Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களத்தில் இருக்கின்ற யதார்த்த நிலைமையை புரிந்து கொள்ளாமையே போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவிற்கு காரணம் வித்யாதரன் ATBC யிற்கு வழங்கிய செய்தி கருத்தாய்வு.

Featured Replies

பாகம் 1

http://yarl.com/articles/files/100601_vithyatharan_part1.mp3

பாகம் 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72439

நன்றி: ATBC அவுஸ்திரேலியா

இந்த செவ்வியை மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்கள் ஒவ்வொருவரும் கேட்கவேண்டும். முக்கியமாக அநாமதேய இணையத்தளங்களை நடத்துபவர்கள் கேட்க வேண்டும்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் அநாமதேய இணையத்தளங்களை நடத்துபவர்களின் முகத்தில் ஓங்கி பலமான குத்து ஒன்று குத்தியிருக்கிறார். அவர்கள் இப்போது நிலைகுலைந்திருப்பார்கள் என நினைக்கிறேன். இனியாவது இந்த அநாமதேயங்கள் திருந்துவார்கள் என நம்புவோம்.

ஈழம்ஈநியூஸ் பதிவு சங்கதி அதிர்வு போன்ற இணையத்தளங்களுக்கு இது சமர்ப்பணம்.

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தளங்கள் நடத்துபவர்கள் மட்டுமல்ல; இதே களத்தில் அனைத்துலக தொடர்பகத்துக்கு ஆதரவாகவும் அல்லது அவர்களை நியாயப்படுத்த முனைபவர்களும் கேட்டுத் திருந்தவேண்டும்.

போராட்டத்துக்காக தமது பிள்ளைகளை, கணவன்மாரை, மனைவிமாரை கொடுத்த எத்தனையோ குடும்பங்கள் இன்று வீதியில் நிர்க்கதியாக இருக்கின்றன. இதிலும் இவர்களின் பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக அல்லவா வீதியில் நிற்கின்றனர்.

அனைத்துலக தொடர்பகத்துக்காக வேலை செய்த பெருமக்களே! மனச்சாட்சியின்படி இறுதி நேரத்தில் சேகரித்த நிதியினையும் நீங்கள் முன்னர் முதலீடு செய்தவற்றில் இருந்து கிடைக்கும் வருவாய்களை தாயகத்து வீதியில் நிர்க்கதியாக நிற்கும் குடும்பத்தினருக்காவது உதவுங்களேன்.

அவர்களாவது உங்களை மனமார வாழ்த்துவார்கள். அதனைவிடுத்து யாருக்கு துரோகிப்பட்டம் கொடுக்கலாம், நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை குழப்ப எனத் திட்டமிடாதீர்கள். இந்தத்திட்டமிடல்களை ஆக்கபூர்வமான காரியங்களில் செலவிடுங்கள்.

Edited by nirmalan

இணையத்தளங்கள் நடத்துபவர்கள் மட்டுமல்ல; இதே களத்தில் அனைத்துலக தொடர்பகத்துக்கு ஆதரவாகவும் அல்லது அவர்களை நியாயப்படுத்த முனைபவர்களும் கேட்டுத் திருந்தவேண்டும்.

போராட்டத்துக்காக தமது பிள்ளைகளை, கணவன்மாரை, மனைவிமாரை கொடுத்த எத்தனையோ குடும்பங்கள் இன்று வீதியில் நிர்க்கதியாக இருக்கின்றன. இதிலும் இவர்களின் பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக அல்லவா வீதியில் நிற்கின்றனர்.

அனைத்துலக தொடர்பகத்துக்காக வேலை செய்த பெருமக்களே! மனச்சாட்சியின்படி இறுதி நேரத்தில் சேகரித்த நிதியினையும் நீங்கள் முன்னர் முதலீடு செய்தவற்றில் இருந்து கிடைக்கும் வருவாய்களை தாயகத்து வீதியில் நிர்க்கதியாக நிற்கும் குடும்பத்தினருக்காவது உதவுங்களேன்.

அவர்களாகவது உங்களை மனமார வாழ்த்துவார்கள். அதனைவிடுத்து யாருக்கு துரோகிப்பட்டம் கொடுக்கலாம், நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை குழப்ப எனத் திட்டமிடாதீர்கள். இந்தத்திட்டமிடல்களை ஆக்கபூர்வமான காரியங்களில் செலவிடுங்கள்.

இதுதான் எனது கருத்தும்....கடைசி நேரத்தில் சேர்த்த காசுக்கு கணக்கு காட்ட வேண்டும்...அங்கே ***** போய் சேரவில்லையாம்....அப்ப...

களத்திலிருந்து ஒரு சரியான கருத்து.

மாறி மாறி அனாமதேயமாக குற்றச் சாட்டுக்களை முன் வைக்காமால், மக்களின் வாழ்வை வளம்படுத்தும் திட்டங்களையும் அரசியல் ரீதியாகத் தெளிவான நிலைப்படுகளுடனும் தேசியம் தன்னாட்ச்சி சுய நிர்ணயம் என்னும் அடிப்படையில் செயற்பட்டால் இவ்வாறான குழுவாதங்களுக்கு அவசியம் இல்லை.

இனியும் இவ்வாறு ஆளையாள் குற்றச் சாட்டுக்களை முன்வைக்காமால் எதிரியுடன் சேர்ந்து இயகுபவர்களை பகிரங்கமாக மக்கள் முன் ஆதாரத்துடன் அம்பலப்படுதுங்கள்.

அனைத்துலகச் செயலகம் என்று உங்கள் அனைத்து பிரச்சினைகளையும் ஒரு அமைப்பின் மீது சாட்டுவது தவறான அணுகுமுறை.

