Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசும் அதன் செயற்பாடுகளும் யேர்மனியில் ஆரோக்கியமாக முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடுகடந்த தமிழீழ அரசும் அதன் செயற்பாடுகளும் யேர்மனியில் ஆரோக்கியமாக முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும். அது எந்த எதிர்பார்ப்பும் இன்றித் தாயக விடுதலைக்காகாத் தம்மையீந்தோரது கருவறையை தாயகத்தில் சிங்களமும், புலத்திலே இதுபோன்றவர்களும் துஸ்பிரயோகம் செய்து அவமானப்படுத்தவதாகவே கொள்ள முடியும். நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இதுவரை அது எங்கே நடக்கிறது என்றோ யார் வேட்பாளர்கள் என்றோ அறியமுடியாதுள்ளது. இது தமிழரிடையே பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாக உள்ளது. இவர்கள் யாருக்காக, எவருக்காக வேலை செய்கிறார்கள். தேசியத்திற்காகவெனில் ஏன் எல்லாம் மூடுமந்திரமாக இருக்கிறது. எதையாவது அறிந்து கொள்வோம் என்று நாடுகடந்த அரசினது இணையத்திலும் காணமுடியவில்லை.

இது தொடர்பாக இந்தச் செயற்பாட்டிலுள்ளோரிடம் யாழ் இணையமூடகச் சில கேள்விகள்.

மாவீரரின் ஈகத்தினால் உலகிற்கு கொண்டு வரப்பட்ட விடயத்தை சிறந்த முறையில் ஏன் முன்னெடுத்துச் செல்லவில்லை.

எதற்காக் கோஸ்டிகளாக நிற்கிறீர்கள்?

உங்களது நோக்கம் தான் என்ன?

விடுதலையின் பெயரால் இன்னும் எத்தனை அப்பாவிகளது உயிரோடு விளையாடப் போகின்றீர்கள்?

குழுப் பலப்பரீட்சையில் ஈடுபடுகிறீர்களா?

இது போன்ற தகாத செயற்பாடுகளை அனுமதித்தவாறு நாடுகடந்த அரசுப் பொறுப்பாளர் அமைதியாக ஏன் இருக்கிறார்?

உங்களையும் உங்களது முகத்திரையும் வெகுவிரைவில் கிழிவது தவிர்க்க முடியாது. ஏனெனில் மக்கள் தொடர்ந்தும் ஏமாறமாட்டார்கள்.

இது தொடர்பானோர் உரிய பதிலை தருவீர்களா?

ஏனெனில் யேர்மனியில் பல ஊழல்வாதிகளும் வேட்பாளர்களாக நிற்குமிச் சூழலில் மக்களுக்கு தெளிவான திசையைக் கர்ட வேண்டியது இந்தச் செயற்பாட்டில் இருப்போரது கடமையாகும்.

http://eelaminexile.com/eelam-in-exile/govt-of-tamil-eelam.html

http://eelaminexile.com/eelam-in-exile/germany.html

http://www.eelaminexile.com/eelam-in-exile/govt-of-tamil-eelam/96-ptgte-countrywise-working-groups-announced-.html

