Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணம் அவசியமா ?

திருமணம் ஒருவரின்(ஆண்/பெண்) வாழ்க்கையில் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா ? 31 members have voted

  1. 1.

    • அவசியம்
      24
    • அவசியமற்றது
      7

Please sign in or register to vote in this poll.

Featured Replies

ஒரு சின்ன சந்தேகம்.

திருமணம் ஒருவரின்(ஆண்/பெண்) வாழ்க்கையில் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா ?

இவ்விடயத்தில் அனுபவசாலிகளான முகத்தார், சாத்திரியார், சின்னப்பு போன்றோர் உங்கள் கருத்தை முன் வையுங்கள்.

மனசு புரிந்தால் போதும் புரியாதமனங்களை சேர்த்து வைத்து சிரமப்படுவதைவிட புரிந்து திருமணம் இல்லாமல் இருக்கலாம்

மனிதன் பலமான சமூகப்பிராணி...அந்த வகையில் நோக்கும் போது பலமான குடும்ப அமைப்பு இல்லையேல்.... அது தனி மனித வாழ்வியல்.. உட்பட மனித இனத்தின் இருப்பையே கேள்விக் குறியாக்கும்...!

ஆதிகால மனிதன் திருமணம்.. போன்ற எந்தச் சமூகச் சடங்குகளின் அறிமுகம் இன்றி விலங்குகள் போல வாழ்ந்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்..! 500,000 ஆண்டுகள் உயிரியல் வரலாற்றுப் பின்னணி உள்ள மனிதன் எப்போ பலமான சமூக வாழ்வியலுக்குள் நுழைந்தானோ அதன்பின் தான் கூட்டு முயற்சி மூலம் சிந்தனைப் பெருக்கத்துக்கும் பரவலுக்கும் இடமளித்து பலமான நாகரிகங்களையும் வளர்ச்சிகளையும் தனதாக்கி இன்று குறிப்பிடத்தக்க அளவுக்கு இயற்கையை வென்று வாழப்பழகி இருக்கிறான்..! உலகில் வேறு எந்த உயிரினமும் இயற்கையை வென்று வாழவில்லை...அவை இயற்கைக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றன..! அவற்றிலும் கூட பலமான சமூக வாழ்வியல் நடத்தையைக் காண்பிக்கும் உயர் விலங்குகளே...நீண்ட காலம் தப்பிப்பிழைத்து வாழ்வதில் அதிகம் வெற்றி கண்டுள்ளன. மனித அறிவு வளர்ச்சியில்- அவன் மூளை விருத்தியில்- பலமான சமூக வாழ்வு பல சந்தர்ப்பங்களில் அவனுக்கு உதவி இருக்கிறது..! குறிப்பாக தனி நபர் பாதுக்காப்பென்பது சமூகத்தினது பாதுகாப்போடு சம்பந்தப்பட்டது என்ற நிலை வரும் போது மனிதனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட அவனின் சிந்தனை வேறு வடிவங்களில் வளர்க்கப்பட உதவியாகிவிடுகிறது..! அதன்பால் உருவானதே மனித அறிவியல் வளர்ச்சி..! பல விலங்குகள் தம்மை பாதுக்காப்பது குறித்து செயற்படுவதிலேயே அதிகம் கவனம் செலுத்துவதால் அவற்றை இயற்கை எளிதாக கட்டுப்படுத்திவிடுகிறது..!

மீண்டும்.. பலவீனமான சமூக கட்டமைப்பு நிலை என்பது மனிதரில் பலவீனத்தையே உண்டாக்கும்..! அது பல்வேறு வடிவங்களில் உருவாகும்..! குறிப்பாக மனோவியல் பலவீனங்களுக்கு அது வித்திடும்..! அது முழு உடலையும் கட்டுப்படுத்தும்..பாதிக்கச் செய்யும்..! காரணம்..மனிதன் ஒரு சமூக விலங்கு..என்பது கட்டாய நிலை..! பலமான சமூகம் தன்னோடு இருக்கிறது என்பதே மனிதருக்குப் பல சந்தர்ப்பங்களில் பலம் சேர்த்திருக்கிறது..! அதற்கு திருமணம் குடும்பம் என்ற நிலைகளும் முக்கிய பங்காற்றி இருக்கின்றன...! பலமான உறுதிமிக்க வளர்ச்சி நோக்கிய சமூகக் கட்டமைப்புக்கு புரிந்துணர்வின்பாலான திருமணம் நிச்சயம் அவசியம்..! :idea: :idea:

ஒரு சின்ன சந்தேகம்.