செயலகத்தில் இருந்தவர்கள் தவறான் பாதியில் செயற்பட்டிருந்தால் அவர்களை முதலில் அம்பலப்படுதுங்கள்.ஒட்டு மொத்தமாக எலோர் மீதும் பழி சொல்வது எந்த விதமான ஆரோக்கியமான நடைமுறையும் அல்ல.வித்தியாதரன் சொன்ன விடயங்களை முழுமையாக விளங்கிக் கொண்டிருந்தால் இவ்வாறு எழுதிக் கொண்டு இருக்க மாட்டீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்களத்தில் பணத்துக்கு கணக்கு கேட்பவர்களை பார்த்தால் போராட்டத்துக்கு ஒரு யூரோவெனும் கொடுக்காதவர்களகவே இருக்கிறார்கள், மற்றது ஒட்டுகுழுக்களுடம் சேர்ந்து இயங்குபவர்கள், மற்றவர்கள் தேசியத்துக்கு எதிராக ,புலிகளுக்கு எதிராக கருத்து எழுதுகிறவர்களாக இருகிறார்கள், பணம் கொடுத்தவர்கள், தமது உறவுகள் போய்விட்டார்களே, போராளிகள் போய்விட்டார்களே என்றுகவலையில் இருக்க இவர்களுக்கு அப்போதும்,இப்போது, எப்போதும் பணத்தில் மட்டுமே குறி.

"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி அங்கே புல்லுக்கும் பொசியுமாம்" என்பது போல போராட்டத்துக்கு என கொடுக்க பட்ட பணம் சில புல்லுருவிகளுக்கும் சென்று இருக்கலாம், அதற்காக ஒட்டுமொத்த செயற்பாட்டளர் மீதும் சேறு பூசும் இவர்கள் நோக்கம் கபட நோக்கம் கொண்டது, தமிழர் நலன் கருதி இயங்கும் அனைத்து அமைப்புகளையும் உருக்குலைப்பதே இவர்கள் நோக்கம், இருக்கும் அமைப்புகள் அழிக்கபட்டால் இனி புதிதாக எதுவும் வரமுடியாத இன்றைய நிலையை உணர்ந்து இவர்கள் செயற்படுகிறார்கள். இறுதிகாலத்தில் எத்தைனை கப்பல்கள் அழிக்கபட்டன என இவர்களுக்கு தெரியுமா?அவற்றில் சென்ற ஆயுதங்கள் எல்லாம் வெறும் துவக்குக்கு போட்டு அடிக்கிற ரவுன்சுகள் என்றா இவர்கள் நினைக்கிறார்கள், அந்த ஆயுதங்களின் பெறுமதிகள் இவர்களுக்கு தெரியுமா? உண்மையில் பணம் கொடுத்தவர்களுக்கு அவை தெரிந்து இருக்கும், இவகளுக்கு எங்கே தெரிய போகிறது.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் மக்களை ஒரு மயைக்குள் வைத்திருக்க முனையும் ஏமாற்றுப்பேர்வழிகளுக்கு மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரன் நல்ல சாட்டையடி கொடுத்திருக்கின்றார். களநிலைமைகளை சரிவரப்புரிந்துகொள்ளாது இன்னும் கற்பனையுலகில் புலம்பெயர் மக்களை இட்டுச்செல்லும் இத்தகைய புல்லுருவிகள் யாராயினும் அவர்களை புலம்பெயர் மக்கள் இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும். இங்கு களத்தில் வாழும் மக்களுக்கு புலத்தில் இருந்து ஒருபோதும் தலைமைத்துவத்தை வழங்கமுடியாது. களத்தில் இருக்கும் தலைமைகளுக்கு உந்து சக்தியாக புலம்பெயர் அமைப்புகள் இருக்கலாமே தவிர தலைமைத்துவத்தை வழங்க முடியாது. அப்படி வழங்க நினைப்பவர்கள் திரு. வித்தியாதரன் அவர்கள் குறிப்பிடுவதுபோன்று களத்திற்கு வந்து அரசியல் செய்யட்டும். இந்த ஒலிப்பதிவு புலம்பெயர் மக்கள் அனைவரும் கேட்கவேண்டிய பதிவு.

இந்த வானொலியே ஒரு மார்க்கமாய்த்தான் இருக்கு ...தேசியம் என்டிச்சினம் பிறகு நாடுகடந்த அரசுக்கு வேட்பாளர்களை வைச்சினம் ...தோல்வியடைந்தவுடன் நாடுகடந்த அரசு பம்மாத்து நாட்டிலபோய் அரசியல் செய்யுங்கோ என்கிறார்கள், :unsure::unsure:

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

இக்களத்தில் பணத்துக்கு கணக்கு கேட்பவர்களை பார்த்தால் போராட்டத்துக்கு ஒரு யூரோவெனும் கொடுக்காதவர்களகவே இருக்கிறார்கள், மற்றது ஒட்டுகுழுக்களுடம் சேர்ந்து இயங்குபவர்கள், மற்றவர்கள் தேசியத்துக்கு எதிராக ,புலிகளுக்கு எதிராக கருத்து எழுதுகிறவர்களாக இருகிறார்கள், பணம் கொடுத்தவர்கள், தமது உறவுகள் போய்விட்டார்களே, போராளிகள் போய்விட்டார்களே என்றுகவலையில் இருக்க இவர்களுக்கு அப்போதும்,இப்போது, எப்போதும் பணத்தில் மட்டுமே குறி.

