Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழின அழிப்பில் அமெரிக்காவின் பங்கு!

Featured Replies

வணக்கம் நாராயணா! .. நாம் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தனாங்களா???? ஓரிரு குழுக்கள் எடுத்திருந்தாலும் ... பெரும்பான்மையின் நிலைமை இந்திய எதிர்ப்பு நிலையே!

அது கிடக்க ..

எனது நல்ல நண்பன் இங்கிருக்கிறான். அவன் திருமலை தம்பலகாமத்தை சேர்ந்தவன். அவனது அண்ணர் புலிகளின் முக்கிய உறுப்பினர், இன்று தப்பியும் விட்டார். இன்னொரு சுகவீனமுற்ற அண்ணரை ஈ.என்.டி.எல்.எப் அவர்களது பெற்றோர் முன்னிலையில் வெட்டிக்கொன்றது. இன்று அவர்கள் தம்பலகாம அகதிகள். அவன் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலத்தில் இந்த ஈ.பி.ஆர்.எல்.எப்/ஈ.என்.டி.எல்.எப் செய்த அட்டகாசங்களையும் சொல்லி, அக்காலத்தில் இந்திய இராணுவ துணையுடன் திருமலையில் இருந்து துரத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் பற்றியும் சொன்னான். சிங்கள குடியேற்றங்களை அகற்ற இந்திய இராணுவம் எடுத்த முயற்சிகளை குறிப்பிட்டு, அது பின் புலிகள்/இந்திய இராணுவ மோதலில் இல்லாமல் போனதையும் சொன்னான்.

ஜே.ஆர்/ராஜீவ் ஒப்பந்தம் கைச்சாத்தாகியவுடன் புலிகள் அதனை தற்காலிகமாவது ஏற்றிருக்கலாம். அதனை ஏற்று இந்தியனுடன் நின்று பலவற்றை சாதித்திருக்கலாம். ... ஒருவேளை தமிழீழமும் மலர்திருக்கும்!!!! .

... அன்றே எமக்கு ஆயுதப்போராட்டத்தில் இந்தியா ஆதரவு தருகிறதென்பது, அவர்களிடைய நலன்களுக்காக என்பது தெரியும் . அதனை "வங்கம் தந்த பாடங்கள்" கூட மிக தெளிவாக சொன்னன.

ஆனால் நாம் இந்தியாவை பகைத்து செல்ல மிகச்சிறிய இனம்! அதனை நாம் புரிந்து கொள்ள தவறி விட்டோம்!

யுத்தநிறுத்தம் கைச்சாத்தாகி பிரபாகரனின் இந்திய டெல்கி நாடகம் எல்லாம் முடிந்து, அவர் யாழ் வந்த பின் பல தடவை இலங்கைக்காகான இந்திய தூதுவராக இருந்த டிக்ஷிற், சந்தித்து இந்திய நிலைப்பாடு தொடர்பாக தெளிவாக விளங்கப்படுத்தினாராம். இந்தியா ஒருபோதும் இலங்கையில் ஒரு தனிநாட்டு பிரிவினைக்கு இடமளிக்காது என்றும் ஆனால் தமிழர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரும் என்றும் குறிப்பிட்டாராம்.

... நாம் கேட்கலாம் வங்கதேச விடுதலையைப் பற்றி ... அது பாகிஸ்தானும்/வங்கமும் சேர்ந்த இந்த நாடு இந்தியாவுக்குக்கு பெரும் சவால்! தனது நலனுக்காக அதனை உடைத்தது!! இன்றைய இந்தியாவின் நிலைமை வேறு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு போராட்டம், மிசோரம். நாகலாந்தில் சீன ஆதரவு ஆயுதப்போராட்டாம் என முளைத்த பின் அது தனது மாகாணக்கள் பிரிந்து போகாத தன்மையை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. அதன் பிரகாரம் அது தனது வெளிவிவகார கொள்கைகளையும் மாற்றியது! ....

அந்நேரம் இந்தியாவுடன் இணைவான அரசியலை நடத்த நாம் தயாரக இருக்கவில்லை. ( இது 2001 யுத்த நிறுத்தம் கைச்சாத்தாகி பேச்சுவார்த்தை நடத்தும் போது நாம் இறுதியுத்தம் என புலம்பெயர் தேசங்களில் நிதி வேட்டையிலும், அதற்கான தயாரிப்பிலும் ஈடுபட்டதை நினைவு படுத்துகிறது. இத்தயாரிப்புகளை மேற்கத்தேய புலனாய்வுகள் துறையினர் சும்மாவா இருந்திருப்பார்கள்?). அக்காலத்தில் நாம் இந்தியா சமாதான எதிர்பு நடவடிக்கைகளை பகிரங்கமாக நடத்தினோம். எமது ஆயுதக் கையளிப்பும் அப்படித்தான்.

இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் பாலா அண்ணா உட்பட பல தளபதிகள் இந்தியாவுடன் மோதலை விரும்பவில்லை. ஆனால் தலைவரின் இறுதி தீர்மானத்தை எல்லோரும் என்ன பலர் கேட்டார்கள்/ஒத்துளைத்தார்கள்.

இந்திய/புலிகளின் யுத்தம் தொடங்கி எல்லாம் நாசமாக தொடங்கி விட்டது. நாமும் இந்தியனை வெளிய்யேற்ற எம் எதிரியுடன் இணைந்தோம்.

புலிகளிடம் நேர்மை இருந்தது, இலட்சிய பற்று இருந்தது, போராடும் குணம் இருந்தது, அதனை வழி நடத்தும் தலைமை இருந்தது ... ஆனால் நெழிவு சுழிவுகளினூடு செல்லும் அரசியல் இருக்கவில்லை!!!!! இலங்கை/இந்திய ஒப்பந்தத்தை எந்த ஒரு சிங்களவனும் ஏற்கவில்லை. இதன் வெளிப்பாடுகளில் ஒன்றே ராஜீவ் காந்தி சிங்கள இராணுவத்தால் தாக்க்கப்பட்டது. நாம் அதனை பயன்படுத்த தவறி விட்டோம். அவர்களுக்குள் முரண்பாடுகளை நாம் ஏற்படுத்தி இருக்க முடியும்., தவறி விட்டோம்!!!

இந்திய இராணுவ நடவடிக்கையின் முடிபில் நாம் தமிழ்நாட்டில் ஓர் வரலாற்றுத் தவறையும் இழைத்து விட்டோம். அன்றுவரை இந்திய இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பாக இருந்த தமிழகம் மாற்றம் அடைய நாமே வழி கோலினோம். இன்று வரை அக்கொலை யாரின் ஏவலில் நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு விடை தேடிய படி இந்தி அரசிருக்கிறது!!!

ஒரு வல்லரசு, ஓர் சிறிய குழுவால் காயப்படுத்தப்பட்டிருக்கிறது. அது விடுமா??????????

இனி வேண்டாம்! அங்கு எம்மக்களின் வாழ்வு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சிங்களம் ஒருபோதும் எம்மை வாழவிடாது!! அங்கு சர்வதேசமும் இந்தியாவை மீறி ஒன்றும் செய்யவும் முடியாது!

எம்மக்கள் வாழ வேண்டும்! எம் மக்கள் உயிருடன் வாழ வேண்டும்!!

நாம் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்ற கருத்து நீக்க செயற்பட வேண்டும். இந்தியாவுடனான நல்லுறவை விருத்தி செய்ய வேண்டும். அதுவே எம்மக்களை உயிரோடு வாழ வழி வகுக்கும்!!

அது நாடு கடந்த அரசாலென்ன, உலக தமிழர் மன்றம் என்றால் என்ன, ... இந்திய உறவை எம்மக்களுக்காக கட்டி எழுப்ப பாடுபட வேண்டும்/முயற்சிக்க வேண்டும்.

நெல்லையன் நீங்கள் மேலோட்டமாக அறிந்த செய்திகளை வைத்து உங்கள் கருத்துக்களை கூறுகிறீர்கள்.

இந்தியா - எந்தவொரு காலத்திலும் தமிழர் தரப்பு நம்பும்படி நடந்து கொள்ளவில்லை.

அவர்கள் இந்தியாவில் புலிகளின் ஆயுதங்களை பறித்து மிரட்டியபோதும், தேசியத் தலைவரை விருந்தாளியாக அழைத்து அனைத்து ஜனநாயக, ராஜதந்திர, மனிதாபிமான மரபுகளையும் மீறி டெல்லியில் கைதியாக்கி மிரட்டியபோதும், பயங்கரவாதி ஜே. ஆர். உடன் தமது இஸ்டத்துக்கு தயாரித்த தீர்வுத் திட்டத்தை திணித்த போதும், கேட்ட சில மாற்றங்களை செய்ய மறுத்தபோதும், குமரப்பா விவகாரத்திலும், திலீபன் விவகாரத்திலும் - அனைத்து நம்பிக்கைகளையும் இழக்கும்படி இந்தியா கீழ்த்தரமாக நடந்துகொண்டது.

