Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பணம் பந்தியிலே ....குணம் குப்பையிலே..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி ....1

என்ன இவள் இப்படிச் சொல்லிக் கொண்டு வாறள் எண்டு எல்லாரும் நினைக்கிறது எனக்கு விளங்குது..என்ன செய்யிறது..?நானும் எனது ஆக்கத்துக்கு பல தரப் பட்ட பெயர்களை வைத்துப் பார்த்தேன் இது தான் தற்போதைய நிலையில் புலம் பெயர்ந்து இருக்கும் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் பொருந்தும் போல இருந்துச்சு "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே" எண்ட பெயரை வைச்சுட்டன்..எனது எழுதுக்கு பச்சை புள்ளி தராட்டிக்கும் பறவாயில்லை...சிவப்பு மட்டும் குத்திப் போடாதியள்..எனக்கு சிவப்பை கண்டாலே அலர்ஜி..எனது முன்னேற்றத்துக்கு தட்டிக் கொடுப்பதும் தள்ளி விழுத்துவதும் உங்கள் கைகளில் தான் இருக்கு.இனி விடயத்துக் வாறன்..

எல்லோரும் அறிந்த விடயம் பெருவாரியாக 1983,1984 ஆண்டுப் பகுதியிலிருந்து வெளிநாடுகள் நோக்கி நம் தாயகத்தில் இருந்து பலரும் புலம் பெயர்ந்த விடயம்..பிள்ளைகளைத் தொடர்ந்து அவரவரின் குடும்பங்கள் அனைத்தும் இலங்கை போன்றே வெளிநாடுகளுக்கும் வந்து குடியேறியிருக்கிறார்கள்.இதற்குள் சின்ன குழந்தை முதல் பாட்டா,பாட்டி வரைக்கும் அடக்கம்..இப்போ நான் கேட்டுக்கும் கேள்வி என்ன வெண்டால் வயது போன பெற்றோரை பிள்ளைகள் புலம் பெயர் தேசத்துக்கு அழைத்து வைத்து விட்டு அவர்களை பல வளிகளிலும் துன்பப் படுத்துவது சரியா ,பிளையா?

கடந்த சனிக்கிழமை என் கண்ணால் பார்த்து ரொம்ப மனம் நொந்த விடயம்.....சனிக்கிழமை அதிகாலையில் மொன்றியல் மா நகரில் இருந்து, திருமண வீடு ஒன்றுக்கு போவதற்காக எனது உறவினர் குடும்பத்தினர் நான்கு பேர் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்கள்..அதில் 94வயது ஆச்சியும் ஒருவர்..இவர்கள் வருகிறார்கள் எண்டு அறிந்ததும் எனக்கு இதயம் டப்..டப்..டப் என்று அடிக்கத் தொடங்கி விட்டது.இண்டைக்கு எனக்கு ரொம்ப அலுப்பு இருக்கு எண்டு என்னை நானே நொந்து கொண்டேன்..சாடையாக எனது அம்மாவின் காதில் இவர்கள் வரும் செய்தியை போட்டேன்..அம்மாவோ சற்றும் கலவரப் படாமல் ஆ...வருகினமோ....?

அப்போ இந்தா சாப்பாடு இருக்கு..தேத்தண்ணியை வைச்சுக் கொடுத்து பார்த்து அனுப்பு என்று சொல்லி விட்டு கோயிலுக்கு ஓட்டம் பிடித்து விட...எனக்கோ தர்மசங்கடமான நிலை....வந்தவர்களின் வாய் எலிவேட்டரில் இருந்து நாம் இருக்கும் தளத்துக்குள் இறங்கியதிலிருந்து தேன் இலையான் இரைந்து கொண்டு இருப்பது போல் ஒரே கதை...அந்த சமயத்தில் எனக்கு என் அம்மாவை நினைக்க..நினைக்க ரொம்ப கோவமாக வந்துச்சு..வீட்டில் இருக்கும் அப்பாவுக்கோ அடிக்கடி தொலை பேசியில் அழைத்து என்ன செய்து கொண்டு, இருக்கிறன் எண்டு பார்த்துக் கொண்டு திரியும் சகோதரன்களுக்கோ காட்டிக் கொள்ள முடியாத நிலை...எப்பவாவது இருந்துட்டு தானே வருகிறதுகள் எண்டு ஒரு வித இரக்கம்....மிகுதி..தொடரும்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. தொடருங்கள்

Edited by நிலாமதி

உங்களுக்கு இரண்டு ஐடிக்கால இரண்டு பச்சைக்கொடி காட்டி இருக்கிறன். என்னமோ தூர இடத்தில இருந்து வந்த பாட்டிக்கு தேத்தண்ணியுக்கை உப்பு போட்டு கொடுத்து இருக்காட்டிக்கு சரி.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் யாயினி,

எது எப்படி இருப்பினும் அன்பாகப் பராமரிக்கப்பட வேண்டிய பெற்றோர்கள் புலம்பெயர்ந்து பல சித்திரவதைகளை அனுபவிப்பது மிக மிகக் கொடுமை.

