Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சே.ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு ஓர் உள்ளம் திறந்த மடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சே.ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு ஓர் உள்ளம் திறந்த மடல்

– சேரமான்

By: அதியமான்

முள்ளிவாய்க்காலில் சிங்களம் காவுகொண்ட ஒன்றரை இலட்சம் எம் தமிழீழ உறவுகளுக்காக நாங்கள் கலங்கியழும் இவ்வேளையில்…

தமிழீழமே உயிர்மூச்சு என்று வாழ்ந்து வீரகாவியமாகிய எங்கள் மானமாவீரர்களை இதயங்களின் ஏந்தி நாங்கள் பூசிக்கும் இந்த நாட்களில்…

இருபது ஆண்டுகளாக எங்கள் சூரியத்தேவன் ஆட்சிசெய்த தமிழீழ அரசை இழந்துபோன துயரில் இருந்து மீண்டெழுவதற்கு நாமெல்லாம் முற்படும் இக்காலகட்டத்தில்…

‘தேசியத் தலைவன்’ என்று தமக்குத்தானே மகுடம்சூடிக் கொள்வதற்கு கயவர்கள் கும்பலொன்று முற்படுகையில்…

‘‘தேசியத்திற்கான தலைமை ஒன்றுதான் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அது எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் மாத்திரமே. எனவே நான் தேசியத்திற்கான தலைவராக உருத்திரகுமாரனை தெரிவுசெய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதை நான் மறுக்கின்றேன்.” என்று நீங்கள் வெளியிட்ட அறிக்கை உங்கள் தேசாபிமானத்திற்கு ஐயம்திரிபுறச் சான்று பகர்கின்றது.

சூரியத்தேவனின் இருப்பை மறுதலித்து…

அந்த மாபெரும் இயங்கு சக்திக்கு மரணம் கற்பிக்க முற்பட்டு…

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதறடிக்க முற்படும் கயவர் கும்பலுக்கு…

உங்கள் அறிவிப்பு – நிச்சயம் அந்தக் கயவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் – ஐயமேயில்லை.

அந்தக் கயவர்களின் முகத்தில் கரியைப் பூசியிருக்கும் – சந்தேகமேயில்லை.

தமிழீழ மக்களுக்காக…

தமிழீழ மண்ணுக்காக…

தாய்த்தமிழ் மொழிக்காக…

பதினாறு அகவையில் தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவன் எங்கள் சூரியத்தேவன்.

காடும், மேடும், புனலுமாக தனது வாழ்வைக் கட்டமைத்து எங்களை வியாபித்து நிற்கும் மாபெரும் இயங்குசக்தி எங்கள் சூரியத்தேவன்.

தரைப்படை, கடற்படை, வான்படை என முப்படை கண்ட பெரும்தலைவன் எங்கள் சூரியத்தேவன். காவல்துறை, நீதி நிர்வாகத்துறை, அரசியல்துறை, நிதித்துறை, புலனாய்வுத்துறை என ஐந்துறைகளையும், கல்வி, சுகாதாரம், பொருண்மியம், வைப்பகம், புனர்வாழ்வு, சிறுவர் காப்பகம், நீதிமன்றம், சட்டக்கல்லூரி எனப் பல பிரிவுகளையும், அரசறிவியலாளர், ஊடகவியலாளர், கல்விமான்கள், சட்டவாளர்கள், விஞ்ஞானிகள், பொறியிலாளர்கள், தமிழறிஞர்கள் என்று பல்துறை விற்பன்னர்களையும் உருவகித்த பெரும் தலைவன் எங்கள் சூரியத்தேவன்.

தமிழீழ மண்ணில்…

தமிழீழ மக்களின் அரவணைப்பில்…

தமிழீழ தேசத்தின் சுயபலத்தில் அந்தப் பெருந்தலைவன் அமைத்து, கொடியும், கொற்றமுமாக ஆட்சிசெய்த தமிழீழ அரசுக்கு நிகரேதுமுண்டோ?

