Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்ணின் மூக்கை துண்டித்த தலிபான்கள்: ஆப்கனில் உச்சகட்ட கொடூரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணின் மூக்கை துண்டித்த தலிபான்கள்: ஆப்கனில் உச்சகட்ட கொடூரம்

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2010,23:30 IST

வாஷிங்டன் : கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தான். காந்தாரக் கலைகளுக்கும், உலர் பழ விளைச்சலுக்கும் ஒருகாலத்தில் புகழ் பெற்ற தேசம் இது. இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. குண்டு வெடிப்பும், துப்பாக்கிச் சத்தமும் ஆப்கன் மக்களின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. திரும்பிய இடமெல்லாம், குண்டு வெடிப்பால் சிதைந்த கட்டடங்கள், இறுக்கமான முகங்களுடன் துப்பாக்கிகளுடன் நடமாடும் ராணுவ வீரர்கள். பீதி அகலாத கண்களுடனும், விரக்தி அடைந்த மனதுடனும் நடமாடும் மக்கள். இதுதான் இன்றைய ஆப்கானிஸ்தானின் அடையாளங்கள். அழகு மிகுந்த அந்த தேசம், தற்போது உருக்குலைந்து போய் கிடக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தலிபான் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது, ஆப்கானிஸ்தான். அப்போது அவர்கள் வைத்தது தான், அங்கு சட்டம். பெண்கள் பள்ளிக்கு போகக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் அங்கு அரங்கேறின. கடந்த 2001ல் அமெரிக்காவின் நியூயார்க் இரட்டை கோபுரத்தின் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவம், ஆப்கனில் குவிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பின், தலிபான்களின் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது. இருந்தாலும், தலிபான்களின் ஆதிக்கம் இன்னும் அங்கு கொடிகட்டி பறக்கிறது. தலிபான்களின் கொடூரத்துக்கு ஆளான ஆப்கன் இளம்பெண் ஒருவரை பற்றிய விஷயம் தான், தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அமெரிக்காவின் "டைம்' பத்திரிகையைச் சேர்ந்த குழு, ஆப்கனுக்கு சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேட்டி எடுத்து, அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

அது குறித்த விவரம்:

பீபி ஆயிஷா: அந்த இளம்பெண்ணின் பெயர் பீபி ஆயிஷா. தற்போது அவருக்கு 18 வயதாகிறது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதாகும்போதே, தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து, ஆயிஷாவை பணத்துக்காக விற்பனை செய்து விட்டார், அவரது தந்தை. அதற்கு பின், இரண்டு ஆண்டுகளுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைகளை சந்தித்தார், ஆயிஷா. கணவரின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்டோர் ஆயிஷாவை தினமும் கொடுமைப் படுத்தி வந்தனர்.

வீட்டை விட்டு வெளியேறினார்: ஒரு கட்டத்தில், இங்கிருந்து எப்படியாவது வெளியேறி விடவேண்டும் என்று முடிவெடுத்தார். அங்கிருந்து தப்பிச் சென்றார். ஆனால், இந்த நிம்மதி அவருக்கு நீண்ட நாள் நீடிக்கவில்லை. கடந்தாண்டு அவரது கணவர், ஆயிஷாவை கண்டு பிடித்து விட்டார். ஒருஜ்கான் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த தலிபான் கோர்ட் முன், ஆயிஷா நிறுத்தப்பட்டார். வீட்டை விட்டு ஓடிப்போன குற்றத்துக்காக ஆயிஷாவின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தலிபான் கோர்ட், கடுமையான தண்டனை விதித்தது.

மூக்கு வெட்டப்பட்டது: உயரமான மலைப் பகுதிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆயிஷாவின் கணவரின் சகோதரரும், மற்றவர்களும் அவரை கீழே படுக்க வைத்து, அசையவிடாமல் பிடித்துக் கொண்டனர். பின், அவரது கணவர் கத்தியுடன் வந் தார். முதலில் ஆயிஷாவின் காதை கத்தியால் வெட்டினார். இதன்பின், அவரது மூக்கையும் துண் டித்தார். வலியால் கதறித் துடித்தார், ஆயிஷா. இறந்து விடுவார் என, நினைத்து அவரை மலைப் பகுதியிலேயே விட்டு, விட்டு போய்விட்டனர்.

