Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்வதி அம்மா அரசியலும் நமது சந்தேகங்களும்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பார்வதி அம்மாளிடம் இருந்து நிராகரிப்பு செய்தி ஏதும் வரவில்லை - கருணாநிதி

Image018.jpg

சென்னை: இந்தியாவில் சிகிச்சை பெற விருப்பமில்லை என்று பார்வதி அம்மாளிடம் இருந்து நிராகரிப்பு செய்தி ஏதும் வரவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

நிபந்தனைகளுடன் தான் இந்தியாவின் சிகிச்சை பெற முடியும் என மத்திய அரசு கூறியதை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நிராகரித்து விட்டார்.

இதையடுத்து தனது எஞ்சிய காலத்தை சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் கழிப்பதற்காக அவர் மலேசியாவில் இருந்து நேற்று யாழ்ப்பாணம் கிளம்பிவிட்டார்.

இந் நிலையில் இன்று இது குறித்து சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்) பிரச்சனை எழுப்பினார்.

அவர் கூறுகையில், பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழ்நாட்டில் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதித்திருப்பதாக முதல்வர் நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆனால் தேவையற்ற நிபந்தனை விதித்து இருப்பதாகவும், எனவே சிகிச்சை பெற அவர் தமிழ்நாட்டுக்கு வர விரும்பவில்லை என்றும், அவர் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு சென்று விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

முதல்வர் டெல்லி சென்றபோது மனிதாபிமானத்துடன் பார்வதி அம்மாளுக்கு தமிழ்நாட்டில் சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றார். ஆனால் இப்போது அவர் தமிழகம் வர மறுத்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்து தகவல் எதுவும் முதல்வருக்கு வந்துள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

பீட்டர் அல்போன்ஸ் எழுப்பியுள்ள இந்தப் பிரச்சனை, அவர் பத்திரிகைகளிலே படித்துத் தெரிந்து கொண்டதாகச் சொல்லப்படுகின்ற ஒரு செய்தியே தவிர, அதிகாரப்பூர்வமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ- பார்வதி அம்மையாரிடம் இருந்து எந்தவிதமான பதிலும் இந்த அரசுக்கு வரவில்லை. உங்களுடைய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள இயலாது என்ற கருத்து அமைந்த கடிதம் அவரால் அனுப்பப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால், எந்தக் கடுமையான நிபந்தனைகளும் அவருக்கு விதிக்கப்படவில்லை. அவர் அரசின் பாதுகாப்பில் இருக்க வேண்டும். பாதுகாப்பு என்றால் சிறைக்கோட்டம் போன்ற பாதுகாப்பு அல்ல.

போஷாக்கில், ஒருவர் உடல் நலம் இல்லாமல் வரும்போது, அவரைக் காப்பாற்ற, அவருக்குப் பரிந்து பணிவிடைகள் செய்ய, மருந்து அளிக்க தக்க டாக்டர்களிடத்திலே அவரது உடலைப் பரிசோதிக்க ஏற்றவொரு மருத்துவமனையிலே அவரைத் தங்க வைத்து, அடிக்கடி கவனித்துக் கொள்கின்ற அந்த முயற்சிகளை மேற்கொள்ள அரசின் பாதுகாப்பிலே இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டதே தவிர, கடுமையான நிபந்தனைகள் எதுவும் அவருக்கு விதிக்கப்படவில்லை.

ஏற்கனவே தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு தொடர்பு கொள்ளவோ, தொடர்பு உள்ளவர்களோடு நட்பு கொள்ளவோ கூடாது என்பதுதான் நிபந்தனை.

தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு ஒரு பிரதானமான, விளம்பரம் பெற்ற, மிக முக்கியமான ஒரு பிரமுகருடைய தாயார் இங்கே வந்து தங்கியிருக்கும்போது, அவரை பயன்படுத்திக்கொண்டு இங்கே அரசியல் யாரும் நடத்துவதற்கு இடம் தராத வகையிலேதான், இந்த அரசு அத்தகைய நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால்தான் போச்சு, இல்லாவிட்டால் உங்களை இங்கே அனுமதிக்க முடியாது என்று கூடச் சொல்லவில்லை.

