Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாவது அமர்வு: உருத்திரகுமாரன் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாவது அமர்வு: உருத்திரகுமாரன் அறிவிப்பு

திகதி:02.09.2010

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்;பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம்.

கடந்த மே மாதம் 17-19ஆம் நாட்களின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் முதலாவது அமர்வினை அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட, சுதந்திரப்பிரகனடம் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுப்புகழ்மிக்க பிலடெல்பியா மாநகரில் நாம் கூட்டியிருந்தோம். இம் முதல் அமர்வின்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனக்கான இடைக்கால நிறைவேற்றுச் சபையினை அமைத்துக் கொண்டதுடன், இடைக்கால முதன்மை நிறைவேற்றுனரையும் தெரிவு செய்து கொண்டது.

மேலும் இம் முதலமர்வு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அரசியல் அமைப்பினை உருவாக்கிக் கொள்வதற்காகவும், உடனடித் தேவைகளையொட்டிய பணிகளை முன்னெடுப்பதற்காகவும் சில செயற்பாட்டுக்குழுக்களை அடையாளம் கண்டு உருவாக்கியிருந்தது. அரசியல் அமைப்பு விவகாரக்குழு, அரசியல் அமைப்பு உபகுழு, கல்வி, பண்பாடு;, உடல்நலம்;, விளையாட்டுத் துறைகளுக்கான குழு, பொருண்மிய நலன்பேணல் மேம்பாட்டுக்கான குழு, அனைத்துலக ஆதரவு திரட்டலுக்கான குழுவிற்கான புலமையாளர் உபகுழு, ஆதரவுதிரட்டல் உபகுழு, ஊடகங்கள் உபகுழு, இனஒழிப்பு, போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கான குழு, பெண்கள், சிறுவர், மூத்தோர் நலன் பேணும் குழு, வர்த்தக மேம்பாட்டுக் குழு, மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணும் குழு, போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான குழு, இயற்கை வளங்கள் மேம்பாட்டுக் குழு, இடம் பெயர்ந்தோர் ஏதிலிகள் பற்றிய குழு ஆகியவையே இக் குழுக்களாகும்.

நாம் அமைத்துள்ள வௌ;வேறு குழுக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஒவ்வொரு குழுவுக்கும் ஒருங்குகூட்டுனர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேலைத்திட்டங்களுக்கான திட்டமிடல் ஆரம்பிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இதேவேளையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு அரசியலமைப்புக் குழுவினால் உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் அரசிலமைப்பை விவாதித்து ஏற்றுக் கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்பை வடிவமைப்பதே இம்மாத இறுதிப் பகுதியில் கூட்டப்படவுள்ள அரசவையின் இரண்டாவது அமர்வின் நோக்கமாகும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது நிரந்தரக் கட்டமைப்பை உருவாக்கும்போது செயற்பாட்டுக் குழுக்கள் அமைச்சுக்களாக வடிவமைக்கப்பட்டு நிரந்தரக் கட்டமைப்புக்களாக்கப்படும். இவ் இரண்டாவது அமர்வு தொடர்பான மேலதிகத் தகவல்களை மக்களுக்கு இயன்றளவு விரைவில் அறியத் தருவோம்.

இத் தருணத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் என்ற நிலையில் இருந்து மக்கள் முன்னால் ஒரு சில விடயங்களைத் தெளிவு படுத்துவது எனது தலையாய கடமையெனக் கருதுகிறேன்.

நாம் எமது அரசியல் பெருவிருப்பான சுதந்திரத் தமிழீழத் தனியரசை அமைப்பதற்கான போராட்டத்தை அரசியல் இராஜதந்திரத் தளத்தில் முன்னெடுப்பதற்காகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கியுள்ளோம்.

தாயகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த எழுச்சி மிகுந்த விடுதலைப்போராட்டத்துக்கு உறுதுணையாக நாம் முன்னர் விடுதலைப்பணிகளை மேற்கொண்டு வந்தோம். தற்போது தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான அரசியல் வெளியெதுவும் தாயகத்தில் இல்லாதமையால் புலத்தில் வாழும் தமிழீழ மக்களாகிய நாம் உலகத் தமிழினத்தின் பங்குபற்றுதலுடன், நியாயத்துக்காகவும், ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கக்கூடிய உலக சமூகத்தின் ஆதரவுடன் எமது விடுதலைப் போராட்டத்தை அரசியல் இராஜதந்திரத் தளத்தில் முன்னெடுக்க திடசங்கற்பம் ப+ண்டுள்ளோம்.

நமது செயற்பாடுகள் தாயக மக்களின் அரசியல் வெளியையும் அதிகரிக்க உதவும் எனவும் நாம் உறுதியாக நம்புகிறோம்.

எம்மைப் பொறுத்த வரையில் சுதந்திரத் தமிழீழம் ஒரு தோற்கடிக்கப்பட்ட அரசியல் இலக்கு அல்ல. பல்லாயிரக்கணக்கான மாவீரர்களதும் மக்களதும் குருதியாலும் ஈகத்தாலும் உயிர்ப்ப+ட்டப்பட்ட விடுதலைத்தீ நாம் நமக்கெனத் தமிழீழத் தனியரசினை அமைக்கும்வரை எம் நெஞ்சமெல்லாம் கனன்று கொண்டுதான் இருக்கும். இவ் விடுதலைத்தீயினை அணைத்துவிடுவதற்கு எதிரி பகீரத முயற்சி செய்து வருகின்றமை நாம் அறிந்ததே. எதிரியிடம் இருந்து நம் விடுதலைத்தீயினை பாதுகாப்பதனையும், எமது விடுதலை இலக்கினை முன்னோக்கி நகர்த்துவதனையும் சவால்களாகக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது பணிகளை முன்னெடுக்க உறுதி ப+ண்டுள்ளது. எமது இரண்டாவது அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டபின்னர் நமது பணிகள் வேகம் பெறும்.

நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிரியிடமிருந்து வரும் சவால்களை முறியடித்து, நமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ள இக் காலகட்டத்தில் நாம் எமக்குள்ளேயே முரண்படுவதும், ஆளுக்காள் அவதூற்றுச்சேறு வீசுவதும் எதிரிக்குத் துணைபோகும் நடவடிக்கைகளேயன்றி நம் இலட்சியத்துக்கோ அல்லது நமது விடுதலைப்பயணத்துக்கோ எவ்விதத்திலும் உதவும் நடவடிக்கைகள் அல்ல. இந்த அவதூறுகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மீதும், அதன் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனராகப் பணிபுரியும் என் மீதும் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் தமது சொந்த நலன்கள் சார்ந்து மேற் கொள்ளும் கைங்கரியம் இது என்பதனை நாம் அறிவோம். நாம் அனைவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஜனநாயக விழுமியங்களில் கருத்துச் சுதந்திரம் முக்கியமானது. ஆக்கப+ர்வமான விமர்சனங்கள் எமது பணியைச் செழுமைப்படுத்தும். ஆனால் உண்மைக்குப் புறம்பான அபாண்டங்களை உண்மை போல் திருப்பி திருப்பிக் கூறுவதும், மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்திக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைவதும் போராட்டத்தின் நலன் சார்ந்த அல்லது மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் அல்ல.

அண்மையில் தமிழீழத்துக்கு எதிராக நான் கருத்துச் சொல்லியுள்ளதாகவும், சிறீலங்கா அரசுக்காகச் செயற்படுவதாகக் கூறியுள்ளதாகவும் அபாண்டங்கள கூறி; நான் கதைத்ததாகக் கூறும் ஒலிப்பதிவு உலவ விடப்பட்டு கண்டனங்கள் எழுப்பப்;பட்டுள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது குறித்து மக்களுக்கு உண்மையினைத் தெளிவுபடுத்த வேண்டியது மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்க அவசியமானது என உணர்கிறோம்.

தமிழ் ஈழம் சாத்தியமானதல்ல என நான் என் வாழ்நாளில் எவருக்கும் கூறவும் இல்லை, நான் அப்படிக் கருதவும் இல்லை. தமிழ் ஈழம் சாத்தியமானது மட்டுமல்ல, அது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயம் என்ற அடிப்படையில் தான் எனது கடந்த கால, தற்போதய அரசியல் வேலைப்பாடுகள் அமைந்திருந்தன, அமைந்து வருகின்றன.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலண்டனில் இருந்து கதைப்பதாகக்கூறி; சுரேந்திரன் எனும் பெயரில் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய இவருடன் நான் மேற்கொண்ட உரையாடல் எனக்குத் தெரியாமலே பதிவு செய்யப்பட்டு, அதனை இடையிடையே வெட்டி ஒட்டி மோசடியான முறையில் திரிபுபடுத்தப்பட்ட கதையொன்று சோடிக்கப்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். தமிழீழத்துக்கான போராட்ட வடிவம் மாறியுள்ளமை குறித்தும், எமக்கிடையே நடைபெறும் சேறுப+சும் நடவடிக்கைகள் ஊடாக சிறீலங்கா அரசு செய்யும் வேலைகளை நாமும் செய்கிறோம் என்று கண்டனம் வெளிப்படுத்தியும் நான் தெரிவித்த கருத்துக்களை, கணினி மென்பொருளைப் பயன்படுத்தி உரையாடலின் சில பகுதிகளை நீக்கி, சிலபகுதிகளை வேறு இடத்திலிருந்து வெட்டி ஒட்டி இந்த மோசடியினை இவர்கள் மேற்கொண்டுள்ளனர் என்றே நான் கருதுகிறேன். இத்தகைய ஒரு மோசடி தமிழ்த் தேசியத்தின் பேரிலும் தமிழீழ விடுதலையின் பேரிலும் இடம்பெற்றிருப்பது தமிழர் சமூகத்துக்கு பெரும் வெட்கக்கேடானது.

மக்களை ஏமாற்றுவதற்காக வௌ;வேறு மோசடிகளின் ஊடாகப் பொய்க்கதைகளைச் சோடிப்பது கருத்துச் சுதந்திரத்தினையும் மக்களின் அறிவாற்றலையும் அவமதிக்கும் மிகவும் அற்பத்தனமான செயற்பாடாகும்.

நான் முன்னர் கூறியபடி எமது தற்போதய போராட்டம் ஜனநாயகத்தின் வழியில் முன்னனெடுக்கப்படுவதாகும். ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்களிலொன்று வெளிப்படைத்தன்மை (வசயnளியசநnஉல) என்பது. எனவே தனிப்பட்டவர்களோ அல்லது அமைப்புக்களோ தம்மை யாரென மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தித் தமது கருத்துக்களை, கண்டனங்களை வெளியிடுவதுதான் அரசியல் நாகரீகம். அதுதான் அரசியல் துணிவு மிக்க செயலாகும். இதைவிட இத்தகைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சில இணையத்தளங்கள் கடந்த காலங்களில் நாடு கடந்த அரசாங்கம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகளை மக்கள் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

செப்டெம்பர் மாத இறுதியில் நடைபெறும் இரண்டாது அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்பின் நிர்வாகத்தை நாம் தெரிவு செய்யவுள்ளோம். இந்த நேரத்தில்; மேற்கூறிய மோசடியான அவதூறுப் பரப்புரை முயற்சிகள் இன்னும் தீவிரமடையவும் கூடும். எனினும் நாம் இந்த மோசமான நடத்தைகளைக் கடந்து ஆரோக்கியமான அரசியற் பண்பாட்டை உருவாக்கியாக வேண்டும். இதனால் இத்தகைய அவதூறுச் சேறுவீசல்களை புறம் தள்ளி ஒதுக்கிவிட்டு நாம் முன்னேறிச் செல்லவே விரும்புகிறோம். இனி வரும் காலங்களில் இத்தகைய அவதூறுகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருப்பதனைத் தவிர்த்துக் கொள்ளவும் விரும்புகிறோம். மக்கள் எமது இந்த நிலைப்பாட்டைப் புரிந்து கொள்வார்கள் என நாம் திடமாக நம்புகிறோம்.