நீங்கள் சொன்ன தம்பலகாம விடயம் உண்மையானது. நானும் அதை அறிவேன். அதை செய்தது தமிழர் நிறைந்த தமிழ் நாடு அணியினர். ஆனால் இவை தீட்சித் என்ற இந்திய பயங்கரவாதியால் நிறுத்தப்பட்டது. தமிழர் ஆதரவு இராணுவத் தலைமைகள் அகற்றப்பட்டது.

சிங்களவன் ஏற்பாடு செய்த பெண்களுடன் காலம் கழித்து, நிலைமையை சிக்கலாகிய தீட்சித் என்ற பயங்கரவாதி எங்கும் தமிழ் தரப்பு யாருக்கும் எதையும் விபரிக்கவில்லை. அவனது சொத்துக்களை மதிப்பிட்டால் தெரியும் எப்படி விலை போனான் என்று.

புலிகள் கேட்ட எழுத்து மூல உத்தரவாதம் இந்திய பயங்கரவாதிகளால் வழங்கப்படவில்லை. ஏன் அவர்கள் வழங்கவில்லை? ஏமாற்றுவது அவர்கள் குறிக்கோள்.

அதுவரை பொறுமை காத்த புலிகள், இந்தியாவை நம்புவதற்கு எந்தவொரு காரணத்தையும் காணமுடியாமல், வேறு வழியே இல்லாமல் தமது இறுக்கமான நிலைப்பாட்டை எடுக்கும் நிலைக்கு தாள்ளப்பட்டனர். மூச்சுவிட, தமது நியாயத்தை கதைக்க இடம்கொடுக்காத நிலையில் வேறு வழியே இல்லாமல் தமது இறுக்கமான நிலைப்பாட்டை எடுக்கும் நிலைக்கு தாள்ளப்பட்டனர்.

இதை மறந்துவிடாதீர்கள். இந்தியாவின் கீழ்த்தர, காட்டுமிராண்டித்தனமான ராஜதந்திரமே அனைத்துக்கும் காரணம். இதன் பின்னணியில், தமிழரை என்றுமே விரும்பாத ஹிந்தி வெறியர்களும், திராவிட வாய்ச்சவடால்காரரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பார்ப்பணியரும் தான் இருந்தனர். திராவிட வாய்ச்சவடால்காரரும் நம்பும் ஊடகங்கள், பத்திரிகைகள் பார்ப்பனியர் கையில். இவர்களுடன் சந்தர்ப்பவாத மலையாள பேய்களும் இணைய, தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை ஹிந்தி வெறியர்கள் ஏற்படுத்திவிட்டனர்.

மாலைதீவு நாடகத்துக்கு உதவின உமாமகேஸ்வரனை ரோ பயங்கரவாதிகள் கொன்றது - அவர்களின் நம்பிக்கை துரோகத்துக்கு மேலும் உதாரணங்கள். பிரேமேதாசா, அமிர்தலிங்கம், நீலன், கதிர்காமர், சிவராம், .. கொலைகளில் ரோ பயங்கரவாதிகளின் பங்கை அறிந்தால் நீங்கள், அவர்களை நம்புங்கள் என்று கூற மாட்டீர்கள்.

இன்னும் பல. எல்லாவற்றையும் இங்கு எழுதமுடியாது.

இந்த பின்னணியில் இந்திய கைக்கூலிகளால் மட்டுமே இந்திய பயங்கரவாதிகளின் பிழைகளை மறைத்து, புலிகளின் பிழைகளை சுட்டிக்காட்டி இந்திய ஆதரவு கோசங்களை எழுப்ப முடியும்.

புத்திசாலித் தமிழர் இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு கொள்ளவர்.

விட்டால் துரையப்பா,பஸ்தியாம்பிள்ளை எல்லோரையும் ரோ சொல்லித்தான் போட்டது எனச் சொல்வீர்கள் போலிருக்கு.

இங்கு பலரின் பிரச்சனையே நடந்த உண்மைகளெதையும் அறியாது ஒரு பக்கமாக செய்திகளை வாசித்து அதை நம்பி பின் இங்கு வந்து ஒப்பிக்கின்றார்கள்.உண்மையை சொல்ல வெளிக்கிடால் அவனையும் ரோ ஆக்கிவிடிவீர்கள்.அதைவிட இன்னமும் பல இருக்கு எழுதமுடியாது என்ற பீடிகை வேறு.

அமிர்தலிங்கத்தை சுட்டது ரோ என்று எழுத எப்படி மனது வருது.சுட்டது "கொலை வெறி" என்று உண்மையை சொல்லுங்கோ

"இனிஒரு" வில் போய் ஜானின் கட்டுரையை படிக்கவும்.

அன்பின் நாரதர், ஆராவமுதன்! ... நான் இங்கு இந்தியா செய்தவைகள் அனைத்தயுமோ அல்லது செய்து கொண்டிருப்பதையோ நியாயப்படுத்தவரவில்லை. ஆனால் நாம் சரியாக செய்யத்தவறி விட்டோம் என்பதே, எனது ..!

ஆரம்பத்திலேயே நாம் இந்தியாவின் அயலுறவு கொள்கை/அரசியல் தெரிந்து கொண்டே அங்கு சென்றூ கால்பதித்ததே முதல் பிழை எனலாம்!

.... இந்திரா காந்தி காலத்தில் .... அக்காலத்தில் பார்த்தசாரதியை அனுப்பியதும், அவரை இலங்கை அரசு வேண்டாவென்றதும் பின் பண்டாரி வந்ததும், சிங்களம் குளிர்ப்பாட்டினதும் எல்லாம் மாற காரணங்களாகி விட்டது.

.. ஒன்றை நிச்சயமாக இங்கு ..., ஜே.ஆர்/ராஜீவ் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின் புலிகள் இந்தியாவுடன் இனைந்த அரசியலை செய்ய ஆரம்பத்திலேயே இணங்கி இருந்திருந்தால், இந்த ஈ.பி.ஆர்.எல்.எப், ஏ.என்.டி.எல்.எப். ரெலோ, புளொட்டுகளுக்கு குளுக்கோஸ் ஏற்றியிருக்கபட்டிராது!!

... நாம் விட்ட இன்னொரு மிகப்பெரிய தவறு, தமிழகத்தில் நாம் கூட்டுச்சேர்ந்து கொண்டதில் பெரும்பாலானவர்கள் தமிழக பிரிவினைவாத கொள்கையுடையவர்கள்! நாம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பதில் தூர நிற்பதிலேயே கவனமெடுத்தோம்.

சரி இந்தியா மிகப்பெரிய தவறை விட்டு விட்டது, யுத்தம் தொடங்கியது, நாம் சிங்களவனுடன் கூட்டுச் சேர்ந்தோம்!! ஏன்??????? நாம்தான் முதலில் என் எதிரியுடன் சேர்ந்து அவனிடம் ஆயுதங்களை வாங்கி இந்தியனுக்கு அடித்தம்!! இல்லையா??? ... அன்று நாங்கள் எமது அரசிலலுக்காக சிங்களவனுடன் கூட்டுச் சேர்ந்து அவனை துரத்தினோம்! அதனை நாம் வேறு அரசியல் சாணக்கியம் என்று கூறவில்லையா? ஏன் இந்தியாக்காரன், நாம் செய்ததைப்போல் சிங்களவனுடன் கூட்டுச் சேர்ந்து செய்ய ஏற்கிறோம் இல்லை???????? நாங்கள் சேரவில்லையா??????

அடுத்து இந்தியாக்காரன் விட்டு விட்டு போய் விட்டான். எமது தரப்பிலிருந்து நல்லிணக்கத்துக்காக பாலா அண்ணா, யோகி, அடேல் அக்கா போப்ன்றோர் அங்கு போய் இந்திய தலைவர்களை சந்திக்கவில்லையா???? இதை தொடர்ந்தது அல்லவா??? காசியானந்தன் கூட டெல்கியில் பேச்சுவார்த்தைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் ஏன் ராஜீவ் காந்தியை போட வேண்டி வந்தது???????????? மிகப்பெரிய தவறு!! எம் பழிவாங்கும் புத்திக்கு, மேற்கத்தேய நாடு ஒன்று குளுக்கோஸ் ஏற்ற ... விளைவு போட்டோம், இல்லையா?????

விடுங்கள் ... இந்தியாக்காரன் விடும் பிழைகள் என்ன, நாம் விட்ட பிழைகளும் பல பல!!

இன்று மேற்கு நாடொன்றுதான் யுத்தக்குற்றம் தொடர்பான ஆவனங்களை அடிக்கடி ஊடகங்களுக்கு அவிட்டு வருகிறது. அது ஏன்?? எம்மில் அக்கறையிலா??? நாளை இலங்கை மேற்கு சார்ந்த ஒரு நிலைக்கு சாயுமானால் எல்ல யுத்தக்குற்றமும் கைவிடப்படலாம்!

