Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள குமரப்பா புலெந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளின் நினைவுத்தூபிகளும் இடித்தழிப்பு‐ ஜீரிஎன் செய்தியாளர்‐

Featured Replies

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள குமரப்பா புலெந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளின் நினைவுத்தூபிகளும் இடித்தழிப்பு‐ ஜீரிஎன் செய்தியாளர்‐

16 May 10 02:10 pm (BST)

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதிகளான குமரப்பா புலெந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளின் நினைவுத்தூபிகள் படையினரால் இன்றிரவு இடித்தழிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலிருந்து ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். அதேபகுதியில் அமைந்துள்ள கேணல் கிட்டு உள்ளிட்ட போராளிகளின் நினைவுத்தூபிகளும்; இடித்தழிக்கப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறையில் முன்னதாக பிரபாகரனின் வாசஸ்தலம் இடிக்கப்பட்டது. பின்னதாக எல்லம் குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லமும் இடிக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக இன்று இரவு தீருவில் பகுதியில் அமைந்திருக்கும் இந்த நினைவுத் தூபிகள் இடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலிருந்து ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படைக் காலத்தில் இலங்கை இந்திய கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலாளியில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

அவர்களின் உடல்கள் தீக்கிரையாக்கப்பட்ட தீருவில் பகுதியிலேயே இந்த நினைவுத் தூபிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 1996 ஆம் ஆண்டு படையினரால் சேதமாக்கப்பட்ட இந்த தூபிகள் பின்னர் 2002 ஆம் ஆண்டு மக்களின் பங்களிப்புடன் மீழ நிறுவப்பட்டு இருந்தன. இதே பகுதியிலேயே 1991 ஆம் ஆண்டு இலங்கை இந்திய கடற்பரப்பில் உயிரிழந்த கேணல் கிட்டு உள்ளிட்ட ஏனைய போராளிகளதும் தூபிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதுவரை காலமும் படைத்தரப்பினரது கண்காணிப்பில் இல்லாது இருந்த இந்தத் தூபிகளும் படைத்ததரப்பால் இன்று இடித்தழிக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்திலிருந்து ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24448&cat=1

இந்த விடயங்கள் எல்லாம், இந்திய துணைத்தூதரகம் யாழில் திறக்கப்பட்ட பின்னரும், திறக்கப்படும் காலத்திற்கு சற்று முன்னருமே நடக்கத்தொடங்கின. இந்தியா எனும் தேசம் உலகப்படத்தில் இருக்கும் வரைக்கும் எந்த தமிழனும் தன்மானத்துடன் தன் இன அடையாளங்களுடன் வாழவே முடியாது என்பதையே இவை தொடர்ந்து உணர்த்திவருகின்றன.

"Justice for Survivors of Sri Lanka War".

யுத்த குற்றங்களை விசாரிக்க கோரி ஒரு கிளிக் செய்யுங்கள்!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71890

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயங்கள் எல்லாம், இந்திய துணைத்தூதரகம் யாழில் திறக்கப்பட்ட பின்னரும், திறக்கப்படும் காலத்திற்கு சற்று முன்னருமே நடக்கத்தொடங்கின. இந்தியா எனும் தேசம் உலகப்படத்தில் இருக்கும் வரைக்கும் எந்த தமிழனும் தன்மானத்துடன் தன் இன அடையாளங்களுடன் வாழவே முடியாது என்பதையே இவை தொடர்ந்து உணர்த்திவருகின்றன.

இதுதான் எனதும் அசைக்க முடியாத நிலைப்பாடு.அந்த நாய்களை புறம் தள்ள நாம் எதுவும் செய்யலாம். அதில் எதிரியுடன் சேர்ந்தாலும் தப்பில்லை.

இதுதான் எனதும் அசைக்க முடியாத நிலைப்பாடு.அந்த நாய்களை புறம் தள்ள நாம் எதுவும் செய்யலாம். அதில் எதிரியுடன் சேர்ந்தாலும் தப்பில்லை.

இந்தியாவை பழி வாங்க சிங்களனோடு கை கோர்த்தால் கூட தப்பில்லை!!!

  • கருத்துக்கள உறவுகள்

விழுகை என்பது விதிப்படியும்

எழுகை என்பது வினைப்படியும்

நிகழ்ந்தே ஆகவேண்டும்.

நேற்றொரு நாள்

சத்திய வேள்வியில் திலீப சொரூபம் தீய்ந்த போது

கண்ணீரில் கருத்தரித்தது கால நெருப்பு

இந்தியப்பூதத்தின் பொம்மலாட்டம், புனைவெல்லாம்

விடுதலைத் தழலில் வெந்து போயின.

