Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு இந்திப் பட விழா-அனைத்து சூப்பர் ஸ்டார்களும் புறக்கணிப்பு

Featured Replies

கொழும்பு: உலகெங்கும் உள்ள தமிழர்களின் தொடர் கோரிக்கைகள், போராட்டங்களுக்கு மதிப்பளித்து கொழும்பு நகரில் நாளை தொடங்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்வதில்லை என்று இந்தித் திரையுலகின் அனைத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களும், நடிகைகளும் முடிவு செய்துள்ளதால், கொழும்புப் பட விழா களையிழந்துள்ளது.

கொழும்பில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு இஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட வட இந்திய திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நாம் தமிழர் இயக்கம் களத்தில் இறங்கியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து ரத்தக்கறையுடன் உள்ள ராஜபக்சே அரசு, தனது சுய லாபத்துக்காக இந்த விழாவை கொழும்பில் நடத்த அனுமதி கொடுத்துள்ளது. எனவே இதில் இந்திய திரையுலகினர் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி போராட்டத்தில் குதித்தது நாம் தமிழர் இயக்கம்.

மும்பையில் நூற்றுக்கணக்கான தமிழர்களைத் திரட்டி அமிதாப் பச்சன் வீட்டின் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதேபோல உலகெங்கும் உள்ள பல்வேறு தமிழர் அமைப்புகளும் பாலிவுட்டினர் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி மெயில்களை அனுப்பிக் குவித்தனர். தமிழகத்திலும் திரையுலகினர் யாரும் இதில் பங்கேற்கக்கூடாது என்ற கோரிக்கை வலுத்தது.

இதையடுத்து தமிழ்த் திரையுலகினர் மொத்தமாக, இதில் நாங்கள் யாரும் பங்கேற்க மாட்டோம், யாரும் பங்கேற்கவும் கூடாது. மீறி பங்கேற்றால் அவர்களது படங்கள் எதுவும் தென்னிந்தியாவில் திரையிடப் பட மாட்டாது என்று பகிரங்கமாக அறிவித்தனர்.

இதற்கு முன்பாகவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் உள்ளிட்ட தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார்கள் அனைவரும் பங்கேற்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். தங்களுக்கு அனுப்பப்பட்ட விழா அழைப்பிதழைப் பெறக் கூட இவர்கள் மறுத்து விட்டனர்.

இதேபோல தமிழர்கள் எங்களுக்கு முக்கியம் என்று கூறி மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கு சூப்பர் ஸ்டார் வெங்கடேஷ், கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் ஆகியோரும் அறிவித்து விட்டனர்.

தொடர் எதிர்ப்பால் உந்தப்பட்ட அமிதாப் பச்சன் தனது குடும்பத்தினர் யாரும் கொழும்பு செல்ல மாட்டார்கள் என்று கூறி விட்டார்.

தற்போதைய நிலவரப்படி அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், ஆமிர் கான், காத்ரீனா கைப், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், இம்ரான் கான் ஆகியோர் கொழும்பு பட விழாவுக்குச் செல்ல மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

விவேக் ஓபராய், லாரா தத்தா ஆகியோர் உள்ளிட்ட ஒரு சில 2ம் நிலை நடிகர், நடிகையர் மட்டுமே இந்த விழாவுக்கு போயுள்ளனர்.

மொத்த சூப்பர் ஸ்டார்களும் விழாவுக்குப் போகாததால் கொழும்புப் பட விழா களையிழந்துள்ளது. இலங்கை அரசும் பெரும் தர்மசங்கடத்தில் மூழ்கியுள்ளது. என்ன கொடுமை என்றால், அமிதாப் பச்சன் வருகிறார், ஐஸ்வர்யா ராய் வருகிறார், ஷாருக் கான் வருகிறார் என்று கூறி வீதி வீதியாக போய் கூவாத குறையாக டிக்கெட்களை விற்றுள்ளனர். இதனால் பெரும் விலையாக இருந்தாலும் கூட டிக்கெட்களை கொழும்புக்காரர்கள் பெருமளவில் வாங்கியுள்ளனர். அனைவருக்கும் தற்போது பெரும் ஏமாற்றமாகியுள்ளதாம்.