திருமணம் ஒருவரின்(ஆண்/பெண்) வாழ்க்கையில் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா

தம்பி இவ்வளவு காலத்துக்குப் பிறகு இந்தகேள்வியை கேக்க வெளிக்கிட்டிருக்கிறீர் எங்கடை உழைப்பிலை மண்ணைப் போடவேணுமெண்டு என்ன வேண்டுதலோ தெரியேலை. . . முன்னைய எங்கடை காலங்களில் திருமணம் வாழ்க்கையில் குறிப்பிட்ட வயசில் இருபாலருக்கும் நடந்திட வேணும் அல்லாவிட்டால் ஊரில் அவர்களைப் பற்றி நெளித்துக் கதைப்பதே பொழுபோக்காவிடும் ஆனால் இப்பத்தைய இயந்திர வாழ்க்கையில் திருமணத்தை காலம் தாழ்த்தி செய்கிறார்கள் அல்லாமல் முற்றாக அதை தேவையில்லை எனும் நிலையில் எமது இனம் இல்லைஎண்டுதான் சொல்லவேண்டும் இப்போதைய சீதனப்பிரச்சனை குடும்பப் பொறுப்பு மேற்படிப்புகள் காரணமாக சிலபேருக்கு திருமணங்கள் தள்ளிப் போகிறது அதுக்காக அவர்கள் திருமணம் தேவையில்லை எண்டு சொல்லவில்லை வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்தபின் தங்களுக்கொண்டு ஒரு குடும்பத்தை அமைக்க விரும்புகிறார்கள் இதே கேள்வியை எங்கடைஅப்பா அம்மா கேட்டு திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் இதுக்கெல்லாம் பதிலெழுதுற வில்லங்கம் எங்களுக்கு வந்திருக்காது என்ன.........

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா..வாக்கு போட்டாச்சு..இங்கையும் ஏதாச்சுமு; கொடுப்பிங்களா? ஒட்டு போட்டதுக்கு? :roll: :roll: :roll:

  • தொடங்கியவர்

எங்கடை உழைப்பிலை மண்ணைப் போடவேணுமெண்டு என்ன வேண்டுதலோ தெரியேலை. . .

தாத்தா நிச்சயமா உங்க உழைப்பிலை மண்ணைப் போடவேணுமென்பது என் வேண்டுதலன்று.

இதே கேள்வியை எங்கடைஅப்பா அம்மா கேட்டு திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் இதுக்கெல்லாம் பதிலெழுதுற வில்லங்கம் எங்களுக்கு வந்திருக்காது என்ன.........

நான் இந்தக் கேள்வியைக் கேட்டு யாரையும் திருமணம் செய்ய வேண்டாமென வற்புறுத்தவில்லையே !!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பா..வாக்கு போட்டாச்சு..இங்கையும் ஏதாச்சுமு; கொடுப்பிங்களா? ஒட்டு போட்டதுக்கு? :roll: :roll: :roll:

அங்க சொன்னது தான் இங்கையும் கிடைக்கும்.

ஆரோக்கியமான கட்டுக்கோப்பான அன்பான அழகான குடும்பவாழ்க்கைக்கு திருமணம் அவசியமானதுவே. :P

ஆரோக்கியமான கட்டுக்கோப்பான அன்பான அழகான குடும்பவாழ்க்கைக்கு திருமணம் அவசியமானதுவே. :P

எனது கருத்தும் அதுவே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில என்ன சந்தேகம்.... அவசியம் தானே?? நாங்க என்ன ஆடு மாடா?? யாரும் நொந்துபோனவங்க வேறு மாதிரி சொல்லுவாங்க... ஏற்ற்க்கொள்ளாதீங்கப்பா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்க என்ன ஆடு மாடா??

