குழப்ப நிலையையும், விரக்தி மனோ நிலையையும் உருவாக்கி வருகிறது. இது சலிப்பான கருத்துக்களுக்கு வழியேற்படுத்துகிறது.

சலிப்பான மனோ நிலை போரட்டம் ஒன்றிற்கு தேவையான உளவுரணை தகர்ப்பதற்கு வழியேற்படுத்துகிறது.

ஆக்கபூர்வமான சிந்தனை ஓட்டத்திற்கு உரிய இடம் வழங்கப்படாமை இன்றைய தருணத்தில் தமிழ் மக்களை நோக்கிச் சூழ்ந்துள்ள இன்னொரு பின்னடைவு.

பிரபாகரன் என்ற 'வரலாற்றின் பிரசவத்தால்' செய்ய முடியாததை, தமிழர்களின் சக்தியாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் செய்ய முடியாததை இனி யாரால் தான் செய்ய முடியும் என்ற கேள்வியைப் பரவலாகக் கேட்க முடிகிறது.

இந்தக் கேள்வி நியாயமானதும், அதிக பெறுமதியுடையதும் தான்.

ஆனால், தமிழர்களுடைய இராணுவ பலம் வீழ்ச்சியடைந்துள்ளது என்ற காரணத்திற்காக, எமது விடுதலைப் பயணத்தை இடை நடுவில் விட்டுவிடமுடியாது.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல; அது இன்னொரு ஆரம்பத்தின் தொடக்கம். அதனைத் தான், விடுதலைப் புலிகளின் இறுதிக் கட்டச் செயற்பாடுகளும் எடுத்தியம்புகின்றன.

சுமார் முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன்னர், ஆயுதங்களைத் தமிழ் தேசியப் போராட்டத்தின் கவசங்கள் ஆக்கிய விடுதலைப் புலிகள், 2009 மே மாத நடுப்பகுதியில் அதனை மௌனமாக்குகின்றோம் என்று அறிவித்தனர்.

தமிழர் உரிமைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தைக் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ் மக்கள் முன்னெடுப்பதற்கான அடித் தளத்தை விடுதலைப் புலிகள் முள்ளி வாய்க்காலில் உருவாக்கி விட்டிருந்தார்கள். அதற்கு முன்னோடியாக, தமிழ் தேசியப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை எதிர்கால தமிழ் சந்ததியிடம் கையளிப்பதாக 2008 மாவீரர் நாள் உரையில், திரு. பிரபாகரன் அவர்களே குறிப்பிட்டிருந்தார்.

தமிழர் உரிமைப் போரட்டத்தை விசுவாசிக்கின்ற, மாவீரர்களை மதிக்கின்ற மற்றும் இயக்கத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இன்றிருக்கின்ற வரலாற்றுப் பொறுப்பு, தமிழ்த் தேசியப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதாகும்.

எங்களுக்காக நாம் தான் போராட வேண்டும். எமது பலம் தான் எமது வாழ்வை நிர்ணயிக்கும். யாரும் எமக்கான விடுதலையை பெற்றுத் தந்துவிடுவார்கள் என்றெண்ணி மீண்டும் ஒரு தடவை நாம் ஏமாந்து விடக்கூடாது.

தாயகத்தில், எமக்கு சாதகமான நிலை இன்று இல்லாவிட்டாலும், என்றோ ஒரு நாள் அது எமக்கு மீணடும் கைகூடும் என்பதை மனதிற்கொள்க.

ஆனால், நாம் எடுக்கின்ற முயற்சியில் தான் அந்தக் காலக் கனிவு உண்டாகும் என்பதையும் கவனத்திற் கொள்க. ஒரு விடுதலைப் போராட்டம் தனித்து ஆயுத பலத்தில் மட்டும் தங்கியிருக்க முடியாது.

ஒரு அடக்கப்பட்ட இனம் அதன் பலத்தை வெவ்வேறு பரிமாணங்களில் வெளிக்காட்ட முடியும். ஒரு கதவு மூடப்படும் போது இன்னொரு கதவு தன்னியல்பாகத் திறக்கப்படுவதே தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கான பண்பு.

தேக்கமடைந்துள்ள போராட்டச் சக்கரத்தை நகர்த்துவதற்காகப் போட்டிகள், தேவையற்ற விமர்சனங்கள், சுய நலத்தைக் கைவிட்டு விட்டு தேசியம் மீதான பற்றுறுதியோடு நீண்டகால அடிப்படையில் செயற்படுவதற்கு ஒற்றுமைப்படுவோம், உறுதி பூணுவோம்.

ஆகவே, இன்று எமது உளவுரணை வலுப்படுத்தக் கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். போரால் நாம் ஒரு வரலாற்றுப் பேரழிவைச் சந்தித்து நிற்கிறோம் என்பது உண்மை. ஆனால், அதே வேளை, வரலாறு எமக்கு சில சந்தர்ப்பங்களையும் தந்துள்ளது. இதனை நாம் சரிவரப் பயன்படுத்த வேண்டும்.

கிடைக்கும் சந்தர்ப்பங்களின் கடினமான பகுதிகளையே நம்பிக்கையற்றவன் பார்ப்பான். ஆனால், நம்பிக்கையானவனோ, கடினமான பகுதிகளில் கூட சந்தர்ப்பங்களை காணுவான் என்ற சாரப்பட்ட கருத்தை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில் [Winston Churchill] தெரிவித்திருந்தார்.

எமது அடுத்த கட்டப் போராட்டத்தின் நுழைவாயிலாக பின்வரும் விடயங்களை கருத்தில் கொள்ளலாம்.

தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இடையில் மறுசீரமைப்பினை மேற்கொள்ளல்.

. தமிழ் தேசிய ஊடகங்களுக்கிடையில் பொது கொள்கை உருவாக்கம் ஒன்றினை ஏற்படுத்துதல்.

