Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்தணித் தண்டவாளத் தகர்ப்பு கொழும்புத் திரைப்பட விழாத் தோல்வியின் எதிரொலி?

Featured Replies

கொழும்பின் நடந்த இந்திய உலகத் திரைப்பட விழாவை தென்னக கலைஞர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்து அதை தோல்வியில் முடிவடையச் செய்தமை ஆரிய சக்திகளையும் தமிழ்நாட்டில் உள்ள சிங்களக் கைக்கூலிகளையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கும்.

தமிழ்த் தேசியவாதத்திற்கு இந்தியாவில் ஆதரவு கூடி விடுமா என்ற கவலை இவர்களைப் பற்றிக் கொண்டிருக்கும்.

சென்னை வழியாக மும்பை செல்லும் சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை ஜூன் 12ம் திகதி அதிகாலை 2.15 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த சித்தணி என்ற பகுதியில் ரயில் தண்டவாளம் தகர்கப்பட்டடது. இதனால் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.

பாய்ந்தெழுந்த பார்பன ஊடகங்கள்

தண்டவாளத் தகர்ப்பு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்க முன்னரே "விடுதலைப் புலிகள் கைவரிசை" என்று பார்பன ஊடகங்கங்கள் குரைக்கத் தொடங்கிவிட்டன. ஏன் இந்த அவசரம்? முன்கூட்டியே செய்தி எப்படி இருக்கவேண்டும் என்று திட்டமிடப்பட்டதா?

தமது ஆயுதங்கள் மௌனிப்பதாக அறிவித்த பின்கடந்த ஒரு வருடமாக இலங்கையில் எந்த தாக்குதலும் நடத்தாத விடுதலைப் புலிகள் இந்தத் தண்டவாளத் தகர்ப்பை ஏன் செய்ய வேண்டும்?

தமிழினக் கொலையாளியாக தமிழர்கள் குற்றம் சாட்டும் மஹிந்த ராஜபக்சவிற்கு டில்லியில் செங்கம்பள வரவேற்புக் கொடுத்த பின் தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டதா?

இந்தியத் திரைப்பட விழாவை தென்னக கலைஞர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்ததால் அது படுதோல்வியில் முடிவடைந்ததுடன் சிங்கள மக்களுக்கு இந்தியா மேல் இருக்கும் கசப்புணர்ச்சியையும் வளர்த்தது. தமிழர்கள் ஒன்றானால் பகைவர்கள் அழிவர் என்ற பாரதிதாசன் கூற்று உண்மையாகலாம் என்று இந்தியாவின் உளவுத் துறையும் தமிழ்நாட்டில் உள்ள சிங்களக் கைக்கூலிகளும் நன்கு அறிவர். இதற்கு ஒரு தண்டவாளத் தகர்ப்பு நாடகம் பெருதும் உதவி செய்யுமா?

இந்திய உளவுத் துறை ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு அதிகரிக்கும் போது இந்திய உளவுத் துறை இந்த மாதிரியான சதி நடவடிக்கைகளில் இப்படி முன்னரும் ஈடுபட்டது என தமிழின உணர்வாளர்கள் கருத்துத் தெர்விக்கின்றனர். இது மாதிரி சம்பவங்கள் இன்னும் நடக்குமா?

Investigators don't rule out Naxal hand in TN track blast

CHENNAI/VILLUPURAM: Tamil Nadu police’s ‘Q’ branch, which took over the probe into last week’s railway track blast near Perani in the state’s Villupuram district, on Monday didn’t rule out possibility of a Maoist hand in the attack.

Earlier, reports suggested a pro-Tamil group’s role in the sabotage after a few hand-written pamphlets condemning Sri Lankan president Rajapaksa’s India visit were recovered from the scene. The Villupuram belt has been known for Maoist activities apart from its strong leanings towards Tamil Eelam. The investigators are considering two important things: The modus operandi and the attempt to target Rockfort Express, which for long has been a favourite train for VIPs between Trichi and Chennai. Experts say that the method used for blasting the track — use of slurry explosive and manual detonation — is the preferred one of the Maoists.