"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி அங்கே புல்லுக்கும் பொசியுமாம்" என்பது போல போராட்டத்துக்கு என கொடுக்க பட்ட பணம் சில புல்லுருவிகளுக்கும் சென்று இருக்கலாம், அதற்காக ஒட்டுமொத்த செயற்பாட்டளர் மீதும் சேறு பூசும் இவர்கள் நோக்கம் கபட நோக்கம் கொண்டது, தமிழர் நலன் கருதி இயங்கும் அனைத்து அமைப்புகளையும் உருக்குலைப்பதே இவர்கள் நோக்கம், இருக்கும் அமைப்புகள் அழிக்கபட்டால் இனி புதிதாக எதுவும் வரமுடியாத இன்றைய நிலையை உணர்ந்து இவர்கள் செயற்படுகிறார்கள். இறுதிகாலத்தில் எத்தைனை கப்பல்கள் அழிக்கபட்டன என இவர்களுக்கு தெரியுமா?அவற்றில் சென்ற ஆயுதங்கள் எல்லாம் வெறும் துவக்குக்கு போட்டு அடிக்கிற ரவுன்சுகள் என்றா இவர்கள் நினைக்கிறார்கள், அந்த ஆயுதங்களின் பெறுமதிகள் இவர்களுக்கு தெரியுமா? உண்மையில் பணம் கொடுத்தவர்களுக்கு அவை தெரிந்து இருக்கும், இவகளுக்கு எங்கே தெரிய போகிறது.

இதுதான் எனது கருத்தும்.

இதுதான் எனது கருத்தும்....கடைசி நேரத்தில் சேர்த்த காசுக்கு கணக்கு காட்ட வேண்டும்...அங்கே ***** போய் சேரவில்லையாம்....அப்ப...

எவ்வளவு காசு குடுத்தனிங்கள் அங்கை அனுப்பி வைக்க எண்டு...??

ஒட்டு மொத்தமாய் பிரித்தானியாவிலை குடுக்க பட்ட காசின் அளவு அண்ணளவாக எவ்வளவு இருக்கும்...?? ஒரு குடும்பம் எவ்வளவு பணத்தை சுமாராக கொடுத்து இருப்பார்கள்....?? பிரித்தானியாவிலை எவ்வளவு மக்கள் காசு குடுக்கிறவை...??

இங்கை கதை சொல்லுற நிறைய பரதேசியள் தொடருந்துக்கு 5 பவுன்ஸ் குடுத்து ரிக்கட் எடுக்க வேணுமே எண்டு பாராளுமண்றத்துக்கு முன்னால நடந்த போராட்டத்துக்கு ஒவ்வொரு நாளும் வந்து இருக்காதுகள்... அதுக்கை காசை அள்ளிக்குடுத்தவையாம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மூத்த பத்திரிகையாளர் களத்தில் இருந்து 30 வருடம் இயங்கிக் கொண்டிருப்பவர்.. சொன்ன பல கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு.

ஆனால் இன்றைய இராணுவ நெருக்குவாரங்கள் அழுத்தங்களை மக்கள் மீது பிரயோகித்து அதில் இருந்து மக்களுக்கு மீட்பளிப்பதாக பாசாங்கு காட்டி ஈபிடிபி போன்ற கொலைகார அமைப்புக்கள் 48,000 வாக்குகளைப் பெற முடிகிறது என்பது கடந்த 30 வருட கால வரலாற்றில் இது முதற் தடவையல்ல. ஏலவே 1987 இல் இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் வடக்குக் கிழக்கு மாகாண சபை.. மற்றும் சிறீலங்கா நாடாளுமன்றங்களுக்கு தெரிவானவர்களில் பலர் இந்திய அரசுக்கு சார்ப்பாக மக்களின் நோக்கங்களுக்கு எதிராகச் செயப்பட்டவர்களே. அவர்களை மக்கள் புலிகளுக்கு எதிராக தேர்ந்தெடுத்ததாகவே அன்று காட்டப்பட்டது.

ஆனால் அதே மக்கள் பின்னர் நடந்த தேர்தல் ஒன்றில் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான சக்திகளாக இருந்த பாலகுமாரன் அண்ணா தலைமையிலான ஈரோஸ் அமைப்புக்கு வாக்களித்து பலரை சிறீலங்கா நாடாளுமன்றுக்கு அனுப்பி வைத்தனர். அப்போதும் புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர்.. ஒழிக்கப்பட்டு விட்டனர் என்பதுதான் சிங்கள மற்றும் இந்திய தேசத்தால் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரமாக இருந்தது.

புலம்பெயர் மக்களை நோக்கி வரும் கள யதார்த்ததிற்கு புறம்பான தகவல்களை இட்டு காட்டும் கரிசனை பற்றி சம்பந்தப்பட்ட எல்லோரும் கவனத்தில் எடுக்க வேண்டி இருப்பது அவசியம். அதேவேளை சிறீலங்கா என்ற தேசத்தில் பல பத்திரிகையாளர்கள் குறிப்பாக தமிழ் பத்திரிகையாளர்கள் தம்மை வெளிப்படுத்திச் செயற்பட்டு கொலையுண்டு போனதற்கு வித்தியாதரன் எவ்வாறான பாதுகாப்பு உத்தரவாதங்களை கள யதார்த்தத்தின் அடிப்படையில் வழங்கி இருந்தார் என்பது புரியவில்லை.