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள நெறியாளர் விருப்பமெனில், என்னை யாழகளத்தின் உறுப்புரிமையிலிருந்து நீக்கவும். ஆனால் இது தொடர்பாக என்னுடைய கருத்தைக் கூறவிரும்புகிறேன். நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டினை முறியடிக்கும் விதமாகச் செயற்படுபவர்களை நாம் தமிழன விரோதிகளாகவே கருதவேண்டும். தமிழின விரோதிகளது வரிசையில் இந்தியாவே முதலிடம் வகிக்கின்றது ஆனால் இப்படிப்பட்டவர்களது செயற்பாடுகளால் இவர்களையே முதலிடத்தில் வைத்திருக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை வரவிடக்கூடாது. இவர்கள் யாரெனில் மக்கள் பணத்தினைச்சுரண்டியவர்களே ஆவர். இப்போதும் இவர்கள் கை அரிப்பெடுத்தபடியே காணப்படுகின்றது, ஆகவே தங்கள் தமிழ்மக்கள்மீதான சுரண்டல்கட்கு தடையாக பலமான அரசியல் அமைப்பெதுவும் இருந்திடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகவிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட்டிகோட்டை தீர்மான வாங்கெடுப்பின் போது இருத அலவு கூட பிரசாரம் இல்லை, எங்கே வாங்குபதிவு நிலையங்கள் எப்படி வாக்கலிப்பது, யார் போட்டீ இடுகிறார்கள், அவர்கள் எப்படி பட்டவர்கள் என்பது எல்லாமே மூடு மந்திரமாக இருக்கிறது, நாடுகடந்த அரசிடம் பணமில்லை போல் இருகிறது, பணம் இருபவர்களிடம் மனம் இல்லாமல் இருகிறது போல் இருகிறது, நாடுகடந்த அரசை முடக்க நினைகிறார்களா? அல்லதி இது தமக்கு சம்பந்தமில்லாத வேலை என நினைகிறர்களா? மக்களும் நாட்டுபிரச்சினையில் தமக்கு சம்பந்தமில்லை என நினைத்து விட போகிறார்கள், மக்களை ஒருங்கினைப்பதுதான் கஸ்ரம் ஒருங்கினைந்த மக்களை விட்டுவிட்டால் பின்னர் மீள் ஒருங்கினைப்பது மிகவும் கஸ்ரம். 30வருடங்களும்40000 போராளிகலின் உயிர்கலும் 200000 மக்களின் உயிர்களும் மீனடும் தேவைபடும். தேர்த்லுக்கு இன்னமும் இரண்டு நாட்கள் மட்டுமே இருகின்றன. இலவச GTv இல்லாவிடடால் இது கூட மக்களுக்கு தெரிந்திருக்காது. வா எனும்போது வரவும் வராதே எனும்போது வராது விடவும் மக்கள் ஒன்ரும் மந்தைகள் இல்லை, அவர்கள் தமது வேலைகளை பார்க்க போய்விடுவார்கள். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் நடக்கும் தேர்தலில் ஏழு பேரில் நாலு பேருக்கு எழுந்தமானமாக வாங்குபோடுவது சிறந்ததா? அல்லது யார் எப்படிபட்டவர் என்று ஆராய்ந்து வாக்கு போடுவது சிறந்ததா? வாக்கு போடுபவருக்கு உதவியாக இந்த தலைப்பை திறக்கிறேன், இதில் போட்டியிடும் ஒருவரைதவிர வேறு ஒருவரையும் எனக்கு தெரியாது, எனக்கு தெரிந்த விபரத்தை உங்களுக்கு நான் தருகிறேன் உங்கலுக்கு தெரிந்த விபரத்தை நீங்கள் எனக்கு தந்து உதவவும்.

போட்டி இடுபவர்களின் விபரம் இங்கே இருகிறது

http://www.tgte-germany.de/

http://img227.imageshack.us/img227/1402/mughunthanindralingam.jpg

இதில் போட்டியிடும் இந்திரலிங்கம் முகுந்தனை எனக்கு தெரியும் எம்மோடு பல ஊர்வலங்கள் உண்ணாவிரதங்களில் பங்கு பற்றியவர், தமிழீழ உணர்வாளர், எமது இனபிரச்சினை பற்றி நன்று அறிந்து வைத்திருப்பவர், டொச்சுமொழியில் ஆற்றல் உடையவர், எமது பிரச்சினைகளை உலகிற்கு எடுத்து சொல்ல கூடியவர், இவரை தவிர இன்னமும் மூவரை தெரிவு செய்யு்ம் உரிமை எனக்கு இருப்பதால் மற்றவர்களை பற்றி உங்களுக்கு தெரிந்த வற்றை கூறுங்கள், வாக்களிக்க எனக்கு உதவி்ழாக இருக்கும், தமிழீழ உணர்வாலர்கள் மட்டுமே எனது தெரிவாக அமையும்.

Edited by சித்தன்

ஞாயிற்றுக்கிழமை (02 மே 2010) வாக்களிப்பு எண்டு இருக்கு. ஆனா எந்த இடத்தில போய் வாக்களிக்கிறது எண்டு ஒண்டும் இல்லையே. :D

நீங்கள் எந்தப்பகுதியில இருக்குறீங்கள்?

எந்தப் பகுதியா இருந்தாலும் சில தகுதியள அடிப்படையா வைச்சு வேட்பாளர தேர்ந்தெடுக்கலாம் எண்டது என்ர தனிப்பட்ட கருத்து. நாடு கடந்த அரசாங்கம் (சரியான முறையில், தெளிவான வழியில் இயங்கினால்) என்னைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களுக்குள் செய்யப்படுகிற அரசியல் அல்ல. அது சர்வதேச அரசியல். நான் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் பின்வரும் தகுதிகள வேட்பாளரிட்ட எதிர்பார்ப்பன் (பின்வருவன யேர்மனியை அடிப்படையாகக் கொண்டது):