"We’ve just started the investigations and are looking into all possible angles. We aren’t ruling out the Maoist angle," internal security IG Shankar Jiwal told TOI.

The investigators said Perani sabotage was a well-planned operation. "Preliminary investigations suggest that the explosive was detonated manually. So we presume that the attackers would have seen the Salem-Egmore Express passing by and then triggered the explosion. But whether they were targeting the Rockfort Express is unclear," said Railways IG A M S Gunaseelan.

"We think they just wanted to convey a message as they had given enough time for the railways to react to the incident. If they were really targeting the Rockfort Express, they could have waited till they saw the train coming and then blasted the track."

தகவல் மூலம்: The Times of India

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

பாய்ந்தெழுந்த பார்பன ஊடகங்கள்

தண்டவாளத் தகர்ப்பு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்க முன்னரே "விடுதலைப் புலிகள் கைவரிசை" என்று பார்பன ஊடகங்கங்கள் குரைக்கத் தொடங்கிவிட்டன.

காசுமீரத்து பாப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரி பாப்பானுக்கு நெறிகட்டும் என்றார் தந்தை பெரியார்....அவர் தீர்க்கதரிசி என்றாலும்... சிறிது மாற்றி சொல்லியிருக்கலாம்.... கொழும்பு சிங்களவனுக்கு தேள் கொட்டினால் காசுமீரத்து பண்டிட்டுகளுக்கு நெறி கட்டுமென!!!!

காசுமீரத்து பாப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரி பாப்பானுக்கு நெறிகட்டும் என்றார் தந்தை பெரியார்....அவர் தீர்க்கதரிசி என்றாலும்... சிறிது மாற்றி சொல்லியிருக்கலாம்.... கொழும்பு சிங்களவனுக்கு தேள் கொட்டினால் காசுமீரத்து பண்டிட்டுகளுக்கு நெறி கட்டுமென!!!!

தயவு செய்து தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்படாத ஈ.வே.ராமசாமியைப் பற்றி எமது விடுதலைப் போராட்டதுடன் சம்பந்தப்படுத்திப் பேச வேண்டாம்.

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்படாத ஈ.வே.ராமசாமியைப் பற்றி எமது விடுதலைப் போராட்டதுடன் சம்பந்தப்படுத்திப் பேச வேண்டாம்.

இதே அளவுகோலை ...தயவு செய்து.... ஈழ விடுதலை குறித்து சம்பந்தபடாத தமிழக மக்கள் எமது விடுதலை குறித்து பேச வேண்டாம்... என பொருள் கொள்ளலாமா? எனெனில் களத்தில் முதன்மையாக இருப்பவர்க்ள் பெரியார் திராவிட கழகத்தினரே.... பாவம் கொளத்தூர் மணி ஹி ஹி...

தயவு செய்து தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்படாத ஈ.வே.ராமசாமியைப் பற்றி எமது விடுதலைப் போராட்டதுடன் சம்பந்தப்படுத்திப் பேச வேண்டாம்.

இதே அளவுகோலை ...தயவு செய்து.... ஈழ விடுதலை குறித்து சம்பந்தபடாத தமிழக மக்கள் எமது விடுதலை குறித்து பேச வேண்டாம்... என பொருள் கொள்ளலாமா? எனெனில் களத்தில் முதன்மையாக இருப்பவர்க்ள் பெரியார் திராவிட கழகத்தினரே.... பாவம் கொளத்தூர் மணி ஹி ஹி...

புரட்சியின் அர்த்தமே இல்லாத தொடர்புபடுத்தல் இது.

பெரியார் திராவிடத்தவர் "ஒரு காலத்தில் முன்னணியில் இருந்தார்கள்" என்றால் சரியாக இருக்கும்.

நாளடைவில், ஈழத் தமிழர் ஆதரவு போராட்டங்களால் பெற்ற மாபெரும் மக்கள் செல்வாக்கை, அவர்கள் தமது கொள்கைகளுக்கு (போலித் திராவிட கொள்கைகளுக்கு) ஆதரவாக மாற்ற முனைந்து, தமது ஈழத் தமிழருக்கு எதிரான போராட்டத்துடன் "பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டங்களையும்", "இந்து மத எதிர்ப்பு போராட்டங்களையும்" இணைத்ததால், ஈழத் தமிழருக்கு நன்மை செய்வதைவிட, அதிக பகைகளையே உருவாக்கியிருந்தனர்.