தமிழ்நாட்டிலிருந்து எழுந்து சிறிய அளவிலான எதிர்ப்பு உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் பரவி, இந்தியாவின் முக்கிய திரையுலகமான பாலிவுட்டைப் புரட்டி முடக்கிப் போட்டிருப்பதைப் பார்த்து இலங்கை அரசும் அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.

ஆனால் கொழும்பு பட விழாவுக்குப் போனால், தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களை முழுமையாக பகைத்துக் கொள்ள நேரிடும். அது தங்களது பிசினஸுக்கு பெரும் அடியாக அமையும் என கருதியதால்தான் பாலிவுட் நடிகர், நடிகையர் கொழும்பு விழாவுக்குப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது

http://thatstamil.oneindia.in/movies/specials/2010/06/colombo-iifa-bollywood-stars-boycott.html

Oberoi to promote Lanka

இவரை ஐஸக்கா வெட்டியது ... சரியான செயல்தான்! :D

இரத்த வெறியர்கள் ஏற்பாட்டில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப் போகிறவர்களுக்கு நன்றிகள்.

வெளிநாட்டில் தமிழ்படங்களை வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு:

தனுசின் உத்தமபுத்திரன் படத்தில் நாயகியாக நடிக்கும் ஜெனிலியா இலங்கையில் நடக்கும் விழாவுக்கு சென்றிருக்கின்றார். உத்தமபுத்திரன் படத்தை புறக்கணிக்க புலம்பெயர் தமிழர்கள் தயாரா? தமிழகத்து உறவுகள் உவ்வளவு செய்யும் போது நம்மால் முடியாதா?

தகவல்கள்.

http://thatstamil.oneindia.in/movies/specials/2010/06/genilia-attends-iifa-event.html

http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1006/03/1100603062_1.htm

http://en.wikipedia.org/wiki/Uthama_Puthiran

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் கொழும்பு பட விழாவுக்குப் போனால், தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களை முழுமையாக பகைத்துக் கொள்ள நேரிடும். அது தங்களது பிசினஸுக்கு பெரும் அடியாக அமையும் என கருதியதால்தான் பாலிவுட் நடிகர், நடிகையர் கொழும்பு விழாவுக்குப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது

சங்கதி தந்த இந்தக் கட்டுரையின் மூலத்தின் அர்த்தம் புரியவில்லை. நன்றி என்று ஒரு வார்த்தையைச் சொல்ல வக்கில்லாத நாய்க் கூட்டமா நாங்கள்?? ஒருவன் எங்களுக்காக ஒரு செயலைச் செய்கின்ற போது அவனை உற்சாகப்படுத்தி அவர்களுக்கான கௌரவத்தை வழங்குவதை விட்டு விட்டு, ஏNதூ உங்களால் தான் பயப்படுகின்றார்கள் என்று வார்த்தைப் பிரயோகம் எதற்கு??

முதலில் புரிந்துணர்வை வளர்க்கப் பாருங்கள். சாருக்கானின் படமும் உங்களை நம்பித் தான் ஓடுகின்றது என்றால்... என்ன பிதற்றல்...

எதிரி கூட 20 உலகநாடுகள் நின்றது, நாங்கள் தனித்து எதிர்த்து நின்றோம் என்று வீரம் பேசுவது எல்லாம், எங்களின் தோல்வி தானே. எங்களுக்கு தமிழீழமா? அல்லது 20 நாடுகள் கூடச் சண்டை போடுவதா வேலை? ஏன் எங்களால் ஒரு நட்பு நாட்டைக் கூட உருவாக்க முடியவில்லையே என்றால் உங்களை போல மற்றவர்கனைத் தரக் குறைவாக பேசுபவர்களால் தான்...

சல்மான்-விவேக்-ஹ்ரித்திக் படங்களுக்கு தென்னிந்தியாவில் தடை!