அவர்களுக்கு ஒரு 'அட்வைஸ்' என்பதைப்போல, நீங்கள் இங்கே வந்து தங்குங்கள், சிகிச்சை பெறுங்கள். தகுந்த மருத்துவமனையிலே உங்களை அனுமதித்து, திறமையான டாக்டர்கள் மூலமாக உங்களுடைய உடல்நிலையைப் பரிசோதித்து ஏற்ற வைத்தியங்களைச் செய்கிறோம்.

ஆனால், அந்த நேரத்திலே உங்களை வைத்து யாராவது அரசியல் நடத்த விரும்பினால், அதற்கு நீங்கள் இடம் தரக்கூடாது என்று கனிவோடு அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், அறிவுரை என்று சொல்ல முடியாது. வேண்டுகோள் விடுத்து அவர்களை இங்கே அனுமதிக்கத் தடையில்லை என்று மத்திய அரசு, மாநில அரசுக்குத் தெரிவித்திருக்கிறது.

மாநில அரசும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே, பீட்டர் அல்போன்ஸ் சொல்கின்ற இந்தச் செய்தி பத்திரிகைகளிலே வந்திருக்கிறது.

ஒரு காலம் இருந்தது. கிராமப் புறங்களிலே ஒரு செய்தியைப் பத்திரிகைகளிலே படித்து விட்டுச்சொன்னால், அப்பொழுதெல்லாம் அதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்பார்கள். பத்திரிகைகளிலே வந்திருக்கிறது என்று சொன்னால், அப்படியா! பத்திரிகைகளிலேயே வந்துவிட்டதா? என்று அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் வரும்.

இந்தக் காலத்தில் பத்திரிகைகளில் செய்திகள் வந்திருக்கின்றன என்று சொன்னால், பத்திரிகைகளில்தானே செய்தி வந்திருக்கிறது என்று சொல்கின்ற அளவிற்கு பத்திரிகைச் செய்திகளாகி விட்ட இந்தக் காலத்தில் பார்வதி அம்மையாருடைய திட்டவட்டமான பதில் வரும் வரையில், பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் இதனை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

நன்றி தட்ஸ் தமிழ்...

------------------------------------------------------------

பார்வதி அம்மாள் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாளுக்கு சில நிபந்தனையுடன் தமிழத்தில் சிகிச்சை அளிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

இந்நிலையில் மலேசியாவில் வரும் 15ஆம் தேதிக்குள் விசா காலம் முடிவடைவதால், பார்வதி அம்மாள் இலங்கை செல்ல முடிவு செய்தார். இதனையடுத்து சிவாஜிலிங்கம் உதவியோடு திங்கள்கிழமை மாலை இலங்கை கொழும்பு விமான நிலையத்துக்கு வந்த பார்வதி அம்மாள், அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

தமிழகத்தில் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி கிடைத்திருப்பது பற்றி தமிழக அரசு மூலமோ, இந்திய அரசு மூலமோ இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ள சிவாஜிலிங்கம், இலங்கையில் தனது பாதுகாப்பில் வைத்து பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்திருப்பதாவும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் நிபந்தனைகளை பார்வதி அம்மாள் உறவினர்கள் ஏற்பாகளா? தமிழகம் சென்று சிகிச்சை பெறுமாறு பார்வதி அம்மாள் உறவினர்கள் கேட்டுக்கொண்டால் என்ற கேள்விக்கு, சிவாஜிலிங்கம் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

நன்றி நக்கீரன்

---------------------------------

பார்வதி அம்மா அரசியலும் நமது சந்தேகங்களும்...

மைக்செட் மாமன்னர் பொய்கோ.. கண்டன கத்திரிகாய் கிலோ 6 ரூபாவிற்கு விற்கும் நெடுமாறனுக்கு மட்டுமே அந்த அம்மா வருவதற்கான தகவல் தெரிவிக்க பட்டு இருந்தும்.அவர்கள் இருவரும் தேர்தல் சாராத தமிழுணர்வு இயக்கங்களுக்கு தெரிவிக்காது ஏன்?.பொய்கோ அனைவருக்கும் தெரிந்தால் கருநாகம் அரசியல் செய்வார் என்கிறார். இதற்கு முன்பு இரட்டை குழல் துப்பாக்கி ஒன்றாக தோட்டாக்களை தெறிக்கும் கருநாகத்திடம் இருந்த போது அள்ளி விட்டது யாருக்காக?