பின்னர் அவர்கள் பல நூறு பிரிவுகளாக சிதறி பிளவுபட்டிருப்பதை நான் நேரடியாக அறிவேன். இந்த உண்மை திராவிட புராணம் பாடும் பல ஈழத் தமிழருக்கு தெரியாது. ஈழத் தமிழருக்கு ஆதரவாக பல வருடங்களின் முன்னர் அவர்கள் நடாத்திய சில போராட்டங்களில் நான் நேரடியாக கலந்துகொண்டவன் என்ற வகையில், இராமகிருஷ்ணன் போன்ற உண்மையில் ஈடுபாடுடைய சிலரை நேரடியாக அறிந்தவன் என்ற வகையில், இவற்றை கூறுகிறேன்.

Edited by ஆராவமுதன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி சிறிலிங்கம் அண்ணா!

எழுத்தாக்கம் யார் அண்ணா?

எல்லாத்தையும் மொட்டையாகப் போட்டால்?

வாத்தியார்

...........................

கொழும்பின் நடந்த இந்திய உலகத் திரைப்பட விழாவை தென்னக கலைஞர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்து அதை தோல்வியில் முடிவடையச் செய்தமை ஆரிய சக்திகளையும் தமிழ்நாட்டில் உள்ள சிங்களக் கைக்கூலிகளையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கும். தமிழ்த் தேசியவாதத்திற்கு இந்தியாவில் ஆதரவு கூடி விடுமா என்ற கவலை இவர்களைப் பற்றிக் கொண்டிருக்கும்.

இந்திய உளவுத் துறை ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு அதிகரிக்கும் போது இந்திய உளவுத் துறை இந்த மாதிரியான சதி நடவடிக்கைகளில் இப்படி முன்னரும் ஈடுபட்டது என தமிழின உணர்வாளர்கள் கருத்துத் தெர்விக்கின்றனர். இது மாதிரி சம்பவங்கள் இன்னும் நடக்குமா?

இந்த குண்டு வெடிப்பு இரண்டு தொடரூந்து சாரதிகளுடனும், ஏனைய பல தரப்பினருடனும் நுட்பமாக திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ளது. எனவே, இதில் இந்திய உளவுப் பயங்கரவாதிகளின் கையும், அவர்களை தூண்டும் வகையில் பௌத்த சிங்கள பயங்கரவாதிகளின் கைகளும் இருப்பதாக தமிழ் நாட்டு நண்பர்கள் சிலர் கூறினர்.

தமிழ் நாட்டில், நுங்கம்பாக்க சிங்கள தூதரகத்திலிருந்தும், எழும்பூர் விகாரையிலிருந்தும், இந்து ராம் ஏற்படுத்தி கொடுத்திருக்கும் மறைவிடத்திலிருந்தும் பௌத்த சிங்கள பயங்கரவாதிகள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

நுங்கம்பாக்க சிங்கள தூதரகத்திலிருந்த ஹம்சா என்ற முஸ்லிம் அதிகாரி, "ஹசன் அலி" என்பவரை சிங்கள கைக்கூலியாக மாற்றியிருந்தார். குண்டு வெடித்த இடத்துக்கு அருகில் ஹசன் அலி இருந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

பாய்ந்தெழுந்த பார்பன ஊடகங்கள்

தண்டவாளத் தகர்ப்பு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்க முன்னரே "விடுதலைப் புலிகள் கைவரிசை" என்று பார்பன ஊடகங்கங்கள் குரைக்கத் தொடங்கிவிட்டன. ஏன் இந்த அவசரம்? முன்கூட்டியே செய்தி எப்படி இருக்கவேண்டும் என்று திட்டமிடப்பட்டதா?