சென்னை: தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு மற்றும் பிலிம்சேம்பர் விடுத்த வேண்டுகோள் மற்றும் தடை எச்சரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டு, ஐஃபா விழாவில் பங்கேற்ற வட இந்திய நட்சத்திரங்கள் அனைவரது படங்களுக்கும் இன்றுமுதல் தடை விதிக்கப்படுகிறது.

தென்னிந்தியாவின் 5 மாநிலங்களிலும் இந்த நடிகர் நடிகைகள் தொடர்புடைய எந்தப் படத்தையும் விநியோகஸ்தர்கள் வாங்க மாட்டார்கள், திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவும் மாட்டார்கள்.

பெஃப்ஸி அமைப்பின் தலைவர் வி.சி.குகநாதன் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

இலங்கையில் நடைபெறும் படவிழாவில் பங்கேற்க வேண்டாம் என்று தென்னிந்திய திரையுலகின் அனைத்து அமைப்புகளும் கேட்டுக் கொண்டன. அதை ஏற்று பலபேர் அவ்விழாவுக்கு செல்லவில்லை. எங்கள் வேண்டுகோளுக்கு மரியாதை கொடுத்து அமிதாப்பச்சன், ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கரெல்லாம் விழாவுக்கு போகவில்லை. தென்னிந்திய சினிமாவின் பிற மொழிக் கலைஞர்கள் ஒருவர் கூட இந்த விழாவுக்குப் போகவில்லை. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் வேண்டுகோளை மதிக்காமல் அந்த மயான பூமியில் நடந்த விழாவில் சில சில்லரை நடிகர்-நடிகைகள் பங்கேற்று உள்ளனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். சல்மான்கான், விவேக் ஓபராய், பிபாஷா பாசு, ஹ்ரித்திக் ரோஷன், சஞ்சய் தத் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நமது உணர்வுகளை மிதித்துவிட்டு இந்த விழாவில் பங்கெடுத்துள்ளனர். இனி இவர்கள் படங்களை தென்னிந்தியாவின் 5 மாநிலங்களிலும் திரையிடமாட்டோம். தொழில் ரீதியான எந்த ஒத்துழைப்பையும் ஃபெப்ஸி வழங்காது. இதில் உறுதியாக உள்ளோம்.." என்றார்.

கைட்ஸ் படக் காட்சிகள் ரத்து:

ஹ்ரித்திக் ரோஷன் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள கைட்ஸ் என்ற இந்திப் படம் சென்னையில் வெளியாகியுள்ளது. சத்யம் உள்ளிட்ட சில திரையரங்குகளில் இந்தப் படம் ஓடுகிறது.

ஹ்ரித்திக் ரோஷன் கொழும்பு விழாவில் பங்கேற்றுள்ளதால், தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு அறிவித்தபடி, இந்தப் படத்தை தியேட்டர்களை விட்டு தூக்க வேண்டும், என 'நாம் தமிழர்' அமைப்பு திரையரங்கு உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் நோக்கில் இன்று முதல் கைட்ஸ் படம் திரையரங்குகளை விட்டு தூக்கப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது

http://thatstamil.oneindia.in

610x.jpg

ராஜபக்ஸ குடும்பத்தின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் இலங்கைக்கு 500 பென்ஸ் கார்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதன் காரணமாகவே மோட்டார் வாகனங்களின் இறக்குமதி 50 வீதத்தினால் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளும் இந்திய திரை நட்சத்திரங்களிடம் பணத்தை பெற்று இந்த வாகனங்கள் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக உள்ளக தகவல்.

இந்திய திரைப்படக் கலைஞர்கள் ராஜபக்ஸவினருடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தத்தின் பலனாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஜீ.ரீ.என்னின் செய்தியாளர் கூறுகிறார்.

இந்தியாவில் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்ய 700 வீதம் வரி விதிக்கப்படுவதால், குறைந்த வரியில் இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் இந்த வானகங்களை பரிசாக கிடைத்தது எனக் கூறி இந்தியாக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் கடந்த இரண்டாம் திகதி பெருந்தொகையான வாகனங்கள் சுங்க தீர்வை செலுத்தி விடுவிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

Edited by தராக்கி

  • கருத்துக்கள உறவுகள்

.

