Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை நாடகம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வீஜிய கலாச்சார அமைப்பும் ஒஸ்லோ குல்த்தூர் ஸ்கூலும் என்னிடம் உலகம் வெப்பமயமாதல் பற்றி நாடகம் ஒன்று எழுதும்படி கோரினர். உலகம் வெப்பமயமாகி உருகி பிரளயம் ஏற்பட்டபின்னர் நிலத்தை தேடி படகுகளில் அலையும் மக்களை அடிப்படையாக வைத்து மறை முகமாக எங்கள் கதையையும் சொல்லும்வகையில் நாடகம் ஒன்று எழுதியிருக்கிறேன்.

நாடத்தில் தமிழ் மாணவர்களும் ஒஸ்லோ பலே பள்ளி நோர்வீஜிய மானவர்களும் ஒஸ்லோ நாட அமைப்புகளைச் சேர்ந்த நோர்வீஜியர்கள் ஆபிரிக்கர்களும் நடிக்கின்றனர். ஆங்கில நோர்வீஜிய கதைச் சுருக்கமும் வசனங்களும் உண்டு.

இறுதி முடிவில் இயற்க்கை அன்னை இரக்கப் பட்டு வெள்ளத்தை உறைய வைக்கிறாள் எல்லோரும் சேர்ந்து பனியை பந்துகளாக்கி விழையாட்டு விழையாட்டாய் மலை முகடுகளுக்கும் துருவங்களுக்கும் எறிகிறார்கள். நிலம் தென்படுவதை குழந்தைகள் கண்டு விடுகின்றன. அவர்கள் மண்விழையாட்டு

நாடகத்தின் தமிழ் வடிவத்தை இயக்க தோழர் பிரளயன் ஒஸ்லோ சென்றிருக்கிறார். மே 20ம் திகதி எனது நாடகத்தின் தமிழ் வடிவம் ஒஸ்லோவின் அதிநவீன மேடையில் அரங்கேறுகிறது. தொடர்ந்து ஆங்கில வடிவம் நோர்வீயிய இயக்குனர்களால் தயாரிக்கப் படும்.

இது எனது முக்கிய பங்களிப்பாகும். மேற்குலகில் இருக்கும் எனது ஆக்கங்களில் ஆர்வம் உள்ளவர்களை நாடகம் பார்க்க ஒஸ்லோ வரும்படி பணிவன்புடன் அழைக்கிறேன்.

நானோ சிரமங்களுடன் தமிழகத்தில் இருக்கிறேன். எப்படியும் வந்து சேருவேன்.

நாடகத்தின் சுருக்கம்

மேல்கருத்து சர்வதேச தன்மையது அடிக்கருத்து எங்களுக்கும் பலஸ்தீனியர்கள் போன்ற எங்களை ஒத்த மக்கள் இன்ங்களுக்கும் பொருந்துவதாக அமைகிறது.

உலகம் வெப்பமாகி பிரளயம் உலகை மூடி விடுகிறது. வெள்ளத்தில் ஆணும் பெண்ணுமாக படகு அகதிகள் நிலத்தைத் தேடி அலைகிறார்கள். படகு அகதிகளில் ஒருவர் பனைமரத்தை பற்றி படகுக்கு வந்தவர் அவருக்கு பெயர் பனை மரத்தான். அதுபோல பலைமரத்தான் தென்னைமரத்தான் ரப்பர்மரத்தான் இவர்களுடன் முஸ்லிம் பாத்திரங்கள். இவர்கள்தான் படகு அகதிகள். படகு அகதிகளின் மைய பாத்திரம் ஆதித்தாய். படகு அகதிகள் எவரஸ்ட் மலைச் சிகரம் வெள்ளத்தில் மூழ்காமல் தீவாக இருக்கும் என்று கருதுகிறார்கள். அவர்களது அலைச்சல் நிலத்தை மீண்டும் கணுகிற கனவாகவும் இருக்கிறது.