... எதோ எழுதுகிறோம் என்றவுடன் எழுதுவதெல்லாம் சரி என்ற நினைப்பு எமக்கு!! ... பார்ப்பண ஊடகங்கள் ... தமிழ் நாட்டிலுள்ள ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் பிராமணர்களுக்கு சொந்தம், அமெரிக்க ஊடகங்கள் யூதர்களின் கைகளில் போல!! ... இன்று அங்கு எமக்காக முன்னின்று கேள்வி கேட்டும் விகடன் குழுமம், குமுதம் குழுமம், தினமணி ... இவைகளும் பிராமணர்களுடையதுதான்!! ... அவர்களையும் கொண்டு சென்று ஒதுக்காதையுங்கோ!!

... ஏன் சிங்களவனின் இனவழிப்பிற்கு துணைபோன கருணாநிதி குடும்பமோ, ... ஏன் நேற்று ரயிலுக்கு குண்டு வைத்த ஹசன் அலியும் பிராமணர்களா???

ஏதோ சில பிராமணர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக ... எல்லா பிராமணர்களையும் நாம் எதிரியாக்கி விட்டோம்!! காலா காலமாக அங்குள்ள திராவிட புளிச்சல் கட்சிகளின் இக்குரல்களை நாமும் தூக்கிப் பிடிக்கிறோம்!!! ... ஏன் மாத்தையாவும் வல்வெட்டித்துறைதானே ... எதிர்க்கலாமா வல்வெட்டித்துறையாரை????? இல்லை எங்கள் போராட்டத்துக்கு குளி தோண்டத்தொடங்கிய கருணாவிற்காக கிழக்கு மக்களை எதிர்க்கலாமா????

... கன்னட எதிர்ப்பு, மலையாளிகள் எதிர்ப்பு, தெலுங்கு எதிர்ப்பு ... எல்லாச்சத்தமும் இட்டோம்! ... நேற்று இலங்கையில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவை ... அவர்கள் எல்லாம் சேர்ந்து மண் கவ்வச் செய்தார்கள்!!

... திராவிட புளிச்சல் கட்சிகளின் இதுவரையிலான உந்த குப்பை அரசியல் இனியும் எமக்கு வேண்டாம்!! ... நாமும் புளிச்சல் எழுத்துக்களை நிறுத்துவோம்!!

எம்மத்தியிலும் பிராமணர்கள் உள்ளார்கள்! சில மாவீரர்கள் குடும்பங்கள் கூட உள்ளது! ... நோகடிக்காதீர்கள்!

எம்மத்தியிலும் பிராமணர்கள் உள்ளார்கள்! சில மாவீரர்கள் குடும்பங்கள் கூட உள்ளது! ... நோகடிக்காதீர்கள்!

எம்மத்தியிலும் பிராமணர்கள் உள்ளார்கள்! சில மாவீரர்கள் குடும்பங்கள் கூட உள்ளது! ... நோகடிக்காதீர்கள்!

"விடுதலைப் புலிகள் கைவரிசை" என்று பார்பன ஊடகங்கங்கள் குரைக்கத் தொடங்கிவிட்டன."

அழகிய வரி.

எம்மத்தியிலும் பிராமணர்கள் உள்ளார்கள்! சில மாவீரர்கள் குடும்பங்கள் கூட உள்ளது! ... நோகடிக்காதீர்கள்!

பார்ப்பனீயம் என்பது பிராமணர்களை நோகடிக்கும் சொல் ஒன்றல்ல. பிராமணர்கள் தமிழருக்குச் சார்பாக நின்றாலும் அவற்றைப் பார்ப்பனீய சக்திகள் எதிர்க்கும். பார்ப்பனீயம் என்பது இன்று அதிகார மையம் என்றுதான் ஆகிவிட்டது என்று நினைக்கின்றேன்.