இதன்பின், எப்படியோ அங்கிருந்து தப்பிச் சென்றார். காபூலில் பெண்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அகதிகள் முகாமில், ஆயிஷா தஞ்சம் அடைந்தார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் சேதமான உறுப்புகளுடன் தற்போது உயிர் வாழ்கிறார். கடந்த சில மாதங்களாக அங்கு தான் அவர் தங்கியுள்ளார். அகதிகள் முகாமுக்கு ஏராளமான மீடியாக்காரர்கள் வந்து சென்றனர். அவர்களுக்கு, ஆயிஷாவின் பரிதாப நிலை குறித்து தெரியவந்தது. இதற்கு பின், அமெரிக்காவின் "டைம்' பத்திரிகையில், சிதைந்த முகத்துடன் ஆயிஷா விரக்தியுடன் காட்சி தரும் புகைப்படங்கள் வெளியாயின. இந்த பரிதாப காட்சியை பார்த்த மக்கள், அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

மறுவாழ்வு: இதுகுறித்த தகவல், அமெரிக்காவில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் தெரியவந்தது. நல்ல உள்ளம் கொண்ட சிலர், ஆயிஷாவின் சிதைந்த மூக்கு மற்றும் காதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முன்வந்தனர். இதற்கு ஆயிஷாவும் சம்மதித்தார். இதற்காக அவர் விரைவில் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். பயங்கரவாதத்துக்கு தன் முகத்தையே விலையாக கொடுத்த ஆயிஷா, "டைம்' பத்திரிகை குழுவிடம் கூறுகையில், "தலிபான் அமைப்புடன் சில ஒப்பந்தங்களை செய்து கொள்ள முடிவு செய்துள்ளாக அதிபர் கர்சாய் தெரிவித்துள்ளார். ஆனால், மிகக்கொடூரமாக நடந்து கொள்வோரிடம் எப்படி இணக்கமாக வாழ முடியும். என்னை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் அவர் கள் தானே' என, தனது சிதைந்த முகத்தை விரல்களால் தொட்டுக் காட்டி விரக்தியுடன் பேசினார்.

தினமலர்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அமெரிக்க மேற்குலக ஊடகங்கள் விபரிப்பது போன்று தலிபான்கள் ஒன்றும் பயங்கரமானவர்கள் கிடையாதாம்.

எப்படி இவர்கள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்தார்களோ அப்படித்தான் தலிபான்களையும் சித்தரிக்கின்றனர்.

தலிபான்கள் சமூக விரோதிகளுக்கு அளிக்கும் தண்டனைகளையே இவர்கள் கொடுமையாக சித்தரிக்கின்றனர்.

அதேவேளை அமெரிக்கா நச்சு ஊசி ஏற்றி குற்றவாளிகளைக் கொல்கிறது.

இந்தியா மாவோஜிட்டுக்களை மிருகங்களிலும் விடக் கேவலமாக நடத்தி கொன்று காட்டுப் பன்றி போல் பெண்களின் உடலங்களையே தடிகளில் காவித் திரிகின்றனர்.

சிறைக்காலத்தை முடித்த பின்னும் நளினி போன்ற பெண்களையே கேவலமாக நடத்துகிறது இந்திய நீதித்துறை.

அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி.. கை கால் மூக்கு.. தொண்டை ஏன் தலையையே அறுத்து கொல்கிறது.

இதையெல்லாம் தண்டனைகளாக வர்ணிக்கும் இந்திய மற்றும் பிற ஊடகங்கள்.. தலிபான்களின் செயலை மட்டும் பயங்கரவாதமாக சித்தரிப்பதுதான் வேடிக்கையானது.! அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப சிறிய விடயங்களையும் பெரிதாக உருவகப்படுத்துகிறார்கள்.

தயவுசெய்து இந்திய ஊடகங்கள் உச்சரிக்கும் இவ்வாறான செய்திகளை இடுவதை தவிருங்கள்.

இந்த தினமணிகள்.. கடலில் இந்திய மீனவனை சிங்களம் அடித்துக் கொன்றதை விபரிக்குமா பயங்கரவாதமாக. அது இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகவே பார்க்கப்படும். எனவே இந்திய ஊடகங்களின் இந்தப் பொய் முகத்துக்கு நீங்களும் முக்கியம் கொடுக்காதீர்கள்.

எமக்கு தலிபான்களை பயங்கரவாதிகள் என்று காட்டவோ உச்சரிக்கவோ வேண்டிய தேவையில்லை. அவர்களும் எமக்கு அமெரிக்கா இந்தியா சவுதி.. போன்று..நண்பர்களே.