நன்றி

விசுவநாதன் ருத்ரகுமாரன்

இடைக்கால முதன்மை நிiறேவேற்றுனர்.

sankathi

உருப்படியான, சர்வதேசம் ஏற்கும், நடைமுறைச்சாத்தியமான முடிபுகளை எடுத்து செயர்படுத்துங்கள்!! ... நாய்கள் குரைக்கும், ஓநாய்கள் ஊழையிடும் இவற்றை பொருட்படுத்தாது அங்குள்ள மக்களின் விடிவிற்காக செயலாற்றுங்கள். எம்மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பாத்திரமானவர்களை சர்வதேச நீதிமன்றில் ஏற்றுங்கள்!!

இலங்கை/இந்திய அரசுகளுடன் பேசித்தான் ஆகவேண்டும் ... அதனை காலம் தாழ்த்தாது செய்யுங்கள்! ... சர்வதேச/பிராந்திய அங்கீகாரத்துடன் கூடிய ஓர் தீர்வை எம்மக்களுக்கு பெற உங்களால் ஆனவற்றை முயலுங்கள்!! ..

... உங்கள் செயற்பாடுகளில் நேர்மை, உறுதி, விவேகம் இருந்தால் ... புலம்பெயர் மக்கள் உங்கள் பின்னுக்கு அணிதிரள்வார்கள்!!

செப்டெம்பர் மாத இறுதியில் நடைபெறும் இரண்டாது அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்பின் நிர்வாகத்தை நாம் தெரிவு செய்யவுள்ளோம். இந்த நேரத்தில்; மேற்கூறிய மோசடியான அவதூறுப் பரப்புரை முயற்சிகள் இன்னும் தீவிரமடையவும் கூடும். எனினும் நாம் இந்த மோசமான நடத்தைகளைக் கடந்து ஆரோக்கியமான அரசியற் பண்பாட்டை உருவாக்கியாக வேண்டும். இதனால் இத்தகைய அவதூறுச் சேறுவீசல்களை புறம் தள்ளி ஒதுக்கிவிட்டு நாம் முன்னேறிச் செல்லவே விரும்புகிறோம். இனி வரும் காலங்களில் இத்தகைய அவதூறுகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருப்பதனைத் தவிர்த்துக் கொள்ளவும் விரும்புகிறோம். மக்கள் எமது இந்த நிலைப்பாட்டைப் புரிந்து கொள்வார்கள் என நாம் திடமாக நம்புகிறோம்.

எறியப்படும் கற்களுக்கு ஒரு காயேனும் விழவில்லை என்றால்….

எறியப்படும் கற்களுக்கு ஒரு காயேனும் விழவில்லை என்றால், அப்படித் தொடர்ந்தும் பயனற்றவகையில் எறிந்தே கொண்டிருந்தால் அது பைத்தியக்காரத்தனத்துக்குச் சமமாகும். ஏறக்குறைய எமது அரசியல் நடவடிக்கைகள் என்பவை அப்படியான ஒரு நிலையிலேயே இன்றிருக்கின்றன. இப்படிச் சொல்வது சற்று வருத்தத்தை சிலருக்கு அளித்தாலும் இதுதான் உண்மை.

‘போர் முடிந்த பிறகும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் அரசாங்கம் புதிதாக படைமுகாம்களை அமைப்பது ஏன்?’ என்று நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருக்கிறார் சிறிலங்கா முஸ்லிம் கொங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்.

அத்துடன் ‘வடக்குக் கிழக்குப் பகுதிகளில் புதிதாக அமைக்கப்படும் படை முகாம்களால் அந்தப் பகுதிகளில் வாழும் தமிழ்பேசும் மக்களிடையே அச்சநிலையும் பதற்றமும் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இது உண்மையே. ஆனால், இதற்கு என்ன செய்வது?

படை முகாம்களை மட்டுமல்ல, புதிய இராணுவக் குடியேற்றங்களை அமைக்கவுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பாக கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஒரு ஊடகவியலாளர் மாநாட்டையும் நடத்தியுள்ளது.

இதுவும் உண்மையே. ஆனால், இதற்கும் என்ன செய்வது?

ஹக்கீம் தெரிவித்திருப்பதைப்போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் ஊடகங்கள் பலவும் கூட மிக ஆக்ரோசமாக அரசாங்கத்தின் இராணுவ மயமாக்கலைச் சாடுகின்றன. திட்டமிட்ட குடியேற்றங்களைக் கண்டிக்கின்றன. போதாக்குறைக்கு குற்றமும் சாட்டுகின்றன.

இராணுவ மயமாக்கலுக்கு மட்டுமல்ல, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போருக்கு, போர்க்காலத்தில் நடந்த யுத்த நிறுத்த மீறல்களுக்கு, ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டதற்கு, அகதிகளின் பிரச்சினைகளுக்கு, மீள் குடியேற்றத்துக்கு, இனப்பிரச்சினைத் தீர்வை முன்வைக்காததற்கு, உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படாததற்கு, இனந்தெரியாத வகையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு, சிறைக்கைதிகளின் விடுதலைக்கு…. என இப்படிப் பல விடயங்கள் தொடர்பாக தமிழ்பேசும் இனங்களின் அரசியற் கட்சிகளும் ஊடகங்களும் தொண்டைத்தண்ணீர் வற்றும் வரை கத்தியிருக்கின்றன. தொடர்ந்து கத்தியும் வருகின்றன.