. சிறிலங்கா அரசாங்கம் மீதான அழுத்தங்களை உருவாக்குதல் - அதிகரித்தல்

. சிறிலங்கா அரசாங்கத்தின் மனித குலத்திற்கு எதிரான குற்றம் [Crimes Against Humanity] மற்றும் சமாதனத்திற்கு எதிரான குற்றம் [Crimes Against Peace] போன்ற செயற்பாடுகளில் தீவிரமாகச் செயற்பட்டு அவர்களை சர்வதேச ரீதியான குற்றவாளிக் கூண்டிற்குள் கொண்டுவந்து நீதியின் முன்னால் நிறுத்துதல்.

. சிங்கள பேரினவாதிகளுக்கிடையே (சரத் - மகிந்த சகோதரர்கள்) ஏற்பட்டுள்ள பிளவை தமிழ் தேசியப் போராட்டத்திற்கு ஆதரவான வகையில் கையாளுதல்.

. ஒற்றைப் பரிமாணத்திலிருந்து விடுபடும் உலக ஒழுங்கை எமக்கு சாதகமாக பயன்படுத்துதல். உதாரணமாக, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டு வரும் பனிப் போரின் ஒரு கட்டமாக, தாய்வானுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை விவகாரமும், தலாய்லாமாவிற்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்குமிடையில் வெள்மை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பையும் குறிப்பிடலாம். அதே வேளை, சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் பிணைப்பு இறுகி வருகிறது. இது, அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் விரும்பத்தகாத ஒன்று.

தாயகத்தில் சிதவடைந்து போயுள்ள எமது மக்களின் வழ்வாதாரத்தையும், சமூக கட்டுமானங்களையும் வலுப்படுத்தல்.

புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களை வலுப்படுத்துதல்

ஏனைய வெளிநாட்டு சமூக இயக்கங்கள், சிவில் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், ஊடகவியலாளர்கள், ஒருமைப்பாட்டு இயக்கங்களோடு வலையமைப்பை உருவாக்கி ஆரோக்கியமான உறவைப் பேணுதல்.

தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்துக்குச் சாதமான முறையில் அமையக் கூடிய கற்கை நெறிகள், ஆய்வு மன்றங்களை உருவாக்குதல்

மேற் போன்ற, காலத்துக்கு தேவையான, எத்தனையோ பணிகள் எம் முன்னே விரிந்து கிடக்கிறன. இன்று, தமிழர் உரிமையை வென்றெடுக்க விரும்புவோர் சிந்திக்க வேண்டியதும், செயற்பட வேண்டியதும் இவ்வாறான பணிகளே.

வரலாறு என்பது என்றுமே ஒரே கோட்டில் பயணிப்பதில்லை.

பிரபாகரன் வழி நில்லு

_________________

சின்ன பாம்பென்றாலும் பெரிய தடியால் அடி

ethiri@hotmail.co.uk

கறுப்பு என்ற பெயரில் இயங்குவது விடுதலைப்போரின் கரும் புள்ளிகள்.மாவீரச் செல்வங்களின் ஈகத்தை விற்றுப் பிழைக்கும் மனித மிருகங்கள்

கறுப்பு நாய்கள், குரைக்கப் புறப்பட்டுவிட்டன. நாடுகடந்த அரசுபற்றிப பேச்சுக்கள் தொடங்கப்பட்ட உடனேயே, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தார் தேர்தலுக்குப் புறப்பட்டுவிட்டனர்.

ஏதோ நல்லதுதானே என்று புலம் பெயர் மக்களும் வாக்களித்தும் விட்டனர். மிஞ்சி நிற்பது நியூசிலாந்தில் வசிக்கும் தமிழர்கள்தான். அவர்களும் அந்த வாக்களிப்பிற்குத் தயாராகின்றார்கள்.

அடுத்தகட்ட நகர்வு எதுவென்ற தெளிவில்லாத இவர்களுக்கு மக்கள் ஏன் வாக்களித்தார்கள்? ஏன் இவர்கள் கறுப்பு நாய்களாக மாறினார்கள். உரிமைகள் என்ற பேச்சிற்கு முன் இவர்களை எதிர்த்துப் போராடுதலே முக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

:D யாரைக் கறுப்பு நாய்கள் என்கிறீர்கள் இறைவன்? வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைச் செய்பவர்களையா?? ஏன்??

வட்டுக்கோட்டைத் தீர்மானமும், நாடுகடந்த தமிழீழ அரசும் ஒன்றுக்கொன்று முரணானவை இல்லை, அவை சிங்களப் பயங்கரவாதத்திற்கெதிராக முன்வைக்கப்பட்ட தமிழரின் ரெட்டை குழல் துப்பாக்கி என்று திரு ருத்திர குமாரன் அவர்களே சொல்லியிருக்கிறாரே?? இதென்ன இப்போது புதுக்கதை ??

நானும் அவுஸ்த்திரேலியக் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டவந்தான், உங்களுக்கு இருக்கும் அதே இனப் பக்தியும், உணர்வும் எனக்குமிருக்கிறது. எழுதுவதை யோசித்து எழுதுங்கள்.

இல்லை இருவருமே வேறுபட்டவர்கள். இரு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தார் தடையாக இருந்தவர்கள். எனக்குப் பெயர் குறிப்பிட்டுக் கூறுவதற்கு விருப்பமில்லை.

தமது நடவடிக்கைகள் முடிவுறும் தருணம்பார்த்து இப்போது நாடுகடந்த அரசுக்கு எதிரான அவதூறுகளைப் பரப்புகின்றார்கள். இளையோர் செயற்பாட்டு அணியினைத் தவறாக வழிப்படுத்துகின்றார்கள். சரியான பெயர் விபரங்களைச் சொல்வதற்கு நான் விரும்பவில்லை.

மக்கள் தெளிவாக இருப்பதுதான் முக்கியம்.

இல்லை இருவருமே வேறுபட்டவர்கள். இரு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தார் தடையாக இருந்தவர்கள். எனக்குப் பெயர் குறிப்பிட்டுக் கூறுவதற்கு விருப்பமில்லை.