‘நாடுகடந்த அரசாங்கம்’ என்பது ‘அரசாங்கம்’ என்ற சொற்பதத்திற்கு உரித்தானது அன்று. அது ஒரு அனைத்துலக பரப்புரைத் தளம் – தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணை நிற்கவேண்டிய ஒரு பரப்புரைத் தளம் மட்டுமே. அவ்வளவுதான். அதற்கு அப்பால் அதில் ஏதுமேயில்லை. எங்கள் தலைவன் அமைத்த அரசுக்கு அது நிகராகுமா?

ஆட்சிசெய்வதற்கு நிலமும் இல்லை. ஆளுகைக்கு உட்படுவதற்கு மக்களும் இல்லை. குந்தியிருந்து கதைப்பதற்குக் குடிசைகூட இல்லை. கல்லெறிபவனைப் பிடித்து சிறையில் அடைப்பதற்கு சொந்தமாகக் காவலர்கள் கூட இல்லை! அப்படியிருக்க நாடுகடந்து அரசமைத்தால் என்ன? கிரகம் கடந்து அரசமைத்தால் என்ன?

அணிவதோ இரவல் சீலை. அதற்குள் அதிலொரு ஒய்யாரக் கொய்யகம் எதற்கு?

எங்கள் மக்களைக் கொன்று, எங்கள் மண்ணை சிதைத்து, எங்கள் வாழ்வை அழித்த எதிரியை உலக அரங்கில் நீதியின் முன்னிறுத்துவதற்கு ஓராண்டாக எதுவுமே செய்யாமல்…

எங்கள் தமிழீழ மண்ணின் விடுதலைக்காக எதையுமே ஆற்றாமல்…

ஓராண்டாக உல்லாச விடுதிகளில் கூடி மக்கள் பணத்தை விரயம் செய்து கலைந்து சென்றவர்கள்…

இப்பொழுது தங்களைத் தாமே தேசியத் தலைவராகப் பிரகடனம் செய்வதன் சூட்சுமம்தான் என்ன?

அமெரிக்காவின் அரசியல் சாசனம் வரையப்பட்ட மண்டபத்தில் கூடினார்களாம்! அதில் என்ன வியப்பு? சொந்த மண்ணில், சொந்த மண்டபத்தில் அமெரிக்கர்கள் கூடித் தமது அரசியல் சாசனம் வகுத்தார்கள். ஆனால் இரவல் சீமையில், இரவல் மண்டபத்தில் கூடி அரசியல் சாசனம் பற்றிப் பேசுவதில் என்ன பெருமையிருக்கின்றது? எங்கள் எதிரிகளைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கு திராணியில்லை. ஆனால் தங்களுக்குத் தாமே முடிசூடிக் கொள்வதற்கும், அரசியல் நிர்ணய சபை என்றுகூறிக் காலத்தைக் கடத்துவதற்கும் மட்டும் இவர்கள் திடசங்கற்பம் பூணுகின்றார்கள்! என்ன அதிசயம்.

குந்துவதற்கே சொந்தக் குடிநிலம் இல்லை. கூடிக் கதைப்பதற்கே கட்டிடம் இல்லை. அதற்குள் ஒய்யாரமாய் தமக்குத் தாமே தேசியத் தலைவர் பட்டம்…

சபாநாயகர் பட்டம்…

மிஞ்சியிருப்பது என்ன எதிர்க்கட்சித் தலைவர் பட்டமா?

முள்ளிவாய்க்காலில் எங்கள் மக்கள் மீது எதிரி சமாதி கட்டுவதற்கு திரைமறைவில் துணைநின்றவர்கள்…

அமெரிக்கா வருகின்றது. ஐ.நா வருகின்றது என்று கூறி எங்கள் போராளிகளை நயவஞ்சகமாக எதிரி கொல்வதற்கும், சிறைப்பிடித்து அடைத்து வைப்பதற்கும் காரணமாக அமைந்தவர்கள்…

எங்கள் தமிழீழ தாயகத்தை மதரீதியில் துண்டாட முற்பட்டவர்கள்…

இவர்களின் நிகழ்ச்சித் திட்டத்தை இனியும் நாம் புரிந்து கொள்வது கடினமானது அல்லவே!

தமிழீழத்தின் மீன்பாடும் தேனாட்டின் தன்மானச் சிறுத்தையே!