என்னுடைய ஒரு உறவிற்கும் இப்படி நடந்தது.

அவருக்கு கடவுளின் துணை இருந்தபடியால் எங்களுக்கு அந்த விடயம் தெரிந்து, இப்போது விடுவிக்கப்பட்டு தன் சொந்த ஊரில் இருக்கின்றார். இப்படி பல முதியோர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

வாத்தியார்

...................

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தான் இதைப்பார்த்தேன்

தொடருங்கள்

இன்று எமது சமுதாயத்தின்முக்கிய விடயம் இது.

ஒரு பச்சை போட்டுள்ளேன்

என்னிடமும் இதற்கு நல்ல பல சாட்சிகள் உண்டு

நேரம் கிடைக்கும்போது நூலோடி விடுகின்றேன்

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆக்கத்துக்கு தங்கள் கருத்துக்களை பதிந்த நிலாமதி அக்கா,கலைஞன்,வாத்தியார், விச்சு அண்ணாவுக்கும்...மேலும், மேலும் பல படைப்புக்ளை வெளிக் கொண்டு வர உதவும் யாழ் கள அன்பு உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. :)

அத்தோடு இந்த ஆக்கத்தை வெளிக் கொண்டு வரவும் தயக்கமாக இருந்தது காரணம் சிலருக்கு தங்கள் வீடுகளில் நடக்கும் விடயங்கள் வெளிவருவது பிடிக்காது என்பதும் எனக்கு புரியும்..ஆனால் இப்படி நடக்கும் அனியாயங்களை அவ்வப்போது வெளிக் கொண்டு வந்தே ஆகவேண்டும்.எமது இழைய சமுதாயத்தினரும் இவற்றை பின் பற்றிக் கொள்ள கூடாது என்பது எனது அவா..இதைப் படிப்பவர்கள் பொறுமையயோடு பலதையும் புரிந்து கொள்வீர்கள் எண்ட நம்பிக்கையோடு மிகுதியை தொடர்கிறேன்...

பகுதி..2

மொன்றியலில் இருந்து வருபர்கள் நாம் இருக்கும் தளத்துக்குள் வந்து விட்டார்கள் என்பதை அவர்களின் சத்தத்தின் ஊடாக உணர்ந்து கொண்ட நான்..எமது பிரதான வாசல் கதவை திறந்து வைத்துக் கொண்டு நிண்டேன்...காரணம் வாசலில் நிண்டு வரவேற்காது விட்டால் ஆச்சியின் மருமகன் திரும்பிப் போய் விடுவார் தண்ணி வன்னியும் குடிக்க மாட்டார்..இதற்குள் நக்கல் நளினம் வேறு நடக்கும்.. சிறுது நேரம் காத்துக் கொண்டு நிண்டேன் வருவார்கள்..வருவார்கள் எண்டு இடை நடுவில் நிண்டு கொண்டே ஆச்சி தொடங்கி விட்டா தன் பாட்டை..

"இது யாருண்ட வீடு...உங்கை எண்டால் வரமாட்டன் எண்டு அல்லவா சொன்னான்..."எண்டு ஒரே சத்தமாக இருந்திச்சு.. பேரன் ஒருவரின் பெயரைச் சொல்லி அங்கை எண்டால் வாறன் இல்லாட்டிக்கு வந்த வாகனத்துக்கை போய் இருக்கிறன்..கொண்டு போய் இருத்தி விடு எண்டு கலலரமாக இருந்துச்சு..இத்தனைக்கும் ஆச்சி தன்னிச்சையாக நடக்க ஏலாத நிலைமை வந்த ஒருவர்..யாராச்சும் கையைப் பிடிச்சுக் கொண்டு தான் நடப்பா..கைத்தடியும் வைச்சு இருக்கிறா..