திரைப்பட விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த திரைப்பட நட்சத்திரங்களுக்கும்,

அதற்கு முன் நின்று உழைத்த, நாம் தமிழர் இயக்கத்தினருக்கும் மனமுவந்த பாராட்டுக்கள்.

.

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்பட விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த திரைப்பட நட்சத்திரங்களுக்கும்

அதற்கு முன் நின்று உழைத்த நாம் தமிழர் இயக்கத்தினருக்கும் எமது மனமுவந்த நன்றிகளும் பாராட்டுக்கள்.

BMICH இல் தினமும் விருந்துபசாரம், ஆட்டம், பாட்டு, "ஆயுர்வேத மசாஜ்" என மாபெரும் கும்மாளம் நடக்கிறதாம்.

சிங்கள அரசு இந்த விழாவுக்கு எடுக்கும் முயற்சியில், ஒரு துளியளவைக்கூட இடம் பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்த, தமிழர் உரிமைகளை வழங்க எடுக்கவில்லை. இவர்களுக்கு அயல் நாட்டு பயங்கரவாதிகள் துணைபோவது நிலைமையை சிக்கலாக்குகிறது.

ஐய்யய்யோ.. நான் போகலை! - அலறும் ஜெனிலியா

வெளிநாட்டில் தமிழ்படங்களை வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு:

தனுசின் உத்தமபுத்திரன் படத்தில் நாயகியாக நடிக்கும் ஜெனிலியா இலங்கையில் நடக்கும் விழாவுக்கு சென்றிருக்கின்றார். உத்தமபுத்திரன் படத்தை புறக்கணிக்க புலம்பெயர் தமிழர்கள் தயாரா? தமிழகத்து உறவுகள் உவ்வளவு செய்யும் போது நம்மால் முடியாதா?

தகவல்கள்.

http://thatstamil.oneindia.in/movies/specials/2010/06/genilia-attends-iifa-event.html

http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1006/03/1100603062_1.htm

http://en.wikipedia.org/wiki/Uthama_Puthiran

ஐய்யய்யோ.. நான் போகலை! - அலறும் ஜெனிலியா

நான் ஐஃபா விழாவுக்குப் போனதாக வந்த தகவல் தவறானது. நான் தமிழரையும் தமிழ் உணர்வுகளையும் மதிக்கிறேன். நான் ஒருபோதும் இலங்கை நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்", என்றார் நடிகை ஜெனிலியா.

http://thatstamil.oneindia.in/movies/heroines/2010/06/04-genelia-denies-iifa-colombo.html

கொழும்பு, ஜூன் 04

புலம்பெயர் தமிழ் சமூகத்தின், இலங்கைக்கு எதிரான செயற்பாடுகள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன. ஐ.நா. மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் சமீபத்திய அறிவிப்பும் அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். எனினும் இலங்கையில் பயங்கரவாதத்தை கூண்டோடு ஒழித்துக்கட்டியது போன்று புலம் பெயர் தமிழ் சமூகத்தின் நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக முறியடித்திடுவோம்.

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது இவ்வாறு தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:

"ஐபா' திரைப்பட விழாவுக்கு அழைப்பு விடுக்கும் போது பெரும்பாலும் இந்திய நடிகர்கள் அனைவரும் வருவதில்லை. முன்னைய வருடங்களில் தென்னாபிரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் நடைபெற்ற ஐபா திரைப்பட விழாக்களிலும் பெரும்பாலானோர் கலந்துகொள்ளவில்லை. எனவே, புலம்பெயர் தமிழ் சமூகத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகள் இதற்குக் காரணமென்று கூறமுடியாது.

உலகம் முழுவதும் 8கோடி 50 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களுல் இரண்டு சத வீதத்தினர் இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டாலும் அது ஒரு பெரும் எண்ணிக்கைதான்.

இவர்களின் செயற்பாடுகள் சில வெற்றியளித்துள்ளன என்பதையும் மறுக்க முடியாது. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு எதிராக வெளியிட்ட கருத்து இதற்கு சிறந்த உதாரணமாகும்.

புலம்பெயர் தமிழ் சமூகத்தின் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டிருந்தார்.