உங்களுக்கென்றோர் பணியுண்டு. அதை ஆற்றுவதற்கு ஆசனமும் தேவையில்லை. எவரது ஆணையும் தேவையுமில்லை. மக்களாணை கொண்ட நீங்கள் விரைந்து செயற்படுவதே இனிப்பொருத்தமானது.

சிங்கள ஆட்சியாளர்களையும், அதன் ஆயுதப் படைகளையும் போர்க்குற்றவாளிகளாக்குவதற்கு முற்படுங்கள்: அதில் உங்கள் நேரத்தையும், கவனத்தையும் திருப்புங்கள். எங்கள் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக தமிழ்த் தேசிய உணர்வாளர்களை ஒன்றிணைத்து செயற்படுங்கள்.

அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாம்.

அறிக்கைகளுக்கு அஞ்ச வேண்டாம்.

சூரியத்தேவனின் வழிநின்று நேர்கோட்டில் செயற்படுங்கள்.

இதுதான் ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்தின் கோரிக்கையுமாகும்.

- சேரமான்

http://www.pathivu.com/?p=682

கிழக்கில எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஜயாணந்தமூர்த்தி போன்ற உதவாததையெல்லாம் தலையில வைத்து ஆடுவியள். ஒரு சந்தர்பத்தில அவர் தன்ட குணத்த காட்டேக்க மட்டக்கிளப்பான் புத்தியக் காட்டித்தான் என்டு சொல்லுவியள். கருணா கருநாகம் என்டு தெரிந்துகொண்டுதான் தலையில துாக்கி வச்சு ஆடினநாங்க. இப்ப ஜயாணந்தமூர்த்திய துக்கிவைச்சு ஆடுறம்...

  • கருத்துக்கள உறவுகள்

டாம் அவர்களது கருத்தினை தவிர்க்கவும் தேவையில்லாது பிரதேசவாதம் பேசுகிறார். மற்றது இன்னுமொரு விடையம் நுணாவிலான் குளம்வத்தி மீனபிடிக்க நினைக்கிறார். தலைவர் வருவார் தலைவர் வருவார் எனச்சொலவது உணர்வுக்கு ஒத்துப்போவதாகவிருக்கலாம் நடைமுறைக்குச்சாத்தியம் இல்லாதவிடையம்.

தயவு செய்து இனி யாரும் யாரையும் குற்றம் சுமத்தாமல் நம்மால் முடியுமானதை செய்வோம்.. மக்கள் மிக மிக தெளிவாக இருக்கிறார்கள்.. தலைவர்கள் என்று தம்மை சொல்லிக்கொள்பவர்கள் தான், தாங்களும் குழம்பி மக்களையும் குளப்புகின்றனர்... தற்போதய நிலவரத்தின் படி இயங்கக்கூடிய ஒரு அமைப்பாக உள்ளது நாடு கடந்த அரசு என்ற அமைப்பு மட்டுமே.. அதை பலவீனப்படுத்துவதை விட்டு விட்டு தமிழீழத்திற்கு புலத்தில் பலம் சேர்ப்போம்.. சாத்தியமான அனைத்து வழிகளிலும் முயற்சிப்போம்..

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேரமான், அதிசயமான், அந்தமான், இந்தமான் என்ற பெயர்களால் பதிவு, சங்கதி தமில்நேடிலும் பந்தி பந்தியாக எழுதி மக்களை குழப்ப நினைபவர்களே, மக்கள் இப்போ தெளிவடைந்து விட்டார்கள். உங்கள் புலுடா இனி எடுபடாது. மக்கள் நாடுகடந்த அரசு என்ற அமைப்பில் நம்பிக்கை வைதுலார்கள் உலக நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப யதார்த்தமாக செயல்படுகிறார்கள் தயவுசெய்து இப்படி எழுதுவதை இனியாவது நிறுத்தி ஒரு அணியில் திரளவும்.

மக்கள் இனியும் முட்டாள்கள் அல்ல.

பதிவுகள்/சங்கதிகள்/சேரமான்கள் .. என்று அடுக்கிக் கொண்டு போனால் இவர்கள் மகிந்த சிந்தனையாளர்கள்! இவர்களின் ஓட்டங்கள்/செயற்பாடுகளுக்கும் மகிந்த /சிங்கள சிந்தனைகளுக்கும் எவ்வித வேறுபாடுமில்லை!!