தமது நடவடிக்கைகள் முடிவுறும் தருணம்பார்த்து இப்போது நாடுகடந்த அரசுக்கு எதிரான அவதூறுகளைப் பரப்புகின்றார்கள். இளையோர் செயற்பாட்டு அணியினைத் தவறாக வழிப்படுத்துகின்றார்கள். சரியான பெயர் விபரங்களைச் சொல்வதற்கு நான் விரும்பவில்லை.

மக்கள் தெளிவாக இருப்பதுதான் முக்கியம்.

இடையில் புகுந்து நிண்று சிலர் குழப்ப முனைக்கிறார்கள் என்பதுதான் உண்மையானது... மற்றும் படி வட்டுக்கோட்டை தீர்மானம் நடத்துபவர்கள் யார் அவர்களின் நம்பக தன்மை என்பன சில சந்தேகங்களை தோற்று வித்து இருந்தன... ஆனால் இண்று அப்படியான நிலை இல்லை...

2008 ம் ஆண்டு தலவரை சந்தித்த சிலர் புலம்பெயர்ந்த நாட்டில் நடத்த இருந்த வாக்கெடுப்பு 2009 இன்னல்களால் தள்ளிவைக்க பட்டு இருந்து பின்னர் முன் எடுக்க படுகிறது... அதை நாடு கடந்த அரசின் பொருப்பாளர்களும் புரிந்து கொண்டும் இருக்கின்றனர்...

மற்றும் படி இடையில் நடப்பது இலங்கை புலநாய்வு துறையினரின் தூண்டுதலில் வேலை...

Edited by தயா

பல பேர் தமிழ் தேசியத்திலிருந்து விலகி நிற்பதற்கு காரணம் இப்ப காஸ்ரோகுழு எனும் குழுவாம் , கருப்பு படை யாம் , உருத்திர குமார் ஒரு படை, வட்டுக்கோட்டை ஒரு படை, இப்படி பல பேர் கிளம்பிட்டாங்க இதனால் பொதுமக்கள் இவற்றிலிருந்து விலகி நிற்கப்போறாங்க...எங்களுக்கு காஸ்ரோவையும் தெரியாது, கே.பி யையும் தெரியாது, பொட்டம்மானையும் தெரியாது...எனக்கு தெரிந்தது தேசியத்தலைவரையும் , கேணல் ராமையும் தான் ...ஒரு சில போராளிகளை....

ஒரு படை புலத்தில் உறுதியாக இருந்திருந்தால்,

புத்திற்குள், இருந்த நச்சுப்பாம்பெல்லாம், வெளியில் வந்து படமெடுத்தாடி மக்களை விரட்டியிருக்காது.

அதென்ன தேசிய ஊடகம்! ஐயா, இந்த தேசிய ஊடகங்கள் என்ற கதையே வேண்டாம்.

தேசிய ஊடகங்கள் என்று கூறி தேசிய உணர்வுள்ள மக்களின் இருத்தத்தைக் குடித்தது போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

பல பேர் தமிழ் தேசியத்திலிருந்து விலகி நிற்பதற்கு காரணம் இப்ப காஸ்ரோகுழு எனும் குழுவாம் , கருப்பு படை யாம் , உருத்திர குமார் ஒரு படை, வட்டுக்கோட்டை ஒரு படை, இப்படி பல பேர் கிளம்பிட்டாங்க இதனால் பொதுமக்கள் இவற்றிலிருந்து விலகி நிற்கப்போறாங்க...எங்களுக்கு காஸ்ரோவையும் தெரியாது, கே.பி யையும் தெரியாது, பொட்டம்மானையும் தெரியாது...எனக்கு தெரிந்தது தேசியத்தலைவரையும் , கேணல் ராமையும் தான் ...ஒரு சில போராளிகளை....

தெரிந்தவர்கள்....?

தெரியாதவர்கள்......?

எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா.................

பல பேர் தமிழ் தேசியத்திலிருந்து விலகி நிற்பதற்கு காரணம் இப்ப காஸ்ரோகுழு எனும் குழுவாம் , கருப்பு படை யாம் , உருத்திர குமார் ஒரு படை, வட்டுக்கோட்டை ஒரு படை, இப்படி பல பேர் கிளம்பிட்டாங்க இதனால் பொதுமக்கள் இவற்றிலிருந்து விலகி நிற்கப்போறாங்க...எங்களுக்கு காஸ்ரோவையும் தெரியாது, கே.பி யையும் தெரியாது, பொட்டம்மானையும் தெரியாது...எனக்கு தெரிந்தது தேசியத்தலைவரையும் , கேணல் ராமையும் தான் ...ஒரு சில போராளிகளை....

அண்ணை உங்கட பிரதேச வாதத்தையும் பிரிவினையையும் உங்களோடை வைச்சு இருந்தீர்கள் எண்டால் நல்லது. நீங்கள் சொல்வது போல எந்த குழுக்களும் இல்லை. இலங்கை அரசாங்கம் செய்ய நினைப்பதை நீங்கள் செய்ய நிக்காதேங்கோ.

வட்டுக்கோட்டைத் துpர்மான வாக்கெடுப்பு தேர்தல்கள் நாட்டுக்கு நாடு நடத்துவதோடு நின்றுவிடும் என்றுதான் நினைக்கின்றேன். அவர்களின் அடுத்த கட்டவேலைகள் என்னவென்பதில் தெளிவில்லை. ஆனால் நாடுகடந்த அரசாங்கம் அமைப்பவர்களின் செயற்பாடுகளுக்கு ஒரு வரம்புக்குட்பட்ட செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லக் கூடிய திட்டங்களை வைத்தள்ளார்கள்.