1. அரசியல் சமூக அறிவு

- தமிழீழ போராட்டம் + சிறிலங்கா அரசியல் பற்றிய தெளிவு/அறிவு

- உலக அரசியல், தெற்காசிய அரசியல் (குறிப்பாக இந்திய அரசியல்) பற்றிய அடிப்படை அறிவு

- யேர்மன் சமூகம் + அரசியல் பற்றிய அடிப்படை அறிவு

- மனித உரிமைகள், ஒடுக்கப்படும்/போராடும் இனங்கள் தொடர்பான அடிப்படை அறிவு

2. மொழியாளுமை/பேச்சாளுமை

- தமிழ் மொழி

- யேர்மன் மொழி (கட்டாயம்)

- ஆங்கிலம் (தெரிந்திருந்தால் சிறப்பு)

3. அரசியல் சமூக ஈடுபாடு/செயற்படு

- யேர்மனிய அரசியல் கட்சிகளுடனான தொடர்பு

- யேர்மனிய/வேற்றின சமூக அமைப்புகளுடனான தொடர்பு

- அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளுடன் சேர்ந்தியங்கிய அனுபவம்

- யேர்மனிய ஊடகங்களுடனான தொடர்பு

- தாயக விடுதலைப் போராட்டம் தொடர்பாக கடந்தகாலங்களில் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்ட அனுபவம்

4. சமூக உறவு

- யேர்மனிய மக்களுடனான குறிப்பாக தாம் வாழும் ஊரில் உள்ள யேர்மனிய மக்களுடன் சுமூக உறவு

- புலம்பெயர் தமிழ் மக்கள்/அவர்களின் பிரச்சனைகள் பற்றிய அடிப்படைப் புரிதல்

5. மேலதிகமாக

- சக மனிதர்களின் கருத்துகளை மதிக்கும் தன்மை

- விமர்சனங்களை பண்போடும், நிதானத்தோடும் எதிர்கொள்ளும் தன்மை

- தெளிவாகவும், உறுதியாகவும் தனது கருத்துகளை வெளிப்படுத்தும் தன்மை

- தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நேர்மையோடு தமிழரின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணிக்கும் தன்மை

இதுகளில எல்லாத்தையும் ஒராளிட்ட எதிர்பார்க்க வேணுமெண்டில்ல. அதேநேரத்தில், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்குத் தேவையான தகுதிகளை காலப்போக்கில் வளர்த்துக்கொள்ளக்கூடிய ஆளுமை உள்ளவராக இருக்கவேண்டும்.

சிலர்பற்றி நான் அறிந்த அல்லது எனக்குத் தெரிந்த தகவல்கள் பற்றியும் + குறித்த தொகுதிகளில் நான் இருந்தால் யாரை தேர்ந்தெடுப்பேன் என்பது தொடர்பாகவும் பின்னர் எழுதுகிறேன்.

..... நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டினை முறியடிக்கும் விதமாகச் செயற்படுபவர்களை நாம் தமிழன விரோதிகளாகவே கருதவேண்டும். தமிழின விரோதிகளது வரிசையில் இந்தியாவே முதலிடம் வகிக்கின்றது.

ஈழத்தில் தமிழினப் படுகொலை நிகழ்த்திய,

30 வருடங்களில் 150,000 க்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த,

இந்தியப் பயங்கரவாதிகளை, சிங்களப் பயங்கரவாதிகளை சர்வதேசத்தின் முன்னிலையில் குற்றவாளிகளாக நிறுத்துவதுடன்,

இந்த பயங்கரவாதிகளை அடியோடு அழித்து,

உலகில் அமைதியும், சமாதானமும், மனிதாபிமானமும் மீண்டும் நிலவ

புலம் பெயர் தமிழ் மக்கள் முழு முயற்சியுடன் இறங்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இளைஞன் நான் Nordrhein-Westfalen இல் இருக்கிறேன் இங்கு நாலு பேரை தெரிவு செய்ய வேண்டும் ஏழு பேர் போட்டி இடுகிறார்கள் இவர்கள்பற்றிய விபரமே தேவைப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சித்தன், உங்கள் தேர்தல் தொகுதியில் வாக்குச் சாவடிகளின் விபரம் ஒன்றும் வெளிவரவில்லை என்று அங்கிருக்கும் எனது நண்பன் கூறினார்.உண்மையா?

வாத்தியார்

...............