ம் அப்படிக்கேளுங்க... :wink: :P

இது என்ன கேள்வி ....கட்டாயம் அவசியம்

எங்க vote போடுறது?

இது என்ன கேள்வி

ஆகாதவங்களுக்கு ரொம்ப அவசியம்

ஆனவங்களுக்கு அவசியம் இல்லை

திருமணம் அவசியம். ஆனால் திருமணத்தின்போது வெத்திலை பாக்கு சரைக்கு பதிலா.. சந்தண குங்கும சிமிழ், பன்னீர்க் கும்பா, குத்து விளக்கு.. அண்மைல பவுண் காசென வந்தவர்களுக்கு கொடுத்தனுப்புறதுதான் மகா மகா கேவலம்னு சொல்ல வாறேன்.. :P

யோவ் கரி ளொள்ளா

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

ஆகா அடிபட்டாலும் புடுங்குப்பட்டாலும் சின்னாச்சி ஓட வாழுற வாழ்க்கையே ஒரு தனிசுகம் தானப்பா குடுத்து வச்சிருக்கனும்

யோவ் கூடவே 2 வாரிசும் இருந்திட்டா

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

யோவ் கரி சந்தோச எண்டா அது தானய்யா எது சொல்லும் பாப்பம் இல்லற வாழ்க்கை தானய்யா

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

அது சரி உமக்கு கல்யாணம் ஆச்சா ????

(மகனே முதலில அத செய்யும் பிறகு பாரும் வாழ்க்கையை ஏதாவது ஐடியா வேணும் எண்டா தனிமடல் போடும் )

:D:D:D:D:D:D:D:D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணம் அவசியம். ஆனால் திருமணத்தின்போது வெத்திலை பாக்கு சரைக்கு பதிலா.. சந்தண குங்கும சிமிழ், பன்னீர்க் கும்பா, குத்து விளக்கு.. அண்மைல பவுண் காசென வந்தவர்களுக்கு கொடுத்தனுப்புறதுதான் மகா மகா கேவலம்னு சொல்ல வாறேன்.. :P

இப்படி வேறை நடந்கிதா?? என்ன கொள்ளை அடிச்சே கலியாணம் நடந்தீனம். இதை விட இன்னொரு பகிடி அண்மையில ஒரு விசேசம் போனா வித்தியாசமாய்ச்செய்யணும் என்றிட்டு வாழை இலையை மேசைக்கு கொண்டந்திட்டாங்க. கையால சாப்பிட்டு.. கைகழுவிறதுக்கு கழிவறையை நோக்கிச்சென்ற மக்கள்.. நம்ம சங்கக்கடையில கியூ நிண்டமாதிரி நிண்டாங்க. அங்க சுத்தம் பண்ண வந்த வெள்ளைக்காரர் சினந்து கொண்டு பேச்சுதுகள் இதை ஓவரிலும்ஓவர் :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி உமக்கு கல்யாணம் ஆச்சா ????

(மகனே முதலில அத செய்யும் பிறகு பாரும் வாழ்க்கையை ஏதாவது ஐடியா வேணும் எண்டா தனிமடல் போடும் )

உருப்பட்ட மாதிரித்தான். :wink: :P

உருப்பட்ட மாதிரித்தான். :wink: :P

அப்ப களத்தில ஒரு சபமியாரம்மா ரெடிடிடிடிடிடிடிடிடிடிடிடி

:P :P :P :P :P :P :P

சின்னப்பு சாமியார் ஆகிறதுக்கும் கலியாணம் கட்டி பாத்திட்டுத்தான் போறவை எண்டு கேள்விப்பட்டன் அப்ப டமிழுக்கு எல்லாம் முடிஞ்சுபோல..............சந்தோஷம்

அப்ப களத்தில ஒரு சாமியாரம்மா ரெடிடிடிடிடிடிடிடிடிடிடிடி

:P :P :P :P :P :P :P

அப்படியே சாமியாரம்மாக்கு ஒரு பெயர் வையுங்களன் சின்னப்பு... ! :wink: :lol::lol:

திருமணம் அவசியம் அற்றது மட்டும் அல்ல சமத்துவம் அற்ற மனித சமூக அமைப்புக்கு அடிப்படையாக இருப்பதும் குடும்பம் ஆகும்.