இவர்கள் நிண்டு இழுபறிப்படுவதை யாராவது பார்த்தால் சிரிப்பார்களே எண்டு எனக்கோ மனதுக்குள் ஒரே குளப்மாக இருந்திச்சு...நல்லவேளை நாங்கள் இருக்கும் தொடர் மாடிக் கட்டிடத்தில் 95 வீதமான மக்கள் இந்திய குஜராத்தி இனத்தை சேர்ந்த மக்கள் ..அவர்கள் தாங்களும் தங்கள் பாடுமாக இருந்து கொள்வதால் சற்று நின்மதி..நான் சும்மா நிக்க முடியாமல் எட்டி நிண்டு வெளியால் என்ன நடக்கு எண்டு பார்த்தேன்..ஆச்சி என்னைக் கண்டதும் மேலதிக பேச்சு இல்லாமல் வீட்டுக்குள் வந்து விட்டா..

வீட்டுக்குள் வந்தாச்சா.. என்ன செய்தா ஆச்சி....என்னைக் கட்டிப்பிடிச்சு கொஞ்சினா..எனக்கு கடந்த சனிக்கிழமை என் நாசியினுடே என் உடலுக்குள் புகுந்த ஒரு வித மணம் இன்னும் போக வில்லை..காரணம்...ஆச்சியை மகள் ஒழுங்காக கவனிப்பதில்லை...போட்டுக் கொண்டு வந்த சட்டை கூட மாற்றி நான்கு நாட்கள் எண்டு அறிந்து கொண்டேன்....சாதரணமாக ஒரு நாள் உடுப்பு மாத்தா விட்டாலே எமது உடலில் மணம் தொடங்கி விடும். இது கிழமைக் கணக்காக உடுப்பு மாத்தா விட்டால் எப்படி இருக்கும் எண்டு யோசித்துப் பாருங்கள்.ஆச்சி வாய் திறந்து சொல்லாமலே அவர் உடலில் மற்றும் உடுத்தி இருந்த உடுப்பில் இருந்த மணம் சொல்லி சென்றது அவர் அனுபவிக்கும் துன்பங்களை... :D

(தொடரும்......)

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி .....3.

யாராச்சும் வந்தால் என் அறைதான் தலைகீழாக மாறுவது வளக்கம்...வளமையில் என் அறைக்குள் எந்த விதமான குப்பை கூளங்களும் சேர விடாமல் எப்போதும் சுத்மாகவே வைத்துக் கொள்வேன்..வந்த ஆணை விட மற்ற எல்லாரும் என் அறைக்குள் வந்து விட்டார்கள்..ஆச்சி அறை வாசலில் வந்து இருப்பா..மகள் வந்து ஆச்சியை ஒரு தள்ளு தள்ளினா ....

அங்காலை போவன் இதுலை ஏன் நிண்டு துலையிறாய்... "எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது என்ன துலையிறது எண்டால்..?"

எனக்கோ தூக்கி வாரிப்போட்டது..மொன்றியிலில் வாகனத்துக்குள் ஏறியதிலிருந்து ரொறன்ரோ வரும் மட்டும் ஆச்சி செய்த ரகளைகளுக்கு நடந்த நடப்புத் தான் தள்ளல்..கண்டிப்பாக அந்தக் காட்சி யாரும் பார்த்தால் உருகாத மனததையும் உருக வைக்கும்...எனக்கு அழுகையே வந்துட்டு..சாதரணமாக வயோதிப தாய் தந்தையர்கள் எண்டால் இரண்டாவது குழந்தைப் பருவத்தை எட்டியவர்கள் தானே..அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் கண்டும் காணாதது போல் இருந்துட்டால் பிரச்சனை இல்லைத் தானே.

வந்தவர்களை நன்கு கவனித்து அனுப்பத் தானே வேண்டும் அந்த வேலைகளையும் என் அறிவுக்கு எட்டியவரைக்கு சரியாகவே செய்தேன்..அந்த நம்பிக்கையில் தான் அம்மாவும் சில வேலைகளை என்னில் பொறிக்க வைத்து விட்டு வெளியில் போவது வளக்கம்..நானும் கற்றுக் கொள்ளத் தானே வேணும்...