மேலும்.. கள யதார்த்தம் என்ற போர்வையில்.. சிங்கள இராணுவ இயந்திரம் இயக்கிக் கொண்டிருக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேர்தல்களை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்போ வித்தியாதரனோ ஆட்சேபனைகள் தெரிவிக்கவில்லை. அண்மையில் கோத்தாவை பேட்டிகண்ட பிபிசி நிருபர்.. சொன்ன விடயம்.. "நான் போகும் இடமெல்லாம் இராணுவமே நிற்கிறது போர் முடிந்த பின்னும் புலிகள் அழிந்த பின்னும் இத்தனை இராணுவம் அவசியமா என்று கேட்டார்" அதற்கு கோத்தா சொன்ன பதில் புலிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று.

கள யதார்த்தம் என்பதை 48,000 ஈபிடிபி அல்லது சிங்கள அரசிற்கு விழுந்த வாக்கோடு மட்டும் வைத்து நோக்க முடியாது. அப்படி நோக்குவதாக இருப்பின் 1987 இன் பின்னர் அப்போது அரசுகளால் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்கள் உருவாக்கிய கள யதார்த்ததின் படி.. புலிகள் எழுந்திருக்கவே முடியாது.

அப்படியான ஒரு சிக்கலான நிலை களத்தில் இன்று இருக்கின்றது. சிங்களப் பேரினவாதத்திற்கு சார்ப்பான நிலைப்பாடு சிங்கள இராணுவ இயந்திரத்தால் வடக்குக் கிழக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறது (இதுவும் கோத்தா சொன்னது போல் சிங்கள அரசும் செய்யும் மூளைச்சலவை தான்) என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியது உண்மை. ஆனால் அதேவேளை சிங்கள இராணுவ இயந்திர நிர்வாகம் வடக்குக்கிழக்கை ஆள.. அதற்குள் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்று சொல்கிறது வித்தியாதரன் சார்ந்திருக்கும் கட்சி... இது எந்த கள யதார்த்திற்கு அமைய என்று புரியவில்லை.

கூட்டாட்சி பற்றி புலிகளோடு பேசிய காலத்தில் பரிசீலித்த சிங்கள அரசு கூட்டாட்சி சிந்தனையையே கைவிட்டு விட்டதாக கோத்தா மூலம் பிபிசிக்கு சொல்லி இருக்கிறது. இப்படியான ஒரு கள யதார்த்தத்தை உருவாக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் வளைந்து கொடு நிமிர்ந்து கொடு கொள்கையோடு அமைந்த சிங்கள அரசோடு இணக்க அரசியல் செய்யும் தற்துணிவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இத்தனை காலமும்.. நாம் போராடிய அடிப்படைகளை விட்டு.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு கள யதார்த்தம் என்பதன் பெயரால் களத்தில் தோன்றி இருக்கும் பின்னடைவை காட்டி கொள்கைகளை கைவிடுவதுதான் தாயக மக்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி இருப்பதோடு புலம்பெயர் மக்களின் தாயக மக்களின் இதயங்களில் இருக்கும் விருப்புக்களுக்கு எதிராகவும் இருக்கிறது. இதுவும் யதார்த்தம் என்பதை வித்தியாதரன் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும்.

இக்கருத்தை அநாமதேயமாக எழுத வேண்டிய அளவிற்குத்தான் சிறீலங்காவின் மனித உரிமை பேணல் இருக்கிறது. சிறீலங்காவில் குறைந்தது மேற்குலக நாடுகளில் உள்ள அளவிற்கு ஒரு கருத்துச் சுதந்திரத்தை புலிச்சாயம் பூசாது பயங்கரவாத சாயம் பூசாது கருத்துக்களை உள்வாங்கும் அல்லது வெளியிட சந்தர்ப்பம் வழங்கும் நிலையை வித்தியாதரன் உருவாக்குவாராக இருந்தால் பல மக்களும் பல கருத்துக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில செயற்பாடுகளில் பொதிந்து கிடக்கும் மர்மம் மற்றும் சிறீலங்காவில் இருக்கும் ஜனநாயகக் கட்சிகள் என்று சொல்வோரினது உண்மைகளை கொண்டு வெளிப்படைக் கருத்துக்களை முன்வைக்க தயாராகவே இருக்கின்றனர்.

எங்களுக்காக குரல் கொடுத்து அழிந்த பத்திரிகையாளர்கள் பலர். அவர்கள் வரிசையில் மக்கள் எனியும் நிற்க முடியாது வித்தியாதரன். நீங்கள் நடுவுநிலைமை வாதியாக இருந்தும் கோத்தாவால் பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டவர். ஆனால் வெளிப்படையாக புலிகளை ஆதரிக்கும் மக்கள் அதை சொல்ல முடியாத நிலையே உலகெங்கும் சிறீலங்கா மற்றும் இந்தியாவால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த நிலையை நீக்கிவிட்டு சிங்கள இராணுவ இயந்திரத்தை வடக்குக்கிழக்கில் இருந்து விலக்கிவிட்டு... சிறீலங்காவின் தெற்கு மேற்கில் இரு முறை சிங்கள ஜே வி பியினர் கிளர்ச்சி செய்த போதும் இராணுவ இயந்திர நிர்வாகத்தை சிங்கள அரசு கொண்டு வந்ததில்லை.. அப்படி ஒரு நிலையை முதலில் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்துவிட்டு புலம்பெயர் மக்களை அரசியல் செய்ய அழைப்பதே அரசியலுக்கும் தமிழ் மக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் பாதுகாப்பாகவும் காத்திரமாகவும் இருக்க முடியும்.