அது தனிச்சொத்துக்கும் அரசு நிறுவனப்படவும் வழிவகுத்தது என்கிறார் எங்கெல்ஸ். அவரது குடும்பம், தனிச்சொத்து, அரசு நாம் ஆழ்ந்து வாசிக்க வேண்டிய ஒரு சிறந்த புத்தகம். அது தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப களத்தில ஒரு சபமியாரம்மா ரெடிடிடிடிடிடிடிடிடிடிடிடி

:P :P :P :P :P :P :P

சிதம்பரம் அழுகுறார்.. இப்படி நீங்க சொல்ல. :wink: :P

சின்னப்பு சாமியார் ஆகிறதுக்கும் கலியாணம் கட்டி பாத்திட்டுத்தான் போறவை எண்டு கேள்விப்பட்டன் அப்ப டமிழுக்கு எல்லாம் முடிஞ்சுபோல..............சந்தோஷம்

_________________

கட்டாமல் போனவையைக்காணல்லையோ?? கிண்டல் தானே.. :wink: :P

திருமணம் அவசியம் அற்றது மட்டும் அல்ல சமத்துவம் அற்ற மனித சமூக அமைப்புக்கு அடிப்படையாக இருப்பதும் குடும்பம் ஆகும்.

அது தனிச்சொத்துக்கும் அரசு நிறுவனப்படவும் வழிவகுத்தது என்கிறார் எங்கெல்ஸ். அவரது குடும்பம், தனிச்சொத்து, அரசு நாம் ஆழ்ந்து வாசிக்க வேண்டிய ஒரு சிறந்த புத்தகம். அது தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது.

புத்தகத்தில் சிலதை கொள்கை அளவில் எழுதலாம்.. நடைமுறையில் சாத்தியமானதை செய்ய வேணும் சொல்ல வேணும்..! சமத்துவம் என்பது குடும்ப நிலையில் எப்படி பாதிக்கப்படும்..குடும்பம் தான் புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தையே அளிக்கிறது..! அந்தக் கட்டமைப்பு இல்லையேல் சமூகம் என்ற நிலைக்கும் புரிந்துணர்வுக்கும் வழி ஏற்பட்டிருக்காது..! அது இல்லாமல் மனிதனிடம் கூட்டு முயற்சிக்கு வழி இடமிருக்க வாய்ப்பில்லை..! அது மனிதருக்குள் பலவீனமான நிலையே...! தனி மனிதன் சாதித்ததிலும் மனிதன் சமூகமாகச் சாதித்ததே அவைப் பலப்படுத்தி இருக்கிறது..! :P :idea: :idea:

இதெல்லாம் ஒரு கேள்வியா? இளம்புள்ளைகளின் வாழ்க்கையோடு விளையாடாதீங்கப்பா. நாங்க இனித்தான் கரையேறணும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் கரி கலா என்ன நக்கலா வருடம் முழுக்க படிச்சிட்டு வருச கடைசியிலை வாற பரீட்சையிலைதான் நீர் பாடத்திலை சித்தியடைஞ்சனீரா இல்லையா எண்டு தீர் மானிக்கிற மாதிரி தான் வாழ்க்கை பாடத்திலை திருமணம் ஒரு பரீட்சை அதை நீர் செய்து ஓழுங்கா சித்தியடைஞ்சாதான் உமது வாழ்க்கையிலை யாரும் சித்தியடைஞ்ச மாதிரி இல்லாட்டி ம்...எல்லாமே கோட்டை விட்டமாதிரித்தான்

  • தொடங்கியவர்

அது சரி உமக்கு கல்யாணம் ஆச்சா ????

(மகனே முதலில அத செய்யும் பிறகு பாரும் வாழ்க்கையை ஏதாவது ஐடியா வேணும் எண்டா தனிமடல் போடும்

இன்னும் இல்லை அப்பு :lol:

இனிமேலும் திருமணம் செய்யிற ஐடியா இல்லை. 8) :wink:

யாருய்யா அது அவசியமற்றதுக்கு வாக்குப்போட்டவங்க ?

எங்க உங்க கருத்து ????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.