சவுதியில் மனித உறுப்புக்களை அரசுக்காக அறுக்கும் ஒருவர் சொல்வதையும் கேளுங்கள்..! தலிபான்கள் செய்வது மட்டும் எப்படி பயங்கரவாதமானது..???! :lol::):lol:

bbc இல் வந்த இந்த மூக்கறுப்பு பற்றிய செய்தி..

http://www.bbc.co.uk/news/world-south-asia-10897018

His family abused her and she ran away but was recaptured and mutilated by her husband.

இந்த ஆசா என்ற பெண்ணின் கணவர் தான் அவரை விட்டுவிட்டு ஓடியதற்காக மூக்கை அறித்திருக்கிறார். அவருக்கு தலிபான்களின் கமாண்டர் இப்படிச் செய்யச் சொன்னாராம் என்பது அமெரிக்க ரைம்ஸ்.. பிபிசியின் இட்டுக்கட்டுகைகள். அதற்கு இந்திய ஊடகங்கள்.. ஆலாவர்ணம் பூசுகின்றன. :lol: :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் தண்டனைகளாக வர்ணிக்கும் இந்திய மற்றும் பிற ஊடகங்கள்.. தலிபான்களின் செயலை மட்டும் பயங்கரவாதமாக சித்தரிப்பதுதான் வேடிக்கையானது.! அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப சிறிய விடயங்களையும் பெரிதாக உருவகப்படுத்துகிறார்கள்.

தயவுசெய்து இந்திய ஊடகங்கள் உச்சரிக்கும் இவ்வாறான செய்திகளை இடுவதை தவிருங்கள்.

இந்த தினமணிகள்.. கடலில் இந்திய மீனவனை சிங்களம் அடித்துக் கொன்றதை விபரிக்குமா பயங்கரவாதமாக. அது இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகவே பார்க்கப்படும். எனவே இந்திய ஊடகங்களின் இந்தப் பொய் முகத்துக்கு நீங்களும் முக்கியம் கொடுக்காதீர்கள்.

எமக்கு தலிபான்களை பயங்கரவாதிகள் என்று காட்டவோ உச்சரிக்கவோ வேண்டிய தேவையில்லை.

சரியாகச் சொன்னீர்கள். அதிலும் இந்தியருக்கு பயங்கரவாதத்தை பற்றி கதைக்கும் அருகதை இல்லை.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் குசுவிட்டால் குற்றம் ஐயர் குசுவிட்டால் குற்றமில்லை எண்ட மாதிரித்தான் இந்தியாவின்ரை நிலை போலை கிடக்கு

மூஞ்சூறு தான் போக காணேல்லையாம் இதுக்குள்ளை விளக்குமாத்தையும் காவிக்கொண்டு போக வெளிக்கிட்டுது

Edited by குமாரசாமி

கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தான். காந்தாரக் கலைகளுக்கும், உலர் பழ விளைச்சலுக்கும் ஒருகாலத்தில் புகழ் பெற்ற தேசம் இது. இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. குண்டு வெடிப்பும், துப்பாக்கிச் சத்தமும் ஆப்கன் மக்களின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. திரும்பிய இடமெல்லாம், குண்டு வெடிப்பால் சிதைந்த கட்டடங்கள், இறுக்கமான முகங்களுடன் துப்பாக்கிகளுடன் நடமாடும் ராணுவ வீரர்கள். பீதி அகலாத கண்களுடனும், விரக்தி அடைந்த மனதுடனும் நடமாடும் மக்கள். இதுதான் இன்றைய ஆப்கானிஸ்தானின் அடையாளங்கள். அழகு மிகுந்த அந்த தேசம், தற்போது உருக்குலைந்து போய் கிடக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தலிபான் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது, ஆப்கானிஸ்தான். அப்போது அவர்கள் வைத்தது தான், அங்கு சட்டம். பெண்கள் பள்ளிக்கு போகக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் அங்கு அரங்கேறின. கடந்த 2001ல் அமெரிக்காவின் நியூயார்க் இரட்டை கோபுரத்தின் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவம், ஆப்கனில் குவிக்கப்பட்டது.