இன்று கிடைத்த இந்த மேற்குலக நண்பர்கள் நிரந்தரமானவர்களில்லை! எமக்கு தேவை நிரந்தர நண்பன்! இதுவரை நண்பன் என்றே ஒருவரும் இல்லை! இனியாவது .... அரசியல் சாணக்கியத்துடன் ...இல்லையேல் அழிவிற்கு நாமே சிங்களவனுக்கு வழியேற்படுத்துவோம்

Edited by Nellaiyan

இந்த பின்னணியில் இந்திய கைக்கூலிகளால் மட்டுமே இந்திய பயங்கரவாதிகளின் பிழைகளை மறைத்து, புலிகளின் பிழைகளை சுட்டிக்காட்டி இந்திய ஆதரவு கோசங்களை எழுப்ப முடியும்.

புத்திசாலித் தமிழர் இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு கொள்ளவர்.

ஓஓ ... நன்றிகள் யாராவது அடிக்கடி இங்கு புலத்தில் மலிந்து போன இச்சிறப்புப்பட்டத்தை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வரிசையில் இன்று ஆராவமுதன்!! மீண்டும் நன்றிகள்! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலையும்.. சில சந்தேகங்களும்..

rajiv+gandhi+assasination.jpg

இந்த வினாக்களுக்கு விடை கூறுங்கள்...

(1)1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத சிறி பெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?

(2)பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?

(3)ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?

(4) சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?

(5)தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?

(6)1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.அதை ஏன் விசாரிக்கவில்லை..

(7) வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?அவர்களை விசாரிக்க முதலில் மனு போட திரணி உண்டா இவர்களுக்கு?

(8) திருப்பெரும்புதூரிலே ராசீவு கொல்லப்பட்டபோது காங்கிரசு களவாணிகள் யாருமே அங்கே சென்று சாகவில்லையே ஏன்?சிறிபெரும்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. சிறி பெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்..

(9) தோழமைக் கட்சிக்காரியான செயலலிதாவை அந்தக் கூட்டத்திலே கலந்துகொள்ள விடாதபடி தடுத்து அறிவுரை வழங்கியது யார்? ஏன்?

(10) கொலை செய்யப்பட்ட நாளில் மாமல்லபுரத்தில் இருந்த பன்னாட்டு அரசியல் மாமா சப்புரமணி சுவாமி "நான் டில்லியிலே இருக்கிறேன்" .. என்று புளுகியது ஏன்?

(11) இரவு 11 மணிக்கு ராசீவு சாகபோகிற செய்தி மாலை 5 மணிக்கே சந்திராசாமிக்கு எப்படித் தெரிந்தது? "ஒழிந்தான் ராசீவு" என்று ஓங்கி முழங்கியபடியே கப்பல் விருந்திலே போபர்சு ஆயுதத் தரகர்களுடன் கும்மாளமிட்ட சந்திராசாமியை யாருமே நெருங்காமல் விட்டு விட்டது ஏன்?

(12) நரி மூஞ்சி - நரசிம்மராவின் அலுவலகத்திலிருந்து சந்திராசாமி பற்றிய கோப்புகள் மாயமாய் மறைந்தபோது எந்தப் காங்கிரசுக் கட்சிப் பேடிகளுமே பேச்சு மூச்சு விடாமல் இருந்தது எதற்காக?

(13) ராசீவைத் தீர்த்துக்கட்டச் சீக்கியர் குழுக்கள் ஒரு புறமும், அமெரிக்க உளவு நிறுவனம் மறுபுறமும் சதி செய்து கொண்டிருப்பதாக ராசீவு கொலைக்கு 10 நாட்களுக்கு முன்பே பாலசுதீன யாசர் அராபத் எச்சரிக்கை செய்திருந்தபோதும் தமிழினத்தின் கருங்காலி யான கார்திகேயன் புலிகளை மட்டுமே நடுவப்படுத்திப் புலனாய்வு செய்தது எதற்காக?

(14) தஞ்சைப் பண்ணையார் கோடியக்கரை - சண்முகம், சந்திராசாமியின் உதவியாளர் பப்லு, அதிகாரி சிறீவத்சவா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

(15) இராசீவின் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க நாங்களும் உதவுகிறோம். என்று விடுதலைப் புலிகள் இயக்கம் வேண்டுகோள் விடுத்ததே, அந்த வேண்டுகோள் எதற்காக புறக்கணிக்கப்பட்டது?

(16) இராசீவு கொலை வழக்கு மூடிய கதவுகளுக்குள் மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டது எதனால்?

(17) சிவராசனை உயிருடன் பிடிக்க அதிரடி வீரர்கள் தில்லியிலிருந்து புறப்பட்டு வருவது தெரிந்தவுடன் அதிரடியாக செயல்பட்டுச் சிவராசனைச் கருநாடக போலீசார் சாகடித்தது எதற்காக?

(18) புலனாய்வு செய்த புண்ணாக்குகளிடம் சந்திராசாமியைப் பற்றி பேச வாய் திறந்தாலே சாமியைப் பற்றி மட்டும் பேசாதே என்று சீறிச் சீறி அடித்து நொறுங்கியது எதற்காக?

(19) சந்தரா சாமி ராசீவ்வைக் கொலை செய்ய இசுரேல் கூலிப் படைகளுக்கு மூன்று கோடி கொடுத்தார் என்ற கமுகத்தை தில்லி அமைச்சர் ஆரிப்கான் சொன்ன போதே ஏன் விசாரிக்கவில்லை.

(20) ராசீவ் கொலை பற்றிய புலனாய்வு ஆவணங்கள் வெளிநாட்டிலே கொத்துக்கொத்தாகப் பறிபோனதன் பின்னணி என்ன?

(21)சிறப்பு அதிரடிப்படையால் கொல்லப்பட்ட ஒற்றைக்கண் சிவராசனின் உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது ஏன்? தணுவின் உடல் மட்டும் ஏன் சாட்சிக்காக சென்னயில் வைக்கப்பட்டிருந்தது?

(22)திருபெரும்புதூர் உள்ள காங்கிரஸ் தலைவர் லதா கண்ணனின் மகள் கோகிலாவை மேடையில் கவிதை படிக்க வைத்து நேரத்தை கடத்தினார்கள்.

லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?

இந்த கோகிலாவின் தந்தை ஒரு ரெயில்வே தொழிலாளி. ஆனால் இன்று பெரும் பணக்காரர். இவர் எப்படி கோடிஸ்வரரானார்?

(23)திருப்பெரும்புதூரில் கூட்டம் நடத்திய குழுவின் தலைவர் மரகதம் சந்திரசேகருக்கு சில விடயங்கள் தெரியும். மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?

ஆனால் இதுவரையில் மரகதம் சந்திரசேகர் மௌனமாக இருக்கிறார். ஏன்?

(24) மார்கரெட் ஆல்வாதான் ராஜீவ் திருபெரும்புதூர் செல்ல முக்கிய காரணம் என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆல்வா இதுபற்றி இதுவரையில் வாயை திறக்கவில்லை. ஏன்?

(25)ராஜீவை தமிழகம் வரவழைக்க வற்புறுத்தியவர்களில் முக்கியமானவர் மணிசங்கர் அய்யர். கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரையில் மணிசங்கர் அய்யர் விசாரிக்கப்படவில்லை. ஏன்? இவர் குற்றம் சாட்டுவது இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட் அமைப்பையே. ஏன் இவருடைய குற்றச்சாட்டு இந்திய உளவுத்துறையால் கருத்தில் எடுக்கப்படவில்லை?

(26) உடலில் பொருத்தப்பட்ட குண்டுகளுடன் வந்த தாணுதான் கொலையாளி என்றால், முன்பின் தெரியாத தாணு எப்படி பொலிஸ் பாதுகாப்பின்றி மாலையிட அனுமதிக்கப்பட்டார்?

(27) வேதாரண்யம் சண்முகத்தின் தற்கொலையின் மர்மம் ஏன் ஆராயப்படவில்லை?

ராஜிவ் கொலை என்பது பன்னாட்டு உளவுதுறைகள் ... காங்கிரசு களவாணிகள் சம்பந்தபட்ட விடயம்... இதில் புலிகள் ஏதும் சம்பந்தபடவில்லை எனபது புலனாகிறது அல்லவா? நானறிந்த வரையில் தெரிந்தும் தடுக்காமல் விட்டதே புலிகள் செய்தது..... ம்ற்றபடி இதற்கு சம்பந்தம் இல்லை.... சிலர் ஆண்டன் பால சிங்கம் சிறு துன்பியல் நிகழ்வு என கூறியதை நினைவுக்கு கொண்டு வரலாம்... ஆனால் சூழ்நிலை கருதியே அந்த பேட்டியில் கூறினார்.....