படகு அகதிகள் மத்தியில் நிலத்தை தேடுவதில் ஒற்றுமை இருந்தாலும் முரண்பாடுகளும் உள்ளது. ஆதித்தாய் உலகை அசுத்தமாக்கி பனிப் பாளங்களை உருக வைத்து பிரளயத்தை

நீங்கள்தானே ஏற்படுதியது என்று படகு அகதிகளைக் கடிந்து கொள்கிறாள். முதல் காட்ச்சியில் விடியும் போது மலை முகடு தெரிகிறது சந்தோச ஆரவாரம். நான்தான் முதல் கண்டது எனக்குத்தான் அதிக உரிமை என்கிற கூச்சல்களும் எழுகிறது ஆனால் சிறிது நேரத்தில் தாங்கள் கண்ட்து மலைமுகடல்ல முகில்கூட்டம் என்பது தெரியவருகிறது. படகில் விரக்தி அதிகரிக்கிறது

நடுவில் பாடும் மீனை சந்திக்கின்றனர். இயற்கை அன்னை நீங்கள் இமய்யத்தை அடைந்தாலும் பயனில்லை. அங்கும் இதே கதிதான் ஏற்படும் என்கிறாள். இறுதிக் காட்ச்சியில் இயற்கை அன்னை படகு மக்கள்மீது இரக்கம் கொண்டு உதவ முன்வருகிறாள். மண்மீட்க்கப் படுகிறதா எப்படி மீட்க்கப் படுகிறது என்பதுதான் நாடகம்.

எப்பவும் கட்டுப்பாடுகளை மீறி யாழ் நேயர்களுக்கு கதை சொல்லிவிடுவது என் வளக்கம். ஆனாலும் யாழ் நேயர்கள் எனது அழைப்பை ஏற்று நாடகத்தைப் பார்ப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. நாடகத்தை உங்கள் உங்கள் நாடுகளில் தயாரிக்க விரும்புகிறவர்களது தொடர்புகள் வரவேற்க்கப் படுகிறது. visjayapalan@gmail.com

வ.ஐ.ச.ஜெயபாலன்

Executive Summery

The world has become warm and all the glaciers in the mountains and the Arctic have melted. A group of people are floating around in a boat in search of land. The have expected mount Himalayas to be an Island

The people in the boat come from a country rich in nature. They reached the boat by floating on trees; one on a Palmyra-tree, another on a rubber tree, a third a coconut tree.

Suddenly they see a mountain rising from the sea, like an island. They get a hope that this can be a place to resettle. But they become frustrated when the clouds look like mountain started to disperse. Their journey continued with diminishing hope.

However, among themselves they have internal differences. The Primordial Mother is in the boat with them, and blames the others for destroying the world by causing global warming.

On their way they meet Singing fish. Singing fish introduces Mother Sea and Mother Nature to the boat people. Singing fish, Mother Sea and Mother Nature also blame them for increasing green house gas and distorting the world. At last Mother Nature becomes kind and tries to help the boat people by freezing water. Mother Nature asks the boat people to make snow balls and throws ice on the mountain-tops and the Arctic and Antarctica in order to redeem land. In the last scene the boat people also throw snow balls. The play ends with the children having found land and start to play traditional children games.

Edited by poet

நீங்கள் உண்மையில் ஒரு சிறந்த கவிஞர் என்பதை இந்தக் கதை காட்டிநிற்கின்றது.

உங்கள் கலைப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உண்மையில் ஒரு சிறந்த கவிஞர் என்பதை இந்தக் கதை காட்டிநிற்கின்றது.

உங்கள் கலைப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

இங்கே கதை சொல்ல அனுமதி இல்லை. சும்மா ஒரு ஜாடைதான் அர்ஜுண். நாடம் பார்க்க ஒஸ்லோ வருவீங்களா? நீங்களும் யாழ் நண்பர்களும் வந்தால் மகிழ்வேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கதை சொல்ல அனுமதி இல்லை. சும்மா ஒரு ஜாடைதான் அர்ஜுண். நாடம் பார்க்க ஒஸ்லோ வருவீங்களா? நீங்களும் யாழ் நண்பர்களும் வந்தால் மகிழ்வேன்.

கதையின் முடிவை அகற்றிவிட்டேன் நாடகம் அரங்கேறிய பின்னர் எழுதுகிறேன்

வணக்கம்

அருமையானதொரு நாடகமாக அமையும் எனடபதில எள்ளவும் சந்தேகம் இல்லை.