ஈபிடிபியோடு ஒருவன் இணைந்து பணிபுரிகிறான் என்றால் அவன் சிறீலங்கா அரசோடு இணைந்து செயற்படுகிறான் என்பது பொருள். அவனுக்கு எவரும் பாதுகாப்பு அளிக்க வேண்டியதில்லை. சிங்கள அரச படைகள் அதைச் செய்யும். லண்டனில் 100 வருடம் வாழ்ந்துவிட்டு வந்தாலும் சிறீலங்கா அரசாங்கப் படைகள் பாதுகாப்பு அளிக்கும் என்றால் எவரும் அரசு சார் அரசியல் செய்யலாம். ஏன் வரதராஜப் பெருமாள் இந்தியப் படைகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு முதலமைச்சர் ஆகவில்லையா..??! ஏன் அந்த மக்கள் தலைவர் மக்களோடு நிற்காது 1990 ஆம் ஆண்டு இந்தியப்படைகளோடு கப்பலேறினார்..???! மீண்டும் இம்முறை திரும்பி வந்து தேர்தலில் நின்று 1000 வாக்குகளைக் கூட பெற முடியாது தோற்றுப்போனார். இவற்றிற்கும் கள யதார்த்ததின் அடிப்படையில் நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் வித்தியாதரன்.. சொல்வீர்களா...??!

Edited by nedukkalapoovan

டாம்

முக்கியமாக அநாமதேய இணையத்தளங்களை நடத்துபவர்கள் கேட்க வேண்டும்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் அநாமதேய இணையத்தளங்களை நடத்துபவர்களின் முகத்தில் ஓங்கி பலமான குத்து ஒன்று குத்தியிருக்கிறார். அவர்கள் இப்போது நிலைகுலைந்திருப்பார்கள் என நினைக்கிறேன். இனியாவது இந்த அநாமதேயங்கள் திருந்துவார்கள் என நம்புவோம்.

ஈழம்ஈநியூஸ் பதிவு சங்கதி அதிர்வு போன்ற இணையத்தளங்களுக்கு இது சமர்ப்பணம்.

டாம் இவை மட்டும் தான் தேசியம் பேசுகின்றன என்று ஒத்துக் கொள்கின்றீர்கள்

சரி அப்ப யாழ் இணையம் இனி அதன் பொறுப்பாளர்கள் , மட்டுநிறுத்திகள் எல்லாம் இனி சொந்த பெயரில் வதிவிட விலாசத்துடன் வலம் வருவார்களா ?

கேக்கிறவன் கேனயன் என்றால் எருமை மாடு ஏற்ப்பிளேன் ஒட்டுமாம்

நிர்மலன்

இணையத்தளங்கள் நடத்துபவர்கள் மட்டுமல்ல; இதே களத்தில் அனைத்துலக தொடர்பகத்துக்கு ஆதரவாகவும் அல்லது அவர்களை நியாயப்படுத்த முனைபவர்களும் கேட்டுத் திருந்தவேண்டும்.

நீங்கள் இருவரும் எதற்கெடுத்தாலும் உங்களுக்கு வேண்டாதவர்களுடன் தொடர்பு படுத்தி உங்கள் தனிப்பட்ட விரோதங்களை போகும் இடம் எல்லாம் கக்கிவருகின்றீர்கள் அதற்கு யாழ் களம் அமைத்துக் கொடுக்கின்றது

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டு மொத்தமாய் பிரித்தானியாவிலை குடுக்க பட்ட காசின் அளவு அண்ணளவாக எவ்வளவு இருக்கும்...?? ஒரு குடும்பம் எவ்வளவு பணத்தை சுமாராக கொடுத்து இருப்பார்கள்....?? பிரித்தானியாவிலை எவ்வளவு மக்கள் காசு குடுக்கிறவை...??

பிரான்சில் என்றால் எனக்கு தெரியும்

2 வீதமானவர்கள்தான் தானாக மனமுவந்து எந்த கேள்வியும்கேட்காது செய்தே ஆகவேண்டும் என்பதையுணர்ந்து காசு கொடுத்தவர்கள்

ஒரு 10 வீதமானவர்கள் தேடிப்போனால் இல்லையென்று சொல்லாது தம்மால் முடிந்த அளவைக்கொடுத்தார்கள்.

20 வீதமானோர் ஒழித்து விளையாடி முடிந்தவரை ஏமாத்தி அல்லது போறவரின் முகத்துக்காக முடியாது என்று சொல்லமுடியாதநிலை வந்தபின் கொடுத்தார்கள்.

இவர்கள் எழுதி உறுதிப்படுத்திய தொகையில் 25வீதம் தேறியதா என்றால் இல்லை என்றுதான் பதில்.

அதைவிட இவர்களை கண்டுபிடித்து பணம் வாங்க அந்த அங்கத்தவர் செலவளித்தநேரம், தொலைபேசி, போக்குவரத்து ,,,,, செலவு இதைவிட அதிகம்.

ஒரு 20 வீதமானோர் மதில்மேல் பூனைபோல் வாழாவிருந்தார்கள்.

கனக்க கதைப்பார்கள் காசு தரமாட்டார்கள்

மீதி 48வீதமானோர் புத்திசாலிகள் போல் வாய் பேசி கொடுத்தவனையும் விசரன் என்று விழித்து கொடுக்காது தடுத்தார்கள்.

ஆக பிரான்சில் ஒரு முப்பது வீதமே செய்தார்கள்.

நாட்டிலிருந்து கேட்கப்படும் தொகை இவர்கள் மேலேயே சுமத்தப்பட்டது.

சுமத்தப்பட்டிருக்கின்றது. இன்னும் சுமந்தபடியுள்ளனர்.

Edited by விசுகு

இங்கிலாந்திலும் இதே நிலை எண்டு தான் சொல்கிறார்கள்... எனக்கு எந்த விதமான தொடர்பும் இங்கு இல்லை..