..... இன்று ஜெயானந்தமூர்த்தி இந்த வி.பு.ச.செ அமைப்பினரின் பணயக்கைதி, சொல்வதைச் செய்கிறார்/செய்வதைக் கேட்கிறார் ... பாவம்!

தற்போதய நிலவரத்தின் படி இயங்கக்கூடிய ஒரு அமைப்பாக உள்ளது நாடு கடந்த அரசு என்ற அமைப்பு மட்டுமே.. அதை பலவீனப்படுத்துவதை விட்டு விட்டு தமிழீழத்திற்கு புலத்தில் பலம் சேர்ப்போம்.. சாத்தியமான அனைத்து வழிகளிலும் முயற்சிப்போம்..

இயங்குவதற்கு பல அமைப்புகள் இருக்கின்றது.

நாடுகடந்த அரசு எனும் ஓரு புதிய அமைப்பு இப்போது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பை நிறுவமுற்பட்டவர்களின் பணபலம், ஊடகபலம், இந்த புதிய அமைப்பின் உருவாக்கம் தொடர்பாக யதார்த்தமாக எழுந்த சந்தேகங்கள், இந்த அமைப்பை நிறுவுவதற்கு முற்பட்டவர்கள் மீதான கருத்துக்கள், இந்த புதிய அமைப்புக்கு பெரிய விளம்பரத்தைக்கொடுத்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு பெரிய ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாது, பிரித்தானிய பாராளுமன்ற கட்டடத்துள் உலகத் தமிழர் பேரவை எனும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் உருவாக்கத்தின் பின் ஏற்பட்ட அதிர்வுகள் பெரிதாக இருந்தது. உருவாக்கப் பெற்ற உலகத்தமிழர் அமைப்பின் அங்கீகாரத்தை, நாடுகடந்த அரசு தொடர்பான ஊடகச் செய்திகள் இல்லாது செய்துவிட்டது.

கடந்த ஒரு வருடமாக இந்த நாடு கடந்த அரசு அமைப்பது தொடர்பான முயற்சியின், கதிர்வீச்சுத் தாக்கம் புலத்தமிழ்ச் சமூகத்தை???????????????????????

Edited by kalaivani

இப்படியான அறிக்கைகள் ஒன்றை மட்டும் தெளிவாக எமக்குச் சொல்கின்றன .... புலத்தில் விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலகம் ... எனும் கட்டமைப்பு இருக்கும் மட்டும் அங்குள்ள மக்களுக்கு விடிவு/விமோசனமில்லை!

... இவர்களிடம் அகப்பட்டிருக்கும் பெருந்தொகையான நிதி, இவர்கள் உட்காந்திருக்கும் பதவிகள், .. போன்றவற்றை தமக்குள் கட்டிக்காக்க இவர்கள் எதனையும் செய்வார்கள் ....

இப்படியான அறிக்கைகள் ஒன்றை மட்டும் தெளிவாக எமக்குச் சொல்கின்றன .... புலத்தில் விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலகம் ... எனும் கட்டமைப்பு இருக்கும் மட்டும் அங்குள்ள மக்களுக்கு விடிவு/விமோசனமில்லை!

... இவர்களிடம் அகப்பட்டிருக்கும் பெருந்தொகையான நிதி, இவர்கள் உட்காந்திருக்கும் பதவிகள், .. போன்றவற்றை தமக்குள் கட்டிக்காக்க இவர்கள் எதனையும் செய்வார்கள் ....

சர்வதேச செயலகத்துக்கும் பணத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை... வேலை செய்பவர்கள் கொடுப்பனவுகளுடன் செயற்பட்கிறார்களே அண்றி பணத்தை அவர்கள் கையாள்வதுக்கோ , கைமாறும் பணத்தை எடுத்து பயன்படுத்துவதுக்கோ எந்தவிதமான உரிமையும் அற்றவர்கள்... யாரும் சொல்லும் கதைகளை கேட்டு பொய்களை பரப்பாதீர்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டாம் அவர்களது கருத்தினை தவிர்க்கவும் தேவையில்லாது பிரதேசவாதம் பேசுகிறார். மற்றது இன்னுமொரு விடையம் நுணாவிலான் குளம்வத்தி மீனபிடிக்க நினைக்கிறார். தலைவர் வருவார் தலைவர் வருவார் எனச்சொலவது உணர்வுக்கு ஒத்துப்போவதாகவிருக்கலாம் நடைமுறைக்குச்சாத்தியம் இல்லாதவிடையம்.

