Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் தொலைக்காட்சி நடாத்திய இசை நிகழ்ச்சியில் முதல்பரிசு பெறும் தமிழகத்தின் செல்லக்குரல் 'அல்கா அஜித்'

Featured Replies

இறுதி நிகழ்ச்சியில் அல்கா பாடிய ஓர் பாடல்:

http://www.youtube.com/watch?v=4pJwnk4yF08

வெற்றியாளர் அறிவிக்கப்படுகின்றார்:

http://www.youtube.com/watch?v=F4K3ni4Qh2g

AIRTEL SUPERSINGER JUNIOR 2 2010 நீங்களும் பார்த்து இருப்பீங்கள். நானும் இடையிடையே பல மாதங்களாக இந்த நிகழ்ச்சியை பார்த்து வந்தேன். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அல்கா அஜித் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். :lol:

Edited by மச்சான்

நான் சிறீகாந்த் அல்லது ஷ்ரவந்தான் வெற்றி பெறுவினம் என்று நினைத்திருந்தேன்.,,

ஷ்ரவன் மிகத் திறமையாக அல்காவை விட பாடுவதைக் காணக் கூடியதாக இருந்தது..... திறமைக்குத்தான் பரிசு என்றாலும், தமிழகம் இதில் கூட மலையாளிகளை வெல்ல முடியாமல் தோற்றுவிட்டது என்பதை நினைக்க கவலையாக இருக்கு. முழுக்க முழுக்க மலையாளிகளையே நடுவர்களாகப் போட்டதும் காரணமாக இருக்கலாம்

  • தொடங்கியவர்

Overall அல்கா மிக நன்றாய் பாடி இருந்தார். அரையிறுதியில ஒரு சில பாட்டுக்களில கொஞ்சம் நடுக்கம் இருந்திச்சிது. அது வழமையாய் எல்லாருக்கும் போட்டி என்றால் வரக்கூடியதுதான். அதுவும் வயதில இளையவர்கள் என்றால் அழுத்தம் அதிகமாய் இருக்கும்போது கொஞ்சம் பிசகத்தான் பார்க்கும். மற்றது, வெற்றியாளரை தெரிவு செய்தது நடுவர்கள் இல்லையே. குறுஞ்செய்தி, வலைத்தளம் மூலமான கருத்துக்கணிப்பு மூலம்தானே வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

உயரமான, கொஞ்சம் உடம்பான வயதில மற்றவர்களைவிட அதிகமான அந்த சிறுவன் அல்காவுடன் ஒப்பிடும்போது கூச்சம், பயம் இல்லாமல் பாடி இருந்தார் என்பது உண்மைதான். ஆனால்.. குரல்வளம், கடினமான பாடல்களை பாடுறது, இனிமை இவற்றில எனக்கு என்னமோ அவரைவிட அல்கா நல்லாய் செய்து இருப்பதாகவே படுகிது.

ஆறு வயசான சிறீகாந்த் விசயத்தில; அவர் வயதுக்கு மிஞ்சிய திறமை சாலி என்பது உண்மை. ஆனால், அவர் வயசு காரணமாக பல இடங்களில அவரால தெளிவாக உச்சரித்து இனிமையாக பாடுவது கடினமாய் இருக்கிது. :wub:

Overall அல்கா மிக நன்றாய் பாடி இருந்தார். அரையிறுதியில ஒரு சில பாட்டுக்களில கொஞ்சம் நடுக்கம் இருந்திச்சிது. அது வழமையாய் எல்லாருக்கும் போட்டி என்றால் வரக்கூடியதுதான். அதுவும் வயதில இளையவர்கள் என்றால் அழுத்தம் அதிகமாய் இருக்கும்போது கொஞ்சம் பிசகத்தான் பார்க்கும். மற்றது, வெற்றியாளரை தெரிவு செய்தது நடுவர்கள் இல்லையே. குறுஞ்செய்தி, வலைத்தளம் மூலமான கருத்துக்கணிப்பு மூலம்தானே வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

உயரமான, கொஞ்சம் உடம்பான வயதில மற்றவர்களைவிட அதிகமான அந்த சிறுவன் அல்காவுடன் ஒப்பிடும்போது கூச்சம், பயம் இல்லாமல் பாடி இருந்தார் என்பது உண்மைதான். ஆனால்.. குரல்வளம், கடினமான பாடல்களை பாடுறது, இனிமை இவற்றில எனக்கு என்னமோ அவரைவிட அல்கா நல்லாய் செய்து இருப்பதாகவே படுகிது.

