Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மங்களூரில் தரையிறங்கிய துபாய் விமானம் விபத்தில் சிக்கி சிதறியது- 158 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மங்களூரில் தரையிறங்கிய துபாய் விமானம் விபத்தில் சிக்கி சிதறியது- 158 பேர் பலி

சனிக்கிழமை, மே 22, 2010, 10:30[iST]

மங்களூர்: துபாயிலிருந்து மங்களூர் வந்த விமானம் [^] தரையிறங்கிய சமயத்தில், வேகமாக ஓடி ரன்வேயை விட்டு விலகி தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 160 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீ்ட்கப்பட்டனர்.

இன்று காலை ஆறரை மணியளவில் இந்த கோரச் சம்பவம் நடந்தது.

விமான விபத்து குறித்து ஏர் இந்தியா நிறுவன மும்பை பிராந்திய இயக்குநர் அனுப் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

விபத்துக்குள்ளான அந்த போயிங் 737 விமானம் இன்று அதிகாலை 1.15மணிக்கு துபாயிலிருந்து கிளம்பி மங்களூர் வந்தது.

காலை 6.03 மணியளவில் விமானம் தரையிறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக ரன்வேயில் வேகமாக ஓடிய விமானம், ரன்வேயை விட்டு விலகி ஓடி விபத்துக்குள்ளானது.

இதில் விமானம் வெடித்துச் சிதறியது. விபத்தில் சிக்கியவர்களில் 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். விமானத்தில் 4 குழந்தைகள் உள்பட 158 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து தற்போது தெரியவில்லை. பல்வேறு தகவல்களை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

ரன்வேயில் அது இறங்கியபோது படு வேகமாக விமானம் சென்றதால் அதில் தீப்பிடித்துக் கொண்டது. சில விநாடிகளில் விமானம் வெடித்துச் சிதறியது.

போதிய வெளிச்சமில்லாத நிலையில் விமானத்தை தரையிறக்கியதே விபத்து க்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் அந்த சமயத்தில் வானிலை நன்றாகவே இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், விமானியின் தவறே இதற்குக் காரணம் என்றும் முதல் கட்டத் தகவல்கள் கூறுகின்றன. பைலட் செர்பியாவைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இணை பைலட் இந்தியாவைச் சேர்ந்தவர் ஆவார்.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒருமுறை சிங்கப்பூரில் இருந்து இந்தியா போக தெரியாத்தனமா எயர் இந்தியாவில ரிக்கற் போட்டுட்டன். பறக்கத்தொடங்கி ஒரு மணித்தியாலத்துக்குப் பின் விமானி அறிவிக்கிறார் விமானத்தில தொழிநுட்பக் கோளாறு எண்டு. :) சீற்றில குந்தியிருந்த சனம் எல்லாம் எழும்பிட்டிது. :lol:

பிறகு விமானத்தை திருப்பிக்கொண்டு வந்து சிங்கப்பூரிலயே இறக்கினவை. ஒருத்தன் ரிக்கற்றைக் கிழிச்சு எயர் இந்தியா ஆக்களின்ர மூஞ்சியிலேயே விட்டெறிஞ்சுபோட்டு போய்ட்டார்..! :D

அந்தச் சம்பவத்தில இருந்து வளர்ச்சியடையாத நாடுகளின் பிளேன்களிலயே ஏறுறேல்ல..! :)

காலம் நமக்கு தோழன்

  • கருத்துக்கள உறவுகள்

அண்டை மண்ணில் பேரவலம் நிகழ்ந்த போது கண்டும் காணாமலும் வாழ்ந்த மனிதர்களாகவே இருந்ததனால் இயற்கை தண்டித்துவிட்டதோ.

சிங்களம் ஒரு பக்கம் பேரழிவை இயற்கையால் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு துணை போன மலையாளக் கூட்டம்... இப்படி அழிகிறது...! தர்மத்தை சூது காவு கொண்டால் இதுதான் நிகழும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதலிவாழைப்பழத்துக்கெல்லாம் சந்தோசப்படக்கூடாது. :)

பிலாப்பழம் ஒண்டு............???????? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமானத்தில் 4 குழந்தைகள் உள்பட 158 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.

மகிழ்ச்சியடையக் கூடிய விடயமல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமானத்தில் 4 குழந்தைகள் உள்பட 158 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.

மகிழ்ச்சியடையக் கூடிய விடயமல்ல

இதே சிந்தனையை என் சிறுவயதிலிருந்தே அதாவது இலங்கையில் பல இனக்கலவரங்களைக்கண்டும் மனந்தளராமல் சிறுவர்,பெண்கள் பொதுமக்கள் என பரிதாபப்பட்டுக்கொண்டேன்.

ஆனால்.... இன்று என்னால் பரிதாபப்படவோ கவலைப்படவோ முடியவில்லை

இதெல்லாம் சர்வசாதாரணம்.

அவர்கள் பாசையில் சொல்வதானால் "பாவங்கள்"

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தில் 4 குழந்தைகள் உள்பட 158 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.

மகிழ்ச்சியடையக் கூடிய விடயமல்ல

எம் குழந்தைகளின் சாவுக்கும் அவர்கள் அநாதையானதுக்கும் இந்தியாதானே மூல காரணம்? ஒரு இந்தியத் தமிழன் தவிர்த்து எந்த இந்திய கேடி கெட்ட இனமாவது கவலைப் பட்டதா

எவ்வளவு அடித்தாலும் இவிக நல்லவகடா என்று இருப்பதும் எருமைமாட்டின் வாழ்வும் ஒன்றுதான்

விமானத்தில் 4 குழந்தைகள் உள்பட 158 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.