இது நீங்கள் வேறு ஒரு இடத்தில் எழுதியது

தராக்கி,

பல பேர் தமிழ் தேசியத்திலிருந்து விலகி நிற்பதற்கு காரணம் இப்ப காஸ்ரோகுழு எனும் குழுவாம் , கருப்பு படை யாம் , உருத்திர குமார் ஒரு படை, வட்டுக்கோட்டை ஒரு படை, இப்படி பல பேர் கிளம்பிட்டாங்க இதனால் பொதுமக்கள் இவற்றிலிருந்து விலகி நிற்கப்போறாங்க...எங்களுக்கு காஸ்ரோவையும் தெரியாது, கே.பி யையும் தெரியாது, பொட்டம்மானையும் தெரியாது...எனக்கு தெரிந்தது தேசியத்தலைவரையும் , கேணல் ராமையும் தான் ...ஒரு சில போராளிகளை....

ஆக வட்டுகோட்டை எதிர்ப்பது என்று இருவரும் வரிந்து கட்டி இறங்கியிருக்கின்றீர்கள் தராக்கி ஆரம்பம் முதலே ஆதராமற்ற செய்திகளையும் புலிகளையும் விமர்சித்து எழுதி வருகின்றார் ஏதோ சம்பந்த விசுவாசத்தில் தான் எழுதி வருகின்றார் என்று பார்த்தால் அது இல்லை என்று இப்போ நீரூபனம் ஆகிவிட்டது

கறுப்பு நாய்கள், குரைக்கப் புறப்பட்டுவிட்டன.

நாடுகடந்த அரசுபற்றிப பேச்சுக்கள் தொடங்கப்பட்ட உடனேயே, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தார் தேர்தலுக்குப் புறப்பட்டுவிட்டனர்.

ஏதோ நல்லதுதானே என்று புலம் பெயர் மக்களும் வாக்களித்தும் விட்டனர். மிஞ்சி நிற்பது நியூசிலாந்தில் வசிக்கும் தமிழர்கள்தான். அவர்களும் அந்த வாக்களிப்பிற்குத் தயாராகின்றார்கள்.

அடுத்தகட்ட நகர்வு எதுவென்ற தெளிவில்லாத இவர்களுக்கு மக்கள் ஏன் வாக்களித்தார்கள்? ஏன் இவர்கள் கறுப்பு நாய்களாக மாறினார்கள். உரிமைகள் என்ற பேச்சிற்கு முன் இவர்களை எதிர்த்துப் போராடுதலே முக்கியமானது.

எதையாவது எதிர்த்து எழுதுவது தான் உங்கள் இருவரதும் விருப்பு என்றால் பரவாயில்லை ஆனால் இறுதியில் புலியில் வந்து நிற்பது தான் உங்கள் சுய அடையாளம்

அவர்களே இணைந்து செயலாற்ற தொடங்கிய பின்பும் மீண்டும் பிரித்தாளும் வாதங்களைத் தொடக்கி வைத்திருக்கும் இருவரும் யாருக்காக மாய்கின்றீர்கள் ?

வெளியிருந்து கே.பி காட்டிக்கொடுத்து இயக்கத்தை அழித்தது எதிர்வினை வாதமென்றால் உள்ளிருந்தே காஸ்ரோ இயக்கத்தைக் காட்டிக்கொடுத்தா முள்ளிவாய்காலில் முழு இயக்கத்தையும் அழிக்கத் துணிந்தார் என்று நாம் திருப்பிக்கேட்டால்?

தவிர கே.பி சரண் அடைந்தாரா இல்லை கைது செய்யப்பட்டரா ? பற்றிய எந்தத் தரவுகளும் உருத்திரகுமாரால் ஏன் ஒருவராலும் உறுதிப்படுத்த முடியவில்லை என்று அவர்களே கூறிய பின்னும் தேசியத் தலைவர், தளபதிகள் முதல் கே.பி வரை முடிவுரை எழுதிய இன்போதமிழ் இப்போது

கேபிக்கு வக்காளத்து வாங்குவதாக ஆனந்தபுரத்தில் மாவீரர் ஆன பிரிகேடியர் கஸ்ரோவை கொச்சைப் படுத்துவது துரோகத்தனம் என்பது ஏன் இவர்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் படவில்லை

ஆக இன்போதமிழும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பதில் எந்த ஜயமில்லை

Edited by tamilsvoice

puthinapalakai.jpg

"தவிர கே.பி சரண் அடைந்தாரா இல்லை கைது செய்யப்பட்டரா ? பற்றிய எந்தத் தரவுகளும் உருத்திரகுமாரால் ஏன் ஒருவராலும் உறுதிப்படுத்த முடியவில்லை என்று அவர்களே கூறிய பின்னும் தேசியத் தலைவர், தளபதிகள் முதல் கே.பி வரை முடிவுரை எழுதிய இன்போதமிழ் இப்போது'

"உருத்திரகுமாரால் ஏன் ஒருவராலும்' அடுத்த கடவுள் வாறார் போல.தமிழ்நாட்டில் பிறக்க வேண்டிய பிறப்புக்கள்.

உங்களுக்கு வேற வேலையில்லை.. :D

நாறி செத்த பிணத்தை புதைக்காம நடுவீட்டுல வைத்து கொண்டு வியாக்கியானம் கதைச்சுகொண்டு திரியினம்.. :D

மக்காள்........ ஈழம் கோகயா.... :D போயே போச்சு.... :lol:

ஏன்? உங்களுக்கு தகுதியில்லை.... நீங்கள் பரஸைட்டுக்கள்..... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்படை கும்பலே

பழசுதானோ இல்லாட்டி புதுசா முளைச்சதோ?

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நாடுகடந்த தமிழீழ அரசு இரண்டுக்கும் ஆதரவளிக்கிறார்கள்.ஒரு சில ஊடகங்களே இரண்டுக்கும் வித்தியாசம் காட்டி பிரிவினையை உண்டாக்கப் பார்க்கின்றன.தயவு செய்து மக்களைக் குழப்பி குழம்பின குட்டையில் மீன் பிடிக்க யாரும் முயலாதீர்கள். எல்லோரும் ஒற்;றுமையாக எமது ஒரே இலட்சியமான தமிழீழத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்வோம்.பாதைகள் வேறு வேறானாலும் பயணத்தின் இறுதி இலக்கு தமிழீழமாக இருக்கட்டும்.