பேர்லின் தேர்தல் தொகுதியைத் தவிர்ந்த ஏனைய இடங்களில் தேர்தல் திகதி தள்ளி வைக்கப்பட்டிருக்கு. குறிப்பாக nordrhein-westfalen தொகுதியில் தேர்தல் எதிர்வரும் 16ம் திகதி நடைபெறும் எண்டு அறியமுடியுது. வாக்களிக்கும் இடங்கள் பற்றிய விபரங்கள் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் இன்று என இருக்கும் போது வாக்களிக்கும் இடங்கள் இன்னமும் அறிவிக்கபடாமல் இருப்பதை பார்க்கும்போது ஜேர்மன் செயற்பாட்டளர் மீது பலத்த சந்தேகம் வருகிறது, வாக்களிக்கும் இடம் முதல்நாள் அறிவிக்க படுவதன் மூலம் அதிகமானவர்கள் வாக்களிப்பர்களா? அல்லது முன்னரே அறிவிப்பதன் மூலம் அதிகமானவர்கள் வாக்களிப்பர்களா? இவர்களின் உண்மையான நோக்கம் என்ன, இந்ததேர்தலில் அதிக மக்களை வாக்களிப்பதை முடிந்தவரை தடை செய்து இதை ஒரு செல்லாகாசு ஆக்கும் உள்நோக்கம் கொண்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இளைஞன் நான் Nordrhein-Westfalen இல் இருக்கிறேன் இங்கு நாலு பேரை தெரிவு செய்ய வேண்டும் ஏழு பேர் போட்டி இடுகிறார்கள் இவர்கள்பற்றிய விபரமே தேவைப்படுகிறது.

உள்ளூர் வாசிகள் உங்கள் தொகுதியில் போட்டியிடவில்லையா ?

தொகுதி மாறி போட்டியிடிபவர்களைப் பற்றி, முன்பே நன்கு அறிந்து வாக்குப் போடுவது அவசியம்.

எந்தப் புத்துக்கை எந்தப் பாம்பு இருக்குமோ தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யேர்மனியில் யாருக்கு வாக்குப் போடக் கூடாது என்பதே முக்கியமானது. ஒரு பட்டியலிடுவதாயின்...

முதலில் அவர்களது சமூக ஈடுபாடும் ஒற்றுமையை கட்டி வளர்ப்போராயும், பதவிமோகமற்ற, நிதிக் கையாடலற்ற, பக்கச் சார்பற்ற, தேசியத்தின் மீது பற்றுக் கொண்ட.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் இன்று என இருக்கும் போது வாக்களிக்கும் இடங்கள் இன்னமும் அறிவிக்கபடாமல் இருப்பதை பார்க்கும்போது ஜேர்மன் செயற்பாட்டளர் மீது பலத்த சந்தேகம் வருகிறது, வாக்களிக்கும் இடம் முதல்நாள் அறிவிக்க படுவதன் மூலம் அதிகமானவர்கள் வாக்களிப்பர்களா? அல்லது முன்னரே அறிவிப்பதன் மூலம் அதிகமானவர்கள் வாக்களிப்பர்களா? இவர்களின் உண்மையான நோக்கம் என்ன, இந்ததேர்தலில் அதிக மக்களை வாக்களிப்பதை முடிந்தவரை தடை செய்து இதை ஒரு செல்லாகாசு ஆக்கும் உள்நோக்கம் கொண்டதா?

இதே கேள்வியை நான் கேட்டு ஒரு திரியை(29.04.10) தொடங்கியிருந்தேன். ஆனால் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் நடந்தது என்ன? யாருக்காகத் தேர்தல். தமக்கு வேண்டியோருக்கா? தமிழினத்துக்காகவா?

மாவீரரின் பெயரால் அவர்கள் சிந்திய குருதியின் பெயரால் புல்லுருவிகளை அனுமதித்தலாகாது. வாக்காளர்களுக்கு நீங்கள் வாழும் பகுதியில் கேட்போர் பற்றிய தகவல்களை இந்தத் திரியில் இணைத்துச் சரியான நபர்களை இனம் காண்பது அவசியமானது. இன்று பலர் தேசியத்தின்பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்ற முனைவதைக் காணக் கூடியதாக உள்ளது.

Edited by Valukkiyaru

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுவாக இவர்களை இணைத்துள்ளேயேனயன்றி முழுமையாக ஆய்ந்தறிந்து முடிவு செய்ய வேண்டியது வாக்காளர்களே........

nkt.jpg

படத்தில் இருப்பவர்கள் முறையே ..........

திரு பரமு ஆனந்தசிங்கம் - திரு ஜீவன் அருணாசலம் - திரு ஆனந்தர் பூபதி பாலவடிவேற்கரசன்

செல்வி பிரியதர்சினி மனோகரன் - திரு நடராசா இராஜேந்திரா - திரு செல்வரட்ணம் இரத்தினரூபன்

Edited by Valukkiyaru

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஞாயிற்றுக்கிழமை (02 மே 2010) வாக்களிப்பு எண்டு இருக்கு. ஆனா எந்த இடத்தில போய் வாக்களிக்கிறது எண்டு ஒண்டும் இல்லையே. :rolleyes:

நீங்கள் எந்தப்பகுதியில இருக்குறீங்கள்?