மகிழ்ச்சியடையக் கூடிய விடயமல்ல

எங்கும் இப்படியான விபத்துக்கள் நடப்பது சகஜம்தான். போன ஜென்மத்தில் அல்லது இந்த ஜென்மத்தில் செய்த பாவமோ, யான் அறியேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்செய்தி எனக்கு அனுதாபத்தையோ அன்றேல் கவலையையோ தரவில்லை மகிழ்சியைத்தான் தருகின்றது காரணம் கடந்த வருடம் மேமாதம் எனது தேசத்தில் எனது இனத்துக்கு எதிராக நடந்த மனிதகுல வரலாற்றில் இதுவரையில்லாத குரூரத்தனமான இனப்படுகொலை என்னை மனநோயாளியாக்கி விட்டுள்ளது அதன் காரணமாக நான் இச்சம்பவத்தையிட்டு மகிழ்சியடைகிறேன். இன்னமும் தன்னை இந்தியனாக உணரும் அனைவரும் இதேபோல் துன்பத்தை அனுபவிக்கவோண்டுமென ஆண்டவனை வேண்டுகிறேன் (அப்படி ஆண்டவன் என ஒருவிடையம் இருந்தால்!)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒருமுறை சிங்கப்பூரில் இருந்து இந்தியா போக தெரியாத்தனமா எயர் இந்தியாவில ரிக்கற் போட்டுட்டன். பறக்கத்தொடங்கி ஒரு மணித்தியாலத்துக்குப் பின் விமானி அறிவிக்கிறார் விமானத்தில தொழிநுட்பக் கோளாறு எண்டு. :D சீற்றில குந்தியிருந்த சனம் எல்லாம் எழும்பிட்டிது. :D

பிறகு விமானத்தை திருப்பிக்கொண்டு வந்து சிங்கப்பூரிலயே இறக்கினவை. ஒருத்தன் ரிக்கற்றைக் கிழிச்சு எயர் இந்தியா ஆக்களின்ர மூஞ்சியிலேயே விட்டெறிஞ்சுபோட்டு போய்ட்டார்..! :D

அந்தச் சம்பவத்தில இருந்து வளர்ச்சியடையாத நாடுகளின் பிளேன்களிலயே ஏறுறேல்ல..! :wub:

இதெல்லாம் வளர்ச்சி அடைந்த நாட்டில் பிறந்தவர்கள் சொல்லவேண்டியது ! அகதியாய் வெளிநாடுகளில் அலையவேண்டியது இதுல ராயல் பாமலி என்ற நினைப்பு :D

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் வளர்ச்சி அடைந்த நாட்டில் பிறந்தவர்கள் சொல்லவேண்டியது ! அகதியாய் வெளிநாடுகளில் அலையவேண்டியது இதுல ராயல் பாமலி என்ற நினைப்பு :D

தங்களை வச்சு மற்ற ஆக்களையும் எடை போட்டால் என்ன செய்யிறது? :wub:

இந்தச்செய்தி எனக்கு அனுதாபத்தையோ அன்றேல் கவலையையோ தரவில்லை மகிழ்சியைத்தான் தருகின்றது காரணம் கடந்த வருடம் மேமாதம் எனது தேசத்தில் எனது இனத்துக்கு எதிராக நடந்த மனிதகுல வரலாற்றில் இதுவரையில்லாத குரூரத்தனமான இனப்படுகொலை என்னை மனநோயாளியாக்கி விட்டுள்ளது அதன் காரணமாக நான் இச்சம்பவத்தையிட்டு மகிழ்சியடைகிறேன். இன்னமும் தன்னை இந்தியனாக உணரும் அனைவரும் இதேபோல் துன்பத்தை அனுபவிக்கவோண்டுமென ஆண்டவனை வேண்டுகிறேன் (அப்படி ஆண்டவன் என ஒருவிடையம் இருந்தால்!)

எழுஞாயிறு! அதர்மத்தை எதிர்ப்பவனை, அதர்மம் அழிவதைப் பார்த்து மகிழ்பவனை "மனநோயாளி" என்று கருதுவது தவறு. அவன் வீரன்.

இந்தியர் எமக்குச் செய்த குரூரங்களை நினைக்கும் போது, இந்த விபத்து கவலையை ஏற்படுத்தவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பிரயாணம் செய்த மக்கள் எமது மக்களை கொன்றார்களா? அல்லது உடந்தையாக இருந்தார்களா?

பிரயாணம் செய்தவர்களில் நானறிந்த வரை ஒரு அரசியல் வாதி கூட இல்லை. (மேற்படி எனக்கு தெரிந்த தரவுகளின் படி).

எப்படி இந்திய மக்கள் எமது எதிரிகள் ஆவார்கள்.?

எமது மக்கள் அகதிகளாக வாழ்கிறார்கள்.அவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.கடைசி அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.எடுத்தேன் கவுழ்த்தேன் என்றால் எதுவுமே நடை பெறாது என்பது மட்டும் உறுதி.

இன்று எமக்கு நண்பர்கள் தான் தேவை.அது யாராக இருந்தாலும். நினைத்து பாருங்கள் இவ்வளவு கொலைகளையும் செய்த மகிந்தவின் நண்பர்கள் யார் யாரென.நாம் சரியான திசை நோக்கி நகருகிறோமோ இல்லையோ சிங்களவர்கள் சரியான திசை நோக்கி நகருகிறார்கள் என்பது மட்டும் உண்மையாக தெரிகிறது.

இந்த சம்பவம் எமக்கு மகிழ்ச்சியை தருகின்றது என்று சொல்வதை விட,

இந்த சம்பவம் எமது மனங்களில் இரக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சொல்வது

பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.