னெல்லையனும், ஆராவமுதனும் எந்து கருத்தையே பிரதிபலித்து உள்ளீர்கள், அதற்கு எனது நன்றிகள், அதைவிட புரட்சிகர தமிழனிடம் ஒரு வேண்டுகோள் நான் ஈ.வே.ராமசாமியைப் பற்றி தான்குறிப்பிட்டேனே தவிர தமிழக மக்களைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. நீங்கள் கூறுவதைப் பார்ர்த்தால் ராமசாமி தான் தமிழக மக்களின் ஏக பிரதினிதி போல் அல்லவா கூறுகிறீர்கள். திராவிடம்முழுமையான அரசியல் இயக்கம். இவற்றை ஊக்குவ்வித்து வளர்த்தது மதம் மாற்றும் அமைப்புக்கல், தமிழனின் மதமான சைவ மதம் எப்படியெல்லம் கேவலப்படுத்தப்பட்ட்து என்பது உங்களுக்குத் தெரியுமா, ஆனால் இவர்கள் கிறீஸ்த்தவ மதத்தை பற்றியோ அல்லது இஸ்லாம் மதத்தை பற்றியோ எதாவது கூறுவார்களா , கடைசிவரை இல்லை.

இந்தத் திராவிட இயக்கங்கள் தமிழனின் வாழ்வு நல்வழிப் பட வேண்டுமானால் இவற்றை செய்திருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

periyar1.jpg

பெரியார் சரியாகவே வாழ்திருக்கிறார் எதையும் மறைத்ததில்லை.... அவரை பின்பற்றுவதாக கூறி ஆட்சி கட்டிலில் ஏறியவர்கள் சரியில்லை என்றால் அவரும் சரியில்லை என்று ஆகிவிடாது... கொள்கைகளை கொள்கை ரீதியாக வே எதிர்த்தவர் பெரியார்....

“அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்

அல்ல்ல் உழ்ப்பதாம் நட்பு”

என்ற குறளுக்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவர் பெரியார்.

அறசியல் வேறு; மனிதாபிமானம் வேறு. இரண்டையும் ஒன்றாக்க் கலக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் பெரியார்.

பிறர் மனம் தனிப்பட்ட முறையில் புண்பட்டுவிடக்கூடாது என்பதிலும் பெரியார் உறுதியாக இருந்தார். அதனால்தான் அவரால் பார்பனர் ராஜாஜி அவர்களுடன் இறுதிக் காலம்வரை நட்புடன் உறவாட முடிந்தது.

பார்பனர் ராஜாஜி அவர்கள் மறைவின்போது கண்ணீர் விட்டுத் தேம்பித் தேம்பி அழுதார் பெரியார். தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல் சுடுகாடுவரை சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.

அப்போது பெரியார் அவர்களால் நடக்க முடியாத சூல்நிலை. சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் பெரியார். தலைநகர் தில்லியிலிருந்து அன்றையக் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களும் ராஜாஜியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்திருந்தார். அவர் உட்காருவதற்கு இருக்கை இல்லை. உடனே சற்றும் தாமதியாது தனது உடல் துன்பத்தையும் மறந்து தான் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியில் உட்காரும்படி வேண்டினார் பெரியார்.

பெரியார் நட்புக்கடல் மட்டுமல்ல. பண்பாட்டுக் காவலரும் ஆவார்.

தமிழ்த்தென்றல் திரு.வி. கல்யாண சுந்தரனார் அவர்கள் பெரியாரின் பாசத்திற்குரிய நண்பர்களில் ஒருவராவார்.

திரு.வி.க. அவர்கள் ஒருமுறை பெரியாரின் இல்லத்தில் விருந்தினராக தங்கினார். இரவு நீண்ட நேரம் நண்பர்கள் இருவரும் உரையாடி மகிழ்ந்தார்கள். மறுநாள் காலை திரு.வி.க. எழுந்து காலைக் கடன்களை முடித்தார்; குளித்தார்; உடை மாற்றினார்.

அந்த நேரம் -

பெரியார் அவர்கள் திரு.வி.க. முன்பு திருநீற்றுச் சம்படத்தை நீட்டினார். திரு.வி.க வியந்து போனார்.

“நீங்கள் கடவுளை நம்பாதவர். உங்கள் வீட்டில் திருநீறு எப்படி வந்தது?” திரு.வி.க திகைப்புடன் கேட்டார்.