சத்திய வேள்வி சாகாவரம் பெற்றது.

இந்தியத்தை விட்டு

காந்தீயம் கப்பலேறிக் காணாமல்போனது.

இனத்தின் நித்திய வாழ்வுக்கு

நிம்மதியைக் கேட்ட சத்தியத்தேவன்

சருகாய் உலர்ந்து உயிர் களைந்தான்.

பிராந்திய வல்லரசின் சூழ்ச்சி

தோற்றதன் எதிரொலியை

ஈழத்தின் முற்றம் வடுக்களாய் ஏந்தியது.

மக்களின் தோள்களே மண்மீட்பைச் சுமந்தன.

ஒப்பாரியின் உள்ளொலியில்

பறைகளும் முரசுகளும் அதிர்ந்தன.

கால நெருப்பை ஏந்திய கண்களே

காவல் தெய்வங்கள் ஆயின.

அடைக்கலம் தந்த உறவுகளே

ஆற்றல்களையும் வழங்கின.

இன்னலைச் சுமந்த இருப்புகளே

ஈழத்தை மனதில் ஆழப்படுத்தின.

முகாரிகளை இசைத்தபடியே

புல்லாங்குழல்கள் பூபாளத்தை நோக்கி நகர்ந்தன.

பிணம் புழுத்த வீதிகளிலேயே

பிரசவங்களும் உதிரத்தைப் பாய்ச்சின.

மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி

சிதைகளை மூட்டிய வரலாறுகள் தோன்றின.

எண்ணிக்கையற்ற வலிகளைச் சுமந்தும்

எழுகையே எங்களின் இருப்பை வனைந்தது.

இன்றைகள் மட்டுமேன்....

துருவ முனைகள் வரைக்கும்

உறைந்து கிடக்கிறது மூளா நெருப்பு!

பூபாளத்தை மறந்து புல்லாங்குழல்கள்

முகாரிகளையே முழுமை என்கின்றனவே!!!

ஒலியை இழந்தால்

பறைக்குப் பெருமையில்லை

பாதி வழியில் நின்று விட்டால்

பயணத்தில் முழுமையில்லை

விதியென்று ஓய்ந்து விட்டால்

மதியிருந்தும் பலனில்லை

விழல் என்று முடிவெடுத்தால்

விடுதலைக்கு இடமில்லை

நித்திய வாழ்வுக்காய்

நிம்மதியைக் கேட்ட இனம்

சத்திய வாழ்வின் சருகாகிக் கிடப்பது

காலநீட்சியின் காட்சி ஆதல் கூடாது

மாற்றமே இல்லாதது மண்மீட்பு.

மீட்சியின் திசையில் காற்றெழும் காலமுணர முடியாமல்

தத்தளித்து நிற்பது எவருக்கும் இயல்புதான்

கடந்த காலத்தின் நீட்சியை ஒரு கணம்

காட்சிப்படுத்தல் காலத்தின் அவசியம்.

மீண்டும்…..

கண்ணீரில் கருத்தரிக்கட்டும் காலநெருப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை பழி வாங்க சிங்களனோடு கை கோர்த்தால் கூட தப்பில்லை!!!

இந்தியப்படையை வெளியேற்ற இது அப்பவே நடந்ததுதான். ஆனால் இந்தமுறைக்கு அது தேவையில்லை. இன்னுமொரு கூட்டாளிதான் அனேகமா வருவார்..! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிரி தன் வேலையை மிக நீண்டகால நோக்குடன் எமது போராட்டத்தின் சாட்சிகளான அனைத்தையும் அழிப்பதன் மூலம் எதிர் காலத்தில் போராட்டம் சம்மந்தமான குழப்பமான [கதைகள்)வரலாறு உருவாக வழிசெய்கிண்றான். இதனை தடுத்து நிறுத்துவதற்கும் நினைவிடங்கள் பாதுகாக்கப்படவும் நாம் ஏதாவது செய்யவேண்டும். இப்படியே விட்டால் மகாவம்சம் மாதிரி [ றிலங்காவின் வரலாற்றை கூறும் குறித்த காலப்பகுதிக்கூரிய தமிழரின் பதிவுகள் குறிப்பிடக்கூடியதாக எதுவும் இல்லை] ஒருதரப்பினூடாகவே வரலாறு அறியப்படும் காலம் ஏற்பட்டு விடலாம். இவ்வாறான ஓர் நிலை ஏற்படுவதை தவிற்பதற்கும் எமதுவிடிவை விரைவு படுத்தவும் எல்லாவழிகளிலும் ஒண்றினைவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.