எங்கட ஆக்கள் போதுமான நிதியை குடுத்து இருந்தால் புலிகள் சேர்க்கும் கொஞ்சப்பணத்தை எங்காவது முதலீடு செய்து பெருக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்காது... கடைகள், சொத்துக்கள்( கட்டிடங்கள்) எண்றும் நிறுவனங்கள், கப்பல்கள் எண்றும் முதலீடு செய்து இருக்கும் பணத்தை பெருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது...

அப்படி அவைகளை நிர்வகிப்பதுக்கு களத்தில் இருந்து பல போராளிகளை எடுக்க வேண்டி ஏற்பட்டது...

அதிகமாக பணம் தேவைப்பட்ட போது முதலீடு செய்த சொத்துக்கள் மீதும் கடைகள் நிறுவனங்கள் மீதும் வங்கிகளில் கடன் வாங்கி இருக்கிறார்கள்... வாங்கிய கடனை அடைக்கவும், வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் , சில வேலை திட்டங்களுக்கு எண்று ஒதுக்கவுமே அந்த வருமானங்கள் போதியனவாக இருக்கவில்லை...

இங்கே பிரித்தானியாவில் போர் முடிந்த பின் இலங்கை தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பித்தவர்கள் ஒரு லட்ச்சத்துக்கும் அண்மித்து இருப்பதாக சொல்கிறார்கள்... அதில் இலங்கை கடவுச்சீட்டை இன்னும் வைத்து இருப்பவர்கள் சேர்த்தி அல்ல...

இங்கு இலங்கை போக விமான ஆசன பதிவு ஒண்று 500 - 650 பவுன்ஸ் வரை போகிறது...

அப்படியானால் இலங்கை போகும் ஒருடச்சம் பேர் எவ்வளவு பணத்தை கொடுப்பார்கள் எண்று தெரியுமா...??

100 000 x 500 = 50 000 000 தமிழில் சொன்னால் ஐந்து கோடி பவுண்ஸ் கள்... இலங்கை பணத்தில் ஆயிரம் கோடி ரூப்பாக்கள் எண்று அண்ணளவாக சொல்லலாம்.... இலங்கை பாதுகாப்பு செலவீனத்தின் பத்தில் ஒரு பங்கு அது...

இந்த தொகையில் அரைவாசி ஒவ்வொரு நாட்டில் இருந்தும் ஒரு ஐந்து வருடம் போய் இருந்தால் எங்களில் நிலமை வேறுமாதிரி அமைந்து இருக்கும்...

எவ்வளவு காசு குடுத்தனிங்கள் அங்கை அனுப்பி வைக்க எண்டு...??

ஒட்டு மொத்தமாய் பிரித்தானியாவிலை குடுக்க பட்ட காசின் அளவு அண்ணளவாக எவ்வளவு இருக்கும்...?? ஒரு குடும்பம் எவ்வளவு பணத்தை சுமாராக கொடுத்து இருப்பார்கள்....?? பிரித்தானியாவிலை எவ்வளவு மக்கள் காசு குடுக்கிறவை...??

இங்கை கதை சொல்லுற நிறைய பரதேசியள் தொடருந்துக்கு 5 பவுன்ஸ் குடுத்து ரிக்கட் எடுக்க வேணுமே எண்டு பாராளுமண்றத்துக்கு முன்னால நடந்த போராட்டத்துக்கு ஒவ்வொரு நாளும் வந்து இருக்காதுகள்... அதுக்கை காசை அள்ளிக்குடுத்தவையாம்...

அந்தக் கணக்கெல்லாம் உங்களைப் போன்றவர்களுக்குத்தானே தெரியும்.

பிரான்சில் என்றால் எனக்கு தெரியும்

2 வீதமானவர்கள்தான் தானாக மனமுவந்து எந்த கேள்வியும்கேட்காது செய்தே ஆகவேண்டும் என்பதையுணர்ந்து காசு கொடுத்தவர்கள்

ஒரு 10 வீதமானவர்கள் தேடிப்போனால் இல்லையென்று சொல்லாது தம்மால் முடிந்த அளவைக்கொடுத்தார்கள்.

20 வீதமானோர் ஒழித்து விளையாடி முடிந்தவரை ஏமாத்தி அல்லது போறவரின் முகத்துக்காக முடியாது என்று சொல்லமுடியாதநிலை வந்தபின் கொடுத்தார்கள்.

இவர்கள் எழுதி உறுதிப்படுத்திய தொகையில் 25வீதம் தேறியதா என்றால் இல்லை என்றுதான் பதில்.

அதைவிட இவர்களை கண்டுபிடித்து பணம் வாங்க அந்த அங்கத்தவர் செலவளித்தநேரம், தொலைபேசி, போக்குவரத்து ,,,,, செலவு இதைவிட அதிகம்.

ஒரு 20 வீதமானோர் மதில்மேல் பூனைபோல் வாழாவிருந்தார்கள்.

கனக்க கதைப்பார்கள் காசு தரமாட்டார்கள்

மீதி 48வீதமானோர் புத்திசாலிகள் போல் வாய் பேசி கொடுத்தவனையும் விசரன் என்று விழித்து கொடுக்காது தடுத்தார்கள்.

ஆக பிரான்சில் ஒரு முப்பது வீதமே செய்தார்கள்.

நாட்டிலிருந்து கேட்கப்படும் தொகை இவர்கள் மேலேயே சுமத்தப்பட்டது.

சுமத்தப்பட்டிருக்கின்றது. இன்னும் சுமந்தபடியுள்ளனர்.