நான் அதியமானோ,சேரன் செங்குட்டுவனோ , சேரமானோ இல்லை." நான் அவன் இல்லை".குளம் வத்தினால் மீன் செத்து போகும். பிறகு எப்படி பிடிப்பது? :)

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசு இன்றைய நிலையில் மிகவும் அவசியமான ஒன்று.அது ஒன்றே இன்றைய நிலையில் வெளிப்படையாகச் செயற்படக் கூடிய நிலையில் உள்ளது.அதற்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் அரசியல்வாதிகளின் ஆதரவும் உண்டு.அதனை ஆதரிக்க அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.இது தன் நோக்கத்தில் வெற்றி பெறாது என்ற வகையில் கருத்துக் கூறுவதோடு அதனைக் குழப்புபவர்கள் உண்மையிலேயே தமிழ் மக்களின் நலனில் அக்கறையில்லாதவர்கள் என்றுதான் கருத வேண்டியுள்ளது.உண்மையில் தமிழ்மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கும் ஆதரவளிப்பார்கள் நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் ஆதரவளிப்பார்கள்.நம்பிக்கையில்லாதவர்கள் ஒதுங்கி இருக்கலாம். சேரமான் ஏன் ஜெயானந்தமூர்த்தியைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.ஜெயானந்தமூர்த்தியும் இது ஒரு அதி உயர்பீடமில்லை என்று பேசியிருக்கிறார். நம்பிக்கையில்லாவிட்டால் தேர்தலில் இருந்து ஒதுங்கி இருக்கலாம்.மக்கள் அவரை தேர்ந்தெடுத்தது நாடுகடந்த அரசாங்கத்தை நல்ல முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கே அதனைப் பிளவுபடுத்துவதற்கல்ல.கே.பியால் முன்மொழியப்பட்ட ஒரு விடயம் என்பதற்காக அதனைச் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது அழகல்ல.கேபி தற்போது சிறிலங்காவின் பிடியில் இருப்பதால் அவருக்கும் உருத்திரகுமாரனுக்கும் தொடர்பு படுத்தி சந்தேகப்படுவது நியாயமானதல்ல.கருணா சிறிலங்கா அரசுடன் சேர்ந்து கொண்டபொழுது யாரும் எப்படித் தலைவரைச் சந்தேகிக்கவில்லையோ அது போலத்தான் இதுவும். ஜெயானந்தமூர்த்தி தலைமைப் பதவிக்கு போட்டியிட விரும்பியதாகவும் ஒரு இணையத்தளத்தில் செய்தி பார்த்தேன்.செய்தி உண்மையெனில் அவர் யாராலோ ஆட்டுவிக்கப் படுகிறார் என்றே அர்த்தம்.நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் பெரும்பாலும் தங்கள் அரசியலை பிற நாட்டவர்களுடன்தான் செய்ய வேண்டும்.அதற்கு தகுந்த சட்ட அறிவும் பல்மொழி ஆளுமையும் கொண்ட உருத்திரகுமாரனே பொருத்தமானவர்.தேசியத் தலைவர் பாலா அண்ணாவை எதற்கு அரசியல் மதியுரைஞராகத் (உருத்திரகுமாரனையும் தேர்ந்;தெடுத்திருந்தார்.)தேரந்தெடுத்திருந்தாரோ அதே காரணங்கள் உருத்திரகுமாரனுக்கும் பொருந்தும்.

இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து-அதனை

அவன் கண் விடல்.

என்ற குறளுக்கேற்ப நடப்பதே நல்லது.