வட்டுக் கோட்டை தீர்மானம் மக்கள் பேரவை அமைத்தல் எல்லாமே பிரான்சிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டன. இதற்கான பின்னணி எங்கிருந்து வருகிறது…..

2008 ம் டக்ளஸ் அடிகளார் பிரான்சிற்கு எழுந்தருளியோது பக்ககோடிகள் பலர் அவரைச் சென்று சந்தித்து ஆசி பெற்றனர். அவர்களில் பொஸ்… என்ற அடியாரும் ஒருவர்.

அந்த பக்தர்கள் சந்திப்பில் உரையாற்றிய டக்ளஸ் சுவாமிகள் ‘ நாட்டில் விரைவில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விடுவார்கள். அதன் பின் நாமே எல்லாம் என்று கூறியதோடு வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் கட்டமைப்புகளை கைப்பற்றுவதற்கு என்ன செய்லாம் என்று பக்த கோடிகளிடம் ஆலோசனை கேட்டார். அப்போது பக்தர் பொஸ்…தமிழீழம் என்ற கோரிக்கை விடுதலைப்புலிகளால் முன் வைக்கப்படவில்லை. ஜனநாயக வழியிலான தமிழ் தலைமைதான் அதை முன் வைத்தது.விடுதலைப்புலிகள் அந்தத் தலைமைகளை அழித்துவிட்டு அதை தமது பயங்கரவாத செயல்களுக்கான தளமாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை நாங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு புரிய வைக்க வேண்டும். மக்களுடைய கையொப்பங்களை பெருமளவுக்கு திரட்டி இந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தனது முதலாவது ஆலோசனையை முன் வைத்தார்.

ஆகா அற்புதம் அதை நாங்கள் செய்வோம் என்று டக்ளஸ் சுவாமிகள் திருவாய் மொழிந்ததும் பக்தர் பொஸ்… தனது இரண்டாவது ஆலோசனையை முன் வைத்தார். அதாவது பிரான்ஸ் உட்பட்ட பல நாடுகளில் தமிழ் சங்கங்கள் பள்ளிக் கூடங்கள் தான் விடுதலைப்புலிகளின் நிர்வாக அமைப்புகளுக்கு பலம் சேர்க்கும் தளமாக இருக்கிறது.அவற்றை நாங்கள் கைப்பற்ற வேண்டும்.இதிலே இங்க இருக்கு தமிழ் பாடசாலைகளில் விடுதலைப்புலிகள் உருவாக்கிய பாடத்திட்டம் தான் படிப்பிக்ப்படுகிறது. அதற்குப் பதிலாக இலங்கையிலுள்ள தமிழ் பாடத்திட்டத்தை இங்கே படிப்பித்தால் அந்தப்பாடத்திட்டத்தின் கீழ்; பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு சிறீலங்கா அரசாங்க கல்வித்திணக்களத்தால் அங்குள்ள பரீடசைக்குரிய அங்காரம் வழக்கப்பட வேண்டும். இதைச் செய்தால் அநேகமான பெற்றோர்களை நாங்கள் எங்கள் பக்கம் இழுத்துவிடலாம்’ என்றார்..

அந்த அனுமதியை என்னால் பெற்றுத் தரமுடியும் ஆனால் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அவ்வளவு சுலபத்தில் வந்து விடுவார்களா? என்று டக்ளஸ் சுவாமிகள் சந்தேகத்தோடு கேட்டார்?

இது சின்ன வேலை. ஏற்கனவே இங்குள்ள சங்கங்கள் பள்ளிக் கூடங்களுக்குள் தலைமைப்பதவிக்கு சண்டை நடந்து கொண்டிருக்கிறது சங்கங்களின் கூட்டமைப்பு என்ற செயற்படாத அமைப்பு என்ற ஒன்று இருக்கிறது. அதல் உள்ள பதவிக் கதிரைகளை கைவிட விருப்பமில்லை. இப்படி நிறையக் குழப்பங்கள் இருக்கின்றன. இவற்றை நாங்கள் பயன் படுத்தினால் இந்தச் சங்கங்களையும் பள்ளிக் கூடங்களையும் உடைத்துவிடலாம் என்று பக்தர் பொஸ் அதற்கு பதிலழித்தார்.

அப்படியா நல்ல விசயம் நான் அதற்கு முழு ஒத்துழைப்பும் தருகிறேன்.நீங்கள் வேலைகளை செய்யுங்கள் என்று டக்ளஸ் சுவாமிகள் ஆசீர்வாதமளித்தார்

அதன் பின்னர் பக்தர் பொஸ் தனது மூன்றாவது பரிந்துரையை முன் வைத்தாhர். ஏல்லோரும் கவனியுங்கள் இது மிக முக்கியமானது…..

நாங்கள் பிரான்சில் இருந்து கொண்டு பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது.ஐரோபப்pய ஒன்றியத்தின் நிர்வாக மையம் பெல்ஜியத் தலைநகர் புறுக்சலில் இருக்கிறது.அங்கே நாங்கள் ஒரு அலுவலகத்தை மைத்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை இரகசியமாகச் செய்ய வேண்டும் என்றார்.

புறுச்சலில் ஒரு அலுவலகம் அமைக்க எவ்வளவு செலவாகும் என்று டக்களஸ் சுவாமிகள் கேட்க நகரின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும் அதற்கு எல்லாச் செலவுமாக ஒரு இலட்சம் யுரோ வரையில் ஆகும் என்றார் பக்தர் பொஸ்….

பிரச்சனையிலலை; அதை நான் அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தருகிறேன். நீங்கள் விடுதலைப்புலிகளின் அமைப்புகளை உடைக்கும் வேலையை செய்யுங்கள் என்று டக்ளஸ் சுவாமிகள் திருவாய் மலர்ந்துவிட்டுச் சென்று விட்டார்.

பக்தர் பொஸ்சினுடைய நடவடிக்கைளில் சந்தேகம் கொண்ட “உண்மை” அடியார்கள் சிலர் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்த போது அவர் கூறிய விடயங்கள் தான் இவை.