உள்ளூரில் பயங்கரவாதத்தை ஒழித்து அவர்களது இருப்பிடங்களை நாசமாக்கியதுபோல், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக முறியடிப்போம். இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

"ஐபா' திரைப்பட விழாவுக்கு பொலிவூட் நடிகர்கள் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், சாருக்கான் ஆகியோர் திட்டமிட்டபடி வருகை தராதமைக்கு புலம்பெயர் தமிழ் சமூகத்தின் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமா என செய்தியாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். (ஒசி)

http://www.uthayan.com/Welcome/full.php?id=3344&Uthayan1275643781

ஐய்யய்யோ.. நான் போகலை! - அலறும் ஜெனிலியா

நான் ஐஃபா விழாவுக்குப் போனதாக வந்த தகவல் தவறானது. நான் தமிழரையும் தமிழ் உணர்வுகளையும் மதிக்கிறேன். நான் ஒருபோதும் இலங்கை நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்", என்றார் நடிகை ஜெனிலியா.

http://thatstamil.oneindia.in/movies/heroines/2010/06/04-genelia-denies-iifa-colombo.html

நடிகை இன்று மறுப்பு தெரிவிச்சிருக்கா. ஆனால் கொழும்பு ஊடகம் ஏன் வந்திறங்கிய நடிகர்களின் பட்டியலில் போட்டிருக்கின்றது தெரியவில்லை.

Popular Bollywood actors Salman Khan, Sanjay Dutt, Bipasha Basu, Diya Mirza and Anil Kapoor arrived in the country this evening to participate in the IIFA events which will begin in the country from tomorrow.

Other popular actors, Indian music artistes and India fashion designers who arrived in the country today are Sharman Joshi, Genelia D’Souza, Kailash Kher and Manish Malhotra.

The first IIFA event which will be a fashion show will be held at the BMICH tomorrow. The show will be hosted by popular Indian actor Vivek Oberoi who arrived in the country yesterday.

http://www.dailymirror.lk/index.php/news/4109-more-stars-arrive-for-iifa.html

புலம்பெயர் தமிழ் சமூகத்தின், இலங்கைக்கு எதிரான செயற்பாடுகள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன.

புலம்பெயர் தமிழ் சமூகத்தின் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டிருந்தார்.

உள்ளூரில் பயங்கரவாதத்தை ஒழித்து அவர்களது இருப்பிடங்களை நாசமாக்கியதுபோல், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக முறியடிப்போம். இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.

சிங்கள பயங்கரவாதிகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முன்னெடுக்க போவதாக அறிவித்துள்ளார்கள்.

எனவே வெளிநாடுகளில் இயங்கும் இந்த பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ள அமைப்புக்களை தடை செய்யவேண்டும். இதற்கான முயற்சிகளை புலபெயர் தமிழர் பிரதிநிதிகள் செய்வார்களாக.

x610.jpg

சில அமைச்சர்கள், தமிழ் அமைச்சர்களுமாம், வட இந்திய பெண்களுடன் டேட்டிங் போக முயற்சியாம்.....அந்த தமிழ் அமைச்சர் நடிகர்கள் வராததால் எஞ்சியிருந்த ஹோட்டலில் இடம் பிடிக்க மிகப் பிரயத்தனப் படுகிறாராம்...

610x.jpg

இந்தியாவில் தமிழர்கள் மீதான புதிய அரசியலுக்கான ஆரம்பமாக இதை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்... தமிழ் நாட்டில் மட்டும் இருந்த ஈழத்தமிழர்களின் அவலம் இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள மக்களால் விசாரிக்க படவோ, சொல்லப்பட காரணமாக அமைந்து இருக்கிறது...

அடி போட்ட சீமான் அண்ணாவுக்கும், தமிழக திரை உலகுக்கும் நண்றிகள் சொல்ல ஈழத்தவர் எண்டு சொல்லிக்கொள்பவர்கள் கடமைப்பட்டு உள்ளார்கள்...

எனது சார்பில் பாடுபட்ட அனைவருக்கும் நண்றிகள்..

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.