வாரம் ஒருமுறை வன்னிக்கு சென்று பிரபாகரனுடன் டீயும் பிஸ்கெட்டும் சாப்பிட்டவர்கள் எங்கே?இன உணர்வு என்பது சினிமா படம் எடுப்பது போல என்று நினைத்துவிட்டாரா? அல்லது எம்.எல்.சி பதவிக்கான வேண்டுதலா?

2117thirumavalavan_j.jpg

மீசையில் மட்டுமே முறுக்கி முறுக்கி வீரத்தினை காட்டும் மற்ற அரசியல் கைத்தடிகளை காணோம். எங்கே ஒளிந்து கொண்டுள்ளனர்? பிரபாகரனின் அண்ணன் . பிரபாகரனின் தம்பி.. மைத்துனர் என வீரத்திற்கு ஈழத்தவரை இழுத்து குளிர் காய்ந்த கழிசடைகள் அவரின் தாய்க்கு காட்டுகிற மரியாதை இதுதானா?கார் கண்ணாடியை மறைத்து விட்டு அந்த அம்மா திருப்பி அனுப்பபடும் காட்சியை தூரத்தில் இருந்தே ரசிப்பதற்கா இவர்களுக்கு பிரபாகரன் தேவைபடுகிறார்?

குருமாவளவன் ம்லையாள அதிகாரிகள் காரணம் என்கிறார் .. கைத்தடி வீரமணி.. பார்பன அதிகாரிகள் என்கிறார்.. சரி போகட்டும் காரணம் யார் என்பது தெரிகிறது அல்லவா? அவர்களை மாற்ற கோரியோ அல்லது நீக்க கோரியோ தந்தியடி தபால் மன்னர்கள் இதுவரை ஒரு கடிதம் எழுதி உள்ளார்களா?இதை தங்களுக்கு நேர்ந்துள்ள அவமானம் என்று உணரவே இல்லையா? மீசையை முறுக்கி முறுக்கி போஸ்கொடுப்பதும்.. பெரியார் கற்று கொடுத்த சுயமரியாதையும் என்ன ஆயிற்று?

thuglaq_kanimozhi_manmohan_karunanidhi_homeattai1.jpg

பார்வதி அம்மாள் குறித்த தகவலை மறுநாள் செய்திதாள்களை பார்த்தே தெரிந்து கொண்டேன் என்கிறார்.. அப்படியானால் அந்த அம்மா விண்ணபிக்கும் போதே.. மத்திய அரசு.. அது குறித்த தகவலை கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில்

கூட வேண்டாம் ஒரு மாநில முதல்வர் என்ற முறையில் கூட மத்திய அரசு தெரிவிக்கவில்லையா? வேறு மாநில முதல்வர்களுக்கும் இதே நிலைதானா? அல்லது தமிழகத்து முதல்வர்களுக்கு மட்டுமதானா?

சரி அவமானபடுத்தியாகிவிட்டதாக தற்போதைய தமிழக முதல்வர் உணர்ந்தாரா அதற்கான வருத்தத்தை வழக்கம் போல தேதி வாரியாக அண்டார்க்டிக்கா தோன்றிய காலத்தில் இருந்து தோண்டி துருவி அறிவுப்பு விடும் தற்போதய முதல்வர்.. இதில் மட்டும் கோட்டைவிட்டது ஏன்?

சுயாட்சி கோசமெல்லாம் சொறி சிரங்கு வந்தவன் அவ்வபோது அரிப்பு ஏற்படும் போதெல்லாம் சொறிந்து கொள்வதை போல தமது தேவை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப டில்லியை மிரட்ட மட்டும் தானா?

அரிப்பு எடுத்தால் மாநாடு கூட்டியும்.. நடிகைகளை குத்தாட்டம் ஆடவிட்டு ரசித்து தமிழுணர்வு வளர்க்க விரும்புவதும் .. இதுவா தமிழினதலைவருக்கு அழகு..சாதியை சரக்காகவும் தமிழக மக்களின் அறியாமையை ஆம்ளட்டாகவும் வைத்து வண்டி ஓட்டுபவர்களை வைத்து என்ன செய்யமுடியும்..