எந்தப் பகுதியா இருந்தாலும் சில தகுதியள அடிப்படையா வைச்சு வேட்பாளர தேர்ந்தெடுக்கலாம் எண்டது என்ர தனிப்பட்ட கருத்து. நாடு கடந்த அரசாங்கம் (சரியான முறையில், தெளிவான வழியில் இயங்கினால்) என்னைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களுக்குள் செய்யப்படுகிற அரசியல் அல்ல. அது சர்வதேச அரசியல். நான் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் பின்வரும் தகுதிகள வேட்பாளரிட்ட எதிர்பார்ப்பன் (பின்வருவன யேர்மனியை அடிப்படையாகக் கொண்டது):

1. அரசியல் சமூக அறிவு

- தமிழீழ போராட்டம் + சிறிலங்கா அரசியல் பற்றிய தெளிவு/அறிவு

- உலக அரசியல், தெற்காசிய அரசியல் (குறிப்பாக இந்திய அரசியல்) பற்றிய அடிப்படை அறிவு

- யேர்மன் சமூகம் + அரசியல் பற்றிய அடிப்படை அறிவு

- மனித உரிமைகள், ஒடுக்கப்படும்/போராடும் இனங்கள் தொடர்பான அடிப்படை அறிவு

2. மொழியாளுமை/பேச்சாளுமை

- தமிழ் மொழி

- யேர்மன் மொழி (கட்டாயம்)

- ஆங்கிலம் (தெரிந்திருந்தால் சிறப்பு)

3. அரசியல் சமூக ஈடுபாடு/செயற்படு

- யேர்மனிய அரசியல் கட்சிகளுடனான தொடர்பு

- யேர்மனிய/வேற்றின சமூக அமைப்புகளுடனான தொடர்பு

- அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளுடன் சேர்ந்தியங்கிய அனுபவம்

- யேர்மனிய ஊடகங்களுடனான தொடர்பு

- தாயக விடுதலைப் போராட்டம் தொடர்பாக கடந்தகாலங்களில் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்ட அனுபவம்

4. சமூக உறவு

- யேர்மனிய மக்களுடனான குறிப்பாக தாம் வாழும் ஊரில் உள்ள யேர்மனிய மக்களுடன் சுமூக உறவு

- புலம்பெயர் தமிழ் மக்கள்/அவர்களின் பிரச்சனைகள் பற்றிய அடிப்படைப் புரிதல்

5. மேலதிகமாக

- சக மனிதர்களின் கருத்துகளை மதிக்கும் தன்மை

- விமர்சனங்களை பண்போடும், நிதானத்தோடும் எதிர்கொள்ளும் தன்மை

- தெளிவாகவும், உறுதியாகவும் தனது கருத்துகளை வெளிப்படுத்தும் தன்மை

- தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நேர்மையோடு தமிழரின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணிக்கும் தன்மை

இதுகளில எல்லாத்தையும் ஒராளிட்ட எதிர்பார்க்க வேணுமெண்டில்ல. அதேநேரத்தில், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்குத் தேவையான தகுதிகளை காலப்போக்கில் வளர்த்துக்கொள்ளக்கூடிய ஆளுமை உள்ளவராக இருக்கவேண்டும்.

சிலர்பற்றி நான் அறிந்த அல்லது எனக்குத் தெரிந்த தகவல்கள் பற்றியும் + குறித்த தொகுதிகளில் நான் இருந்தால் யாரை தேர்ந்தெடுப்பேன் என்பது தொடர்பாகவும் பின்னர் எழுதுகிறேன்.

இளைஞனுக்குப் பாராட்டுகள்.

நீங்கள் பட்டடியலிட்ட தகுதிகள் இல்லாதோரும் நிற்கிறார்கள் என்பதே உண்மையானது. எனவே வேட்பாளரது கடந்தகாலச் செயற்பாடுகள் தொடர்பிலான முழுமையான தகவலை அவர்கள் வெளியிட வேண்டும். அல்லது அறிந்தவர்கள் வெளியிட வேண்டும்.

தகவல்கிடைத்தால் எழுதவே உத்தேசித்துள்ளேன். குறிப்பாக தென்மாநிலத்தில் உள்ள வேட்பாளர்களது....

வழுக்கியாறு அவர்களே,

வேட்பாளர்கள் பற்றிய விமர்சனமானது அவர்களதுசெயற்பாடுகளை குழப்புவதாக அமையாதா? இதனால் என்ன லாபமுண்டு.