மிக முக்கியமான அரசியல் நகர்வொன்றை உலகத்தமிழினம் செய்த செய்தியை சங்கதி பதிவு போன்ற ஊடகங்கள் ஏன் இருட்டடிப்புச் செய்கின்றன என்றே தெரியவில்லை? தமிழர்பற்றிய ஒரு செய்தியாகத்தானும் இதனை என் போடவிi;லை. இவை தமிழர்களின் ஊடகங்களா?

இப்படியான அறிக்கைகள் ஒன்றை மட்டும் தெளிவாக எமக்குச் சொல்கின்றன .... புலத்தில் விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலகம் ... எனும் கட்டமைப்பு இருக்கும் மட்டும் அங்குள்ள மக்களுக்கு விடிவுஃவிமோசனமில்லை!

நாடுகடந்த அரசு தொடர்பான செய்திகள் வெளியிடும்போது

அனைத்துலகசெயலகம் என்று முகவரியிடப்படு கின்றது.

இவர்களும் ஒரு அனைத்துலகச் செயலகம் ஒன்றை, செய்திகளுக்கு ஊடாக

உருவாக்கிவருகினம். கண்டியளோ!

Edited by kalaivani

.

தன்னுடைய அறியாமையை இதைவிட தெளிவாக ஒருவன் வெளிப்படுத்த இயலாது.மேல கிடந்து சேரமான் சொல்ல கீழ கிடந்து அதியமான் எழுத..இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்.

இந்த கோமாளிப் பயலுகளுக்கு ஜெயானந்த மூர்த்தியோ.., எவருமோ பதிலளிக்கத் தேவையில்லை.

இதுதான் ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்தின் கோரிக்கையுமாகும்.

இது எப்படி...!!! :D:)

அனைத்துலக தொடர்பகத்தினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!!

உண்மையிலேயே தேசியத் தலைவர் மீதும், தமிழீழ விடுதலை மீதும் உங்களிற்குப் பற்றிருந்தால் மக்களைக் குழப்பியடிக்கும் விதமான இந்தவித பரப்புரைகளிற்கு இடங்கொடுக்காதீர்கள். நாடுகடந்த தமிழீழ அரசிற்கு எதிரான கருத்தை மாத்திரமல்ல தமிழீழ மக்களவைக்கும் எதிரான கருத்துக்களை உங்களது கட்டுப்பாட்டில் இங்கும் பதிவு இணையத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த மடலில் சேரமான் என்பவர் தெரிவித்துள்ளார்.

"ஆட்சிசெய்வதற்கு நிலமும் இல்லை. ஆளுகைக்கு உட்படுவதற்கு மக்களும் இல்லை. குந்தியிருந்து கதைப்பதற்குக் குடிசைகூட இல்லை. கல்லெறிபவனைப் பிடித்து சிறையில் அடைப்பதற்கு சொந்தமாகக் காவலர்கள் கூட இல்லை! அப்படியிருக்க நாடுகடந்து அரசமைத்தால் என்ன? கிரகம் கடந்து அரசமைத்தால் என்ன?

அணிவதோ இரவல் சீலை. அதற்குள் அதிலொரு ஒய்யாரக் கொய்யகம் எதற்கு? "

இந்தக் கருத்து நாடுகடந்த அரசிற்கு மாத்திரமல்ல, தமிழீழ மக்களவைக்கும் பொருந்தும்.

முதலில் நாடுகடந்த தமிழீழ அரசிற்கு ஆதரவு, புதியபோராட்ட வடிவம் என்று புகழுரை, பின்னர் எதிர்ப்பு(சங்கதி, பதிவு மற்றும் தமிழ்நெட்), பின்னர் ஆதரவு மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களிற்கு பரப்புரை இன்று ஜெயனந்தமூர்த்தி தலைவராகத் தெரிவு செய்யப்படவில்லை என்பதற்காக அந்த அமைப்பே உருப்படியற்றது, அதனால் ஆகப்போது எதுவுமில்லை என்று விசமப்பரப்புரை.

ஏன் இப்படி மக்களைக் குழப்பிடிக்கிறீர்கள் அல்லது அதற்கு இடம்கொடுக்கிறீர்கள்?