எழவு வீட்டிலும் சுண்டல் விற்பவர்கள்தான் நமது அரசியல் வியாதிகள்.. இதை பலமுறை நாம் பார்த்தும் உள்ளோம்..இன்று தமிழக மீனவர்களை டெல்லி ஏகாதிபத்தினால் சிங்களனவிடம் விற்ற இவர்கள்..நாளை நமது அக்கா தங்கைகளை சிங்களவன் கேட்கிறான் என்றால் அதற்கும் கூட்டி கொடுக்க தயங்காத களவாணிகள் இவர்கள்..

சுயமரியாதை என்பது பார்பனர்க்ளுடன் இங்கு வீர தீரமாக முண்டா தட்டும் அளவிற்கு டெல்லி ஏகாதிபத்தியத்திடமும் அதன் அதிகாரவர்த்திடமும் சரி சம்மாகவே காட்ட குஸ்தி போடவேண்டும்.... டெல்லியில் ரோமானியர்களின் அதிகாரவர்க்கம் நடக்கிறதா? இல்லையே?

india_map.jpg

எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தால் இதில் தேரதல் அரசியல் கங்காணிகள் இந்தியத்திற்கான கங்காணி வேலைகளை மிக கச்சிதமாகவே செய்து முடித்திருக்கிறார்கள்.அதாவது மீண்டும் அவமானபடுத்தபட்ட அந்த அம்மாவை பொந்தியத்தின் சார்பாக வரவழைத்து.. தங்களின் மேல் ஈழத்தவர்களுக்கு உள்ள கோபத்தினை சரி செய்வது .. சர்வதேசத்திடம் மீண்டும் தாங்கள் சன நாய் அகத்தினை கட்டிகாக்கும்.... மனித உரிமையை மதிக்கும் நாடு என்று பிலீமு காட்டுதல்..

இலங்கை மனித உரிமைகளை மதிக்கும் நாடாக இலங்கையில் அமைதி திரும்பிவிட்டது அங்குள்ள தமிழர்கள் அனைவரும் தப்பு தவில் அடித்து மகிழ்ச்சியாக உள்ளர்கள் என காட்ட... அமிதாபச்சனின் இந்தி திரைபட விழாவும்.. பார்வதியம்மாள் அரசியலும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் இப்போதைய சூழ் நிலையில் இதையே நமக்கு உணர்த்துகிறது..

dog%20and%20bone.jpg

இங்கு எவன் / எவள் முதல்வராக வந்தாலும் டெல்லி ஏகாதிபத்தியத்தின் எலும்பு துண்டு பொறுக்கிகளாகவே இருக்க முடியும்.இரண்டில் ஒரு தீமையை தேர்வு செய்து கொள்க என்பதுதான் இந்தியத்தின் கொள்கை வகுப்பு மற்றும் அரசியலாக்கம்.. அப்பா அடித்தால் அம்மாவிடம் ஒடுவதும் அம்மா அடித்தால் அப்பவிடம் ஓடுவதும்...நீங்கள் ஓடவெல்லாம் தேவையில்லை அவர்களே நாசுக்காக புரிந்துகொள்வார்கள் (எப்படி ஜெ திடீரென ஈழதாய் ஆனாரோ அப்படி நாளை கருநாகமும் ஈழதந்தை ஆகலாம்) இதுதான் நம்மையும் அறியாமல் இங்கு நடப்பது..

த்ற்போதைய தேவை இந்தியத்தினை இதையெல்லாம் மீறி நடுநடுங்கவைக்க வேண்டிய செயல்பாடே.. அப்போதுதான் சீக்கியர் போன்று மானரோசத்தோடு....சூடு சொரணையோடு.. தமிழர்கள் இந்த நாட்டில் வாழ முடியும்..உரிமை என்பது யாரிடமும் கேட்டு பெறுவது அல்ல என்பதினை தோழர்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்..இந்தியத்திடம் ஏன் கெஞ்சவேண்டும் எதற்கு கெஞ்சவேண்டும் ஒட்டுமொத்த த்மிழினத்தினையும் ஓல் சேலில் வாங்கிவிட்டார்களா? அல்லது யாராவது பட்டா போட்டு இவர்களிடம் கொடுத்துவிட்டர்களா?