ஆறு வயசான சிறீகாந்த் விசயத்தில; அவர் வயதுக்கு மிஞ்சிய திறமை சாலி என்பது உண்மை. ஆனால், அவர் வயசு காரணமாக பல இடங்களில அவரால தெளிவாக உச்சரித்து இனிமையாக பாடுவது கடினமாய் இருக்கிது. :wub:

வீட்டில் ரொஜர்ஸ் இணைப்பின் மூலம்தான் விஜய் ரீவி வைத்திருக்கின்றேன். வீட்டில் இருக்கும் ஒரே ஒரு தமிழ் தொலைக்காட்சியும் இதுதான். இளம் சிறார்கள் பாடும் இந்த நிகழ்சிக்காவே இந்த இணைப்பை பெற்றனான். இங்கு ஒரு வாரம் தாமதமாகத்தான் நிகழ்ச்சிகளை காட்டுகின்றனர். அடுத்த வாரம்தான் இறுதி முடிவுக்கான நிகழ்ச்சிகள் காட்டுவினம்

நீங்கள் இணைத்த இணைப்பைப் பார்த்துத்தான் இறுதி முடிவுகளை அறிந்து கொண்டேன். நான் புரிந்து கொண்ட விதத்தில், Most Popular என்று சிறிகாந்தை ரசிகர்களின் அதிக வாக்குகளின் அடிப்படையில் தானே தெரிவு செய்தார்கள்?? அப்படி என்றால் அவரைத்தானே ரசிகர்கள் தீர்மானித்துள்ளார்கள்? அல்காவை ரசிகர்களின் வாக்களிப்பின் முடிவுகளின் அடிப்படையில் மட்டும் வைத்தா தெரிவு செய்தார்கள் இல்லை நடுவர்களின் பங்களிப்பும் உண்டா? முழுமையாக பார்த்திருந்தால் சொல்லுங்கள் மச்சான். உண்மையில் சிறீகாந்த்தை விட, ஷ்ரவன் வருவார் என்றுதான் நம்பியிருந்தேன். மிகவும் பண்பட்ட ஒரு பாடகனாக உருவாகி இருந்தார்.

இவர்கள் எல்லாரையும் விட ஸ்ரீநிஷா மிகவும் திறமையானவர் என்பது என் கணிப்பு.

  • தொடங்கியவர்

நானும் வீட்டிலதான் பார்க்கிறது இடைக்கிடை. இன்று தற்செயலாக இந்த இறுதிப்போட்டி சம்மந்தமான காணொளிகளை வலையில பார்த்தன். இறுதி வெற்றியாளரை தேர்வு செய்கிறதில நடுவர்களின் முடிவு இடம்பெற இல்லை. முழுக்க முழுக்க பார்வையாளர்களே கருத்துக்கணிப்பு மூலம் தெரிவு செய்தார்கள் நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறீகாந்த் அல்லது ஷ்ரவந்தான் வெற்றி பெறுவினம் என்று நினைத்திருந்தேன்.,,

ஷ்ரவன் மிகத் திறமையாக அல்காவை விட பாடுவதைக் காணக் கூடியதாக இருந்தது..... திறமைக்குத்தான் பரிசு என்றாலும், தமிழகம் இதில் கூட மலையாளிகளை வெல்ல முடியாமல் தோற்றுவிட்டது என்பதை நினைக்க கவலையாக இருக்கு. முழுக்க முழுக்க மலையாளிகளையே நடுவர்களாகப் போட்டதும் காரணமாக இருக்கலாம்

http://forum.startv.in/showthread.php?p=1806814

  • கருத்துக்கள உறவுகள்

என்ட அம்மாவுக்கு ஸ்ரீநிசாவைத் தான் பிடிக்கும்...அம்மா ஊரில பார்க்கிறவ.