“நான் கடவுளை நம்பாதவன்தான். ஆனால் தாங்கள் கடவுள் நம்பிக்கைகொண்டவர். எனது விருந்தாளியாக வந்து தங்கியுள்ளீர்கள். விருந்தினரின் விருப்பம் அறிந்து செயல்படுவது தான் நல்லது” என்று பெரியார் விளக்கம் அளித்தார்.

திருநீறு பூசிய தமிழ்த்தென்றல் திரு.வி.க., புரட்சிப்புயல் பெரியாரின் திருஉள்ளம் கண்டு மெய்சிலிர்த்து நின்றார்.

தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் காலமான செய்தி கேட்டு, ஈரோட்டில் இருந்து விரைந்து வந்தார் பெரியார். இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். ஆனாலும் பெரியார் மனத்தில் வேறோரு வேதனை தோன்றியது. அது தொழிலாளர்களின் தோழர் பொதுத்தொண்டே வாழ்வெனக்கண்ட பெருந்தகையாளர் திரு.வி.க அவரது மறைவின்போது கூட்டம் குறைவாக இருப்பது கண்டு பெரியார் துடித்துப் போனார். அடுத்த வினாடியே திராவிடர் கழகத் தொண்டர்கள் பலரையும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளக் கட்டளையிட்டார். அதுமட்டுமல்ல,

“நமச்சிவாய வாழ்க. . .

நாதன்தாள் வாழ்க . . ."

என்று திரு.வி.க.விற்குப் பிடித்தமான பதிகத்தையும் உரத்துக் கோஷம் போடவைத்தார் பெரியார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திராவிடக் கொள்கையில் ஒன்றாக சுயமரியாதை என்பது தனிமனித உரிமை, யாருடைய காலில் விழுவதும் தனிப்பட்ட மனிதனுக்கு இழுக்கு என்பதை கொள்கையாக வைத்திருந்த தந்தை பெரியார் அதை தன் தொண்டர்களுக்கும் வலியுறுத்தினார். அப்படிப்பட்ட சுயமரியாதைச் செம்மல் தனது வாழ்நாளின் இறுதி நாட்களில் ஒரு நிகழ்வில் இறைத்தொண்டர் ஒருவரின் காலில் விழுந்தார் என்று படித்த போது பெரும் வியப்பாக இருந்தது.

"தமிழகத்தைப் பொருத்த அளவில் நாத்திகம் என்பது கீழ்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும், ஆத்திகம் என்பது மேல்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும் மாறிவிட்டதை ஏற்றுக் கொள்ளவேண்டி இருக்கிறது"

-மகா சன்னிதானம் தெய்வசிகாமணி அடிகளார் (எ) குன்றக்குடி அடிகளார்

அதாவது ஆத்திகம் - ஆன்மிகம் என்பதே மேல் சாதி மக்களின் நலன் பேணுவதற்கு உருவாக்கப்பட்ட ஒன்று. இப்படிச் சொன்னவர் பெரியாராலும் பெரியார் தொண்டர்களாலும் கொண்டாப்பட்டார் என்று நினைக்கும் போது அது தவறே அல்ல. மேடைப் பேச்சுகளின் வழி ஒருவரை ஒருவர் பெரியாரும், அடிகளாரும் கடுமையாக விமர்சனம் செய்து சாடி வந்த வேளையில், ஒருமுறை பெரியாரும் அடிகளாரும் கலந்து கொண்ட ஒரு பொன்மாலை நிகழ்ச்சி நடந்தது, அந்நிகழ்ச்சியில் இருவரின் பேச்சும் இருவரையுமே கவர அன்று முதல் திராவிட கழக, அடிகளார் ஆன்மிக மேடை நிகழ்ச்சிகள் பல ஒன்றாக நடந்தன.

1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிகளார் மிகவும் தீவிரமாக ஆதரிக்கவே பெரியார் அடிகளார் முன்பைவிட பலமாக ஆதரித்தார். அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானதும், அடிகளாரை மேலவை உறுப்பினருக்கு பரிந்துரைக்க, பதவி ஏற்றதும் இந்தியாவிலேயே முதன் முறையாக மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மிகவாதி என்ற பெருமையை அடிகளாருக்கு ஏற்பட்டது.