எனக்கு ஆச்சியின் மகள் ஒரு ஓடர் போட்டா ....ஆச்சியின் கை , கால்களில் உள்ள நிகங்களை வெட்டி விடுமாறு....எனக்கோ கோவம் பத்திக் கொண்டு வந்திச்சு காரணம் என் வீட்டிலயே என்னை யாரும் இலகுவில் அதட்ட மாட்டார்கள்..ஆனாலும் அந்த வயது போன சீவனுக்காக எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு நிண்டேன்..காரணம் வந்த ஒரு கொஞ்ச நேரத்துக்குள் என்னால் பிரச்சனை வந்துடக் கூடாது எண்டு தான்..

(தொடரும்...)

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
:) மிகவும் விறு விறுபபாக போய் கொண்டு இருக்கிறது மீதியையும காண ஆவல்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. இண்டைக்குத்தான் பார்த்தன்..! நல்ல விறுவிறுப்பா போகுது. மேலும் தொடர வாழ்த்துக்கள் யாயினிஸ்..! :D

புலம்பெயர் நாடுகளில் வயதானவர்களின் பிரச்சினைகளைப் பற்றி பந்தி பந்தியா எழுதலாம். அவ்வளவு இருக்கு..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புறுபுறுக்கும் ஆச்சிமார் பற்றிய விறுவிறுப்புத் தொடர் . வாழ்த்தக்கள் :)

நல்லதோ கூடாதோ தொடர்ந்து எழுதுங்கள் யாயினி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆக்கத்துக்கு தொடர்ந்து தன் ஒத்துளைப்பைத் தரும் நிலாமதி அக்கா,மற்றும் புறு,புறுக்கும் ஆச்சிமார் பற்றிய தொடர் எண்டு சொல்லி சென்ற விடலை இசை அண்ணா,சயனி ஆகியோரின் வாழ்த்துக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்... :)

பகுதி...4

நிகம் வெட்ட சொல்லிட்டாவே எண்டு போட்டு ஆச்சிக்கு கிட்டப்போய் கை கால்களைப் பார்த்தேன். இதை விட ஆச்சியின் நிகங்களை நான் வெட்டிக் கொள்ளும் விதத்தில் இருக்கவில்லை அவரின் கால்கள். காரணம்.... ஏற்கனவே நீரளிவு நோய் இருப்பதனால் சில விரல்களும் நிகமும் பார்ப்பதற்கு கவலையை ஏற்படுத்தியது..புண் உண்டாகுவதற்கு உரிய அறிகுறிகள் வந்துள்ளது.

நிகத்தை வெட்டப்போனால் இரத்தம் கசியும் நிலை காணப் பட்டதால் நான் அந்த நிலையிலிருந்து மனத்தை மாத்தி விட்டு ஆச்சியின் மகளிடம் சொன்னேன்..எனக்கு நிலத்தில் குனிந்து இருந்து நிகம் வெட்ட முடியாது.. அதை விட ஆச்சியின் நிகம் வெட்டும் விதத்திலும் இல்லை எண்டு சொல்லி விட்டேன்..நிகங்கள் எல்லாம் வளர்ந்து பிடித்து கழுகின் சொண்டுபோல் மடிந்து விட்டது..கை, கால்களில் தண்ணி பட்டு மாதக் கணக்கு போலும்.

உண்மை தான் மொன்றியில் இருப்பவர்களின் வீடுகளில் ஒருவர் குளித்து விட்டு வந்தால் மற்றவர் குளிப்பது கடசி அரை மணி நேரம் அல்லது 1 மணி நேரத்து பின் தான் சாத்தியப் படும் ..காரணம் அங்குள்ள வீடுகளில் உள்ள தண்ணி சேமித்து வைக்கும் தாங்கிகள் மிக சிறியது ஆகவே ஒருவர் தண்ணியை செலவளித்து விட்டு வந்தால் மற்றவரின் தேவையைப் பூர்த்தி செய்வது என்பது உடன் முடியாத காரியம் எண்டு சொல்லிக் கொள்வார்கள்..இப்படிப் பட்ட மக்களின் கஞ்சல் தனத்துக்கு அந்த இடத்து சட்ட திட்டங்களும் ஒத்துளைக்கிறது...

ஆச்சியும் மகளும் மாறி,மாறி தங்கள் குற்றம் குறைகளை சொல்ல தொடங்கினார்கள் திருமண வீட்டுக்கு வெளிக்கிடுவதற்குள்..எனக்கு அவர்களின் புராணத்தை நிண்டு கேட்பதற்கு விருப்பின்றி ஒரு கேள்வியைக் கேட்டேன் ..மொன்றியலிருந்து வந்தனீங்கள் நேரகாலத்தோடை திருமண வீட்டை போக வேண்டாமா...என்று"

(தொடரும்....)