  • கருத்துக்கள உறவுகள்

.... திறமைக்குத்தான் பரிசு என்றாலும், தமிழகம் இதில் கூட மலையாளிகளை வெல்ல முடியாமல் தோற்றுவிட்டது என்பதை நினைக்க கவலையாக இருக்கு. முழுக்க முழுக்க மலையாளிகளையே நடுவர்களாகப் போட்டதும் காரணமாக இருக்கலாம்

தங்களது கருத்துடன் உடன்படமுடியவில்லை நிழலி

காரணம் தமிழர்கள் தற்போது ஆங்கில மற்றும் தொழில் நுட்பங்களின் ஆட்சியின் கீழ் வந்துவிட்டனர். இவற்றை படித்து பணம்சேர்ப்பதையே முன்னேற்றமான பாதையாக தொடர்கின்றனர்.

ஆனால் மலையாளிகள் தற்போதும் கலை பண்பாட்டுத்துறைகளில் கவனம் செலுத்துவதை பார்க்கக்கூடியதாக உள்ளது.

தாங்கள் வேறு ஒரு இடத்தில் எழுதி கருத்தையும் இங்கு இணைக்கின்றேன் பொருந்துகிறதா என்று பார்க்கவும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67391&st=0

ஒரு தமிழ் சினிமாவை கிட்டத்தட்ட 3 மணி நேரம் மினக்கெட்டு பார்க்கும் எமக்கு, ஏன் ஒரு படைப்பை கொஞ்சம் மினக்கெட்டு புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது?... நான் க.பொ.தரம் உயர் பீடத்தில் கணிதம் படிக்கும் போது, ஒரு கணக்கு விளங்காவிடின் 72 மணி நேரத்துக்கும் மேலாக முயன்று பார்த்துள்ளேன். அப்படித்தான் என் நண்பர்களும் முயன்றனர். ஏனெனில் அது வாழ்வாதார பிரச்சனையாக தோன்றியது

ஆனால், இலக்கியம் என்றவுடன் அது அம்புலிமாமா கதை போலத்தான் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஏன்? விளங்காவிடினும் வாழ்வு பொய்க்காது என்பதாலா? மற்ற மொழிகளில் எல்லாம் பெரும் உயர் விருதுகளை அடையும் போது தமிழ் மட்டும் இன்னும் இப்படி இருப்பது ஏன்? 30 வருட போராட்ட வாழ்விலும் எம்மால் உலகுக்கு வழங்கப்பட்ட உயர் இலக்கிய படைப்பு எது? ரஷிய மொழியில் போர்க்காலத்தில் வந்த உலக தன்னிகரற்ற நாவல்களை எம் இலக்கியம் வென்றிருக்க வேண்டாமா?ஏனெனில், எமக்கு உழைப்பைத் தரும் படிப்பை மட்டுமே பாத்து பழகிப்போய் விட்டோம். கொஞ்சம் மினக்கெட்டு புரிந்து கொள்ளப்படும் இலக்கியப் படைப்பால் ஐந்து சதமேனும் பெறமுடியாது என்பதால் அவற்றை விலக்கி விட்டோம். வீட்டில், "கதைப் புத்தகம் படிக்காமல் போய் பள்ளிக்கூட புத்தகம் படி, பாசாகி கம்பஸ் என்ரர் பண்ணலாம்" என்று சொல்லும் பெற்றோரின் அறிவுரையைத் தான் இன்றும் தொடர்கின்றோம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இன்னைப்புக்கு நன்றி குருஜி! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த அல்கா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இந்த அல்கா?

இப்பிடியே இருக்கிற இடத்திலையிருந்து இறங்கி கொஞ்சத்தூரம் நடந்து போங்கோ..