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலையுடன் இந்தியப் பொருளாதார வீழ்ச்சி, மன்மோகன்சிங்கின் வரவு, ஐ எம் எஃப் கடன், இந்தியாவின் புதிய திறந்த பொருளாதாரக் கொள்கை என்பனவற்றையும் சேர்த்தே பார்க்க வேண்டும்.

இராசீவின் பின் இந்தியாவில் காங்கிரசுக்கு இருந்த செல்வாக்கு சரிந்து மற்றய கட்ச்சிகளுடன் கூட்டு வைத்தால் தான் ஆட்ச்சி எனும் தொங்கு பாராளுமண்ற நிலையையும் கணக்கில் எடுக்க வேண்டும்...

தமிழ்த்தேசிகன், உங்கள் செய்தியில் பல உண்மை! ஆனால் இந்த "ராஜீவ் புரஜெக்ட்" என்பது ஒரு மேற்கத்தேய நாடு முழு ஸ்பொன்ஸர்!! அந்த புரஜெக்டில் நீங்கள் கூறிய பல காங்கரஸார்கள் மட்டுமல்ல பொலிஸ் அதிகாரிகள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் பலரின் பங்குகளுடன் செயற்படுத்தியது ... நாமே!!!!! அதில் சந்தேகம் வேண்டாம்!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசிகன், உங்கள் செய்தியில் பல உண்மை! ஆனால் இந்த "ராஜீவ் புரஜெக்ட்" என்பது ஒரு மேற்கத்தேய நாடு முழு ஸ்பொன்ஸர்!! அந்த புரஜெக்டில் நீங்கள் கூறிய பல காங்கரஸார்கள் மட்டுமல்ல பொலிஸ் அதிகாரிகள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் பலரின் பங்குகளுடன் செயற்படுத்தியது ... நாமே!!!!! அதில் சந்தேகம் வேண்டாம்!!

நீங்களாக இருக்கலாம் .... புலிகள் இயக்கம் இல்லை.....

//இன்று கிடைத்த இந்த மேற்குலக நண்பர்கள் நிரந்தரமானவர்களில்லை! எமக்கு தேவை நிரந்தர நண்பன்! இதுவரை நண்பன் என்றே ஒருவரும் இல்லை! இனியாவது .... அரசியல் சாணக்கியத்துடன் ...இல்லையேல் அழிவிற்கு நாமே சிங்களவனுக்கு வழியேற்படுத்துவோம் //

தேசிய அரசியற் போராட்டங்களைப் பொறுத்தவரை அங்கே நலன்களின் அடிப்படியிலையே எல்லோரும் இயங்கிறார்கள்.இங்கே நட்பென்பது நலன்களின் அடிப்பையிலையே மேற்கொள்ளப்படுகிறது.தமிழத்தேசிய விடுதலைப் போராட்டாத்தை தனது நலங்களுக்காக இந்தியா பாவித்தது,போராட்ட முன்னணிச் சக்தி பலமான ஒரு தேசிய சக்தியாக உருவெடுத்த போது அதனை அழித்து விட்டது.இந்தியா எம்மை அழிக்கும் வரை நாங்கள் எமக்கான நேச சக்திகளுடன் நாம் கூட்டுச் சேரவில்லை.ஏனெனில் அதனால் இந்தியா கோவம் கொண்டு விடும் என்று நம்பினோம்.அந்த நம்பிக்கையே புலிகளை அழித்தது.ஏனெனில் புலிகள் இந்திய ஆளும் வர்க்கத்தின் வர்க்க நலன் அதன் குணம் என்பது பற்றிக் குறைத்து மதிப்பீட்டனர்.இப்போதும் நாம் அதே தவறை விடுகிறோம்.முரண்பாடான நலங்களின் அடிப்படையில் இருந்து எந்த நட்புறவையும் வளர்க்க முடியாது.

இராச்பக்சவுடன் சேர்ந்து நாம் இலங்கையைல் பாதுகாப்போம் என்று உங்கள் நண்பர் பொண்ட் சொல்வதற்க்கும்,இந்தியாவுடன் சேர்ந்து நாங்கள் மக்களைப் பாதுகாப்போம் என்று சொல்வதற்க்கும் எந்த விதியாசமுமில்லை.ஏனெனில் அவர்கள் இருவருக்கும் தமிழ் மக்கள் பற்றிய எந்தக் கவலைகளும் கிடையாது.மக்களை அழிப்பவர்களாக அவர்கள் இருந்து கொண்டு எவ்வாறு அவர்களுடன் சேர்ந்து நீங்கள் மக்களைப் பாதுகாப்பீர்க்ள்? அவர்களுக்கு அவர்கள் நலனே முக்கியமானது.இன்று கேபி ஆகட்டும் தமிழர்கூட்ட்மைப்பாகட்டும் அடக்குபவனுடன் சேர்ந்து மக்களுக்கு எந்த விடுதலையையும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாகவே இருப்பார்கள்.ஈற்றில் தமிழரின் போராட்ட வரலாற்றில் மக்கள் சார்ந்ததாக உருப்பெறும் அரசியல் இயக்கமே தமிழத் தேசிய விடுதலைப் போரை முன் நெடுக்கும்.வேறு எந்த இணக்க அரசியலும் பூச்சியத்திலையே வந்து முடியும்.உலகப் போராட்ட வரலாறுகள் இதனைத் தான் சொல்கின்றன.

அன்பின் நாரதர், என் மனதுக்கு சரி என்று பட்டதை எழுதினேன்! அங்கு மக்கள் சீரளிகிறார்கள்/அழிக்கப்படுகிறார்கள் கேட்பார் இல்லாமல்!! ... இன்றும் கிளிநொச்சியில் மீளகுடியமர்ந்தவர்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடலங்கள்!!!!! நாளை, இன்று விடுவிக்கப்படும் விடுதலைப் புலிகளின் முன்னால் உறுப்பினர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படப் போகிறார்கள்! ... இது நடைபெற்றுக்கொண்டிருக்கத்தான் போகிறது ... தடுப்பார் இல்லாமல்!

எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் அறநிலை குறித்து எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை! நாம் ஆண்டாண்டாக அனுபவித்த அடக்குமுறைகளின் உச்சமே எமது ஆயுதப்போராட்ட வடிவம்! அது இன்று அழித்தொழிக்கப்பட்டிருக்கிற்து, எமது அரசியலற்ற ஆயுதப்போராட்ட முறையினால்! ஆனால் இன்று எமது இலக்கு தொடர்பாக பல சந்தேகங்கள், எமது இலக்கு சாத்தியப்படுமா?????

இன்றைக்கு எம் மக்களுக்கு தேவை ஒரு பாதுகாப்பான சூழ்நிலையே! அது இந்தியாவை தவிர்த்து எவரும் எமக்கு தர முடியாது என்பது எனது உறுதியான நம்பிக்கை!!!! நானும் இந்திய இராணுவ காலங்களில் பல இன்னல்களை பட்டவந்தான்.என் கண் முன்னாலேயே எம்முறவுகள் அவர்களினால் பறிக்கப்பட்டதை பார்த்தவன்.

அவைகளுக்கு மேலாக ... அங்குள்ள எம்மக்களுக்கு இன்று ஒரு வாழ்வு தேவை!!! அவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதமான வாழ்வு தேவை!! இதை நாங்கள் வழங்கவே முடியாது, இதை நீங்கள் ஏற்கிறீர்களோ இல்லையோ? அதுதான் இன்றைய தேவை அம்மக்களுக்கு!!!! அதை இந்த மேற்குலகம் ஒருக்காலும் வழங்காது, அது சாத்தியமும் இல்லை!! இந்திய எனும் பெரும் சந்தையின் மத்தியில் எம் பிரட்சனைகள், மேற்குலகிற்கு செல்லாக்காசாகி விடும்!!!

நாம் தனித்து ஏதாவது இனியும் சாதிக்கலாமா??????? இல்லை!!!!!! எமக்கென்று ஒரு நண்பன் தேவை! அது தற்போது இந்தியாவே!!

Edited by Nellaiyan

இந்தியா இப்படித்தான் நடக்கும் என்று தெரியாததுதான் எங்கள் பிழை.

ஒரு வங்காள முதலமச்சரோ,தமிழ் நாட்டு முதலமச்சரோ பஞ்சாப் முதலமைச்சரோ மத்திய ஆட்சி எவ்வளவு முறை கேடாக தங்களை நடாத்துது என தெரிந்தும் வேறு வழியில்லாமல் பட்டும் படாமல் தமது ஆட்சி நிலைக்க ஒருவித புரிந்துணர்வுடன் நடந்து கொள்கின்றார்கள்.அரசியலில் மாத்திரமல்ல அனைத்து விடயங்களிலுமேயே கிந்தி தவிர்ந்து மற்ற மொழி பேசும் மாநிலங்கள் ஒரு இரண்டாம் தர பிரஜைகளாகவே இருக்கின்றார்கள்.இந்தியா என்ற பெயரில் இருப்பதை வைத்துக் கொண்டு மாநிலத்திலாவது தமது ஆட்சியை நடத்தினால் காணும் என்பது அவர்களது பொலிசி.