இப்போது கணக்குப் போட்டுப் பாருங்கள் எலர்லாம் புரியும

Edited by athiyan

இது நீங்கள் வேறு ஒரு இடத்தில் எழுதியது

எதையாவது எதிர்த்து எழுதுவது தான் உங்கள் இருவரதும் விருப்பு என்றால் பரவாயில்லை ஆனால் இறுதியில் புலியில் வந்து நிற்பது தான் உங்கள் சுய அடையாளம்

அவர்களே இணைந்து செயலாற்ற தொடங்கிய பின்பும் மீண்டும் பிரித்தாளும் வாதங்களைத் தொடக்கி வைத்திருக்கும் இருவரும் யாருக்காக மாய்கின்றீர்கள் ?

எதிர்ப்பதென்று நான் வரிந்து கட்டுகிறேனா? எனக்கும் எப்படி எதிர்ப்பைக் காட்டியிருக்கிறீர்களென்று வெட்டி ஒட்டத் தெரியும். நான் அங்கு எழுதியதும், இங்கு எழுதியதும் ஒன்றுதான். வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற வாக்கெடுப்பை முன்னெடுப்பவர்கள் இளையோர் அமைப்பையும், பழைய ரீ சீ சீ அங்கத்தவர்களையும் ஒன்றிணைத்த நிலையிலேயே நடைபெறுகிறது.

இவர்களை எதிர்ப்பது எனது நிலைப்பாடல்ல. அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதில் அவர்களுக்குத் தெளிவில்லை. இந்தத் தேர்தல் மூலம் உலகிற்கு எமது எண்ணத்தை ஒரு முறை வெளிக்காட்டலாம். அதன்பிறகு என்ன செயல்திட்டமுண்டு என இன்னமும் வெளிப்படுத்தவில்லை.

நியூசிலாந்தில் நடைபெறும் தேர்தலுடன் இந்த நடவடிக்கை முற்றுப் பெறுகிறது. அதன் பிறகு??

அந்தச் செயற்திட்டம் இல்லாமையால்தான், தங்களது இருப்பு புலம்பெயர் மக்களிடம் அந்நியப்பட்டுவிடும் என்ற காரணம்தான் இவர்களை திடீரென தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தது.

இப்போதும் அதே நிலைதான். திம்பு நிலைப்பாட்டை ருத்திரகுமார் முன்னெடுக்க முனைந்த வேளை, அதற்கு எதிராகத்தான் வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வெளித் தோற்றம் எதிர்த்தல் என்பது தெரியாததுபோலிருந்தாலும் அதன் உள்ளீடு இருதுருவங்களாகத்தானிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கான கருத்துக்கணிப்பு விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தில் பிரான்சில் நடத்திய அதேவேளையில் நோர்வேயிலும் நடத்தினர். ஆனால், இதற்கு விடுதலைப் புலிகளிடம் இருந்து பூரண ஆதரவு கிடைக்கவில்லை; இதுதான் உண்மை. அதன்பின்னர் இதன் செயற்பாடுகள் மிகவும் மந்தகதியிலேயே நடைபெற்று வந்தது.

விடுதலைப் புலிகளின் முடிவுக்குப்பின்னர் கே.பி. அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குவதற்கு முடிவு எடுத்து- அதற்கான இணைப்பாளராக உருத்திரகுமாரன் அவர்களை தெரிவு செய்து அறிவித்த பின்னர், காஸ்ரோ அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய அனைத்துலகத் தொடர்பகம்; வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கான மீள் வாக்கெடுப்பு என்றும் தமிழீழ மக்கள் அவை என்றும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு எதிராக தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இதற்குப் பிரதானமாக முண்டுகொடுத்து வருவது தமிழ்நெட் இணையத்தளமும் அனைத்துலகத் தொடர்பகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சங்கதி, பதிவு, தமிழ்க்கதிர், ஈழமுரசு, ஐபிசி, சிரிஆர் ஆகிய ஊடகங்கள்.

இங்கே பிரதானமாக கூறவருவது என்னவெனில், மேற்படி போட்டிகள் ஆரோக்கியமாக இருந்திருந்திருந்தாலாவது கூட பரவாயில்லை. அனைத்துலகத் தொடர்பகத்தினைச் சேர்ந்தவர்கள் தமக்குப் பிடிக்காத அல்லது தமக்கு முரணாக இயங்கிய ஊடகங்களை (இங்கே கூர்ந்து கவனியுங்கள், தமிழ்த் தேசியத்துக்கு முரணாக அல்ல; இவர்களின் ஏதேச்சதிகரமான கொள்கைகளுக்கும் பல மூடிமறைப்புக்களுக்கும் எதிராக இயங்கியவர்களை) மிரட்டி நிறுத்த வைத்ததும் அவர்கள் தொடர்பாக அதாவது தனிப்பட்டவர்களின் அந்தரங்கங்களை வெளியே எழுதி வருவதும் தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருப்பதும் இவர்களின் செயற்பாடுகள்தான்.

புலத்தில் இந்தக் கலாச்சாரத்தினை தொடங்கி வைத்தவர்கள் அனைத்துலகத் தொடர்பகத்தினைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் என்பதனை களத்தில் உள்ள படிப்பாளர்கள் நிதானமாகப் புரிந்து கொள்ளுங்கள். இங்கே எப்படி நான் ஆணித்தரமாக கூறுகின்றேன் என நீங்கள் எண்ணலாம். இவ்வாறான செயற்பாடுகளை இவர்களைத்தவிர வேறு எவரும் செய்ய முடியாது. உருத்திரகுமாரன் அவர்களைப் பற்றி அவதூறாக வந்த கரும்படையின் பிரசுரம் ஈழமுரசு உட்பட அனைத்துலகத் தொடர்பகத்தின் கீழ் இயங்கும் ஊடகங்களில் வெளிவந்திருப்பதில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப்பின்னர் கே.பி. அவர்களுடன் அனைத்துலகத் தொடர்பக செயற்பாட்டாளர்கள் இணைந்து செயற்பட்டிருந்தால் இன்று கே.பி. அவர்கள் சிறிலங்கா அரசிடம் பிடிபட்டு இருந்திருக்க மாட்டார். அவர், தானாகவே சரண் அடைந்தது என்பது எல்லாம் அனைத்துலகத் தொடர்பகத்தினரே கட்டவிழ்த்து விட்டிருக்கும் கதைகளில் ஒன்று என்பதனைப் புரிந்துகொள்ளுங்கள்.