1967ல், அண்ணா பதவி ஏற்றதும் திருச்சியில் பெரியார் பிறந்த நாளை ஒட்டி விழா நடைபெற்றது, அந்த நிகழ்ச்சியில் நாவலர் நெடுஞ்செழியன், குன்றக்குடி அடிகளார், திருச்சி திராவிடக் கழக தலைவர் செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த ஆண்டு பிறந்த நாள் செய்தியாக பெரியார் அறிவித்த செய்தியைக் கேட்டதும் அனைவரும் அதிர்ந்தனர், ஒரு சில குடும்ப பிரச்சனைகளை மறைமுகமாகக் குறிப்பிட்ட பெரியார், இறுதியாக "நான் துறவியாகிவிடலாமா என்று பார்க்கிறேன்"

அதை கேள்விபட்டபோது அண்ணா அப்போது அமெரிக்காவில் இருந்தார், அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையிலும் பெரியாருக்கும் ஆறுதல் கடிதம் எழுதினாராம். "அப்படி துறவு மேற்கொள்வதாக இருந்தால் குன்றக்குடி மடத்துக்கு வந்துவிடுங்கள்" என்றாராம் பிறந்த நாள் விழாவில் தலைமை ஏற்ற அடிகளார். 'அப்படி என்றால் பெரியார் குன்றக்குடி மடத்தின் தலைவராகட்டும், அடிகளார் திராவிடக் கழகத்தின் தலைவராகட்டும், அப்படி செய்தால் அது பெரியாருக்கு சிறந்த பிறந்த நாள் பரிசாக அமையும்' என்று கேட்டுக் கொண்டாராம் செல்வேந்திரன். அங்கிருந்தவர்களின் பல்வேறு உரையாடல்களைக் கேட்டுக் கொண்டு இருந்த பெரியார் எதுவும் பேசாமல் இருக்க, 'பெரியாரே இது பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பதால் நான் செல்வேந்திரனின் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறேன்' என்றாராம் அடிகளார்.

அனைவரும் கலகலப்பாக பேசிக் கொண்டு இறுதியாக பாராட்டு நடத்திய அடிகளார் பெரியாருக்கு பொன்னாடைப் போடுவதற்கு எழ, தன்னால் பிறர் துணை இன்றி எழவே முடியாத பெரியார் தானே முயன்று கால்கள் நடுநடுங்க எழுந்து நின்றதும், அடிகளார் பெரியாருக்கு பொன்னாடை போர்த்தி வணக்கம் தெரிவிக்க, பெரியார் கால்கள் நடுநடுங்க குனிய உணர்ந்து கொண்ட அடிகளார் சமாளித்து தடுக்க முயற்சிக்கும் முன் பெரியார் அடிகளாரின் காலை தொட்டு வணங்கிவிட்டார். இது அங்கு பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாம். அடிகளார் ஆன்மிகவாதி என்றாலும் அவர் பெரியாரைவிட வயதில் பாதி அளவுதான். பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை பெரியாரே மீறுவது அனைவரையும் மவுனத்தில் ஆழ்த்தியதாம்.

மறுநாள் பெரியார் இல்லத்தில் கூடிய தொண்டர்களும், திருச்சி செல்வேந்திரனும் தயங்கி தயங்கி நிற்க, பெரியார் நேற்றைய நிகழ்வு உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கும் என்றதும் "ஐயா நேற்று நீங்கள் செய்த காரியம் எங்களுக்கு பிடிக்கவில்லை, தூக்கமில்லாம் செய்துவிட்டது" என்றது எல்லோருக்குமே பிடிக்காமல் போய்விட்டதா ? என்று கேட்டு, 'என்னங்க செல்வேந்திரன், நீங்கள் புத்திசாலின்னு நெனெச்சேன்' என்று சொல்லிக் கொண்டே பேசத் தொடங்கினாராம் பெரியார்.