வேட்டி சட்டை ஜட்டி.. அரை நாண் கொடி.. முத்ற்கொண்டு கட்சியின் கரையினை பார்த்துகொள்ளும் கட்சி களவாணிகளை நம்புவதை விட தேர்தல் அரசியல் சாராத தமிழர் விடுதலை அமைப்புகள் பின்னாள் இளைஞ்சர்கள் மாணவர்கள் அணிதிராள்வோம்.. புரட்சிகர பாதையினை தேர்தெடுப்போம்..

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பதெ சரி..

நன்றி...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி அசத்திட்டிங்கபோங்க, அதுசரி இந்தச்சீமான எதுக்கு இந்திக்காரன் அமிர்தாப் குடும்பத்தாரிடம் போய் மன்றாடுகிறார். இது ரெம்ப ஓவராக இருக்கு, ஒருதடவை சொல்லவும் அதுக்குச் செவிசாயக்கவில்லையெனில் விலகிவிடவும் சந்தர்ப்பம் வரும,; அப்போது பார்த்துக்கொள்ளலாம். தேவையில்லாது மனிதசக்தியை வீணடிக்கக்கூடாது. அதுதவிர, எடுத்ததற்கெல்லாம் போராட்டம் அது இது எனக்கிளம்பிவிடக்கூடாது தோன்றில் புகழுடன் தோன்றுதல் வேண்டும். யாராவது தம்பி சீமானிடம் இச்செய்தியைக் கூறுங்களேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி அசத்திட்டிங்கபோங்க, அதுசரி இந்தச்சீமான எதுக்கு இந்திக்காரன் அமிர்தாப் குடும்பத்தாரிடம் போய் மன்றாடுகிறார். இது ரெம்ப ஓவராக இருக்கு, ஒருதடவை சொல்லவும் அதுக்குச் செவிசாயக்கவில்லையெனில் விலகிவிடவும் சந்தர்ப்பம் வரும,; அப்போது பார்த்துக்கொள்ளலாம். தேவையில்லாது மனிதசக்தியை வீணடிக்கக்கூடாது. அதுதவிர, எடுத்ததற்கெல்லாம் போராட்டம் அது இது எனக்கிளம்பிவிடக்கூடாது தோன்றில் புகழுடன் தோன்றுதல் வேண்டும். யாராவது தம்பி சீமானிடம் இச்செய்தியைக் கூறுங்களேன்.

நன்றி தோழர் எழும்ஞாயிறு.... என் நண்பன் பிரேமிடம் கூறிவிடுகிறேன்.... ஒடுகத்தூர் பொறுப்பாளர் அவன் தான்..மதுரையில் மாநாட்டு வேலையில் மூழ்கியுள்ளான்... ஆனால் சீமான் கேட்பாரா என்று தெரியவில்லை...நன்றி

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை எனக்கு சுடுகிறது. எனினும் நேரடியாக தைரியமாக இந்த கருத்தை பதிந்த உம்மை பாராட்டாமல் இருக்க முடியவில்லை .

இன்னும் பல உண்மைகளும் எனக்கு சுடுகிறது . அதற்கு விடை அளித்தால் நலம் . சிகப்பு அழுத்தினாலும் நலம்.

1. மதியாதார் தலை வாசல் மிதிய வேண்டாம் . இது பெரியோர் வாக்கு . அம்மா விஷயத்தில் இது கடை பிடிக்க படுமா ???

2. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு . இதுவும் ஒரு பெரியோர் வாக்கே . திரைகடல் கடந்து இருக்கும் ஈழ உறவுகள் ஒருவராலும் கூட பார்வதி அம்மாவுக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்க முடியவில்லையா ??? இல்லை எந்த நாட்டிலும் மருத்துவ வசதியில்லையா ??? அல்லது தன்னினம் தன் மானம் என்பதெல்லாம் வேற்று கோஷங்கள் தானா ??? ( ஒரு தேசிய தலைவரின் அம்மாவுக்கு இந்த கதி. அப்புறம் மக்களின் கதி ??? )

3. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் . இதுவும் பெரியோர் வாக்கே . இந்தியா முதல் ஆளாக அனுமதி அளித்துள்ளது . இதற்கு நன்றி நவிலல் உண்டா இல்லை அரசியல் சூழ்ச்சி என்று கூறி இந்த மனிதாபிமான உதவியை கூட நக்கல் அடிப்பதோடு நிற்குமா ???