ஏன் இதனது ஏற்பாட்டாளர்கள் தெளிளிவான விபரங்களை அறிவிக்காதுள்ளனர்.

நீங்களும் பக்கச்சார்பாகவே சிலரது அறிமுகங்களை இணைத்துள்ளீர்கள். இது சரியானதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழுக்கியாறு அவர்களே,

வேட்பாளர்கள் பற்றிய விமர்சனமானது அவர்களதுசெயற்பாடுகளை குழப்புவதாக அமையாதா? இதனால் என்ன லாபமுண்டு.

ஏன் இதனது ஏற்பாட்டாளர்கள் தெளிளிவான விபரங்களை அறிவிக்காதுள்ளனர்.

நீங்களும் பக்கச்சார்பாகவே சிலரது அறிமுகங்களை இணைத்துள்ளீர்கள். இது சரியானதா?

நொச்சியவர்களே,

மேலும் சில வேட்பாளர்கள்....

050410003.jpg

நன்றி - சங்கதி இணையம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேட்பாளர்களை ஒரே பார்வையில் நோக்க.......

http://www.tgte-germany.de/candidate.php

நோக்கியபின் தெளிவாக முடிவெடுக்க......

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க எதிரியைவிட எம்மவரே வேகம் காட்டுகின்றனர்................. எச்சரிக்கையாகத் தமிழர்கள் செயற்பட வேண்டியது அவசியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக மக்களுக்காக உழைப்பவருக்கு வாக்களியுங்கள். இளைஞனின் நிரலின் படி யாரும் அடங்கவில்லை. மே.தகு. பிரபாகரன் கூட.

படித்த வரதராஜ பெருமாள் பற்றி யாவரும் அறிந்ததே.

படிப்பை பற்றி நான் எங்கும் குறிப்பிடவில்லை நுனாவிலான். மக்களுக்காக, தன்ர சமூகத்தின்ர விடுதலைக்காக சர்வதேச மட்டத்தில ஆக்கபூர்வமாக செயற்பட விரும்புறவைக்கு சமூகத்தின்ர பிரச்சனைகள் பற்றின அறிவு இருக்கவேணும் எண்டுதான் குறிப்பிட்டிருக்கிறன். வெறுமனே மேம்போக்காக எங்கட பிரச்சனையை புரிஞ்சு வைச்சிருக்கிறவையால (உதாரணமாக தமிழனுக்கும் சிங்களவனுக்கும் சண்டை - தமிழ் பெண்கள "கற் பழிக்கிறாங்கள்" எண்ட அளவில பிரச்சனைய சிந்திக்கிறவையால) ஆக்கபூர்வமாக சர்வதேச அளவில் எதனையும் செய்யமுடியாது. சில அடிப்படைத் தகுதிகள் தேவை - அது இல்லாட்டியும் காலப்போக்கில வளர்த்துக்கொள்ளுற ஆளுமையாவது வேணும். நீங்கள் குறிப்பிட்டது போல "மக்களுக்காக உழைக்கிறவர்களாக இருக்க வேணும்" எண்டது கட்டாயமாக அடிப்படைத்தகுதியாக இருக்கவேணும். அப்படி "மக்களுக்காக உழைப்பவர்கள்" அந்த மக்களின் பிரச்சனையை சர்வதேச தளத்துக்கு எடுத்துச் செல்லுறதுக்கும், அந்த மக்களின் பிரச்சனை தொடர்பாக சர்வதேச சமூகத்தை ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்கவைக்கிறதுக்கும் நான் முன்னர் குறிப்பிட்ட சில அடிப்படை அறிவாவது வேணுந்தானே? - :D

இன்னொண்டு: பிரபாகரன் படிக்கல எண்ட ஒரு பொதுவான தவறான கருத்த வளர்க்கிறது தவறான போக்காகவே படுது. பள்ளிக் கல்வியைத் தான் இடைநிறுத்தினவர். மற்றும்படி தனக்கு தேவையானத தேடிப் படிக்கிற ஆளுமை கொண்டவர் பிரபாகரன். குறிப்பிட்ட துறைகளில் தன்ர அறிவை விரிவுபடுத்தியிருக்கிறார். எல்லாரும் பதிவு செய்ய விரும்புற "பிரபாரகன் படிக்கல" எண்ட கருத்த பொதுக்கருத்தாக்கிறது தவறான முன்னுதாரணமாக போய் முடியும்.