டெல்கியில் இருக்கும் போது பார்த்தேன் இந்தியா ஒரு கிந்தி நாடு.மற்ற மாநிலங்கள் விரும்பியோ விரும்பாமலோ அதை ஏற்றுக் கொண்டுள்ளன.அந்தப் பெரிய நாட்டை ஒன்றாக வைத்திருக்க அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களெல்லாம் அவர்களுக்கு மிக சகஜம்.இதே போல் அவர்களது வெளிநாட்டுக் கொள்கைகளும் தனியாக இந்திய நலன் சார்ந்ததே.

இதை இந்தியாவை சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் அறிந்ததுதான் அவர்கள் கூட இந்தியாவின் அராஜகப் போக்கு தெரிந்தும் முடிந்தவரை சந்தர்ப்பம் வரும் போது திட்டிவிட்டு பின்னர் அனுசரித்துத்தான் போகின்றன.காலம் காலமாக இலங்கை அரசுகள் இதை கன கச்சிதமாக செய்து வருகின்றன.

எங்களுக்குத்தான் இந்த இராயதந்திரங்கள் ஒன்றும் விளங்காமல் நீ யார் என்னை கேள்வி கேட்க என்று தொடங்கிவிட்டார்கள்.இந்தியாவை சிங்கள்வனின் எதிரியாக்கி முடிந்த அளவிற்கு நியாமான ஒரு தீர்வை நாம் எப்போதோ எட்டியிருக்கலாம்.இந்திய அளவிலான ஒரு மாநில சுயாட்சி தருவதற்கு பல முறை அவர்கள் தயாராக இருந்தார்கள்.எங்களுக்குத்தான் தமிழீழமே முடிவான தீர்வென இருந்துவிட்டோம்.பலவற்றை குழப்பியும் விட்டோம்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் – இந்தியா முதுகில் குத்துவது ஏன்?

எட்டாவது முறையாக குற்றுயிரும் கொலையுயிருமாக வாழ்ந்த மண்ணில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். வன்னிக் காடுகளில் இலங்கை விமானத்தின் குண்டு விழாத இடத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள் துன்பத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு அலையும் அந்த மக்கள். விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற பெயரில் தமிழ் மக்களை சுவடு இல்லாமல் அழித்தொழிக்கும் மூர்க்கமான போரைத் தொடுத்திருக்கிறது இலங்கை சிங்கள வெறி அரசு. “தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் கிளிநொச்சியை பிடித்துவிடுவோம்” என்று கொக்கரிக்கிறார் ராணுவத் தளபதி பொன்சேகா.

இராணுவ பலத்தின் மூலம் தமிழ் மக்கள் இரண்டாம் தரக் குடிகள் என்ற நிலையை யாரும் கேட்பாரின்றி உறுதி செய்கிறது சிங்கள பேரினவாத அரசு. இந்த அநீதியான போருக்கு எந்த சர்வதேசத் தடையும் இல்லையென கொக்கரிக்கிறார் அதிபர் ராஜபக்ஷே. தடை இல்லையென்பதோடு ஆயுத உதவியும் ஆதரவும் கூட இந்த சர்வதேச அங்கீகாரத்தில் அடங்கியிருக்கிறது. புலிகளின் விமானத் தாக்குதலால் காயமடைந்த இந்திய இராணுவ நிபுணர்கள் மூலமாக இந்தியாவும் இந்த இனவெறிப் போரில் கலந்து கொண்டிருப்பது அம்பலமானது. ஆனாலும் இது குறித்து மவனம் சாதிக்கிறது மன்மோகன் அரசு.

ஆனால் ராஜபக்ஷே ஆர்ப்பட்டமாய் முழங்குகிறார், புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா சொல்லவில்லை என்று ! அரசாங்ககளுக்கிடையில் இப்படி புரிந்துணர்வு வெளிப்படையாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மீண்டும் ஈழம் குறித்த கவலை – முன்பு போல இல்லையென்றாலும் – எழுந்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதம், வைகோவின் ஆர்ப்பாட்டம், திரையுலகின் ராமேஸ்வரத்து கூட்டம், தி.மு.கவின் மனித சங்கிலி, அப்புறம் கருணாநிதியின் ராஜினாமா மிரட்டல்….தொட்டுவிடும் தூரத்திலிருக்கும் ஈழத்தின் அலறல் தமிழகத்தை இலேசாக உலுப்பியிருப்பது உண்மைதான்.

எழும்பியிருக்கும் இந்த உணர்வு உண்மையிலேயே ஈழத்தின் அவலத்தை துடைக்கும் வல்லமை கொண்டிருக்கிறதா என்பதுதான் நம்முன் உள்ள பிரச்சினை. தமிழகத்தின் எல்லாத் தலைவர்களும், தமிழின ஆர்வலர்களும் ஒட்டுமொத்தமாக முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால் ‘இந்தியா தலையிடவேண்டும், போரை நிறுத்த வேண்டும்’ என்பதே! ஈழத்துப் பிரச்சினையில் இந்தியா நடுநிலைமை வகிப்பது போலவும் இக்கோரிக்கையை வற்புறுத்தினால் போரை நிறுத்தி ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலளிக்கலாம் என்பதும்தான் இந்த கோரிக்கையின் உட்கிடை.

இந்தியா அல்லது இந்திய அரசு என்பது என்ன? இது நாட்டையும் மக்களையும் மட்டும் குறிக்கவில்லை. இந்திய ஆளும்வர்க்கத்தின் அல்லது முதலாளிகள்-அரசியல்வாதிகள்-அதிகாரவர்க்கத்தின் நலனைத்தான் இந்த அரசு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்திய முதலாளிகள் மற்றும் அதிகாரவர்க்கம் கோரும் நலன்தான் இந்தியாவின் அயுலறவுக் கொள்கைகளை வழிநடத்தும். அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பை எதிர்க்காமல் இருப்பதோ, ஈரானுக்கெதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஆதரிப்பதோ, அணு ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் அடிமையாகத் நெளிவதோ இப்படித்தான் நடந்தது. அமெரிக்காவின் ஆசியுடன் தெற்காசியாவின் பிராந்திய வல்லராசகத் திகழவேண்டும், அதை ஒரு பொருளாதார வர்த்தக வலையமாக மாற்றி சந்தையை இந்திய தரகு முதலாளிகளுக்கு திறந்துவிடவேண்டுமெ என்பதுதான் இந்தியாவின் இலக்கு. இந்த நோக்குதான் இந்திய இலங்கை உறவை வழிநடத்துகிறதேயன்றி அடிபட்டுச் சாகும் ஈழத் தமிழ் மக்களின் அவலமல்ல. ஒரு ஐம்பதாண்டு இந்திய இலங்கை உறவின் வரலாற்றைப் பார்க்கும்போது இந்த ராஜாங்க ரகசியம் புலப்படும்.

60களில் சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தப்படி ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையக இந்திய தமிழர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கையின் தேயிலைத் தோட்டங்களை உழைத்தும் உயிரைக்கொடுத்தும் உருவாக்கிய தொழிலாளிகள் ஒரிரவில் அனாதைகளாக மாற்றப்பட்டு இந்தியாவிற்கு விரட்டப்பட்டனர். இந்தப் பிரச்சினையில் தமிழ்மக்களின் நலனுக்கு ஆதரவாக இந்தியா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? பாகிஸ்தான், சீனப்போர்களைத் தொடர்ந்து அன்று இந்தியாவுக்கு இலங்கையின் ஆதரவு தேவைப்பட்டதால் இந்த அநீதியான கோரிக்கை ஏற்கப்பட்டது. இந்தியாவின் நலனுக்காக தமிழனின் வாழ்க்கை சூறையாடப்பட்டது. இதுதான் மலையக இந்தியத் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்ட கதை!

70களில் இலங்கையில் இப்போது சிங்கள இனவெறிக் கட்சியாக சீரழிந்துபோன ஜனதா விமுக்தி பெரமுனா என்ற ஜே.வி.பி கட்சி ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி நடத்தியபோது அதை அடக்குவதற்கு இந்தியா படையும், ஆயுத உதவியும் செய்தது. ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இப்போது “இலங்கையின் இறையாண்மையில் தலையீடு செய்யமாட்டோம்” என்று காங்கிரசு கட்சி அறிவிக்கிறதே அப்போது மட்டும் இந்தத் தலையிடாமைக் கொள்கை எங்கே போயிற்று? இலங்கையை தொடர்ந்து தனது செல்வாக்கில் வைத்திருக்கவே இந்திய அரசு இந்த உதவியைச் செய்தது.