விடுதலைப் புலிகள் தாயகத்தில் இருந்த காலகட்டத்திலும் எதேச்சதிகாரமாக அனைத்துலகத் தொடர்பகத்தினர் நடந்து கொண்டதன் விளைவே முள்ளிவாய்க்கால் நிலை வந்திருக்கின்றது. இதற்கு காலம் ஒருநாள் பதில் தரும். முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அழிவுகளுக்குக் காரணம் தாங்களே என்பதனை மூடிமறைக்கத்தான் மற்றவர்களை துரோகியாகச் சித்தரித்தும் மற்றவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுகின்றனரோ என எண்ணத் தோன்றுகின்றது.

அதேவேளையில் போரின் இறுதிக் காலகட்டப் பகுதியில் புலம்பெயர் மக்களிடம் கடன் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட நிதியைக் களத்துக்கு அனுப்புவதற்கு முன்னதாக முள்ளிவாய்க்காலில் எல்லாமே முடிந்துவிட்டது. அந்த நிதி இவர்களது கைகளில் இருக்கின்றது. நியாயப்படி பார்த்தால் மக்களிடம் அந்த நிதியைத் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும். அதனைக் கொடுக்காமல் தாங்களே வைத்துக் கொள்வதற்காகவே தாயகத்தில் மீண்டும் போர் தொடங்கும் அப்போது இந்த நிதி தேவை என்று இவர்கள் கூறிவரும் காரணங்களில் ஒன்று.

இதில் இன்னொரு வேதனையான விடயம் என்னவென்றால், சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறிலங்கா அரசிடம் கைதாகி இருக்கும் போராளிகளை கொச்சைப்படுத்தி இவர்கள் எழுதியிருப்பதுதான். இவர்கள் தூற்றி எழுதியிருப்பவர்களில் ஆதவன் என்று அழைக்கப்படும் கடாபியும் சேரலாதனும் முக்கியமாக அடங்குவர்.

அனைத்துலகத் தொடர்பக செயற்பாட்டாளர்கள் இவ்வாறான அவதூறு பிரச்சாரங்களை கைவிட்டு ஒரு குடையின் கீழ் வந்தால் சிறிலங்கா அரசு அச்சப்படும். ஆனால், இவர்களின் இவ்வாறான செயற்பாட்டால் அன்றும் இன்றும் என்றும் தேசியத்துக்காக உழைக்கின்றவர்கள் மீது அவதூறு எழுதி- துரோகிப்பட்டம் கட்டுவதன் மூலம் சிறிலங்கா அரசின் புலனாய்வுத்துறைக்கு இவர்களே தகவல்கள் கொடுப்பவர்களாக மாறி வருகின்றனர்.

இங்கே சிறிலங்கா அரசிடம் விலை போய் இருப்பது என்னவோ அனைத்துலக செயற்பாட்டாளர்கள்தான் என்பதனை இனியும் யாரும் மூடி மறைக்க முடியாது.

இவ்வாறு செய்வதன் மூலம் தமிழீழத் தாயகக் கனவுடன் வீரச்சாவடைந்த 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களை அனைத்துலக தொடர்பக செயற்பாட்டாளர்களே கொச்சைப்படுத்துகின்றனர் என்பதனை அனைவரும் புரிந்துகொள்ளுங்கள்.

புலம்பெயர் தமிழர்களிடம் சேகரிக்கப்பட்ட நிதி இவர்களின் கைகளில் இருப்பதால் அந்த நிதி ஊடாக தாம் விரும்பியவற்றை செய்ய முனைகின்றனர். இதில் வேதனையான விடயம் என்னவெனில் புலத்தில் உள்ள மக்களை இவர்கள் குழப்பி வைத்துள்ளதுடன் எமக்குச் சார்பாக தற்போது இருக்கக்கூடிய அனைத்துலக சமூகத்தின் பார்வையை எமது பக்கம் திருப்பி தாயகத்தில் உள்ள மக்களை காப்பாற்ற இவர்கள் எள்ளளவும் முயற்சிக்கவில்லை என்பதுதான். அதாவது, முன்னர் விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருந்த காலகட்டத்தில் போராட்டங்கள் நடத்திய இவர்கள், முட்கம்பி வேலிகளுக்குள் இருக்கும் மக்கள் தொடர்பாகவோ அல்லது அந்த மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்பது தொடர்பிலோ எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. இவர்களிடம் தற்போது இருக்கக்கூடிய நிதியினால் அந்த மக்களுக்கு எவ்வளவோ செய்ய முடியும்.

இவர்கள், மக்களுக்கு எதுவும் செய்யாதுவிட்டாலும் பரவாயில்லை கடைசி போராளிகளின் குடும்பங்களுக்காவது செய்யலாமே.

மக்களிடம் திரட்டிய நிதியினை வைத்துக்கொண்டு இவர்கள் பல பிரிவினைகளை புலத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அதேவேளையில் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைத்து தாயக மக்களின் பலத்தை சிதைத்ததே இவர்களின் சாதனையாக இருக்கும். இத்துடன் இவர்கள் நின்றுவிடுவார்கள் என எதிர்பார்க்காதீர்கள். இவர்களின் சிதைவு நடவடிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இங்கே விழிப்பாக இருக்க வேண்டியவர்கள் புலத்திலும் தாயகத்திலும் வாழும் மக்களே!