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பை பற்றி நான் எங்கும் குறிப்பிடவில்லை நுனாவிலான். மக்களுக்காக, தன்ர சமூகத்தின்ர விடுதலைக்காக சர்வதேச மட்டத்தில ஆக்கபூர்வமாக செயற்பட விரும்புறவைக்கு சமூகத்தின்ர பிரச்சனைகள் பற்றின அறிவு இருக்கவேணும் எண்டுதான் குறிப்பிட்டிருக்கிறன். வெறுமனே மேம்போக்காக எங்கட பிரச்சனையை புரிஞ்சு வைச்சிருக்கிறவையால (உதாரணமாக தமிழனுக்கும் சிங்களவனுக்கும் சண்டை - தமிழ் பெண்கள "கற் பழிக்கிறாங்கள்" எண்ட அளவில பிரச்சனைய சிந்திக்கிறவையால) ஆக்கபூர்வமாக சர்வதேச அளவில் எதனையும் செய்யமுடியாது. சில அடிப்படைத் தகுதிகள் தேவை - அது இல்லாட்டியும் காலப்போக்கில வளர்த்துக்கொள்ளுற ஆளுமையாவது வேணும். நீங்கள் குறிப்பிட்டது போல "மக்களுக்காக உழைக்கிறவர்களாக இருக்க வேணும்" எண்டது கட்டாயமாக அடிப்படைத்தகுதியாக இருக்கவேணும். அப்படி "மக்களுக்காக உழைப்பவர்கள்" அந்த மக்களின் பிரச்சனையை சர்வதேச தளத்துக்கு எடுத்துச் செல்லுறதுக்கும், அந்த மக்களின் பிரச்சனை தொடர்பாக சர்வதேச சமூகத்தை ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்கவைக்கிறதுக்கும் நான் முன்னர் குறிப்பிட்ட சில அடிப்படை அறிவாவது வேணுந்தானே? - :)

இன்னொண்டு: பிரபாகரன் படிக்கல எண்ட ஒரு பொதுவான தவறான கருத்த வளர்க்கிறது தவறான போக்காகவே படுது. பள்ளிக் கல்வியைத் தான் இடைநிறுத்தினவர். மற்றும்படி தனக்கு தேவையானத தேடிப் படிக்கிற ஆளுமை கொண்டவர் பிரபாகரன். குறிப்பிட்ட துறைகளில் தன்ர அறிவை விரிவுபடுத்தியிருக்கிறார். எல்லாரும் பதிவு செய்ய விரும்புற "பிரபாரகன் படிக்கல" எண்ட கருத்த பொதுக்கருத்தாக்கிறது தவறான முன்னுதாரணமாக போய் முடியும்.

இளைஞனின் சுட்டுகை ஏற்புடையதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
obenw.png

பிரியதர்சினி மனோகரன்

தெற்கு யேர்மனி பகுதியில் (Baden-Württemberg, Bayern, Hessen, Rheinland-Pfalz & Saarland) போட்டியிடும் வேட்பாளர்களில் பிரியதர்சினி மனோகரன் குறிப்பிடத்தக்கவர்.

priyam.jpg

21 வயது இளைஞி/மாணவியான இவர் யெர்மன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவருகிறார். யெர்மனிய மக்களுக்கு, யெர்மனிய ஊடகங்களுக்கு, யெர்மனிய அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு ஈழத் தமிழர்களின் பிரச்சனையை தெரியப்படுத்துகிற முயற்சிகள் பலவற்றில் ஈடுபட்டிருக்கிறார் - ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். யெர்மன் அரசியலில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். யெர்மனியின் spd கட்சியில் இணைந்து செயற்திறனோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். துடிப்பும், தமிழீழம் மீதான ஆழமான பற்றும், மனித நேயமும் கொண்ட இவர் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான மிகச் சிறந்த பொருத்தமான பிரதிநிதியாக இருப்பார் என்பது என்னுடைய கருத்து.

கடந்த ஆண்டு இதே காலப் பகுதிகளில் (april - may) நான் நேரில் கண்ட அனுபவம்: பொதுவாக படித்த இளைஞர்கள் அல்லது பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிற இளைஞர்கள் தம்மை ஏதோ வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவர்களாக கருதிக்கொண்டு ஊர்வலங்களிலோ, போராட்டங்களிலோ "கோர்ட் சூட்டோடும்", கையில் பதாகை பிடிக்காமல் ஒதுங்கியும், கோசம் போடுவதற்கு தயங்கியும் நிற்பதைக் கண்டிருக்கிறேன். "You know we are high educated people - we don't like this பட்டிக்காட்டுத்தனம்" என்ற கணக்காக அவர்களின் மனநிலை இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால், குறித்த இளைஞி எந்த இடத்தில் எப்படி செயற்படவேண்டும் என்கிற உணர்வோடும் தெளிவோடும் செயற்பட்டதை நேரில் கண்டிருக்கிறேன். ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தில் யெர்மன் காவற்துறையிரின் தடை ஏற்பட்ட சூழலில் மிக மதிநுட்பமாக கையாண்டு தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த அனுமதியைப் பெற்றுக்கொண்டவர். மக்களோடு மக்களாக நின்று அன்று முழுதும் மக்களுக்காக உரக்க குரல்கொடுத்துக்கொண்டே நின்றார். இது ஒரு சிறு உதாரணமே.