"சர்.சி.பி.இராமசாமி ஐய்யரை தெரியுமா உங்களுக்கு ? எருமை நாக்கை விரும்பி சாப்பிடுகிற பார்பனத் தலைவர்...உலகமெல்லாம் சுற்றி வந்து பெரிய பதவிகளில் இருந்தவர் அவர் போய் காஞ்சிபுரம் சங்கராச்சாரி காலில் விழுகிறாரே ஏன் ?... தான் மரியாதை செய்தால் தான், தன்னுடைய நிறுவனம் பெருமைபடனுமின்னு, அதைத்தான் நானும் செய்தேன், சூத்திர சாதி மடத்தை (அடிகளாரின் மடத்தை) நானும் பெருமைபடுத்த நானும் செஞ்சேன். எனக்கு என் மரியாதை முக்கியமில்லை, என் இனத்தின் மரியாதை தான் முக்கியம், பகுத்தறிவு மற்ற எல்லா எழவையும் அப்பறம் பாத்துக் கொள்ளலாம்" என்றார்

பின் குறிப்பு: நான் தற்போதைய எந்த பித்துகுளி திராவிட இயக்கத்தினை சார்ந்தவனும் இல்லை......பெரியார் பார்பனியத்தை எதிர்த்தாரே ஒழிய பார்பனர்களை அல்ல.... போகட்டும்.... தமிழில் அந்தணர்கள் என்று கேள்விபட்டதுண்டு... எப்படி அவர்கள் பார்பனர்கள் ஆனார்கள்??

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

... எதோ எழுதுகிறோம் என்றவுடன் எழுதுவதெல்லாம் சரி என்ற நினைப்பு எமக்கு!! ...

... கன்னட எதிர்ப்பு, மலையாளிகள் எதிர்ப்பு, தெலுங்கு எதிர்ப்பு ... எல்லாச்சத்தமும் இட்டோம்! ... நேற்று இலங்கையில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவை ... அவர்கள் எல்லாம் சேர்ந்து மண் கவ்வச் செய்தார்கள்!!

... திராவிட புளிச்சல் கட்சிகளின் இதுவரையிலான உந்த குப்பை அரசியல் இனியும் எமக்கு வேண்டாம்!! ... நாமும் புளிச்சல் எழுத்துக்களை நிறுத்துவோம்!!

எம்மத்தியிலும் பிராமணர்கள் உள்ளார்கள்! சில மாவீரர்கள் குடும்பங்கள் கூட உள்ளது! ... நோகடிக்காதீர்கள்!

ஆமென்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பனீயம் என்பது பிராமணர்களை நோகடிக்கும் சொல் ஒன்றல்ல. பிராமணர்கள் தமிழருக்குச் சார்பாக நின்றாலும் அவற்றைப் பார்ப்பனீய சக்திகள் எதிர்க்கும். பார்ப்பனீயம் என்பது இன்று அதிகார மையம் என்றுதான் ஆகிவிட்டது என்று நினைக்கின்றேன்.

ஆமென்...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா புரட்சி

நாங்கள் மிகவும் நொந்து போயுள்ளோம்

இனி எதைக்காட்டியும் எம்மை பிரிக்க அனுமதியோம்

ஏதோ சொல்வார்கள்

மூஞ்சூறு தான் போக வழியைக்காணவில்லையாம்

விளக்குமாறை தூக்கிக்கொண்டு போகமுயலுதாம் என்று.

எங்களை வைத்து காமெடி செய்ய வேண்டுமானால் இந்த வசனநடைகள் உதவலாம்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா புரட்சி

நாங்கள் மிகவும் நொந்து போயுள்ளோம்

இனி எதைக்காட்டியும் எம்மை பிரிக்க அனுமதியோம்

ஏதோ சொல்வார்கள்

மூஞ்சூறு தான் போக வழியைக்காணவில்லையாம்

விளக்குமாறை தூக்கிக்கொண்டு போகமுயலுதாம் என்று.

எங்களை வைத்து காமெடி செய்ய வேண்டுமானால் இந்த வசனநடைகள் உதவலாம்

நன்றி

பழமொழி அருமை தோழர் விசுகு ... நன்றி... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.