Edited by nirmalan

விடுதலைப் புலிகளின் முடிவுக்குப்பின்னர் கே.பி. அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குவதற்கு முடிவு எடுத்து- அதற்கான இணைப்பாளராக உருத்திரகுமாரன் அவர்களை தெரிவு செய்து அறிவித்த பின்னர்இ காஸ்ரோ அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய அனைத்துலகத் தொடர்பகம்; வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கான மீள் வாக்கெடுப்பு என்றும் தமிழீழ மக்கள் அவை என்றும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு எதிராக தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இதற்குப் பிரதானமாக முண்டுகொடுத்து வருவது தமிழ்நெட் இணையத்தளமும் அனைத்துலகத் தொடர்பகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சங்கதிஇ பதிவுஇ தமிழ்க்கதிர்இ ஈழமுரசுஇ ஐபிசிஇ சிரிஆர் ஆகிய ஊடகங்கள்.

அப்படி என்றால் கேபி அவர்கள் புலத்தில் ஒரு அணியை உருவாக்கிவைத்திருந்தார் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? அல்லது கேபி அவர்கள் 2003 இற்கு முன்பு நிதி, வணிகம் தொடர்பாக பொறுப்பாக இருந்த காலத்தில் அவர் புலத்தில் பொறுப்பாக செயற்பட்ட பொறுப்பளர்கள் தமக்கிடையே ஒரு அணியாக செயற்படுவதற்கு இடம் கொடுத்தன் அறுவடை தான் ஈழத்தமிழ்ச்சமூகத்தின் அழிவா?

Edited by kalaivani

நாங்கள் அறிந்தவரை கேபி எந்த அணியையும் உருவாக்கவில்லை கேபியும் தனக்கென்று அணி இருப்பதாக சொல்லவில்லை.காஸ்ரோ அணி என்று சொல்லிக் கொண்டு வந்த நீங்கள் தான் எல்லா அணிகளையும் உருவாக்கினீர்கள். தமிழ் செல்வனுக்கு எதிராக தாயகத்திலேயே அணிகளை உருவாக்கிவர்களல்லவா நீங்கள்? உங்களுடைய பொறுப்புகளை யெல்லாம் எடுத்து தேசித்தலைவர் மறுபடி கேபியிடம் கொடுத்தபிறது நீங்கள் எப்படி அனைத்துலக தொடர்:பகம் என்று உரிமை கொண்டாட முடியும் அதுசரி புலத்து மக்கள் வியர்வை சிந்தி உழைத்துக் கொடுத்த பணத்தை எல்லாம் தன்வசப்படுத்தி வைத்திருக்கும் உங்கள் சாம்ராட்சிய மன்னர் எங்கே? அவர்தான் சிறீலங்கா அரசுடன் சேர்ந்து இந்த குழப்பங்களுக்கொல்லாம் சூத்திரதாரிhக இருப்பதாக தகவல்கள் வருகின்றனவே.

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலகத் தொடர்பகத்தினர் கே.பி. அவர்களுடன் சேர்ந்து இயங்க மறுத்ததனால்தான் அவர் முன்னர் பணியாற்றியவர்களை இணைத்திருக்கக்கூடும்.

இப்போது அதுவல்ல பிரச்சினை. உள்ளிருந்து கருவறுக்கின்ற செயலை அதாவது தமக்கு பிடிக்காதவர்கள் மீது அவதூறு பரப்புவதும் துரோகப்பட்டம் கொடுப்பதுமான வேலையினை அனைத்துலகத் தொடர்பகத்தினர் செய்வது சரி என வாதிட வருகின்றீர்களா?

காஸ்ரோ அணி என்று சொல்லிக் கொண்டு வந்த நீங்கள் தான் எல்லா அணிகளையும் உருவாக்கினீர்கள்.

நான் தலைவர் பிரபாகரன் அணி,

நான் நீங்கள் குறிப்பிடும் அணிகளுக்குள் அடங்காத தமிழன்.

நீங்கள் ஒரு அணிசார்ந்து கருத்துக்களைப் பதிவு செய்வதாக தெரிகிறது.

Edited by kalaivani

அண்னா எங்களுக்கும் அணி கிடையாது ஒரே தலைவன் ஒரே கொள்கை ஒரே இலக்கு இது தான் எங்கள் கொள்கையும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனநாயக வழியென்று அதுவும் மேற்குலக ஜனநாயக சூழலில இரண்டு மூன்று அணிகள் உருவாவது சாத்தியம்தான். இயல்பும் தான். ஒரு குறிக்கோளுக்காக இரண்டு அணிகள் இருப்பது தவறுமல்ல.

ஆனா அந்த ரண்டு அணியும் தமக்கிடையில் - நாகரீக அரசியல் பண்பை கொண்டிருக்க வேண்டும். ஆனா என்ன நடக்குது.. மொட்டைக் கடிதங்களும் அறிக்கைகளும் அநாமதேய அறிக்கையும் - நோட்டீசும் என்று கேடுகெட்டத் தனமாத்தான் இயங்குகினம்.

உண்மையில அதிகார இருப்பு குறித்த அச்சங்கள்தான் இதற்கு பின்னால் இருக்குமென்று நான் நினைக்கிறன். என்னத்தையோ பண்ணித் தொலைக்கட்டும்.

இங்கை ஆரோ கேட்ட மாதிரி வட்டுகோட்டை தீர்மான வாக்கெடுப்புக்கு பிறகு என்ன என்று எனக்கும் தெரியேல்ல.

நாடு கடந்த அரசு தொடர்பான ஒரு வரைவைப் படிச்சேன். அதில தாயகத்து மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறது - கல்வி தொழில்நுட்ப வளங்களை பகிர்வது என நடைமுறையில இயங்கக்கூடியதான செயற்திட்டங்களும் இருந்தது.

மிக முக்கியமாக நாடுகடந்த அரசுக்கு ஒரு முகமாக உருத்திரகுமாரன் இருக்கிறார். பகிரங்கமாக இருக்கிறார். அதனால இயல்பா ஒரு நம்பகத்தன்மை வருது.

மக்களவையிட சர்வதேச முகம் யார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.