4. விழுந்து விழுந்து புரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஓட்டும். இது கூட........ பிற நாடுகளின் மேல் நம்பிக்கை வைத்து இந்தியாவை ஏளனப்படுத்தி அவமானப்படுத்தி எடுக்க கூடாத முடிவுகளை கூட எடுக்க தூண்டிய பிரசாரங்கள் இன்னும் தொடருமா ???

எனது அம்மா எனில் இதை தான் செய்து இருப்பேன்.தனது மண்ணில் பார்வதி அம்மா வாழ்வதே மிக நல்ல முடிவு.உங்கள் அரசியல் பம்மாத்துக்களை இந்திய மக்களுடன் வைத்து கொள்ளுங்கள்.

இக்கட்டான நேரங்களில் தான் உண்மையான நண்பனை இனம் காணமுடியும்.பல முறை கண்டோம். இம்முறை உறுதி படுத்தி கொண்டோம்.

Edited by nunavilan

எனது அம்மா எனில் இதை தான் செய்து இருப்பேன்.தனது மண்ணில் பார்வதி அம்மா வாழ்வதே மிக நல்ல முடிவு.உங்கள் அரசியல் பம்மாத்துக்களை இந்திய மக்களுடன் வைத்து கொள்ளுங்கள்.

இக்கட்டான நேரங்களில் தான் உண்மையான நண்பனை இனம் காணமுடியும்.பல முறை கண்டோம். இம்முறை உறுதி படுத்தி கொண்டோம்.

உண்மை சுடுகிறது

புரட்சிகர தமிழ் தேசியன் அவர்களுக்கு தமிழ் பைத்தியத்தின் நேரடியான மிரட்டல் . இனிமேல் கட்டுரை எழுதும் போது கொஞ்சம் சுருக்கவும் . இல்லையேல் பிரித்து இரண்டு மூன்று கட்டுரைகளாக எழுதவும் .

நாங்களெல்லாம் வேலையை பார்த்துக்கொண்டே யாழ் களத்திற்கு வருபவர்கள் . வேலை நேரத்தில் தொடர்ச்சியாக யாழ் களத்தில் நேரம் செலவிட முடியாது . மேலும் உங்களின் அனைத்து கட்டுரைகளுமே சாதாரணத்திற்கும் மேலான தகுதி கொண்டவை ( கருத்துக்கள் பாதிக்கு மேல் எனக்கு உடன்பாடு இல்லை என்பது வேறு விஷயம் ).

பெரிய கட்டுரை என்பதால் கருத்து பரிமாற்றத்தின் போது ஒன்றை விட்டு விட்டு ஒன்றுக்கு மட்டுமே கருத்து எழுத வேண்டியுள்ளது . இல்லையேல் பதிலுக்கு மற்றொரு கட்டுரை எழுத வேண்டியுள்ளது. மேலும் கொஞ்சம் கொஞ்சமாக பாதி பாதியாக படிக்க வேண்டியுள்ளது . இதனால் நீங்கள் சொல்ல வரும் கருத்து பலரின் மண்டையில் ஏறாது . உங்களின் நோக்கம் வீணாகி விடும் என்பது எனது நேரடியான எச்சரிக்கை.

இப்போது கூட இந்த கட்டுரைக்கு ஒரு பதில் கட்டுரை எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எத்தனை நாளானும் பரவாயில்லை . பதிலோடு வருகிறேன்

மைக்செட் மாமன்னர் பொய்கோ.. கண்டன கத்திரிகாய் கிலோ 6 ரூபாவிற்கு விற்கும் நெடுமாறனுக்கு ----என்று லூஸ் மாதிரி உளரினால்..

நெடுமாறனய்யாவை விமரிசிக்க என்ன தகுதி உமக்குள்ளது? சீமான் நேற்று முளச்ச காளான்னு சொன்னா ஒத்துக்குவீரோ?