நாடுகடந்த தமிழீழ அரசும், தமிழீழ மக்களவையும் எமது பொது எதிரியான சிங்கள அரசுக்கு எதிராக போராடும் இரு போராயுதங்களாக மாற்றுங்கள். மாறாக இரண்டையும் ஒன்றோடு ஒன்று மோதவிட்டு புலத்திலே மாத்திரம் தற்போது எரிந்து கொண்டிருக்கும் விடுதலைத்தீயையும் அணைத்துவிட்டு நீங்கள் சூரியத்தேவன் சூரியத்தேவன் என்று புகழ்பாடும் அந்த உயர்ந்த தலைவனும், அவரின் வழியில் போராடி உயிரீந்த ஆயிரம் ஆயிரம் வீரர்களும் நெஞ்சிலே சுமந்த உயரிய இலட்சியத்தை குழிதோண்டிப் புதைத்து அந்த உத்தமர்களிற்கு பெருந்துரோகிகளாக மாறிவிடாதீர்கள்.

எங்களிற்கு வேண்டியது வேண்டியது தமிழீழம், அதைநோக்கிய எல்லா வழிகளையும் திறப்போம். நாடுகடந்த தமிழீழ அரசு என்பது ஒரு வழி. தமிழீழ மக்களவை என்பது மற்றொரு வழி. தமிழீழ மக்களவை என்ற வழியைத் திறப்பதிலும் பார்க்க நீங்கள் நாடுகடந்த தமிழீழ அரசு என்ற வழிக்கு முட்டுக்கட்டை போடுவதிலேயெ குறியாக இருப்பதாகவே எமக்குத் தெரிகிறது.

அண்ணாக்களே உங்களுடன் களமாவடி மடிந்தவர்களும், உங்களை வழிநடத்திய தலைவனும் இத்தனை ஆண்டுகளாய் சுமந்த இலட்சியத்தை வென்றெடுக்க ஒற்றுமையாய் உழைப்போம். எங்கள் ஒற்றுமையே எமக்குப் பலம் அந்த ஒற்றுமையைக் குலைக்காதீர்கள்.

நன்றி

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சைக்கிலும் அவுட், இருக்கிறார் அரசியல்காரரும் அவுட், நாடுகடந்த இல்லை இருக்கிறார் அரசியல் எவளவு காலம் தாக்குப்புடிக்கும்? :)

இது பிரதேசவாதமில்லை தம்பி. பிரதேசவாதம் இனி வரப்படாது என்டுதான் முன்னெச்சரிக்கை பண்ணுரன். ஜயாணந்தமூர்த்தி என்பவர் ஒரு தேமிழ் தேசியப்பற்றாளரே அல்ல. கருணா கலத்தில தேசியத்தலைவர்ர கொடும்பாவியை எரிச்ச படுபாவி. வேனும்மெண்டா யாராவது கிழக்கு தமிழர்களிடம் கேட்டுப்பாருங்கோ. பிழையான ஒருவரை நம்இபி இறங்கிவிட்டு பிறகு அவன் மட்டக்களப்பான் எண்டு நாங்கள் புலம்பக்”டாது

உருத்திரகுமாரா? ஜெயானந்தமூர்த்தியா? என்பதல்ல பிரச்சனை. நாடு கடந்த தமிழீழ அரசுதான் ஈழத்தமிழரின் உச்சக் கட்டமைப்பு, அதன்தலைவர் தமிழரின் உச்சத் தலைவன், என்ற நிலைப்பாடடை நிறுவுவதற்கான செயற்பாடும், கருத்துத்திணிப்புமே இப்போது இருக்கும் பிரச்சனை.

அரசு அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டே ஒரு வருடம் கரைக்கப்பட்டாகிவிட்டது.

இந்த அரசு, எனும் நிறுவனத்தின் செயற்பாட்டாளர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் இதுகால வரை நிறைவடையவில்லை.

அரசு, அரசு என கடந்த ஒரு வருடமாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன, அரசு அமைக்கப்பட்டாகிவிட்டது. அமைக்கப்பட்ட அரசின், செயற்திட்ங்கள், வெளிப்படைத்தன்மையைப் பற்றி கருத்துப்பரிமாறுவது இந்த அமைப்பின் இருப்பிற்கு உதவிசெய்யும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.