நீண்ட போராட்டத்துக்கு பின், தலிபான்களின் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது. இருந்தாலும், தலிபான்களின் ஆதிக்கம் இன்னும் அங்கு கொடிகட்டி பறக்கிறது. தலிபான்களின் கொடூரத்துக்கு ஆளான ஆப்கன் இளம்பெண் ஒருவரை பற்றிய விஷயம் தான், தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அமெரிக்காவின் "டைம்' பத்திரிகையைச் சேர்ந்த குழு, ஆப்கனுக்கு சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேட்டி எடுத்து, அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

அது குறித்த விவரம்:

பீபி ஆயிஷா: அந்த இளம்பெண்ணின் பெயர் பீபி ஆயிஷா. தற்போது அவருக்கு 18 வயதாகிறது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதாகும்போதே, தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து, ஆயிஷாவை பணத்துக்காக விற்பனை செய்து விட்டார், அவரது தந்தை. அதற்கு பின், இரண்டு ஆண்டுகளுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைகளை சந்தித்தார், ஆயிஷா. கணவரின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்டோர் ஆயிஷாவை தினமும் கொடுமைப் படுத்தி வந்தனர்.

வீட்டை விட்டு வெளியேறினார்: ஒரு கட்டத்தில், இங்கிருந்து எப்படியாவது வெளியேறி விடவேண்டும் என்று முடிவெடுத்தார். அங்கிருந்து தப்பிச் சென்றார். ஆனால், இந்த நிம்மதி அவருக்கு நீண்ட நாள் நீடிக்கவில்லை. கடந்தாண்டு அவரது கணவர், ஆயிஷாவை கண்டு பிடித்து விட்டார். ஒருஜ்கான் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த தலிபான் கோர்ட் முன், ஆயிஷா நிறுத்தப்பட்டார். வீட்டை விட்டு ஓடிப்போன குற்றத்துக்காக ஆயிஷாவின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தலிபான் கோர்ட், கடுமையான தண்டனை விதித்தது.

மூக்கு வெட்டப்பட்டது: உயரமான மலைப் பகுதிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆயிஷாவின் கணவரின் சகோதரரும், மற்றவர்களும் அவரை கீழே படுக்க வைத்து, அசையவிடாமல் பிடித்துக் கொண்டனர். பின், அவரது கணவர் கத்தியுடன் வந்தார். முதலில் ஆயிஷாவின் காதை கத்தியால் வெட்டினார். இதன்பின், அவரது மூக்கையும் துண் டித்தார். வலியால் கதறித் துடித்தார், ஆயிஷா. இறந்து விடுவார் என, நினைத்து அவரை மலைப் பகுதியிலேயே விட்டு, விட்டு போய்விட்டனர்.

இதன்பின், எப்படியோ அங்கிருந்து தப்பிச் சென்றார். காபூலில் பெண்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அகதிகள் முகாமில், ஆயிஷா தஞ்சம் அடைந்தார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் சேதமான உறுப்புகளுடன் தற்போது உயிர் வாழ்கிறார். கடந்த சில மாதங்களாக அங்கு தான் அவர் தங்கியுள்ளார். அகதிகள் முகாமுக்கு ஏராளமான மீடியாக்காரர்கள் வந்து சென்றனர். அவர்களுக்கு, ஆயிஷாவின் பரிதாப நிலை குறித்து தெரியவந்தது. இதற்கு பின், அமெரிக்காவின் "டைம்' பத்திரிகையில், சிதைந்த முகத்துடன் ஆயிஷா விரக்தியுடன் காட்சி தரும் புகைப்படங்கள் வெளியாயின. இந்த பரிதாப காட்சியை பார்த்த மக்கள், அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

மறுவாழ்வு: இதுகுறித்த தகவல், அமெரிக்காவில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் தெரியவந்தது. நல்ல உள்ளம் கொண்ட சிலர், ஆயிஷாவின் சிதைந்த மூக்கு மற்றும் காதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முன்வந்தனர். இதற்கு ஆயிஷாவும் சம்மதித்தார். இதற்காக அவர் விரைவில் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார்.