நடந்து போகேக்கை விசுவநாதரின்ரை காணிவரும்

அதுக்குள்ளை தென்னங்குத்தியிலை இருந்து ஒரு சின்னன் கொட்டாடிக்கொண்டிருக்கும் அவதான் நீங்கள் விசாரிச்ச "அல்கா"

  • கருத்துக்கள உறவுகள்

நக்கல் அடிக்கிறதுக்கு கு சா அண்ணாவை ஒருதரும் மிஞ்சேலாது.

  • தொடங்கியவர்

நேற்று அல்கா அஜித் பற்றி கூகிழில தேடல் செய்து பார்த்தன். அல்கா அவர்கள் ஏற்கனவே உலகத்திற்கு மிகவும் பரீட்சயமானவர் எங்கள் ஒரு சிலருக்குத்தான் புதியவர் என்பதை கண்டறிந்தன். அவர் இரண்டு மூன்று வயசில இருக்கும் போதே பாடல்களை பாடத்தொடங்கி பல சாதனைகள் செய்து பிரபலம் ஆகி இருக்கிறார். பத்து, பதின் இரண்டு மொழிகளில பாடக்கூடியவர் என்று சொல்லப்படுகிது. அல்கா அஜிட்தின்ர பின்னணியை பார்க்கும்போது அவர் இந்த சூப்பர் சிங்கர் யூனியர் போட்டியில முதல்பரிசை வெற்றி பெற்று இருப்பதில ஆச்சரியப்படுகிறதுக்கு ஒன்றும் இல்லை என்று தெரிகிது. அத்துடன், மிகவும் திறமைசாலியான ஒருவரே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிது. கீழுள்ள கட்டுரை அல்கா அஜித் பற்றி சுமார் ஆறு வருசங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபல செய்தி இதழில வந்து இருக்கிது.

+++

Small wonder

This summer, Alka will release her latest album.

2004041701120301.jpg

When others are planning to have fun this summer, Alka is preparing for her concerts. Alka Ajith is in Standard II, of Holy Family English Medium School, Thalassery. She has not completed seven years. But she has sung more than 5,000 songs, can sing in 11 languages and has given more than 500 stage programmes all over India.

In February, this year, Alka performed for the Guinness Record of `Youngest Musician in Asia', at Muthalakkodam, Thodupuzha. The function was organised by Muthalakkodam Jaycees and World Wonders Web, which is an international miracle performers association.

Alka gave her first public performance when she was two and a half years old. She sang the Hindi super hit "Soldier ... ... Soldier... ". The programme was organised to remember Kargil heroes. When she was four she cut her first audio album, "I love my India". The album had eight patriotic songs. Besides this album, she also has audiocassettes to her credit. Recently she has sung songs in Chinese, French and Arabic. But she likes to sing Malayalam songs best.

Alka, daughter of M.P. Ajith Kumar and K. Sajitha, of Mandala Parambath, Kavumbhagam, Thalassery, comes from a family of musicians. Ajith Kumar is a professional musician and organist. He now runs Alka's Orchestra, `Sangeeth Sagar'. Ajith Kumar is not only Alka's inspiration but her guru too. "We are proud of Alka," says P. Chandran, Principal, Holy Family.

Alka entered the Limca Book of World Records in 2003. She has won many awards including Bharatheeya Gourav Puraskar, New Delhi in 2003, Sauparnika Theeram Mini Screen Award in 2004, Thalassery Drishya Kala's A. T. Ummer Award in 2004, International UNESCO Club of Repalle (A.P) award and Gold Medal in 2001 and the Rotary International achievement award and gold medal in 2002.

Most of Alka's concerts are held during holidays and the vacation. Her father composes all her songs. Her next project is an album on pop songs and performances in the Gulf countries and the U.S..

தகவல் மூலம்: The Hindu

தமிழகத்தின் என்று இல்லாமல் இந்தியாவின் செல்லக்குரலுக்கான தேடல் என்று சொல்லி ஏதும் இசை போட்டி நிகழ்ச்சி வைத்து இருந்தால் அதிலும் அல்கா அஜித்தான் வெற்றி பெற்று இருப்பாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

Edited by மச்சான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.