சீமான் மட்டும் என்னத்த வித்தார் கனடாவிலே? சிங்களவன கொல்லுவேன், கொழும்ப எரிப்பேன்னு குதிச்சா போதுமா? முட்டகோஸ்களா... அடுத்த நாளே அவரை தூக்கிட்டாங்க கனடிய காவல்துறை.ஏன்யா வேற்று நாட்டுக்கு போறே பொறுப்பு இல்லாம பேசலாமாய்யா?.சொல்லுக்கு முன் செயல் இருக்கனும்னு தலைவர் கூறியதை முதலில் செயல்வடிவாக்குங்கள்..சும்மா லோ லோ..ன்னு கத்துனா வேலையாகாது....

மலையாளத்தான் தமிழன அடிக்கிறான்,

கன்னடத்தான் தண்ணீர் இல்லன்றான்,

மனவாடு எல்லையே பிழைங்குது...

தமிழ்நாட்டில கல்விப்பிரச்சனைன்னு ஒன்னு இருக்குது தெரியுமா? இளமழலை படிப்புக்கே குறைந்தது ரூபாய் 50,000 அன்பளிப்பு வழங்கனுமாமே!

தமிழர்களை தெளிவாக்குங்கள்

இந்த மாதிரி எத்தனையோ உள் பிரச்சனை...

காக்கா கூட்டத்த பாருங்க அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்கன்னு கண்ணத்தாசன் உங்க மாதிரி ஆளுக்களுக்குத்தான் எழுதிவிட்டுப் போனார்.அன்பால் தமிழனை இணையுங்கள் லொள்ளு பேச்சை ஒழியுங்கள் தமிழன் ஒவ்வொருவரையும் மதிக்க கத்துக்கங்க - உங்கள நீங்களே மதிக்கப் பழகுங்கள் - எதையும் அன்போடு தந்தால் பெறுவதை பெரிதாகப் பெறலாம். தமிழனே! தமிழன் தவறு செய்தாலும் மன்னிக்கப் பழகனும் - நீயே மன்னிககவில்லை என்றால் யாரய்யா மன்னிப்பாங்க?

அதுக்காக துரோகிகளை மன்னிக்கனும்னு சொல்லலை.

பெரியோர்களை மதியுங்கள்.

தமிழன் அல்லாத யாரேன்றாலும் அவன் கால தடவுகிற போக்கை மாற்றுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சுடுகிறது

புரட்சிகர தமிழ் தேசியன் அவர்களுக்கு தமிழ் பைத்தியத்தின் நேரடியான மிரட்டல் . இனிமேல் கட்டுரை எழுதும் போது கொஞ்சம் சுருக்கவும் . இல்லையேல் பிரித்து இரண்டு மூன்று கட்டுரைகளாக எழுதவும் .

நாங்களெல்லாம் வேலையை பார்த்துக்கொண்டே யாழ் களத்திற்கு வருபவர்கள் . வேலை நேரத்தில் தொடர்ச்சியாக யாழ் களத்தில் நேரம் செலவிட முடியாது . மேலும் உங்களின் அனைத்து கட்டுரைகளுமே சாதாரணத்திற்கும் மேலான தகுதி கொண்டவை ( கருத்துக்கள் பாதிக்கு மேல் எனக்கு உடன்பாடு இல்லை என்பது வேறு விஷயம் ).

பெரிய கட்டுரை என்பதால் கருத்து பரிமாற்றத்தின் போது ஒன்றை விட்டு விட்டு ஒன்றுக்கு மட்டுமே கருத்து எழுத வேண்டியுள்ளது . இல்லையேல் பதிலுக்கு மற்றொரு கட்டுரை எழுத வேண்டியுள்ளது. மேலும் கொஞ்சம் கொஞ்சமாக பாதி பாதியாக படிக்க வேண்டியுள்ளது . இதனால் நீங்கள் சொல்ல வரும் கருத்து பலரின் மண்டையில் ஏறாது . உங்களின் நோக்கம் வீணாகி விடும் என்பது எனது நேரடியான எச்சரிக்கை.