அப்பிடியெண்டால் பிரான்ஸ்ஸில முக்கிஸ்தர்களுக்கு மூவாயிரம் ஈயுரோக்கள் சம்பளம் போக்குவரத்து செலவு. அன்லிம்ட்ட் செல்போன். கார் . பொறுப்பாளர்களின்ட ஆடம்பர வாழ்க்கை..... இவற்றுக்கெல்லாம் யார் மகிந்தவே காசு அனுப்பினவர் . வெயிலிலையும் மழையிலையும் கஸ்டப்பட்டு இரவு பகலாக உழைத்து சம்பாதித்து தன்ட சகோதரிட களியாணத்திற்காக சேர்த்து வைத்திருந்த காசை உங்களிட்ட கொடுத்திட்டு இப்போ முளித்துக்கொணடிருக்கின்ற புலமஈ பெயர் ஈழத் தமிழர்களின் தியாகங்களை தயவுசெய்து கொச்சைப் படுத்தாதேயுங்கோ.

Edited by DAM

அந்தக் கணக்கெல்லாம் உங்களைப் போன்றவர்களுக்குத்தானே தெரியும்.

நீர் உமது வாழ்நாளில் எவ்வளவு பணத்தை போராட்டத்துக்காக இறைத்து இருப்பீர்...??

இங்கிலாந்திலும் இதே நிலை எண்டு தான் சொல்கிறார்கள்... எனக்கு எந்த விதமான தொடர்பும் இங்கு இல்லை..

எங்கட ஆக்கள் போதுமான நிதியை குடுத்து இருந்தால் புலிகள் சேர்க்கும் கொஞ்சப்பணத்தை எங்காவது முதலீடு செய்து பெருக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்காது... கடைகள், சொத்துக்கள்( கட்டிடங்கள்) எண்றும் நிறுவனங்கள், கப்பல்கள் எண்றும் முதலீடு செய்து இருக்கும் பணத்தை பெருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது...

அப்படி அவைகளை நிர்வகிப்பதுக்கு களத்தில் இருந்து பல போராளிகளை எடுக்க வேண்டி ஏற்பட்டது...

அதிகமாக பணம் தேவைப்பட்ட போது முதலீடு செய்த சொத்துக்கள் மீதும் கடைகள் நிறுவனங்கள் மீதும் வங்கிகளில் கடன் வாங்கி இருக்கிறார்கள்... வாங்கிய கடனை அடைக்கவும், வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் , சில வேலை திட்டங்களுக்கு எண்று ஒதுக்கவுமே அந்த வருமானங்கள் போதியனவாக இருக்கவில்லை...

இங்கே பிரித்தானியாவில் போர் முடிந்த பின் இலங்கை தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பித்தவர்கள் ஒரு லட்ச்சத்துக்கும் அண்மித்து இருப்பதாக சொல்கிறார்கள்... அதில் இலங்கை கடவுச்சீட்டை இன்னும் வைத்து இருப்பவர்கள் சேர்த்தி அல்ல...

இங்கு இலங்கை போக விமான ஆசன பதிவு ஒண்று 500 - 650 பவுன்ஸ் வரை போகிறது...

அப்படியானால் இலங்கை போகும் ஒருடச்சம் பேர் எவ்வளவு பணத்தை கொடுப்பார்கள் எண்று தெரியுமா...??

100 000 x 500 = 50 000 000 தமிழில் சொன்னால் ஐந்து கோடி பவுண்ஸ் கள்... இலங்கை பணத்தில் ஆயிரம் கோடி ரூப்பாக்கள் எண்று அண்ணளவாக சொல்லலாம்.... இலங்கை பாதுகாப்பு செலவீனத்தின் பத்தில் ஒரு பங்கு அது...

இந்த தொகையில் அரைவாசி ஒவ்வொரு நாட்டில் இருந்தும் ஒரு ஐந்து வருடம் போய் இருந்தால் எங்களில் நிலமை வேறுமாதிரி அமைந்து இருக்கும்...

அண்ணனுக்கு சனத்திண்ட பண விசயங்கள் கணக்கு வளக்குகள் எல்லாம் நல்லாத் தெரியிது. இப்ப விளங்கிது புலத்து பண மோசடி என்று ராவது பேசின அண்ணன் ஏன் வானத்துக்கும் புமிக்குமா துள்ளுறவர் எண்டு

நீர் உமது வாழ்நாளில் எவ்வளவு பணத்தை போராட்டத்துக்காக இறைத்து இருப்பீர்...??

பாத்திங்களோ இதுக்கும் எமவுன்ட் எவ்வளவு எண்டுதான் கேக்கிறீங்க.. எங்கட சனத்திண்ட பணத்தை கோடி கோடியா சுறங்டின பிறகும் பணப் பசி உங்களுகிகு இன்னும் அடங்கல்லையா.

உம்மிடம் காசு சேர்த்தவர்களை எனக்கு தெரியாது... ஆனால் தேவை எவ்வளவு இருந்தது என்பது தெரியும்... எங்களின் தேவைக்கு நீங்க ஈயவில்லை எண்டதும் தெரியும்... உங்கட ஈனத்தனங்களும் தெரியும்...

உதாரணத்துக்கு வான் தாக்குதல் திட்டத்துக்கு சிங்களவன் 40 000 கோடி ரூபா பெருமதியான பணத்தை போட்டு விமானங்கள் வாங்கினான்... ஆனால் எங்களால் வான் பாதுக்காப்பு திட்டத்துக்கு ஒரு 1000 கோடிக்கானதுகளை கூட வாங்க முடியவில்லை...!