திகதி நேரம் அறியத்தரலாமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவலையாக இருக்கு. முன்னம் யாழ் களத்துக்கு நம் படைப்புகளை அனுப்பினால் வாசகர்கள் பங்கு பற்றுதலும் தொடர்புகளுமாவது கிட்டும். இப்ப அதுவும் இல்லாமல் போய்விட்டது. இலங்கைத் தீவில் தமிழ் கலைஞனாய் வாழுகிற துர் அதிஸ்டம் இதுதான். சிங்கள கலைஞர்களுக்கு கிடைக்கிற வளங்கள் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் பறுவாயில்லை. குறைந்த பட்ச்சம் கிடைத்துவந்த விவாதங்களும் பங்குபற்றுதலும்கூட இல்லாமல் சோச்சே.

மேலே எழுதிய உங்கள் கதை / கவிதை நல்லாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

:):lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராட்டுக்கள். நாடகத்தினை நிச்சயமாக வந்து பார்ப்பேன். உங்கள் இலக்கிய பணி தொடர்ந்தி்ட வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள். நாடகத்தினை நிச்சயமாக வந்து பார்ப்பேன். உங்கள் இலக்கிய பணி தொடர்ந்தி்ட வாழ்த்துக்கள்.

aaaaaaaஆராவமுதனுக்கும் விடலைக்கும் என் அன்பும் நன்றியும். விடலை உங்களுக்கு என் நல்வரவு. பயணச்சீடு காலாவதியாகி தமிழகத்தில் சிக்கிப் போயுள்ளேன் எப்படியும் வருவேன் என்று நம்புகிறேன். வந்தால் சந்திப்போம்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணா! தங்களது ஆக்கங்களை விரும்பிப் படிப்பதுண்டு! தங்களது முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்! :lol:

திகதி நேரம் தந்தால் நன்று

  • கருத்துக்கள உறவுகள்

கவலையாக இருக்கு. முன்னம் யாழ் களத்துக்கு நம் படைப்புகளை அனுப்பினால் வாசகர்கள் பங்கு பற்றுதலும் தொடர்புகளுமாவது கிட்டும். இப்ப அதுவும் இல்லாமல் போய்விட்டது. இலங்கைத் தீவில் தமிழ் கலைஞனாய் வாழுகிற துர் அதிஸ்டம் இதுதான். சிங்கள கலைஞர்களுக்கு கிடைக்கிற வளங்கள் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் பறுவாயில்லை. குறைந்த பட்ச்சம் கிடைத்துவந்த விவாதங்களும் பங்குபற்றுதலும்கூட இல்லாமல் சோச்சே.

காரணம்

விரக்தியின் விழிம்பில் தமிழர்

விதைத்தவை அத்தனையும் விழலாய்

விட்டால் போதும் ஆளை என்றநிலை

விடுதலை விரும்பிகள் விரட்டியடிப்பு

விரும்பாத பல குழுக்கள்

விரிந்த மனமுள்ளோர் மீது தொடர் அழுத்தம்....................................???

விரிந்து கொண்டே செல்லும் எழுத்து.............................???

  • கருத்துக்கள உறவுகள்

கவலையாக இருக்கு. முன்னம் யாழ் களத்துக்கு நம் படைப்புகளை அனுப்பினால் வாசகர்கள் பங்கு பற்றுதலும் தொடர்புகளுமாவது கிட்டும். இப்ப அதுவும் இல்லாமல் போய்விட்டது. இலங்கைத் தீவில் தமிழ் கலைஞனாய் வாழுகிற துர் அதிஸ்டம் இதுதான். சிங்கள கலைஞர்களுக்கு கிடைக்கிற வளங்கள் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் பறுவாயில்லை. குறைந்த பட்ச்சம் கிடைத்துவந்த விவாதங்களும் பங்குபற்றுதலும்கூட இல்லாமல் சோச்சே.

வணக்கம் ஐயா. நலமா. விசுகு அண்ணா சொன்ன காரணம் தான். எல்லோரும் மனதால் சோர்ந்து விட்டோம்.

உங்கள் பயணத்தை தொடர நல்வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விரக்தி அடைவதில் அர்த்தமில்லை. தேர்தல் என்று போனால் குறைந்த சதவீத வாக்களிப்பென்றார் தர்மப்படி மீழ் தேர்தல் நடத்தப் படவேணும். பெருமளவிலான வாக்களிப்பென்றால் முடிவை ஏற்றுக்கொண்டுதர்மப்படி அடுத்த தேர்தல்வரை பணியைத் தொடரவேணும். ஒருபோதும் விரக்தி அடையக்கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.