ஆனால், இவை தொடர்பாக அரசாங்கம் எந்தச் சிறு மாற்றங்களையாவது செய்திருக்கிறதா? அது இப்போது ஆட்சியிலிருக்கும் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் மட்டுமல்ல, இதற்கு முன்னர் இருந்த சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம், டி.பி. விஜேதுங்க அரசாங்கம், அதற்கு முன்னர் இருந்த பிரேமதாச அரசாங்கம், அதற்கு முன் ஜே.ஆரின் அரசாங்கம், அதற்கு முன்னர் இருந்த சிறிமாவோவின் அரசாங்கம்….. இப்படி இலங்கையில் ஆட்சியிலிருந்த எந்த அரசாங்கமாவது தமிழ்க் கட்சிகளின் குரல்களைக் காதில் போட்டிருக்கின்றனவா?

இல்லை. சிறுபான்மை மக்களின் கடந்த அறுபது ஆண்டுகாலப் போராட்டங்கள் இந்த அரசாங்கங்களின் நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அதிலும் இந்த அரசாங்கங்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் கடுமையாகப் போரிட்டபோதும், அரசாங்கத்தின் உயர் மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்ட போதும், முக்கிய கேந்திர நிலையங்கள் உத்தரவாதமற்ற நிலையொன்றுக்குள் தள்ளப்பட்டிருந்த போதிலும்கூட அரசாங்கத் தரப்பிலிருந்து எந்த மாற்றங்களும் நிகழவில்லை. மட்டுமல்ல, சிங்களச் சமூகத்திடமிருந்து ஒரு வலுவான மாற்றுக்குரல், மாற்று முறைமை என்பது துலக்கமாக மேற்கிளம்பவில்லை.

இது மிகத் துயரந் தரும் ஓர் அபூர்வ நிலை.

ஆனால், நாடு ஒரு பெரும் போரைச் சந்தித்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கின்றன. பல கோடிகள் பெறுமதியான சொத்துகளும் இயற்கை வளங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன. போர் முடிந்தாலும் இன்னும் நாட்டில் இயல்பு நிலை சீராகவில்லை. தமிழ்ப் பகுதிகளில் மட்டுமல்ல, இலங்கை முழுவதிலும் இயல்பற்ற நிலை உண்டு.

எல்லாவற்றையும் விட போருக்காக விரிவாக்கம் செய்யப்பட்ட படைகளை அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாத பதற்றம் அரசாங்கத்துக்கிருக்கிறது. படைகளுக்காக பெருமளவு பணத்தை இறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதே பதற்றத்தின் விளைவுதான்.

(அதிலும் முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா அரசாங்கத்துக்கு எதிர் நிலையில் இருப்பது இந்தப் பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக ரணிலுக்குப் பயப்படுவதையும் விட சரத்துக்கே ராஜபக்ஸ குடும்பம் அதிகம் பயப்படுகிறது).

இப்படி நிம்மதியற்ற நிலை ஏற்பட்டிருக்கும் போது கூட சிங்கள மனப்பான்மையில் எந்தப் பெரிய மாற்றங்களும் ஏற்படத் தயாரில்லை என்பதால், இறுக்கங்களும் நெருக்கடிகளும் அவலங்களும் அச்சுறுத்தல்களும் நம்பிக்கையீனங்களும் பிரச்சினைகளும் அப்படியே தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

இதற்கு மேலும் ஒரு நல்ல உதாரணம், கடந்த 03.08.2010 அன்று அவசரகால நிலை நீடிப்புப் பிரேரணை மீண்டும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வழமையைப் போல இலங்கைத் தமிழரசுக் கட்சியும் முஸ்லிம் கொங்கிரசும் தமது எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றன. அதே வழமையைப் போல சிங்களத் தரப்புக் கட்சிகளின் பெரும்பான்மையான ஆதரவுடன் அவரசகால நிலை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பு தமிழ்பேசும் இனங்களுக்கு ஒரு சேதியைத் தெளிவாகச் சொல்கிறது. இந்தச் சட்ட நீடிப்பு கால்நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடருகிறது. இந்தச் சட்டத்தை தொடக்கத்திலிருந்தே தமிழ்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. ஆனாலும் இந்த நீடிப்பை மாற்ற தமிழ்த் தரப்புகளால் முடியவில்லை.

ஆனால் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது தமிழ்பேசும் தரப்புகளின் கோரிக்கைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் கண்டனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்த கவனிப்பையும் கொடுக்காத போக்கு. அப்படியென்றால், இதற்கெல்லாம் எப்போது முடிவு? என்னதான் தீர்வு?

இங்கேதான் நாம் புதிதாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தையும் அதன் தலைவர் மற்றும் பிரதிநிதிகளையும் எதிர்ப்பதும் கண்டிப்பதும் குற்றஞ்சாட்டுவதும் எந்தப் பயனையும் தராது என்பது இப்பொழுது தெளிவு. எத்தனை முறை இதைச் செய்தாலும் மாற்றங்கள் நிகழப்போவதில்லை.

ஆகவே, இந்த அணுகுமுறைகளை – எதிர்ப்பு வடிவங்களை, அரசியல் உபாயங்களை – மாற்ற வேண்டிய கட்டாயம் நடைமுறை ரீதியாக இன்று ஏற்பட்டிருக்கிறது. தமிழ் பேசும் இனங்கள் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டிருக்க முடியாது. தீர்க்க முடியாமல், இந்தப் பிரச்சனைகளை வைத்துக் கொண்டிருக்கவும் முடியாது. மேலும் பிரச்சினைகளை வளர்த்துக் கொண்டிருக்கவும் முடியாது என்ற நிலைமை இன்று உருவாகியுள்ளது.