இன்றைய காலகட்டத்தில், "எமக்கேன் இந்த வம்பு - இனி நாங்கள் எங்கட வேலையைப் பார்ப்பம்" என்று பல இளைஞர்கள் ஒதுங்கி தங்கட வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் உணர்வோடு வெகுண்டெழுந்த இளைய தலைமுறையின் பலர் இன்று எந்த சத்தமும் இல்லாமல் சோர்ந்து போய்க் கிடக்கிறார்கள். ஆனாலும் இந்த இளைஞி காலத்தின் தேவையை உணர்ந்து, தனது கடமையை உணர்ந்து தானாக முன்வந்து இந்தத் தேர்தலில் பங்கெடுக்கிறார். இவரை தேர்ந்தெடுப்பதன் ஊடாக புலம்பெயர்ந்து வாழும் இளந்தலைமுறையினர்க்கு தமிழீழ அரசியல் சார்ந்து ஆர்வத்தை தூண்டுவதோடு, தமிழீழ மக்களின் விடுதலை சார்ந்து நிற்கவும் செயற்படவும் உந்துதல் அளிக்கமுடியும். ஏனைய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக்க முடியும். தமிழீழ விடுதலைப் போராட்டமானது களத்தில் மட்டுமல்ல - புலத்திலும் தமிழ்ப் பெண்களை புதிய திசை நோக்கி நகர்த்தியிருக்கிறது என்பதை வரலாற்றில் பதிவுசெய்ய முடியும்.

குறித்த தேர்தல் தொகுதியில் நான் இப்போது இருந்திருந்தால் நிச்சயமாக எனது முதல் தேர்வு இவராகத்தான் இருந்திருக்கும். :wub:

சந்திரபாலா கணேசரட்ணம்

மத்திய யேர்மனி பகுதியில் (Nordrhein-Westfalen) போட்டியிடும் வேட்பாளர்களில் சந்திரபாலா கணேசரட்ணம் குறிப்பிடத்தக்கவர்.

sandrapala_ganesaratnam.jpg

இலக்கம் 2

இளவயதில் புலம்பெயர்ந்தவர் இவர். எல்லோருக்குமே தெரியும் யெர்மன் மொழியை கற்றுக்கொள்வது மிகவும் கடினமான விடயம். இருந்தபோதிலும் சாதிக்கவேண்டும் என்ற வெறியோடு யெர்மன் மொழியைக் கற்றுத் தேர்ந்து - அண்மையில் தனது Ing.PhD (முதுமானி பொறியியலாளர்/கலாநிதிப்) பட்டத்தை பெற்றுக்கொண்டார். தனது பல்கலைக்கழகத்தில் சிறந்த முதல் மாணவனாகவும் தெரிவுசெய்யப்பட்டார். அன்போடும், மரியாதையோடும் அனைவரோடும் பழகக்கூடியவர். கடும் முயற்சியாளர். கடந்தகாலங்களில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஈழத்தமிழரின் பிரச்சனைகளை தெரியப்படுத்திய இளைஞர்களில் இவரும் குறிப்பிடத்தக்கவர். யெர்மனிய ஊடகங்களுக்கு தமிழ் மக்களின் போராட்டம் பற்றி தெரியப்படுத்த பல்வேறு முயற்சிகளை (media works) செய்திருக்கிறார். யெர்மன் மொழியில் மாதமொருமுறை வெளியிடப்படும் தமிழீழத் தமிழர்களின் பிரச்சனை தொடர்பான newsletter இல் இவரது உழைப்பும் உண்டு. தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய அறிவோடு, யெர்மன் வரலாறும் அரசியலும் தெரிந்தவர். இளந்தலைமுறையைச் சார்ந்த இவர் - நிச்சயமாக தமிழீழத்துக்காக அயராது உழைப்பார் என்கிற நம்பிக்கை உண்டு. Nordrhein-Westfalen மாநிலத்தில் எனது முதற் தெரிவு இவராகத்தான் இருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.