ஆனால் பிளேன் அடிச்சால் குய்யோ முறையோ எண்டு கத்த மட்டும் நல்லாவரும்... எங்கட ஆக்கள் ஸ்ரிங்கர் வைத்து இருக்கிறாங்களாம் எண்டு புழுங்கவும் தெரியும்... ஆனால் போராட்டத்துக்கு என்ன தேவை எண்டது தெரியாது...

உங்கட ஈனத்தனங்களை நிறைய சொல்ல முடியும்... போராட்டம் பற்றி பேசுற நீங்கள் முறையாக அவர்களை தேடி போய் குடுத்து இருக்க வேண்டும்... புலிகளின் வங்கிக்கணக்குகளை கேட்டு வாங்கி போட்டு இருக்க வேண்டு... அப்படி செய்து இருந்தால் இடையிலை தரகர்கள் எதுக்கு...??

அட அப்பிடி வேறு தரவேண்டுமாக்கும். சொல்லவேயில்லை..

இலட்சக்கணக்கில லோன் எடுத்து தந்துபோட்டு பஸ்சுக்கும் காசில்லாம நடந்து திரியிற எங்களைப் பார்த்து எங்கட காசில பீ.எம். டபிள்யுவில போய்திரியிற நீங்கள் ஈனத்தனம் எண்டு சொல்வதைப் பார்க்கிலும் கேணப் பயல்கள் என்டு சொல்லுங்கோ. அதுதான் எங்களுக்குப் பொறுத்தமாக இருக்கும்.

Edited by DAM

நீர் உமது வாழ்நாளில் எவ்வளவு பணத்தை போராட்டத்துக்காக இறைத்து இருப்பீர்...??

நான குடுத்த காசின்ட தொகையைச் சொல்லிறன். அத எப்பிடிச் செலவளிச்சனிங்க எண்டு சொல்றதுக்கு நீங்க தயாரா

உம்மிடம் காசு சேர்த்தவர்களை எனக்கு தெரியாது... ஆனால் தேவை எவ்வளவு இருந்தது என்பது தெரியும்... எங்களின் தேவைக்கு நீங்க ஈயவில்லை எண்டதும் தெரியும்... உங்கட ஈனத்தனங்களும் தெரியும்...

உதாரணத்துக்கு வான் தாக்குதல் திட்டத்துக்கு சிங்களவன் 40 000 கோடி ரூபா பெருமதியான பணத்தை போட்டு விமானங்கள் வாங்கினான்... ஆனால் எங்களால் வான் பாதுக்காப்பு திட்டத்துக்கு ஒரு 1000 கோடிக்கானதுகளை கூட வாங்க முடியவில்லை...!

ஆனால் பிளேன் அடிச்சால் குய்யோ முறையோ எண்டு கத்த மட்டும் நல்லாவரும்... எங்கட ஆக்கள் ஸ்ரிங்கர் வைத்து இருக்கிறாங்களாம் எண்டு புழுங்கவும் தெரியும்... ஆனால் போராட்டத்துக்கு என்ன தேவை எண்டது தெரியாது...

உங்கட ஈனத்தனங்களை நிறைய சொல்ல முடியும்... போராட்டம் பற்றி பேசுற நீங்கள் முறையாக அவர்களை தேடி போய் குடுத்து இருக்க வேண்டும்... புலிகளின் வங்கிக்கணக்குகளை கேட்டு வாங்கி போட்டு இருக்க வேண்டு... அப்படி செய்து இருந்தால் இடையிலை தரகர்கள் எதுக்கு...??

மார்கட் கணகிகுகளை எல்லாம் சரியாச் சொல்றீங்க. பிரித்தான்யாவில உங்கட பொறுப்பாளர் த---க்கு மாதம் எவ்வளவு சம்பளம் எண்டு உங்களால பகிரங்கமாகச் சொல்லேலுமே. அவருக்கு எலவன்ஸ் எவ்வளவு, அவருக்கு வீட்டு வாடகை எவ்வளவு.. அவர் கார் வாங்கினது எவ்வளவுக்கு.. இதையேல்லாம் காசு குடுக்கிற ஈழத்தமிழ் மக்களுக்கு பகிரங்கமா உங்களால அறிவிக்க ஏலுமே.

என்னய்யா உங்கட நியாயம். நாங்க தேடிப்போய் குடுக்கவேணும். அத நீங்க பகிரங்கமா சுருட்டி ருட் விடுவியள். அதையெல்லாம் பாத்திட்டு நாங்க சும்மாவேறு இருக்கவேணும். கணக்கு கேட்டா நாங்க துரோகிகள். நல்ல விளையாட்டுப் போங்கள்.

உங்கட கணக்கு தெரிய நீர் எப்பவுமே குடுக்காத காசை வாங்க நான் கஸ்ரப்பட்டு இருக்க வேண்டியது இல்லை.. போராட்டத்தையும் உலக சூழ் நிலையையும் அரசியலையும் புரிந்து கொண்டாலே போதும்... அதுக்கு கொஞ்சம் பொது அறிவு வேணும்... அந்த பொது அறிவு இல்லாதவைக்கு புரிந்து கொள்ள கஸ்ரம்...

உங்களுக்கு யாராவது போராட வேணும் .. ஒவ்வொருநாளும் வெற்றிச்செய்திகளும் வேண்டி இருக்குது... ஆனால் அது எல்லாம் ஓசியிலை வேணும்... உண்மையை சொல்லும் நீர் போரட்டத்துக்கு எவ்வளவு காசை இழந்தனீர்....??

இங்கை யாழுக்கை டங்கிளாஸ் நேசக்கரம் எண்டதை தொடங்கி நடத்தினவர்... ஆக குறைந்த பங்களிப்பு உமது எவ்வளவு இருந்தது... ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.