ஆரம்பத்தில் திட்டமிட்ட குடியேற்றத் திட்டங்களைக் கட்டுப்படுத்துதல், அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்துதல் (இனப்பிரச்சினைக்கான தீர்வு, சமஸ்டி) என்று தொடங்கிய போராட்டம் பின்னர் தரப்படுத்தல் என்று விரிந்து, இனக்கலவரங்களாகி, போராக மாறி, இப்பொழுது உயர்பாதுகாப்பு வலயங்கள், அகதிகள் விவகாரம், மீள் குடியேற்றம், போராளிகளின் விடுதலை, காணாமற் போனோரின் பிரச்சினை, சிறைக்கைதிகள் விவகாரம், படைமுகாம் விஸ்தரிப்பு, இராணுவய மயமாக்கல், அவசரகாலச் சட்ட நீடிப்பு….. என்று பட்டியலிட முடியாத அளவுக்கு ஏராளம் பிரச்சினைகளாக நீண்டிருக்கிறது.

ஆனால், எந்தப் பிரச்சினைக்கும் எந்தத் தீர்வும் கிடையாது. எந்தத் தீர்வையும் நோக்காமலே நடக்கின்றன போராட்டங்கள், கண்டனங்கள், குற்றச்சாட்டுகள், எதிர்ப்புகள். அப்படியென்னறால் என்னதான் நடக்கிறது?

இந்தக் கேள்வியை நாம் ஒவ்வொருவரும் பல தடவைகள் கேட்கவேண்டும். அதுவும் நம்மை நோக்கியே. அப்போதுதான் எங்களின் தவறுகளும் பலவீனங்களும் புரியும். அப்போதே புதிய அணுகுமுறைத் தேவைகளுக்கான அவசியம் தெரியும்.

பழகிய ஆயுதங்கள் எதிர்த்தரப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது. ஏனெனில் அதற்கு ஏற்ப அது தன்னைச் சுதாகரித்துக் கொள்ளும். தமிழ் பேசும் இனங்களின் கண்டனங்களும் போராட்டங்களும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது, சிங்கள அதிகார வர்க்கத்திடம் இசைவாக்கம் பெற்றுவிட்டது.

ஆகவே, அதற்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய மாதிரி, மாற்றுபாயங்களை வகுக்க வேண்டும். இதில் சிங்கள ஆதிக்க மனப்பான்மையை மாற்றக்கூடிய வகையில் ஒரு உபாயமும் வெளிச்சூழலை (பிராந்திய – சர்வதேச நிலைவரங்களை) விளங்கி, அதைக் கையாளக்கூடிய வகையில் ஒரு உபாயமும், ஒடுக்கப்படும் மக்களின் விடுதலை என்பது இன மத மொழி பேதங்களுக்கு அப்பாலானது என்ற புரிதலை மக்களுக்கும் மற்றவர்களுக்கும் புரிய வைக்கும் விதத்திலான அரசியல் நடவடிக்கையும் வகுக்கப்பட்டு இனி வரும் நாட்களின் அரசியல் முன்னெடுக்கப்பட வேணும்.

இதில் அரசியற் கட்சிகளுக்கும் அரசியலாளர்களுக்கும் இருக்கும் பொறுப்பும் கவனமும் ஊடகங்களுக்கும் இருக்க வேணும். ‘தமிழரசுக் கட்சியினால் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட ‘சுதந்திரன்’ பத்திரிகையைப் போலவே இப்போதைய பத்திரிகைகளும் வருகின்றன. ஆக இவை இப்போது கலரில் மட்டுமே வித்தியாசப்படுகின்றன’ என்று ஒரு நண்பர் வேதனையோடு ஒரு தடவை சொன்னதை இங்கே நினைவு படுத்துகிறேன்.

எறியப்படும் கற்களுக்கு ஒரு காயேனும் விழவில்லை என்றால், அப்படித் தொடர்ந்தும் பயனற்றவகையில் எறிந்தே கொண்டிருந்தால் அது பைத்தியக்காரத்தனத்துக்குச் சமமாகும். ஏறக்குறைய எமது அரசியல் நடவடிக்கைகள் என்பவை அப்படியான ஒரு நிலையிலேயே இன்றிருக்கின்றன. இப்படிச் சொல்வது சற்று வருத்தத்தை சிலருக்கு அளித்தாலும் இதுதான் உண்மை.

எனவே மாற்று உபாயங்கள் எவை என்பது பற்றிய விவாதங்களும் பரிசீலனைகளும் இன்று அவசியமாகியுள்ளன. அதை விரைவு படுத்துவதே இன்றைய தேவை. இல்லையெனில், இதேமாதிரி எதிர்ப்புக் குரல்களும் கண்டன அறிக்கைகளும் விடப்படுமே தவிர, சிறுபான்மைச் சமூகங்களுக்குப் பாதகமான எந்த நடவடிக்கைகளும் நிறுத்தப்படமாட்டாது.

இப்போது தெரிவிக்கப்பட்டிருக்கும் இராணுவ மயமாக்கல், வடக்கில் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், உயர்பாதுகாப்பு வலயங்கள், மீள்குடியமர்வுப் பிரச்சினைகள் உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு வரை எதிலும் தமிழ்மக்களுக்கு நன்மைகள் கிட்டப் போவதில்லை.

எதிர்த்தரப்புக்கு எதிரான போராட்டம் என்பது, மக்கள் மயப்பட்டதாக வடிவமைக்கப் படவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. அது வெளிப்படையானதாகவும் ஜனநாயக ரீதியானதாகவும் இருப்பதே இன்றைய பலமாகும். குறிப்பாக எந்தத் தரப்பும் முறியடிக்க முடியாத பொறிமுறையொன்றை வகுத்துக்கொள்வது இதில் முக்கியமானது. இது புத்திபூர்வமானதாகவும் இருக்க வேண்டும். அதேவேளை நடைமுறைச் சாத்தியமானதாகவும் இருப்பது அவசியம்.

வீழ்ந்தவர்கள் வீழ்ந்தே கிடப்பதில்லை. தொடர்ந்து வீழ்ந்து கிடப்பவர்கள் மனிதர்களும் இல்லை.

-கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலண்டனில் இருந்து கதைப்பதாகக்கூறி; சுரேந்திரன் எனும் பெயரில் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய இவருடன் நான் மேற்கொண்ட உரையாடல் எனக்குத் தெரியாமலே பதிவு செய்யப்பட்டு, அதனை இடையிடையே வெட்டி ஒட்டி மோசடியான முறையில் திரிபுபடுத்தப்பட்ட கதையொன்று சோடிக்கப்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். தமிழீழத்துக்கான போராட்ட வடிவம் மாறியுள்ளமை குறித்தும், எமக்கிடையே நடைபெறும் சேறுப+சும் நடவடிக்கைகள் ஊடாக சிறீலங்கா அரசு செய்யும் வேலைகளை நாமும் செய்கிறோம் என்று கண்டனம் வெளிப்படுத்தியும் நான் தெரிவித்த கருத்துக்களை, கணினி மென்பொருளைப் பயன்படுத்தி உரையாடலின் சில பகுதிகளை நீக்கி, சிலபகுதிகளை வேறு இடத்திலிருந்து வெட்டி ஒட்டி இந்த மோசடியினை இவர்கள் மேற்கொண்டுள்ளனர் என்றே நான் கருதுகிறேன். இத்தகைய ஒரு மோசடி தமிழ்த் தேசியத்தின் பேரிலும் தமிழீழ விடுதலையின் பேரிலும் இடம்பெற்றிருப்பது தமிழர் சமூகத்துக்கு பெரும் வெட்கக்கேடானது.

பாண்டு உங்கள் கைங்கரியம் தானே. லண்டனில் என்றவுடனும் மற்றது யாழில் சுட சுட உருத்திரகுமார் பேசியதாக கூறி ஒரு இணைப்பை கொடுத்த வீச்சை வைத்து சந்தேக படவைக்கிறது. :rolleyes:^_^

பாண்டு உங்கள் கைங்கரியம் தானே. லண்டனில் என்றவுடனும் மற்றது யாழில் சுட சுட உருத்திரகுமார் பேசியதாக கூறி ஒரு இணைப்பை கொடுத்த வீச்சை வைத்து சந்தேக படவைக்கிறது. :rolleyes:^_^

Bad_wolf.gif

உதுகளில் எல்லாம் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை!!! ... முன்பு போட்டி போட்டு தேசிய பூசாரிகள் துரோகிப்பட்டங்கள் வழங்கினார்கள், இப்போது கொஞ்சம் ஓய்வெடுத்திருக்கிறார்கள்!!! ஓய்வெடுப்பதா என .. நமோ நமோக்கள்தான் ... இப்போ, தேசியார் எனும் பெயரில் மெயிலுகள், ரெக்ஷுகள், இணைத்தளங்கள் பல திருவிழாக்கள் நடத்துகிறார்களாம்!!!

ஆனால் ... நமோ நமோகளின் ... திருவிழாவின் பின்னணி அறியாது, பூசாரிகளும் அதற்கு விசிலடியாம்!!!

கம்பீரமிக்க நாடுகடந்த தமிழீழ அரசை களங்கப்படுத்துபவர்கள் யார்?: கலாநிதி ராம் சிவலிங்கம்

உலக அரங்கிலே மாண்புமிகு தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக மற்றைய அரசுகளுடன் சரிசமமாக நின்று எமது உரிமைகளை வென்றெடுக்கவேண்டிய வேளை, எம் மக்களின் தேவைகளை கவனிக்கவேண்டிய நேரம் நம்மில் சிலரின் அறியாமையாலும், சந்தர்ப்பவாதிகளின் சதிகாரத்தனத்தாலும் தனித்துவமான....

....ஓர் அரசியல் சக்தியான நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் தாமதமாவது கண்டு வேதனையடைகிறேன், வெட்கப்படுகிறேன், வருந்துகிறேன்.

நாம் எடுக்கவேண்டிய பணிகளைத் தாமதிக்க வைக்க, எம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்த கே.பி. இதைச் சொன்னார் என்று ஒருவர் கூற, அதற்கு இன்னொருவர் விளக்கம் கூற, அதைக்கண்டு சந்தர்ப்பவாதிகளும், சதிகாரக் கும்பல்களும் வியாக்கியானம் சொல்ல இதனால் பாதிக்கப்படுபவர்கள் யாரப்பா? கொட்டும் மழையிலும் முள்ளுவேலிக்குள் முடங்கி வாழும் எம் அன்பு உறவுகள்தானே.

கே.பி. கூறாததையே அவர் கூறினார் எனக்கூறி கும்மாளம் அடிப்பவர்களே! கே. பி. யாரப்பா? அவர் ஓர் சிங்கள அரசாங்கத்தின் சிறைக்கைதி. அவர் கூறும் எதற்குமே அர்ததம் இல்லாதபோது அவர் நாடுகடந்த தமிழீழ அரசைப்பற்றியும் அதன் தலைவரைப் பற்றியும் இப்படிக் கூறினார் என்று பொய்யான வதந்திகளைப் பரப்புவது ஓர் துரோகச்செயல் என்பதை மறந்துவிடாதீர்கள்.

சிங்களவர் விருப்பத்திற்கு உருவம் கொடுக்கும் உங்களை எம்மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.

ஈழத்தமிழரின் சாவுக்கு நாள் குறித்த யமனையே தான் போட்ட கணக்குகள் பிழைத்துவிட்டனவே என தடுமாறவைத்த இராசபக்சாவையே கலங்கவைத்த நாடுகடந்த தமிழீழ அரசையும் அதன் தகுதிவாய்ந்த தலைவரான உருத்திரகுமாரனையும் அர்த்தமற்ற, உண்மைக்குப் புறம்பான பிரச்சாரத்தால் முடங்கவைக்க முனைவதை எம்மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என்பதை சிங்களவர்கள்போல் இவர்களும் புரியும் நாள் வெகுதொலைவில் இல்லை.