பயங்கரவாதத்துக்கு தன் முகத்தையே விலையாக கொடுத்த ஆயிஷா, "டைம்' பத்திரிகை குழுவிடம் கூறுகையில், "தலிபான் அமைப்புடன் சில ஒப்பந்தங்களை செய்து கொள்ள முடிவு செய்துள்ளாக அதிபர் கர்சாய் தெரிவித்துள்ளார். ஆனால், மிகக்கொடூரமாக நடந்து கொள்வோரிடம் எப்படி இணக்கமாக வாழ முடியும். என்னை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் அவர் கள் தானே' என, தனது சிதைந்த முகத்தை விரல்களால் தொட்டுக் காட்டி விரக்தியுடன் பேசினார்.

http://www.youtube.com/watch?v=dJZ-BXVVZLQ

நன்றி:

http://www.thedipaar.com/news/news.php?id=16810

Edited by easyjobs

  • கருத்துக்கள உறவுகள்

veiled-woman_5965.jpg

அவங்க மதமே பெண்களின் முகத்தைக் காட்டக் கூடாது என்று விதிக்கறப்போ.. மூக்கிருந்தா என்ன விட்டால் என்ன.. என்று அறுத்திருப்பாங்க போல..!

இவ்வளவு கதைக்கிற அமெரிக்கா.. உந்த முகமூடிகளை ஒருக்கா களையட்டும் பார்க்கலாம். அதுக்கு தொடை நடுங்கி பயம்..! :lol: :lol: :lol:

அதுக்குத் தான் பிரான்ஸ்காரன் தடை கொண்டுவந்து போட்டானே, விரைவில் பெல்ஜியம்,நேதெர்லாந்து என த்டை நீள போகுது, இத்தனைக்கும் இவங்கள் இந்த நாட்டில் வாலை சுருட்டி வைத்துக் கொண்டு இருகிறாங்கள், ஆனால் இங்கு பிரித்தானியாவில் இவங்களின்ட தொல்லை தாங்க முடியாத், விரைவில் இந்த நாட்டையும் முஸ்லீம் நாடாக போகினமாம்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கொடூரமானவர்கள் இவர்கள்

ஒரு பெண்ணை இப்படி பழிவாங்கியிருக்கிறார்களே..

அவங்க மதமே பெண்களின் முகத்தைக் காட்டக் கூடாது என்று விதிக்கறப்போ.. மூக்கிருந்தா என்ன விட்டால் என்ன.. என்று அறுத்திருப்பாங்க போல..!

இவ்வளவு கதைக்கிற அமெரிக்கா.. உந்த முகமூடிகளை ஒருக்கா களையட்டும் பார்க்கலாம். அதுக்கு தொடை நடுங்கி பயம்..! :lol: :lol: :lol:

அதுக்குத் தான் பிரான்ஸ்காரன் தடை கொண்டுவந்து போட்டானே, விரைவில் பெல்ஜியம்,நேதெர்லாந்து என த்டை நீள போகுது, இத்தனைக்கும் இவங்கள் இந்த நாட்டில் வாலை சுருட்டி வைத்துக் கொண்டு இருகிறாங்கள், ஆனால் இங்கு பிரித்தானியாவில் இவங்களின்ட தொல்லை தாங்க முடியாத், விரைவில் இந்த நாட்டையும் முஸ்லீம் நாடாக போகினமாம்

என்னதான் இருந்தாலும்

இந்த கொடூரத்தை கண்டிக்காத தங்களை நினைக்க வருத்தமாக இருக்கிறது

Edited by விசுகு

நெடுக்ஸ் சொன்ன கருத்து தான் உண்மை ஜரோபியர்கள் பொதுவாக ஊடக தாக்குதலில் பலம் பெற்றவர்கள் இது சோனியாவுக்கு மாதவிடாய் வாரமல் போவதுக்கு புலிகள் காரனம் என்று சொல்லும் இந்திய ஊடகங்கள் போன்ற குற்ற சாட்டு. ஏன் இந்த மூக்கு அறுப்பு அந்த விருப்ப்பமில்லா கனவனால் தனிப்ப்பட்ட முறையில் செய்யப்பட்டது போல் இருக்கு.

அதனால் தான் அமெரிக்காச் செல்கிறார் அந்த பெண்

சரி எங்கள் நாட்டில் ஒரு காலத்தில் இரானுவத்துடன் கள்ள தொடர்புகு என்ன தண்டனை?? சரி கேவலம் இரு ஈபிடிபி ஆயுத தாரியுடன் தொடர்பு இருந்தால் என்ன தண்டனனை( மட்டக்களப்பில் கருணா காலத்தில்)

  • கருத்துக்கள உறவுகள்

.

சசி,

நீஙகள், ஒரு சீசனுக்கு வந்து தலைகாட்டி, வால் ஆட்டி போவதன் மர்மம் என்னவோ......?

.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சமும் இரக்கமில்லாதவர்கள்! :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.