அதன் பிறகு பாகிஸ்தானைத் துண்டாடி வங்கதேசத்தை உருவாக்க இந்திய இராணுவம் தலையிட்டது. அன்றைய சூழ்நிலையில் இலங்கை அரசைச் சரிக்கட்டிக் கொள்வதற்காக கச்சத்தீவு இலஞ்சமாகக் கொடுக்கப்பட்டது. இதுவும் இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யப்பட்ட துரோகமாகும். பெரிய தீவை தனது செல்வாக்கில் வைக்க சிறிய தீவு தாரைவார்க்கப்பட்டது. இன்றைக்கு கச்சத்தீவருகே மீன் பிடிக்கும் தமிழகத்து மீனவர்கள் காக்கை குருவி போல இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதற்கு இதுதானே அச்சாரம்?

83 ஜூலைக் கலவரத்திற்குப் பிறகு ஈழத்தில் போராளிக் குழுக்கள் தலையெடுத்த போது அந்தக் குழுக்களுக்கு இராணுவப்பயிற்சி அளித்து, ஆயுத உதவியும் செய்து ஆதரித்தது இந்திரா அரசாங்கம். இதையும் ‘ஈழ விடுதலைக்கு இந்தியா செய்த உதவி’ என்று இன்றைக்கும் உளறுபவர்கள் இருக்கின்றனர். இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் ஈழம் விடுதலை அடைந்திருக்கும் என்று பேசித்திரியும் புத்திசாலிகளும் இருக்கிறார்கள்.

கச்சத்தீவைக் கொடுத்ததும், மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்ததும் இலங்கைக்கு இந்தியா வழங்கிய சலுகைகள். 83 இல் போராளிகளை ஸ்பான்சர் செய்தது மிரட்டல்!

இரண்டு எதிரெதிதர் நிலைகளும் ஒரே நோக்கத்துக்காகத்தான். அன்று ரசிய ஆதரவு முகாமில் இந்தியா இருந்ததும், இலங்கை அமெரிக்க ஆதரவு முகாமிலும் இருந்தது. உலகு தழுவிய பனிப்போர் சூழலில்தான் இந்த ‘ஸ்பான்சர்ஷிப் முடிவு’ எடுக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இலங்கையை மிரட்டி தனது செல்வாக்கில் வைத்திருக்கும் பொருட்டே இந்திரா காந்தி போராளிக் குழுக்களுக்கு உதவி செய்தார். நிச்சயமாக இது ஈழத்தமிழரின் விடுதலைக்காக செய்யப்பட்டதில்லை. மேலும் இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தின் மாற்றமுடியாத வடுவாய் பதிந்திருக்கும் பல சீரழிவுகளுக்கும் இந்திராவின் இந்த ஸ்பான்சர் புரட்சி வழி ஏற்படுத்தியிருக்கிறது. குறுக்கு வழியில் விடுதலையை சாதிக்கலாம் என்ற பிரமையை ஈழத்தின் இளைஞர்களுக்குக் கற்றுத்தந்த இந்திய உளவுத் துறை, அதன் பொருட்டு பணம் சம்பாதிப்பதற்காக போதைப்பொருள் கடத்துவது, சக குழுக்களை அழிப்பது போன்ற சதிகளையும் சொல்லிக் கொடுத்தது. எம்.ஜி.ஆரின் ஆதரவு பெற்ற விடுதலைப் புலிகள் தமது இருப்பை மட்டும் உறுதி செய்வதற்கு மற்ற குழுக்களை ஈவிரக்கமின்றி துடைத்தழித்தனர். இப்படியாக தனது தெற்காசிய மேலாதிக்க நோக்கத்துக்காக இந்திய ஆளும் வர்க்கம் நடத்திய சூதாட்டத்தில், ஈழத்தின் எதிர்காலம் பகடைக்காய் ஆக்கப்பட்டது.

ஒரு நாட்டின் விடுதலையும், புரட்சியும் இன்னொரு நாட்டின் ஆளும் வர்க்கத்தின் தயவில் நடைபெற முடியாது என்பதற்கு ஈழம் எடுப்பான எடுத்துக்காட்டாகும். அன்றைக்கு ஈழத்தின் போராளிக்குழுக்களை இந்திய உளவுத் துறைகள்தான் வழிநடத்தின என்பதிலிருந்து அந்தக்குழுக்களின் அரசியல் தரத்தை புரிந்து கொள்ளமுடியும். முக்கியமாக சொந்தநாட்டின் மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டும் தேவையை, நிர்ப்பந்தத்தை இந்த குறுக்கு வழி ரத்து செய்து விட்டது.

இப்படி இந்தியாவால் மிரட்டப்பட்ட இலங்கை, அன்று ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டை ஏற்றுக்கொண்டது. இதுவும் தொலைநோக்கில் இந்தியாவை ஈழ விடுதலைக்கு எதிராக நிறுத்துவதற்கு உதவும் என்று ஜெயவர்த்தனே-பிரேமதாசா கும்பல் புரிந்து கொண்டது. இந்திராவின் மரணத்திற்கு பிறகு இந்தி சினிமா ஹீரோவைப் போல வந்திறங்கிய ராஜீவ், ஈழத்தமிழர்கள் சார்பில் இலங்கையுடன் ஒப்பந்தம் போட்டார். அதை வைத்து இலங்கையை நிரந்தரமாக இந்தியாவின் செல்வாக்கில் வைத்துக் கொள்ளலாம் எனவும் இந்திய ஆளும் வர்க்கம் கணக்குப் போட்டது. இதே ஒப்பந்தத்தை வைத்து ஈழவிடுதலைக்கு எதிராக இந்தியாவை நிறுத்தும் வழியை யோசித்தார் ஜெயவர்த்தனே.

திம்பு பேச்சுவார்த்தையின் அடிப்படைகள் மறுக்கப்பட்டு ஒரு அடிமை ஒப்பந்தம் ராஜீவ் – ஜெயவர்த்தனே கும்பலால் ஈழமக்கள் மீது திணிக்கப்பட்டது. இந்திய முதலாளிகளின் நலனுக்காக அந்த ஒப்பந்தத்தை தீட்சித், இந்து ராம், பார்த்தசாரதி, பண்ருட்டி ராமச்சந்திரன் முதலானோர் அடங்கிய கூட்டம் வடிவமைத்தது. அதை அமல் படுத்தும் சாக்கில் தெற்காசிய நாட்டாமையின் இராணுவம் இலங்கையில் இறங்கியது. விடுதலைப் புலிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்தியாவின் வற்புறுத்தலால் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற குழுக்கள் இந்த ஒப்பந்தத்தை முழுமனதோடு ஆதரித்து ஈழமக்களுக்கு துரோகமிழைத்தன. ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை இந்தியாவின் தலையில் கட்டியதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்திய ராணுவத்தை திருப்புவதில் வெற்றிபெற்றது இலங்கை அரசு.

இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப் புலிகளின் போர் துவங்கியது. சில நாட்களில் புலிகளை முடித்துவிடலாம் என்று அதிகரா வர்க்கத்தால் தவறாக வழிநடத்தப்பட்ட இந்திய ராணுவம் 1500 வீரர்களைப் பலி கொடுத்தது. போரில் வெல்ல முடியாத ஆத்திரத்தை அப்பாவி தமிழ் மக்களை கொல்வதிலும், பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதிலும் தீர்த்துக் கொண்டது. இறுதியில் மூக்கறுபட்ட இந்திய ராணுவம் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது இந்தியா திரும்பியது. அதன் பின் ராஜிவ் கொலை செய்யப்பட்டார். இதை வைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக அறிவித்து தடை செய்து தமிழ் நாட்டில் ஈழம் என்று சொன்னாலே கைது செய்யப்படும் நிலை உருவாக்கப்பட்டது.

ராஜிவ் கொலையின் காரணமாகத்தான் இந்திய அரசு ஈழத்திற்கு எதிரான நிலைக்குச் சென்று விட்டதாகப் பலரும் பேசுகின்றனர். இது கடைந்தெடுத்த பொய்யாகும். சோ, சுப்ரமணியசுவாமி, ஜெயலலிதா, இந்து ராம் போன்ற பார்ப்பனர்கள் கூட்டமும் ஊடகங்களும் ஈழப் போராட்டத்துக்கு எதிராக நஞ்சைக் கக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், ராஜீவின் மரணத்தை மிகப்பெரிய தேசிய அவமானமாக சித்தரித்துக் குமுறுகிறார்கள்.