நாடுகடந்த தமிழீழ அரசை உடைப்போம், அழிப்போம் என்ற இராசபக்சா சகோதரரின் எண்ணத்தை அறிந்தும் செயற்படும் எம்மவர் சிலரின் மனநிலைகண்டு எந்தத் தமிழராலும் வெதும்பாமலோ அல்லது வேதனையடையாமலோ இருக்கமுடியாது. இது உண்மை.

இங்கு கொச்சை பாடவோ அல்லது குறைகூறவோ இடமில்லை என்பதை எம்மவரில் சிலர் இன்னும் உணராது கூச்சல் போடுவது விசித்திரமானதும், விரும்பத்தகாததுமாகும். இதைக் கூறுபவர்கள் யார்? எதற்காக இதைச் செய்கிறார்கள் என்பதை ஒவ்வொரு தமிழரும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். பச்சைப் பாம்பா அல்லது பச்சைக்கொடியா என அறிவதற்கு அனுபவம் தேவை என்பார்கள். அதுபோல அரசியலை வாழ்க்கையாகக் கொண்ட உங்களுக்கு இவர்கள் யார்? இவர்கள் நோக்கம் என்ன? என்று விளங்காத விடயமா அல்லது புரியாத புதிரா?

தந்தை செல்வாவின் அறவழிப்போரின் திருப்பம், அதன் பின்பு தேசியத் தலைவரின் தலைமையிலான அந்த அபூர்வம்மிக்க ஆயுதப்போர், இறுதியாக நாம் நடாத்தும் நாடுகடந்த தமிழீழ அரசின் தனித்துவமான அரசியல் முன்னெடுப்பு இவைதானே இறைமையும், சுதந்திரமும் கொண்ட ஓர் தமிழீழத் தாயகத்தைப்பெற நாம் வகுத்த திட்டங்கள்.

எம் அன்பு உறவுகளே! மழையான உங்களை நிலமான நாங்கள் ஏந்துவோம் என்ற உங்கள் எதிர்பார்ப்பை எவராலும் ஒருபோதும் மாற்றமுடியாது. நாடுகடந்த தமிழீழ அரசும், அதன் தலைவர் விசுவநாதன் உருத்திரகுமாரனும் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார்கள். இது நிச்சயம். நாடுகடந்த தமிழீழ அரசின் ஆரம்பகாலம் தொடக்கம் அவரையும் அவரின் செயற்பாடுகளையும் நன்றாகத் தெரிந்தவன் நான்.

தமிழரையும், தமிழையும் காக்க தன் உயிரைத் தருவதை ஒரு வரமாக எண்ணிச் செயற்பட்ட எம் மாவீரரின் கனவு நனவாகவேண்டும். தந்தை செல்வாவின் ஆத்மா சாந்தியடையவேண்டும். தேசியத் தலைவரின் முயற்சி முழுமைபெறவேண்டும். இவைதானே தமிழரின் தாகம். இவையெல்லாம் நிறைவுபெற,

கே. பி க்கும், தனக்கும், நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென் பல அறிக்கைகள் வழக்கறிஞர் விசுவநாதன் உருத்திரகுமாரனால் விடப்பட்டும், தமக்குச் சாத்தியமானவேளை அவரின் விசுவாசத்திற்கு பரீட்சை வைப்பதுபோல் பாசாங்கு செய்யும் சந்தர்ப்பவாதிகளும், சதிகாரக் கும்பலும் தமது முயற்சியை இந்த நிமிடமே கைவிடவேண்டும்.

நாடுகடந்த தமிழீழ அரசிலும் அதன் தலைவர் உருத்திரகுமாரனிலும் முழு நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொடக்கம் ஒவ்வொரு தமிழரும் காலதாமதமின்றி கண்ணியத்துடன் ஒத்துழைக்கவேண்டும்.

எம் இனத்துக்கு உதவி செய்யவேண்டும், அவர்கள் வாழ்வை வளம்படுத்தவேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டு இதுவரை ஒன்றுமே செய்யமுடியாமல் பதவிகள் வகிக்கும் தமிழீழ அரசின் பிரதிநிதிகள் இனியும் எமது முன்னேற்றத்துக்கு தடையாக இருக்காமல் உடனடியாக தமது பதவிகளில் இருந்து பெருந்தன்மையாக விலகி மற்றவர்களுக்கு இடம்தர வேண்டும்.

பிரதிநிதிகளாகத் தேர்வுசெயப்படாத திறமையும், இராசதந்திரமும், சாணக்கியமும் கொண்டவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசில் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். தேர்வுசெயப்பட்ட பிரதிநிதிகள் இவர்களுக்கு தகுந்த பதவிகளையும், அதிகாரத்தையும் கொடுக்கும் மனப்பக்குவத்துடன் செயற்பட வேண்டும்.

அறவழிப் போருக்குத் தேவை மக்களின் பங்களிப்பு, ஆயுதப் போருக்கு வேண்டியது போராளிகள் வீரமும் தீரமும். ஆனால் இன்று நடப்பதோ அரசியல் போர். இது திறமையும், இராசதந்திரமும், சாணக்கியமும் கொண்டவர்களால் நடத்தப்படவேண்டிய மூளைக்கும் மூளைக்குமான ஓர் போர். ஒவ்வொரு தேர்வு செயப்பட்ட பிரதிநிதிகளும், பொறுப்பான பதவிகளை வகிப்பவர்களும் இந்த வர்ணனைக்குள் அடங்குவதே சாலப்பொருந்தது.

http://www.sankathi.com/index.php/news/010810/51/182_fullarticle.html

Edited by Nellaiyan

தொடர்ச்சியாக இணைக்கப்படும் கருத்துக்களைப் பார்க்கும் போது, இக்களத்தில் அடையாளம் காணப்பட்ட இந்திய சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைகூலிகள் இன்னும் செயற்பட ஆரம்பிக்காத நாடு கடந்த தமிழீழ அரசைப் பார்த்து கலங்கிப் போயுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசு விரைவில் செயற்பாடுகளில் இறங்கி, போர்க் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவதோடு, தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை நோக்கி உழைக்க வேண்டும்.