பகுதி ...5

ஆச்சியின் மகளும் ஓம்..ஓம் அது நீ சொன்னது சரி தான்..எண்டு விட்டு வெளிக்கிட்டுக் கொண்டு நடையைக் கட்டி விட்டா..ஆச்சி என்னோடு வீட்டில் இருந்து விட்டா..

கடந்த பத்து ஆண்டுகளாக திருவும்..திருமதியுமாக இருந்தார்கள் இந்த ஆச்சியும் ஆச்சியின் கணவரும்...கடந்த ஒருவருடத்துக்கு முன் இந்த கண்ணுறாவி வாழ்க்கை வேண்டாம் எண்டு போட்டு அவரும் சும்மா இல்லை 96வயதில் இவ் உலகுக்கு டாட்டா காட்டிப் போட்டு போய் விட்டார்.எல்லாருக்கும் அப்பு எண்டால் ரொம்ப பிரியம் தான் .ரொம்ப நல்லவர்.

அப்பு போய் விடவே ஆச்சியை மகள் பொறுப்பு எடுத்துக் கொண்டார் தான் பார்ப்பதாக எல்லாம் இந்த செல்வலட்சுமி செய்யிறவேலை பாருங்கோ..ஆச்சிக்கும் அந்த நேரம் மகள் ஏன் சுதந்திரமாக திரிந்த தன்னை கொண்டு போகிறா எண்ட விளக்கம் தெரிமால் போய்டு..

யாரும் விளங்கப்படுத்தி சொன்னாலும் அந்த நெரம் அவருக்கு புரிய மாட்டேன் எண்டுட்டு..இப்போ அந்த சுரங்க ஜெயிலை விட்டு வெளிக்கிட்டால் போதும் எண்டு நிக்கிறா..சுரங்க ஜெயில் எண்டால் புரிந்து கொள்வீர்கள் எண்டு நினைக்கிறன்..இனித் தான் விறுப்பாக இருக்கப்போகிறது படித்து விட்டு பதில் எழுத தயாராக இருங்கள்..

(தொடரும்...)

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதும் நோக்கம் தெரியாது யாயினி

இருப்பினும் இதை எழுதுவதன் மூலம் பெரியவர்களின் மனதை புண்படுத்தி அவர்களின் மனதில் வருத்தங்களை ஏற்படுத்தி அதன் ஊடாக தங்களின் வாழ்க்கைக்கு தூற்றுதல்களை சேகரிக்க வேண்டாம் என்று தகப்பன் ஸ்தானத்திலிருந்து கேட்கின்றேன்

உதாரணமாக:- கடந்த பத்து ஆண்டுகளாக திருவும்..திருமதியுமாக இருந்தார்கள் இந்த ஆச்சியும் ஆச்சியின் கணவரும்...கடந்த ஒருவருடத்துக்கு முன் இந்த கண்ணுறாவி வாழ்க்கை வேண்டாம் எண்டு போட்டு அவரும் சும்மா இல்லை 96வயதில் இவ் உலகுக்கு டாட்டா காட்டிப் போட்டு போய் விட்டார்

இதை அவரது பிள்ளைகள் அல்லது உறவினர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று அவர்களது ஸ்தானத்தில் இருந்து பார்த்தேன். அதனால்தான் எழுதுகின்றேன்

தப்பாயின் மன்னிக்கவும்

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விச்சு அண்ணா நீங்கள் சுட்டிக் காட்டிய விடயத்திற்கு மிகவும் நன்றி..

கண்டிப்பாக நான் யார் மனதையும் புண் படுத்தனும் எண்டு எழுத மாட்டேன்....எனக்கு அந்த நோக்கமும் இல்லை.வயோதீபர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் இல்லாமல் போகனும் என்பதே எனது அவா.ஆகவே தான் இந்த விடயத்தை எடுத்து வந்தேன்...அப்படி யாரும் நான் எழுதுவது தப்பு எண்டு நினைத் தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் யாயினி........பல முதியவர்களின் பு லம்பெயர் வாழ்க்கை இப்படிதான் போகிறது. இதை விட மோசமனவைகளும் கேள்விபட்டு இருக்கிறேன். இதனாலாவது படிப்பவர்களுக்கு ரோஷம் வரட்டும்.

ஆக்கம் ஆரம்பித்தவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப திரி மூடப்படுகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.