இலங்கை சென்ற ராஜீவ் காந்தியை ஒரு சிங்கள சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால் தாக்கினான். அதுவும் கூட கொலை முயற்சிதான். இதற்காக இந்தியா இலங்கை மீது படையெடுத்ததா என்ன? அல்லது அந்த சிப்பாயைத் தூக்கில் போட்டு விட்டார்களா? இரண்டுமில்லை. அந்த சிப்பாய் தண்டனைக்காலம் முடிந்து தற்போது வெளியே வந்துவிட்டான். ராஜீவ் கொலை செய்யப்படாவிட்டாலும் புலிகள் விசயத்தில் இந்தியா இதே நிலையைத்தான் எடுத்திருக்கும்.

“தமிழர்கள் படற துன்பத்தைப் பார்த்து, ஏதோ நல்லது பண்லாம்னு எங்க ராஜீவ் காந்தி முயற்சி பண்ணாரு. அவரையே கொன்னுட்டீங்க, இனிமே நீங்க எக்கேடு கெட்டுப் போங்கப்பா. உங்க சங்காத்தமே வேணாம்” என்று இந்தியா மனம் வெறுத்து ஒதுங்கி விட்டதைப் போல காங்கிரஸ்காரர்கள் பேசுவதைக் கேட்கையில் ரத்தம் கொதிக்கிறது. “ஏதோ நடந்தது நடந்து போச்சு, அதை மனசுல வச்சுக்காதீங்க, நீங்க தலையிட்டு பாத்து செஞ்சாதான் உண்டு” என்ற பாணியில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இந்திய அரசிடம் மன்றாடுவதைப் பார்க்கும் போதோ குமட்டுகிறது.

அப்படியெல்லாம் ‘மனம் நொந்து’ இந்தியா எந்தக் காலத்திலும் ஒதுங்கி விடவில்லை. எனவேதான் அன்று முதல் இன்று வரை இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி கொடுப்பதையும், ஆயுதங்கள் தருவதையும் இந்தியா தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறது. ஏனென்றால், இந்திய மேலாதிக்க நோக்கத்துக்கு அது அவசியம்.

காஷ்மீரிலும், வடகிழக்கிலும் தேசிய இனப் போராட்டங்களை ஒடுக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிக்குமா? தனது மேலாதிக்க நலனுக்காக தமிழக மீனவர்களை ஆண்டு தோறும் இலங்கைக் கடற்படைக்கு காவு கொடுத்து வரும் அரசு, ஈழத்தமிழனின் உயிரைக் காப்பாற்றுமா?

புலிகள் ஈழம் கேட்கிறார்கள். இந்திய ஆளும் வர்க்கமோ தெற்காசியாவைக் கேட்கிறது. இதில் எந்தக் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார் மன்மோகன் சிங்? சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் அவர் பேசியதைப் படித்துப் பாருங்கள். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், பூடான் அனைத்தையும் சேர்த்து தெற்காசிய சுதந்திரப் பொருளாதார மண்டலமாக்கி, எல்லா நாடுகளுக்கும் சேர்த்து ஒரே நாணயத்தையும் கொண்டு வரவேண்டும் என்பதுதான் மன்மோகன் பேச்சின் மையப்பொருள்.

உலகமயமாக்கல் கொள்கையின் விளைவாகப் பணக்கொழுப்பு பெருகி ‘சந்தை … சந்தை’ என்று தினவெடுத்துத் திரியும் அம்பானிக்கும், டாடாவுக்கும், மித்தலுக்கும் தெற்காசியாவை வாங்கித் தருவதற்கு இந்திய அரசு வேலை செய்யுமா, தமிழர்களுக்கு ஈழம் வாங்கித் தருவதற்கு வேலை செய்யுமா?

“வங்காளிகளுக்கு பங்களாதேஷ் வாங்கிக் கொடுக்கவில்லையா?” என்கிறார் கருணாநிதி. “அண்ணனுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்தியே, எனக்கு மட்டும் ஏன் சாக்லெட் வாங்கிக் கொடுக்க மாட்டேங்கிறே?” என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான கேள்வி இது. அன்றும் வங்காளிகளுக்கு தனி நாடு பெற்றுத்தருவது இந்திய அரசின் நோக்கமாக இருக்கவில்லை. பாகிஸ்தானை உடைப்பதுதான் அன்று இந்தியாவின் நோக்கம். நெல்லுக்கு இரைத்த நீர் புல்லுக்கும் பொசிந்தது – வங்காள தேசம் பிறந்தது. புல்லுக்கு நீர் இரைப்பது இந்தியாவின் நோக்கமாக அன்றைக்கும் இல்லை. இன்றைக்கும் இல்லை.

“இலங்கைக்கு பாகிஸ்தானும், சீனாவும் ஆயுதம் கொடுக்கிறார்கள். அதைத் தடுத்து இலங்கையை நம் கண்ட்ரோலுக்குக் கொண்டு வரவேண்டுமானால், நாம் ஆயுதம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்பதுதான் இந்திய மேலாதிக்கத்தை நியாயப்படுத்த வெளியுறவுத் துறை அதிகாரிகள் முன்வைக்கும் வாதம். “அப்படி நீங்கள் கொடுத்தாலும் எசமானே, சிங்களவன் உங்களுக்கு விசுவாசமாக இருக்கமாட்டான். தமிழன்தான் விசுவாசமாக இருப்பான். பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையில் இறங்கிவிட்டால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து. எனவே இந்தியாவின் பாதுகாப்புக்காகவாவது தமிழ் ஈழத்தை ஆதரியுங்கள்” என்பது இங்குள்ள சில தமிழ் உணர்வாளர்களின் எதிர்வாதம். இது எதிர்வாதமல்ல, அதே வாதம்தான் என்பது கூட அவர்களுக்குப் புரியவில்லை. சிங்கள அடிமைத்தனத்துக்கு மாற்றாக இந்திய அடிமைத்தனத்தை சிபாரிசு செய்யும் இந்தக் கோரிக்கை எவ்வளவு ஆபாசமாக இருக்கிறது என்பது உரைக்கவுமில்லை.

“இதெல்லாம் ஒரு தந்திரம். நாங்கள் இந்திய அரசிடம் ஏமாந்து விடுவோமா என்ன” என்று இந்தப் புத்திசாலிகள் நம்முடைய காதில் கிசுகிசுக்கிறார்கள். இதே வசனத்தைத் தான் இந்திய உளவுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகள் 1983 இல் பேசினார்கள். கேட்டோம். தந்திரத்தில் வென்றது யார் என்பதையும் அனுபவத்தில் கண்டு விட்டோம். மறுபடியும் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் அதே தந்திரம்!

நம்முடைய தமிழ் உணர்வாளர்களுக்குக் கம்யூனிசத்தைக் கட்டோடு பிடிக்காது என்பது தெரிந்த கதை. இருந்தாலும் தொடர்ந்து வங்காளதேசத்தை உதாரணம் காட்டும் அவர்கள் ஒரு மாற்றத்துக்கு நேபாளத்தைப் பார்க்கலாமே! ‘நேபாளத்தில் மன்னராட்சி தொடரவேண்டும்’ என்பதற்காக இந்தியா செய்யாத தகிடுதத்தங்கள் இல்லை. நேபாளத்துக்கு ஆயுத சப்ளை இந்தியாவும், அமெரிக்காவும்தான். மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தை நசுக்க ஆன உதவிகளையெல்லாம் இந்தியா செய்தது. பிறகு ‘மாவோயிஸ்டுகளுடன் சேராதீர்கள்’ என்று ஏழு கட்சிக் கூட்டணியை மிரட்டியது, தாஜா செய்தது. கூட்டணி அமைந்த பிறகு அதனை உடைக்க கொய்ராலாவைத் தூண்டி விட்டது. இலட்சக்கணக்கான மக்கள் அரண்மனையை முற்றுகையிட்டு முழங்கிக் கொண்டிருந்த அந்தத் தருணத்திலும், முன்னாள் காஷ்மீர் மன்னர் கரண்சிங்கை அனுப்பி, மன்னராட்சியைப் பாதுகாக்க பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தது. பிறகு தேர்தலில் மாவோயிஸ்டுகளைத் தோற்கடிக்க தெராய் பகுதியில் தனிநாடு கோரிக்கையைத் தூண்டி விட்டு அவர்ளுக்கு ஆயுதமும் கொடுத்தது.

ஜனநாயகத்துக்கு எதிராக மன்னராட்சியை ஆதரிப்பதற்கு இந்திய ஆளும் வர்க்கம் கூறிய விளக்கம் என்ன? “நாம் மன்னராட்சியை ஆதரிக்காவிட்டால், நேபாள மன்னர் சீனாவின் பக்கம் சாய்ந்துவிடுவார்”. இந்த விளக்கத்தின் சொற்களை மட்டும் மாற்றிப் பாருங்கள். “நாம் சிங்கள அரசை ஆதரிக்காவிட்டால் அவர்கள் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து விடுவார்கள்”.

இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசின் கொள்கையைத் தீர்மானிக்கும் மேலாதிக்கக் கண்ணோட்டம் இப்படித்தான் தனது விளக்கத்தைக் கூறி வந்திருக்கிறது. இந்த விளக்கத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டுமானால், உடம்பில் ஜனநாயக ரத்தம் ஓட வேண்டும். வெறும் தமிழ் ரத்தம் மட்டும் ஓடும் தமிழர்களால் மேலாதிக்கத்தை எதிர்க்க முடியாது.

“எங்களை ஆதரியுங்கள். மன்னரைக் காட்டிலும் இந்திய அரசுக்கு விசுவாசமாக நாங்கள் நடந்து கொள்கிறோம்” என்று நேபாள மாவோயிஸ்டுகள் தமது நாட்டின் விடுதலைக்காக இந்தியாவிடம் இறைஞ்சவில்லை. புலிகளைப் போல நவீன ஆயுதங்கள், விமானப்படை, புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவி, வானொலி, வானொளி .. எதுவும் அவர்களிடம் இல்லை.

“ஈழத் தமிழனின் விடுதலை பற்றி எங்களைத் தவிர வேறு யாரும் பேசக்கூடாது என்று மற்றவர்களின் குரல்வளையை நெறித்த ‘வீரமும்’ அவர்களிடம் இல்லை. மிகவும் முக்கியமாக, நேபாள விடுதலைக்குக் குரல் கொடுப்பதற்காக, வீடணர் படையொன்றை இந்தியாவில் அவர்கள் உருவாக்கி வைத்துக் கொள்ளவில்லை. ஒருவேளை, இத்தகைய ராஜ ‘தந்திரங்கள்’ தெரியாத காரணத்தினால்தான் அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்களோ!

தந்திரங்களால் எந்த நாடும் விடுதலை அடைய முடியாது. அப்படி அடைந்து விட்டதாகக் கூறிக்கொண்டாலும் அது விடுதலையாக இருக்காது. எனவே, ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க எண்ணும் தமிழகத்து மக்கள் இந்திய மேலாதிக்கத்தை தயவு தாட்சண்யமின்றி அம்பலப்படுத்த வேண்டும். ஈழத் தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். இது இரண்டையும் பேசாமல், எவ்வளவு பெரிய சங்கிலி அமைத்தாலும் அது ஈழத்தமிழ் மக்களின் அடிமைச் சங்கிலியை அறுக்க உதவாது.

குறிப்பு:

‘இலங்கையில் இந்தியாவின் நலன்கள்’ என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள் பலருக்குப் புரிவதில்லை. இலங்கையில் டாடாவுக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் எவ்வளவு, டி.வி.எஸ், மகிந்திரா, பஜாஜ் வாகனங்களின் சந்தை எவ்வளவு, எண்ணெய்க் குதங்கள் எத்தனை, இன்னும் தனியார் துறை-பொதுத்துறை நலன்கள் என்னென்ன என்ற விவரங்களை ஈழத்தமிழ் வாசகர்கள் அறியத் தந்தால் இந்தியத் தமிழர்களின் மயக்கத்தைத் தெளிவிக்க உதவியாக இருக்கும்.

இந்திய அமைதிப்படை ஈழத்தில் ஆற்றிய அமைதிப் பணிகள், இந்திய உளவுத் துறையால் சீர்குலைக்கப்பட்ட ஈழப் போராட்டத்தின் கதைகள் ஆகியவற்றையும் நினைவு படுத்தினால், பாரத மாதா பக்தர்கள் கொஞ்சம் புத்தி தெளியக்கூடும்.

“நேபாள மாவோயிஸ்டுகள் இப்போது இந்தியாவைத் தொழில் தொடங்க அழைக்கவில்லையா?”

என்பன போன்ற கேள்விகளுடன் எதிர்வாதத்துக்கு சில பதிவர்கள் தயாராக இருக்கக் கூடும். முதலில் கூரையேறி கோழி பிடிக்கும் கதையைப் பேசுவோம். ‘வானமேறி வைகுந்தம் போகும் வழி’ பற்றி அப்புறம் விவாதிக்கலாம்.

http://www.vinavu.com/2008/10/23/eelam1/

//[ஃஉஒடெ நமெ='ணெல்லையன்' டடெ='29 Mஅய் 2010 - 11:12 PM' டிமெச்டம்ப்='1275171134' பொச்ட்='589999']

அன்பின் நாரதர், என் மனதுக்கு சரி என்று பட்டதை எழுதினேன்! அங்கு மக்கள் சீரளிகிறார்கள்/அழிக்கப்படுகிறார்கள் கேட்பார் இல்லாமல்!! ... இன்றும் கிளிநொச்சியில் மீளகுடியமர்ந்தவர்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடலங்கள்!!!!! நாளை, இன்று விடுவிக்கப்படும் விடுதலைப் புலிகளின் முன்னால் உறுப்பினர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படப் போகிறார்கள்! ... இது நடைபெற்றுக்கொண்டிருக்கத்தான் போகிறது ... தடுப்பார் இல்லாமல்!

எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் அறநிலை குறித்து எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை! நாம் ஆண்டாண்டாக அனுபவித்த அடக்குமுறைகளின் உச்சமே எமது ஆயுதப்போராட்ட வடிவம்! அது இன்று அழித்தொழிக்கப்பட்டிருக்கிற்து, எமது அரசியலற்ற ஆயுதப்போராட்ட முறையினால்! ஆனால் இன்று எமது இலக்கு தொடர்பாக பல சந்தேகங்கள், எமது இலக்கு சாத்தியப்படுமா?????

இன்றைக்கு எம் மக்களுக்கு தேவை ஒரு பாதுகாப்பான சூழ்நிலையே! அது இந்தியாவை தவிர்த்து எவரும் எமக்கு தர முடியாது என்பது எனது உறுதியான நம்பிக்கை!!!! நானும் இந்திய இராணுவ காலங்களில் பல இன்னல்களை பட்டவந்தான்.என் கண் முன்னாலேயே எம்முறவுகள் அவர்களினால் பறிக்கப்பட்டதை பார்த்தவன்.

அவைகளுக்கு மேலாக ... அங்குள்ள எம்மக்களுக்கு இன்று ஒரு வாழ்வு தேவை!!! அவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதமான வாழ்வு தேவை!! இதை நாங்கள் வழங்கவே முடியாது, இதை நீங்கள் ஏற்கிறீர்களோ இல்லையோ? அதுதான் இன்றைய தேவை அம்மக்களுக்கு!!!! அதை இந்த மேற்குலகம் ஒருக்காலும் வழங்காது, அது சாத்தியமும் இல்லை!! இந்திய எனும் பெரும் சந்தையின் மத்தியில் எம் பிரட்சனைகள், மேற்குலகிற்கு செல்லாக்காசாகி விடும்!!!

நாம் தனித்து ஏதாவது இனியும் சாதிக்கலாமா??????? இல்லை!!!!!! எமக்கென்று ஒரு நண்பன் தேவை! அது தற்போது இந்தியாவே!!

[/ஃஉஒடெ]

//

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று உங்களுக்கோ எனக்கோ விளங்கவில்லை.எம்மை அழித்த இந்தியாவை மீண்டும் மீண்டும் நட்புச் சக்தி என்று எவ்வாறு சொல்கிறீர்கள்? உண்மை தான் எமது மக்களுக்கு அவர்கள் துயரங்களை ஆற்றிக் கொள்ள தமது வாழ்க்கையை மீழ அமைத்துக் கொள்ள மிகப் பெரிய ஒரு இடை வெளி அவசியம் தான்.ஆனால் இந்த இடைவெளியில் நாம் எம்மை அழித்தது யார் எதற்காக அழித்தார்கள் என்று தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியம்.இல்லாவிட்டால் புலிகள் இழைத்த தவற்றை மீண்டும் மீண்டும் இழைத்துக் கொண்டிருப்போம்.

நீங்களே குழம்பிப் போயிருகிறீர்கள்.உமை எல்லோரையும் ஒன்று கூடி லண்டனில் சேகரிக்கப்பட்ட நிதி தொடர்பாக எடுக்கும் முயற்ச்சி வரவேற்க்கத் தக்கது.புலத்திலையே கடன் வாங்கி நிதி கொடுத்த பல குடும்பங்கள் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமால் இன்று நிற்கதியான நிலையில் இருக்கின்றன.சேத்த காசை வைதிருப்பவர்கள் இந்தக் குடும்பங்களின் கடனையாவது அடைக்கலாம்.தயவு செய்து உங்கள் நம்பிக்கையீனங்களால் எடுக்கப்படும் சிறு முயற்ச்சிகளையும் குழப்பி விடாதீர்கள். நன்றி.

விட்டால் துரையப்பா,பஸ்தியாம்பிள்ளை எல்லோரையும் ரோ சொல்லித்தான் போட்டது எனச் சொல்வீர்கள் போலிருக்கு.

உங்களைப் போல பொய் சொல்லும் பழக்கம் எங்களுக்கு இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.