இப்போது கூட இந்த கட்டுரைக்கு ஒரு பதில் கட்டுரை எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எத்தனை நாளானும் பரவாயில்லை . பதிலோடு வருகிறேன்

உங்களுக்கு வாசிக்க நேரமில்லையேன்றால் மற்றவர்களுக்கும் நேரமில்லை என்று நினைக்கவேண்டாம். புரட்சிகர தமிழ்த்தேசியன் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்

மைக்செட் மாமன்னர் பொய்கோ.. கண்டன கத்திரிகாய் கிலோ 6 ரூபாவிற்கு விற்கும் நெடுமாறனுக்கு ----என்று லூஸ் மாதிரி உளரினால்..

நெடுமாறனய்யாவை விமரிசிக்க என்ன தகுதி உமக்குள்ளது? சீமான் நேற்று முளச்ச காளான்னு சொன்னா ஒத்துக்குவீரோ?

சீமான் மட்டும் என்னத்த வித்தார் கனடாவிலே? சிங்களவன கொல்லுவேன், கொழும்ப எரிப்பேன்னு குதிச்சா போதுமா? முட்டகோஸ்களா... அடுத்த நாளே அவரை தூக்கிட்டாங்க கனடிய காவல்துறை.ஏன்யா வேற்று நாட்டுக்கு போறே பொறுப்பு இல்லாம பேசலாமாய்யா?.சொல்லுக்கு முன் செயல் இருக்கனும்னு தலைவர் கூறியதை முதலில் செயல்வடிவாக்குங்கள்..சும்மா லோ லோ..ன்னு கத்துனா வேலையாகாது....

மலையாளத்தான் தமிழன அடிக்கிறான்,

கன்னடத்தான் தண்ணீர் இல்லன்றான்,

மனவாடு எல்லையே பிழைங்குது...

தமிழ்நாட்டில கல்விப்பிரச்சனைன்னு ஒன்னு இருக்குது தெரியுமா? இளமழலை படிப்புக்கே குறைந்தது ரூபாய் 50,000 அன்பளிப்பு வழங்கனுமாமே!

தமிழர்களை தெளிவாக்குங்கள்

இந்த மாதிரி எத்தனையோ உள் பிரச்சனை...

காக்கா கூட்டத்த பாருங்க அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்கன்னு கண்ணத்தாசன் உங்க மாதிரி ஆளுக்களுக்குத்தான் எழுதிவிட்டுப் போனார்.அன்பால் தமிழனை இணையுங்கள் லொள்ளு பேச்சை ஒழியுங்கள் தமிழன் ஒவ்வொருவரையும் மதிக்க கத்துக்கங்க - உங்கள நீங்களே மதிக்கப் பழகுங்கள் - எதையும் அன்போடு தந்தால் பெறுவதை பெரிதாகப் பெறலாம். தமிழனே! தமிழன் தவறு செய்தாலும் மன்னிக்கப் பழகனும் - நீயே மன்னிககவில்லை என்றால் யாரய்யா மன்னிப்பாங்க?

அதுக்காக துரோகிகளை மன்னிக்கனும்னு சொல்லலை.

பெரியோர்களை மதியுங்கள்.

தமிழன் அல்லாத யாரேன்றாலும் அவன் கால தடவுகிற போக்கை மாற்றுங்கள்.

இதுக்கு பேர் தான் snipper attack எண்டு சொல்லுவார்களோ . நல்ல கருத்து . அதனால் தான் பெரிதாக நான் எதுவும் எழுதவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைகோ ....நெடுமாறன் அவர்கள் மீது நமக்கு விமர்சனம் இருந்தாலும் ஈழதோழர்கள் மனதில் கொண்டு தவிர்க்க படுகிறது......

brussel_sprouts-large.jpg

நான் சீமான் இயக்கத்தினை சேர்ந்தவன் என்று வம்படிக்கு இழுத்திருப்பவர்க்ளுக்கு நான் அந்த இயக்கத்தினை சார்ந்தவன் இல்லை என்பதினை சொல்லி கொள்ள விரும்புகிறேன்... மற்றபடி சில கருத்துகள் தோழர் சினைப்பரால் கூறப்பட்டவை ஏற்று கொள்ளதக்கவையே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.