இரண்டாவது செயலமர்வுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த அரசு சிங்கள அரசின் சில அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.அதாவது இந்தியாவுடனும் மேற்குலகுடனும் சீனாவுடனும் பேச வேண்டும்.இந்தியாவுக்கும் மேற்குலகுக்கும் மறைமுகமாகச் சொல்ல வேண்டும்.நீங்கள் எம்மை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நாம் சீனாவுடன் பேச வேண்டி வரும் என்று சொல்ல வேண்டும்.பாகிஸ்தானுடனும் உறவைப் புதுப்பிக்க வேண்டும்.பாகிஸ்தானும் சீனாவும் புதிய உறவுக்காக பழைய உறவை வெட்டத்தயங்காது.ஏனெனில் இந்தியாவுக்கு மிக அண்மையாக இருப்பது தமிழர் தேசமே!ஆகவே சிறிலங்கா ஆடிய ஆட்டத்தை நாங்கள் ஆடுவோம்.இந்தியா வேண்டா வெறுப்பாக வேனும் எம்மை ஆனுசரிக்க வேண்டிய தேவை ஏற்படுத்தப்பட வேண்டும்.ஏனெனில் இந்தியாவையோ மேற்குலக நாடுகளையோ கெஞ்சிக் கேட்டால் எதுவும் கிடைக்காது.இராஜதந்திரமிரட்டலே சாத்தியமாகும்.இப்படியான ஒரு அதிர்ச்சி வைத்தியத்தையே இந்தியாவுக்கும் சிறிலங்காவிற்கும் கொடுக்க வேண்டும்.

......, இக்களத்தில் அடையாளம் காணப்பட்ட இந்திய சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைகூலிகள் ...

cartoon_gorilla.gif

Bad_wolf.gif

உதுகளில் எல்லாம் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை!!! ... முன்பு போட்டி போட்டு தேசிய பூசாரிகள் துரோகிப்பட்டங்கள் வழங்கினார்கள், இப்போது கொஞ்சம் ஓய்வெடுத்திருக்கிறார்கள்!!! ஓய்வெடுப்பதா என .. நமோ நமோக்கள்தான் ... இப்போ, தேசியார் எனும் பெயரில் மெயிலுகள், ரெக்ஷுகள், இணைத்தளங்கள் பல திருவிழாக்கள் நடத்துகிறார்களாம்!!!

ஆனால் ... நமோ நமோகளின் ... திருவிழாவின் பின்னணி அறியாது, பூசாரிகளும் அதற்கு விசிலடியாம்!!!

My link

Edited by Bond007

இரட்டையர்கள் தங்கள் சுயரூபங்களை மேலும் மறைக்க முடியாமல் வெளிப்படுத்தியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கேதான் நாம் புதிதாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தையும் அதன் தலைவர் மற்றும் பிரதிநிதிகளையும் எதிர்ப்பதும் கண்டிப்பதும் குற்றஞ்சாட்டுவதும் எந்தப் பயனையும் தராது என்பது இப்பொழுது தெளிவு. எத்தனை முறை இதைச் செய்தாலும் மாற்றங்கள் நிகழப்போவதில்லை.

அண்டிப் பிழைப்பதுதான் புதிய உபாயமா? இது காலம் காலமாகச் செய்யப்படுவதுதானே!

சாத்வீகப் போராட்டங்களினாலும், விடுதலைப் புலிகளின் வலிமைமிக்க இராணுவப் போராட்டத்தினாலும் மாற்றமுடியாமல் இருந்த சிங்களச் சிந்தனையை கூடிக் குலாவி மாற்றலாம் என்பது மொக்குத்தனமான சிந்தனை.

மூன்று தேசிய இனங்கள் (சிங்கள, தமிழ், முஸ்லிம்) இலங்கையில் உள்ளன என்று ஒவ்வொரு இனங்களும் ஏற்றுக்கொள்ளாதவரை இலங்கையில் பிரச்சினைகள் ஒழியச் சாத்தியமில்லை. எனவே தமிழ்த் தேசியத்தை ஜனநாயக ரீதியில் உறுதியாக கட்டியெழுப்ப தமிழ் அரசியல் தலைமைகள் முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டுவும், நெல்லையனும் .........

ஒட்டியும், ஒட்டாமாலும்....பிறந்த இரட்டை சகோதரங்கள்.

வ்வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ... இயற்கையாக உள்ள அறிவின் கண்டுபிடிப்பு!! Very_excited.gif

... வேண்டுமாயின் இரண்டு பால்போச்சிகள் அனுப்பி விடுகிறேன்??? Baby_drinks.gif

என்ன? ஆரோரோஆரிவரோஅமுதன் உங்கள் பேமஸ் வசனங்கள் இதில் மிஸ்ஸிங்!!!!!!! .... இந்திய பயங்கரவாதிகள், இந்திய பயங்கரவாதிகளின் கைக்கூலிகள்,........!!!!!!!!!!!!!!1 என்ன நடந்தது?????????????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

baby-drinking-milk%5B1%5D.jpg

நாங்கள் காலாலேயே போச்சி பிடிச்சு பால் குடிச்ச ஆக்கள்.

உங்கடை போச்சியை கொண்டு போய் இந்தியாவிலை குடுங்கோ....

.

  • கருத்துக்கள உறவுகள்

கையென்ன, காலென்ன ... சூத்தாலையும் குடியுங்க்கோ!!!!!!! அந்தளவுதான் ...!!!!!!!!!! :D

சூத் என்றால் என்ன நெல்லை அண்ணை? :o

சூத்தாலை எப்பிடி குடிக்கிறது, உங்களுடைய அனுபவங்களை பகிரவும். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.